Posts Tagged ‘தமிழ்’

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார்.

கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், “வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே,
………
அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கறுப்பாகி விடும்…..” என்று சொல்ல,

குழம்பிப்போன சர்வர் கேட்டார், “சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?

“நம் சர்தார்ஜி சொன்னார், ” மக்கு இன்னுமா புரியவில்லை, ………………???????

நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்”…!!!!!!!!!!

Courtesy: Facebook

ஆபிசுல சின்சியரா வேலை செஞ்சிட்டு இருந்தப்போ..
போன் வந்துச்சி … பார்த்தா புது நம்பர்…
யாருன்னு தெரியல .. ஆனாலும் பேசினேன்…

” Helo… யாரு? ! “ன்னேன்.

” நான் யாருங்குறது இருக்கட்டும் … உங்க ஆபிசுல A.C Work பண்ணுதா.? “ன்னு கேட்டான்.

” பண்ணுதே.. ! “ன்னேன் நான்

” Computer Work பண்ணுதா.? “ன்னு திரும்பவும் கேட்டான் அவன்.

” அதுவும் Work பண்ணுதே..! “ன்னேன் நான்.

அதுக்கு அந்த நாதாரி சொல்லுது,
” அப்ப நீங்க மட்டும் ஏன் சார் வெட்டியா Phone பேசிட்டு இருக்கீங்க..? … நீங்களும் போயி Work பண்ண வேண்டியதுதானெ …

 

Courtesy: Facebook

ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?

எப்போ?

ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி

ஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா?

யாரு பேசுறதுன்னு தெரியலயே?

நான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத் தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.

இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன?

ஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு. ஆனா பேசுனது என் பொண்ணு.

அது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன். என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா?

ஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா. இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.

சரி, எங்க வர்றாங்க?

ஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.

அப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால முடியாதும்மா. ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.

****
http://thendhisai.blogspot.in/2012/12/5.html

ஃப்ரம் ஃபேஸ்நூல் :

தேர் வாஸ் ஏ பாட்டி இன் கிராமம்.

1 டே சி வாஸ் சுட்டிங் ஏ வடை

அட் த டைம் 1 காக்கா கம் அன்ட் அபேஸ் த வடை.

தென் இட் சிட் ஆன் த ஒன் மரம்.

ஏ நரி கம் அன்ட் செட்

“யுவர் குரல் இஸ் ஸோ நைஸ் ஸோ ஸிங் ஏ பாட்டு பார் மீ”

தென் த காக்கா ஓப்பன் இட்ஸ் வாய் டு ஸிங்.

டொபக்கடீன்னு வடை பெல் டவுன்

த நரி கவ்விங் தட் வடை அன்ட் வென்ட் அவே

மாறல்::

“Vadai Poche“

ஆர் யு சிரிச்சிங்???? — feeling Haa Haa Hooo.

Courtesy: https://plus.google.com/111899839791634214271

ஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..

ரொம்ப அன்பா இருப்பாங்க…ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க…அதுல கணவனுக்கு மட்டும் high BP (blood pressure) இருந்துச்சி…டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு..

அதனால மனைவி கணவனுக்கு உப்பு இல்லாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து சமைச்சி போட்டு அவன கண்ணும் கருத்துமா பல வருடங்கள் பார்த்துட்டு வந்தா… சமீபத்தில் திடீர்னு ஒருநாள் மனைவி காலைல தூங்கி எழுந்து வந்து பார்க்கும்போது கணவன் பாத்ரூமுல செத்து கிடந்தான்..

மனைவி அவ்ளோ கவனமா கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்தாலும் கணவன் high BP வந்து திடீர்னு செத்ததற்கு என்ன காரணமா இருக்கும்…? யோசிச்சி பாருங்க…

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,

5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார்.
அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.

அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க.
1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு
போகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம
இறுந்துடுவாங்க.

ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு,
5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும்,
எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க.
அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில்
விட்டுடுங்கன்னு சொன்னாரு.

போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும்
எப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா நான்
ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த
காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன்.

இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன்.
இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன்.
இப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம்.

திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்.

Courtesy: Facebook

எளிய முறையில் பெண்களின் மனதை புரிந்து கொள்ள 10 வழிமுறைகள்

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்…!!!!!!

Courtesy: Facebook

ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான்.
அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.

உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே… இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல்தெரிகிறதே…” என்றான்.

சர்வர் முதலில் மழுப்பினான். அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.

“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன்.

“சம அளவு சார்!” என்றான் சர்வர்.

“சம அளவுன்னா… எவ்வளவுடா…” என்றான் அவன்.

சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு? சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரைதான் சம அளவு. அந்த அளவில் தான் கலப்போம்” என்றான் சர்வர்.

 

Courtesy: Facebook

ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.”கடமையில் கருத்தாக இருப்பான்.ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்.

”அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்துவிட்டு,’பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம்.எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?’என்று கேட்டார்.அவனோ,

”எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன்.இப்போது கூட ஒரு பந்தயம்.உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன்.பந்தயம் நூறு ரூபாய்.”என்றான்.’

எனக்கு முதுகில் மச்சமே கிடையாது.நீதோற்று விட்டாய்.நீயே பார்,”என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.

மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான்.

புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார்.”அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன்.இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்,”என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.

உடன் பதில் வந்தது.

”நீங்கள் தான் தோற்றுப் போய் விட்டீர்கள்.
 இடத்தில் வேலைக்கு சேர்ந்த அன்றே உங்களுடைய சட்டையைக் கழற்ற வைப்பதாக என்னிடம் ஐநூறு ரூபாய் பந்தயம் கட்டிவிட்டுத்தான்

அங்கு வந்தான்.வெற்றி அவனுக்குத்தான்.

Courtesy: Facebook

 

தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்…

திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்…
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது…

மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..

சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.

புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..

”என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.”.கத்துகிறாள் மனைவி.

”என்னது எதிர்த்தா பேசுகிறாய்.”அவள் மேல் துப்புகிறான்

”என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..”அலற துவங்குகிறாள் மனைவி..

தெனாலி ராமன் விட்டீல் பிரசினை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..

”என்ன தெனாலிராமா இது ” கேட்கிறார்க்ள..

”பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்ப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ”எனகிறான்தெனாலிராமன்…

திருடன் பிடிபடுகிறான்….

சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.

நார்வேகாரர் ஒருவர் விபத்தில் சிக்கினார் .அருகில் இருந்த நம்மூர்க்காரர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, ரத்தமும் கொடுத்து காப்பாற்றினார் .
பிழைத்து எழுந்துவந்த நார்வேகாரர், நம்மூர்க்காரருக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றைப் பரிசளித்தார் .
நார்வே ஆளின் துரதிருஷ்டம் பாருங்கள், ஆறு மாதம் கழித்து அவர் மறுபடியும் விபத்தில் மாட்டினார்.
அதே நம்மூர் ஆசாமி மறுபடியும் காப்பாற்றினார் . ஆஸ்பத்திரியில் சேர்த்தார் .
உயிர் பிழைத்து வந்த நார்வேகாரர், நம்மூருக்கு நன்றி சொல்லி அரை கிலோ திருநெல்வேலி அல்வா கொடுத்தாராம் .
நம்மூர்க்காரர் ஏமாற்றமாகப் பார்க்க, நார்வேகாரர் சொன்னார்,

“‘ங்கொய்யால …. உன் ரத்தம்தான் எனக்குள்ள ஓடுது !

FB-படித்ததில் பிடித்தது

2050-ம் வருடம், மனிதர்களைப்போலவே அனைத்து விலங்குகளும் பேசக் கற்றுக்கொண்டன. தமிழ்மொழி, மலையாள மொழிபோல் கோழிமொழி, ஆடு மொழி என தனித்தனி மொழிகள் உருவாகிவிட்டது. ஆங்கிலம், சீன மொழியை எல்லாம் பின்னுக்குத்தள்ளி கொசுவின் மொழிதான் மிக அதிகமாய்ப் பேசப்பட ஆரம்பித்தது. கொசுக்களின் குடும்பத்தில் மட்டும் ஒருமுட்டைதான் இடவேண்டும் என குடும்பக்கட்டுப்பாடு திட்டமே கொண்டுவரப்பட்டது.

ஒருவர் மளிகைக்கடை வைத்திருந்தார். அவரது கடைக்கு சாமான்கள் வாங்க கோழி ஒன்று வந்தது.
கோழி முட்டை என்ன விலை? என்றது கோழி.
ஐந்து ரூபாய்
ஒரு முட்டை கொடுங்க! என்று ஐந்து ரூபாயை நீட்டியது கோழி.
கடைக்காரருக்கு ஒரு சந்தேகம். கோழி தானே முட்டைபோட முடியுமே இது எதற்காக நம் கடையில் முட்டை வாங்குகிறது? ஒரு முட்டையை எடுத்து கோழியிடம் கொடுத்துவிட்டுக் கேட்டார். “நீயே முட்டைபோட முடியுமே பின் எதற்காகக் கடையில் வாங்குகிறாய்?”
கோழி எதுவுமே பேசவில்லை.
கடைக்காரர் திரும்பவும் விடாமல் வற்புறுத்திக் கேட்டார்.
“அது எனக்கும் என் கணவருக்கும் உண்டான ரகசியம், சொல்லக்கூடாது” என்றது கோழி.
கடைக்காரரால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை, திரும்பவும் கேட்டார், “அப்படியென்ன ரகசியம்?’
“என் புருசன் சேவல்தான் சொன்னாரு அஞ்சு ரூபா முட்டைக்காக எதுக்கு உன் அழகிய உடம்பை கெடுத்துக்கிறேனு? அதான் முட்டையை கடைல வாங்கிட்டு போறேன்!”

பொதுவா நாங்க தினமும் 8.30 மணிக்கு
எங்க ஆபீசை மூடிடுவோம்..

ஆனா நேத்து 9.00 மணி ஆகியும்
ஆபீஸ்ல தான் இருந்தோம்..
IPL Match பாத்துகிட்டு….

” உன்னை விட… இந்த உலகத்தில் ஒசந்தது
ஒண்ணுமில்ல…. ஒண்ணுமில்ல….! ”

( என் மொபைல் ரிங் ஆகுது… என் Wife
கூப்பிட்ட இந்த ரிங்டோன் தான் வரும் )

உடனே எங்க கடை பையன் ஓடி போய்
T.V வால்யூமை குறைச்சிட்டான்.. சமத்து..!

( ஹி., ஹி., ஹி, இல்லன்னா.. TV-ல
” ஜம்பிங் ஜபாங்கு ஜம்பங்க் ஜம்பங்க்
கிலிகிலியான்னு ” சவுண்ட் வருமே..
மாட்டிப்போம்ல..! )

” ஹலோ… ”

” மாமா… எப்ப வீட்டுக்கு வருவீங்க..? ”

” வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு..
ஒரு அரைமணி நேரம்..! ”

” இன்னும் அரைமணி நேரமா..?! ”

( என் Wife Upset ஆகறது எனக்கு நல்லவே
தெரிஞ்சது.. சே.. சும்மா சொல்லக்கூடாது
என் பொண்டாட்டிக்கு என் மேல பாசம்
அதிகம் தான்.. )

” மதியம் லஞ்ச்க்கு வந்தப்ப கூட உடனே
கெளம்பிட்டீங்க..! கொஞ்சம் நேரம் கூட
வீட்ல இல்ல.. ”

” முக்கியமான ஆர்டர் ஒண்ணு முடிக்க
வேண்டி இருந்தது.. அதான்..! ”

” இங்கே செம Bore.. நீங்க எப்ப வருவீங்க.,
எப்ப வருவீங்கன்னு வாசலையே பாத்துட்டு
இருக்கேன்..! ”

( அடடா.. என் மனைவியோட அன்புக்கு
முன்னாடி இந்த ஐ.பி.எல் எல்லாம்
என் கால் தூசு…! )

” இதோ உடனே வந்துட்டேம்மா… ”

நான் கடை பசங்களை பாத்து..

” இழுத்து மூடுங்கடா ஆபீசை..
நாளைக்கு ஹைலைட்ஸ் பாத்துக்கலாம்..! ”

அவனுங்க என்னை லூசை பாக்கற மாதிரி
பாத்தானுங்க…

அடுத்த 10வது நிமிஷம் வீட்ல இருந்தேன்.

” அப்பா “-னு ஓடி வந்து என் ரெண்டு
பசங்களும் என் காலை கட்டிகிட்டானுங்க.

” வந்துட்டீங்களா.! “-னு என் Wife கிச்சன்ல
இருந்து சந்தோஷமா வந்தாங்க…

( “அன்பாலே அழகாகும் வீடு ” – அது இதானோ..!? )

நான் புல்லரிச்சி போயி நிக்கறேன்..

” ஏங்க.. உங்க புது Smartphone-ஐ குடுங்க..
Temple Run 2 விளையாடணும்.. அதுக்காக
தான் நாங்க ரொம்ப நேரமா Waiting..! ”

” அடப்பாவிகளா..?!! ”

ரசித்த இடம்: http://gokulathilsuriyan.blogspot.in

புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.

Courtesy: Facebook

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ‘நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்’ என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ”அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை” என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

Courtesy: Facebook

நோயாளி: ”டாக்டர் என் கால் நல்லா ஆகிடுமா டாக்டர்”

டாக்டர்: ”இன்னும் மூணு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்”

நோயாளி: ”நான் நடக்கலாமா டாக்டர்?”

டாக்டர்: ”நடக்கிறது என்ன… மருந்தை மறக்காம தடவுனா ஓடவே செய்யலாம்”

நோயாளி: ”இந்த மருந்துக்கு அத்தனை பவரா… நான் சைக்கிள் ஓட்டலாமா டாக்டர்?’

டாக்டர்: ”ம்… ஓடலாம்னு சொல்றேன்… சைக்கிள் ஓட்டுறதா கஷ்டம்’

நோயாளி: ”இல்ல டாக்டர்… எனக்கு சைக்கிள் ஓட்டவேத் தெரியாது… அதான் கேட்டேன்!’

படித்ததில் பிடித்தது: naai-nakks.blogspot.in

நேத்து ராத்திரி ஒரு மோகினிப்பிசாச
நடந்து வர்றதை என் மனைவி பார்த்துட்டு,

என்னை எழுப்பி…

பயத்துல கட்டிப்பிடிச்சிட்டாங்களா?

.ஊஹூம்… அந்த
மாடல்லே கொலுசு வேணும்னு
கேட்டா..!

ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. விஷயம் முனிவரிடம் வந்தது. அவர் சீடர்களிடம், சீடர்களே! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதாமாகும். அதோ! இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள், என்றார்.

குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல், முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடன் சற்று பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே தாண்டில் மரத்தை தொட்டான். பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான். மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா! கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன், என்றான் பெருமையோடு.

இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான். அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர். அவர்கள் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். சிஷ்யனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்தான்.

இப்போது முனிவர் முதல் சீடனிடம், இரண்டாவது சீடன் தான் அதிபுத்திசாலி என்றார்.முதலாமவன் கோபப்பட்டான். சுவாமி! இன்னும் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படி சிறந்தவன் என சொன்னீர்கள்? என்றான்.முனிவர் அவனிடம், சிஷ்யா! நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டி தான்! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன்.

இரண்டாம் சீடனோ பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும் இன்னும் பல நாட்கள் பழங்கள் கிடைக்கும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே அதிபுத்திசாலி, என்றான்.இங்கே செயல் ஒன்று தான். ஆனால், செய்த விதத்தில் தான் வித்தியாசம்

Courtesy: Facebook

செல்வாவின் நண்பர் ஒருவர் செல்வாவைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்திருந்தார்.
வீட்டிற்குள் நுழைந்தவருக்கு அங்கு அவர் கண்ட காட்சிகள் சிரிப்பினை வரவைத்தன. மேலும் சில இடங்களில் குழம்பியும் போனார்.
வீட்டின் முற்றத்தின் ஒரு பக்கத்தில் கொசுக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. மற்றொரு பக்கம் கொசுவின் படம் போட்டு அனுமதி இல்லை என்பதுபோல அதன்மேல் சிவப்புக் கோடு போடப்பட்டிருந்தது. அவர் செல்வாவின் நண்பர் என்பதால் ஒரு பக்கம் இருப்பது படித்த கொசுக்களுக்கான எச்சரிக்கை , மற்றொரு பக்கம் இருப்பது படிக்காத பாமரக் கொசுக்களுக்கான எச்சரிக்கை என்பதைப் புரிந்து கொண்டார்.
அதே போல இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றவர் அங்கு கண்ட காட்சியால்  சிரிப்பினை அடக்க முடியாமல் வாய்விட்டே சிரித்துவிட்டார். அங்கு பூனை போன்ற ஒரு வடிவம் செய்து அதன் மேலே எலிகள் ஜாக்கிரதை என்று எழுதப்பட்டிருந்தது. அந்த வடிவத்தினை ஒரு எலி தின்றுகொண்டிருந்தது.
” டேய் , உன்னோட பூனைய எலி திங்குதுடா ? “என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
” ச்சே ..அந்த எலிக்கு இருக்குற தைரியம் கூட நான் வளர்த்த பூனைக்கு இல்லையே ! ” என்று சலித்துக்கொண்டார் செல்வா.
” என்ன சொல்ற ? “
” ஆமா இதே மாதிரி இரும்புல எலி மாதிரி பண்ணி இது மாதிரி எதாச்சும் வந்தா பிடிக்கணும்னு நான் வளர்த்த பூனைகிட்ட சொன்னேன் .. அந்தப் பூனை அந்த இரும்பு எலிய கொஞ்சநேரம் கடிச்சுப் பார்த்திட்டு அப்புறம் கீழ போட்டிருச்சு.. இப்ப உண்மையான எலி வந்தா கூட பிடிக்க மாட்டேங்குது ! “
நண்பருக்கு மேலும் சிரிப்பு. அப்பொழுது செல்வா ” அங்க ஒரு மெழுகுவர்த்தி ஏத்தணும் , நான் எவ்ளோ நேரம் முயற்சி பண்ணினேன் ..ஆனா கெட்டுக் கெட்டுப் போகுது . நீ பத்த வச்சுத் தரியா ? ” என்றார்.
” சரி வா ” என்று செல்வாவுடன் அவர் காட்டிய அறையை நோக்கிச் சென்றார். அந்த அறையின் நுழைவாயிலிலும் அதே போல ஒரு பக்கத்தில் ” காற்றுக்கு அனுமதி இல்லை, மீறினால் பலூனில் அடைக்கப்பட்டு பாம் வைத்துக் கொல்லப்படும்” என்று எழுதப்பட்டிருந்தது. இதை படித்ததும் நண்பருக்கு மறுபக்கத்தில் எப்படி எழுதியிருப்பான் என்று ஆச்சர்யம் வந்தது. மறுபக்கத்தில் மோட்டார் ஒன்று பொருத்தப்பட்டு ஒரு குழாயின் மூலம் அதிலிருந்து வந்த காற்றானது அந்த இடத்தில் வெளியேறுமாறு வைக்கப்பட்டு அங்கே அனுமதி இல்லை என்பது போன்ற சிவப்புகோடு போடப்பட்டிருந்தது.
” டேய் என்னடா , இது ? “
” அதான் நான் இங்க மெழுகுவர்த்தி வச்சா வச்சா காத்து வந்து அணைச்சிடுது. அதனாலதான் இப்படி ! “
” அதுக்கு ஏன் இப்படி ? “
” லூசாடா நீ , காத்துக்கு உருவம் இல்லைல , அதுக்கு எப்படி சிம்பல் போடுறது , அதான் ஒரிஜினல் காத்து அடிக்கிற மாதிரி செட் பண்ணிட்டேன் ” என்றார் செல்வா.
” இப்ப மெழுகுவர்த்தி கெட்டுப் போறதுக்கு காரணமே இந்த மோட்டர்ல இருந்து வர்ற காத்துதான் , உன்னப் பார்த்து சிரிக்கிறதா அழுகறதா ? ” என்றவாறு அந்தக் குழாயை பிடுங்கினார்
ரசித்த இடம்: www.selvakathaikal.blogspot.in

மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு
கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே… மறந்துட்டியா…
மனைவி:- எப்போ சொன்னீங்க…நீங்க சொல்லவே இல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????

மனைவி :- கருமம்… கருமம்.. பக்கத்து வீட்டுக்காரிக்கு ரெண்டு பேரோட
                       கள்ளத் தொடர்பு இருக்காம்.
கணவன் :- அப்படியா!  இன்னொருத்தன் யாருன்னு தெரியலையே?
பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும்
நான் பங்கெடுத்துகுவேன!
ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!
பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!
கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி
                     சொல்றீங்க..!
ரசித்த இடம்: மின்மலர்

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?

ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்….

ஆண்:ம்ம்ம்ம்ம்….. நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ…!

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!

பெண்: 😐

****************************************

ரசித்த இடம்: G+ இல் Rajagopal SM

வாழ்க்கைல  எப்பவுமே நாங்க நினைக்கிற மேட்டர்ஸ்க்கும், ஆனா உண்மையா நடக்குற மேட்டர்ஸ்க்கும் இடையில் பாரியளவிலான வித்தியாசங்கள் இருக்கும் . அது போன்ற சில விடயங்களின் தொகுப்பே இப்பதிவு…..

1.  நாங்க யாருன்னா: யாரவது ஒரு  பிரபல நடிகரின் அதி தீவிர ரசிகர்கள்.

மேட்டர் என்னன்னா: நம்ம தலீவர் சமீபத்துல நடிச்ச எல்லா படங்களும் படு-மொக்கை படு-தோல்வி படங்கள். நம்ம தலீவர் அடுத்த தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ ஒரு படத்துல தீவிரமா(!!)  நடிச்சிகிட்டு இருப்பாரு. ஒலக மகா டைரக்டர் அந்த படத்த எடுத்துகிட்டு இருப்பாரு. அந்த படத்தோட புரோட்யூசர்  படத்துக்கு செமையா பில்டப் குடுத்து ப்ரோமோஷன் பண்ணிக்கிட்டு இருப்பாரு.
நாங்க நினைப்பது என்னன்னா: இந்த படம் மட்டும் வரட்டும், நம்ம தலீவர் ரேஞ்ஜே மாறபோகுது. கோலிவுட்ல நம்ம தலீவர்க்கு இருக்குற   அத்தன போட்டி நடிகர்களும் ஒட்டுமொத்தமா ஒம்போது நாளைக்கு கக்கூஸே கதின்னு கழிச்சிகிட்டு இருக்க போறங்கெ. எந்திரன், 3-இடியட்ஸ்ன்னு அத்தன பட கலெக்ஷன் ரெக்கார்ட்ஸையும் நம்ம தலீவர் படம் ஒரே வாரத்துல பீட் பண்ணிரும். இந்த படத்துக்கு பிறகு  தலிவர்க்கும் அரசியல்ல ஒரு நிலையான இடம் கெடைச்சிடும். நாங்களும் பொண்டாட்டி கொழந்த குட்டின்னு அப்புடியே செட்டில் ஆயிடலாம்.
ஆனா நடப்பது என்னன்னா: இதுக்கு முன்னாடி நம்ம தலிவர் நடிச்ச அந்த நாலு படு-மொக்கை படு-தோல்வி படங்களும் எவ்வளவோ மேல். இந்த புது படம் அந்த நாலத்தயும்  விட படு மொக்கையா, படு கேவலமா, நாறத்தனமா இருக்கும்.
 
*************************************************
2. நாங்க யாருன்னா:  சாப்ட்டுவேரு புடுங்குற கம்பேனிலயோ இல்ல அது மாதிரி வேற எதாவது ஒக்காந்துகிட்டே வேலை செய்ற 27,28+ வயசு இளைஞர்கள்.

 
மேட்டர் என்னன்னா: நாம ஒக்கந்துகிட்டே வேல செய்றோமா, அப்புறம் தினம் நாலு வேளை புல் மீல்சும் , இடையிடையில ஸ்னேக்ஸும் திங்கிறோமா, இப்ப நமக்கு லேசா இள-தொந்தி(தொப்பை) வந்துருக்கு.
 
நாங்க நினைப்பது என்னன்னா: இந்த தொந்திய குறைக்கிறதுக்காக (மறைக்கிறதுக்காக)  ஒலகத்துல இருக்குற அத்தன தில்லாலங்கடி வேலையையும் செய்வோம். காத்தாலயே ஜாகிங், வாக்கிங் போக ட்ரை பண்ணுவோம். கம்பெனில ஜிம் இருந்தா அதுக்கு போகயும் ட்ரை பண்ணுவோம். பக்கத்து தெருல இருக்குற சூப்பர் மார்க்கட்டுக்கு நடந்தே போவோம். அப்புடி நடந்து போனா, நம்ம தொந்தி அடுத்த நாளே கரைஞ்சிடும்னு நெனச்சுப்போம். பிரபல சேனல்கள்ள மிட் நைட்ல போடுற டெலி-பை புரோகிராம்ஸ எல்லாம் ஒன்னு விடாம பார்த்து அதுல சொல்ற  நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த எக்ஸேர்ஸைஸ் ஈக்விப்மென்ட எல்லாம் வாங்கிருவோம். அப்புடி அதுல எக்ஸேர்ஸைஸ் செஞ்சா ஒரே  மாசத்துல சல்மான்கானுக்கு போட்டியா  சிக்ஸ் பேக்ஸ்கோ, இல்ல அமீர்கானுக்கு போட்டியா எயிட்  பேக்ஸ்கோ கொண்டுவந்துரலாம்ன்னு நெனச்சிக்கிட்டு இருப்போம். எக்ஸேர்ஸைஸ் செஞ்சி முடிச்சிட்டு யாரும் இல்லாதப்போ, கண்ணாடி முன்னாடி ஷர்ட்ட தூக்கி தொந்திய அளந்து பார்போம். 2mm கொரஞ்சிருக்குன்னு நெனச்சுப்போம்.
 
ஆனா நடப்பது என்னன்னா: மேல சொன்ன ட்ரை பண்ணுற சமாச்சாரங்க எல்லாம் ட்ரை பண்ற லெவல்ல தாண்டியே இருக்காதுவாங்கிபோட்ட எக்ஸேர்ஸைஸ் ஈக்விப்மென்ட்ஸ நம்ம வீட்டு பொம்மனாட்டிக துணி காய போடுறதுக்கு யூஸ் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. நாங்க 35+ வயசுல  “ஜி” படத்துல வர்ற தல-ய மாதிரி ஆகுறதையும் , 45+ வயசுல தமிழ்நாட்டு போலீஸ்ல சேர்றதுக்கான தகுதிகள உருவாக்கிக்கிறதயும் யாராலுமே தடுக்க முடியாது.
 
*************************************************

3.  நாங்க யாருன்னா: தொழில் செய்துகொண்டே பதிவெழுதும் பதிவர்கள்மேட்டர் என்னன்னா: நம்ம ஆபிஸ்ல நமக்கு மேல இருக்குற மேனேஜர்/சூப்பர்வைசர்/ஹெட்னுன்னு யாராவது ஒரு மேலதிகாரி இந்த வாரத்துக்குள்ள முடிக்க சொல்லி நமக்கு பல ப்ராஜக்ட்ஸ் கொடுத்துருப்பாரு. எல்லா ப்ராஜக்ட்ஸ்க்கும் இன்னும் ரெண்டு நாள் டெட்லைனே இருக்கும். எப்புடிடா இத்தினி வேலையையும் ரெண்டே நாள்ல முடிக்கிறதுன்னு செம டென்ஷன்ல இருப்போம்.

நாங்க நினைப்பது என்னன்னா: இந்த டென்ஷன எல்லாம் குறைக்கிரதுக்கு ஒரு செம காமெடி பதிவு எழுதுனா மனசு ரிலாக்ஸ் ஆகிடும்னு நெனச்சிப்போம். தமிழில் சமகாலத்தில் பதிவெழுதும் தலைச்சிறந்த பின்நவீனத்துவவாதியான நம்மளோட பதிவுகள் ஏதும் சமீபத்துல வரலையேன்னு நமது வாசககோடிகள்   பீல் பணிகிட்டு இருப்பாங்களே, அவங்கள திருப்தி படுத்துறதுக்காகயேனும் ஒரு செம காமெடி பதிவு போடனும்னு நினைப்போம். ஏற்கனவே பிரபல பதிவரா இருக்குற நாங்க, இந்த பதிவ மட்டும் பப்ளிஷ் பண்ணிட்டா, விக்ரமன் பட ஹீரோ மாதிரி ஒரே நைட்ல பத்து லட்சம் ஹிட்ஸ்ங்குற நம்ம டார்கெட்ட அச்சீவ் பண்ணி, கேபிள்,சி.பி,உ.த அண்ணாச்சிகள் எல்லாரையும் தாண்டி  டாப் டென் தமிழ் பதிவர்கள்ள இடம்பிடிச்சிடலாம்ன்னு கன்போர்மா நெனச்சிப்போம்.ஆனா நடப்பது என்னன்னா: நாங்க செம காமெடின்னு நெனச்சிட்டு எழுதுன போஸ்ட் வழக்கம் போலவே செம மொக்கையா இருக்கும். பதிவுலகத்துல நமக்கு தெரிஞ்ச , நம்ம மேல பரிதாப பட்டு வர்ற ஒன்னு ரெண்டு நண்பர்கள்ல தவிர வேற யாருமே நம்ம பிளாக் பக்கம் வந்துருக்க மாட்டாங்க. வழக்கம்போலவே  இந்த போஸ்ட்டுக்கும் 200 ஹிட்ஸ்க்கு மேல வராது. ஏற்கனவே இருக்குற வேல டென்ஷன்+இந்த டென்ஷன்னு செம காண்டாகி கம்ப்யூடர் முன்னாடி உட்காந்து ஸ்க்ரீனையே வெறித்து பார்த்துகிட்டு  இருப்போம். நாளைக்கு ஆபிஸ் போய் மேலதிகாரிக்கு என்னெல்லாம் பொய் சொல்லலாம்னு சீரியா ஒக்காந்து யோசிச்சிட்டு இருப்போம்.

*************************************************

எழுதியவரோட டிஸ்கி: எங்குலச்சாமி பாடிகாட் முனூஸ்ரன் சத்தியமா இது அனுபவ பதிவு இல்லீங்…

எழுதியது: http://realsanthanamfanz.blogspot.in

ஒரு பணக்காரக் கஞ்சனின் வேலைக்காரன் ஒரு மருந்துக் கடைக்கு வந்து கடைக்காரரிடம் சொன்னான்,”அய்யா,எங்கள் முதலாளி ஏதோ வருத்தத்தில் இருக்கிறார்.என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்து ஏதாவது விஷம் வாங்கி வரச் சொன்னார் .எனக்கு பயமாக இருக்கிறது.”

அவனது முதலாளியை ஏற்கனவே அறிந்திருந்த கடைக்காரர்,”தம்பி,நீ கவலைப் படாதே,உங்கள் முதலாளியிடம் போய் இப்போது விசத்தின் விலை பதினோரு ரூபாய் என்று சொல்.அவன் வேண்டாம் என்று சொல்லிவிடுவான்,”என்றார்.

********
செருப்பு திருடியதாக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.நீதிபதி அவனுடைய விளக்கத்தைக் கேட்டார்.அவன் சொன்னான்,”அய்யா,இந்த செருப்பை என் முதலாளி எனக்குத் தந்தார்.நான் திருடவில்லை.”அவன் முதலாளி ஊரறிந்த மகாக் கஞ்சன்.

நீதிபதிக்கும் அந்தக் கஞ்சனைப் பற்றி தெரியும்.எனவே அவர் இவ்வாறு தீர்ப்பு கூறினார்,”செருப்பு திருடியதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.பொய் சொன்னதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.”

********

ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவருமே கஞ்சர்கள்.அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சொல்லாமல் கொள்ளாமல் தம்பி எங்கோ ஓடி விட்டான்.பல ஆண்டுகளுக்குப் பின் தான் திரும்ப வருவதாக அண்ணனுக்கு தந்தி கொடுத்திருந்தான்.அவனை வரவேற்க அண்ணன் ரயில் நிலையத்திற்கே வந்துவிட்டான்.தம்பி வந்ததும் அவனை ஆரத்தழுவி ”தம்பி,நலமாக இருக்கிறாயா?”என்று கேட்டுவிட்டு,”ஆமாம் ,ஏன் இவ்வளவு நீண்ட தாடியுடன் இருக்கிறாய்?இங்கிருந்து போனதிலிருந்து நீ முக சவரம் செய்தது மாதிரி தெரியவில்லையே!”என்று அன்புடன் கேட்டான்.தம்பி சற்றே வருத்தத்துடன்,”நீ தான் நான் அடிக்கடி முக சவரம் செய்து காசை விரயம் செய்கிறேன் என்று சொல்லி நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங் சேட்டை ஒளித்து  வைத்து விட்டாயே!”என்றானே பார்க்கலாம்!

Courtesy: தென்றல்

காலைல எழுந்திருக்க ரொம்ப லேட் இன்னைக்கு.

அவசர அவசரமா ப்ரஷ் பண்ணிட்டு, ‘சுடுதண்ணி வெச்சிருப்பாங்களே’ன்னு சமையல் அறைக்குப் போனேன்.

நம்ம வீட்ல ஹீட்டர்லாம் கெடையாது. இட்லிப் பானைலதான் சுடுதண்ணி வைப்பாங்க. நல்ல்ல்லா சுடணும், சீக்கிரம் ஆகணும்னு மூடிபோட்டு தண்ணி சுட வைப்பாங்க.

நான் சமையலறைக்குப் போனப்ப, அந்த இட்லிப் பாத்திரம் கொதிச்சுக்கிட்டிருந்தது. ‘ப்பா.. இன்னைக்கு செம்ம குளியல் போடணும்டா’ன்னு அவசர அவசரமா பக்கத்துல இருந்த துணியை எடுத்துப் பாத்திரத்தைப் புடிச்சுகிட்டே பாத்ரூம் போய் வெச்சேன்.

துண்டெடுக்க போறமுன்னாடி வெளாவி வைக்கலாம்னு பாத்திரத்தைத் தொறந்தா…

உள்ள இட்லி வெந்துகிட்டிருக்கு!

மண்டைகாஞ்சு போய் ‘உமா பார்க்கறதுக்குள்ள மறுபடி கொண்டு போய் வெச்சுடணும்டா’ன்னு எடுத்தா, பின்னாடியே நிக்கறாங்க!

——-

கெளம்பறப்ப பூரிக்கட்டையைத் தொடைச்சுட்டு இருந்தாங்க. அநேகமா இன்னைக்கு நைட் பூரிதான்னு நினைக்கறேன் வீட்ல.

G+ இல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டவர்: பரிசல்காரன் கிருஷ்ணா

தங்கமணி அம்மா வீட்டுக்கு போயிட்டு ஒரு வாரம் கழிச்சு அன்னைக்கி தான் வந்திருக்காங்க. கணவனும் மனைவியும் அரட்டை அடிச்சுட்டு இருக்காங்க
ரகளை இப்படி தான் ஆரம்பிக்குது….
தங்கமணி : டிட் யு மிஸ் மீ?
ரங்கமணி : நோ ஐ மிசஸ்ட் யு (என அதிபுத்திசாலி லுக் விட்டு சிரிக்கிறார்)
தங்கமணி : (முறைக்கிறாள்)
ரங்கமணி : ஹா ஹா… நான் சொன்னது உனக்கு புரியலைன்னு நினைக்கிறேன்… இதெல்லாம் அதையும் தாண்டி புனிதமானது உனக்கு புரியறது கொஞ்சம் கஷ்டம் தான் (என சிரிக்கிறார்)
தங்கமணி : பித்துக்குளிதனமா எதுனா ஒளர வேண்டியது… அதுக்கு இப்படி ஒரு மொக்க விளக்கம் வேற… கஷ்டம்டா சாமி… உங்கூரு ஜோசியர் குத்தாலத்துல ஏதோ பரிகாரம் பண்ணனும்னு சொன்னாருனு உங்கம்மா சொன்னது சரி தான் போல இருக்கு

ரங்கமணி : என்ன கிண்டலா?

தங்கமணி : இல்ல சுண்டல்

ரங்கமணி : ஹ்ம்ம்… புரியலைனா புரியலைனு ஒத்துக்கோ, சும்மா சமாளிக்காத

தங்கமணி : சரி சாமி… ஒத்துக்கறேன், உங்க மேலான விளக்கத்தை இந்த பீமேல்’க்கு புரியற மாதிரி கொஞ்சம் சொல்றீங்களா?
ரங்கமணி :ஹா ஹா… நீ கூட சமயத்துல நல்லா காமடி பண்றே தங்கம்… சரி விளக்கம் என்னனா… நீ “டிட் யு மிஸ் மீ”னு கேட்டயா, அதுக்கு நான் என்ன சொன்னேன்…

தங்கமணி : ஐயோ… மறுபடி மொதல்லேந்தா… (என தலையில் கை வைக்க)
ரங்கமணி : சரி நானே சொல்றேன்… நான் “நோ ஐ மிசஸ்ட் யு”னு சொன்னேன்… அதாவது உன்னை கல்யாணம் பண்ணிட்டு மிஸ்சா இருந்த உன்னை மிசஸ் ஆக்கினேன்னு சொன்னேன்… இப்ப புரியுதா… (என காலரை தூக்கிவிட்டு கொண்டு கேட்க)
தங்கமணி : நல்லா புரியுது…
ரங்கமணி : என்ன புரியுது?
தங்கமணி : குத்தாலம் பரிகாரத்தை நாள் கடத்தாம செய்யணும்னு புரியுது
ரங்கமணி : பொறாம பொறாம… ஹையோ ஹயோ… (என சிரிக்க)
தங்கமணி : அதெல்லாம் இருக்கட்டும் நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லல
ரங்கமணி : என்ன கேட்ட?
தங்கமணி : ம்… சொரக்காய்க்கு உப்பு பத்தலனு கேட்டேன் (என்றாள் கடுப்பாய்)
ரங்கமணி : ஜோக்கா? ஹி ஹி… சிரிச்சுட்டேன் போதுமா… (என பல்லை காட்ட)
தங்கமணி : இங்க பாருங்க எனக்கு கெட்ட கோவம் வந்துரும்
ரங்கமணி : கோவத்துல கூட நல்லதா வராதா உனக்கு… ஹா ஹா
தங்கமணி : (முறைக்கிறாள்)
ரங்கமணி : சரி சரி சொல்றேன்… உன்னை மிஸ் பண்ணாம இருப்பனா தங்கம்
தங்கமணி : நிஜமா? (என்றாள் சந்தேகமாய் பார்த்தபடி)
ரங்கமணி : செத்து போன எங்க அப்பத்தா மேல சத்தியமா
தங்கமணி : எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?
ரங்கமணி : எவ்ளோனா…அதெப்படி சொல்றது (என விழிக்கிறார்)
தங்கமணி : அதேன் சொல்ல முடியாது… அப்ப நீங்க என்னை மிஸ் பண்ணல
ரங்கமணி : அது…. அப்படி இல்ல தங்கம்… நெறைய மிஸ் பண்ணினேன்… அதை எப்படி சொல்றது?
தங்கமணி : (இடைமறித்து) இந்த மழுப்பற வேலை எல்லாம் வேண்டாம்… இன்னிக்கி சாயங்காலத்துக்குள்ள எவ்ளோ மிஸ் பண்ணீங்கனு சொல்லணும்
ரங்கமணி : என்ன தங்கம் இது? எங்க மேனேஜர் டெட்லைன் வெக்கற மாதிரி சொல்ற
தங்கமணி : அந்த டெட் லைன் மிஸ் பண்ணினா வேலை தான் போகும்… இந்த டெட்லைனா மிஸ் பண்ணினா லைப்லைனே போய்டும் சொல்லிட்டேன் (என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறாள்)
ரங்கமணி : அடிப்பாவி… இப்படி சொல்லிட்டு போயிட்டாளே… என்ன பண்றது இப்போ? ப்ராஜெக்ட்ல சந்தேகம்னா டீம் மீட்டிங் போடலாம்… இந்த விசயத்துக்கு மீட்டிங் போட்டா என் மானம் டைடானிக்ல டிக்கெட் வாங்கிருமே… என்ன பண்ணலாம்… (என யோசிக்க…) ஐடியா… (என குதிக்கிறார்) கூகிள் இருக்க பயமேன்
ரங்கமணி : ( கூகிளில் “How” என டைப் செய்ததுமே “How to Tie a tie” என சஜசன் வர… ) இதொண்ணு என் வீட்டுக்காரி மாதிரியே குறுக்க குறுக்க பேசிகிட்டு…
தங்கமணி : (உள்ள இருந்து) என்னமோ சொன்ன மாதிரி கேட்டுச்சு?
ரங்கமணி : உன்னை ஒண்ணும் சொல்லல தங்கம்… இந்த சனியம் புடிச்ச கம்பியூட்டர் தான் (என சமாளிக்கிறார்)
தங்கமணி : (சைலண்ட்)
ரங்கமணி : ஹ்ம்ம்… (என பெருமூச்சு விட்டபடி… “How to measure how much…” என டைப் செய்து முடிக்கும் முன் “how to measure how much paint i need” என ஒரு நூறு லிங்குகள் வர) அடச்சே… ஆணியே புடுங்க வேண்டாம் போ… (என சலித்து கொண்டு கம்பியூட்டரை ஆப் செய்கிறார்)
சற்று நேரம் கழித்து…
தங்கமணி : ரெடியா? இப்ப சொல்லுங்க… என்னை எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?
ரங்கமணி : “ஐயையோ…அதுக்குள்ள டெட்லைன் வந்துடுச்சா” என தனக்குள் புலம்பியவர் “ம்… அது… சரி என்னை கேக்கறியே? நீ சொல்லு பாப்போம்… என்னை நீ எவ்ளோ மிஸ் பண்ணின?” என மடக்கினார். அல்லது மடக்கி விட்டதாக புளங்காகிதம் அடைந்தார்
ஆனால் அதெல்லாம் வெறும் காகிதமாக ஆக போவதை பாவம் அவர் அறியவில்லை
தங்கமணி : நானா? இங்கிருந்து கிளம்பின நிமிசத்துல இருந்து எப்படா திரும்பி வருவோம்னு நெனச்சேன்…அவ்ளோ மிஸ் பண்ணினேன்
ரங்கமணி : “ஐயையோ… எனக்கு இது தோணாம போச்சே…ச்சே…எவ்ளோ ஈஸியா சொல்லிட்டாளே… இந்த மாதிரி வேற எதுவும் தோண மாட்டேங்குதே” என புலம்பியவர் “பேசாம நானும் அப்படித்தான்னு சொல்லிடுவோம்” என தீர்மானித்து வாயை திறக்கும் முன்…
தங்கமணி : நானும் அப்படித்தான்னு சொல்றத தவிர வேற எது வேணா சொல்லுங்க… உங்களுக்கு இன்னும் இருபத்திநாலு மணி நேரம் டைம் (என எழுந்து செல்கிறாள்)
ரங்கமணி : ………………………………….
என்ன செஞ்சாரா? மேல உள்ள படத்த பாருங்க…அப்படி தான் முழிச்சுட்டு இருக்காராம். ஹையோ ஹையோ… :))

ரசித்த இடம்: http://appavithangamani.blogspot.in

அந்த பக்கம் போகாதீங்க.ஏதோ ஆர்ப்பாட்டம் நடக்கிறது.”

ஆனால் அந்த பக்கம் போனால்தான் வீடுக்கு சீக்கிரம் போகலாம்.இது சுற்று வழி.

எப்படியோ ஆர்ப்பாட்டத்தில் நுழைந்து சமாளித்துப்போய் விட வேண்டியதுதான்.எதிர் வந்தவர் கூறியதை காற்றில் பறக்க விட்டேன்.
வேகமாக நடை போட்டேன்.

ஒரே பெண்கள் கூட்டம்.ஆவேசமாக கூக்குரல்[ அவர்கள் மொழியில் கோசம்] போட்டுக்கொண்டிருந்தனர்.
ஏதாவது மாதர் சங்கமாக இருக்கும்.எங்காவது பெண் பாலியல் பலாத்காரம் விவகாரமாக இருக்கலாம்.

ஆனால் கோசங்கள் சற்று வேறுமாதிரி இருந்தது.கவனித்தேன்.
“வெறும் சம்பளம் மட்டும் போதாது.விலைவாசிப் புள்ளிகளுக்கேற்ப அகவிலைப்படி வேண்டும்,,வேண்டும்,
ஆண்டுக்கொருமுறை மிகை ஊதியம் போனஸ் வேண்டும்,,வேண்டும்.”
அடடா.சத்துணவு பெண்களாக இருக்காலாம்.அல்லது அங்கன்வாடி இனத்தவர்களாக இருக்கலாம்.மகளிர் காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொன்டிருப்பது பார்வையில் பட்டது.

அது யார் .?

ஒரு ஓரமாக.காசி போல் தெரிகிறதே.
அது நண்பன் காசியேதான்.

ஏன் ஒரு ஓரமாக ஒளிந்து நிற்பது போல் இருக்கிறான்.என்னைப் பார்த்து விட்டான்.

கையை அசைத்து ரகசியமாக அல்லது பயத்துடன் கூப்பிடுவது தெரிந்தது.
வேகமாக அதே நேரம் அவனின் ரகசியத்துக்கு ஈடு கொடுத்து கள்ளக்காதலியை நெருங்கும் காதலன் போல் சென்றேன்.
“பேசாமல் அந்தவழியில் போயிருக்கலாம்லே”?
ஏன்?என்ன விசயம்.?
“இந்த ஆர்ப்படத்தில் மாட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதில்லையா?
“என்ன ஆர்ப்பாட்டம்.சத்துணவா,மகளிர் சங்கமா?இதில் நாம் மாட்டி என்ன ஆகப்போகிறது?”
“அங்கே பாருடா மடையா?”
நானும் மடையன்போல் பார்த்தேன்.அட எனது மனைவி.அருகில் காசியின் பத்தினி.அருகில் பார்க்க பார்க்க திகைப்பு.
தெருவில் உள்ள அத்தனை மனைவிகளும்.அங்கு இருந்து கோசமிட்டனர்.

என்ன இழவு போராட்டம்.?

“மனைவிகளுக்கு மாதா,மாதம் சம்பளம் கொடுக்க நீதிமன்றம் உத்திரவிட்டு விட்டது அல்லவா?
இவங்களுக்கு சம்பளம் மட்டும் போதாதாம்.அகவிலைப்படி.மிகை ஊதியம்,கொடுபடா ஊதியம்.இன்னமும் எத்தனைவகை ஊதியம் உள்ளதோ அத்தனையும் வேண்டுமாம்.அதான் இந்த ஆர்ப்பாட்டம்.’ காசி கிசு,சிசுத்தான்.எனக்கோ தலையை சுற்றிவந்தது.கீழே விழுந்து விடும் அபாயம் தெரிந்தது.
ஆனால் விழும் இடம் சாலை போட பல ஆண்டுகளுக்குமுன்பே கொட்டி வைத்த கற்குவியல்.
அதில் விழாமல் இருக்கவும் ,அதன் மீது அமர்ந்து சற்று சிரமபரிகாரம் செய்து கொள்ளும் எண்ணத்திடன் அருகில் போனேன்.

கால் செருப்பில் சிறு கல்.உறுத்தியது.

ஆர்ப்பாட்டத்தை சோகத்துடன் பார்த்துக்கொண்டே ,செருப்பினூடே புகுந்த சுண்டைக்காய் அளவு கல்லை எடுக்க முயற்சித்தேன்.செருப்பு கீழே கழன்று விழுந்து விட்டது.செருப்பை எடுத்தேன்.

“ஆர்ப்பாட்டத்தில் செருப்பையா வீசுகிறாய்?’
கழுத்தில் கை விழ திரும்பினேன்.பெண் காவலர்.சும்மா சொல்லக்கூடாது பார்த்தாலே பயம் வரும் தடித்த உருவம்.

‘நான்.செருப்பு,கல்லு,”

போலிசை பார்த்தாலே பயம்.
அதிலும் இது பெண் போலீசு.வார்த்தைகள் தடுமாற ஒருகையில் செருப்பும்-மறுகையில் கல்லுமாக கையும் -களவுமாக,

மாட்டிக்கொண்ட நிலை.காசியைப்பார்த்தேன்.பாவி பறந்து போய் பத்து நிமிடம் ஆகியிருக்கும் போல் தெரிந்தது.
செருப்பு கையோடே ஏதோ கசாப்பை பிடித்து விட்ட பெருமிதத்துடன்.தர,தர வென காலரை பிடித்து இழுக்க

‘நான் சும்மா,நான்,செருப்பு,நான் கல் .நான் இல்லை”

என தொடர்புகளே அற்ற வார்த்தை உளறல்களுடன் இழுபட்டு சென்றேன்.
சாதாரண பெண்ணை விட்டு தப்பிக்க இயலா அளவு பயம்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு கல் ஒரு கண்ணாடிஅளவுக்கு என்னைப் பார்த்து கோபத்துடன் முன்னேற, அதிலும் எனது பத்தினி முகம் அதிகோரமாக தெரிய

“நான் இல்லை.நான் கல்.நான் செருப்பு ” என்ற உளறல் அதிகரித்தது.

‘நான் ஈ ‘என்று கூட சொன்ன ஞாபகம்.
—————————————————-
“என்ன.சொல்றீங்க .நீங்க இல்லீனா யாரிந்த நூறு ரூபாயை எடுத்தாங்க.”
மனைவி உலுக்க தூக்கம் கலைந்தது.

“என்ன.நூறு ரூபாய்?”

“உங்க சம்பளத்தை இந்த மாதம் எடுக்க ஏடிஎம் போய் பார்த்தால்.சம்பளத்தில் வழக்கத்தை விட நூறு ரூபாய் குறையா கணக்கு சீட்டு வருகிறதே”
அட தூக்கத்தில் என்னவோ கெட்ட கனவு.

“ஆபீசிலே ஒருத்தர் வீட்டு கல்யாணம்.எல்லோரும் நூறு ரூபாய் மொய் ஒரு ஆள்கிட்டே கொடுத்து விட்டோம்.அதான்.
உங்கிட்டே சொல்லனும்னு இருந்தேன் மறந்துட்டு.”அசடு வழிந்தேன்.

“வர,வர வெட்டி செலவு அதிகமாயிட்டு.பஸ்-காபி செலவுக்கு கொடுக்கிறதை குறைச்சாத்தான் சரி வருவீங்க.”

கோபம் வர தூக்கி எறிந்தேன்.தலயணையைத்தான்.
அதுவும் அவள் போய் விட்டாள் என்று நிச்சயம் ஆன பின்புதான்.

யாராவது மாதமானால் சம்பளத்தை அல்லது ஏடிஎம் அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு நம்  மாத செலவுக்கு பணம்தர மறுக்கும் பெண்சாதிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டீர்களா?

நான் முழு ஒத்துழைப்பு தர தயார்.

மனதளவில் தான்.

ஒன்று படுவோம்,

-போராடுங்கள்-

வெற்றி பெறுவோம்.

யாருங்க அது தங்கமணிக்கு லிங்க் அனுப்ப பாக்கிறது? எழுதினது நான் இல்லங்க: இவரு  தான்: http://suransukumaran.blogspot.in

ஒரு ஊர்ல 4 விஞ்சாணிகள் இருந்தாங்க. அவங்க வேல மிருகங்களை பத்தி ஆராய்ச்சி பண்றது. குரங்குகளை பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு 10 குரங்குகளை புடிச்சிட்டு வந்து பெரிய கூண்டுல அடைச்சாங்க. கூண்டுக்குள்ள பெரிய வாழைத்தார தொங்க விட்டு, பக்கத்துல ஒரு ஏணியவும் வெச்சாங்க. வாழைப்பழத்த பார்த்த உடனே ஒரு குரங்கு உடனே ஏணில ஏற ஆரம்பிச்சது. ஏணில ஏறுன உடனே சுத்தி பயங்கர குளிர்ச்சியான தண்ணிய எல்லா குரங்குகள் மேலயும் பீச்சி அடிச்சாங்க. மேல ஏறுன குரங்கு தண்ணி வேகம் தாங்காம கீழே வந்துடுச்சு. அது ஏணில இருந்து இறங்கின உடனே தண்ணிய அடிக்கிறத நிப்பாட்டிட்டாங்க.
கொஞ்ச நேரத்துல இன்னொரு குரங்கு அதே மாதிரி வாழைப்பழத்த சாப்பிடலாம்னு ஏணில ஏற தொடங்குச்சி. அது ஏணிய தொட்ட உடனே மறுபடியும் அதே மாதிரி குளிர் நீர் பீச்சுனாங்க. தாங்க முடியாம ஏறுன குரங்கும் உடனே இறங்கிடுச்சு. இப்படியே தொடர்ந்து 3 வாட்டி நடந்துச்சு. குரங்குகள் எல்லாத்துக்கும், அந்த ஏணிய டச் பண்ணா எல்லார் மேலேயும் குளிர்நீர் பீச்சியடிக்கும்னு புரிஞ்சிடுச்சு. அதுனால எல்லாம் அமைதியா உக்காந்திருச்சுங்க.
அப்போ கூண்டுக்குள்ள இருந்து ஒரு குரங்க வெளில எடுத்துட்டு, புதுசா ஒரு குரங்க உள்ள விட்டாங்க. அதுக்கு தண்ணி மேட்டர் எதுவுமே தெரியாதே. உள்ள போன உடனே வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணி பக்கத்துல போச்சு. அத பார்த்த உடனே மத்த குரங்குகள்லாம் ஓடிவந்து புதுக் குரங்க ஏணிய டச் பண்ண விடாம இழுத்துட்டு வந்து போட்டு அடிச்சதுங்க. புதுக்குரங்குக்கு ஒண்ணுமே புரியல. ஏணில ஏறுனா அடிப்பாங்கன்னு நெனச்சிட்டு சும்மா உக்காந்துச்சு.
இப்ப,இன்னொரு பழைய குரங்க வெளில எடுத்துட்டு இன்னொரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க, அதுவும் வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணில ஏற முயற்சி பண்ணி மத்த குரங்குகள்கிட்ட அடிவாங்கிச்சு. ஏற்கனவே உள்ள போன புதுக்குரங்கும் அடிக்கிறதுல சேர்ந்துக்கிச்சி. உள்ள வந்த புதுக்குரங்குக்கும் எதுக்கு இப்படி போட்டு அடிக்கிறாங்கன்னு தெரில.
இப்படியே ஒவ்வொரு குரங்கா வெளில எடுத்துட்டு ஒரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க. கொஞ்ச நேரத்துல எல்லா பழைய குரங்கும் வெளில வந்துடுச்சு.உள்ள புது குரங்குகள் மட்டும்தான். அப்பவும் எல்லாம் மத்த குரங்குகளை ஏணில ஏற விடாமே அடிச்சிட்டு இருந்துச்சுங்க. ஆனா அதுக எதுக்கும் வாழைப்பழத்த எடுக்க ஏணில ஏறுனா குளிர்ந்த நீர் பீச்சி அடிக்கும், அதுனாலதான் ஏறவிடாம அடிக்கிறோம்னு எதுவும் தெரியாது. முன்னாடி இருந்த குரங்குங்க, அடிச்சது, நாங்களும் அடிக்கிறோம்னு அடிச்சிட்டு இருந்துச்சுங்க. இப்படித்தாங்க உலகத்துல பல விஷயங்கள் நடக்குது………


நன்றி: கூகிள் இமேஜஸ், இது கார்ப்பரேட் கம்பெனிகளில் இருக்கும் ஒர்க் கல்ச்சர் பற்றி கிண்டலடிக்கும் ஒரு பழைய கதை… அவ்வளவே!

எவ்வளவுகாலந்தான்  நம்ம மண்டையை இதையே சொல்லி காயவைப்பாங்க?அதுதான் சிறிது நகைச்சுவையாக இருக்கட்டுமே என்பதற்காக இப்பதிவு.

உலகம் அழியும்போது நம்ம பிரபலங்கள்என்ன செய்வார்கள்?  அண்ணன் சீனிப்பிரபுவின் நகைச்சுவைக்கலாட்டா…கீழே வீடியோவாக இருக்கின்றது பார்த்து சிரியுங்கள்

மன்மோகன்-என்னப்பா சொல்லுறீங்கோ எந்த உலோகம் அழியப்போது?
மம்முட்டி-இரும்பு அழியப்போகுது..உலோகம் இல்லை சார் உலகம்
மன்மோகன்-உலகம் அழியப்போகுதா அப்ப இந்தியாவும் அழிஞ்சிடுமா?

முடிவில ஒரு ருவிஸ்ட் இருக்கு நீங்களே பாருங்க..

அது சரி சின்னதா ஒரு மொக்கை

உலகம் அழியப்போகிறதாம் சாரே…என்ன செய்யப்போறீங்க எப்படி தப்பப்போகின்றோம்?

ரஜனி-என்னாது அழியப்போகுதா ஹா ஹா ஹா கண்ணா….170,000 கோடி அடிச்சப்பவே அழியாத உலகம் இப்பவா அழியப்போது. அட போங்கப்பா

கவுண்டமணி-ஆமா உலக விசயம் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டாராம்

கமல்-உலகம் அழிவது என்பதில் இரு மாற்றுக்கருத்துக்கள் உண்டு மக்கள் அழிவது உலகம் அழிவது இதில் இரண்டும் நடக்கலாம் ஒன்றும் நடக்கலாம் ஆனால் ஒன்றை ஒன்று நிச்சயம் சார்ந்திருக்கும்..

கவுண்டமணி-நாம ஒன்னு கேட்ட நம்மள அசரவைக்கிறமாதிரி ஒரு பதில் சொல்லுவாரு பாரு அது நமக்கு இங்க விளங்காது வீட்ட போனாத்தான் புரியும் பல பேர் பதில் தெரியாமலே ஓடியிருக்காங்க..

விஜய்-ணா எனக்கு பயம்னா என்னான்னே தெரியாதுன்னா?
பிரபு-அப்ப ஏன்யா பாண்டு நனைஞ்சிருக்கு?

அஜித்-அத்திப்பட்டி அத்திப்பட்டி…..
விஜயகாந்த்-ஏய் உலகமே அழியப்போகுதெங்கிறன் வத்திப்பெட்டியதேடிக்கிட்டிருக்காய்…..

ரசித்த இடம்: http://www.venkkayam.com

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம பொன்ராஜ் .

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம பொன்ராஜ் க்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி – “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், பொன்ராஜ் .

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” – செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம பொன்ராஜ் .

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்… டிக் டிக்… டிக் டிக்…

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா… ” – மனசுக்குள் பொன்ராஜ் .

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

பொன்ராஜ் அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

பொன்ராஜ் ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” – கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”

—–
தமிழன்டா !!!!!

நீதி :- ஹாஹாஹா…! விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!

Courtesy: Sukumar Swaminathan

திரு என்.சொக்கனின் பதிவிலிருந்து ரசித்த ஒரு பகுதி உங்கள் பார்வைக்காக

நேற்று காலைதான், மனைவியார் கடலை வறுத்திருந்தார். உப்புத் தண்ணீரில் ஊறவைத்து மைக்ரோவேவ் அவனில் வறுத்த கடலையை அவர் முறத்தில் போட்டுப் புடைத்துத் தோலுரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்திருந்தேன்.

அந்தக் கடலை, இப்போது எங்கே?

எங்கள் வீட்டுச் சமையலறையில் அநேகமாக எல்லா டப்பாக்களையும் வெளியிலிருந்து பார்த்தாலே உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்துவிடும். ஆகவே, புத்தக ஷெல்ஃபில் எதையோ தேடுகிறவன்போல் வரிசையாக டப்பாக்களைப் பார்வையிட்டேன். கடலைக்கான சுவடுகளைக் காணோம்.

வேறு வழியில்லை, ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்துவிடவேண்டியதுதான்.

அதையும் செய்தேன். அப்போதும் கடலை சிக்கவில்லை.

அடுத்து, இந்தப் பக்கம் எவர்சில்வர் பாத்திரங்கள். அவற்றையும் வரிசையாகத் திறந்து தேடினேன். முந்திரி, பாதாம் என்று ஏதேதோ கிடைத்தது. இந்தப் புலிப் பசிக்குக் கடலைதான் வேண்டும் என்று அவற்றை ஒதுக்கிவிட்டேன்.

சுத்தமாகப் பதினைந்து நிமிடங்கள் பொறுமையாகத் தேடியபிறகும், அந்தக் கடலையாகப்பட்டது தென்படவே இல்லை. இப்போது என்ன செய்ய?

இந்த அற்ப மேட்டருக்காக, தூங்கிவிட்ட மனைவியை எழுப்பிக் கேட்பது நியாயமல்ல (பத்திரமும் அல்ல), மனத்தளவில் கடலை போடத் தயாராகிவிட்டதால், வேறெதையும் தின்னத் தோன்றவில்லை.

ஒரே நல்ல விஷயம், எழுதுவதை நிறுத்திவிட்டுக் கடலை தேடிய நேரத்தில் என்னுடைய பசி அடங்கிவிட்டது. ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

அப்புறம், காலை எழுந்து பல் தேய்த்த கையோடு, ‘நேத்திக்குக் கடலை வறுத்தியே, என்னாச்சு?’ என்றேன்.

‘ஏன்? என்ன ஆகணும்?’ என்று பதில் வந்தது.

‘இல்ல, நேத்து நைட் அதைத் தேடினேன், கிடைக்கலை.’

’ஆம்பளைங்களுக்குத் தேடதான் தெரியும், பொம்பளைங்களுக்குதான் கண்டுபிடிக்கத் தெரியும்’ என்றார் அவர், ’மத்தியானமே அதை மிக்ஸியில போட்டு வெல்லம் சேர்த்து அரைச்சாச்சு, அப்புறம் உருண்டை பிடிக்கறதுக்குள்ள ஏதோ வேலை வந்துடுச்சு, மறந்துட்டேன்’ என்றபடி மிக்ஸி ஜாடியைத் திறந்து காட்டினார்.

***

Courtesy:  http://nchokkan.wordpress.com/

என் மச்சான் கல்யாணம்..
மண்டபம் களை கட்டி இருந்தது..

அப்ப என் சகலை என்கிட்ட..

” சகலை.. அந்த பொண்ணு யாரு..? ”

” எந்த பொண்ணு..? ”

” அதோ.. பச்சை கலர் சுடிதார் போட்டிருக்குல்ல
அந்த பொண்ணு..! ”

” எதுக்கு கேக்கறீங்க..? ”

” ஜெனரல் நாலேட்ஜ் வளர்த்துக்க தான்..! ”

நான் அந்த பொண்ணை பாத்தேன்..

சினிமா நடிகை அஞ்சலி சாயல்ல
இருந்தது.. ( ஹி., ஹி., போட்டோவுக்காக
எப்படி லாஜிக்கா ஒரு வரி சேர்த்தேன்
பார்த்தீங்களா..? )

” அது யார்னு தெரியலையே..! ”

” என்னா சகலை நீங்க… என்னை விட சீனியர்,
நம்ம சொந்தக்காரங்க யார் யார்னு தெரிஞ்சி
வெச்சிக்க வேணாமா..? ”

” ஓ… அப்ப நீங்க சொந்தகாரங்களை
தெரிஞ்சிக்க தான் கேக்கறீங்க..?! ”

” எக்ஸாக்ட்லி..! ”

” அப்ப முன் வரிசையில் வெள்ளை சட்டை
போட்டுட்டு, ஒரு தாத்தா இருக்காரே..
அவர்ல இருந்து ஆரம்பிக்கலாம் வாங்க..! ”

” விளையாடாதீங்க சகலை… சொல்லுங்க..! ”

” நிஜமாலுமே தெரியலை.. ஒருவேளை
பொண்ணு வீட்டு சொந்தமா இருக்கும்..! ”

” சான்ஸே இல்ல.. பொண்ணோட அண்ணனை
பிடிச்சி விசாரிச்சிட்டேன்.. அவங்க சைடு
இல்லன்னு சொல்லிட்டான்..! ”

( ஆஹா.. ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காரு..! )

” சரி அப்ப உங்க Wife-கிட்ட கேளுங்க..! ”

” அவ தெரிஞ்சாலும் சொல்ல மாட்டா.. ”

” அப்ப என் Wife மாலாகிட்ட கேளுங்க..,
அவளுக்கு தெரியும்.. ”

” சரி இருங்க.. கேட்டுட்டு வரேன்.. ”

நானும் பாத்துட்டுடே இருந்தேன்..
என் Wife-கிட்ட போயி என்னமோ
ரகசியமா பேசினாப்ல..

கொஞ்ச நேரத்துல சந்தோஷமா வந்தாரு

” சக்ஸஸ்… கண்டுபிடிச்சிட்டேன்..! ”

” ஆமா.. இவரு பெரிய எடிசனு…
கரண்ட் கண்டுபிடிச்சிட்டாரு..!! ”

” எப்படியோ கண்டுபிடிச்சோம்ல..! ”

” ஆமா என் பொண்டாட்டிக்கிட்ட போயி
என்னான்னு சொல்லி கேட்டீங்க..? ”

” அந்த பச்சை கலர் சுடிதார் போட்ட
பொண்ணு யாருன்னு சகலை உங்ககிட்ட
கேக்க சொன்னார்னு சொன்னேன்..!! ”

” அடப்பாவி மனுஷா..?!!! ”

டிஸ்கி : எதோ என் பொண்டாட்டிக்கு
பப்ளிக்ல புருஷனை அடிக்கிற கெட்ட பழக்கம்
இல்லாததால அன்னிக்கு நான் தப்பிச்சேன்..
.
.

மனைவியிடம் தப்பித்து வந்து நமக்கு பாடம் நடத்தியவர்: கோகுலத்தில் சூரியன்

என் துணைவியாரின் வருங்காலச் சக்களத்தி நேற்று வீட்டுக்கு வந்திருந்தார். இப்போதுதான் வயது இரண்டு ஆகிறது. சக்தி – பிரியத்துக்குரிய மருமகள் – என் நெருங்கின தோழியின் புதல்வி. மாமனைச் சந்திக்குமுன்பாக அவளை நன்றாகவே தயார் செய்திருந்தார் தோழி.

யாரைப் பாக்க வந்தீங்க?

மாமாவ..

எந்த மாமாவ..

மக்கு மாமா..

(சுத்தம்..)

அய்யோ தங்கக்குட்டி.. மாமா போன தடவ எங்க பார்த்தீங்க..

பாப்பா ஊஞ்சி ஆடுனா.. மாம்மா பெய்ய புக்கு வந்தான். நா வேணா வேணா சொன்னே. மாமா ஊஞ்சி ஆட்ட வேணா..

(சென்ற முறை அவளை ஒரு பூங்காவுக்கு அழைத்துப் போயிருந்தேன். கையில் ரமேஷ் பிரேமின் மகாமுனியோடு)

செல்லம். பாப்பாக்கு என்ன வேணும்..

பூ

வேற?

ஐஜீம், சாக்கி வாங்கித்தா..

குட்டிக்கு எத்தனை சாக்கி வேணும்?

டூ நைன் வேணும்

(ஒன்றைத் தாண்டி எதுவானாலும் டூ நைன் தான்)

சூப்பர். மாமா உனக்கு நிறைய சாக்கி வாங்கித் தர்றேன். என்னக் கட்டிக்கிறியா..

போடா.. எனக்கு சாக்கி வேணாம்மா..

(அவ்வ்வ்….)

அத்தனையும் பொறுமையாய் பார்த்தபடி அமைதியாய் இருந்த ஒரு ஜீவன் இப்போதுதான் வாய் திறந்தது.

பரவாயில்ல.. உனக்காவது அந்த அறிவு இருக்கே

# எம்பொண்டாட்டி நெம்ப நல்லவ

Courtesy: கார்த்திகைப் பாண்டியன் in Google+

இப்ப உள்ள சூழ்நிலையில் நம்ம அரசியல் தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் என்னவா இருக்கும்னு ஒட்டு கேட்டதுல இருந்து…..

ஜெயலிதா –  “நான் யாரு? எனக்கேதும் தெரியலியே? என்ன கேட்டா நான் சொல்ல வழியில்லையே!

ஓ.பி.எஸ் –    “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!”

ஜெயகுமார் – “சட்டி சுட்டதடா கை விட்டதடா…புத்தி கெட்டதடா!”

செங்க்ஸ்    –   “பொன்னான மனமே பூவான மனமே வைக்காத பொண்ணுமேல ஆச..”

நத்தம் விஸ்வு – “மின்சாரம் என்மீது பாய்கின்றதே….!”

சைதை துரைசாமி – “இது மௌனமான நேரம்..இளமனதில் என்ன பாரம்!”

கருணாநிதி – “என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே… ஆமா தாய்க்குலமே!”

ஸ்டாலின் –   “அண்ணன் என்ன தம்பி என்ன..சொந்தம் என்ன பந்தம் என்ன!”

அழகிரி –        “கூண்டுக்குள்ள என்ன வச்சு கூடி நின்ன ஊற விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன?”

கனிமொழி – “உலக வாழ்க்கையே ஒரு ஜெயிலு வாழ்க்கைதான்”

சீமான் – “பச்ச்ச்ச…..பச்ச மஞ்ச செவப்பு தமிழன் நான்…….”

கேப்டன் – “ஆண்டவன பார்க்கணும்..அவனுக்கும் ஊத்தணும்”

ராமதாஸ் – “எனக்கென ஒருவருவரும் இல்லாமல் போனாலும் உனக்கென நானிருப்ப்பேன்”

அன்புமணி – “எங்குத்தமா உங்குத்தமா ?யார நானும் குத்தம் சொல்ல?”

வைகோ – “நீயும் நானுமா? கண்ணா நீயும் நானுமா?”

நாஞ்சில் சம்பத் – “போடாங்..கோ…..போடாங்..கோ ”

படித்ததில் பிடித்தது: வைகை ..

FB Chat:
He : வணக்கம்
Me : வணக்கம்
He : எப்படி இருக்கீங்க
Me : நல்லாருக்கேங்க
He : ஈரோட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?
அப்படியே இடி என் தலையில விழுந்த மாதிரி இருந்துச்சு, ஈரோட்ல இருக்கிற மக்கள் எப்படியிருக்காங்கன்னு கேக்குற பாசத்த நினைச்சு ஒரு விநாடி திக்னு ஆயிடுச்சு…
மனச திடமாக்கிட்டு
Me : ஈரோட்ல இருக்கிற எல்லோரும் எப்படி இருக்காங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?
He :  ஈரோட்ல எதும் அசம்பாவிதம் நடக்கலன்னா, எல்லாரும் நல்லாருக்காங்கன்னு அர்த்தம்
பல படங்களில் அழும் காட்சியில்வரும் கமலின் அழுகை நினைவிற்கு வந்தது.
Me : சன் நியூஸ்ல ஒன்னும் சொல்லலைங்க

ஒரு முறை சர்தார்ஜி, நண்பர் வீட்டுக்கு விருந்துக்குச் சென்று இருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தனர். நண்பர், சர்தாரிடம், ”நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?” என்று கேட்டார். அதற்கு சர்தார் ”வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்” என்றார். உடனே நண்பர் சொன்னார், ”அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயே தான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே” என்றார். பல்பு வாங்கியதால் சர்தார் அசடு வழியச் சிரித்தார்.

வீட்டுக்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று ”நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?” என்று கேட்டார். அதற்கு அவர் மனைவி ”ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன்” என்றார். உடனே சர்தார் கடுப்பாகி, ”போடி… எட்டு இட்லினு சொல்லி இருந்தா, ஒரு நல்ல ஜோக் சொல்லி இருப்பேன்” என்றார்.

படித்ததில் பிடித்தது: naai-nakks.blogspot.in

எட்டு செகண்டுல 1018 பெயரை சொல்லமுடியுமா..?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.

கண்1000, 7மலை, 6முகம், 5எலி….. எப்பூடி…?

நிறுத்துங்க. அடிக்கிறதா இருந்தா இவர (Vijay Saravanan) அடிங்க. அவரு தான் இந்த மொக்கைக்கு அதிபதி

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த

ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.
பெரிய பெரிய மருத்துவர்களிடம் போய்ப் பார்த்து, மருந்து ,
ஊசி எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்
கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய அறிவுள்ள மனைவி ஒரு நாள் சொன்னா,
‘நீங்க மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கிற மருத்துவர்களை விட்டுட்டு ,
ஏதாவது ஒரு நல்ல விலங்கு மருத்துவர் கிட்ட
போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்கு
சரியான மருத்துவம் கொடுக்க முடியும்’னாள்.

என்னது விலங்கு மருத்துவர்கிட்டேயா? உனக்கென்ன மூளை
கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே
கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி
விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய்
மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி மூஞ்ச வெச்சிகிட்டு ரெண்டு வாய்
தின்னுட்டு , பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி அலுவலகத்துக்குப்
போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே
வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் அலுவலகம்
விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பேருந்துல அடைஞ்சு வீட்டுக்கு
வர்றீங்க!

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே
நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி
இரவு சாப்பாட்டை ‘லபக் லபக்’’னு முழுங்கிட்டு, எருமை மாடு
மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!
இப்படி இருக்கிறவங்களை மனித மருத்துவர் எப்படிங்க
குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே
ஒரு கால்நடை மருத்துவரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில்
சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க,
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’ போங்கன்னு முத்தாய்ப்பு
வச்சாளாம் மனைவி..!

Courtesy: http://nanjilmano.blogspot.in

நீங்க நினைக்கலாம் நான் போடுற மொக்க எல்லாம் சிரிக்கிற மாதிரியே இல்லன்னு அது உண்மைதான் ஏன்னா ???
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.

bcoz எங்கம்மா சொல்லி இருக்காங்க நாலு பேரு சிரிக்கிற மாதிரி ஏதும் செய்ய கூடாதுன்னு 🙂

திங்களை கொண்டாடுவோம் 🙂

Courtesy: Vijay Saravanan

கையில 15,000 ரூபா இருக்கு
என்ன பண்ணலாம்..?

Fridge-ஐ மாத்திட்டு புதுசு வாங்கலாமா..?

TV-ல விளம்பரம் வர்ற அந்த
புது மாடல் Fridge கூட பாக்க
நல்லா தான் இருக்கு.,

கூடவே Offer-ல ஒரு குக்கர் வேற
தர்றாங்கலாம்..

சரி., நாளைக்கே அதை வாங்கிடலாம்..!

இப்படி சில பேர் டக்கு டக்னு முடிவு
எடுத்துடறாங்க.. இது ரொம்ப தப்பு..!

( ஆமா.., இதுல என்ன தப்பு இருக்கு..? )

” என்ன தப்பு இருக்கா…? சொல்றேன்
நோட் பண்ணிக்கோங்க…! ”

1. 15,000 ரூபா இருக்குங்கறதுக்காக
அதை செலவு பண்ண நினைக்கிறது
முதல் தப்பு.

2. பழசுங்கறதுக்காக நல்லா இருக்குற
ஒரு பொருளை மாத்த நினைக்கிறது
ரெண்டாவது தப்பு.

3. புது Fridge வாங்கணும்னு முடிவு
பண்ணினதும்., உடனே வாங்கிடணும்னு
துடிக்கிறது மூணாவது தப்பு.

4. ” எந்த Fridge நல்லா இருக்குன்னு..? ”
தெரிஞ்சவங்க நாலு பேர்கிட்ட Opinion
கேக்காதது நாலாவது தப்பு.

5. Free-யா வருதேன்னு தேவையில்லாத
குக்கர்க்கு ஆசைப்படறது அஞ்சாவது தப்பு..!

6. Offer-ன்னு சொல்லி தரமில்லாத
Fridge-ஐ வாங்க நினைக்கிறது
ஆறாவது தப்பு..!

இப்படிக்கு..,

வீட்டில் சொல்ல முடியாததை எல்லாம்
தைரியமாக Blog-ல் சொல்லுவோர் சங்கம்..

சேலம் கிளை.

( அவ்வ்வ்வ்….!!! )
.

சேலம் கிளை தலைவர் முகவரி: http://gokulathilsuriyan.blogspot.com

நேத்து சாயந்திரம், கவிதா என் கிட்ட “டீ போடட்டுமா”ன்னு கேட்டாங்க. நான் “எனக்கு காஃபி வேணும்”னு சொன்னேன். வழக்கம்போல, “நீ கேக்குறதெல்லாம் குடுக்க முடியாது. டீ தான் போடமுடியும், குடிச்சா குடி இல்லைன்னா கிட”ன்னு மரியாதையா சொல்லிட்டாங்க.

சரி நம்ம வீட்டுக்குத்தான் கெஸ்ட் வந்திருக்காங்களே, அவங்க சாக்கை வச்சி நாம காபி குடிக்கலாம்னு, “அவர் கிட்ட என்ன வேணும்னு கேளுங்க. ஒரு வேளை அவரு காஃபி வேணும்னு கேட்டார்னா, எனக்கும் கிடைக்கும்ல”ன்னு சொன்னேன்.

அவர் கீழ இறங்கி வந்ததும், அவர் மனைவி அவர்கிட்ட, “ஏங்க உங்களுக்கு டீ, காஃபி ரெண்டுல எதுனாலும் ஓக்கே தானே” அப்பிடின்னு (இப்ப தெரிஞ்சிருக்குமே அவங்க பதிவராத்தான் இருக்கணும்னு?) கேக்கவும், அவரு, “ஆமாம்மா, எதுனாலும் எனக்கு ஓக்கே”ன்னு சொன்னாரு.

நான்,  “என்னங்க இப்பிடி சொல்லிட்டீங்க. டீ காஃபி ரெண்டுல உங்களுக்கு எது வேணுமோ அதைத் தெளிவா சொல்லிக் கேளுங்க” அப்பிடின்னு சொன்னா, அதுக்கு அவர் சொல்றாரு

“அப்பிடியில்லைங்க. இப்பிடி சொன்னோம்னா, அவங்களுக்கு ரெண்டுல எது போட நல்லா வருமோ அதைப் போட்டுத் தருவாங்கன்னு சொல்றாரு”

இப்பிடி ஒரு அப்பாவியை எங்கயாச்சும் பாக்க முடியுமா??

Courtesy: முகிலன் தினேஷ்

விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கணவன் மட்டும் எழுந்து போனான். கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார்.

“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார்.

கணவனோ “முடியவே முடியாது ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்.

“யாரது?” என்று மனைவி கேட்டாள்.

“எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்”

“நீங்க உதவி செஞ்சீங்களா?”

“இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?”

“பார்த்தீங்களா? 3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்”

கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான்.

“ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?”

“ஆமா சார்”

“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?”

“ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்”

“எங்கே இருக்கீங்க”

“இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க….”

Courtesy: Nagarajachozhan MA

நேத்து Evening என் கூட +2-ல படிச்ச
என் Friend கணேஷ் போன்
பண்ணியிருந்தான்..

” ஹலோ..! ”

” டேய்.. நீ என்ன படிச்சி இருக்க..? ”

எடுத்தவுடனே இப்படி ஒரு கேள்வியை
அவன் கேட்டதும் எனக்கு தூக்கி வாரி
போட்டது..,

( பொதுவா என் படிப்பு சம்பந்தமா
யாராச்சும் கேட்டா எனக்கு அப்படிதான்
ஆகும்…! ஹி., ஹி., ஹி.. )

” ஏன்டா.. என்ன விஷயம்..? ”

” நீ மொதல்ல சொல்லு..! ”

” நான் இந்த உலக இலக்கியம்.,
இந்திய இலக்கியம் எல்லாம்
படிச்சி இருக்கேன்..! ”

” டேய்… போதும்.. நான் கேட்டது
அதில்ல. நீ காலேஜ்ல என்ன
டிகிரி படிச்ச..? ”

” ஓ.. அதை கேக்கறியா..? நான் MCA
படிச்சி இருக்கேன்..! ”

” அது கம்பியூட்டர் சம்பந்தமான படிப்பா..?! ”

” ஆமா…! ”

” டிகிரி வாங்கிட்டியா. இல்ல எதாச்சும்
அரியர் இருக்கா..? ”

” ஹேய்… யாரை பாத்து… நான் தான்
MCA-ல காலேஜ் First..! ”

” அப்ப உன் திறமையை Use பண்ணவேண்டிய
நேரம் வந்துடுச்சி மச்சி…! ”

” நேரம் வந்துடிச்சா…? அப்படின்னா…”

( ஐய்யயோ… சாப்ட்வேர் எதாச்சும்
டெவலப் பண்ண சொல்லுவானோ..! )

( கொஞ்சம் ஓவராதான் போயிட்டோமோ..!! )
” என் பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல…. “
” ஸ்கூல்ல….. “
” தெர்மோகோல்ல கம்பியூட்டர்
பண்ணிட்டு வர சொல்லி இருக்காங்க…
கொஞ்சம் வந்து பண்ணி குடேன்..! “
” அடி செருப்பால… புல்லு புடுங்க
பில்கேட்ஸ் வேணுமாடா உனக்கு…? “
” டென்ஷன் ஆகாதடா.. உன் படிப்பை மதிச்சி
எவனாவது உனக்கு வேலை குடுத்தானா..?
நானாவது இந்த வேலை குடுத்தேன்னு
சந்தோஷப்படுவியா.. அதை விட்டுட்டு..!! “
” ஹி., ஹி., ஹி.., தெர்மோகோல் எல்லாம்
ரெடியா இருக்கா மச்சி…! “
வேலை கிடைத்த இடம்: http://gokulathilsuriyan.blogspot.in
 இளம்பெண் ஒருத்திக்கு மற்றவர்களைக் குறித்து குறை கூறிப்பேசுவதில் அலாதி ஆனந்தம். இப்படியே பேசிப்பேசி அநேக நல்லவர்களின் மீதான அபிப்ராயத்தைக் கெடுத்துவிட்டாள். ஒருநாள் அவள் தன் செயல்களை எண்ணிப்பார்த்தாள். தான் செய்த செயல் எவ்வளவு மோசமானது என்பதை நினைத்து வெட்கப்பட்டாள். வருத்தத்துடன் பாதிரியாரிடம் தனது செயலை பாவ அறிக்கையாகக் கொடுத்தாள்.
     “”ஐயா! நான் அநேகரைப் புண் படுத்தியிருக்கிறேன். அவர்களைக் குறித்துப் பேசியதை நான் எப்படி திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்?” என்று கேட்டாள். பாதிரியார் அவளிடம், “”நீ போய் ஒரு பை நிறைய கோழி இறக்கைகளைச் சேகரித்து, உன் வீட்டில் இருந்து இந்த ஆலயம் வரை உள்ள வழியில் சிதற விட்டுக்கொண்டே வா,” என்றார்.
     அவளும் அப்படியே செய்தபடி ஆலயம் வந்து சேர்ந்தாள். பாதிரியார் சொன்னது போலவே செய்ததைச் சொன்னாள். “சரி! நீ இப்போது உன் வீட்டுக்குத் திரும்பு. செல்லும் வழியில், நீ சிந்திய இறக்கைகளைப் பொறுக்கி பையில் வைத்துக்கொள். அந்தப் பையை இங்கு கொண்டு வா,” என்றார்.
     அவள் அங்கிருந்து கிளம்பினாள். சாலையில் அவள் சிந்திய இறக்கை எதையும் காணவில்லை. அவை அநேகமாக காற்றில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டு விட்டது. “ஒன்றைக் கூட என்னால் சேகரிக்க முடியவில்லை,” என்று வருத்தத்துடன் பாதிரியாரிடம் சொன்னாள். பாதிரியார் அவளிடம், “உன் வார்த்தைகளும் அப்படித்தான். வார்த்தைகள் சிந்திவிட்டால் அவற்றைப் பொறுக்கவே முடியாது”. 
     அதனால், இனிமேலாவது பிறரைப் பற்றி யோசித்துப் பேசு என்றார். “வீணான வார்த்தைளுக்கு கணக்கொப்புவிக்க வேண்டும்,” (மத்.12:26) என்கிறது பைபிள். ஆம்! நமது தேவையற்ற பேச்சு பற்றி ஆண்டவரின் சன்னிதானத்தில் விசாரணை வரும். அப்போது, அதற்கெல்லாம் நாம் விளக்கமளிக்க வேண்டி வரும். கவனம்.

மூலம்: தினமலர்
நன்றி : http://sidhuu.blogspot.in

ஹலோ

ஹலோ

யார் பேசறது?

நான் தான்

நான் தான்னா யார்?

நான் தான் ரேவதி

ரேவதி, அப்பா இல்லையா?

இல்லை

அம்மா

இல்லை

சரி அப்பா வந்தா ராமன் போன் பண்ணிதா சொல்றியா?

யாரு?

ராமன், எழுதிக்கோ   ரா… ம… ன்..

ரா எப்படி எழுதறது?

சரியாப்போச்சு, வீட்ல வேற யாரும் இல்லையா?

சேகர் இருக்கான்.

சரி சேகரைக் கூப்பிடு..

சேகர் இந்தா..  ரேவதி சேகரிடம் டெலிபோனைக் குடுக்கிறாள்.

(சேகருக்கு வயது ஒன்று!)

Courtesy: G+ Shankar. G

ஒரு நாள் முல்லா சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.எதிரே வந்த நண்பர்,முல்லாவின் முகத்தைப் பார்த்து அவர் எதோ வலியினால் அவதிப்படுவதுபோல உணர்ந்தார்.”என்ன முல்லா,தலை வலியா,வயிற்று வலியா?ஏன் என்னவோபோல இருக்கிறீர்கள்?”என்று கேட்டார்.முல்லா சொன்னார்,”வேறொன்றுமில்லை,நான் அணிந்திருக்கும் செருப்புக்கள் என் காலுக்கு மிகச் சிறியவையாக இருப்பதால் பாதத்தில் வலி எடுக்கிறது.””பின் ஏன் அவற்றை அணிந்திருக்கிறீர்கள்?என்று நண்பர் கேட்க,முல்லா சொன்னார்,”இந்த செருப்பினால் தான் ஒவ்வொரு நாளும் நிம்மதி அடைகிறேன்.நாள் முழுவதும் இந்த சிறிய செருப்புக்களை அணிந்து நடந்துவிட்டு பாதங்களில் வலியுடன்  வீட்டிற்குச் சென்று அவற்றைக் கழட்டியவுடன் கிடைக்கும் ஒரு விடுதலை உணர்வு இருக்கிறதே,அதற்கு இணை எது?இது ஒன்றுதான் நான் அடையும் மகிழ்ச்சி.எனவே இந்த செருப்புக்களை நான் விட மாட்டேன்.”

Courtesy: Google.

மிக அழகான விலைமாது ஒருத்தி ஒரு ஊரில் இருந்தாள் அவ்வூர் பணக்காரர்களும் பெரிய மனிதர்களும் .ஒரு நாளைக்கு
ஒரு லட்சம் கொடுத்தேனும் அவளுடன்  தங்குவதை பெரும் பாக்கியமாகக் கருதினார்கள். அவள் தினசரி வந்து செல்லும் பாதையில் ஏழைத் தொழிலாளர்கள்  வாழ்ந்த ஒரு பகுதி இருந்தது.தினசரி
அவள் செல்வதை அவர்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவள் அவர்களின் கற்பனைக்கு எட்டாத
உயரத்தில் இருந்தாள் .ஒருநாள் அவர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவு செய்தனர்.
அதாவது அவர்கள் நூறு பேர் சேர்ந்து ஆளுக்கு
ஆயிரம் ரூபாய் போட்டு ஒரு லட்சம் சேர்க்க வேண்டியது;அதன்பின்
அவர்கள் பெயர்களைத்  தாள்களில் எழுதி
குலுக்கல்  முறையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அந்த அழகியிடம் அனுப்பி
அவன் அனுபவத்தை பின் எல்லோரும்
கேட்டுக் கொள்வது. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் அங்கு சென்றபோது
அவனை அழைத்து அவள்
வரவேற்றாள்.
காலையில் அவன் புறப்படும்போது அவள் கேட்டாள் ,”உங்களைப் பார்த்தால்  ஏழை போலத் தெரிகிறது.உங்களால் எப்படி ஒரு லட்சம் பிரட்ட முடிந்தது?”அவன் நடந்ததை  சொன்னான். அவள் மிக உணர்ச்சி வசப்பட்டு அவனிடம் சொன்னாள் ,”எனக்கு இதைக் கேட்க மகிழ்ச்சியாகவும் அதே சமயம்
.வருத்தமாகவும் உள்ளது. உங்கள் பணம் எனக்கு வேண்டாம்,”என்று கண்ணீர் மல்கச் சொன்னாள்.தங்கள்
பணம் ஒரு லட்சமும் திரும்பக் கிடைக்கும்
என்று அவன் மகிழ்ச்சியுடன் காத்திருக்க அவள் ஆயிரம் ரூபாயை அவனிடம்
கொடுத்து,”உங்கள் பணத்தை எடுத்துக்
கொள்ளுங்கள்,”என்றாள் .அவன் மயக்கம் போடாத குறைதான்.

Courtesy:  http://jeyarajanm.blogspot.in

டேனிக்கு ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்தாகிவிட்டது.
மூன்று நாட்கள் அவனுடைய யுகேஜி வகுப்புகளுக்கும் போய் வந்துவிட்டான் அவன்.
மூன்றாம் இரவு தூங்கும் முன் அவன் அப்பாவிடம் வந்த டேனி கண்களை விரித்துக் கொண்டு சொன்னான்.
“தெரியுமாப்பா… எங்க அனிதா மிஸ் முந்தாநேத்து சொன்னாங்க… அவங்க
நம்ம வீட்ல ஒரு சீக்ரெட் கேமரா ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க.!”.
ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட டேனியின் அப்பாவும்
அதே ஆச்சர்யத்துடன் அவனிடம் கேட்டார்.
“அப்படியா… எதுக்கு.?”.
டேனி தன் அப்பாவுக்கு தெரியாத ஒரு விஷயத்தை விளக்கும் ஆர்வத்துடன் அவரிடம் தொடர்ந்து சொன்னான்.
“ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் டெய்லி நைட்டு பெட்டுக்கு போறதுக்கு முன்னாடி பிரஷ் பண்ணிட்டுத்தான் தூங்கணும். இல்லைனா, ஸ்டூடன்ட்ஸ் காலைல
வந்ததும் எங்க அனிதா மிஸ் அந்த சீக்ரெட் கேமராவை ஓப்பன் பண்ணிப் பாப்பாங்க. யாரெல்லாம் நைட் பிரஷ் பண்ணலையோ அவங்களுக்கெல்லாம் பனிஷ்மென்ட்… தெரியுமா.?”.
டேனி சொன்னதும் அவன் அப்பா அதே தொனியில் அவனிடம் சொன்னார்.
“அய்யய்யோ… அப்ப நீ தூங்கப் போறதுக்கு முன்ன இன்னிக்கு பிரஷ் பண்ணனுமா.?”.
அவர் கேட்டதும் டேனி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்.
“இல்லப்பா… வேணாம்.!”.
டேனி அப்படிச் சொன்னதும் அரண்டு போன அவன் அப்பா அவனிடம் கேட்டார்.
“என்னது வேண்டாமா… அப்புறம் மிஸ் பனிஷ்மென்ட் கொடுப்பாங்களே.!”.
அவர் அப்படிக் கேட்டதும் டேனி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னான்.
“நேத்துக் கூடத்தான் நான் பிரஷ் பண்ணல… ஆனா, மிஸ் ஒண்ணுமே சொல்லலியே.!”
.
.
கேள்வி: 18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த ஓவியர்கள் பற்றி எழுதவும் ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
பதில்: அவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள்!
Back Bench Boyz Rockzzzzzzz 🙂

Courtesy: Vijay Saravanan

ஒரு சிறுவன் தன் தந்தையிடம்,”அப்பா,உனக்கு அறிவு இருக்கா?”என்று கேட்டான்.தந்தையும் சிரித்துக் கொண்டே,”ஓ ,இருக்கே !”என்றார் . சிறுவனும் விடாது ”சரி,நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லு.நான்கை ஒன்றால் பெருக்கினால் என்ன வரும்?”என்று கேட்க அவரும் நான்கு என்று சொன்னார்.அடுத்து நான்கை
இரண்டால் பெருக்க என்ன வரும் என்று கேட்க,எட்டு என்று விடை சொன்னார்.
பின் நான்கை மூன்றால் பெருக்கினால் என்ன வரும் கேட்க அதற்கும் பன்னிரண்டு
என்று சொன்னார்.பையன் உற்சாகமாக,”முதலில் உன்னிடம் நான் என்ன கேள்வி
கேட்டேன் ?”என்று கேட்டான் தந்தை சொன்னார்,”நான்கை ஒன்றால் பெருக்கினால் என்ன
வரும் என்று கேட்டாய்,”என்றார்.

.

.

.

.

.

.

.

.

.

.

.

பையன் உற்சாகமாகத் தாவிக் கொண்டே சொன்னான்,”அதுவா முதல் கேள்வி?உனக்கு அறிவு இருக்கா
என்று கேட்டேனே,athu thaane muthal kelvi?”

Courtesy: http://jeyarajanm.blogspot.in

English Story :-

.He Smiled
..She Smiled
……Life Smiled 🙂

தமிழ் டப்பிங் ?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.நீ சிரிப்பே
..அவ சிரிப்பா
…உன் பொழப்பு சிரிப்பா சிரிக்கும் 🙂

G+ இல் படித்தது

ஆமாங்க.சும்மா சும்மா’வ பற்றி எழுதிய பதிவ சும்மா படிங்க.என்ன இத்தன ‘ சும்மா’ன்னு பாக்கீறீங்களா?.இது ‘சும்மா’ என்ற வார்த்தையை பற்றிய பதிவு.
‘சும்மா’ என்கிற வார்தைக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு.அதைப் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம்.

·         ஒருவனிடம் “இன்னிக்கு முழுவதும் வீட்டில் என்ன செய்தாய்?”என்று கேட்டால் அவன் கூறுவான் “சும்மாதான் இருந்தேன்.” என்று.அப்படியென்றால் “சும்மா” என்பது இங்கு எதையுமே செய்யாமல் வெட்டியாக இருந்ததை குறிக்கிறது.
·         ஒருவன் ஒரு பெண்ணை உற்று பார்த்துக்கொண்டே இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.அந்த பெண் அவனிடம் “எதுக்கு என்னை பார்த்தாய்?” என்று கேட்டால் அவன் கூறுவது “சும்மாதான் பார்த்தேன்” என்பதாகத்தான் இருக்கும்.இங்கு அவன் அந்த பெண்ணிடமிருந்து தப்பிக்க ஏதோ கூறவேண்டுமென்று ‘சும்மா’என்கிறான்.
·         “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டால் அதற்கு மற்றொரு கேள்வியை கேட்பீர்கள் “எதற்காக கேட்கிறாய்?”என்று.அதற்கு ஒரு சிலர் “சும்மாதான் கேட்கிறேன்” என்று பதில் அளிப்பார்கள்.இங்கு ‘சும்மா’ என்றால் ‘தெரிந்து கொள்ள’ என்ற அர்த்ததில் வருகிறது.
·         “என்ன பன்ற?”
“சும்மா,படிச்சுக்கிட்டு இருக்கேன்”
இங்கு ‘சும்மா’ என்பது கருத்தோடு ஒரு செயல் செய்வதை குறிக்கிறது.
·         “என்ன திடீரென்று என் வீட்டிற்கு வந்திருக்கிறாய்?”
“சும்மா,இந்த பக்கம் வேலை இருந்தது.அப்படியே உன்னையும் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன்”
இங்கு ‘சும்மா’ என்பது எதேர்ச்சையாக நடைபெற்ற செயலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
·         “நேர்க்காணல் என்னவாயிற்று?”
“வழக்கம் போலதான்.வேலை கிடைக்காது என்று தெரியும்.சும்மாதான் போயிட்டு வந்தேன்.”
இங்கு ‘சும்மா’ என்பது நடக்கப் போவதை தெரிந்துகொண்டே செய்வதை குறிக்கிறது.
·         “புது பேனாவா?”
“ஆமாம்.இந்த புத்தகத்தை வாங்கும்போது சும்மா கெடச்சுது.”
‘சும்மா’ என்பதற்கு ‘இலவசம்’ என்றும் பொருள் வருகிறது.
·         “இந்த குழந்தை சும்மா சும்மா அழுவுது” என்று நாம் கூறுவதுண்டு.இங்கு ‘சும்மா சும்மா’ என்றால் ‘அடிக்கடி’ என்று பொருள்படுகிறது.
·         “சும்மா இருக்கிறவனை ஏண்டா வம்புக்கு இழுக்குற?”
‘சும்மா’ என்றால் வம்புக்கு போகாமல் தன் வேலையைப் பார்த்தால் என்பது அர்த்தம்.
·         வகுப்பறையில் வாத்தியார் “எல்லாம் பேசாம சும்மா இருங்க” என்றால் அமைதியாக இருங்கள் என்று அர்த்தம்.
·         யாராவது உங்களை தொந்தரவு செய்துகொண்டிருந்தால் “கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறாயா?” என்று கேட்போம்.அதாவது “என்னை தொந்தரவு செய்யாதே” என்பதற்கு மாற்றாக அதை கேட்கிறோம்.
·         “அந்த பையில ஏதாவது இருக்கா?”
“இல்ல.சும்மாதான் இருக்கு.”
அதாவது காலியாக இருக்கிறது.
·         வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர் உங்களுக்கு எதுவும் எடுத்து வரவில்லை என்றால் “வெளிநாட்டிலிருந்து வருகிறீர்கள்.சும்மாவா வருவது?” என்று கேட்போம். ‘சும்மா’ என்பது வெறும் கையோடு வந்ததை குறிக்கிறது.
·         “அய்யோ! பாம்பு!”
“அய்யோ! எங்க?”
“ஏய்! பயந்துட்டியா? சும்மா சொன்னேன்.”
‘சும்மா’ என்பது ‘பொய்’ என்று பொருள் தருகிறது.

இந்த மாதிரி ‘சும்மா’ என்ற வார்த்தை நேரம் மற்றும் இடத்திற்கு தகுந்தாற்போல் தனது அர்த்தத்தை மாற்றிக்கொள்கிறது.‘சும்மா’பற்றி இன்னும் எழுதவேண்டும் என்றால் சும்மா எழுதிக்கிட்டே போகலாம். ஆனா உங்களுக்கு கடுப்பாகுமே!
அப்புறம் ஏன் இத எழுதினேன்னா கேக்கிறீங்களா? அது ஒன்னும் இல்லைங்க.நானும் வீட்டில சும்மாதான் இருக்கேன்.அதான் சும்மா எழுதினேன்.
சும்மா உக்காந்து யோசிச்சது: http://tamilcrazy.blogspot.in

துறவி ஒருவர் தன் சீடனை அழைத்து ஒரு நாள் முழுவதும் அரண்மனையில் தங்கி பாடம் கற்று வருமாறு கூறினார்.ஆசிரமத்தில் படிக்காத பாடமா அரண்மனையில் படிக்க என்று எண்ணினாலும் குருவின் கட்டளைப்படி அவன் அன்று அரண்மனை சென்றான்.அரசன் அவனை நன்கு உபசரித்து அன்று அங்கு தங்கிச்செல்லுமாறு கூறி அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தான்.ஆனால் சீடன் பார்க்கையில் எங்கு பார்த்தாலும் ஆட்டமும்,பாடலும்,குடியுமாக இருந்தது அவனுக்கு அருவருப்பாக இருந்தது.இருந்தாலும் மனத்தைக் கட்டுப்படுத்தி படுத்து உறங்கினான்.அதிகாலையில் அரசன் சீடனை அழைத்து அரண்மனையின் பின்புறம் செல்லும் நதியில் குளித்து வர அழைத்தார்.சீடனும் அரசனும் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென அரண்மனையில் தீப்பற்றியது.அதை அரசன் சீடனிடம் காண்பித்தான்.உடனே சீடன் அவசரமாக குளிப்பதை விட்டு, தன் கோவணம் எரிந்து விடாமல் காக்க வேண்டி ஓடினான். கோவணத்தைக் கையில் எடுத்தபின் திரும்பிப் பார்த்தால் அரசன் இன்னும் ஆற்றிலே குளித்துக் கொண்டிருந்தான்..அரண்மனை பற்றி எரியும்போது அரசன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்போது தான் மட்டும் கோவணத்திற்காக ஓடி வந்ததை எண்ணி தலை கவிழ்ந்தான்.அரசனின் காலில் விழுந்து எப்படி அவரால் பதட்டப்படாமல் இருக்க முடிந்தது என்று கேட்டான்.அரசன் சொன்னார்,”இந்த அரண்மனை என்னுடையது என்று நினைத்திருந்தால் நான் இங்கே நின்றிருக்க மாட்டேன்.இது ஒரு அரண்மனை.நான்,நான்தான்.அரண்மனை எப்படி என்னுடையதாகும்?நான் பிறக்காத போதும் இந்த அரண்மனை இங்கு இருந்தது.நான் இறந்த பின்னும் அது இங்கு இருக்கும்.இது எப்படி என்னுடையதாகும்?கோவணம் உங்களுடையது என்றும் அரண்மனை என்னுடையது என்றும் கருதியதால் நீங்கள் அதைப் பின்பற்றி ஓடினீர்கள்.நான் அவ்வாறு கருதாததால் ஓடவில்லை.”
தன் மனப்பாங்கினால்தான் மனிதன் அடிமை ஆகிறான்.அதை மாற்றினால்தான் அவன் விடுதலை பெறமுடியும்.

Courtesy: http://jeyarajanm.blogspot.in

வாலிப வயோதிக அன்பர்களே, இன்னிக்கு எல்லாரும் சாப்பிடுறோமோ இல்லியோ எடையை (இடை இல்லீங்கோ…) குறைக்கனும்னு கவலைப்படுறோம். கண்ட கண்ட வைத்தியர்கள்கிட்ட போய் லேகிய உருண்டை வாங்கி சாப்புடுறது, கண்ட கண்ட சூப் குடிக்கிறது, ஜிம்முக்கு போறது, வாக்கிங் போறது, பட்டினி கெடக்கறது, இப்படியெல்லாம் பாடுபடுறாங்க. இதுனால எல்லாம் எடை குறையுதோ இல்லியோ பாடி ரொம்ப அடிவாங்கிடுது. இதிலேயும் எந்தக் கஷ்டமும் படாம நோகாம எடை மட்டும் குறையனும்னு திரியறவனுங்க நிறைய பேரு இருக்கானுங்க. இவங்க எல்லாருக்கும் ஒரு நற்செய்தி….

ஆமாங்க நற்செய்திதான், எந்த கஷ்டமும் படாம, சாப்பாட்டை குறைக்காம, எக்சர்சைஸ் எதுவும் பண்ணாம வெறும் ஒரு மணி நேரத்துல உங்க எடையை குறைக்க வழி வந்தாச்சு. காசு வேணாம், பணம் வேணாம், சும்மா நான் சொல்ற மாதிரி மட்டும் பண்ணா போதும் உங்க எடை குறைவது நிச்சயம். வீட்ல சொந்தமா ஒரு எடை பார்க்கும் மெசின் ஒண்ணு வாங்கி வெச்சுக்குங்க.
முதல்ல உங்க எடையை நைட்டு சாப்பாடு முடிஞ்சதும் செக் பண்ணி ஒரு நோட்புக்ல எழுதி வைங்க.
அடுத்து காலைல எந்திரிச்சதும், வெறும் வயித்துல (தண்ணி கூட குடிக்கப்படாது!) கீழ சொன்ன மாதிரி வரிசையா செய்யனும்….
1. போய் முடிய வெட்டிட்டு வாங்க
மொட்டை போட விரும்புபவர்கள் தாரளமா போட்டுக்கலாம். அது உங்க வசதிய பொறுத்து. (ஏற்கனவே வழுக்கையாக இருப்பவர்கள் கவனிக்க: நீங்க எதுவுமே செய்ய முடியாதுன்னாலும் சும்மா சலூனுக்கு போய் மெசினை ஒரு ரவுண்டு மண்டைல ஓட விட்டுட்டு வாங்க சார்)
2. கை கால் நகத்த வெட்டுங்க
ஒரு நகம்கூட பாக்கி இல்லாம வெட்டிப்புடனும். அழுக்கு எதுவும் இருந்தாலும்  கிளீனா கழுவிடுங்க.
3. கக்கூஸ் போய்ட்டு வாங்க
இது ரொம்ப முக்கியம். அதுனால கக்கூஸ்ல உக்காந்து முக்கியாவது போய்டுங்க. அப்படியும் வராதவங்க வெளக்கெண்ணை மாதிரி எதையாவது ட்ரை பண்ணலாம். மொத்ததுல போய்டனும் அதுதான் முக்கியம்.4. குளிங்க
ஆமா வேற வழி இல்ல குளிச்சித்தான் ஆகனும். சோப்பு போடுவீங்களோ இல்லியோ நல்லா அழுக்கு போற மாதிரி தேய்ச்சு குளிக்கனும். செங்கல் யூஸ் பண்ணா பெட்டர். குளிச்சு முடிச்ச உடனே, ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாம தொடச்சிடனும்.
5. ட்ரெஸ் எல்லாத்தையும் அவுத்துடுங்க
ட்ரெஸ், அண்டர்வேர் (போட்டிருந்தா…) எல்லாத்தையும் ஒண்ணுவிடாம அவுத்துடனும். உடம்புல ஒரு நூல் இருக்கப்படாது. யாருக்கும் தெரியாம பண்ணனுமா இல்ல தனியா பண்ணனுமாங்கறது உங்க சவுகர்யத்த பொறுத்து! வாட்ச், செருப்பு, ஷூ எல்லாத்தையும் கூட கழட்டிரனும்..!

இப்போ நீங்க ரெடியாகிட்டீங்க.

அடுத்து,அதே எடை மெசின்ல உங்க எடையை செக் பண்ணவும்…உங்க எடை நிச்சயமா குறைஞ்சிருக்கும்……

எப்பூடி நம்ம டெக்குனிக்கு………?

இப்போ மறுபடியும் எடை குறையனும்னா மறுக்கா அதே மாதிரி முதல்ல இருந்து பண்ணுங்க…….. ஹி..ஹி…!

இதெல்லாம் ஒரு பதிவுன்னு வந்து…….. சரி விடுங்க…..!

நன்றி: கூகிள் இமேஜஸ் & http://shilppakumar.blogspot.in

அப்புறம் இது கூட உங்களுக்கு உதவும்னு நெனைக்கிறேன்

ஒரு மன்னன் தன்னுடைய கணக்குபிள்ளையிடம் விசாரித்தான்.. நமக்கு எவ்வளவு சொத்து இருக்கும்… ?? பதினாறு தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம் மன்னா… கணக்கு பிள்ளை பதில் சொன்னார்.. மன்னன் கவலையில் ஆழ்ந்தான்.. ஐயோ… என்னுடைய பதினேழாவது தலைமுறை என்ன ஆகும்…?? இப்படியான கவலையில் மிகவும் நோய் வாய் பட்டான்… ஊரில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தருவிக்கப்பட்டு மருத்துவம் செய்தும் நோய் குணமாகவில்லை… ஒரு யோகி அவ்வூருக்கு வந்தார்.. அவர் இந்த விஷயத்தை கேள்விப்பட.. மன்னனை சந்தித்தார்… மன்னா.. உன்னுடைய நாட்டில் இருக்கும் ஓரிரு பச்சிளம் குழந்தைகளுடன் கூடிய இளம் விதவையை தேடி கண்டு பிடி..முக்கியம்.. அவள் தினசரி கூலி வேலைக்கு போய்தான் சாப்பிட வேண்டிய நிலையில் இருக்க வேண்டும்… இரண்டு வண்டிகள் நிறைய உணவு தானியங்களை அனுப்பு.. அப்புறம் என்னிடம் வா.. உன்னுடைய வியாதிக்கு நான் மருந்து தருகிறேன் என்றார்… மன்னனும் அவ்வாறே செய்ய..
தன்னுடைய வீட்டு முன் இரண்டு வண்டிகள் வந்து நிற்பதை பார்த்த அந்த இளம் விதவை என்னவென விசாரித்தாள்… மன்னன் உணவு தானியங்கள் அனுப்பியதை சேவகன் சொல்ல… தன்னுடைய மகளிடம் ” நம் வீட்டில் அரிசி பானையில் எவ்வளவு அரிசி இருக்கிறது என பார்க்க சொன்னாள்… இரண்டு மூன்று நாளைக்கு சமைக்கலாம் அம்மா… சிறுமியின் பதில்… உடனே அந்த இளம் விதவை.. வண்டிக்காரர்களிடம் சொன்னாள்.. எங்களுக்கு மூன்று நாட்களுக்கு உணவு இருக்கிறது.. இப்போதைக்கு போதும்.. தேவைப்பட்டால் நாங்களே கேட்கிறோம்.. என அந்த வண்டிகளை திருப்பி அனுப்பி விட்டாள்…
யோகி மன்னனிடம் சொன்னார்,.. பார்த்தாயா.. தினசரி வருமானத்திற்கு கூலி வேலை தான் செய்ய வேண்டும்… சம்பாதித்து தர கணவனும் இல்லாமல் இரண்டு குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்போடும் இருக்கும் அந்த பெண்.. இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஒன்றுமே இல்லை எனினும் உழைக்கும் உறுதியோடு இருக்கிறார்.. ஆனால் நீயோ… பதினேழாவது தலைமுறைக்கு கவலை படுகிறாய்… இதுதான் உன் வியாதி.. இதை மற்றும் மருந்து உன்னிடம் தான் இருக்கிறது….

Courtesy: Vijay Saravanan

ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான்.அவன் மகாக் கருமி.அந்த ஊரில் பொதுவில் கோவில் கட்டிக் கொண்டிருந்தார்கள்.அதற்கு நிதி பலரிடமும் வாங்கிவிட்டு பணக்காரனிடம் வந்தார்கள்.அவனிடம்  பணம் வசூலிக்க முடியாது என்று பலரும் சொல்லியும் எப்படியும் அவனிடம் வசூலிக்க வேண்டும் என்று சிலர் வந்தனர்.இதுவரை பணம் கொடுத்தவர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டனர்.அதில் பணக்கார்கள் முதல் பாமரர் வரை பணம் கொடுத்த விபரம் இருந்தது.அதை முழுவதும் வாசித்தால் இப்படி அனைத்துத் தரப்பினரும் பணம் கொடுத்திருக்கும்போது தான் மட்டும் கொடுக்காவிடில் ஊரில் அசிங்கம் என்று நினைத்து அவன் எப்படியும் பணம் கொடுத்து விடுவான் என்று நினைத்தார்கள்.அப்படியே அந்த பட்டியலையும் அவனிடம் வாசித்தார்கள்.அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி.வந்தவர்களுக்கு நம்பிக்கை.கோவிலுக்கு எவ்வளவு எழுதப் போகிறீர்கள் என்று அவர்கள் கேட்க அந்தக் கஞ்சன் சொன்னான்,”நீங்கள் எண்ணப் புரிந்து கொள்ளவில்லை.நான் இதுவரை பல வகையில் பொருள் சேர்த்துள்ளேன்.இப்போது நீங்கள் எனக்குப் புது வழி காண்பித்து விட்டீர்கள்,” வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழிக்க அவன் தொடர்ந்தான்,”இது வரை நான் பிச்சை எடுத்து பொருள் சேர்த்ததில்லை.இப்போது இந்த ஊரில் பிச்சை போட நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.அதை முயற்சி செய்யப் போகிறேன்.தங்கள் ஆலோசனைக்கு நன்றி.”

Courtesy: http://jeyarajanm.blogspot.in

ஒரு மனிதன் ஒரு காரை ஓட்டுவதுபோல கற்பனையான ஸ்டீரிங்கை
இயக்கிக் கொண்டு காலை ஆக்சிலேடரை மிதிப்பதுபோல பாவனை செய்து கொண்டே நடந்து வந்தான்.அவனுடன் உதவியாளன் போல ஒருவனும் வந்தான்.முதல் மனிதனின் வித்தியாசமான நடவடிக்கை கண்டு அங்கு ஒரு
கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது.அந்த பரிதாபத்திற்குரிய மனிதனின் நடவடிக்கையைப் பார்த்து கூட்டத்தில் ஒருவர் அந்த உதவியாளரிடம் விபரம் கேட்டார்.அவனும் சொன்னான்,”இவருக்கு கார் ஓட்டுவது என்றால் மிகுந்த ஆசை.நிறையப் போட்டிகளில் கூடக் கலந்து பரிசுகள் வாங்கியிருக்கிறார்.
துரதிருஷ்ட வசமாக அவருக்கு மன நோய் ஏற்பட்டு விட்டது.அதனால் அவரைக் கார் ஓட்ட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.என்றாலும் பழக்க தோசத்தின் காரணமாக தினசரி இங்கு இதேபோல வந்து இந்தக் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு பார்க்குக்குப்போவார்.பிறகு வந்து காரை எடுத்துசெல்வதுபோல
செல்வார்.”கூட்டத்தில் ஒருவர் கேட்டார்,”ஏனப்பா,நீயாவது நிலையை அவருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி இதைத் தடுக்கப் பார்க்கலாமே?”
அவன் உடனே படபடப்புடன் சொன்னான்,”தயவு செய்து சப்தம் போட்டுப் பேசாதீர்கள்.அவர் தினசரி காரை நிறுத்துவது போல் செய்து விட்டு என்னிடம் நூறு ரூபாய் கொடுத்து நன்றாக சுத்தம் செய்து வைக்க சொல்வார்.நானும் அதுபோல நடித்து நூறு ரூபாய் வாங்கி என் பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அதைக் கெடுத்து விடாதீர்கள்.”கூட்டம் வாயைப் பிளந்தது.

courtesy: http://jeyarajanm.blogspot.in

ஒரு நல்லது சொன்னா தப்பா சார் , இப்படி போட்டு தொரத்தி ,தொரத்தி அடிக்கிறானுக
நேத்தைக்கு அயன் வண்டி வந்து துணி இருக்கான்னு கேட்டான் , நானும் என்  வைஃப்  கிட்ட ,
” ஏம்மா அயன் பண்ண துணி இருக்கா?”
“இல்லைங்க “
“அயன் வண்டி வர்றதே ரொம்ப ரேர் , துணி இருக்கான்னு நல்லா பாரும்மா “
‘இல்லைங்க  எல்லாம் துவைக்கணும்”
“ஏம்மா அவன் வந்ததே பெரிசு , நீ ஒன்னுபன்னு  பஸ்ட்டு எல்லா துணியையும் இன்னைக்கு அயன் பன்னிக்க  அப்புறமா துவைச்சுக்க “
“போடா……@#@#@#௬௬௬…………”
ஏய் , ஏய் ………ஸ்டாப் , ஸ்டாப் , ஸ்டாப் …….
என்ன அநியாயம் சார் இது , இப்போ பொம்பளைங்க கூட கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க சார் .
கீழே வர்ற இந்த சின்ன கதையை படிச்சுட்டு சிரிக்காம இருக்கறவங்களுக்கு, 1 குச்சி மிட்டாயும், 3 குருவி ரொட்டியும் இலவசமாக தருவதாக ஒரு அறிவிப்பு வந்துருக்குங்க. நாஸ்தா பிரியர்களுக்கும் நகைச்சுவை உணர்வு மங்கியவர்களுக்கும் ஜமாய்ச்சிட நல்ல ஒரு வாய்ப்பு!  நழுவ விட்டுடாதிங்கோ!! சமீபத்துல மக்கள் மன்றத்துல, அதாங்க பார்லிமெண்ட்ல நடந்த கதை தானுங்க…. இதோ மீதி உங்கள் பார்வைக்கு!
மக்களவையில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் பேசும் போது நம்ம பாக்யராஜ் ஸ்டைல்ல ஒரு குட்டிக் கதையை சொன்னாருங்க. அவர் சொன்ன கதையை அப்படியே நீங்களும் கேட்டுக்கோங்க…
”அதாவது…. ஒரு தந்தை தனது 3 மகன்களிடமும் 100ரூபாயினை தந்து அவருடைய அறை முழுவதும் நிரம்பும் படியான பொருளை வாங்கிட்டு வரச் சொன்னாருங்க.   உடனே அவரோட முதல் மகன் ஏதோ ஒன்னு வாங்கி வந்தாருங்க. ஆனா, அது ஒரு குட்டி கப்போர்டு சைஸைக் கூட நிரப்பலிங்க.  உடனே இரண்டாவது மகன், இலவம் பஞ்சா வாங்கி வந்து அறை முழுவதும் நிரப்ப பார்த்தாருங்க.  ஆனாலும்  அந்த முயற்சியும் அவுட்டாகி போச்சுங்க.  மூணாவது மகன் நேரா கடைக்கு போயி ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கிவந்து தந்தையோட அறையில ஏத்துனாரு பாருங்க… உடனே வெளிச்சம் பளிச்சுன்னு அறை முழுவதும் நிரம்பிடுச்சு!
இந்தக் கதையை சொல்லிட்டு கம்பீரமா அவை உறுப்பினர்களை பார்த்துகிட்டு, தன் தொண்டையைக் கனைச்சுகிட்டு அந்தக் காங்கிரஸ் எம். பி, கொஞ்சம் எம்பி தன்னோட மாஸ்டர் பீஸை சொறுவுனாரு பாருங்க…
“இந்தக் கதையில வர்ற மூணாவது மகனைப் போல தான் நம்ம பிரதமர் மன்மோகன் சிங். அவர் பதவியேற்ற நாளிலிருந்து நம் இந்தியா முழுவதும் ஒளிவீசத் தொடங்கிவிட்டது!
இத சொல்லி முடிச்சுட்டு அப்பளத்துக்காக, சாரி அப்ளாசுக்காக காத்திருந்தவருக்கு கடைசிபெஞ்சு வழியா ஒரு ஆப்புதாங்க வந்தது.  அது என்னான்ன….
கடைசி பெஞ்ச்:  “அடுங்கொய்யால….  பாக்கி 99ரூபாய் எங்கலேய் போச்சு…?”
ஹி. ஹி… இந்தக் கதையை மின் அஞ்சல் வழியாக எனக்கு கிச்சு கிச்சு மூட்டி ஒரு குச்சி மிட்டாயும் 3 குருவி ரொட்டியும் தர விடாம பண்ணின நண்பர்திரு. ஜெயராமன் அவர்களுக்கும், இதனை வடிவமைத்த மூலகர்த்தாவிற்க்கும்ஒரு பெரிய கும்புடு போட்டுகிட்டு நன்றியும் சொல்லிகிட்டு நான் நடையைக் கட்டறேனுங்கோ…

வழக்கமா நாலு உதை விட்டாலும் ஸ்டார்ட் ஆவாத பைக்(பெரும்பாலும் சாவி போட்டு இருக்க மாட்டேன் இல்லாட்டி சாவியை ஆன் பண்ணி இருக்க மாட்டேன் நோ நோ.. இதுக்கெல்லாம் பிளக்ஸ் பேனர் ரோம்ப ஓவர்) இன்னிக்கு ஒரே உதையில ஸ்டார்ட் ஆயிடிச்சி.

ஹோட்டல்ல போயி சட்னி கேட்டா சட்னி இல்ல கிட்னி வேணுமான்னு கேப்பானுங்க.. இன்னிக்குன்னு பாத்து சார் தேங்கா சட்னி,தக்காளி சட்னி, புதினா சட்னி எது வேணுமான்னு கேக்குறாங்க.

பசி உயிரை போவுற அன்னிக்கு நமக்கு முன்னாடி கியூவுல பத்தாயிரம் பேரு நிப்பான் அதுவும் நமக்கு முன்னாடி இருக்குறவனுக்கு கவுண்டர் கிட்ட வந்த அப்புறம் தான் எதை திங்கலாமுன்னு ஆராய்ச்சி செய்யுற ஆசையோ இல்ல இதை எப்படி செய்து இருப்பாங்க அதை எப்படி செய்து இருப்பாங்கன்னு டவுட் வந்து கவுண்டருல இருக்குறவன் கிட்ட கேள்வியா கேட்டு கொலையா கொல்லுவான்.. அதுவும் இல்லாட்டி அவனுக்கு தெரிந்த ஒரு பத்து பேரு வந்து எனக்கு சேத்து வாங்குடான்னு அவன் கிட்ட இருக்குற ஆயிரம் பக்க லிஸ்ட் பத்தாதுன்னு இவனுங்க ஒரு ஆயிர ஆயிட்டம் சொல்லுவானுங்க ஆனா இன்னிக்குன்னு பாத்து எல்லா கவுண்டரும் காலியா இருக்கு வசந்த் & கோ மாதிரி வாங்க வாங்கன்னு வரவேற்ப்பு வேற

வழக்கமா வங்கியில போயி விண்ணப்பம் இல்லைன்னு சொன்னா யோவ் அங்க தான் இருக்கும் போயி ஒழுங்கா பாருயான்னு அன்பா சொல்லுவாரு, ஆனா இன்னிக்கு பாருங்க ஒரு ஆபீசர் பணிவா வந்து பாத்து எடுத்து குடுக்குறாரு. கையெழுத்து போடுற இடத்துல இருந்த மல்லு ஆன்டி என்ன கோர்ஸ் படிக்கிறீங்க, நல்ல கோர்ஸா இருக்கேன்னு ஒரு ரெண்டு மூணு நிமிஷம் கடலை போட்டு கஸ்டமர் சேடிஸ்பேக்‌ஷனை வேற இம்ப்ரூவ் பண்ணுது.

நமக்கு தேவைன்னு வரும் பொழுது.. cartridge காலி ஆவுறது, பேப்பர் தீர்ந்து போவுறது, நடுவுல வேலை செய்யாம போவுறதுன்னு கெத்த காட்டும் பிரிண்டரு இன்னிக்கு பிரிண்ட் பட்டனை தட்டின உடனே சும்மா பள பளன்னு பிரிண்ட் அவுட்டு எடுத்து குடுக்குது.

இதெல்லாம் நல்லதுக்கா இல்ல பெரிய ஆப்போட சின்ன ஆரம்பமான்னு நெனைச்சிட்டே இருந்தா பின்னாடி ஒரு குரல் டேய் எருமை பத்து மணி ஆச்சி ஆபீசுக்கு போவாம அப்படி என்ன தூக்கமுன்னு, ஸ்யப்பா நல்ல வேளை கனவா போச்சி..இந்த மாதிரி பிரச்சனை இல்லாத உலகத்துல பிரச்சனையை fancy banianனா போட்டு பொங்கிட்டு இருக்குற நம்மால உயிர வாழ முடியுமா என்ன?

வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. உடனே குடும்ப தலைவர் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து விளக்கம் கேட்டார்.

அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் பாருங்க இவ்வளவு தொகை வந்து இருக்கு பாருங்க. யார் இதற்க்கு காரணம்?
அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது
மகன்: நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்லாக்பெர்ரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாது அப்பா
இப்போது அனைவைருக்கும் ஒரே அதிர்ச்சி. நாம் யாரும் உபயோக படுத்தலன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க. அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான்: உங்கள மாதிரி தான் நானும். என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன். என்ன தப்பு?
நீதி: சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதே இல்ல வேறொருவர் நமக்கு அத செய்யும் வரை.

ஆங்கில மூலம்: http://rammalar.wordpress.com

அப்ப என் பையன் 2nd Std
படிச்சிட்டு இருந்தான்..

அவனுக்கு Quarterly Exams
நடந்துட்டு இருந்தது..

அடுத்த நாள் SOCIAL Exam.
அதுக்கு சொல்லி குடுக்க
சொல்லி என்கிட்ட வந்தான்.

” ஆண்டவா என் பையனை நீதான்
காப்பாத்தணும்னு ” வேண்டிகிட்டு
பாடத்தை சொல்லி குடுத்துட்டு
இருந்தேன்..!

அதுல ஒரு கேள்வி..

” Which Animal is called as
Ship of the Desert..? ”

Ans : CAMEL

இந்த ” CAMEL ” ங்குற வார்த்தை
அவனுக்கு தகராறாவே இருந்தது..
” டக்னு ” ஞாபகம் வராம தடுமாறினான்..

உடனே எனக்கு ஒரு யோசனை..
இதுக்கு ஒரு ஷார்ட் – கட் சொல்லி
குடுத்தா என்னான்னு..

( Camel-க்கு எல்லாமா ஷார்ட் கட்டானு
தானே யோசிக்கறீங்க..?

ஹி., ஹி., ஹி… நாங்கல்லாம் படிக்கிற
காலத்துல எலி போட்டுக்குற Pant = Elephant-னு
ஷார்ட் கட்ல படிச்சவங்களாக்கும்..!!! )

உடனே அவனை கடைக்கு கூட்டிட்டு
போயி ஒரு Camlin பென்சில் வாங்கி
குடுத்தேன்..

அதுல சின்னதா ஒரு ஒட்டகம் படம்
போட்டு இருக்கும்.. அதை காட்டி…

” ஒரு வேளை அந்த கேள்விக்கு உனக்கு
Answer தெரியலைன்னா.. இந்த பென்சிலை
திருப்பி பாரு.. ஞாபகம் வந்துடும்னு ”
சொன்னேன்..!

அவனும் சந்தோஷமா தலையை ஆட்டினான்.

அடுத்த நாள் : காலை 9.30 மணி

டிபன் சாப்பிடும் போது தான் பார்த்தேன்..
நான் வாங்கி குடுத்த அந்த Camlin பென்சில்
டேபிள் மேலயே இருந்தது..

எனக்கு ” பக்னு ” ஆகிடுச்சு

என் Wife-ஐ பாத்து கேட்டேன்..

” அவன் பென்சிலை மறந்துட்டு
போயிட்டானா..? ”

” இல்லங்க.. இந்த பென்சில் லைட்டா
எழுதுதுன்னு சொன்னான்… அதான்
Apsara பென்சில் குடுத்து இருக்கேன்..! ”

( ஐயையோ அப்ப Ship of Desert கேள்விக்கு
” Apsara “னு எழுதி வைப்பானோ..?! அவ்வ்வ்..! )

நேத்து நடந்த Short-Cut மேட்டரை
என் Wife கிட்ட சொன்னேன்..

” ஏங்க உங்க குறுக்கு புத்தியை
அவனுக்கும் கத்து தர்றீங்க..? ”

” நோ குறுக்கு புத்தி., இது Short-Cut..! ”

” ம்ம்ம்..! இன்னிக்கு மட்டும் அவன்
தப்பா பதில் எழுதிட்டு வரட்டும்.. அப்ப
இருக்குது உங்களுக்கு..!! ”

Evening ஸ்கூல்ல இருந்து வந்ததும்.,
அவன் Question Paper-ஐ வாங்கி பாத்தா..
அந்த பாழாப்போன கேள்வி இருந்தது..

அவனை கேட்டேன்…

” டேய். அம்மா உனக்கு வேற பென்சில்
குடுத்துட்டாங்களே.. இதுக்கு எப்படிடா
பதில் எழுதின..? ”

” அதனால என்னப்பா..? எனக்கு தான்
Answer நல்லா மனப்பாடம் ஆகிடுச்சே..! ”

( அப்பாடா.. தப்பிச்சேன்டா..! )

” சரி என்ன பதில் எழுதின..? ”

” CAMLIN ”

” ?!!?!?? “

” ஒரு மனுஷனுக்கு எந்த கஷ்டம்
வேணாலும் வரலாம்.. – ஆனா…

பொங்கி வர்ற சந்தோஷத்தை
Control பண்ணிட்டு சோகமா
இருக்குற மாதிரி ஆக்ட் குடுக்குற
நிலைமை மட்டும் வரவே கூடாது…! ”

சரி., நாம மேட்டர்க்கு போவோம்..

எங்க மாமனார் வீட்ல நானும் ,
என் சகலையும் ஒரு கோடு கிழிச்சா…
அதை யாரும் தாண்ட மாட்டாங்க..

( அது மேலயே நடந்து போவாங்க..
அது வேற விஷயம்..)

போன வாரம் என் மச்சானுக்கு
பொண்ணு பார்க்க போயிருந்தோம்..

பொண்ணை பாத்துட்டு.. எல்லோரும்
டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க..

ஆனா எங்க ரெண்டு பேரையும்
கண்டுக்கவே ஆள் இல்ல.. நாங்களும்
என்ன தான் பண்றாங்கன்னு வேடிக்கை
பாத்துட்டு இருந்தோம்.. ( வேற வழி..?! )

கொஞ்ச நேரம் கழிச்சி., என் மச்சான்,
என் சகலை Wife, என் Wife மூணு பேரும்
எங்க கிட்ட வந்து..

” ஏங்க பொண்ணு ஓ.கேவா..? ”

” மாப்ள பக்கத்துல தானே இருக்கான்..
அவனை கேளுங்க…! ”

” இந்த லூசு.. நீங்க ரெண்டு பேரும்
ஓ.கே சொன்னாதான் ஓ.கேன்னு
சொல்லிடுச்சு..! ”

( ஆஹா.. தெய்வ மச்சான்..! )

இதை கேட்டதும் நான்…

” இப்படி டக்னு கேட்டால்லாம் எங்களால
பதில் சொல்ல முடியாது.. ஒரு வாரம்
டைம் வேணும்..! இல்லியா சகலை..”

” என்னாது ஒரு வாரமா..? ” எங்க மச்சான்
டென்ஷன் ஆகிட்டான்..

இப்ப என் சகலை திருவாய் மலர்ந்தாரு..

” ஒரே நாள்ல முடிவு பண்ணி., எங்களை
மாதிரி நீயும் மாட்டிக்க கூடாதுல்ல..
அதுக்குதான் ஒரு வாரம் டைம் கேக்கறோம்..
அப்படித்தானே சகலை…?! ”

( ஆஹா.. கோத்து விட்டுட்டான்யா..! )

ஹும்ம்.., இப்ப பதிவோட
முதல் ரெண்டு வரியை
மறுபடியும் படிச்சிக்கோங்க..
.
.

Courtesy: http://gokulathilsuriyan.blogspot.in

அப்பாவி நண்டும் பொல்லாத தேள்கள் இரண்டும்

அந்த நண்டுக்கு ஒரு தேளுடன் கலியாணம் ஆனது ; அதெப்படி என்று யோசிக்காமல் மேலே படிக்கவும்.

இரண்டு பேரும் மிகவும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்தனர்.. அதன் அடையாளமாகவும் இந்த விநோத தம்பதியினரின் மகிழ்ச்சியாகவும் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.. அதுவும் தேளாகவே இருந்தது.. இந்த குடும்பமானது ஒரு வலையில் குடியிருந்தது.

சின்னத் தேளானது மிகவும் மகிழ்ச்சியாகவும் , பெரிய தேள், நண்டு இவற்றின் பராமரிப்பில் மிகவும் செல்லமாகவும் வளர்ந்தது. ஆனாலும் சின்னத் தேளுக்கு ஒரு குறையிருந்தது.. தினசரி இரவு தூங்கப் போகும் போது, நண்டிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்தது.. காரணம் ஒன்றும் பெரிசில்லை.. அந்த நண்டானது கொழுத்த உடம்பு கொண்டதாக இருந்தபடியால் தூங்கும் போது சின்னதாக குறட்டை ஒலி எழுப்பி தூங்குவதை வழக்கம் கொண்டிருந்தது.. இதனால் தனது தூக்கம் கெடுவதாகவும் சின்னத் தேளானது பெரும் சண்டை போடத் தொடங்கினது.. பெரிய தேளானது இந்த சங்கதியில் சின்னத் தேளுடன் ஒத்துப் போவதாகவே இருந்தது..

இந்த இரண்டு தேள்களும் சேர்ந்து கொண்டு, அந்த அப்பாவி நண்டை நடு நிசியில் எழுப்பி குறட்டை ஒலி எழுப்பாமல் தூங்கும் படிக்கு வற்புறுத்துவதும், அந்த அப்பாவி நண்டு தூக்கம் கலைந்து அழுவதுமாகத் தொடர்ந்தது

இந்தக் கதையினை மேலே தொடர்ந்து எழுதுவதற்குள் ஒரு ஃபோன் கால் வந்தது.. அதனைக் கவனித்து வருவதற்குள் , இதனை என் மனைவி படித்து விட்டு பெரிய தேள், சின்ன தேள் என்பது விருச்சிக ராசிக்காரர்களான அவளையும் என் மகளையும் குறிப்பதாகவும் , நண்டு என்பது கடகராசியான என்னை சொல்வதாகவும் சண்டைக்கு வந்ததோடு, கதையின் தலைப்பை பொல்லாத நண்டும், அப்பாவி தேள்களும் என்று மாற்றும்படி சொல்கிறாள்

என்ன செய்யலாம் நீங்கள் சொல்லுங்கள்

G+ இல் Chandramowleeswaran. V

தங்கமணி: ஜவ்வரிசி வாங்கிட்டு வந்தோம்ல

ரங்கமணி: ஆமா

தங்கமணி: அதை வச்சி இது வரை ஒண்ணும் செய்யல

ரங்கமணி: என்ன பண்ணலாம்

தங்கமணி: இன்னைக்கு உன் ஃப்ரண்ட் xxxxxக்குப் பொறந்தநாளுல்ல

ரங்கமணி: ஆமா

தங்கமணி: அதனால பாயசம் செய்றேன், ஆஃபிஸ் முடிஞ்சு வந்து அவருக்குக் கொண்டு போய் கொடு

ரங்கமணி: சரி ஒகே. என்ன திடீர்னு என் ஃப்ரண்ட் மேல இவ்வளவு அக்கறை?

தங்கமணி: உன் தம்பி yyyy ஊருக்குப் போனதுலேர்ந்து நம்ம சமையலை டெஸ்ட் பண்ண ஒரு சரியான ஆடு கிடைக்கல. இன்னைக்கு xxxxx தான் அந்த ஆடு

#மனைவி அமைவதெல்லாம் _____________

Courtesy: கேவி ஆர்

தொப்பி வியாபாரி.. குரங்குகள் தொப்பி தூக்கிக் கொண்டு ஓடின.. வியாபாரி தான் போட்டிருந்த தொப்பி கீழே போட்டார் எல்லாக் குரங்குகளும் தொப்பியைத் தூக்கி எறிந்தன.. இப்படியான படக் கதை எல்லோருமே சின்ன வயசிலே பாடப் புத்தகத்திலே படித்திருப்போம்

ஏன் குரங்கு இப்படி செய்ய வேண்டும்

சார்லஸ் டார்வின் ஒருதரம் குறிப்பிட்டாராம் : யாராவது ஜேவலின் த்ரோ போட்டியில் வேலை எறிவதைப் பார்க்கும் போது, நம்மை அறியாமல், நாமும் முட்டியை அவர் போலவே செய்வதுண்டு, அதே போல் கத்திரிக்கோலை வைத்து யாராவது எதையாவது வெட்டும் போது, அதைப் பார்ப்பவரின் தாடை இறுகியும் பின்னர் தளர்வதுமுண்டு

சினிமாவிலே வரும் உணர்ச்சிக் காட்சிகளில், பார்ப்பவர்களுக்கு கண்ணீர் வருவது

Giacomo Rizzolatti என்பவரின் ஆராய்ச்சிகளைப் பற்றி வாசிக்க நேர்ந்தது ( உபயம் : The Tell Tale Brain என்ற புத்தகம்… இந்தப் புத்தகத்தை நாலு தரம் முழுசாக வாசித்து விட்டேன்.. அங்கிருந்து மேலும் வாசிக்க வேணும் என்பதான சங்கதி Giacomo Rizzolatti பத்தினது)

மிரர் நியூரான் என்பதைக் குறித்த இவரது ஆராய்ச்சி, தொடர் ஆராய்ச்சி அதன் விபரங்கள் ரொம்பவுமே வசீகரிக்கிறது

Giacomo Rizzolatti பத்தின விபரம் ( போன் நம்பர் , இமெயில் ஐடி உட்பட http://www.unipr.it/arpa/mirror/english/staff/rizzolat.htm இங்கே சிக்குகிறது)..

இங்கே அவரின் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பிடிஎப் கிடைக்கிறது

“அப்படி என்ன கண்ணு விரிய இத்தனை காலங்கார்த்தால எழுந்து எல்லார் தூக்கமும் கெடுத்து லைட் போட்டுண்டு படிச்சாறது”

ரொம்ப ஆர்வமாக என் கேட்ட என் மனைவிக்கு விளக்கம் சொன்னேன்

“எனக்கு இப்போது டீ வேண்டும்,, எதோ பொஸ்தகம் அலமாரிலேர்ந்து எடுத்து வரச் சொல்லப் போறன்.. இது மாதிரி என் இன்டென்ஷன் எல்லாம் என்னோட ஆக்டிவிடிலேர்ந்து உன் மூளைல இருக்கிற மிரர் நியூரான் பண்றதாம்.. மிரன் நியூரான்ன்னா என்னான்னா…… ” நல்ல விளக்கமா சொன்னேன்

“எல்லா பொண்ணுங்களுக்கும் அப்படின்னா இந்த மாதிரி மிரர் நியூரான் ஜாஸ்தி இருக்குனு சொல்லுங்கோ”

“அது தெரியலம்மா ஆனா ராமசந்திரன் பொஸ்தகத்திலே வேற மாதிரி போட்டிருக்கு”

“என்ன போட்டிருக்கு”

“மனுஷாளை விட சிம்பன்சி, ஒரங்குட்டான் மாதிரி பிராணிகளுக்குத் தான் மிரர் நியூரான் ஜாஸ்த்தியாம்”

எனக்கு ரிஃப்ளெக்ஸ் போதவில்லை.. வேகமாக எறியப்படும் கரண்டி முன் நெற்றியில் படாமல் விலகிக் கொள்ளத் தெரியவில்லை

Courtesy: G+ Chandramowleeswaran. V

ஒருத்தன் இண்டர்வ்யூ போனானாம். ஆஃபீஸர் டேபிள்மேல துப்பாக்கிய வெச்சு, ‘நெக்ஸ்ட் ரூம்ல உன் பொண்டாட்டி இருக்காங்க. அவங்களை ஷுட் பண்ணினா, உனக்கு இங்க ஒரு லட்சம் சம்பளத்துல வேலை’ன்னாராம்.

”பொண்டாட்டியக் கொன்னு, கிடைக்கற வேலை வேணாம்”ன்னுட்டு போய்ட்டான் அவன்.

ரெண்டாவது வந்தவன்கிட்டயும், ஆஃபீஸர் அதையே -நெக்ஸ்ட் ரூம்ல உன் பொண்டாட்டி இருக்காங்க. அவங்களை ஷுட் பண்ணினா, உனக்கு இங்க ஒரு லட்சம் சம்பளத்துல வேலை – சொன்னார். அவன் துப்பாக்கிய எடுத்துட்டு நேரா அந்த ரூமுக்குப் போனான். அங்க அவனோட மனைவி நின்னுட்டிருந்தாங்க. அவங்க முகத்தைப் பார்த்ததும் மனசு மாறி, துப்பாக்கியை ஆஃபீஸர்கிட்டயே குடுத்து ‘போய்யா – நீயும் உன் வேலையும்’ன்னுட்டுப் போய்ட்டான்.

மூணாவது ஒருத்தன் வந்தான். அவன் பொண்டாட்டி, நெக்ஸ்ட் ரூம்ல இருந்தாங்க. அவன்கிட்டயும் ஆஃபீஸர் அதைச் சொன்னார். அவன் துப்பாக்கியத் தூக்கீட்டு அந்த ரூமுக்குப் போனான்.

கொஞ்ச நேரத்துல அந்த ரூம்லேர்ந்து அவனோட மனைவி ‘ஐயோ.. அம்மா’ன்னு அலர்ற சத்தம்.

ஆஃபீஸர் ஓடிப் போய்ப் பார்த்தார். மனைவி தலைல ரத்தம் ஒழுகுது. வந்த ஆஃபீஸர் ஓடிப்போய்த் தடுக்க, அவன் சொன்னான்:

“சார்…. கொல்லச் சொல்லீட்டு உள்ள புல்லட் வைக்காம குடுத்துட்டீங்க. அதான் திருப்பிப் போட்டுச் சாத்தீட்டிருந்தேன்

Courtesy: பரிசல்காரன் கிருஷ்ணா in G+

இரண்டு கழுதைகள் ரொம்ப நெருங்கி நண்பர்களாக இருந்தன. ஒன்றை ஒரு பெரிய பணக்காரர் வாங்கினார். இன்னொன்றை ஒரு பெரிய வியாபாரி வாங்கினார்.

பணக்காரர் அவரோட கழுதையை அவரோட குழந்தை மாதிரி நடத்தினார். ஆனா வியாபாரியோ அவரோட கழுதையை மோசமா நடத்தினார், சரியா சாப்பாடு போடக் கூட மாட்டார், ஆனா கடுமையா வேலை வாங்குவார்.

சில வருடங்களுக்கு இரண்டு கழுதைகளும் சந்தித்து கொண்டது. இரண்டும் பேசிகிட்டு இருந்தப்ப, பணக்காரரோட கழுதை, தன் நண்பன் படுற கஷ்டத்தை நினைச்சு கஷ்டப்பட்டு சொல்லிச்சு “என் முதலாளியால உன்னை உன் முதலாளிகிட்ட வாங்க முடியும். உனக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கும்”

ஆனா வியாபாரியோட கழுதை சொல்லிச்சு. “வேண்டாம், எனக்கும் அங்க ஒரு நம்பிக்கை இருக்கு”

“என்ன நம்பிக்கை?”

“வியாபாரிக்கு ஒரு அழகான பெண் இருக்கிறாள். அவன் ஏதாவது தப்பு பண்ணும்போதெல்லாம், வியாபாரி அவகிட்ட சொல்வார்- இதே மாதிரி செஞ்சிகிட்டு இருந்தன்னா உன்னை இந்த கழுதைக்கு கல்யாணம் செஞ்சு வச்சிடுவேன்”

G+ இல் மாணவன் சிலம்பு பகிர்ந்து கொண்டது

இன்றே கடைசி, மதியத்துக்குள் குடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் குடுக்க வேண்டிய விண்ணப்பத்தைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். பெயர், பிறந்த தினம், கல்வித்தகவல்கள், முகவரி, அலைபேசி எண். எல்லாம் சரியாகவே இருந்தது. விண்ணப்பத்தின் கூடவே சமர்பிக்க வேண்டிய சான்றிதழ் நகல்களின் பட்டியலையும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டேன். கிளம்ப எத்தனிக்கையில்தான் அந்த வாக்கியம் கண்ணில் பட்டது. “All the Certificate photocopies must be duly attested” . அட, இதை எப்படி கவனிக்காமல் விட்டேன். இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கின்றது. பல்கலைக்கழகத்துக்கு எட்டு கிலோமீட்டர் போக வேண்டும். இன்று சனிக்கிழமை வேறு. எங்கு போய் attestation வாங்குவது. யாரிடம் வாங்குவது. இதே நெல்லையாய் இருந்தால், attestation போடுவதற்கு தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஏன், எனது அம்மா அப்பா இருவருமே கூட ஓய்வு பெறும் வரையில் பலருக்கும் attest பண்ணியிருக்கிறார்கள்.. ஆனால் சென்னையில எனது பழக்கம் எல்லாமே தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நண்பர்களோடே என்பதால் Attestation போடுமளவிற்கு அரசு துறையில் உள்ளவர்கள் யாரும் பழக்கம் இல்லை. என்ன செய்வது? தோன்றியது, வீட்டின் அருகில் இருக்கும் மின்சார வாரிய அலுவலகத்தில் போய் கேட்டுப் பார்க்கலாம். பொறியாளர் எவரேனும் இருந்தால் போடுவார்கள். எல்லாச் சான்றிதழ்களின் அசலையும் நகலையும் எடுத்துக் கொண்டு அங்கே போனேன்.

கையில் பைலோடு உள்நுழைவதைப் பார்த்த கடைநிலை சிப்பந்தி ஒருவர் வழிமறித்தார்.

“யாரு சார்? என்ன வேணும்?”

“AE,  ADE யாராவது இருக்காங்களா? பாக்கணும்”

“கமெர்ஷியல் கனெக்ஷன் தான? மொதல்ல என்கிட்ட சொல்லுங்க சார்.. நேரா AEயப் பாக்க முடியாது.”  – பைலைப் பார்த்து தப்பாக நினைத்திருந்தார்.

“கனெக்ஷன்லாம் இல்லீங்க. Attestation வாங்கனும். அதான்..”

” Attestationஆ… போங்க… உள்ளார யாராவது இருந்தா போய்ப்பாருங்க.” சில்லறை தேறாது என்ற கடுப்பில் தலையைச் சொறிந்து கொண்டு போனார்.

இன்னும் இரண்டு மூன்று பேரைக் கடந்த போதும் இதே. Attestation என்ற வார்த்தையைக் கேட்டதுமே ஏதோ பல்பு திருடியவனைப் பார்ப்பது போல் கேவலமாகப் பார்த்தார்கள். ஒருவழியாக AEன் அறையை நெருங்கி வாசலில் போய் நின்றேன். இரண்டு மூன்று முறை ஏறெடுத்துப் பார்த்தார். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. நான்காம் முறை பார்த்த பொழுது கேட்டார்

“யாரு நீங்க என்ன வேணும்?”

” Attestation வேணும் சார்”

“எதுக்கு Attestation?”

“காலேஜ் அப்ளிக்கேஷனுக்கு certificate, Marksheet attestation ”

“அது ஏன் சார் சனிக்கிழமை வர்றீங்க… வாரநாள்ல வர வேண்டியதுதான. போய்ட்டு திங்கக்கிழமை வாங்க..”  – அது வரையில் அவர் துக்ளக்தான் படித்துக் கொண்டிருந்தார் என்பதை இந்த இடத்திலே சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் மை லார்ட்.

“இல்ல சார், இன்னிக்கு கடைசி நாள்… குடுக்கணும்”

“உங்க கடைசி நேர அவசரத்துக்கு எங்களையும் பாடாப்படுத்துங்க. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க தம்பி” சொல்லியவாறே எழுந்து போய் கம்ப்யூட்டரில் போய் உட்கார்ந்தார். கண்டிப்பாக சீட்டுதான் விளையாடப் போகிறார் என்று உள்மனது சொல்லியது. ஆனால் இல்லை.

“யோவ் ராமநாதன், அந்த DC பண்ணதுல பில்லு கட்டுனவன் லிஸ்டக் கொண்டாய்யா… இந்த எளவுல என்ட்ரியப் போடணும்” என்று சொல்லியவாறே சிஸ்டத்தை ஆன் செய்து மவுசைத் ஆட்டிக் கொண்டே இருந்தார். ராமநாதன் வந்து லிஸ்டைக் கொடுத்துவிட்டு என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் போனார். ராமநாதன் – அந்த முதல் கமர்ஷியல் கனக்ஷனார்.  சிரித்து வைத்தேன்.

ஒரு ஐந்து நிமிடம் போயிருந்தது. என்னதான் செய்கிறார் என்று தற்செயலாகப் பார்த்தே. வினோதமாக ஏதோ செய்து கொண்டிருந்தார்.  முதலில் மவுசை வைத்து மவுஸ்பேடில் ஒரு பதினாறோ, முப்பத்தி இரண்டோ போட்டார். பின்னர் ஒரு க்ளிக். திரும்பவும் ஒரு பதினாறோ, முப்பத்தி இரண்டோ. பின்னர் ஒரு விரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி டைப்பிங்.  மீண்டும்  பதினாறு, க்ளிக், பதினாறு, டைப்பிங்…. தொடர்ந்து கொண்டிருந்தது. விஷயம் என்னவென்றால், அது ஒரு Form. நான்கு Text Boxகளை Fill பண்ண வேண்டும். Submit.  ஒவ்வொரு Text Boxஐயும் தேடிப் போய் க்ளிக் பண்ணி விட்டு மீண்டும் Mouse cursorஐ மானிட்டரின் கீழே ஓரத்துக்கு கொண்டு வந்து வைத்து விடுகிறார். டைப் செய்கிறார். மீண்டும் ஜென்மப் பிரயத்தனத்தில் மவுசை நகட்டி நகட்டி அடுத்த Text Boxல் க்ளிக். மீண்டும் மானிட்டரின் ஓரம். ஒரு விரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி டைப்பிங்.

என்னுடைய ஏழரை அங்கேதான் தொடங்கியது. சனி வாய் வழியாக வந்தது.

“சார்… … …. …. … …..” –  அதை நான் சொல்லி விட்டேன்.

ஏறிட்டுப் பார்த்து “என்ன சொன்னீங்க?” என்றார். அதைக் காட்டி மீண்டும் அதையே சொன்னேன். அங்கே ஆரம்பித்தது டண்டணக்கா.

“கம்ப்யூட்டர் தெரியும்ன்னு திமிரு காட்றீங்களா..? என்ன வேலை பாக்குறீங்க?”

“சாப்ட்வேர்லதான் சார். ஆனா அப்படில்லாம் இல்ல சார்.. நான் சொன்னது.. சார்… சாரி… அது வந்து”

“வருவீங்க இத அடி, அத அடின்னு சொல்லுவீங்க. அப்புறம் கம்ப்யூட்டர் நொட்டையா வேல செய்யாம ரிப்பேராப் போகும். யாரு பாக்குறது. நீ வந்து ஓசில சர்வீஸ் பண்ணுவியா.. எதாவதுன்னா என் சம்பளத்துல கைக்காசு போட்டு பாக்க சொல்லி தாளி அறுப்பானுங்க. நீ வந்து பாப்பியா? சொல்லுய்யா…”

“சார்… அது வந்து சார்… அப்படில்லாம் ஒன்னும் ஆகாது சார்…”

“என்னாது வந்து போயி… இப்படித்தான் முன்னால வந்தவன் ஒருத்தன் கம்ப்யூட்டர் இஞ்ஜினியர்ன்னான். கம்ப்யூட்டர் Slowவா இருக்கு பாக்குறீங்களான்னு கேட்டதுக்கு இத்த அத்தன்னு எத்தையோ கெலிட்(delete) பண்ணீட்டு போய்ட்டான். இந்த சனியன் 3 மாசமா வேலை செய்யாமக் கெடந்தது. என்னையப் போட்டு கொடஞ்சிட்டானுக.. தேவையா எனக்கு”

“சார்… அது வந்து… அப்படில்லாம்… சார்…”

“போயிரு… Attestationலாம் ஒன்ணும் போட முடியாது… போயிரு”

“சார்… சாரி சார்.. இல்ல அது சார்.. சாரி சார்…”

“போங்கறேன்ல… போயிரு” என்று கோபத்தில் மவுசை வைத்து மவுஸ் பேடில் 360, 3350 எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்.

ஏப்ரல் மாசம் வேற… ராத்திரிக்கு கரண்டப் புடுங்கிட்டானுகன்னா Fan, AC ஓடாது என்பதால் கம்மென்று கிளம்பி விட்டேன்.

அவரிடம் நான் சொன்னது இதுதான்…. இது மட்டும்தான்

“சார்… இந்த Tab Key ah அடிச்சீங்கன்னா அடுத்தடுத்த Text boxக்கு ஆட்டோமேடிக்காப் போகும். Mouse ah use பண்ண தேவை இல்லை.

நான் சொன்னது தப்பா சார்?

****************************

பக்கத்திலேயே இருந்த அரசு மருத்துவர் ஒருவரிடத்தில் Attestation வாங்கப் போனேன். நல்லவேளையாக அவர் அறையில் கம்ப்யூட்டர் எதுவும் இல்லாத காரணத்தால் அன்றே அப்ளிகேஷனைக் கொடுக்க முடிந்தது.

கடவுள் இருக்கான் கொமாரு.

நொந்த கதை சொன்னவர்: http://nellainanban.blogspot.in

நல்ல பல பண்புகளைக் கொண்ட ஒரு மருத்துவரும் ஒரு பொறியியலாளரும் தவறாக வாகனத்தை ஓட்டிய போது ஒரு ஆலயத்தின் சுவரில் மோதி இறந்துவிட்டனர். இதில் ஒரு ஆலய பக்கதரும் கொல்லப்பட்டார். ஆலயத்திற்கு சேதம் விளைவித்ததாலும் பக்தரைக் கொன்றதாலும் அவர்கள் இருவரும் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர். நரகத்திற்குச் சென்ற இருவரும் அங்கு தமது சேவையைத் தொடர்ந்தனர். மருத்துவர் அங்குள்ளவர்களின் நோய்களைக் குணப்படுத்தினார். பொறியிலாளர் குளிரூட்டி, மலசல கூட வசதிகள், நல்ல இருப்பிட வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தினார். நரகத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினர்.

கடவுளிடம் நரகம் பல வசதிகளைப் பெறுகிறது என்று யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள். கடவுள் நரகத்தின் பொறுப்பாளியை அழைத்து நரகத்தில் பாவிகள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அங்கு என்ன நடக்கிறது என்று வினவினார். நரகப் பொறுப்பாளி மருத்துவரினதும் பொறியியலாளரினதும் சேவையை விபரித்தார். அப்போது கடவுள் அவர்கள் இருவரையும் என்னிடம் அனுப்பு என்றார். நரகத்தின் பொறுப்பாளி அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டார். அதற்கு கடவுள் அனுப்பாவிடில் உன் மீது வழ்க்குத் தொடருவேன் என்றார். நரகத்தின் பொறுப்பாளி சிரித்துக் கொண்டு சொன்னார். வழக்குப் போடுவதாயின் சட்ட அறிஞர்கள் வேண்டும். அவர்கள் எவரும் உங்களிடம் இல்லை. அனைவரும் என்னிடம் தான் இருக்கிறார்கள் என்றார்.

Courtesy: http://veltharma.blogspot.in

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை
கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த
அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..

1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்.

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை
துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும்
தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம்
மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் !

Courtesy: Dhana Sekar

அலுவலகம் விட்டு வரும் வழியில் தங்கமணியை போலவே ஒரு பெண்ணை பார்த்தேன். தங்கமணி தான் என நினைத்து அருகில் போய் பேச பிறகு தான் அது வேற ஒருத்தர் என்று. மன்னிப்பு கேட்டு விட்டு வீட்டுக்கு வந்தேன்.

நம்ம நாக்குல தான் சனி கொலைவெறியோட இருக்காரே. வந்ததும் வராததுமா உடனே தங்கமணி கிட்ட “தங்கமணி உன்னை மாதிரியே ஒருத்தர வர்ற வழியில பாத்தேன். அப்படியே அசந்து போய்டேன். தெரியுமா?” அப்படின்னு கேட்டேன். அதுக்கு பதிலுக்கு தங்கமணி ஒரு கேள்வி கேட்டாங்க. என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லி குடுத்து இந்த அப்பாவி ரங்கமணிய காப்பாத்துங்க ப்ளீஸ்
அப்படி என்ன கேள்வி கேட்டாங்களா?
அந்த பொண்ணு அழகா இருந்தாளா?

நாங்க ஏற்காடு போனப்ப..
அங்கே இருக்குற Forest-ஐ சுத்தி
பார்க்கலாம்னு ஆசையா போனா

அங்கே ஒரு போர்டு வெச்சி இருந்தது..

” அபாயம்..! காட்டு விலங்குகள்
நடமாடும் பகுதி ”

அதை பாத்ததும் என் Wife..

” வேணாங்க.. ரிஸ்க் எடுக்காதீங்க..! ”

” ஹேய்…நாங்கல்லாம் புலிக்கு பக்கத்துல
உக்காந்து புல் மீல்ஸ் சாப்பிடறவிங்க..! ”

” பாத்துங்க.. அந்த புலிக்கும் உங்களை
பாத்ததும் மீல்ஸ் சாப்பிட ஆசை வந்துட
போகுது..!? ”

” இப்படி சொன்னா.. நாங்க பயந்துடுவோமா..?!! ”

” இல்லையா பின்ன..?!! ”

” நோ சான்ஸ்.! ”

” சரி.., திடீர்னு நம்ம முன்னாடி ஒரு
சிங்கம் வந்துட்டா.. அப்ப என்ன
பண்ணுவீங்க..?! ”

” சிங்கத்தை சிரிக்க சொல்லி ஒரு
போட்டோ எடுப்பேன்..! ”

” அப்ப நிஜமாவே சிங்கம், புலியை
எல்லாம் நேருக்கு நேரா பாத்தா
பயப்பட மாட்டீங்க..?! ”

” நமக்கு எப்ப கல்யாணம் ஆச்சோ..
அப்ப இருந்தே அதுக்கெல்லாம்
நான் பயப்படறது இல்ல..! ”

” என்னா சொன்னீங்க… கிர்ர்ர்ர்ர்….”
( ஐயோ.. புலி மாதிரியே உறுமறாளே…! )

” கூல்.. கூல்… கல்யாணத்துக்கு அப்புறம்
நீ என்னை மாவீரனா மாத்திட்டேன்னு
சொல்ல வந்தேன்..! ”

” ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..! ”

( உஸ்ஸப்பா.. உசுரை காப்பாத்திக்க
எப்படி எல்லாம் டிரிக்ஸ் பண்ண
வேண்டி இருக்கு..!! )

Courtesy: http://gokulathilsuriyan.blogspot.in

ரங்கமணி: “இன்னிக்கி சமையல் என்ன பண்ணப் போறே?”
தங்கமணி: “நீங்க சொல்றதப் பண்ணீட்டாப் போச்சு.”
ரங்கமணி: “பருப்பும் சாதமும் பண்ணீடு.”
தங்கமணி: “நேத்து ராத்திரி தான் பருப்பும் சாதமும் சாப்டீங்க.”
ரங்கமணி: “காலிஃப்ளவர், உருளைக் கிழங்கு கூட்டு?”
தங்கமணி: “கொழந்தைங்களுக்கு அது புடிக்காதே.”
ரங்கமணி: “அப்போ பூரியும் சோளேயும் பண்ணு.”
தங்கமணி: “பூரி சோளே எனக்கு ஒத்துக்கறது இல்லீங்க. ஜீரணமாக மாட்டேங்குதுங்க.”
ரங்கமணி: “முட்டெக்கறி எல்லருக்கும் புடிக்குமே? அதெப்பண்ணு.”
தங்கமணி: “இன்னிக்கி வியாளெக் கெளெமெயாச்சே. எனக்கு விரத நாளு இல்லியா? முட்டெக் கறி எப்படிங்க பண்ணறது?”
ரங்கமணி: “பரோட்டா பண்ணீடேன்.”
தங்கமணி: “ராத்திரிலெ போய் பரோட்டாவா?”
ரங்கமணி: “அப்போ ஹோடல்லேந்து எதுனா வர வழிச்சுடலாம்.”
தங்கமணி: “தினோம் ஹோட்டல் சாப்பாடு வாணாங்க.”
ரங்கமணி: “பின்னெ மோர்க்குழம்பு சாதம் பண்ணீடு.”
தங்கமணி: “தயிர் இல்லியே.”
ரங்கமணி: “இட்லி சாம்பார் பண்ணு.”
தங்கமணி: “அதெப்படிங்க? திடீல்னு சொன்னா இட்லி பண்ண முடியும்? மொத நாளே மாவு அரைச்சு வெச்சாதாங்க இட்லி பண்ண முடியும். இல்லேன்னா அரைச்ச மாவு சாயங்காலமே வாங்கிட்டு வந்திருக்கணும்.”
ரங்கமணி: “மேகீ நூடுல்ஸ் பண்ணீடு.”
தங்கமணி: “நூடுல்ஸ் ஒரு சாப்பாடுங்களா? வயிறு ரொம்பாதுங்களே.”
ரங்கமணி: “அப்பொ என்னதான் பண்ணப் போறே ராத்திரிக்கி சமையல்?”
தங்கமணி: “நீங்க என்ன சொல்லுறீங்களோ அதைப் பண்ணுறேங்க.”

ரங்கமணி: “*?*?*?*? (மனதுக்குள்: கஞ்சி வரதப்பா… கஞ்சியாவது வருமாப்பா?)”

G+ டொனால்ட் ராபர்ட் பகிர்ந்தது

கடவுள் ஒரு நாள் ஏதோ ஆசையில் ஒரு பாருக்குள் நுழைந்தாராம்.ஏகப்பட்ட வகைகள் இருக்கவும் விற்பனையாளர் இவர் கெட் அப் பார்த்து விட்டு “என்ன வேண்டும்?” என்றார்.

“நல்லதா ஏதாவது குடுப்பா” என்று சொல்ல ஒரு ஃபுல் எடுத்து தந்தார்.
ஐந்து நிமிடத்தில் முடித்து விட்டு அடுத்து என்றார்
இன்னொரு புல் தர அதையும் குடித்து விட்டு அடுத்து என்றார்

இதே போல பத்து முறை குடிக்க பார்டெண்டருக்கே கை வலித்து விட்டது.கடவுள் கொஞ்சமும் சலிக்காமல் அடுத்து என்றார்.பார்டெண்டருக்கு ஆச்சர்யம்,”இவ்ளோ அடிச்சும் கொஞ்சமும் உளரல,குரல் பிசிறாம அடுத்துங்கிறீங்களே,உங்களுக்கு மப்பு ஏறவே இல்லயா?”

கடவுள் பெருமிதமா,”நாந்தாம்ப்பா கடவுள் எனக்கு எப்படி மப்பு ஏறும்”னாரு

உடனே பார்டெண்டர்,”சரி சரி மப்பு ஓவராவே ஏறிடுச்சு போல.”

Courtesy: http://funnyworld-star.blogspot.com

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள்,
மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம்
அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும்
இருந்தார்,

மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல
தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது
சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே
கேட்டு விட்டான்!

நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக
நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடை
விடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..

சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன்,
ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ
கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி
என்று கேட்டான்!..

நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன்
என்று சொன்னான் நண்பன்!

மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து
மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன்
அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,

மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க
வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்,

மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன்
நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும்
அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக
அமர்ந்தான்,

ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை
தீட்டி கொண்டிருந்தான்!

Courtesy: http://rammalar.wordpress.com

ஆண்கள்நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,”இங்கு தன மனைவியுடன் சொர்க்கம்போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.”

ஒருவனைத்தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,”ஏனய்யா,உனக்குமட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?”

‘என் மனைவிமட்டும் சொர்க்கம் போனால் போதும்’

”ஏன்அப்படிச்சொல்கிறீர்கள்?”

‘என் மனைவிசொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல்தான் இருக்கும்.’

ஒரு கணவன்,மனைவி  ஐந்து நட்சத்திர ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஓர் அழகிய பெண் அந்தக் கணவனின் அருகில் வந்து”டார்லிங்!நாளை மறக்காமல் வந்து விடுங்கள்” என்று சொல்லி அவன் கன்னத்தில் தட்டிச் சென்றாள்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்குக் கடுங்கோபம் வந்தது. கணவனிடம் கேட்டாள்”யார் அந்த மேனா மினுக்கி?”
கணவன் சொன்னான்”அவள் என் சின்ன வீடு!”
மனைவிக்குக் கோபம் அதிகமானது.”இனி உங்களுடன் வாழ்வது கடினம்.நான் விவாக ரத்துக் கோரப்போகிறேன்”
கணவன்  அமைதியாகச் சொன்னான்”உன் இஷ்டம்.ஆனால் அதன் பின்,ஒவ்வொரு ஆண்டும் கோடையில் ஒரு மாதம் ஸ்விட்சர்லாந்தில் மகிழ்ச்சியாகக் கழிக்க முடியாது;BMW காரில் ஜாலியாக ஊர் சுற்ற முடியாது.க்ளப்பில் போய் பெருந் தொகைக்குச்  சீட்டு விளையாட முடியாது .விலை உயர்ந்த உடைகளை வாங்கிக் குவிக்க முடியாது”
மனைவி யோசித்தாள்.அப்போது அவர்கள் நண்பன் ஒருவன் ஒரு பெண்ணுடன் அவர்களைக் கடந்து,அவர்களைப் பார்க்காதது போல் சென்றான்.
மனைவி கேட்டாள்”கோபாலுடன் போவது யார் ?மனைவி இல்லையே?”
கணவன் சொன்னான்”அவனுடைய சின்ன வீடு!”
மனைவி சொன்னாள்”அவளை விட நம்ம சின்ன வீடு அழகுதான்!”
ஒரு தன்னினந் தின்னி,நர மாமிச உண்ணி(cannibal)  காட்டினுள்நடந்து சென்று கொண்டிருந்தான்.வழியில் மற்றொரு  அவன் இனத்தானால் நடத்தப்படும் ஒரு உணவு விடுதியைக் கண்டான் .
அவனுக்குப் பசியாக இருந்ததால் அங்கு சென்று அமர்ந்து உணவுப் பட்டியலட்டையைப் பார்த்தான்.அதில்—
1)சுற்றுலாப்பயணி—ரூ.500
2)வாட்டிய சமயப் பரப்பூழியர்—ரூ.750
3) வறுத்த புதியவை தேடுபவர்—ரூ.1000
4)வேக வைத்த அமெரிக்க அரசியல்வாதி—ரூ.1250
5)மசாலா நிரப்பிய இந்திய அரசியல்வாதி—ரூ.2500
 அவன்  பணியாளை அழைத்துக் கேட்டான்”ஏன் இந்திய அரசியல் வாதிக்கு இந்த விலை?”
அவன் சொன்னான்.”எப்பவாவது அவங்களைச் சுத்தம் பண்ணிப் பாத்திருக்கீங்களா?  ஒரே அழுக்கு,அசுத்தம், ஒரு நாள் முழுவதும் ஆகும்!”

போன சனிக்கிழமை என் பையன்
ஸ்கூல்ல Parents Meeting..

ஓவ்வொரு Parents Meeting-மே
ஒரு கண்டம் தான்..

ஸ்கூலுக்கு போன உடனே
எங்க பையனோட க்ளாஸ் மிஸ்ஸு
கண்ணுல சிக்கிட்டோம்..

உடனே அவங்களும் என் பையனோட
அருமை ( ?! )., பெருமைகளை (?! )
மூச்சு விடாம பேச ஆரம்பிச்சிட்டாங்க..

” உங்க பையனை என்னால Control
பண்ணவே முடியல சார்..! ”

” ஏன் மேடம்..?! என்ன ஆச்சி ”

” 1. க்ளாஸ்ல ஒழுங்கா ஒரு இடத்துல
உக்கார்றதே இல்ல.. அங்கே , இங்கே
தாவிட்டே இருக்கான்..

2. பக்கத்துல இருக்குற பசங்களை
க்ளாஸ் கவனிக்க விடாம சும்மா
தொண தொணன்னு பேசிட்டே இருக்கான்…

3. திடீர்னு எந்திரிச்சு ” டவுட் மிஸ்னு ”
Subject-க்கு சம்பந்தமே இல்லாம
எடக்கு மடக்கா கேள்வி கேக்கறான்..

4. மிரட்டினாலும் பயப்பட மாட்டேங்குறான்.!

5.அடிச்சாலும் அடங்க மாட்டேங்குறான்..!

நான் என்னதான் சார் பண்றது..?!! ”

” உஸ்ஸப்பா.. Same Complaint..! ”

” Same Complaint-ஆ..? என்ன சார்
சொல்றீங்க..?! ”

” டீச்சர் மாறிட்டாங்க.. ஆனா
Complaint மட்டும் மாறலைன்னு சொல்ல
வந்தேன்..! ”

” ஓ.. போன வருஷம் 3rd Std மிஸ்ஸும்
இதே தான் சொன்னாங்களா..?! ”

” ஹி., ஹி., ஹி… இல்லங்க மேடம்..
நான் படிக்கிறப்ப., எங்க க்ளாஸ் மிஸ்ஸும்
இதே Complaint தான் எங்கப்பாகிட்ட
சொல்லுவாங்க..! ”

” ??!?!?!!! ”
.

Courtesy: http://gokulathilsuriyan.blogspot.in

ஒருமுறை என்னுடைய நண்பரிடம் கேட்டேன் “உன்னுடைய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன?”அவன் சொன்னான், “பொறுப்புகளை பகிர்ந்து, ஒருவரையொருவர்  மதித்து வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் பிரச்சினையே இல்லை. “”புரியவில்லை” என்றேன்.

“என் வீட்டில், என் மனைவி சிறிய பிரச்சினைகள் மீது முடிவு செய்வாள், பெரிய விஷயங்களில் நான் முடிவெடுப்பேன்.  நாங்கள் ஒருவருடைய முடிவுகளில் மற்றவர் தலையிட மாட்டோம்.”
மீண்டும் “புரியவில்லை” என்றேன்.”நாம் என்ன கார் வாங்க வேண்டும், எந்த சோபா, துணி, வீடு, வேலைக்காரி, டிவி, மாத செலவுகள் இது போன்ற சிறிய பிரச்சினைகளை என் மனைவி முடிவு செய்வாள். நான் அதற்கு ஒப்புக்கொள்வேன்.”
 “உன்னுடைய பங்கு என்ன?” என்றேன்.
“பெரிய முடிவுகளை மட்டுமே நான் எடுப்பேன். சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறவேண்டும், அமெரிக்கா ஈரான்மீது தாக்குதல் நடத்த வேண்டும், அன்னா ஹசாரே உண்ணா விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் இது போன்ற பெரிய முடிவுகளை மட்டுமே நான் எடுப்பேன்.இதற்கு என் மனைவி எப்பொழுதும் இதற்கு மறுத்துப் பேசுவதே இல்லை….!!!!!!”

ஆபீசுல தூங்குபவரா நீங்க.     அப்பிடி தூங்கி மேலதிகாரிக்கிட்ட மாட்டி  அடிக்கடி டோஸ் வாங்குபவரா? உங்களுக்கான டிப்ஸ் இதோ…,
இதுப்போல செய்தால் மேலதிகாரிங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க வேணாம் பாருங்க. ரொம்ப யோசிச்சு யாரோ ஒரு புத்திசாலி இப்படிலாம் ஐடியா கண்டுபிடிச்சிருக்காரு பாருங்க.




டிஸ்கி: நம்ம பிளாக்கர்ஸ் யாரும் ஆபீசுல தூங்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அம்புட்டு நல்ல பசங்க நாங்கன்னு காலரை தூக்கிவிட வேணாம்… பதிவை ரெடி பண்ணாவௌம், போஸ்ட் போடவும், திரட்டிகளில் இணைக்கவும், கமெண்டுக்கு ரிப்ளை பண்ணவும், மொய் கமெண்ட் வைக்கவுமே சரியா இருக்கும்போது எங்கிருந்து தூங்குவது?! என்ன நான் சொல்றது சரிதானே?!

Courtesy: http://rajiyinkanavugal.blogspot.com

என் டேபிள் மேல ஒரு Bag
இருந்தது.. அதை பார்த்த என் Wife…

” என்னங்க இது Bag..? ”

” அதெல்லாம் மாஸ்டர் பிளான்..
சொன்னா உனக்கு புரியாது..! ”

” மாஸ்டர் பிளானா..?! அப்ப அது
நீங்க போட்டதா இருக்காதே..
கரெக்ட்டா..?!! ”

” நீ ஒரு ஜீனியஸ்கிட்ட பேசிட்டு
இருக்கேன்னு அடிக்கடி மறந்துடற..! ”

” ஹி.,ஹி., முதல்ல உங்க ப்ளான்
என்னான்னு சொல்லுங்க.. அப்புறம்
நீங்க ஜீனியஸா இல்ல ஜீனியஸ்க்கு
எதிர்வீட்டுக்காரரான்னு பார்க்கலாம்..!  ”

” என் Friend ரவியோட பொண்ணு
‘ ஹோலி கிராஸ்ல ‘ 2nd Std
படிக்கிறால்ல..”

” ஆமாம்..! ”

” அவ வீட்ல கூட இங்கிலீஷ்ல தான்
பேசறாளாம்.. ”

” சரி.. அதுல என்ன பிரச்னை..? ”

” நம்ம ஆளுக்கு தான் இங்கிலீஷ்
சரளமா பேச வராதே.. ”

” அட.. என்னமோ நீங்க தினமும்
இங்கிலீஷ்ல எட்டு பாட்டு எழுதற
மாதிரி பேசறீங்க.. இங்கேயும் அதே
கதை தானே..?! ”

” ஹி., ஹி., ஹி.. இருக்கலாம்.. ஆனா
இன்னும் ஒரு மாசம் கழிச்சி இப்படி
எல்லாம் நீ எங்களை கிண்டல்
பண்ண முடியாது.. ”

” ஏன் ரெண்டு பேரும் எதாவது
ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்
போக போறீங்களா..?! ”

” சே., சே., அதெல்லாம் கஷ்டம்..
நாங்க வேற ஒரு ஈஸியான
மாஸ்டர் ப்ளான் வெச்சி இருக்கோம்ல.. ”

” அட அது என்னான்னு தான்
சொல்லுங்களேன்.. ”

” அந்த Bag-ஐ திறந்து பாரு..
உனக்கே புரியும்..! ”

பையை திறந்து பார்த்த
என் Wife ஆச்சரியத்தோட…

” என்ன இது… எல்லாம் இங்கிலீஷ் பட
DVD-யா இருக்கு..! ”

” ம்ம்.. தினமும் ஒரு இங்கிலீஷ் படம்
பாக்கறது., ஒரு மாசத்துல சரளமா
இங்கிலீஷ் பேசறது.. இதான் எங்க ப்ளான்..!!
எப்பூடி..?! ”

” இந்த மாதிரி எத்தனை படம் பார்த்தாலும்
நீங்க இங்கிலீஷ்ல பேசவே முடியாது..! ”

” ஏன் முடியாது.? ஏன் முடியாது.?
ஏன் முடியாது.? ”

” ஏன்னா.. இதெல்லாம் தமிழ்ல டப்பிங்
பண்ணின இங்கிலீஷ் படங்க..! ”

” Oh My God..! அவ்வ்வ்வ்வ்..!! ”

( யானைக்கும் அடி சறுக்கும்னு
சொல்றது எம்புட்டு கரெக்ட்டு..! )

Courtesy: http://gokulathilsuriyan.blogspot.com

Mr.பிரபாகரன்.. இவர் தான்
எங்க +1 Maths மாஸ்டர்..

எங்களுக்கு அவர் Maths மாஸ்டரா
வந்ததுக்கு இந்த நாடே அவருக்கு
கடமைப்பட்டு இருக்கு..

( இல்லன்னா.. நாங்க Maths-ல
Centum எடுத்து., அதனால Cut-Off-ல
200/200 வந்து., டாக்டர் சீட் கிடைச்சி.,
MBBS படிச்சி, MD முடிச்சி., FRCS
படிக்க லண்டன் போயி, அப்புறம்
வெளி நாட்லயே செட்டில் ஆகி……

உஸ்ஸப்பா.. சொல்லும் போதே
இப்படி மூச்சு வாங்குதே..!! )

ஒரு தடவை கிளாஸ்ல அவர்
” பிதோகரஸ் தியரம் ” எடுத்துட்டு
இருந்தாரு..

அப்ப கிளாஸ்ல இருக்குற மொத்த
36 பேர்ல 34 பயலுக மனசுக்குள்ள
அந்த ” பிதோகரஸ்சை ” கண்டபடி
திட்டிட்டு இருந்தானுக..!

ம்ம்…அன்னிக்கு ” பிதோகரஸ்சை ”
திட்டாத அந்த ரெண்டு நல்ல உள்ளங்கள்..
நானும்., என் Friend ஆனந்தும்..

( அரை தூக்கத்துல இருக்கும் போது
எங்களால யாரையும் திட்ட முடியாது.
ஹி., ஹி., ஹி.! )

அப்ப திடீர்னு Mr.பிரபாகரன்
என் பக்கத்துல இருந்த ஆனந்த்-ஐ
எழுப்பி….

Board-ல வரைஞ்சி வெச்சிருந்த
ஒரு முக்கோணத்தை காட்டி..

” இதுல ” C “-யோட Value-ஐ
எப்படி கண்டுபிடிப்ப..? அந்த
Formula சொல்லு..! ”

அவன் திரு திருன்னு முழிச்சான்..

” என்னடா.. முழிக்கிற..? ”

” சார் அது வந்து.. ”

” சரி ஒரு பேச்சுக்கு இந்த முக்கோணத்துல
A = 3 , B = 4-னு வெச்சுக்க… அப்ப ” C “-ன்
Value என்ன..? ”

அவன் ” டக்னு ” Answer சொல்லிட்டான்..

” C = 7 சார்..! ”

” என்னாது 7-ஆ..? ஏழு எப்படிடா வரும்.?
ஏழு எப்படி வரும்.? கிளாஸ்ல ஒழுங்கா
கவனிச்சா தானேன்னு ” ஆனந்த்-ஐ
அடி பின்னி எடுத்துட்டாரு..

( நல்லவேளை நான் எஸ்கேப்..! )

கிளாஸ் முடிச்சப்புறம்..
ஆனந்த் என்கிட்ட ரொம்ப பீல்
பண்ணி சொன்னான்..

” ஏன்டா.. எனக்கொரு நியாயம்..
அவருக்கு ஒரு நியாயமாடா..? ”

” என்றா சொல்ற..? ”

” பின்ன., அவரு மட்டும் A = 3,
B=4 ன்னு ஒரு பேச்சுக்கு சொல்லலாம்..
நான் மட்டும் ” C = 7 “-னு
ஒரு பேச்சுக்கு சொல்ல கூடாதா..?! ”

” அட ஆமா.. இது கூட லாஜிக்கா தானே
இருக்கு..?!! ”

( என் பக்கத்துல உக்காந்து இருக்கறதால
இந்த பையனுக்கு தான் எவ்ளோ அறிவு..?!! )

Courtesy:  http://gokulathilsuriyan.blogspot.com

நேத்து மதியம் 3 மணிக்கு நண்பர் கிட்ட இருந்து போன்..

” ஹலோ., என்ன பண்ணிட்டு
இருக்க..?! ”

” இப்பத்தான் லஞ்ச் முடிச்சிட்டு
வர்றேன்.! ”

” இப்பத்தான் சமைச்சிட்டு வர்றேன்னு
சொல்லு..! ”

” நோ.,நோ., சாப்பிட்டுட்டு வர்றேன்..! ”

” சமைக்காத மாதிரியே பேசறான்யா..!
ஆமா.. லஞ்சுக்கு என்ன ஸ்பெஷல்..? ”

” வஞ்சரம் மீன் குழம்பு..! ”

” சேலத்துல வஞ்சரம் மீனா..?
ஆச்சரியமா இருக்கே..!!! ”

” இது மேட்டூர் Dam வஞ்சரம்..! ”

” என்னாது வஞ்சரம் மீன் Dam-லயா.???!

” ஏன் இருக்காதா..? ”

” ம்ஹூம்… அது கடல் மீன்யா
Dam-ல எல்லாம் வளராது..! ”

” ஆஹா ஏமாத்திட்டானுகளா..?!! ”

” இதுக்குதான் மீன் வாங்கும்போதே
ஒரிஜினல் வஞ்சரமான்னு செக் பண்ணி
வாங்கணும்கறது..! ”

” அது எப்படி செக் பண்றது..?!! ”

” அப்படி கேளு…”

” சரி சொல்லுங்க..! ”

” நல்லா நோட் பண்ணிக்க.. இனிமே
எப்ப மீன் வாங்கினாலும் முதல்ல
அதை ஒரு கையில தூக்கி…”

” ம்ம்…! ”

” அது மூஞ்சிக்கு நேரா கேளு..

 What is Your Name..? “

” ??!!?!!?!?!?!?! ”

மொக்கையான இடம்: http://gokulathilsuriyan.blogspot.com

“என்னங்க?”

“சொல்லு…” என்றேன் டிவியில் இருந்து கண்ணை எடுக்காமலே

தான் பேசுவதை நான் காதில் வாங்கவில்லை என்பதை உணர்ந்த நம்ம புத்திசாலி தங்கமணி ரிமோட் எடுத்து

டிவிய ஆப் பண்ணினாங்க

“ஐயோ… ஏய் ஏய்… ரிமோட் குடு தங்கம்… ” என பதறினேன் 

“வீட்டுல இருக்கிற கொஞ்ச நேரமும் இந்த டிவிய கட்டிட்டு அழறதே வேலையா போச்சு… நான் சொல்றத

காது குடுத்து கேளுங்க அப்புறம் தர்றேன்…”

“காது மூக்கு எல்லாம் குடுக்கறேன்… மொதல்ல ரிமோட் குடு”

“நான் சொல்றதுக்கு ஒரு நிமிஷம் தான் ஆகும்… அப்புறம் நீங்க தாராளமா பாருங்க… எங்க…” என தங்கமணி

ஏதோ சொல்ல வர அதற்குள் இடைமறித்த நான் 

“தங்கம் டென்ஷன் பண்ணாதம்மா… இந்த நடிகை பேட்டி முதல் வாட்டி போட்டப்பவே மிஸ்

பண்ணிட்டேன்னு பீல் பண்ணிட்டு இருந்தேன்… கடவுளா பாத்து அந்த சேனல்காரனுக்கு தோண வெச்சு

மறுபடி போட்டுருக்கான்… ரிமோட் குடு” என நான் பதட்டப்பட தங்கமணி பூலான்தேவி மாதிரி முறைச்சாங்க

(பூலான்தேவி மொறைச்சு நீ எப்ப பாத்தேன்னு யாராச்சும் கேட்டீங்கன்னா உங்கள சாம்பல்

பள்ளதாக்குக்கு அனுப்பிடுவேன்…:)))))

இதுக்கு மேல பேசினா வம்பாய்டும்னு “சரி சொல்லு… என்ன விசயம்?” னேன்.

“எங்க சித்தப்பா பொண்ணு சுசிலா இருக்கால்ல..”

“ம்… இருக்கா இருக்கா… அவளுக்கென்ன இப்போ…” என்றேன் ரிமோட்டை ஒரு பார்வை பார்த்து கொண்டே

“அவ வீட்டுகாரருக்கு கால்ல அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்காராம்… எங்கம்மா போன் பண்ணினாங்க…

போய் பாத்துட்டு வந்துடலாம்”

“இப்பவா…?” என பயந்து போய் கேட்டேன், எனக்கு அந்த நடிகை பேட்டி மிஸ் ஆய்டுமேனு கவலை

“இல்ல… இப்ப நேரமாய்டுச்சு… நாளைக்கி ஒரு ஒன் ஹவர் பர்மிசன் போட்டுட்டு வாங்க…

போயிட்டு வந்துடலாம்” “நாளைக்கி போறதுக்கு இப்பவே என்ன… மொதல்ல ரிமோட் குடு”

என டென்ஷன் ஆனேன். “நேரத்துல வரீங்க தானே, அதை சொல்லுங்க மொதல்ல”

“சரி வரேம்மா… ரிமோட் குடு” என்றேன் பொறுமை இழந்தவனாய்.

“ச்சே… ’16 வயதினிலே கமல் ஆத்தா வெயும் காசு குடு’ டயலாக் மாதிரி ரிமோட் குடு ரிமோட் குடுனு….

சகிக்கல” என்றவாறே ரிமோட்டை குடுத்தார் தங்கமணி

தங்கமணி சொல்வது என்காதில் விழுந்தால் தானே சண்டை எல்லாம்… ரிமோட் கையில் கிடைத்ததும்

டிவியில் முழ்கினேன்.

*************************

ஒருவழியா நடிகை பேட்டி முடிஞ்சு என் சுயநினைவுக்கு வந்தேன்.

அதுக்கே காத்திருந்த மாதிரி தங்கமணி என் பக்கத்துல வந்து உக்காந்தாங்க

“ஏங்க….?” என தங்கமணி அன்பாய் ஒரு பார்வை பார்க்க

“என்ன தங்கம்?” என திகிலாய் விழித்தேன். 

“அது… உங்களுக்கு ஒரு சவால் தர போறேன்…” என தங்கமணி சிரித்து கொண்டே கூற

“அதான் உங்கப்பா நாலு வருஷம் முன்னாடியே குடுத்துட்டாரே… கன்னிகாதானமா” என முணுமுணுத்த

நான், தங்கமணி முறைப்பதை பார்த்ததும் சமாளிப்பாக “அது…. உன்னை போல ஒரு புத்திசாலிய

சமாளிக்க வேண்டிய பொறுப்பை குடுத்துட்டாறேனு சொல்ல வந்தேன்… ” என்றேன் 

“சரி… என்னை நல்லா பாருங்க…” என தங்கமணி அன்போடு கூற

“ஐயயோ… என்னாச்சு தங்கம்…” என பதறினேன்.

“என் முகத்துல ஒரு மாற்றம் இருக்கு, என்னனு கண்டுபிடிங்க பாக்கலாம்…” என சவால் பார்வை

பார்த்தார் தங்கமணி

“அடக்கடவுளே… தங்கம்… வேண்டாம் இந்த சோதனை… இதுக்கு பதிலா நீ டிவில பாத்து புதுசா

எதாச்சும் சமைப்பியே…அது வேணும்னாலும் செஞ்சு குடு… சத்தமில்லாம சாப்பிடறேன்…”

என டெர்ரர் ஆனேன்.

“இங்க பாருங்க… நீங்க சொல்லித்தான் ஆகணும்… அது பெரிய மாற்றம் ஈஸியா கண்டுபிடிக்கலாம்…”

என்றார் தங்கமணி தீர்மானம் போல்

“ஐயோ… யார் மூஞ்சில முழிச்சேன் இன்னிக்கி…”என முதலில் விழித்த நான் பிறகு “அடடா…

இவ மூஞ்சில தான் முழிச்சேனா…. ஹும்… ” என முணுமுணுத்தேன்,  “சரி சரி…சொல்றேன்”

என வசீகரன் சிட்டி ரோபோ தயாரிக்க செஞ்ச ஆராய்ச்சி ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பித்தேன்.


என்ன இவ்ளோ யோசனை…சட்டுன்னு சொல்லுங்க… என்ன மாற்றம்…” என தங்கமணி அவசரப்பட
“இரும்மா… தப்பா சொன்னா பின் விளைவுகள் எனக்கில்ல தெரியும்” என டென்ஷன் ஆனேன்.
“சரி சரி…சீக்கரம்…” என்றார் தங்க்ஸ்”ம்… ஆ… கண்டுபிடிச்சுட்டேன்… ” என்றேன்.
பல்பு கண்டுபிடிச்சப்ப தாமஸ் ஆல்வா எடிசன் கூட இவ்ளோ சந்தோசப்பட்டு இருக்க மாட்டார்னா
பாத்துக்கோங்களேன்” சொல்லுங்க சொல்லுங்க… ” என எக்ஸ்சைட் ஆனார் தங்கமணியும்
“அது… நீ கம்மல் போட்டு இருக்க” என  நான் பெருமையாய் கூறவும்”பின்ன இதுக்கு முன்ன
கமண்டலமா போட்டிருதேன்” என தங்கமணி முறைக்க

“இல்லம்மா… வேற மாதிரி தானே போட்டு இருப்ப” என தப்பிக்க பார்த்தேன்.

“அதெல்லாம் இல்ல… நான் சொன்ன மாற்றம் வேற…கண்டுபிடிங்க” என்றார் தங்கமணி விடுவென என

“அதில்லையா… ஹும்… வேற என்ன…?” என மீண்டும் வசீகரன் ஆனேன் நான்.

கொஞ்சம் நேரம் யோசித்த பின்  “அடப்பாவமே…உன்னை பொண்ணு பாத்த அன்னைக்கு கூட இவ்ளோ

டீப்பா பாக்கலையே தங்கம்…எதாச்சும் க்ளூ குடேன் ப்ளீஸ்…” என தங்கமணியை பாவமாய் பார்க்க

ஒரு நிமிஷம் மௌனமாய் யோசித்த தங்கமணி “சரி விடுங்க… உங்களுக்கு இதெல்லாம் வராது” என எழுந்து

போய் விட்டார்

“அப்பாடா தலைக்கு வந்தது தலை பாகையோடு போச்சுனு சொல்றதை இன்னிக்கி தான் உணர்றேன்” னு ரொம்ப

ஹாப்பி ஆனேன், பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல் (ஹா ஹா ஹா…!!!)

கொஞ்ச நேரம் கழிச்சு உள் அறையில் இருந்து வந்த தங்கமணி “ஏங்க… கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு ப்ரோக்ராம் பாத்தீங்களே…”என கேள்வியை முடிக்கும் முன்

“ஆமா…நடிகை ஜில்பா ரொட்டி ப்ரோக்ராம் தானே…  என்ன அழகு இல்லையா தங்கம்” என முகம் எல்லாம்

பூரிக்க கேட்டேன் நான். பல்லை கடித்து கோபத்தை அடக்கி கொண்ட நம்ம தங்கமணி “ஆமா ஆமா…

அவங்க போட்டு இருந்த கம்மல் நல்லா இருந்தது இல்லிங்க” என வலை விரித்தார்

“ஆமாம் தங்கம்… அந்த ஸ்டார்க்கு ஏத்த ஸ்டார் டிசைன்ல சூப்பர் கம்மல்” என தங்கமணி எதிர்பார்த்தது

போல் வலையில் விழுந்தேன் “அப்புறம் அவங்க டிரஸ் என்ன கலர் அது?” என தங்கமணி குழியை ஆழமாய்

தோண்ட தன் அபிமான நடிகை பற்றி தங்கமணி ஆர்வமாய் பேசியதும் உற்சாகமான நான்

“என்ன தங்கம் நீ? இது கூட கவனிக்கலையா… நல்ல டார்க் மெரூன் கலர் டாப்ஸ்… ப்ளாக் பேன்ட் …

நல்ல காம்பினேசன் இல்ல தங்கம்”

“ஆமா ஆமா…சூப்பர்… அது சரி… அவங்க பொட்டு வெச்சு இருந்தாங்களா என்ன?”

“என்ன தங்கம் நீ? உனக்கு சுத்தமா கவனிக்கற புத்தியே போய்டுச்சு போ… கம்மல்க்கு மேட்ச்ஆ ஸ்டார்

டிசைன்ல டிரஸ்க்கு மேட்ச்ஆ மெரூன் கலர்ல எவ்ளோ அழகா ஒரு பொட்டு…நடுல கூட ஒரு ஸ்டோன்

கூட இருந்ததே, நீ பாக்கலையா” என நீட்டி முழக்கினேன்.

அடுத்த கணம் தங்கமணி “நான் போறேன்..எங்க அம்மா வீட்டுக்கே போறேன்” என கண்ணை கசக்க,

அப்போது தான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த நான் “ஐயயோ…என்னாச்சு தங்கம்” என பதற

“யாரோ ஒரு நடிகை… அதுவும் கன்றாவியா நடிக்கற ஒரு ஜென்மம்… அந்த சிறுக்கி… அவ கம்மல்,

டிரஸ் கலர், பொட்டு டிசைன் நடுல ஸ்டோன் எல்லாம் ஞாபகம் இருக்கு ப்ரோக்ராம் பாத்து

ஒரு மணி நேரம் கழிச்சு கூட… உங்கள நம்பி கழுத்தை நீட்டினவ நான்… எப்பவும் வட்ட பொட்டு

வெக்கறவ இன்னிக்கி உங்களுக்கு பிடிக்கும்னு நீட்ட பொட்டு வெச்சுட்டு வந்து என்ன வித்தியாசம்னு

ஆசையா கேட்டா… ஒரு மணிநேரம் ஆராய்ச்சி செஞ்சும் தெரில இல்ல…

நான் போறேன்… எங்க அம்மா வீட்டுக்கே போறேன்” என தங்கமணி கண்ணை கசக்கி கொண்டே

உள்அறைக்குள் சென்றார்

நான் என்ன செஞ்சேன்னு சொல்லி தான் தெரியணுமா… வழக்கம் போல “சொந்த செலவுல சூனியம்

வெச்சுக்கிட்டனே”னு பீலிங்ல இருக்கேன். ஹையோ ஹையோ…:)))

“குழந்தை பாவம்….”

“அதை ஏண்டி திட்டுற…”
உனக்கு கொஞ்சமாவது புள்ளைய வளர்க்க தெரியுதா?  என்று எங்க வீட்டு ப.சிதம்பரம், அதாங்க.. எங்க வீட்டு home minister என் பொஞ்சாதி.. அவளை தான் இப்படி ஒரு கேள்வி கேட்டு திட்டினேன்.  பின்ன என்னங்க…எப்ப பாத்தாலும்   ஜெயலலிதாவிடம்  அடிவாங்கி கூட்டணியை விட்டு வெளியே  தலைதெறிக்க ஓடி வர்ற  வைகோ,   விஜயகாந்த்  மாதிரி, நான் பெத்தெடுத்த   பயபுள்ள,  அவன் அம்மாகிட்ட அடிவாங்கிட்டு  வீல்ல்ல்ல்ல்…னு கத்திகிட்டே  வீட்டுக்கு வெளியே ஓடி வந்தாங்க…  எனக்கு உயிரே  போச்சுங்க..   என்ன இருந்தாலும் நான் பெத்தெடுத்த புள்ள இப்படி அழும்போது எனக்கு செம கோவம் வந்துடுங்க… இன்னைக்கு எனக்கு தாங்கமுடியாம தான் இப்படி கேட்டுட்டேன்…
வழக்கம் போல நாம கோவமா கேள்வி கேட்டா பிரதமர் ஆயிடுவா.. ஒரு பதில் கூட வராது.. இத்தனை தடவை  கலைஞரா அமைதியா இருந்த நான் இந்த தடவ அன்ன ஹசாரே மாதிரி திரும்ப திரும்ப கேட்டேன்ங்க… ஒரு பதில் தாங்க சொன்னா.. எனக்கு பெரிய தன்மான பிரச்னையாகி போச்சு..
“உங்க புள்ளைய ஒரு மூணு மணிநேரம் சமாளிச்சி பாருங்க….” அப்போ தெரயுமுன்னு” சொன்னா பாருங்க…
அட நம்ம ஆபீஸ்ல நாம எத்தன பயபுள்ளைங்கள சமாளிக்கிறோம்… இந்த மூணு வயசு புள்ளைய சமாளிக்க மாட்டோமான்னு”…. அவளை கூட்டிட்டு கிளம்பிட்டேங்க.. மாலை ஆறு மணி இருக்கும்..
என் பொண்ணுக்கு பைக் னா உசுருங்க… அவளுக்கு அழகா டிரஸ், தொப்பி, செருப்பு எல்லாம் போட்டுவிட்டு, முன்னாடி உக்கார வச்சிக்கிட்டு ஸ்டார்ட் பண்ணிட்டு கேட்டேன்.. “பாப்பா எங்க போகலாம்..”
 “பீச்க்கு போலாமா?”.. என்று என்னை பார்த்து சிரித்தாள்.  ஓகேனு சொல்லி சிரித்தேன் என்னோட பைக் பீச் நோக்கி பறந்தது….
சிக்னலில் ரைட் எடுக்கணும்.. ரைட்ல இன்டிகேடர் போட்டுட்டு திரும்பி போகும்போது.. பின்னாடி வந்த ஆடோகாரன் .. சாவு கிராக்கி… left இன்டிகேடர் போட்டுட்டு right ல போறான் பாருனு என்ன திட்டிட்டான்.. எனக்கு கோவம் தலைகேறியது… என்னடானு  பாத்தா என் பயபுள்ள இன்டிகேடர் பட்டன்ல கை வச்சிக்கிட்டு.. டிக்…டிக்..னு விளையாடிகிட்டு இருக்கு…
கண்ணா அத தொட கூடாது.. ஆட்டோ மாமா, அப்பாவ எப்படி கேவலமா திட்டிட்டு போறாரு பாருனு .. செண்டிமெண்டா பேசினேன்.. நம்ம பொண்ணாச்சேசொன்னதும் புரிஞ்சிக்கிட்டு மண்டைய ஆட்டுனா. அப்பா fast ஆ போங்கப்பா என்றாள்… நம்ம சொன்னத அவ கேட்டா.. அவ சொல்றத நம்ம கேக்கலாமேனு.. வண்டி அறுபதை தொட்டு பறந்தது.. அய்யா..ஜாலி…..னு என் பொண்ணு என்னை பெருமையா பாத்தான்… இப்பவும் நான் என் பொண்டாட்டிய திட்டிட்டே போனேன்.. புள்ளைய வளர்க்க தெரியுதா அவளுக்கு…
அவளை நினைத்ததும் அறுபது எழுபதானது…அடுத்த நொடி..அப்படியே அவள் தொப்பி பறந்து என் முகத்தில் ஒட்டி கொண்டது… எனக்கு ஒன்னும் தெரியாமல்.. மெதுவாக பிரேக் போட்டு…நான் நிறுத்தும்முன்பே ஒரு “டமார்” சத்தத்துடன் நின்றது… முன்னே ஸ்விப்ட் கார் லைட் காலி… உள்ளே இருந்து ஒரு ஆள் என்னிடம் பேசும்முன்பே 500 ருபாய் நோட் ரெண்டை எடுத்து நான் நீட்ட.. மனிதர் என் நிலை உணர்ந்து வண்டியை எடுத்தார்… அங்கிருந்து கிளம்பிவிடலாம்னு வண்டிய எடுத்து கொஞ்ச தூரம் போன பிறகு.. என் புள்ள அழ ஆரம்பித்தது… என்ன என்று கொஞ்சம் கோபமுடன் நான் கேட்க.. என் தொப்பி வேணும்ம்ம்ம்ம்ம்ம்….ஒரே கத்தல்.. அவ தொப்பியை காணோம்… சரிடா செல்லம் வாங்கிக்கலாம்..புதுசா… இப்படி ஏதோ சொல்லி சமாளிச்சு.. அவ வாயை மூடினேன்..
பெசன்ட் நகர் பீச் வந்ததும்.. ஒரு சூப்பர் ஆன்டி எதிரே வரவும்.. அப்பா அது யாருன்னு கேட்டா. நான் என் மனைவி பக்கத்தில் இல்லாததால் “உங்க சித்தி”டா  செல்லம்னு சொல்ல, அவன் இல்லப்பா… அது எங்க மிஸ் என்றாள். இல்லடா சித்தி தான்டா என்றேன்.. உடனே என் கையை விட்டு விலகி அந்த ஆன்டி அருகே ஓடினா. நான் உடனே அவளை இழுக்க ஒடும்முன்,   “நீங்க எனக்கு மிஸ்ஆ? .. இல்ல சித்தியா?” னு கேட்க.. அவங்க “ஐ ஆம் யுவர் மிஸ் ஒன்லி”னு சொல்லிவிட்டு என்னை பார்த்து முறைத்துவிட்டு சென்றார்.  “அப்பா.. அவங்க எங்க ஸ்கூல் மிஸ், உனக்கு தெரியாதா?”  என்றானே பார்க்கலாம்..” எனக்கு தலை சுற்றி லேசாக மயக்கம் வந்தது.. பயபுள்ளைக்கோ வாயெல்லாம் பல்..
மணி எட்டு. மூன்று மணி நேர சவாலில் இன்னும் ஒரு மணி நேரம் பாக்கி இருந்தது.. இதுக்கு மேல நமக்கு தாங்காதுடா மவனேன்னு.. அவளை தூக்கி வண்டில போட்டுட்டு… வீட்டை நோக்கி பறந்தேன்… வாசலிலே என் குலதெய்வம் நாங்கள் வரும் அழகை பார்த்தவாரே.. ஏங்க… இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு என்றாள்.. நானோ.. நம்ம பொண்ணு ரொம்ப சமத்துடி…ரெண்டு மணி நேரம் நான் அப்படி பாத்துகிட்டேன்.. போடி உள்ளே..என்றேன்..
எங்கங்க தொப்பிய காணோம், ஒரு செருப்ப காணோம்… ஏங்க இப்படி பொறுப்பு இல்லாம இருக்கீங்க என்றாள்… இதை எல்லாம் பாத்துகிட்டு இருந்த பயபுள்ள ஒன்னு சொன்னுச்சு பாருங்க….
“அம்மா…. அப்பாவ ஆட்டோமாமா, எங்க மிஸ் எல்லோரும் திட்டிட்டாங்க..”,  “நீயும் திட்டாதேம்மா” … “அப்பா பாவம்”
சொந்த சோகத்தை புலம்பியவர் : http://sathish-chandran.blogspot.com/
ஒரு பெண் தனியாக கோல்ப் விளையாடி கொண்டு இருந்தாள். அவள் அடித்த பந்து அருகில் இருக்கும் புதருக்குள் பொய் விழுந்தது. அங்கு அவள் ஒரு தவளை வலையில் சிக்கி இருப்பதை கண்டாள்.  இவளை பார்த்ததும் அந்த தவளை “என்னை நீங்கள் இந்த வலையிலிருந்து விடுவித்தால், நான் உங்களுக்கு மூன்றுஆசைகளை நிறைவேற்றி தருவேன்” என்று சொன்னது. அந்த பெண் அந்த தவளையை வலையிலிருந்து விடுவித்தாள்.
தன் ஆசைகளை சொல்ல அந்த பெண் தயாரான போது, அந்த தவளை குறுக்கிட்டு “ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அது போல பத்து மடங்கு உன் கணவருக்கும் கிடைக்கும். இப்போது சொல்லுங்கள் என்றது.
சரி என்ற பெண் “முதல் ஆசையாக நான் உலகிலே மிக அழகான பெண் ஆக வேண்டும்” என்று கேட்டாள்.  தவளை “நன்றாக யோசித்து விட்டாயா?உன் கணவனும் உலகிலே மிக சிறந்த ஆணழகனாக இருப்பான். எல்லா பெண்களும் அவனை கண்டது மயங்கி அவனிடம் செல்வர். இது பரவாயில்லையா?” என்று கேட்டது. அவளும் சம்மதிக்கவே, அப்படியே நடந்தது.
இரண்டாவது ஆசையாக “நான் உலகிலே பணக்கார பெண் ஆக வேண்டும்” என்று கேட்டாள். தவளை “தருகிறேன். ஆனால் உன் கணவன் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனாக இருப்பான். சம்மதம் தானே” என்று கேட்டு அந்த ஆசையையும் நிறைவேற்றி தந்தது.
மூன்றாவது ஆசையாக ‘எனக்கு சிறிய அளவிலே ஹார்ட் அட்டாக் வர வேண்டும்’ என்று கேட்டாள்.
இந்த கதையின் நீதி என்ன என்றால் “பெண்களை சாதாரணமாக நினைக்காதிர்கள். எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு”
பெண் வாசகர்களுக்கு – கதை இங்கே முடிந்து விட்டது. தயவு செய்து அடுத்த இணைய பக்கத்திற்கு செல்லுங்கள்.
ஆண் வாசகர்களே – நீங்கள் தொடருங்கள்.
கணவனுக்கு அந்த பெண்ணுக்கு வந்ததை போன்று பத்து மடங்கு குறைவாக ஹார்ட் அட்டாக் வந்தது.

இந்த கதையின் நீதி என்ன என்றால் “பெண்கள் தங்களை புத்தி சாலியாக நினைத்து கொள்வார்கள் ஆனால் அப்படி இல்லை என்பது அவர்களுக்கு தெரியாது”. அவர்களை அப்படியே விட்டு விடுங்கள்

பின்குறிப்பு: நீங்கள் ஒரு பெண் வாசகராக இருந்து இன்னமும் இதை வாசித்து கொண்டிருந்தால், ஆண்கள் சொல்வதை கேட்க பழகுங்கள். 🙂

கடும் கோபத்தில் அந்த முதலாளி தனது ஊழியர்களிடம் கத்தினார். ‘நான்தான் இங்கு முதலாளி. நீங்கள் ஒன்றுமே இல்லை.
வெறும் பூஜ்யம். புரிகிறதா! இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார்?’

ஊழியர்கள் அமைதியாகப் பதில் அளித்தார்கள்: ‘… பூஜ்யம்!’

‘அப்படியானால் நான் யார்?’ முதலாளியின் அடுத்த கேள்வி.
ஊழியர்கள் மீண்டும் அமைதியாக: ‘பூஜ்யத்தின் முதலாளி’!

நீதி உங்களுக்குக் கீழ் இருப்பவர்களை மதிப்பானவர்களாக நியமித்து, மதிப்பானவர்கள் மதிப்பவராக உங்களை நீங்கள் தகுதிப் படுத்திக்கொள்ளுங்கள்!

பெண்கள்  சில வேலைகளை  முறையாக  செய்வார்கள்  என்பதை விளக்க  ஒரு ஆசிரியர் சொன்ன கதை .

அவர் ஒரு கிறிஸ்தவர்  அவரது மனைவி  பிராமண   வகுப்பை சார்ந்தவர் . அவங்க வீட்டுக்கு  யாரவது சுமங்கலி வந்தால்  அவர்கள் விடை பெரும் பொழுது  அவரது மனைவி  ஒரு தட்டில்  தேங்காய்  100  ரூபாய்  ஒரு பிளவுஸ்  துணி  வைத்து  குங்குமம்  இட செய்து  வழி அனுப்புவது வழக்கம் .

இதை கவனித்த மனதில் ஏற்றி கொண்ட நம்ம  ஆசிரியர் .  அவர் மனைவி இல்லாத ஒரு நாள்  அவரது தங்கை வர  அவர்க்கு சாப்பாடு போட்டு   அந்த அம்மா கிளம்பும்  போது   ஒரு தட்டில் தேங்காய் வைத்து  100  ரூபாய் வைத்து   பிரோ வை திறந்து  மனைவி  வரிசையாக அடுக்கி வைத்து இருந்த பிளவுஸ்  பிட்டில் விலை  உயர்ந்த ஒன்றை வைத்து  அவரது தங்கையிடம்  கொடுக்க  அந்த அம்மா ரூபாயை  தேங்காய்  இரண்டையும் எடுத்து கொண்டு  பிளவுஸ்  பிட்டை   தூக்கி  சோபா  மேல் போட்டு விட்டது .

ஏன்  என ஆசிரியர்  விழிக்க   அவரது தங்கை   நான் உன்  மனைவிக்கு வைத்து கொடுத்த பிளவுசை  எனக்கு  தருகிறயா  என கோபத்துடன்  பார்க்க  தலைவருக்கு அப்போது தான் தன செய்த தவறை  புரிந்து கொள்ளமுடிந்தது..

பெண்கள் ஒரே நேரத்தில்  பல வேலைகள் செய்ய முடியும்  . ஆனால்  ஆண்களில் பலர்  ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்ய முடியும். இது ஆதி மனிதன் வேட்டை ஆடியகாலத்தில் ஆண்களின்  ஜீன்ஸில் பதிந்துவிட்டதாக  மேலும்  ஆண்கள் வள வள என பேசாமல்  இருப்போதும்  அவன் வேட்டையாடிய காலத்தில்  பதிந்த செயல் தான் .

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”
“ஆம் மன்னா!”
“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.
ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”
“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.
“தொடரும்” என்றார் மன்னர்.
“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.
“சரி அடுத்து”
“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”
“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”
“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”
மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.
ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.
“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.
“சரி எங்கே முதலாவது முட்டாள்?”
அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான ப்ளாக்கிற்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் கொண்டிருக்கும் இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

தாறுமாறாக ஒருவன் காரை ஓட்டிவருவதைக் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காரை நிறுத்தினார்.குடித்துவிட்டு காரை அவன் ஓட்டி வந்திருக்கிறான் என்று சந்தேகப்பட்ட அவர் அவை சோதிப்பதற்கான  கருவியின்முன் ஊதச் சொன்னார்.அவன் சொன்னான்,”அதுமட்டும் என்னால் முடியாது.எனக்குக் கடுமையான ஆஸ்த்மா.பலமாக ஊதினால் எனக்கு மூச்சுத் திணறல் வந்துவிடும்.”அதை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறுநீர் சோதனைக்கு ஒரு பாட்டிலில் சிறுநீர் சேகரித்துத் தரச் சொன்னார்..உடனே அவன் பெருங்குரலில்,”இதுவும் என்னால் முடியாது. நான் நீரழிவு  நோய்க்காரன்.நான் திடீரென சிறுநீர் கழித்தால் என் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும்.அதனால் நான் இறக்கக் கூடும்,”அதையும் ஏற்றுக்கொண்ட அதிகாரி அவன் இரத்தத்தை சோதனை செய்ய முடிவெடுத்தார்.உடனே ஓட்டுனர்,”இதுவும் என்னால் முடியாது.எனக்கு ஒருவிதமான நோய் உள்ளது அதனால் என் உடலிலிருந்து இரத்தம் எடுத்தால் அதற்குப்பின் இரத்தம் நிற்காமல் வந்து கொண்டேயிருக்கும்.”சற்று மனம் தளராத அதிகாரி  சொன்னார்,”சரி,பரவாயில்லை.எனக்காக இதோ,இங்கு போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கோட்டில்  நடந்து வா.”இப்போது அவன் கத்தினான்,”இதுவும் என்னால் முடியாது.”ஏன் என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். அவன் சொன்னான்,”ஏனென்றால்,நான் குடித்திருக்கிறேன்.”இன்ஸ்பெக்டர் புன்முறுவலுடன் அவனை கைது செய்தார்

கதை கேட்ட இடம்:  http://jeyarajanm.blogspot.com

இனிமேல் குடும்ப ப்ளாக் எழுதகூடாதுன்னு தான் நினச்சேன். ஆனா எழுதும்படியா ஆயிடுச்சி.  சிவா சொல்றான்..  “மச்சி இப்படியே எழுதிட்டே  போனா,  நம்ம பதிவர் சமூகம் உனக்கு  சீரியல்  பதிவர்னு  பேரு  வச்சிடும்“னு  சொல்லி பயம் காட்றான்.  “ஏங்க அப்படியா…?”  ஆனா நமக்கு ஒரு பிரச்சனைன்னு ஆண்டவன் கிட்ட சொன்னா ஒரு பதிலும் வரல.  ஆனா நம்ம நண்பர் பயபுள்ளைங்க,  பதிவர் சமூக மக்காவும் எதாவது சொல்லும்ல..   அட திட்டுனா கூட பரவா இல்லீங்க.. அதுவும் ஒரு ரெஸ்பான்ஸ் தான்...( நம்ம பொழப்பு ஏன் இப்படி…?  சரி விடு.. படிக்கிறவங்க நிலைமை.. ?   அதை பத்தி நமக்கெதுக்கு… நாம படிக்கல..? ) 
முன்குறிப்பு : மேற்கொண்டு படிக்கும் முன் பொண்டாட்டியோ,  தங்கச்சியோ அருகில் இருந்தால் படிப்பதை தவிர்க்கவும்.  மீறி படித்தால்.. மேலே போட்டோவில் இருக்கும் என் நண்பரின் நிலை தான்.   பயபுள்ள சொன்ன பேச்சை கேக்காம பொண்டாட்டி இருக்கும்போதே படிச்சிபுட்டான்.

இந்த தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டிக்கும், கூட  பொறந்த  தங்கச்சிக்கும் இடையில் நான் படுற பாடு இருக்கே.. அப்பப்பப்பா…   ஒரு நாள் என் பொண்டாட்டி, தங்கச்சி  ரெண்டு பேரையும் காமிச்சி யாரடா செல்லம் புடிக்கும்னு ஒரு வீணா போன கேள்விய என்  மூணு வயசு பையன  பார்த்து கேட்டுபுட்டேன்..  அந்த பயபுள்ள தங்கச்சிய பாத்து கை நீட்டிட்டு,  என்னைய நக்கலா பாத்துட்டு சிரிச்சிட்டு போயிடுச்சி…  ஆனா தங்கச்சியோ.. பெருமை பொங்கும் பாசமுகத்தோட போகவும்.. ( மற்றவை உங்க கற்பனைக்கே… ஐ..ஐ.. நான் திட்டு வாங்கினதெல்லாம் ப்ளாக்ல  சொல்ல மாட்டேனே… அதையே சொல்லி சொல்லிடெர்ரர் காட்டுவீங்க…).  ஆனா என் பையன பாத்து என் பொண்டாட்டி ஒன்னு சொன்னா..  “அப்பன போல தானே புள்ளையும் இருக்கும்”.

கூட பொறந்த தங்கச்சி மேல பாசம் வைக்கலாம்.  தொட்டு  தாலி கட்டுன பொண்டாட்டி மேல பாசம் வைக்கலாம்.  ஆனா ரெண்டு பேரும் இருக்கும் போது நம்ம வீட்டு பூனை குட்டிமேல தான் பாசம் வைக்கணும்.  ஆனா நான் “மனைவி சொல்லே மந்திரம்”, “தாய்க்கு பின் தாரம்”, மனைவி ஒரு மாணிக்கம் “  படங்களை ஒரு தடவை பார்ப்பேன். ஆனா “திருப்பாச்சி”,  “பாசமலர்”, “முள்ளும் மலரும்” படங்கள ரெண்டு ரெண்டு தடவ பாத்துருவேன்…. அவ்ளோ தங்கச்சி பாசம்.   இதான் என் பிரச்சனையே

ஒரு தடவை இந்த முக்கோண பாச போராட்ட்டதுல என் பொண்டாட்டி கேட்டுட்டா உனக்கு நான் முக்கியமா, உனக்கு தங்கச்சி முக்கியமா? முடிவு பண்ணிக்கோ?  இது என்னங்க கேள்வி?  அம்மா புடிக்குமா? அப்பா புடிக்குமா? னு  ரெண்டு வயசு பாப்பா கிட்ட கேட்டா அது என்னங்க சொல்லும். அந்த நிலமையில நான் நின்னேன்.  அதுவும் இந்த பொண்ணுங்க பாசமே வைக்க மாட்டாங்க.. ஆனா தங்கச்சி மேல பாசம் வைக்கிற வீட்டுக்காரன் மேல அப்படி ஒரு பாசம் பொங்கும்.

சரி மக்களே.. இன்னைக்கு ஒரு முடிவு எடுதுரனும்னு முடிவு பண்ணிதான் இந்த பதிவே போட்டேன். தங்கச்சியா?  பொண்டாட்டியா?   பதில் சொல்லுங்க. உங்க பதிலை வச்சி தான் ஒரு முக்கிய முடிவு எடுக்க போறேன்.  கொஞ்சம்
யோசிச்சி பதில் சொல்லுங்க மக்கா…  இந்த தடவ பப்ளிக் வோட்டு தான்… மக்கள் தீர்ப்பு தான்.. மகேசன் தீர்ப்பு.
பதில் சொல்றதுக்கு முன்னாடி ஒரு விஷயத்த நல்லா ஞாபகம் வச்சிகோங்க.  கூட பொறந்த தங்கச்சின்னு
சொன்னது என் கூட பொறந்தது இல்ல.. என் பொண்டாட்டி கூட பொறந்த தங்கச்சி..  (  என்னங்க.. எதையோ 
தேடற  மாதிரி  இருக்கு..  எதை  கொண்டு  அடிச்சாலும்  உடைய   போறது உங்க மானிட்டர் தான்…) 

நேத்து சாயந்தரம் என் குட்டி பையன் ஸ்கூலிலிருந்து வந்து ஃப்ரெஷ் அப் பண்ணிக்கிட்டு ஹோம் வொர்க் செய்ய ஆரம்பித்தான். , அவன் ஹேண்ட் புக்கை எடுத்துக்கிட்டு  அப்பு! அம்மா  கேள்வி கேட்பேனாம். நீ பதில் சொல்வியாம்ன்னு கேட்டேன். வீட்டு வாசல்ல ஏழரை நாட்டு சனி எட்டி, என்னை உற்று  பார்ப்பதை அறியாமல்…,

நான் கேள்விகளை கேட்க, பதில் சொல்லி, சொல்லி கடுப்பான அவன், எப்ப பாரு என்னையவே கேள்வி கேக்குறியேம்மா! இன்னிக்கு ஒரு நாளைக்கு நான் கேள்வி கேட்குறேன் நீ பதில் சொல்லும்மான்னு சொன்னதற்கு…, சரி சரின்னு மண்டையை ஆட்டினேன். ஏழரை சனி மெல்ல உள்ளே வந்து என் பக்கத்தில் அமர்ந்ததை அறியாமல்…,

1.தண்ணீரை “தண்ணீ”ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை “பன்னி”ன்னு சொல்லமுடியுமா?
…………………………………………………………………..
2.மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் புடிக்கறவனை மாணவன்னு சொல்ல முடியுமா?
…………………………………………………………..
3.புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளியிருக்கும்,
ஆனா, கன்னுக்குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா? .
………………………………………………………….

4. ஃபேண்ட் போட்டுக்கிட்டு முட்டி போடலாம்..,
முட்டி போட்டுக்கிட்டு ஃபேண்ட் போட முடியுமா?
………………………………………………………….
5. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
வைகை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்..,
ஆனால் ஐய்யராத்துல மீன் புடிக்க முடியுமா?
……………………………………………………..
5.  இட்லி பொடியை தொட்டு  இட்லி சாப்பிட முடியும்.
ஆனால், மூக்கு பொடியை வச்சு மூக்கை சாப்பிட முடியுமா?
……………………………………………………..

6. கோலமாவில் கோலம் போடலாம் ,
கடலை மாவில் கடலை போட முடியுமா?
…………………………………………………………
7. சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Macineலவெச்சா

washing சோடாவாகுமா?
…………………………………………………………………
8. பாம்பு எத்தனை தடவை படமெடுத்தாலும்
அதால், ஒரு முறையாவது  ஒரு படத்தையாவது
தியேட்டர்ல ரிலீஸ் பண்ண முடியுமா?
…………………………………………………………………..
9.என்னதான் கோழிக்கு வயிறு ஃபுல்லா தீனி போட்டு வளர்த்தாலும்,
கோழி முட்டைதான் போடும்.
100/100 லாம் போடுமா?.
………………………………………………………………….
10. நீ எவ்வளவு பெரியா படிப்பாளியா இருந்தாலும்,
பரிட்சை ஹால்ல போய் எழுதத்தான் முடியும்.
படிக்க முடியுமா?ஐயா சாமி, என்னை ஆளை விடு.., ன்னு
எழுந்து ஓட ஆரம்பித்தேன்.அம்மா! அம்மா! எங்கேம்மா ஓடுறே. இனிமே இதுப்போல கேட்கமாட்டேன். வாம்மா வந்து உக்காரும்மா. இனி, சமர்த்தா படிக்கலாம். என் செல்ல அம்மா தானே நீன்னு கொஞ்ச ஆரம்பித்தபின் தான் மீண்டும அவன் அருகில் வந்தமர்ந்து பாடம் படிக்க ஆரம்பித்தோம்.

மொக்கையானவர்: http://rajiyinkanavugal.blogspot.com

போன் அடிக்கிறது.

எடுத்தால் காலையிலேயே ராங் கால்.

“நேத்தி லோட் ஏத்தியாச்சு. நாளக்கி டெலிவரி ஆய்டும்”

“நேத்தி ஏத்தினா நாளைக்கே எப்டிய்யா டெலிவரி ஆகும்?”

“ஏன் ஆகாம, பூனாவிலேருந்தே இப்பல்லாம் நாலு நாள்தான். டிரன்க் ரோடு ரெடியாயிடிச்சு. லாஸ்ட் லோடுக்கே இன்னும் பேமென்ட் வரலை”

“ஏன் வராம, தம்பி பேருக்கு செக் அனுப்பியாச்சே?”

“யாரு ராஜலிங்கம் பேருக்கா?”

“ம்ம்ம்”

“அவனுக்கு அக்கவுண்டே கிடையாதே?”

“அதனால என்ன, செல்ப் செக்தான் அனுப்பியிருக்கேன்”

“எவ்ளோ அமவ்ண்டு?”

“இருபத்திநாலு கோடி”

“என்னது, மொளகா லோடுக்கு இருபத்திநாலு கோடியா?”

“மொளகாயா? கஞ்சா இல்லையா?”

“கஞ்சாவா? யாருங்க பேசறது?”

“இதத்தான்யா மொதல்ல கேட்டிருக்கணும்”

ரசித்த இடம்: http://kgjawarlal.wordpress.com

கஞ்சன் ஒருவனிடம் பிச்சை கேட்டான் ஒருவன்.அவனிடம் அப்போது பணமும் இல்லை;மனமும் இல்லை.ஆனால் பக்கத்தில் நின்ற ஏழை ஒருவன்அப்பிச்சைக்காரனுக்குத் தானம் செய்தான்.கஞ்சன்,அவன் முன் தன கௌரவத்தைக் காக்க அந்த ஏழையிடமே பத்து பைசா வாங்கி பிச்சைக்காரனுக்கு தானம் செய்து விட்டு மறுநாள் பத்து பைசாவை தன வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி அந்த ஏழையிடம் சொன்னான்.பிறகு அந்த ஏழையை பைசா கொடுக்காமல் பல நாள் அலைய வைத்தான்.அவனும் விடாக்கண்டன்.இவனை விடவில்லை.
ஒருநாள் அவன் தன வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதைக் கண்ட கஞ்சன்,மனைவியிடம் சொல்லிவிட்டு இறந்தவனைப் போல நடித்தான்.அவனிடம் கஞ்சனின் மனைவி,”இறக்கும் தருவாயில் கூட உங்களுக்கு பத்து பைசாவை திரும்பக் கொடுக்க முடியவில்லையே என வருத்தப்பட்டார்,”எனக் கூறினாள்.ஏழையோ விடாமல்,’அப்படிப்பட்ட நல்லவரை சமாதியில் அடக்கம் செய்ய நானே ஏற்பாடு செய்கிறேன்.’என்று கூறி ஒரு சவப் பெட்டியை ஏற்பாடு செய்து அதில் கஞ்சனைக் கிடத்தினான்.அப்போது கூட கஞ்சனோ அவன் மனைவியோ வாயைத் திறக்கவில்லை.
ஏழை சவப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு காட்டு வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது திருடர்கள் வரும் சப்தம் கேட்டு பெட்டியை அப்படியே போட்டு விட்டு ஒரு பெரிய மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டான்.திருடர்கள் கொண்டு வந்த பணத்தை அந்த இடத்தில் கொட்டிக் கணக்கு பார்க்கும் போதுஏழை ஒரு வினோதமான சப்தம் கொடுத்தான்.திருடர்கள் பேயோ,பிசாசோ என்று பயந்து எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர்.இப்போது கஞ்சன் வெளியே வந்து,”இந்தபணத்தை நாம் இருவரும் சம பங்கு போட்டுக் கொள்வோம்,”என்று கூற ஏழையும் ஒத்துக் கொண்டான்.பிரித்தபின்ஏழை,”இப்போதாவது அந்த பத்து பைசா கடனைக் கொடுக்கக் கூடாதா?”என்று கேட்க கஞ்சன் சொன்னான்,”நீயே சொல்,இங்கே சில்லறை இருக்கா?நாளை வீட்டுக்கு வா,தருகிறேன்.”

கதை கேட்ட இடம்: http://jeyarajanm.blogspot.com

இந்த வருடத்தின் சிறந்த அடிமை விருது இவருக்கு வழங்க படுகிறது.

அண்ணே நான் வந்துட்டேன் ….எப்படிண்ணே இருக்கீங்க   …?

நீ வந்தேன்னா நான் எப்படிடா இருப்பேன்…

போங்கண்ணே…..உங்களுக்கு எம் மேலே ரொம்ப பாசம் …நீங்களே கண்ணப் போடக்கூடாதுன்னு அப்படி சொல்றீங்க…..அண்ணே எனக்கொரு சந்தேகம்ணே

வேணாண்டா …என்னால தாங்க முடியாதுடா….

ஒர்ரே ஒர்ரு சந்தேகம் …பதில் கிடைக்கலேன்னா என் தல வெடிச்சுடும்ணே..

சரி சொல்லித் தலைடா சப்ப மண்டையா

அண்ணே !இந்த கோணமானி கோணமானின்னு சொல்றாங்களே அப்படின்னா என்னண்ணே…?

அப்படி அறிவுப்பூர்வமா கேளுடா காலி கபாலா…

ஐய்…இந்த பேரு சூப்பரா இருக்கே..சரி சொல்லுங்க …கோணமானின்னா என்ன ?

டேய்!கோணமானின்னா ….???

கோணத்தை அளக்கிற கருவிடா…எத்தனை டிகிரி கோணம்னு கண்டுபிடிக்க கோணமானிஎடுப்பாங்க…

அப்படின்னா என் மண்டை கோணமண்டைன்னு சொல்லுவீங்களே அதைக்கூட அளக்கலாமாண்ணே?

அதை மட்டும் அளக்க கருவியே கிடையாதுடா பலகோணமண்டையா!

சரி, அது போகட்டும் .உஷ்ணமானின்னா?

உஷ்ணத்தைக்கண்டு பிடிக்றது உஷ்ணமானி…

ஜுர மானி?

டேய் இது கூடவா தெரியலை .உனக்கு ..ஜுரம் வந்தா எத்தனை டிகிரின்னு சொல்லும்….

அழுத்தமானி

அழுத்தம் எவ்வளவுன்னு பார்க்க அழுத்தமானி….

பால்மானி

பால்லே தண்ணி எவ்வளவு கலந்திருக்குன்னு கண்டுபிடிக்க பால்மானி..

அது எப்படிண்ணே?அப்போ அது தண்ணிமானின்னுதானே சொல்லணும்

டேய் டேய் [பல்லைக்கடிக்கிறார்] ஆளை விடுடா …

இன்னும் ஒண்ணே ஒண்ணு பாக்கி இருக்குண்ணே….

எதுக்குடா உயிரை வாங்றே…என்ன மானியோ ,அதைக்கண்டு பிடிக்க ,அந்தந்த மானி உபயோகமாகுது……..வெத்து மண்டையா !இதை ஒரு எல்கேஜி புள்ள கூடச் சொல்லுமே….ஏண்டா உன் மண்டையிலே ஏறமாட்டேங்குது……
.
அப்படியா சங்கதி.அப்படின்னா …’பே’ன்னா என்னண்ணே…

என்னடா சொல்றே?!!!!

பே’ன்னா என்ன?

என்னடா குழப்ற

பேமானி வச்சு எதை அளப்பாங்க ?நீங்க சொல்ற மாதிரி அந்தந்த மானி அதை அதை அளக்கும்னா…’பே’ன்னா என்னா….பேமானின்னா என்னா சொல்லுங்கண்ணே நம்ம ரெண்டுபேருக்குள்ள நீங்கதானே எஸ்.எஸ்.எல்.சி ஃபெயில் …உங்களுக்குத் தெரியாதா சொல்லுங்கண்ணே…பேமானிய வச்சு எதை அளக்கணும்….

அண்ணே அண்ணே ….ஓடாதீங்கண்ணே..பதிலைச்.சொல்லிட்டுப் போங்கண்ணே……

ரசித்த இடம்: http://haasya-rasam.blogspot.com

ஒருவர்: உங்க முகத்தை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்…!

மற்றவர்: இருக்காதே! என் முகம் எப்பவும் என்கூடத்தான் இருக்கும்!

பி.ஜெபா ஷைனி,

=============================================

* (பரீட்சை ஹாலில்)

ரகு : வயித்தைக் கலக்குதுடா..!

ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா?

.சு.கவின்சூரியா,

=====================================

முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?

ஆசிரியர்: நீங்க விக்கறீங்கஅவன் வாங்குறான்..!

பி.கவிதா,

======================================

* வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்!

கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்குப்
பெரிய பை எங்க கடையில இல்லியே!

துரை.இராமகிருஷ்ணன்,

=======================================

அப்பா: என்னடாமார்க் ஷீட்ல ரொம்ப கம்மியா மார்க்
வாங்கிட்டு வந்திருக்கே?

பையன்: விலைவாசி ரொம்ப ஏறிப்போச்சுப்பா
எதையுமே நிறைய வாங்க முடியல

இரா.அனுக்கிரஹா,

=======================================

சோமு: என்னப்பாவியாபாரமெல்லாம் எப்படி நடக்குது?

ராமு: எல்லாமே தலைகீழா நடக்குது!

சோமு: என்னப்பா சொல்றே..?

ராமு: முன்னாலே வைர வியாபாரம் செஞ்சேன்
இப்ப ரவை வியாபாரம் செய்யறேன்..!

.அருண்பாலாஜி

=======================================
நன்றி: சிறுவர் மணி

ரசித்த இடம்:  http://rammalar.wordpress.com

பசங்களுக்கு பாடம் சொல்லி
குடுக்கும் போது என் Wife ரொம்ப
Strict Officer..!

அடுத்த நாள் என் பையனுக்கு
Quarterly English Exam. என் Wife
அவனுக்கு Letter Writing Practice
குடுத்துட்டு இருந்தாங்க..

அப்ப அவன்கிட்ட…

“உன் பிறந்த நாள்க்கு Gift குடுத்ததுக்கு
உங்க சித்தப்பாவுக்கு Thanks சொல்லி
ஒரு லெட்டர் எழுதி வை”ன்னு சொல்லிட்டு
கிச்சன்ல வேலையை முடிக்க போனாங்க..

அவனும் “சரிம்மா”ன்னு எழுத
ஆரம்பிச்சிட்டான்…

Dear Small Father.,
How are you.? I’m Fine here.
How is My Small Mother.?
How is My Small Sister Harini..? and
How is My Small Small Sister Vandana..?
I Like Hero Pen., Writing is Super.
Colour is Supero Super. I Like it.
Thanks for Gift.
Thanking You
Your Big Brother’s Son
Surya
IV Std “D”

இந்த லெட்டரை படிச்சிட்டு
என் Wife… அவனை திட்டினாங்க…

“டேய்.. நான் உன்னை தனியா
உக்காந்து தானே எழுத சொன்னேன்..? ”

” ஆமாம்மா..!! ”

” அப்புறம் எதுக்குடா உங்கப்பாகிட்ட
கேட்டு எழுதுன? ”

இதை கேட்டுட்டு எனக்கு
பயங்கர ” ஷாக்கா ” போச்சு..

‘ பட் ‘னு என் Wife-ஐ பாத்து கேட்டேன்..

“ஆமா… இந்த விஷயம் உனக்கு எப்படி
தெரிஞ்சது..?!! ”

பல்பு வாங்கியதை பெருமையாக சொன்னவர்: கோகுலத்தில் சூரியன் வெங்கட்

சமீபத்தில் நண்பன் ஒருவன் “என்னங்க இது தங்கமணியை இப்படி வாரு வாருன்னு வாருறீங்களே.. அவங்ககிட்ட உங்களுக்கு புடிச்ச விஷயம் ஒண்ணுகூடவா இல்லாமப் போச்சு. நடுநிலைன்னா அதையும்தானே நீங்க எழுதணும்” என்று லாஜிக்கலா நம்ம நேர்மையை சந்தேகப்பட்டு கேட்டுவிட்டதால் சரி எழுதிவிடலாம் என்று முடிவு செய்தேன். அதற்காக பள்ளிக்காலங்களில் வாங்கிய ‘பூதக்கண்ணாடி’யையும், மைக்ராஸ்கோப் போன்ற வஸ்துக்களையும் தேடி எடுத்து வைத்துக்கொண்டு ஒரு வாரமாக ரமாவை கண்காணிக்க ஆரம்பித்தேன். பின்னே.. அவரிடம் உள்ள நல்ல விசயங்களை கண்டுபிடிப்பதுன்னா சும்மா லேசுப்பட்ட காரியமா என்ன.?

ஒரு ‘ஸ்பை’யைப் போல நைஸாக அவரை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் தெரிந்தது.. அடாடா அன்றாடம் அவர் நமக்கு எவ்வளவு நல்லது செய்துகொண்டிருக்கிறார் என்பது. எனக்கு ஒரு புறம் ஆனந்தக்கண்ணீர் தாங்கமுடியவில்லை. அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை வேண்டுமானால் கீழே பார்த்துக்கொள்ளுங்கள்.

அவர் கிச்சனில் ஏதாவது செய்துவிட்டு அடுத்த அறைக்குள் போனால், குடுகுடுவென ஓடிப்போய் கிச்சனில் அவர் என்ன செய்தார்? அது நமக்குப் பிடித்திருக்கிறதா? என ஆராய்ந்தேன். ம்ஹூம்.. வாயில் வைக்கமுடியவில்லை.பிடித்த விஷயம் : அவர் அதை என்னை சாப்பிடச் சொல்லவேயில்லை.

அவர் போனில் பேசிக்கொண்டிருந்தால் டிவியில் நைஸாக வால்யூம் குறைத்துவிட்டு என்ன பேசுகிறார் என்று கேட்டேன். யாரிடமாவது அன்பாகவோ, நல்ல விஷயங்களாகவோ பேசுவாரா எனத் தெரிந்துகொள்ளத்தான். ம்ஹூம்.. அவர் அண்ணனை எதற்காகவோ வாங்கு வாங்கென வாங்கிக்கொண்டிருந்தார்.பிடித்த விஷயம் : அந்தக் கோபத்தில் வந்த ஆத்திரத்தில் போனை போட்டு உடைக்கவேயில்லை, கிச்சன் பாத்திரங்களிடம் கூட கருணையோடு நடந்துகொண்டார்.

அவர் புடவையை அயர்ன் செய்துகொண்டிருக்கும் போது அவருக்குத் தெரியாமல் அயர்ன் பண்ணவேண்டிய என் சட்டையையும் அதனுடன் வைத்துப்பார்த்தேன். அசந்து மறந்து அயர்ன் பண்ணிவைக்கிறாரா என்று பார்க்கத்தான். ம்ஹூம்.. அது வைத்த இடத்தில் அப்படியேதான் இருந்தது. பிடித்த விஷயம் : அந்த டேபிளை துடைக்க அவர் என் சட்டையை பயன்படுத்தவேயில்லை.

ஒருவேளை நாம் அன்பாக பேசினால் அவரும் அன்பாக பேசுவார்தானே என்று திட்டமிட்டு “மாலையில் வரும் போது பழம், வெங்காயம், லாலிபாப்.. வேற ஏதாவது வாங்கணுமாம்மா.?” என்று ஆஃபீஸ் கிளம்பும் போது அன்பாக கேட்டேன். ம்ஹூம்.. முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு “முதல்ல, சொன்னத ஒழுங்கா வாங்கிட்டு வந்து தொலைங்க..” பிடித்த விஷயம் : அதற்கும் மேலே அவர் ஒன்றுமே சொல்லவில்லை.

அப்புறம் ஒரு நாள் பார்த்தேன், அந்த சம்பவத்தை. வழக்கம் போல கம்ப்யூட்டரை நோண்டிக்கொண்டே சைட் பார்வையில் ரமாவை கவனித்துக்கொண்டிருந்தேன். கையில் எனக்காக காம்ப்ளான் கொண்டுவந்துகொண்டிருந்தார். திடீரென ஃப்ரிட்ஜின் மேலிருந்த சுபாவின் பால் புட்டியில் மீதமிருந்த 20ml பாலை என் டம்ப்ளரில் சேர்த்து ஊற்றிக்கொண்டு வந்து டேபிளில் வைத்தார். “டாய்.. என்னாதிது.? தம்பியோட பாலை எதுக்கு இதுல மிக்ஸ் பண்ணினே.?” என்று அலறினேன். ம்ஹூம்.. ‘தம்பியே குடிக்கிறான், உங்களுக்கு என்ன?’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அப்புறம்தான் யோசித்தேன், சுபா தினமுமே அவன் பாட்டிலில் மிச்சம் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறான்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. பிடித்த விஷயம் : ஆஃபீஸில் நண்பர்கள், ‘வர வர இளமையாகிட்டே போறீங்க பாஸ்..’ என்கிறார்கள். நான் ஹிஹி என்று இளிப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். (பின்னே என்ன தினமும் பீடியாஷ்யூர் குடிக்கிறேன் என்றா உண்மையைச் சொல்லமுடியும்?)

யார்றா அது நண்பன்.? தங்கமணியிடம் நல்ல விஷயங்களை தேடிப்பார்த்து எழுதச்சொன்னது? அவன் மட்டும் கைக்குக் கிடைக்கட்டும்.. இருக்குது அவனுக்கு.!!

புலம்பியது: ஆதிமூலகிருஷ்ணன் in http://www.thaamiraa.com

1. நான்: ஏன் பப்பு உனக்கு 7 வயசுதான் ஆகுது எப்ப பாரு 70 வயசு கெழவி மாதிரி பேசாதே

வர்ஷா : அம்மா அவ ஃப்ரெண்ட் எல்லாம் யாருன்னு தெரியாதா? பாட்டி, அத்தை பாட்டி, பக்கத்து வீட்டு கற்பக பாட்டி..

பப்பு : மறக்காம அம்மாவையும் சேர்த்துக்க

தேவையா? எனக்கு சொன்னேன் :)))

2.

வர்ஷா : அம்மா ஏம்மா அழுதா கண்ணுல தண்ணி வருது?

நான் : தெரியலைடா

பப்பு: இதெல்லாம் ஒரு கேள்வியா? எவ்ளோ தண்ணி குடிக்கறே, பாதி ஒன் பாத்ரூம்ல போகும் மீதி கண்ணுல வரும

தேவையா .. வர்ஷாக்கு :))

3. முடிவெட்ட பார்லர் கூட்டிட்டு போனேன், அங்க அவங்க கேக்கறாங்க, அவளுக்கு பப்பு ரொம்ப ஃப்ரெண்ட்.

பப்பு செல்லம் என்ன கட்டிங் வேணும்? மஷ்ரூமா? .பாய்கட்டா?

பப்பு : அதெல்லாம் வேண்டாம் ஆண்ட்டி, எங்கம்மாக்கு குளிக்க வைக்க எது ஈஸியோ அதை வெட்டுங்க

எல்லாரும் சிரிச்சாங்க..(ஊரே சிரிச்சுதுன்னும் சொல்லலாம்)

#புள்ளயா பெத்து வச்சிருக்கேன் 🙂

விஜி ராம் அவர்கள் G+ இல் பகிர்ந்தது

ஆட்டோவுக்கு வாய் இருந்தால் ஐயோ என்று கத்தித் தனது வேதனையை வெளிப்படுத்தும். ஆனால் என்ன செய்வது ஆறறிவு படைத்த மிருகம் செய்யும் அத்தனை அநியாயங்களையும் தாங்கிக் கொள்ளும் மனது அதுக்கு ஆண்டவன் கொடுத்திருக்கிறான்.

அதனால்தான் என்னவோ ரெம்ப நல்ல ஆட்டோ என்று சொல்லுறாங்கள்.

 

Courtesy: http://www.manithantv.com

IPhone, IPad, ITouch போன்றவைகளை இந்த ஸ்டீவ் உலகத்துக்கு அறிமுகப்படுத்தி விட்டு  நல்ல பெயரோடும் புகழோடும் போய் சேர்ந்துவிட்டார். அவரின் இந்த நல்ல சேவையை நான் தொடர்ந்ததால் எனக்கு என் மனைவியிடம் கிடைத்த பெயர்தான்IBad என்பதாகும். அதோடு இருந்திருந்தால் பரவாயில்லை ஆனால் எனக்கு நேர்ந்த விபரிதத்தை கண்டால் யாருமே எதிர்காலத்தில் இப்படி எல்லாம் நடக்க மாட்டீர்கள். அப்படி என்ன நடந்தது என்று கேட்கீறிர்களா? அதை கடைசியில் பார்க்கலாம்.

அதற்கு முன்னால் என்ன நடந்தது என்பதை இங்கே கொஞ்சம் விபரமாக சொல்லுகிறேன். அதை படியுங்க முதலில் மக்கா..
எனக்கு   பிறந்த நாள் வந்துச்சுங்க…. என் பிறந்த நாளுக்கு என் மனைவி iPhone வாங்கி கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப சந்தோசமுங்க….யாருக்குதான் சந்தோஷம் வராதுங்க…
ஒரு 2 மாசம் கழித்து என் அண்ணன் பொண்ணுக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க அப்ப என் மனைவி அவளுக்கு iPad வாங்கி கொடுத்தாங்க…அவளுக்கும் ரொம்ப சந்தோசமுங்க…
போன மாசம் என் பொண்ணுக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க அப்ப என் மனைவி அவளுக்கு iPod Touch வாங்கி கொடுத்தாங்க…
அவளுக்கும் ரொம்ப சந்தோசமுங்க.
இந்த மாசம் என் மனைவிக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க….இந்த ஸ்டீவ் வேற புதுசா ஏதும் கண்டுபிடிக்காம போய்ட்டாருங்க…நான் என் மண்டைய போட்டு உடைச்சேங்க….என்னடா வாங்கி கொடுக்குறதுனு…. என் மனைவியோ எல்லோருக்கும் i ல ஆரம்பிச்ச பொருளாதான்  வாங்கி கொடுத்து இருக்கா எனவே அவளுக்கும் அது மாதிரி பொருளாதான் வாங்கி கொடுக்கனுமுனு நல்லா யோசிச்சு அவளுக்கு கடைசியா நல்ல அழகாக லைட் வெயிட்டா இருக்க கூடிய iRon Box  வாங்கி கொடுத்தேங்க…
இதுல என்னங்க தப்பு ? அப்ப ஆரம்பிச்சுதுங்க வினை….
என் மனைவி என் திறமையை, ஸ்மார்ட்னசை புரிஞ்சுக்க தவறிட்டாங்கனு நினைக்கிறேனுங்க… நான் வாங்கி கொடுத்த இந்த iRon Box  ஹோம் நெட்வொர்க்கோட கனெக்ட் பண்ணினால்  நிறைய பயன்பாடுகள் இருப்பது அவளுக்கு தெரியலைங்க… உதாரணமாக இதை எதோடு எல்லாம் தொடர்பு கொள்ளலாம் என்பதை அவளிடம் சொன்னதை நான் உங்களுக்கும் சொல்லுகிற்னுங்க..இதை iWash, iCook and iClean போன்றவைக்ளோடு இணைத்து உபயோகிக்கலாமுங்க
ஆனா என் மனைவி இதை எல்லாம் கேட்டுவிட்டு என் ஸ்மார்ட்னசை புரியாம என்னை  iKnock பண்ணிட்டு இப்ப அவள்iMad ஆகி iNag* பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்போ என் நிலமை இப்படி iBad ஆகிபோச்சு (///*nag – someone (especially a woman) who annoys people by constantly finding fault//)
என் கூட வேலை  பார்க்கும் அமெரிக்க நண்பர் சொன்ன ஜோக்கை வைத்து என் வழியில் நான் இதை உங்களுக்கு பகிர்ந்து உள்ளேன். கொஞ்சமாவது சிரித்து இருப்பிர்கள் என நினைக்கிறேன்.
புலம்பியவர்: http://avargal-unmaigal.blogspot.com
ரசித்த இடம்: வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்

இதோ சில நகைச்சுவை துணுக்குகள் பகிர்ந்திருக்கிறேன் வாசித்து மகிழுங்கள் .

* * * * * * *

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில்
ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து
கூண்டில் இருந்த எலி கேட்டது. எதுக்கு அவனைக் கொன்னேனு…

புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப்
பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனை”ன்னு.

& & & & & & &

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி…
தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது….

^  ^  ^  ^  ^  ^ ^

ஜனவரி – 14 க்கும், பிப்ரவரி – 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி – 14 !
அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி – 14 !!

$ $ $ $ $ $ $

அம்மா: என்னடா… இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே?

பையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன்.

அம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க?

பையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்சதுன்னு கேட்டாங்க.

# # # # # # #

மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?

கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.

@ @ @ @ @ @ @

கணவன்: எனக்கு கால் வந்த நான் வீட்ல இல்லன்னு சொல்லு! கொஞ்ச நேரம் கழித்து மொபைலில் கால் வருகிறது…
மனைவி: ஹலோ! என் கணவர் வீட்ல தான் இருக்கார்!
கணவன்: ஏண்டி அப்படி சொன்ன?
மனைவி: அது என்னோட லவர்!
கணவன்: ?!?…..

( ( * * * ) )

அறிவாளி 1 : மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும், ஞாபகப்படுத்து….

அறிவாளி 2: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?

அறிவாளி 1 : இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்……..

& & & & & & &

அமலா : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
விமலா : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே..!

Courtesy: பனித்துளி சங்கர்

ஆங்கில அகராதி புரிந்து கொள்ள மிக எளிதானது அல்ல ஒரு உதாரணம் ‘COMPLETE’ மற்றும் ‘FINISH’ இரண்டு வார்த்தைகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை சரியாக விளக்க முடிவது இல்லை.

சிலர்  ‘COMPLETE’ மற்றும் ‘FINISH’  இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் சொல்வது உண்டு ஆனால் வித்தியாசம் உள்ளது

நீங்கள்  ஒரு சரியான நபரை திருமணம் செய்யும் போது, உங்கள் வாழ்க்கை ‘COMPLETE’  (முழுமை என்று பொருள் கொள்க)

மேலும் நீங்கள் ஒரு தவறான நபரை திருமணம் செய்யும் போது,  உங்கள் வாழ்க்கை  ‘FINISH’ (முடிந்தது என்று பொருள் கொள்க)

மேலும் சரியான ஒருவர் தவறான காரணத்திற்கு உங்களை பிடித்தால் நீங்கள் ‘COMPLETELY FINISHED’
அறிந்து கொண்ட இடம்:  http://meithedi.blogspot.com

பார்க்க முரட்டுத் தனமா இருந்த ஒரு ஆள் தன்னோட பைக்கில ஒரு பாருக்கு போனான். வண்டியை பாருக்கு முன்னாடி நிறுத்திட்டு உள்ளே போய் சாப்ட்டு வெளியே வந்தான். அங்கே அவன் பைக்கை காணோம்!

“அப்படியா!”ன்னுட்டு பாருக்குள்ளே போய், ”நான் இன்னும் ஒரு கிளாஸ் சாப்பிடப் போறேன். நான் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள என் பைக் வரலை, எங்க ஊர்ல நான் என்ன பண்ணேனோ அது இங்கயும் நடக்கும்!” அப்படின்னு கோபமா கத்தினாரு.

உடனே பார் மேனேஜேரு அங்க இருந்த ஆளுங்க எல்லாம் எப்படியோ தேடி அவர் வண்டியை கண்டு பிடிச்சு பார் முன்னாடி நிறுத்திட்டாங்க. பைக்காரனும் கிளம்பினான்.  கிளம்புறப்ப ஒருத்தர் கேட்டாரு…

“சார் உங்க ஊர்ல என்ன நீங்க பண்ணீங்க?”

அவன் பதில் சொன்னான் “வீட்டுக்கு நடந்தே போனேன்!”

என்ன ஆச்சு ?
ஒரே தலைவலி…
டாக்டரைப் பார்த்தியா ?
பார்த்தேனே,தலைவலிக்கு முதல்ல கண்ணை டெஸ்ட் பண்ணனும்னு சொன்னாங்க ..
கண் டாக்டர்ன்னா நம்ம கண்ணப்பன்தான் பெஸ்ட்,அவரைப் போய் பாரேன்..அல்லது  EYEயப்பன் கூட நல்ல டாக்டர்தான்..
இல்லை ,ஏற்கனவே நான் ,எங்க காலனி பக்கதிலே ,EYEயர்  இருக்கார் அவரைப் போய் பார்த்தேன்..
என்ன சொன்னார் கண்ணிலெல்லாம் ஒரு ப்ராப்ளாமும் இல்லை சைனஸ் இருக்கலாம் எதுக்கும் ஈ.என்.டி .யைப் பாருங்களேன்னு சொன்னார்..
ஈஎன் டி ன்னதும்  நம்ம தொண்டமான் ஞாபகத்துக்கு வரார் அவர்தான் சரியான ஆள்…அல்லது டாகடர்  மூக்கன் ..அவரும் ஓகே..
நான் நம்ம சகலரோட தங்கச்சி காதம்பரியைப் பார்த்தேன்…
காது மூக்கு தொண்டை எல்லாமே நார்மல்…எதுக்கும் பல் டாக்டரைப் பார்த்தா நல்லது…எல்லா பிராப்ளத்துக்கும் பல்லும் ஒரு காரணமாம்…
யாரைப் பார்த்தே…
வேற யாரு நம்ம பல்லவந்தான்….கொஞ்சம் க்ளீனிங் பண்ணினார் ஒரு கேவிட்டி அடைச்சார் ….மத்தபடி பிரச்சனை இல்லை
எல்லாமே நார்மல்ன்னா தலைவலிக்கு என்னதான்  காரணமாம்.
.வயசாச்சா ஹார்ட் செக் பண்ணிடலாம்னு கார்டியாலஜிஸ்டைப் பார்த்தேன்
யாரு நம்ம இருதயராஜ்தானே ?என்ன சொன்னார்?
அடைப்பு கிடைப்பு இருக்குன்னு சொல்வாரோன்னு பயந்தேன் அதெல்லாம் ஒண்ணுமில்லை ..துடிப்புதான் கொஞ்சம் அதிகமா இருக்கு ..எதுக்கும் பல்மனாலஜிஸ்ட்டைப் பாருங்கன்னார்…
அதான் பல் டாக்டரைப் பார்த்தாச்சே..அவர்கிட்டே சொன்னியா?
நீ வேற …பல்மனாலஜிஸ்ட்ன்னா நுரையீரல் டாக்டர் …
என்னதான்  பேர் வைக்கிறாங்களோ …யாருக்கு புரியுது…கார்டியாலஜிஸ்ட்ன்னா கார் ரிபேர் பண்ற மெக்கானிக் மாதிரி நினைச்சேன்…சரி விடு  பார்த்தியா யாரு டாக்டர்?
LUNGகேஸ்வரன்தான் ரொம்ப ஃபேமஸ் …பார்த்தார் எண்டோஸ்கோப்,பிராங்கோஸ்கோப்.சி டி ஸ்கேன்,ஏழெட்டு எக்ஸ்ரே ,நாலஞ்சு பிளட் டெஸ்ட்ன்னு பார்த்துட்டு மாத்திரை எழுதிக் கொடுத்தார்
இனிமேல் கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டு மாத்திரைகளை முழுங்கிட்டு இருக்க வேண்டியதுதான்..
என்னவோ போ…எப்படியோ குணமானா சரி…வரட்டா.எல்லாம் நல்லா குணமாகும்
[சகாதேவன் உபயம்]
எல்லாத்துக்கும் மேலே நம்ம வைத்தீஸ்வரர்  இருக்கார் .அவர்தான் நல்ல டாக்டர்,அவர் பார்த்துப்பார்   அவர் கையிலே நம்ம டாக்டர்ஸ் எல்லாருமே டூல்ஸ்தான் .

உபயம்: http://haasya-rasam.blogspot.com

ஊழல்

Posted: செப்ரெம்பர் 26, 2011 in சுட்டது, மொக்கை
குறிச்சொற்கள்:, ,

இந்த கதை 4 வகையான மக்களைப்பத்தி அவங்க யாருன்னா எல்லோரும்,யாரோ சிலர்,யாராவது, யாருமில்லை

எந்த ஒரு  முக்கியமான வேலையைப்பத்தியும்  எல்லோரும் பேசுவாங்க,

எல்லோருக்கும் தெரியும் யாரோ சிலரால் மட்டும் செய்ய முடியும்னு, யாரோ ஒருவர் செஞ்சுடுவாங்க, ஆனா யாரும் செய்ய மாட்டாங்க

அந்த யாரோ சிலருக்கு கோவம் வரும் ஏன்னா இது எல்லோருக்குமான வேலை, எல்லோரும் என்ன நினைப்பாங்கன்னா யாராவது ஒருத்தர் செஞ்சுடுவாங்கன்னு

ஆனா யாரும் யோசிக்க மாட்டாங்க எல்லோராலயும் செய்ய முடியாதுன்னு.

இது எப்படி முடியுன்னா எல்லோரும் யாரோ சிலரை திட்டுவாங்க எப்பன்னா யாரும் யாரையும் கேள்வி கேக்காதப்ப??

நீதி:

ஏதாவது வேலையை உங்களுக்கு குடுத்தா நீங்க யாருக்காகவும் அல்லது எதுக்காகவும் காத்துகிட்டு இருக்காம செஞ்சு முடிச்சுடுங்க.

டிஸ்கி :

சரியா புரியலேன்னா திருப்பி மொதோ இருந்து படிங்க

இத படிக்கும் போது ஊழலை பத்தி ஞாபகம் வந்தா கங்க்ரட்ஸ் நீங்க ஒரு பெர்பெக்ட் இந்தியன்

அறிந்து கொண்ட இடம்:  http://meithedi.blogspot.com

புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள். அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதை பார்த்த மனைவி கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா. ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.

பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு. திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா. அதுக்கு அந்த கணவன்’அது வேற ஒன்னும் இல்ல. இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.
இதனால் நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னானா: அடுத்தவனோட குறைகளா நாம நெனைக்கிறது சில நேரங்களில் நம்மளோட பார்வை பிரச்சினையா கூட இருக்கலாம்.
எப்பவாச்சும் மனசுக்கு கஷ்டமா இருந்தா ஏதாவது புரட்சிக் கருத்துக்களைப் படிச்சு என்னை ரிலாக்ஸ் பண்ணிக்குவேன். போன வெள்ளிக்கிழமையும் அப்படித்தான் படிச்சுக்கிட்டு இருந்தப்போ, சமையல் வேலைல ஆண்களும் பெண்ணுக்கு உதவி செய்யணும்..அப்படி செய்யாதவங்க ஆணாதிக்கவாதிகள்னு போட்டிருந்துச்சு. அதைப் படிச்ச உடனே எனக்கு சந்தோசம் தாங்கல. இந்த நல்ல காரியத்தை உடனே செய்யறதுன்னு முடிவு பண்ணேன்.
அது ஈவ்னிங் காஃபி போடற நேரம். அதனால தங்கமணிகிட்ட “இன்னிக்கு நாந்தான் காஃபி போடுவேன். நீ சமையல் கட்டுப் பக்கமே வரக்கூடாது”ன்னு சொல்லி ஹால்ல உட்கார வச்சுட்டு, கிச்சன்ல பூந்தேன். அது ‘இந்த மனுசன் நல்லாத்தானே இருந்தாரு..இன்னிக்கு என்னாச்சு’ன்னு குழம்பிப்போய் ஹால்ல உட்கார்ந்துட்டாங்க.
நானும் பால் சட்டியை (இதுக்கு என்னமோ பேர் சொல்வாங்களே..) அடுப்புல வச்சி, பாலை ஊத்திட்டு, அடுப்பை பத்தவச்சேன். ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. முதல்ல, தங்கமணிகிட்ட நல்ல பேர் வாங்கிக்கலாம். அப்புறம் ‘மனைவி என்ன சமையல் எந்திரமா?’ன்னு தலைப்பு வச்சி வெள்ளிக்கிழமை ஃபுல்லா நாந்தான் சமைச்சேன்னு டுபாக்கூர் பதிவு எழுதி புரட்சிவாதி ஆயிடலாம். முடிஞ்சா டேமேஜான பேரையும் சரி பண்ணிடலாம்னு பல திட்டங்கள் மனசுல.
அப்புறம் தான் பார்க்குறேன், பால் ஒரு மாதிரி திரிஞ்சு போச்சு. என்னடா இது, எக்ஸ்பைரி ஆன பாலான்னு பார்த்தா, அதுல ஒன்னும் பிரச்சினை இல்லை. ஒருவேளை பால் சட்டில ஏதாவது இருந்திருக்குமோன்னு டவுட் வந்துச்சு. சரின்னு, திரிஞ்ச பாலை கீழ கொட்டிட்டு, மறுபடி நல்லா பாத்திரத்தைக் கழுவினேன்.
ஹால்ல இருந்து ‘இன்னும் முடியலியா’ன்னு சவுண்ட் வந்துச்சு. ‘இதோ ரெடி..ஒரே நிமிசம்’னு சொல்லிட்டு, மறுபடி பாலை ஊத்தி அடுப்பை பத்தவச்சேன். ச்சே..பெண்ணியவாதி ஆகறதுன்னா இவ்வளவு கஷ்டமா-ன்னு ஃபீல் பண்ணிக்கிட்டே அடுப்பைப் பார்த்தா..அடங்கொக்கமக்கா…பால் மறுபடியும் திரிஞ்சு போச்சு!
’நம்மளே திருந்த நினைச்சாலும் விதி விட மாட்டேங்குதே..எப்படி இது’-ன்னு கன்ஃபியூஸ் ஆகி நிக்கும்போது, தங்கமணி பொறுமை இழந்து உள்ள வந்துட்டாங்க.
‘என்ன ஆச்சு?’ன்னு ஒரு அதட்டல்.
நான் பரிதாபமா ‘இப்பிடி ஆயிடுச்சு..பாரு’ன்னு திரிஞ்ச பாலை காட்டிட்டு ”என்ன பிரச்சினை? ஏன் இப்பிடி ஆகுது”ன்னு கேட்டேன்.
அதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.
’அய்யய்யோ’-ன்னு அந்த பால் பாட்டிலை பார்த்தா Laban-ன்னு இங்கிலீஸ்ல எழுதிட்டு காச்சாமூச்சான்னு அரபில என்னமோ எழுதியிருக்கு..தயிருக்கு இங்கிலீஸ்ல லபான்னு பேரா.இப்படி கேள்விப்பட்டதே இல்லையே-ன்னு யோசிக்கும்போதே
“உங்களுக்கு எதுக்கு இந்த வேலை…ஏதாவது பதிவு எழுதுனமா..கமெண்ட்டுக்கு மிக்க நன்றின்னு பதில் போட்டமான்னு இல்லாம இது தேவையா..”-ன்னு கிச்சன்ல இருந்து விரட்டி விட்டுட்டாங்க.
நம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே..
காஃபியில்
கலந்து
கொடுத்தேன் – என்
காதலை!
-ன்னு ஒன்னுக்குக் கீழ ஒன்னா ப்ளூகலர்ல போல்டா எழுதி அருமை கமெண்ட் வாங்குவோம்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சே.
பாலும் வெள்ளையத்தான் இருக்கு..தயிரும் வெள்ளையாத்தான் இருக்கு..ஃப்ரிட்ஜ்ல வச்சு எடுத்தா, ரெண்டுமே குழுகுழுன்னு தான் இருக்கு..நான் என்ன செய்ய…எவ்வளவு திட்டம் வச்சிருந்தேன்..எல்லாம் பாழா(!) போச்சே..

ரங்கமணியின்காபி அனுபவத்தை தெரிந்து கொண்ட இடம்: http://sengovi.blogspot.com

என்னோட வெஜ் சாம்பார் செய்வது எப்படி பதிவு பார்த்து அத ட்ரை பண்ணி இருப்பிங்க. இதோ என்னோட அடுத்த சமையல் குறிப்பு. இந்த சமையல் குறிப்பு முக்கியமா ஆண்களுக்காக அதுவும் திருமணம் ஆகாத கன்னி பையன்களுக்காக மட்டுமே. அதனால மத்தவங்க தயவு செய்து இதுக்கு மேல படிக்காதிங்க.

– முதலில் அதிகாலை ஐந்து மணிக்கு எந்திரிக்கவும்! என்னது அது ரொம்ப கஷ்டமா? யோவ், அலாரம் வச்சு எந்திரியுங்கையா! எதிரிச்சு, பாத்ரூம் போங்க!பிரஸ் எடுத்து, பல்லு வெளக்குங்க! அப்புறம் முகத்தை கழுவி, இன்னும் ஏதாவது மிச்சம் மீதி வேலைகள் இருந்தா, அதையும் முடிச்சுட்டு, மெதுவா பாத்ரூம விட்டு, வெளிய வாங்க!

யோவ், எடுபட்டபயலே, சமையல் குறிப்பு சொல்றதாதானே பேச்சு! அப்புறம் என்ன பாத்ரூம்ல, மூஞ்சி கழுவுறதப் பத்தி, சிறப்புரையாற்றிக்கிட்டு இருக்கே?” அப்டீன்னு டென்சன் ஆவாதீங்க! பொறுமை! பொறுமை!!

ஓகே! பாத்ரூம்ல இருந்து வெளியே வந்துட்டீங்களா? யோவ்…. அதெல்லாம் வந்து ரொம்ப நேரமாச்சு! மேல சொல்லுய்யா!, சரி, இப்போ நீங்க நேரா பூஜை அறைக்குப் போங்க! உங்க இஸ்ட தெய்வம் எதுவோ, அதை நல்லா மனசார கும்புடுங்க! எதுவும் தப்பா நடந்துடக்கூடாதுன்னு நல்லா கடவுள வேண்டிக்குங்க! ஆமா…. இருநூறு கோடி ரூபா பட்ஜெட்டுல படம் எடுக்குறார் பாரு! எதுவும் தப்பா நடக்கக்கூடாதாம்!

அப்புறம், ஒரு பேனா, ஒரு நோட் புக், கேமரா வசதியுள்ள உங்க செல்ஃபோனு இதெல்லாத்தையும் எடுத்துக்குங்க! யோவ்…. நிறுத்துயா! சமையல் குறிப்பு சொல்றதுன்னுதானே, நம்மளையெல்லாம் லெட்டர் போட்டு வரச்சொன்னே! அப்புறம் என்ன, விஜய் டி வி ல வர்ர, ‘ அது இது எது’ ப்ரோகிராம்ல வர்ர மாத்தியோசி ரவுண்ட் மாதிரி, மாத்தி மாத்தி பேசுறே!

அண்ணே, எதுக்கு அவசரப்படுறீங்க! மேல படியுங்க!

இப்போ, உங்க அம்மாவைக் கூப்பிடுங்க! அம்மா தூங்கறாங்களா? இன்னும் சத்தமா கூப்பிடுங்க! இப்போ அம்மா எந்திரிச்சு வர்ரா! ‘ குட்மோர்னிங் அம்மா’ சொல்லுங்க!

அம்மா கேப்பா ‘ எதுக்குடா, இப்ப கத்துறே’!
அதுக்கு நீங்க சொல்லணும்! “ அம்மா இன்னிக்கு நான் சமையல் பண்ணலாம்னு இருக்கேன்”

‘ என்னது சமையல் பண்ணப் போறியா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்! போய் வேற வேல இருந்தாப் பாரு!”

“ இல்லம்மா, நான் இன்னிக்குச் சமைச்சே ஆகணும்! “

“ அதுக்கு என்னைய என்ன பண்ணச் சொல்லுறே?”

“ கிச்சன் எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா, கொஞ்சம் சவுகரியமா இருக்கும்”

அப்டீன்னு நீங்க சொன்னதும், உங்கம்மா உங்கள மொறைச்சுப் பார்ப்பாங்க! சப்போஸ், இதெல்லாம் எங்க சமைச்சு உருப்படப்போவுது? அப்டீன்னு திட்டவும் கூடும்! அதெல்லாத்தையும் கண்டுக்காதீங்க! நீங்க திட்டுவாங்கறது இதுதான் மொதல்தடவையா என்ன? ( எல்லாப் பதிவர்களுமே வீட்டுல திட்டு வாங்குறதா, ஒரு வாய்மொழித் தகவல் சொல்லுது )
இப்போ, கிச்சன் எங்க இருக்குன்னு உங்கம்மா, சொல்லிட்டாங்களா? நேர கிச்சனுக்குப் போறீங்க! வாசல்ல நின்னு, சிவாஜி கணேஷன் மாதிரி, இடுப்புல கையை வச்சுக்கிட்டு, ஒரு வாட்டி மேலேயும் கீழேயும் கிச்சனை உத்துப் பாருங்க!

அப்புறம் உங்க செல்ஃபோன்ல, கிச்சன ஃபோட்டோ எடுங்க! ஏன்னா, வரலாற்றில முதல் முறையா கிச்சனுக்குப் போறீங்க இல்லையா? அதுதான் இந்தப் ஃபோட்டோ!

சரிங்க! நம்ம சமையல் குறிப்பு பகுதியில இன்னிக்கு, கிச்சனை எப்படிக் கண்டுபுடிக்கறது? அப்டீன்னு பார்த்தோம்! இனிமேல்தான் சமைக்கறது பத்தி சிந்திக்கணும்!

அதை அப்புறமா சொல்லித் தாரேன்! ஓகே வா?

என்ன இன்னும் வெயிட் பண்றீங்க? நீங்க கெளம்புனா தான் இந்த சமையல் குறிப்பா எனக்கு சொன்ன அண்ணன் ஐடியா மணி கிட்ட அடுத்த பாகம் கேட்க போக முடியும். கெளம்புங்க கெளம்புங்க

குப்பு சுப்பு ரெண்டு பேரும்,  இந்த வார கடைசில போரடிக்குதேன்னு மலையேற (trucking) போனாங்க.

அது ஒரு அடர்ந்த காடு கொஞ்ச தூரம் உள்ள போகும் போதே ஒரே கும்மிருட்டு, அவ்வளவு அடர்ந்து இருந்துச்சு காடு. கொஞ்ச தூரத்தில கொஞ்சம் வெளிச்சம் அதை நோக்கி நடை போட்டாங்க, வெளிச்சத்துகிட்ட வந்து பார்த்தா ஒரு புலி உக்காந்து இருந்துச்சி

மூஞ்சில பசி வெறி தெரிஞ்சது, புலிய பார்த்த உடனே  சுப்பு எடுத்தாரு ஓட்டம், ஆனா குப்பு தன்னோட பேக்-ல  இருந்து ரீபோக் ஷூவை எடுத்துக்கிட்டு இருந்தாரு.

இதை பார்த்த சுப்பு “ரீபோக் ஷூ போட்டா புலிய விட வேகமா ஓட முடியுமா சீக்கிரம் வாலே புலி புடிக்கிற முன்னாடி ஓடிரலாம்” மின்னு சொன்னாரு

“நெசம் தாம்லே  புலிய விட வேகமா ஓடமுடியாது ஆனா உன்னை விட வேகமா ஓட முடியும்”

தெரிந்து கொண்ட இடம்: http://meithedi.blogspot.com

அப்துல் கலாம் எஞ்சினியரா வேலை பார்த்துக்கிட்டு இருந்த நேரம். அன்னைக்கு ஏதோ முக்கியமான வேலை..அவசரமான வேலை போய்க்கிட்டு இருந்திருக்கு..அவருக்குக் கீழ வேலை செய்ற ஒருத்தரு சாயந்திரம் ஆகவும் கலாம்கிட்ட தயங்கித் தயங்கி வந்திருக்காரு.
கலாம் ‘என்ன விஷயம்’னு கேட்கவும் ‘என் குழந்தைக்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு கேட்டிருக்காரு. அதுக்கு கலாம் ‘நோ..நோ..நீங்க இல்லேன்ன இங்க வேலை நின்னிடும்..வேணாம்’னு சொல்லிட்டாராம். அவரும் வருத்தத்தோட வேலை செஞ்சுட்டு நைட்டு லேட்டா வீட்டுக்குப் போனா குழந்தை புது ட்ரஸ் போட்டுக்கிட்டு, நிறைய விளையாட்டுச் சாமானோட விளையாடிக்கிட்டு இருந்துச்சாம்.
‘எப்படி இது’ன்னு கேட்கவும் கலாம் வந்து குழந்தையை வெளில அழைச்சுக்கிட்டுப் போயி இதெல்லாம் வாங்கிக்கொடுத்தாருன்னு சொன்னாங்களாம்..தனக்குக் கீழ வேலை செய்றவர் மேல மட்டுமில்லாம அவர் குடும்பத்து மேலயும் கலாம் காட்டுன அக்கறை தான் அவரை எல்லாருக்கும் பிடிச்சவரா, ஒரு நாட்டுக்கே ஜனாதிபதியா உயர்த்துச்சு’ – அப்படீன்னு முன்னாடி ஒரு புக்ல படிச்சேன்.
அப்போ நானும் டெல்லில இருந்தேன். இந்த மாதிரி தன்னம்பிக்கை புக் படிச்சா ‘மெலீனா’ பார்த்த மாதிரி ரெண்டு மூணு நாளைக்கு எஃபக்ட்டு கும்முனு நிக்கும். அப்புறம் பழைய குருடி, கதவைத் திறடி தான்..அந்த கலாம் மேட்டர் படிச்சப்புறம் நாமளும் நம்ம ஜூனியர்ஸ்கிட்ட கனிவா நடந்துப்போம்னு முடிவு பண்ணேன்..
ஒரு நாளு டைட் ஒர்க்..அதாவது ரொம்ப வேலை..அவசர வேலை..எல்லாரும் அடிச்சுப்பிடிச்சு வேலை செஞ்சுக்கிட்டு இருந்தோம். அப்போ என் ஜூனியரு ஒருத்தன் தலையைச் சொறிஞ்சுக்கிட்டே வந்து நின்னான்.
நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!
இல்லே..தெரியாமத் தான் கேட்கேன்..அந்த ஆண்டவன் ஏண்ணே என்னை மட்டும் இப்படி சோதிக்கான்? ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?
புலம்பலை ரசித்த இடம்:  http://sengovi.blogspot.com

(டெலிபோன் மணி அடிக்கிறது)

தங்கமணி : காய் நறுக்கறதுக்குள்ள நாப்பது போன்… ச்சே…  ஒரு வேலை செய்ய விடறாங்களா (என முணுமுணுத்தபடி வந்து போன் எடுத்து)
ஹெலோ (என்றாள் ஸ்டைலாய்)

எதிர்முனையில் ஒரு பெண் : சத்ஸ்ரீஅகால்ஜி

தங்கமணி : என்னது சசிரேகாவா? அப்படி யாரும் இங்க இல்லங்க

(ச்சே… இந்த ராங் நம்பர் தொல்ல பெரிய தொல்லையா போச்சு என முணுமுணுக்கிறாள்)

எதிர்முனை : நை நை
தங்கமணி : (ஏற்கனவே வேலை கெடுகிறதே என கடுப்பில் இருந்த தங்கமணி இன்னும் கடுப்பாகி) என்னது? யார பாத்து நை நைனு சொன்ன? என் வீட்டுக்காரர் கூட அப்படி சொன்னதில்ல… பிச்சுபுடுவேன் பிச்சு

எதிர்முனை : நை நை ஜி… (என அந்த பெண் ஏதோ சொல்ல வருவதற்குள்)

தங்கமணி : என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல? மறுபடி நை நை’ங்கற

எதிர்முனை : Is this XXXXXXX? (என ஒரு போன் நம்பர் சொல்லி கேட்க)
தங்கமணி : நோ நோ ராங் நம்பர் (என போனை கட் செய்தவள் “ஹ்ம்ம்.. வேற வேலை இல்ல இதுகளுக்கு… ராங் கால் பண்ணினதும் இல்லாம என்னை வேற திட்டுது… கொழுப்பு” என முணுமுணுத்தபடி வேலையை தொடர்ந்தாள்)

சிறிது நேரத்தில் ரங்கமணி என்ட்ரி….

“ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா…. என்னா வெயிலு என்னா வெயிலு… சாயங்காலம் வரைக்கும் கொளுத்துது போ” என்றபடி மின் விசிறியை சுழல விட்டார்

“ஹ்ம்ம்… ஊட்டில ஒரு வேல பாருங்க… குளுகுளுனு இருக்கலாம் வருஷம் பூரா” என்றாள் கேலியாய்

“ஏன் அண்டார்டிக்கால பாத்தா வேண்டாம்பியோ?” என்றார் அவரும் கேலியாய் பதிலுக்கு

“ஹும்க்கும் இங்க இருக்கற ஆக்ராக்கு போய் தாஜ் மகாலை பாக்க வழியைக்காணோம்… இதுல அன்டார்டிக்காவாம் ஆப்ரிகாவாம்” என கழுத்தை நொடிக்கிறாள்

“பாத்து பாத்து… ரெம்ப திருப்பாத, கழுத்து சுளுக்கிக்க போகுது…”

“இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல”

“ஏன் தங்கம்? என்னமோ 5ம் நம்பர் பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்ல எறங்கற மாதிரி இங்க இருக்கற ஆக்ராங்கற… அது போகணும் ரெண்டு நாளு ட்ரெயின்ல”

“மனசிருந்தா அமெரிக்காவும் அரை மையில் தான்… மனசில்லைனா அடுத்த தெருவும் அரை நாள் தொலைவு தான்”

“ஆரம்பிச்சுட்டயா உன் பழமொழி ரீமிக்ஸ் வேலைய? அது சரி… என்ன டிபன் இன்னிக்கி?” என பேச்சை மாற்றுகிறார்

“சேமியா கிச்சடி”

“எப்ப பாத்தாலும் இதே தானா? வேற எதாச்சும் வெரைட்டியா செய்யேன்”

“என்னது? எப்ப பாத்தாலும் இதேவா? இன்னைக்கி காலைல பொங்கல் செஞ்சேன், நேத்து சாயங்காலம் தோசை காலைல ஆப்பம், முந்தின நாள் சாயங்கலாம் அடை காலைல உப்மா, அதுக்கு முந்தின நாள் சாயங்காலம் இட்லி காலைல எலுமிச்சபழ சேவை… இதுக்கு மேல என்ன வெரைட்டி செய்ய சொல்றீங்க?” என முறைக்கிறார்

“அதில்லம்மா… இந்த சப்பாத்தி சன்னா, பூரி மசால், நான் குருமா, புலாவ் பச்சிடி இப்படி எதுனா செய்யலாமே?”

“அதுக்கு எவளாச்சும் ஹிந்திகாரியா பாத்து கட்டி இருக்கணும்…” என்கிறாள் கடுப்பாய்

“ஹ்ம்ம்… இப்ப யோசிச்சு என்ன புண்ணியம்?” என வேண்டுமென்றே சலித்து கொள்கிறார்

“ஓஹோ… அப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா?” என தங்கமணி டெரர் லுக் கொடுக்க

“இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல தங்கம்… நீ மட்டும் ‘உம்’னு ஒரு வார்த்த சொல்லு….”

அதற்குள் இடைமறித்து “என்ன சொன்னீங்க?” என தங்கமணி முறைக்க

“ஹி ஹி… அதில்ல தங்கம்… உனக்கும் கூட மாட உதவியா… ” என்றவர், தங்கமணி ருத்ரதாண்டவம் ஆட தயாராவதை உணர்ந்து

“ஹா ஹா… டென்ஷன் ஆகாத… சும்மா கிண்டலுக்கு சொன்னேன்… நான் டிரஸ் மாத்திட்டு வரேன்… கிச்சடி எடுத்து வெய்யி சாப்பிடலாம்” என்றபடி அறைக்குள் செல்கிறார்

அவர் சென்ற பின், ஏனோ தங்கமணிக்கு சற்று முன் வந்த ராங் கால் நினைவுக்கு வந்தது

“ஒருவேளை அந்த பொண்ணு பேசினது ஹிந்தியா இருக்குமோ” என ஒரு நொடி நினைத்தவர், “என்னமோ இருக்கட்டும் ராங் கால் பத்தி நமக்கென” என மேல் வீட்டுக்கு விளையாட சென்ற மகளை அழைத்து வர செல்கிறாள்
“வா தங்கம்… டிபன் வேலை எல்லாம் ஆச்சா?” என வரவேற்கிறாள் மேல் வீட்டு ஐஸ்வர்யா

“செஞ்சாச்சு ஐஸு…  இனி தான் சாப்பிடணும்… அதான் பாப்பாவ கூட்டிட்டு போலாம்னு வந்தேன்” என்றாள்

“உனக்கு விஷயம் தெரியுமா தங்கம். நம்ம வசந்தி, அவ வீட்டுக்காரரை டைவர்ஸ் பண்ண போறாளாம்”
“ஐயையோ என்னாச்சு?” என்கிறாள் தங்கமணி அதிர்ச்சியாய்

“அதையேன் கேக்கற… என்னமோ சொல்லுவங்களோ, கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும்….னு…அப்படி தான் ஆச்சு கதை… இந்த காலத்துல யாரையும் நம்பறதுக்கில்ல”

“ஹ்ம்ம்… ” என்றாள் யோசனையாய் “சரி, அவர் டிபன் சாப்பிட வெயிட் பண்ணிட்டு இருக்கார், நான் அப்புறம் வரேன்… பாப்பா வா போலாம்” என மகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வருகிறாள்

அன்றிரவு….“கிச்சடி நல்லா இருந்தது தங்கம்” என்றார் ரங்கமணி

“ம்… அது சரி… உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?”

“என்ன இப்படி கேட்டுட்ட? கல்யாணம் ஆன புதுசுலையே சொன்னனே”

“ஆமா, வெவரங்கெட்டவ ஒருத்தி சிக்கினானு சும்மா என்ன என்னமோ புருடா விட்டீங்க… அதெல்லாம் யாரு நம்பினா”

“அடிப்பாவி, எல்லாம் நேரம். அப்படினா நான் அப்ப சொன்ன எதையுமே நீ காதுலையே வாங்கிக்கலையா?” என்றார் பாவமாய்

“இப்படி பாவமா மூஞ்சிய வெச்சுட்டு கேட்டாலும் அதே பதில் தான்..”

“ஹும்… நான் கூட என் புது பொண்டாட்டி எவ்ளோ அக்கறையா நாம பேசறத ரசிச்சு கேக்கறான்னு நினைச்சு எவ்ளோ சொன்னேன்… எல்லாம் வீணா போச்சே” என பீலிங் காட்டுகிறார்

“சரி சரி… அத விடுங்க… உங்களுக்கு ஹிந்தி நல்லா பேச தெரியுமா?” என மேட்டர்க்கு வருகிறார்

“ஹிந்தி மட்டுமில்ல, பஞ்சாபி கூட கொஞ்சம் பேசுவேன்” என்றார் பெருமையாய், பின்னால் வரப்போகும் விபரீத்ததை அறியாமல்

“எப்படி கத்துகிட்டீங்க?” என ஆர்வம் போல் காட்டி விசயத்தை கறக்க முயல்கிறாள் தங்கமணி

“அது… எங்க ஆபீஸ்ல ஒரு பஞ்சாபி பொண்ணு இருந்தா… சும்மா சொல்லக்கூடாது… நல்ல பொண்ணு… லஞ்ச் எல்லாம் எனக்கும் சேத்து கொண்டு வருவா… அதுவும் அந்த புலாவ் & நவரத்னகுருமா டேஸ்ட் இன்னும் நாக்குலையே இருக்கு போ” என சிலாகிக்கிறார், தற்போது தன் நாக்கில் சனி பகவான் ‘தாம் தரிகிட தீம் தரிகிட’ என ஜதி பாட ரெடியா இருக்கறது தெரியாம

தங்கமணி கோபத்தை கட்டுப்படுத்தியபடி “ஓஹோ.. அதான் சப்பாத்தி, நான், புலாவ் எல்லாம் வேணும்னு கேட்டீங்களோ?”

“ஹி ஹி… ஆமாம்… அந்த பொண்ணு தான் கொஞ்சம் ஹிந்தி பஞ்சாபி எல்லாம் சொல்லி குடுத்தது”

“அவள மனசுல வெச்சுட்டு தான் கொஞ்ச நேரம் முன்னாடி ‘நீ மட்டும் உம்’னு சொல்லு’ னு சொன்னீங்களோ”

“என்ன தங்கம் நீ…”

“அதுவும் எனக்கு கூட மாட உதவியா?”

“ஐயோ… என்னை கொஞ்சம் பேச விடேன்…”

“ஐயையோ… இப்படி மோசம் போயிட்டனே… அம்மா அப்பா, என்னை இப்படி ஒரு மனுஷன்கிட்ட சிக்க வெச்சுட்டீங்களே” என தங்கமணி அழத்துவங்க

“என்னாச்சு தங்கம்? நீ கேட்ட கேள்விக்கு தானே பதில் சொன்னேன்” என ஒன்றும் புரியாமல் ஜெர்க் ஆகிறார்

“எனக்கு தெரியும்…எல்லாம் தெரியும்… அவ பேரு கூட சசிரேகா தானே… ” என அழுகிறாள் தங்கம்

“இல்லையே… அவ பேரு ஜெய்பரீத் ஆச்சே..” என அந்த நேரத்துலயும் திருத்தம் செய்கிறார்

“ஓஹோ… அவ பேரு ஊரு போன் நம்பர் எல்லாம் மனப்பாடமா இருக்கா?”
“இல்ல தங்கம்…” என்றவரை பேச விடாமல்

“நீங்க பொய் சொல்றீங்க… அவ பேரு சசிரேகாதான்… இன்னிக்கி போன் பண்ணி இருந்தா.. எடுத்த உடனே சஸ்ரிகாஜினு என்னமோ சொன்னா… என்னை கூட நை நை’னு என்னமோ திட்டினா… நான் சுதாரிச்சதும் வேணும்னே ராங் நம்பர் மாதிரி நடிச்சுட்டு கட் பண்ணிட்டா”

“ஐயோ…இல்ல தங்கம்….அது வந்து…” என ரங்கமணி சொல்ல வருவதை காதில் வாங்காமல்

“நான் எங்க ஊருக்கே போறேன்… நாளைக்கே போறேன்” என தங்கமணி புலம்பல் தொடர்கிறது

அதுக்கப்புறம் ரங்கமணி தனியா உக்காந்து பொலம்பினது இதான்

“அட ஆண்டவா… அது சசிரேகாவும்  இல்ல லலிதாகுமாரியும் இல்ல, சத்ஸ்ரீஅகால்ஜி… பஞ்சாபி மொழில சத்ஸ்ரீஅகால்ஜினு சொன்னா நாம வணக்கம் சொல்ற மாதிரினு இவளுக்கு எப்படி சொல்லி புரிய வெக்கறது… ஹும், சப்பாத்தி கேட்டது ஒரு குத்தமா… என் கெட்டநேரம், இன்னைகினு பாத்து ஏதோ ஒரு பஞ்சாபி லூசு ராங் கால் பண்ணி இருக்கு, நான் வசமா சிக்கிட்டேன்… இவ ஒருத்திய சமாளிக்கவே நான் திணறிட்டு இருக்கேன். இதுல இன்னொன்னு வேற வேணுமா? ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பபா…”

புலம்பலை ரசித்த இடம்:  http://appavithangamani.blogspot.com

முஸ்கி : என்னது சமையல் குறிப்பா? என்ன பண்ணி தொலையிறது இந்த குரூப்ல ” கல்யாணம் ஆகாத பசங்க இருக்காங்க ” ” ( எப்பவும் ) கல்யாணமே ஆகாத பசங்களும் இருக்காங்க..  அவங்களுக்காக தான்.. இது.. ( எல்லாம் என் தலையெழுத்து.. )

( கம கமக்கும் வெஜ் சாம்பார் )

தேவையான பொருட்கள் :

கிச்சன் :1 (உங்க வீட்டில் இருக்கணும் )

கேஸ் அடுப்பு : 1 (இரண்டு பர்னர் கொண்டது )

கேஸ் சிலிண்டர் : 1 (கேஸ் உடன் )

கேஸ் : தேவையான அளவு

பாத்திரம் : 2 (சைஸ் உங்களுக்கு தேவையான அளவு )

கரண்டி : 2 ( பாதாள கரண்டி இல்லை )

டேபிள் ஸ்பூன் : 3 ( டேபிள் இல்லாமல் )

லைட்டர் : 1 ( இல்லாவிட்டால் தீப்பெட்டி )

தண்ணீர் : 6 லிட்டர்

டுஸ்கி : நோ , நோ ….. இதுக்கே கோவப்பட்டு அருவாள எடுத்தா எப்படி? இன்னும் செய்முறை வேற இருக்கே ?

செய்முறை :

முதலில் கிச்சனுக்குள் நுழையவும் ,லைட்டர் அல்லது தீப்பெட்டி கொண்டு கேஸ் அடுப்பைபற்ற வைக்கவும்.ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து இரண்டு பாத்திரங்களையும் கழுவி கொள்ளவும் ,ஒரு பாத்திரத்தை பற்ற வைத்த அடுப்பின் மேல் வைக்கவும் ,அதில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

கொதிக்க வைத்த நீரை வைத்து அடுத்த பாத்திரத்தைகழுவவும் ,பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து இடது பக்கத்து வீட்டில் ஓசி வாங்கி மீதமுள்ள சாம்பாரை எடுக்கவும்..அதை அந்த பாத்திரத்தில் ஊற்றி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.

இப்போது சுவையான “வெஜ் சாம்பார்” ரெடி .அடுத்து உங்கள் இஷ்டம் போல் வலது பக்கத்து ( தக்காளி….. தப்பி தவறி கூட இடது பக்கத்து வீட்டுக்கு போயிடாதிங்க செருப்படி விழும் , நேத்துதான் சாம்பார் ஓசி வாங்கி இருக்கோம் ) வீட்டிலோ ,எதிர்த்த வீட்டிலோ தேவையான அளவு சோறு ஓசி வாங்கி ,இந்த சுவையான “வெஜ் சாம்பார்” ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

டிஸ்கி : ஹி,ஹி,ஹி…….. இன்னும் நிறையா ஐட்டம் இருக்கு ஒன்னு ஒன்னா எடுத்து விடுறேன் .

இப்படிக்கு

மங்குனி அமைச்சர்

தலைவர்

ஓசியில் உடம்பை தேத்துவோர் சங்கம்

சமையல் குறிப்பு படித்து நொந்த இடம்: http://www.terrorkummi.com

ரிமோட் கண்ட்ரோல் தன்னுடைய வாழ்க்கையை பற்றி பேசுகிறது…

ஐயோ வாங்க என் வாழ்க்கையை பற்றி கேளுங்க, எல்லாரும் என்னை நோன்டோ நோன்டுன்னு நோன்றாயிங்க, உங்களை நோண்டு நோன்டுன்னு நோன்டுனா உங்களுக்கு எப்பிடி இருக்கும்…??

இதுக்காக எனக்கு எப்போ சான்ஸ் கிடைக்குதோ, அப்பப்போ சோபா’க்கு கீழே போயி ஒளிஞ்சிகிடுறேன், இருந்தாலும் தடியணுக, தடிச்சிக, சோபா’மேலே ஏறி உக்காருறதுனால எனக்கு மூச்சி முட்டுது…!!!

நீங்க நல்லா காத்து வாங்கிட்டு உக்காந்து இருக்கீங்க, என்னை மட்டும் மூச்சி முட்ட வைக்கிறீங்க, உங்க மேல யாராவது குண்டா உக்காந்தா, உங்களுக்கு எப்பிடி இருக்கும்…???

நீங்க சிரிக்கனும்னாலும் என்னை நோன்டுறீங்க, அழனும்னாலும் [[சீரியல்]] என்னை நோன்டுறீங்க, திட்டனும்னாலும் [[விஜய்]] என்னை நோன்டுறீங்க…..??? கோவம் வந்தா என்னை தூக்கி எதுக்குடா எறியுறீங்க ராஸ்கல் ம்ஹும்…..!!! [[இதை ஹிந்தியில் சொல்லும் போது இன்னும் சூப்பரா இருக்கு…!!!]]

கதை கேட்ட இடம்: http://nanjilmano.blogspot.com

கிரிக்கெட்ல நம்மள நல்லா ஏமாத்தறாங்கப்பா..

எப்படி தெரியுமா..!!

1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே
No Ball-ன்னு சொல்வாங்க.,

2. ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு
சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான்
இருக்கும்.

3. All Out-ன்னு சொல்லுவாங்க..,
ஆனா 10 பேர் தான் Out ஆகி
இருப்பாங்க..

4.அம்பயர் ஒரு கைய தூக்கினா
ஒரு Batsman அவுட்..,
ரெண்டு கையயும் தூக்கினா Six..
( லாஜிக் இடிக்குதே..!! )

5. Goal Keeper-ன்னா கோல் விழாம
தடுக்கணும்.. அப்ப.., Wicket Keeper
விக்கெட் விழாம தடுக்கணும் தானே…!
ஆனா அவரே ஏன் Out பண்ணுறாரு..?

6. சில ஒவர் மட்டும் Powerplay-னு சொல்றாங்களே..
அப்போ, மீதி ஒவர் எல்லாம் பவர் இல்லாம
இருட்டிலயா விளையாடுறாங்க??

7. ஒருத்தரை மட்டும் Night Watchman-னு
சொல்வாங்க.. ஆனா அவரும் மேட்ச் முடிஞ்ச
Ground-ஐ காவல் காக்காம ரூம்க்கு தூங்க
போயிடுவாரு..

8. Tea Break-னு சொல்வாங்க.. ஆனா
கூல் ட்ரிக்ஸ் தான் குடிப்பாங்க..

9. என்னதான் எல்லா பக்கமும்
Light எரிஞ்சாலும்., ஒரு பக்கத்தை மட்டும்
“OFF ” Sideனு தான் சொல்வாங்க..

10.ஆட்டம் முடிஞ்ச உடனே ஒருத்தரை
மட்டும் தான் ” Man of the Match “-ன்னு
சொல்லுறாங்க.. அப்ப மீதி பேரெல்லாம்
Women-ஆ..?

தெரிந்து கொண்ட இடம்: www.terrorkummi.com

நம்ம பில்கேட்ஸ் கம்பெனியோட நகைச்சுவை பாகம் 1 படிச்சுருப்பீங்க. இதோ உங்கள் பார்வைக்கு மேலும் சில

கடைசியாக…

நண்பர் Rama Sethu Ranga Nathan G+ல் பகிர்ந்து கொண்டது

வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.

வித்யா : என்ன குழப்பம்?

நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற

பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான் சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.

வித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.

வித்யா : மேனஜரா? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு.

நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்.

நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?

நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.

நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம “அறிவாளி” படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு “நீ ரொம்ப நல்லவனு”சொல்லனும். அவ்வளவு தான்.

வித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்…

G+ல் நண்பர் போஸ்கோ ஆனந்தராஜ் பகிர்ந்தது

கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
இறுதியில் மதிப்பெண்ணை கணக்கிட்டு கொள்ளுங்கள்.
நீங்கள் தெரிவு செய்யும் பதில் அ எனில் 10 மதிபெண்  ஆ எனில் 5 மதிபெண் இ எனில் 1 மதிப்பெண் 
1 . ஆண்/ பெண் இணைந்து சாலையில் நடக்கும் போது உங்களுக்கு   தோணுவது.
   அ) கடுப்பு                            ஆ) சந்தோஷம்                           இ) ஏதுமில்லை
2. நீங்கள் விரும்பும் படம்
   அ) காதல்                    ஆ) சண்டை                       இ) ஏதுமில்லை
3. “அந்த காலத்துல நாங்கல்லாம்….” என அடிக்கடி சொல்வீர்களா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
4. ஓடும் பஸ்ஸில் ஏறுவிர்களா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
5. அடிக்கடி கோவம் வருமா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
6. காதல் கவிதைகள் படிக்க விருப்பமா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
7. உடை விஷயத்தில் அலட்சியமாக இருப்பிர்களா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
8. மொபைல் பயன் படுத்துபவர்களை கண்டால் கோவம் வருகிறதா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது

மதிப்பெண் கண்டுபிடித்துவிட்டிற்களா ?
முடிவு :









































எனக்கு இன்னும் வயசு ஆகவில்லை, நான் என்றும் இளமைதான் என நினைப்பவர்கள் யாரும் இந்த டெஸ்டில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள். வயசானா போல பீலிங் உள்ளவங்கதான் மார்க் என்னனு தேடுவிங்க.. 

ஹைய்யா எல்லாருக்கும் பல்பா.
நான் உங்களுக்கு கொடுத்த பல்பை எனக்கு வழங்கியவர்:  http://rajamelaiyur.blogspot.com

உலகில் சர்வாதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இல்லாமல் போய் விடலாம். ஆனால் அவர்களைப் பற்றி ஜோக்குகள் இல்லாமல் போகாது. இதோ சில:
———
ஒரு சர்வாதிகார நாட்டில் பார்க்கில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். திடீரென்று ஒருவர் ”தூ’ என்று துப்பினார்..
அவரைப் பார்த்து மற்றவர் சொன்னார்:

“நமது ஜனாதிபதியின் உரையைப் பற்றி பொது இடத்தில் அபிப்பிராயம் தெரிவிப்பது தவறு.”
*
ஓர் அரசியல்வாதி பொதுக்கூட்டத்தில் முழங்கினார் பெருமையாக. “இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் நானேதான்” கூட்டத்திலிருந்து ஒரு குரல்: `மன்னிப்பு ஏற்கப்பட்டது.’
*
ஒரு சர்வாதிகாரி பெரிய துணிக் கடைக்குச் சென்றார். விலையுயர்ந்த சூட் ஒன்று அவருக்குப் பிடித்திருந்தது. “என்ன விலை?” என்று கேட்டார். “விலையெல்லாம் எதுக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பரவாயில்லை” என்று கடைக்காரர் குழைந்தார்.
“சேச்சே… இலவசமாக எதையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்” என்றார்.
கடைக்காரர் உடனே, “சரி, இதன் விலை இரண்டு ரூபாய்” என்றார்.
சர்வாதிகாரி நாலு ரூபாயை அவரிடம் கொடுத்து, “அப்படியானால் இரண்டு சூட் எடுத்துக் கொடுங்கள்” என்றார்.
*

ஹிட்லரைப் பற்றிய சில கேலி ஜோக்குகள் அவர் காதுக்கு எட்டின. யார் இந்த ஜோக்குகளை ஆரம்பித்து வைத்தவர் என்று கண்டுபிடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்கள் அரும்பாடு பட்டு ஒரு முதியவரைக் கண்டுபிடித்து வந்து ஹிட்லரிடம் விட்டார்கள்.
“என்னய்யா, நீர்தான் என்னைப் பற்றி கேலி ஜோக்குகளைப் பரவ விடுகிறீரா? நான் இறந்தால் உலகம் முழுதும் கொண்டாடுவார்கள் என்கிற ஜோக் உங்களுடையது தானே?”
“ஆமாம்.”
“நான் ஆற்றில் மூழ்கிய போது ஒருவர் காப்பாற்றுகிறாராம். அவருக்கு நான் நன்றி தெரிவித்த போது, `நன்றி எதுவும் வேண்டாம். நான்தான் உங்களைக் காப்பாற்றினேன் என்று வெளியே யாருக்கும் சொல்லாமலிருந்தாலே பெரிய உதவியாயிருக்கும்’ என்ற ஜோக்கும்…”
“ஆமாம். என்னுடையதுதான்.”
“இவ்வளவு துணிச்சலா உங்களுக்கு? நான் யார் தெரியுமா? உலகிலேயே சர்வ வல்லமை படைத்தவன்.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் என் வம்சம்தான் உலகை ஆளப் போகிறது என்பது தெரியாதா?”
“அய்யய்யோ, இப்போது நீங்கள் சொல்வதுதான் முதல்தர ஜோக்! ஆனால் இந்த ஜோக்கை நான் சொல்லவில்லை. இதுக்கு முன்னே நான் இதைக் கேட்டதுகூட இல்லை” என்றார் அந்த முதியவர்.
*
குருஷ்சேவுக்குப் பயங்கர கோபம் கேலி ஜோக்குகள் சொல்பவர்கள் மீது. “இந்த மாதிரி யாராவது ஜோக் சொன்னால் அவனைப் பிடித்துக் கொண்டு வந்து என் முன் நிறுத்துங்கள்” என்று உத்தரவிட்டார்.
அதிகாரிகள் ஒரு ஜோக் எழுத்தாளரைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.
குருஷ்சேவின் மாளிகைக்குள் நுழைந்த அவர், அதன் ஆடம்பர அலங்காரங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்.
அவரைப் பார்த்து குருஷ்சேவ், “என்ன, சாப்பிட்டு விடுவது போல் பார்க்கிறாய்?” என்று கேட்டார்.
“பரவாயில்லை. நீங்கள் வசதியாகத்தான் இருக்கிறீர்கள.”
“அதற்கென்ன, பார்த்துக் கொண்டே இரு. இன்னும் இருபது வருஷங்களில் இந்த நாட்டில் உள்ள எல்லாரும் இப்படித்தான் இருக்கப் போகிறார்கள்” என்றார்.
“ஆஹா, ஒரு புது ஜோக் எனக்குக் கெடைச்சுது” என்றார் ஜோக் எழுத்தாளர்.
*
பயில்வான் போன்று இருந்தத ஒரு ஆசாமி, தெருவில் எதிரே வந்த நோஞ்சான் ஆசாமியின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
நோஞ்சான் திருப்பி அடிக்கத் தயங்கி, “ஏ… என்னை நிஜமாக அடிச்சியா? இல்லை விளையாட்டா அடிச்சியா?” என்று கேட்டான்.
“நிஜம்மாத்தான் அடிச்சேன். அதுக்கு என்ன?” என்று கர்ஜித்தான் பயில்வான்.
“அதுதானே… எனக்கு விளையாட்டெல்லாம் பிடிக்காது. கெட்ட கோபம் வரும்…” என்று சொல்லிக் கொண்டே நடந்தான் நோஞ்சான்.
*
பள்ளிக்கூட ஆசிரியை மாணவர்களுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தார். “அப்போது கடவுள் அங்கு தோன்றி எல்லாக் குழந்தைகளுக்கும் ரொட்டியும், வெண்ணெயும் கொடுத்தார்…” என்றாள்.
ஒரு மாணவன், “டீச்சர், கடவுள் என்பவர் கிடையாது என்று சர்வாதிகாரி நேற்றுகூட டி.வி.யில் சொன்னாரே” என்றான்.
டீச்சருக்கு உதறலெடுத்தது. உடனே சமாளித்துக் கொண்டு, “இது கற்பனைக் கதைதான். ரொட்டியும், வெண்ணையும் எங்கே இருக்கிறது நமது நாட்டில்? அது கற்பனைதானே! அதுபோல் கடவுளும் கற்பனைதான்” என்றார்

ரசித்த இடம்: http://kadugu-agasthian.blogspot.com/

அண்ணே! இது நல்லதில்லண்ணே நல்லதில்ல… ஏண்ணே எம்மேல இம்புட்டு கோவம்? அப்டி என்ன சொல்லிபுட்டேன்னு கொலவெறியோட அலையிறே நீயி… அப்டியே அடிக்கிறதா இருந்தாலும் நேர்ல வந்து அடி… யார் கேட்பா?.. வாரவன் போறவம்லாம் அடிச்சிட்டு போம்போது என் அண்ணன் நீ, உனக்கு அடிக்க உரிமையில்லையா?! நீ எம்புட்டு அடிச்சாலும் தாங்குவேம்ணே அத விட்டுட்டு சின்னபுள்ளதனமா ஆளை வச்சு அடிக்க சொல்றியே… பெரிய மனுஷன் பண்ற காரியமாயா இது?….

உனக்கும் எனக்கும் பிரச்சனை இருந்ததென்னவோ உண்மைதான், ஆனா உன்னைய தேர்தல்ல எதிர்ப்பேன்னு சும்மா ஒரு பேச்சுக்குதாண்ணே சொன்னேன். அதை நம்பி பயபுள்ளைக திடீர்னு ஒரு நா வந்து நீயும் ரவுடிதான் ஜீப்ல ஏறுன்னுட்டாங்க. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் ஒர்த்தில்லையான்னு சொன்னாலும் ஒருத்தன் கேக்கலையே… சரி விடு ஆனது ஆயிபோச்சு ஹிஸ்டிடில நம்ம பேரும் வரட்டும்னு நெனச்சி சரின்னு தலையாட்டுனேன்.

இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புதூன்னு பிரச்சாரத்துக்கு போனா… சும்மா சொல்லப்பிடாது நம்ம மக்கள் பாசக்கார பயபுள்ளைகண்ணே… போற எடம்மெல்லாம் கூட்டமா கூடி உசுப்பேத்தி விட்டுகிட்டே இருந்தாங்க. ஆனா இப்பதான் தெரியுது என்னை ரணகளமாக்கத்தான் கூடியிருக்காங்கன்னு…. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்….

அப்போ அங்கே பேசுனதெல்லாம் உனக்கு கெட்டதா தெரியும். ஆனா நல்லா யோசிச்சி பார்ண்ணே. நான் உனக்கு செஞ்சது எல்லாமே நல்லதுதாண்ணே.

உன்ன குடிகாரன்னேன் எதுக்கு?… தமிழ் நாட்ல முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடதான் இருக்கு. நாட்டுல முக்காவாசி பேரு குடிகாரன்தான் (மன்னிச்சுகிங்கையா ஒரு ஃப்லோல வந்துடுச்சி இனிமே குடிகாரர்னே சொல்றேன் நீங்களும் கெளம்பி வந்து கும்மிராதிங்க)… நான் உன்னை குடிகாரர்னு அடையாளம் காட்ட போய்தான்…அத்தனை பேரும், ஓ நம்மாளு… இவரு செயிச்சா நமக்கும் ஏதாவது செய்வாருன்னு நினைச்சு அவன்பாட்டுக்கு “ஙங்கு ஙங்குன்னு” குத்தி தள்ளி, உன்னை ஜெயிக்கவச்சான். ஞாயப்படி எனக்கு நன்றி சொல்லி மாலை போட்டு தூக்கி வச்சி ஆடணுமாக்கும் நீ….அத விட்டுட்டு அடிக்க வர்றாராமாம் அடிக்க…

அப்புறம் எதிர் கட்சி டிவில என்னிக்காவது உன்னய காட்டியிருக்காங்களா?… ஆனா தேர்தல் ஆரம்பிச்ச நாள்ல இருந்து அவங்க தலிவர டிவில காட்னத விட உன்ன பத்தி காட்னதுதாண்ணே அதிகம். அதுக்கெல்லாம் காரணம் இந்த கைப்புள்ளங்கிறதையே மறந்துட்டு பேசுறே நீ.

நான் எதிர்த்தவன்லாம் வீணா போனதா சரித்திரமே இல்லைண்ணே. ஒத்த எம்மெல்ஏ.வா சுத்திக்கிட்டு இருந்த உனக்கு இம்புட்டு எம்மெல்ஏ எப்படிகிடைச்சாங்க அப்படிங்கிறதை யோசிச்சு பார்த்தேன்னா இம்புட்டு கோவம் வராது உனக்கு.

இது தெரிஞ்சுகிட்டுதான் நம்ம சிங்கும், ஒபாமாவும் அடுத்த எலெக்ஷனுக்கு அவங்களுக்கு எதிரா பேசச்சொல்லி இப்பவே அட்வான்ஸ் புக்கிங் பண்ணியிருக்காங்க…. வேணும்னா நீயும் ஒன்னு போட்டுக்கோ.

அத விட்டுட்டு அடிக்கணும்னு கங்கணம் கட்டிட்டு அலையிற நீயி. உனக்கு ஆசையாயிருந்த பார்டர்ல போயி தீவிரவாதியை பிடி, தெருவுல போற ரவுடியை அடி ஆனா இந்த பச்ச மண்ண போயி அடிக்கணும்னு நெனக்கிறியே வெக்கமாயில்லை… உன்னைய நினைச்சா சிப்பு சிப்பாத்தான்யா வருது.

ஆனா ஒன்னுண்ணே யார் என்னை சீண்டுனாலும், போங்கடான்னு என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருந்தப்பல்லாம் இம்பூட்டு பிரச்சனை இல்லண்ணே. என்னைக்கு திரும்பி சீண்டனூம்னு நினைச்சனோ அன்னியிலிருந்துதான் பிரச்சனை. எல்லாத்தையும் சிரிக்க வச்ச எம்பொழப்பு இன்னிக்கு சிரிப்பா சிரிக்கிது…

அப்புறம் இன்னொரு விசயம்… ஸ்..ஸ்ஸ்ஸ்.. காத பக்கத்துல கொண்டா… அந்த கட்சியினாலதான் நீ செயிச்சேன்னு சொன்னேன்ல அது சும்ம பேச்சுக்கு… உன்ன உசுப்பேத்தி உடுறதுக்காகத்தான் அப்படி சொன்னேன்…

ம்ம்ம்ம்… உங்களையெல்லாம் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என் பொழப்பு ரணகளாமாகி கிடக்கு…

கைப்புள்ளயின் சோகத்தை சொல்லியவர்: http://sinekithan.blogspot.com

இந்த விளம்பரங்கள் இருக்கே அது தான் முக்கால் வாசி நேரம் வருது. அதை பாக்குறது கொடுமை. அவங்க பண்ற அலும்பல் அதை விட கொடுமை. நான் பார்த்த கொடுமைகளில் சிலவற்றை கலாய்த்திருக்கிறேன்.
• க்ளோஸ் அப் டூத் பேஸ்ட் –
இந்த பேஸ்டை வச்சு பல் தேய்க்கிறவங்க தான் முத்தம் கொடுக்க முடியுமா? என்ன நியாயம் இது… அப்போ உலகத்துல பாதி பேரு முத்தமே கொடுக்க முடியாதே. பல்லே தேய்க்காத ஆடு, மாடெல்லாம் என்ன செய்யும்?  கிஸ்ஸோமீட்டர் சேலஞ்ச். கருமம். கருமம். ஒருத்தன் ஊதுனா ரோஜாப்பூ வாடிடுமாம் அதே க்ளோஸ்-அப் யூஸ் பண்றவன் ஊதுனா வாடின பூ மலர்ந்திடுமாம். கேக்குறவன் கேனப்பயலா இருந்தா கே.எஸ். ரவிக்குமார் கேட் வின்ஸ்லெட் கூட ஜோடி சேர்ந்தாருன்னு சொல்லுவாங்க
•  ஆக்ஸ் –
இந்த செண்ட் அடிச்சா எல்லா பொண்ணுங்களும் பின்னாடியே வந்துருமாம். (த்ரிஷா வருமா, இல்லை அனுஷ்கா தான் வருமா?) அப்படின்னா இந்நேரம் ஒரு தேவதாஸ் கூட இருக்கமாட்டானே
•  லக்ஸ் –
இந்த சோப் போட்டுக்கிட்டு அசின் நடந்தா அந்த இடத்துக்கு லைட்’ஏ தேவைப்படாதாம் அவ்ளோ பிரகாசமா இருக்குமாம். மக்களே யார் வீட்டிலாவது கரெண்ட் போச்சுன்னா உடனே லக்ஸ் போட்டு குளிங்க. அந்த இடமே பிரகாசமா இருக்கும்
•  வாசன் ஐ கேர் –
இவங்க பண்ற அலும்பல் இருக்கே. கண்ணு நொள்ளையான 60 வயசு கிழவிக்கு இவங்க கண் பார்வை தருவாங்களாம். நாங்க இருக்கோம் நாங்க இருக்கோம்னு சொல்றாங்க உங்க கிட்ட பில்  கட்டிட்டு நாங்க  உசுரோட இருப்போமா டா
• கல்யாண் ஜுவல்லர்ஸ் –
சுத்தமா புரியாத விளம்பரம் இது. மொதல்ல பிரபுவோட பொண்ணு ஓடி போற மாதிரி ஒரு கதை, இப்போ பிரபுவும் சீதாவும் குடும்பம் நடத்துற மாதிரி ஒரு கதை. நகைக்கும் விளம்பரத்துக்கும் என்னப்பா சம்மந்தம் ? இதுல பஞ்ச் வேற நம்பிக்கை அதானே எல்லாம்
• பொம்மீஸ் நைட்டீஸ் –
 இந்த நைட்டியை போட்டா தான் குடும்பத்தலைவி ஃபீலிங் வருதாம். சண்டை போடணும்னு நினைச்சாலும் இந்த நைட்டி போட்டுட்டு வர்றவங்களைப் பார்த்தா சமாதானமா போய்டுவாங்களாம். அப்போ காஷ்மீர் பார்டருக்கு ஒரு டஜன் நைட்டி பார்செல் பண்ணுங்க. எல்லாரும் சமாதானமா போகட்டும்
•  கோல்கேட் –
 மைக் எடுத்துட்டு வந்துடுவாங்க உங்க டூத் பேஸ்ட்’ல உப்பு இருக்கா? அவனவன் சோத்துல போடுறதுக்கே உப்பு இல்லை. இதுல பல்லு விளக்க உப்பு வேணுமாக்கும்
• ஜாஸ் ஆலுக்காஸ் –
ஹி ஹி ஹி இந்த விளம்பரத்தை நான் வேற கலாய்க்கனுமா? விஜய் வந்ததால அதுவே காமெடியா போச்சு. ஆனா இன்னைக்கு வரைக்கும் புரியலை விஜய் மணியடிச்சி மோதிரம் கொடுக்கிறதுக்கு அர்த்தம் என்ன??
•  ஐடியா சிம் கார்ட்:
பேசுவதற்கு மொழி தேவையில்லை. அடங்கொப்புரானே பேச மொழி தேவையில்ல வாய் இருந்தா போதும்… இது தெரியாம் நிறைய பேரு இந்த சிம் கார்டை வாங்கி நாசமா போறாங்க…
•  ஹமாம் –
ஏன்  சொறியிற காமி காமின்னு ஆரம்பிக்கும் இந்த விளம்பரம். யாராவது சொறிஞ்சா அதுக்கு கொசு/ மூட்டை பூச்சி. இல்லை மிஞ்சி போனா குளிக்காம இருந்தா  தான் காரணம்னு நினைச்சா. ஹமாம் சோப் போட்டு குளிக்கலைன்னா சொறி வருமா? எந்த ஊரு நியாயம் நான்சென்ஸ்
கலாய்த்தவர்: http://flypno.blogspot.com/

==


தலைவரோட பேத்தி ஸ்க்ரூ ட்ரைவரை தூக்கிக்கிட்டு
ஓடினதை செய்தியாப் போட்டதுக்காகவா இவ்வளவு
கோபப்படறார்..?

ஊஹூம்…அதுக்குத் தலைப்பு ‘தலைவரின் பேத்தி
டிரைவருடன் ஓட்டம்’னு போட்டுட்டாங்களாம்…அதான்..!

============================================

தலைவரோட வீடு கோயில் மாதிரி..!

அவ்வளவு சுத்தமா..?

ஊஹூம்…வாசல்ல நிறைய செருப்பு கிடக்கும்.!

=========================================

ஒவ்வொரு தடவை பூட்டை உடைச்சுத் திருடும்போதும்,
மனசு கிடந்து அடிச்சுக்கும்..!

இது தப்புன்னா..?

இவ்வளவு நல்ல பூட்டையெல்லாம் வீணா
உடைக்கிறோமேன்னு..!

==========================================

தொழில்ல இந்த அளவுக்கு நஷ்டம் அடையக் காரணம்
என்னன்னு ஜோசியர்கிட்டே கேட்டதும்…

வாஸ்து சரியில்லைன்னாரா..?

ஊஹீம் என் ‘தோஸ்து’ சரியில்லைன்னார்..!

=======================================

பத்திரிகைக்காரங்க மேல தலைவர் ரொம்ப கோபமா
இருக்காரே, ஏன்..?

அவர் பீகார்ல கொஞ்ச நாள் இருந்ததை, திகார்ல
இருந்ததா எழுதிட்டாங்களாம்..!


==========================================

என் பையனைக்காட்டிலும் உன் பையன் பரீட்சையில
மார்க் கம்மியாத்தானே வாங்கினான்…
அவனுக்கு எப்படி இன்ஜினீயரிங் சீட் கிடைச்சது..?

பிச்சை எடுப்பவர்:- பேமன்ட் கோட்டாவுல சீட்
வாங்கிட்டேன் தாயீ..!

==========================================

இந்த டாக்டர் போலின்னு எப்படிக் கண்டு பிடிச்சீங்க..?

‘நாளைக் உங்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணனும்…
காலையிலேயே மெரீனா பீச்சுக்கு வந்திடுங்க’ன்னு
சொன்னாரே..!

>குட்டி.மு.வெங்கடேசன்
==========================================

வாரப் பத்திரிகைக்கு தட்டச்சு செய்கிறவர்கிட்டே குற்றப்
பத்திரிகையை ‘டைப்’ பண்ணக் குடுத்தது தப்பாப்
போச்சா…ஏன்?

‘இவை யாவும் கற்பனையே…யாரையும் எவரையும்
குறிப்பிடுவது அல்ல’ன்னு கடைசியில ஒரு ‘லைன்’
அடிச்சுத் தொலைச்சிருக்கார்..!

>ஜெயாப்ரியன்
==========================================
நன்றி: குமுதம்

ரசித்த இடம்: http://rammalar.wordpress.com

நாம் பல நேரம் நம் தங்கமணிகளின் படைப்பாற்றலை உணர்வதில்லை. இங்கே பாருங்கள் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சில பொருள்களை எப்படி அலங்கரித்திருக்கிறார்கள் என்று!


a href=”https://lh5.googleusercontent.com/-MLSTi9iXR8E/TXYyEcaFj2I/AAAAAAAAEH8/rH74oBei14I/s1600/Creative+Food+Photos+by+Vanessa+Dualib_026.jpg”>

ரசித்த இடம்: http://thakaduthakadu.blogspot.com

அவங்க ரசிச்ச இடம்: http://ideaswu.blogspot.com

எங்க வீட்டு Kitchen-ஐ ஆல்டர் பண்ணிட்டு
இருக்கோம்.. Kitchen Slab-காக எடுத்துட்டு
வந்த கிரானைட் கல்லுல 2 அடி மிச்சமாயிடுச்சு..

அதை என்ன பண்ணலாம்னு நானும்.,
என் Wife-ம் Discuss பண்ணிட்டிருந்தோம்..
( இதெல்லாம் சும்மா Formality.. எப்படியும்
கடைசில நான் சொல்றது தான் நடக்காது..! )

” ஏங்க… வீட்டுக்கு வெளியில இருக்குற
Steps-க்கு போடலாமாங்க..? ”

” வேணாம்.. ஈரமா இருந்தா வழுக்கி
விட்டுடும்..! ”

” டைனிங் ஹால்ல ஒரு Slab போட்டுக்கலாம்ங்க..?
ஊறுகா பாட்டில் எல்லாம் வைக்க வசதியா
இருக்கும்.! ”

” வேணாம்.. டைனிங் ஹால் ஏற்கனவே
ரொம்ப சின்னதா இருக்கு.. அப்புறம்
இடைஞ்சலா போயிடும்..! ”

” சப்பாத்தி கல்லாவது பண்ணலாம்க…! ”

” வேணாம்.. Next..? ”

” சப்பாத்தி நல்லா வரும்க..! ”

” அதான் வேணாம்னு சொல்றேன்ல..! ”

இதை பாத்துட்டு கிரானைட் ஒட்டி
குடுக்க வந்தவன்..

” சார்..அதான் மேடம் ஆசைப்படறாங்கல்ல..
சப்பாத்தி கல்லே செஞ்சி குடுங்க..! ”

( டேய்…. சப்பாத்தி கல்லு
Wood-ல பாத்து இருப்ப..,
Steel-ல பாத்து இருப்ப.,
Stainless Steel-ல பாத்து இருப்ப…
எங்கயாவது கிரானைட்ல பாத்து இருக்கியா..?
அதுவும் கறுப்பு கிரானைட்ல பாத்து இருக்கியா..?

தூக்கி அடிச்சா ஒன்ரை கிலோ வெயிட்டுடா..

என் நிலைமை புரியாம படுத்தாதே )

என் Wife என்கிட்ட ரகசியமா..
” நீங்க எதுக்கோ பயப்படற மாதிரி தெரியுதே..! ”

” ஹி., ஹி., ஹி… இல்லையே..! ”
( அவ்ளோ வீக்காவா இருக்கோம்..?! )

” சரி., உன் ஆட்டோகிராப் இந்த பேப்பர்ல
போட்டு குடேன்னு ” சொல்லி ஒரு வெத்து
ஸ்டாம்ப் பேப்பர்ல என் Wife -கிட்ட
ஒரு கையெழுத்து வாங்கிட்டு
சப்பாத்தி கல்லு செஞ்சி தர சொல்லிட்டேன்..

அப்புறமா அதுல ” இந்த சப்பாத்தி கல்லுல
என் Husband-ஐ அடிக்க மாட்டேன்னு ”
நானே Fill பண்ணிகிட்டேன்..

நாங்கல்லாம் சாணக்கியனுக்கே ஐடியா
சொல்றவங்க.. எங்ககிட்டயேவா..?!!

சப்பாத்தி கல்லு செஞ்சி வந்தது..
அதை தூக்கி பாத்த என் Wife…

” ரொம்ப வெயிட்டா இருக்குங்க..! ”

” அப்பாடி…! இதை உன்னால தூக்க
முடியாது., தூக்கினாலும் அடிக்க
முடியாது.. Thank God..! ”

” இதை தூக்க முடியலைன்னா என்ன..
சப்பாத்தி கட்டையை ஈஸியா தூக்க
முடியும்ல…! ”

” அடிப்பாவி…! ”
( நமக்கு இன்னும் பயிற்சி தேவையோ..?!! )

அனுபவத்தை சொன்னவர்: http://gokulathilsuriyan.blogspot.com/

ஒரு முதலாளி அவருடைய மூத்த மற்றும் இளைய அதிகாரியுடன் ஒரு கூட்டத்திற்கு அந்த பூங்காவின் வழி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ஒரு அற்புத விளக்கை கண்டு அதை தேய்த்தனர். நாம் அனைவரும் எதிர் பார்த்த படியே ஒரு பூதம் வந்தது. உங்களுக்கு மூன்று ஆசைகளை நான் நிறைவேற்றி தருவேன். கேளுங்கள் என்று சொன்னது.

மூத்த அதிகாரி நான் உடனே ஹவாயில் என்னுடைய சொந்த படகில் இருந்து மீன் பிடித்து பொழுது போக்க வேண்டும் என்று கேட்டார். உடனே அவர் மாயமாக மறைந்து அவருடைய விருப்ப படியே சொந்த படகில் மீன் பிடித்து கொண்டிருந்தார்.

இளைய அதிகாரியோ நான் உடனே ஹன்ஷிகாவுடன் சந்திர மண்டலத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டார். உடனே அவர் மாயமாக மறைந்து சந்திர மண்டலத்தில் விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.

இதை பார்த்து கொண்டிருந்த முதலாளி உடனே கேட்டார்: அந்த இரண்டு முட்டாள்களும் உடனே இங்கே வர வேண்டும். உடனே இரு அதிகாரிகளும் அதே இடத்துக்கு திரும்ப வந்தனர்.

நீதி: எப்பொழுதுமே முதலாளியை பேச விடுங்கள் இல்லையேல் இப்படி தான் ஆகி விடும்
ஆங்கிலத்தில் ரசித்த இடம்:  http://funnyclick.blogspot.com

ஒரு பெரிய செல்வந்தன் இருந்தான் .ஆனால் சரியானகஞ்சன்.யாருக்கும் ஐந்து பைசாகூட 

உதவி செய்யமாட்டான் .

அவனிடம் ஏராளமான தங்க காசுகள்  இருந்தன .அவற்றை வீட்டில் வைத்தால் யாரும் திருடிவிடக்கூடாது என்று எண்ணி ஊரின் அருகிலிருந்த அடர்ந்த வனப்பகுதியில் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் ஓர் மரத்தடியில் குழி தோண்டி புதைத்து வைத்தான் .

அடிக்கடி புதைத்து வைத்த இடத்திற்கு சென்று அவை  பத்திரமாக இருக்கின்றனவா என்பதை கவனித்துக்கொண்டான் .

அவனுக்கு இப்போது வயதாகிவிட்டது .அவனுடைய பிள்ளைகள் சரியான வருமானமில்லாமல் வறுமையில் இருந்தார்கள். அவர்களுக்கு கூட எந்த உதவியும் செய்யவில்லை .தங்க காசுகள்  இருப்பதையும் தெரியப்படுத்தவில்லை .

அடிக்கடி இவன் காட்டிற்கு சென்று வருவதை சில திருடர்கள் கவனித்துவிட்டனர் .அவனை ரகசியமாக பின்தொடர்ந்து தங்க காசுகளின்  இருப்பிடத்தை அறிந்து கொண்டனர் .அதே நாள் இரவில் அத்தனை தங்கத்தையும்  சுருட்டிக்கொண்டு இடம் பெயர்ந்தனர் .

சிலநாள் கழித்து வந்த செல்வந்தன் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவன் தங்கத்தை  புதைக்கப்பட்டிருந்த குழி வெற்றாக இருந்தது .அழுது புலம்பினான் தரையில் படுத்து உருண்டான் .

அப்போது அந்த வழியாக ஒரு ரிஷி வந்தார் .அவரிடம் நிகழ்ந்தவற்றை கூறினான் .அவர் அவனுக்கு ஆறுதல் சொல்லி அடுத்தநாள் இதே இடத்திற்கு வா தங்கத்தை  மீட்டு தருகிறேன் என்று கூறினார் .

இரவு முழுவதும் தூக்கமில்லாத அவன் விடிந்ததும் ரிஷி கூறிய இடத்திற்கு சென்றான் .ரிஷி அவன் கையில் ஒரு பொட்டலத்தை நீட்டி உனது தங்ககாசுகள்  சரியாக இருக்கின்றனவா என்று சோதித்துக்கொள் என்றார் .

பொட்டலத்தை அவிழ்த்த செல்வந்தனுக்கு மேலும் அதிர்ச்சி அதில் வெறும் கற்கள்தான் இருந்தன .ரிஷியிடம் நான் புதைத்து வைத்திருந்தது இவைகளையல்ல தங்க காசுகள்  என்றான் .

ரிஷி இவை  நீ வைத்திருந்த தங்க காசுகளுக்கு  இணையானவைதான் .நீ புதைத்து வைத்திருந்த தங்கம்  யாருக்கும் பயன்படாமல் இருந்தது. அதே இடத்தில் இந்த கற்களை  புதைத்து வைத்தாலும் அதே நிலைதான் .

உனக்குத்தான் ஒரு வேலை மிச்சம் கற்களை யாரும் எடுக்கமாட்டார்கள்  என்பதால்  அடிக்கடி வந்து சோதிக்க வேண்டியதில்லை .

 

செல்வந்தனுக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை ஆனாலும்  தான் செய்த தவறை உணர்ந்து விட்டான் .இருக்கின்ற சொத்துகளையாவது பிள்ளைகளுக்கு கொடுப்போம் என்று எண்ணி வீடு நோக்கி நடந்தான் .

ரசித்த இடம்: http://koodalbala.blogspot.com

வாடிக்கையாளர்: வணக்கம், என்னுடைய பிரிண்டர் வேலை செய்யவில்லை.
சேவை அதிகாரி: என்ன பிரச்சினை?

வாடிக்கையாளர்: என்னுடைய ப்ரிண்டேரினுள் மவுஸ் மாட்டி கொண்டது. வெளியே எடுக்க முடிய வில்லை.
சேவை அதிகாரி: எங்கள் ப்ரிண்டேர்களுடன் நாங்கள் மவுஸ் இணைப்பதில்லையே! பின் எப்படி?
வாடிக்கையாளர்: நீங்கள் நம்ப வில்லை போல தெரிகிறது. இதோ ஒரு புகைப்படம் அனுப்புகிறேன். பார்த்து விட்டு சொல்லுங்கள்.
வாடிக்கையாளர் அனுப்பிய புகைப்படம் காண  கீழே  பார்க்கவும் (மானிட்டருக்கு கிழே இல்லங்க, பதிவுக்கு கீழே பாருங்க)

.

.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.

ஆங்கிலத்தில் மண்டை காய வைத்தவர்: http://priyatamil.wordpress.com

கூகிள் பிளஸ் வந்தாலும் வந்திச்சி இந்த இணையம் பூராவும் இதே ரகளதான், இணைய உலகில் அசைக்க முடிய அரசன் என வர்ணிக்கும் கூகிள் ,பேஸ் புக்கின் வளர்சியால் சற்றே தடுமாறியது யாவரும் அறிந்ந்ததே ,தற்போது பேஸ் புக்கிற்கே ஆப்படிக்க வந்துவிட்டது கூகிள் பிளஸ் பேஸ் புக்கினைவிடை கூக்கிள் பிளஸ் சில் இந்த சிறப்பு அதிகம் அந்த சிறப்பு அதிகம் இந்த பகுதியினை இன்னும் கொஞ்சம் கவனத்தில் கொண்டால் இன்னும் சிலவாரங்களிலேயே பேஸ் புக்கிற்கு மூடுவிழா நடத்தலாம் என்றெல்லாம் தொழிநுட்பம் சார்ந்த பதிவெல்லாம் இல்லைங்கோ இது அதனை பற்றி பதிவுலகில் அதிகமான பதிவுகள் வந்துவிட்டது .இது சும்மா கூகிளின் வருகையினால் பேஸ் புக்கிற்கு கிடைக்கும் ஆப்புக்க்கள் சம்பந்தமாக இணையத்தில் உலாவிய நகைச்சுவை கலந்த கலக்கல் படங்கள் …

ரசித்த இடம்: http://qaruppan.blogspot.com

நேற்று இரவு நான் வீட்டிற்க்கு சென்ற போது நம்ம தங்கமணி ரொம்ப சூடா இருந்தாங்க. சரி சமாதானபடுத்தலாமேன்னு நெனைச்சு எங்கியாவது வெளிய போகலாமான்னு கேட்டேனுங்க (நமக்கு நாக்கில சனி! என்ன பண்றது). தங்கமணியும் ரொம்ப சந்தோசமா ஏதாவது விலை உயர்ந்த பொருள் விக்கிற எடத்துக்கு கூட்டிட்டு போங்கன்னு சொன்னாங்க. சரின்னு சொல்லி அவங்கள பெட்ரோல் பல்க் கூட்டிட்டு போனேனுங்க. இதுல ஏதாவது தப்பு இருக்கா சொல்லுங்க? இன்னும் ரொம்ப சூடா ஆகி வீட்டுக்கு நடந்தே போய்ட்டாங்க.

பின்குறிப்பு: வீட்டுக்கு போன நான் வராந்தால படுத்துருந்த கதை எல்லாம் அனாவசியம் அப்படிங்கறதுனால சொல்லலீங்க

ஒரு காட்டில் உள்ள மரத்தில், உங்களை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்ருகாங்க. அந்த கயிறை ஒரு மெழுகுவர்த்தி எரித்து கொண்டிரிக்கிறது. கீழே,நீங்க எப்ப கீழே விழபோறிங்கன்னு ஒரு சிங்கம் வேற வைடிங்க்ல இருக்கு. இந்த சூழ்நிலைல எப்படி நீங்க தப்பிபீங்க???

விடை கீழே….
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

நீங்க ஹாப்பி பெர்த்டே பாடுனிங்கண்ணா சிங்கம் ஓடி போய் மெழுகுவர்த்தியை அணைச்சிடும்….. நீங்க எஸ்கேப்….. இப்ப நான் எஸ்கேப்…


அடிப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இடம்: எறும்பு 

பார்பதற்கு விக்கிபீடியா கலைக்களஞ்சியம் போலவே தோற்றம் அளிக்கும் தளம்,முற்றிலும் தவறான தகவல்களையே கொடுக்கும் தளம்,காமெடிக்காக மட்டுமே

அந்த தளத்தில் google என்று டைப்பி தேடினேன்

கிடைத்தது

Did you mean: Evil Empire?

No standard web pages containing all your search terms were found.

Your search – Rat – did not match any documents.

Suggestions:

  • Help me, HELP ME! THEY GOT ME OH MY GOD OH MY GOD GOING DOWN MAYDAY MAYDAY(end transmission)
  • It’s a trap!
  • Oh, for God’s sake check your spelling!
  • Escape from your mum’s closet. Even living in New York is better than that place.
  • Run before they find you.
  • Forget the last one – no one can escape from google, just kill your self now.
  • Quit searching for illegal Child porn, it’s fucking illegal dude!.
  • Or Just Fuck off and eat Mr. Hydes giant balls.

அந்த தளத்திற்கு செல்ல சொடுக்கவும் இங்கே
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நல்லாவே இருக்கும்.

கண்டுபிடித்து சொன்னது: http://jillthanni.blogspot.com

ஒரு நிறுவனம் பிடித்த உடை தினத்தை வெள்ளி என்று தீர்மானிக்கிறது. அவர்கள் அதை அறிவிக்க ஒரு கடிதம் வெளியிட்டனர்.

Week 1

Memo 1: Effective this week, the company is adopting Fridays as Casual Day. Employees are free to dress in the casual attire of their choice.

Week 3

Memo 2: Spandex and leather micro-miniskirts are not appropriate attire for Casual Day.

Week 6

Memo 3: Casual Day refers to dress only, not attitude.

Week 8

Memo 4: A seminar on how to dress for Casual Day will be held at 4 p.m. Friday in the cafeteria. A fashion show will follow. Attendance is mandatory.

Week 9

Memo No. 5: As an outgrowth of Friday’s seminar, a 14-member Casual Day Task Force has been appointed to prepare guidelines for proper casual-day dress.

Week 14

Memo 6: The Casual Day Task Force has distributed a 30-page manual entitled “Relaxing Dress Without Relaxing Company Standards.” A copy has been distributed to every employee.

Week 18

Memo 7: Company is providing psychological counseling for employees who may be having difficulty adjusting to Casual Day.

Week 20

Memo 8: We are no longer able to effectively support or manage Casual Day. Casual Day is discontinued

ஃபைட்டர் ஏர்-க்ராஃப்ட் சுத்தி பறக்கும்.. ரவுண்ட் அடிக்கும் (ரெண்டும் சேம்?).. சில சமயம் அது போகுற ஸ்பீபீபீபீபீடுல தலைகீழாவும் பறக்கும். அப்படி ஸ்பீபீபீபீபீடாபறக்குறப்ப, நேர பறக்குதா இல்லை தலைகீழப் பறக்குதா அப்படீன்னு அத ஓட்டுற பைலட்டுக்கே சந்தேகம் வந்திடுமாம். அப்ப அவங்க ராடார் கண்ட்ரோல் ரூமுக்கு காண்டாக்ட் பண்ணி கேட்பாங்களாம். கண்ட்ரோல் ரூமுலேருந்து ‘ஏர்-க்ராஃப்ட்’ தெரியாது. எப்படி சரியா பதில் சொல்ல முடியும் ? யோசிங்க..

கண்ட்ரோல் ரூம்லேருந்து, பிளேன ‘லெஃப்ட்’ல திரும்பச் சொல்லிட்டு மானிட்டர்ல ப்ளேன் (புள்ளியாத்தான் தெரியும்) ‘லெஃப்ட்’ல திரும்பினா, ப்ளேன்  நேர பறக்குது.. ஆனா ‘ரைட்’ சைடுல திரும்பினா, தலைகீழ பறக்குதுன்னு சொல்லுவாங்களாம். இந்த தகவலை ‘ஏர்-ஃபோர்ஸ் ராடார் கண்ட்ரோல்’ யூனிட்ல வேலை செஞ்ச நண்பர் ஒருத்தர் எனக்குச் சொன்னார்.

கேட்டு சொன்னது நண்பர் மாதவன்

  • மூழ்கி கொண்டிருக்கும் Titanic கப்பலில் இருந்து முதலில் வெளியே வரலாம்.
  • சாக்லேட்களால் பிரச்சினைகள் தீர்ந்து விடும்
  • திசை தெரியாமல் சுற்றி திரிவதை விட வழி கேட்பது நல்லது என்ற அறிவு எனக்கு உண்டு.
  • சப்போர்ட் டீமில் இருந்து எங்களுக்கு தான் முதல் பதில் வரும்.
  • கணிப்பொறியை எப்படி வீணாக்கினாலும் எங்களை திட்ட மாட்டங்க.
  • முட்டாள் ரங்கமணிகளின் அருகில் இருக்கும் போது நாங்கள் தேவதைகளாக தெரிவோம்.
  • ரங்கமணிகள் சீக்கிரம் இறந்து போக அவர்களின் insurance பணம் நாங்கள் அனுபவிப்போம்.
  • மற்ற தங்கமணிகளை விகல்பமின்றி கட்டி பிடிக்கலாம்.
  • மற்ற தங்கமணிகளை பாராட்ட அவர்கள் பின்புறம் தட்ட தேவை இல்லை.

கடவுள் நம்பிக்கை

Posted: ஜூலை 5, 2011 in கதைகள்
குறிச்சொற்கள்:

ஒரு சிறிய நகரத்தில் ராமன் புதிய பார் ஒன்றை திறக்க ஏற்பாடுகள் செய்து வந்தான். ஆனால் அந்த பார் கோயிலுக்கு நேர் எதிரில் இருந்ததால் அந்த கோயிலின் நிர்வாகமும் பக்தர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்காக அவர்கள் அதிகாரிகளை பார்த்து மனுக்கொடுப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என அவர்களால் முடிந்ததை செய்து வந்தனர்.

ஆனால் ராமனோ அதனை பற்றி கவலை படாமல் ஏற்ப்பாடுகளை தொடர்ந்து வந்தான். இப்படி இருக்கும் பொது ஒரு நாள் இரவு நல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்பொழுது இடி தாக்கி அந்த பார் கட்டடம் எரிந்து மண்ணோடு மண்ணாக ஆகி விட்டது.

இதனால் கடுப்பாகி விட்ட ராமன் நீதி மன்றத்தில் கோயில் நிர்வாகமும் அதன் பக்தர்களும் செய்த பிரார்த்தனைகள் தான் தன் பார் கட்டடம் ஏறிய காரணம் என்றும் அதனால் அதற்கு உரிய நஷ்ட ஈடு வாங்கி தர வேண்டும் என்றும் முறையிட்டான். கோயில் நிர்வாகமும் அதன் பக்தர்களும் கூட்டாக அதனை மறுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இப்படி கருத்து சொன்னார்: இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது ஒரு பக்கம். ஆனால் விசித்திரம் என்னவென்றால் கடவுள் நம்பிக்கை இல்லாத ராமன் பிரார்த்தனைகள் தான் இதற்கு காரணம் என்கிறான். கடவுள் நம்பிக்கையுள்ள கோயில் நிர்வாகமும் அதன் பக்தர்களும் இல்லை என்கின்றனர்.

Mr.பிரபாகரன்.. இவர் தான்
எங்க +1 Maths மாஸ்டர்..

எங்களுக்கு அவர் Maths மாஸ்டரா
வந்ததுக்கு இந்த நாடே அவருக்கு
கடமைப்பட்டு இருக்கு..

( இல்லன்னா.. நாங்க Maths-ல
Centum எடுத்து., அதனால Cut-Off-ல
200/200 வந்து., டாக்டர் சீட் கிடைச்சி.,
MBBS படிச்சி, MD முடிச்சி., FRCS
படிக்க லண்டன் போயி, அப்புறம்
வெளி நாட்லயே செட்டில் ஆகி……

உஸ்ஸப்பா.. சொல்லும் போதே
இப்படி மூச்சு வாங்குதே..!! )

ஒரு தடவை கிளாஸ்ல அவர்
” பிதோகரஸ் தியரம் ” எடுத்துட்டு
இருந்தாரு..

அப்ப கிளாஸ்ல இருக்குற மொத்த
36 பேர்ல 34 பயலுக மனசுக்குள்ள
அந்த ” பிதோகரஸ்சை ” கண்டபடி
திட்டிட்டு இருந்தானுக..!

ம்ம்…அன்னிக்கு ” பிதோகரஸ்சை ”
திட்டாத அந்த ரெண்டு நல்ல உள்ளங்கள்..
நானும்., என் Friend ஆனந்தும்..

( அரை தூக்கத்துல இருக்கும் போது
எங்களால யாரையும் திட்ட முடியாது.
ஹி., ஹி., ஹி.! )

அப்ப திடீர்னு Mr.பிரபாகரன்
என் பக்கத்துல இருந்த ஆனந்த்-ஐ
எழுப்பி….

Board-ல வரைஞ்சி வெச்சிருந்த
ஒரு முக்கோணத்தை காட்டி..

” இதுல ” C “-யோட Value-ஐ
எப்படி கண்டுபிடிப்ப..? அந்த
Formula சொல்லு..! ”

அவன் திரு திருன்னு முழிச்சான்..

” என்னடா.. முழிக்கிற..? ”

” சார் அது வந்து.. ”

” சரி ஒரு பேச்சுக்கு இந்த முக்கோணத்துல
A = 3 , B = 4-னு வெச்சுக்க… அப்ப ” C “-ன்
Value என்ன..? ”

அவன் ” டக்னு ” Answer சொல்லிட்டான்..

” C = 7 சார்..! ”

” என்னாது 7-ஆ..? ஏழு எப்படிடா வரும்.?
ஏழு எப்படி வரும்.? கிளாஸ்ல ஒழுங்கா
கவனிச்சா தானேன்னு ” ஆனந்த்-ஐ
அடி பின்னி எடுத்துட்டாரு..

( நல்லவேளை நான் எஸ்கேப்..! )

கிளாஸ் முடிச்சப்புறம்..
ஆனந்த் என்கிட்ட ரொம்ப பீல்
பண்ணி சொன்னான்..

” ஏன்டா.. எனக்கொரு நியாயம்..
அவருக்கு ஒரு நியாயமாடா..? ”

” என்றா சொல்ற..? ”

” பின்ன., அவரு மட்டும் A = 3,
B=4 ன்னு ஒரு பேச்சுக்கு சொல்லலாம்..
நான் மட்டும் ” C = 7 “-னு
ஒரு பேச்சுக்கு சொல்ல கூடாதா..?! ”

” அட ஆமா.. இது கூட லாஜிக்கா தானே
இருக்கு..?!! ”

( என் பக்கத்துல உக்காந்து இருக்கறதால
இந்த பையனுக்கு தான் எவ்ளோ அறிவு..?!! )

அனுபவத்தை சொன்னது: http://gokulathilsuriyan.blogspot.com

ஏழையாக இருப்பது நல்லது. வியாதி வந்தால் டாக்டர் சீக்கிரம் குணப்படுத்திவிடுவார்.
==============================
E.C.G என்பது ஜீவன் ஈஸியாகப் போகுமா இல்லை அவஸ்தைப்பட்டு போகுமா என்று கோடிட்டு காட்டும் வரைபடம்.
==============================
அபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.
==============================
செல்வா: அப்பா நம்ம கார யாரோ திருடிட்டு போறாங்க.
அப்பா: அவங்க யாருன்னு பாத்தியா?
செல்வா: இல்லப்பா ஆனா கார் நம்பர் நோட் பண்ணினேன்.
==============================
வக்கீல்: போலீஸ் விசிலடிச்சு,கையை ஆட்டி கூப்பிட்ட போது ஏன் காரை நிறுத்தலை?
பெண்: நான் அந்த மாதிரி பெண் இல்லைங்க..
==============================
நல்லவேளை நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். வடநாட்டில் பிறந்திருந்தால் ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டிருப்பேன்.
==============================
மூக்கில் ரத்தம் கசியாமல் இருக்க மற்றவர் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலம்.
==============================
வந்தது போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது சாதாரண ஆபரேசன். வராமலே போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன்.
==============================
அவர் யாரிடமும் ஷட்-அப் என்று சொல்ல மாட்டார். அவர் ஒரு பல் டாக்டர்.
==============================
எங்கள் தாத்தா நூறு வயது வரை உயிரோடு இருப்பதற்கு காரணம் ஆப்பிள் தான். ஆம் இதுவரை அவர் ஆப்பிள் சாப்பிட்டதே இல்லை.
==============================
உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.
==============================
ஒரு பெண்ணுக்கு அழகுதான் அவளது சொத்து என்றால் நிறைய பெண்களுக்கு சொத்து வரி கட்ட அவசியமே இருக்காது.
==============================
மொட்டைத்தலை உள்ளவனுக்கு மயிர் கூச்செறியும் கதை சொல்லலாமா?
==============================
எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமெனில் வயதானவர்கள் பக்கத்திலேயே இருங்கள்.
==============================
உடல் எடையை குறைக்க அவன் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தான். ஆனால் எடை குறையவில்லை. நண்பர்கள் குறைந்துவிட்டனர்.
==============================
ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?
==============================
திருமண மோதிரம்: உலகத்திலேயே விரலுக்கு போடும் மிகச் சிறிய விலங்கு
==============================
ஒரு பெண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவாள் திருமணம் ஆகும்வரை. ஒரு ஆண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டான் திருமணம் ஆகும்வரை.
==============================
உலகத்திலேயே ஒரே ஒரு பெண்தான் நல்லவள் இல்லை. அவள்தான் என் மனைவி என பல கணவன்மார்கள் நினைப்பதுண்டு.
==============================
சமையலறையில் நிகழும் விபத்தைதான் ஏன் மனைவி எனக்கு டின்னராக பரிமாறுகிறாள்
==============================
இரண்டு கல்யாணம் செய்து கொள்பவனுக்கு தண்டனை – இரண்டு மாமியார்கள்.
==============================
கணவன்: ஏன் உறவுக்காரங்க வந்தா நீ சரியா கவனிக்கிறதில்லை?
மனைவி: ஏன் இப்படி சொல்றீங்க. என் மாமியாரைவிட உங்க மாமியாரத்தான நான் நல்லா கவனிக்கிறேன்.
==============================
நண்பர் 1 : கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறதா?
நண்பர் 2 : உண்டு. என் மனைவியை முதன் முதலாக ஒரு பெட்ரோல் பாங்கில்தான பார்த்தேன்.
==============================
தூக்கத்தில் உளறுவது பற்றி அவன் கவலைப்பட மாட்டான். அவனுடைய மனைவிக்கும் அவனுடைய ஸ்டெனோ வுக்கும் ஒரே பேர்தான்.
==============================
குழந்தைகள் வேகமாக வளர்வதே ஸ்கூல் யூனிபார்ம் வாங்கியபின் 2,3 மாதங்களில்தான்
==============================
டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். அவருக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர் டெலிபோனை கண்டுபிடித்தே இருக்க மாட்டார்.
======================================
ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு வந்த கடிதம்:

அய்யா என் மனைவி என்னை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தாள். உங்கள் பத்திரிகையில் வந்த “விவாகரத்தும், அதன் விபரீத விளைவுகளும்” என்கிற அருமையான கட்டுரையை படித்ததும் மனம் திருந்தி விவாகரத்து முயற்சிகளை கைவிட்டுவிட்டாள்.

பின் குறிப்பு: இத்துடன் நான் என் சந்தாவை கேன்சல் செய்கிறேன். இனிமேல் உங்கள் பத்திரிக்கையை எனக்கு அனுப்ப வேண்டாம்.
==============================

நன்றி: வெண்ணிறாடை மூர்த்தி. அவர் எழுதிய புத்தகத்தில் தொகுத்தது
படித்ததில் பிடித்ததை தொகுத்து G+ இல் பதிப்பித்தவர் நண்பர் அருண்குமார்

 

நம்ம மங்குனி போன வாரம் புதுசா
ஒரு கம்ப்யூட்டர் வாங்கினாராம்..

அதுல ஏகப்பட்ட  பிரச்னைன்னு
அந்த கம்பெனிக்கு ஒரு லெட்டர்
எழுதியிருக்காரு பாருங்க..
சான்ஸே இல்ல

மங்கு ஒரு சிறந்த அறிவாளின்னு (?!)
நமக்கெல்லாம் தெரியும்.. அது
இனிமே உலகத்துக்கே தெரிய போகுது
இந்த லெட்டர் மூலமா…

To
&%^$#@&*^%$#- HCL,

( மங்கு அந்த கம்பெனிக்காரனை
கெட்ட வார்த்தையில திட்டினதை
எல்லாம் நாம எடிட் பண்ணிடலாம்..
நமக்கு ஒரு 5 பக்கமாவது மிச்சமாகும்.. )

போன வாரம் நான் வாங்கின
கம்ப்யூட்டர்ல ஏகப்பட்ட தப்பு இருக்கு..

1. என் Keyboard-ல ABCD எல்லாம்
வரிசையா இல்லாம இடம்
மாறி மாறி இருக்கு..

2. என் Key Board-ல Control Key
இருக்கு. ஆனா எத்தனை தடவை
அழுத்தினாலும் என் Wife-ஐ என்னால
Control பண்ணவே முடியல.

3. தப்பு பண்ணினப்ப Wife-கிட்ட
மாட்டிக்காம இருக்க Escape Key-ஐ
அழுத்தி பார்த்தேன்.. அதுவும் சரியா
வேலை செய்யல.. தர்ம அடி..

4. என் Key Board-ல ரெண்டு
‘ Shift ‘ Keys இருக்கு. அதுல
எது Day Shift..? எது Night Shift..?

5. அந்த TV-ல ( Monitor ) சேனல்
மாத்தற பட்டனே இல்ல..
முக்கியமா நீங்க Remote தரலை..
( யாரை ஏமாத்த பாக்கறீங்க.?! )

6. ஆபீஸ்ல இருக்கும் போது
பல தடவை ” Home ” Button-ஐ
அழுத்தி பாத்துட்டேன்.. அது என்னை
வீட்டுக்கே கூட்டிட்டு போகலையே..

7. ” $ ” Button-ஐ அழுத்தினா
அமெரிக்க டாலர் வரலை..

8. அதே மாதிரி ” காபி ” Button-ஐ
அழுத்தினாலும் ” காபி ” வரைல..
என்னய்யா கடை வெச்சு நடத்தறீங்க..?
( எலே மங்கு.. அது ” Coffee ” இல்ல.,
” Copy ” )

9. Caps Lock-ன்னு ஒரு Button இருக்கே.
அதை வெச்சு எங்க வீட்டு மெயின்
கேட்டை பூட்ட முடியுமா..?

10. என் பையன் Homework தப்பா
எழுதினப்பா ” Delete ” Key அழுத்தி
பார்த்தேன்.. ஆனா தப்பா எழுதினதெல்லாம்
அது அழிக்கலையே..

இதையெல்லாம் எனக்கு சரி பண்ணி
தரல.. பிச்சுபுடுவேன் பிச்சு…

இப்படிக்கு
அன்பு மங்குனி அமைச்சர்
( ஆமா.. இப்ப இது ஒண்ணு தான்
குறைச்சல்.! )

டிஸ்கி : அந்த கம்பியூட்டர் கம்பெனிக்காரன்
Suicide Attempt பண்ணினதுக்கும்., இந்த
லெட்டர்க்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.

மங்குனியின் கடிதத்தை தெரியாம படிச்சு எனக்கு சொன்னது: http://gokulathilsuriyan.blogspot.com

உங்களை மரியாதைக் குறைவா திட்டிட்டோமோன்னு மனசுக்கு
கஷ்டமா இருந்துச்சு…!

அதுக்காக மன்னிப்பு கேட்க வந்தீங்களா..?

இல்லை…மரியாதையா திட்டிட்டு போகலாம்னு வந்தேன்..!

=================================================

ஆனாலும் அவர் அநியாயத்துக்கு முன் ஜாக்கிரதைப் பேர் வழியா
இருக்கிறார்…!

என்ன செய்கிறார்..?

தனக்கு கொலஸ்ட்ரால் இருக்குங்கிறதுக்காக கோயிலில் தேங்காய்
உடைக்கிறதேயே நிறுத்திட்டார்…!

==================================================

காதலிச்ச உங்களை கைவிட முடியலே…

அதனால…?

கல்யாணம் பண்ணிக்கிட்டு டைவர்ஸ் பண்ணிடலாம்னு இருக்கேன்…!

==================================================

‘செல்’ பேச்சு கேட்காதேன்னு எழுதிப் போட்டிருக்கியே…ஏன்..?

என் மாமியார் செல்போன் மூலமா என் கணவருக்கு துர்போதனை பண்றாரே…!

====================================================
(படித்ததில் பிடித்தது)

படித்து பிடித்து சொன்னவர்: http://rammalar.wordpress.com

(producer தனது ஆபிசில் சில தெலுங்கு பட விசிடிகளை பார்த்து கொண்டிருந்தார். )

director: சார்! உள்ள வரலாமா சார்?

prod: யோவ்! பாரதிகௌதம்….என்னய்யா ஆளே காணும்? வா வா…உட்காரு.

dir: சார், போன தடவ நீங்க தான் சார் என்னைய அடிச்சு விரட்டிவுட்டீங்க!

prod: ஆமா யா! பன்னி கதை, நாய் கதைனு சொன்னா….கோபம் தான் வரும்! சரி, அப்பரம்..இப்ப என்ன படம் direct பண்ணிகிட்டு இருக்க?

(மேசையில் இருந்த தெலுங்கு பட விசிடிகளை பார்த்த கௌதம்)

dir: சார், என்ன சார், தெலுங்கு படம் எடுக்க போறீங்களா?

prod: அது ஒன்னுமில்லையா, சிம்பு கால்ஷீட் இருக்கு. அப்படியே ஏதாச்சு ஒரு தெலுங்கு படத்த ரீமேக் பண்ணலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.

dir: என்ன சார் நீங்க? நீங்க இப்படி பண்ணலாமா? ரீமேக் படமெல்லாம் எடுத்தா, எங்கள மாதிரி creative ideas இருக்குற இயக்குனர்களுக்கு வாய்ப்பு இல்லாமா போயிடாதா சார்:)

prod: அதலாம் ஒன்னும் போகாது. உங்கிட்ட கதை இருக்கா? சொல்லு?

dir: ஆமா சார்! உங்களுக்கு தெலுங்கு படம் மேல இப்படி ஒரு மோகம் இருக்குன்னு எனக்கு தெரியும் சார். என்கிட்ட ஒரு script இருக்கு. ஒரு படம், 5 கதை…..

prod: (வாய் விட்டு சிரித்தார்)

dir: சார், இது காமெடி கதையா? action கதையான்னு கூட தெரியாம ஏன் சார் சிரிக்கிறீங்க?

prod: உன்கிட்ட கதை இருக்குதுனு சொன்னதே பெரிய காமெடி, அதலயும் 5 கதைனு சொன்ன பாத்தீயா….(சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார்)

dir: சார், கிண்டல் பண்ணாதீங்க…கதைய கேளுங்க….5 கதை, 5 characters, எல்லாரும் வெவ்வேற வாழ்க்கை வாழுறாங்க…ஆனா கடைசில ஒரு ipl match சந்திக்குறாங்க. அங்க என்ன நடக்குது….அது தான் சார் கதை. எப்படி?

prod: படத்துக்கு title?

dir: பூமி, கீழே tagline ‘எங்க காமி?’

prod: என்னய்யா? என்னைய பாத்தா geography professor மாதிரி இருக்கா? இந்த 5 பட கதை எல்லாம் உனக்கு ஒத்து வராது. ஒரே கதை, நல்ல கதையா சொல்லு?

dir: so

prod: அதான் சொல்லிட்டேன்ல. நீ தான் கதைய சொல்லனும்.

dir: so

prod: என்னய்யா மறுபடி மறுபடியும் so? கதை இருக்கா இல்லையா?

dir: ஐயோ சார், கதை பெயரே அது தான் சார்!

prod: என்னது?

dir: சோ!

prod: (முகம் மலர்ந்தது) ரொம்ப வித்தியாசமா இருக்கே!

dir: எனக்கு தெரியும் சார்! உங்களுக்கு இந்த கதை பிடிக்கும்னு. இந்த படம் முழுக்க ரொம்ப hi techல போகும் சார். படத்துல hero ஆப்பிள் விக்கிறவரு!

prod: ஆப்பிளா? யோவ்…சாத்துகுடி, மாம்பழம்…இப்படி ஏதாச்சு விக்க சொல்லுய்யா!

dir: சார்! அந்த ஆப்பிள் இல்ல. apple products விக்கிறாரு. iphone salesman.

prod: ஓ…ஓ…சரி சரி.

dir: ஹீரோவோட ஆயுதமே iphone4 தான். அத வச்சு ரோட்ல நடக்குற traffic குற்றங்களையும், அரசியல் வாதி பண்ணுற தப்புகளை ஃபோட்டா எடுத்து, facebookல upload பண்ணுறதுனு அவரோட பொழப்பு!

prod: (அமைதியாக இருந்தார், கொஞ்சம் நேரம் கழித்து) படத்துல ஹீரோயின்?

dir: சார், நம்ம ஊர் பொண்ணு தான் போடனும். அந்த காலத்துல famousஆ இருந்த ஹீரோ அல்லது ஹீரோயின் பொண்ண போட்டால் தான் சரியா இருக்கும்!

prod: ஏன்?

dir: சார்! நம்ம படத்துல எல்லாத்தலயும் புதுமை புகுத்திகிட்டே இருக்கனும் சார்! நவரச நாயகன் கார்த்திக் பொண்ண போடலாமா?

prod: யோவ் அவருக்கு பொண்ணே இல்லையா!

dir: தேவையானி பொண்ணு?

prod: யோவ்…அதுங்க இப்ப தான் எல்கேஜி போகுதுங்க!

dir: ம்ம்….ரம்பாவுக்கு….

prod: நீ வாய மூடு! ஆமா எதுக்கு இப்படிப்பட்ட ஹீரோயின் தேவை?

dir: இந்த படத்துல ஹீரோயினுக்கு கண்ணு பெரிசா இருக்கனும்! அந்த கண்ண வச்சு ஒரு சூப்பர் ஹிட் பாடல் ஒரு புது கவிஞர் எழுதியிருக்கார்!

prod: கதை ஓகே ஆவறதுக்கு முன்னாடியே பாட்டு ரெடி ஆயிட்டா!??

dir: இப்ப எல்லாம் ready-made பாடல்கள் trend. எந்த படத்துக்கும் பாட்டு always ரெடி.

prod: சரி, அந்த புது கவிஞர் யாரு?

dir: (புன்சிரிப்புடன்) நான் தான் சார்!

prod: கொடுமை!

dir: சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

prod: ஐயோ ரொம்ப பெருமையா இருக்குனு சொல்ல வந்தேன். பாட்டு வரிய சொல்லு.

dir: ஹீரோயின் கண்ணு ஷார்ப்பா இருக்குது…அதனால…

“உன் கண்ணு கண்ணமாபேட்டே, அதுல ஏன் என்னைய கொன்னுபுட்ட?”

இப்படி போகுது சார் பாட்டு. இந்த பாடல norway உள்ள ஒரு மலை உச்சியில ஒரு சுடுகாடு இருக்கு. அங்க தான் ஷுட் பண்ண போறோம்.

prod: ஏன்? நம்ம ஊரு சுடுகாட்டுல இந்த பாட்ட எடுக்க முடியாதா?! (கொஞ்சம் கொஞ்சமாய் கோபம் வந்தது)

dir: சார், இந்த பாட்டுல highlightஏ அந்த மலையில் ஒரு சின்ன கல்லு ஒன்னு தொங்கும். அங்க நீன்னுகிட்டு ஆடுனும் நம்ம ஹீரோவும் ஹீரோயினும்.

prod: இந்த ஷாட் பாட்டுல எவ்வளவு நேரம் வரும்?

dir: 10 secondக்கு மேலே காட்ட மாட்டோம்! இந்த பாட்டுல ஒரு speciality இருக்கு.

prod: என்ன அது? (கிண்டலாய் இழுத்தார்)

dir: உலகத்துல உள்ள famous சுடுகாடுகள் இருக்கும் இடத்துக்கு போய் ஷுட் பண்ணுவோம்:)) பாட்டு சூப்பர் ஹிட், எழுதி வச்சுக்குங்க சார்!

prod: போன தடவ என்ன பண்ணேன் நான்?

dir: அடிச்சு விரட்டுனீங்க!

prod: இப்ப விரட்டி அடிக்க போறேண்டா!

dir: ஐயோ சார்!!!

prod: அடிங்க!!!

(அச்சமயம், ஒரு வெள்ளக்காரன் tea glassவுடன் உள்ளே நுழைந்தான்.)

dir: என்ன சார்? வெள்ளக்காரன் எல்லாம் office boyயா வச்சு இருக்கீங்க?

வெள்ளக்காரன்(ஆங்கிலம் கலந்த தமிழில்): நான் office boy இல்ல. tour guide! உங்க ஊருல முக்காவாசி பேரு எங்க ஊருல வந்து தான் படம் எடுக்குறாங்க! அதுக்கு நான் தான் guide.

dir: norway நான் பார்த்தே ஆகனும்.

வெள்ளக்காரன்: உங்க ஊருலே அழகு அழகா இடம் இருக்கு. அதவிட்டுட்டு ஏன் தான் எங்க ஊருல வந்து நாசம் பண்ணுறீங்களோ!!??

*முற்றும்*

இந்த கதை கேட்ட கதையயும் சொன்னது: http://enpoems.blogspot.com

director: “ATM productions வழங்கும் ஆத்தா, பயணம்” இது தான் சார் ஓபனிங்.

producer: யோவ்! கதைய முதல சொல்லுய்யா!

director: சார், இது ஒரு கிராமத்த கதை சார்! ஒரு பெரிய….

producer: wait wait…உன் பேர் என்ன சொன்ன?

director: பாரதி கௌதம்.

producer: ஹாஹாஹா…என்னய்யா பேரு இது?

dir: பாரதிராஜா மாதிரி கிராமத்த படத்த கௌதம் மேனன் மாதிரி ரொம்ப ஸ்டைலீஷா எடுக்கனும்னு ஆசை. அதான்…இந்த பேர வச்சுகிட்டேன்!

prod: சரி கதைய சொல்லு!

dir: சார் ஓபினிங் சீன்….ஒரு பெரிய மாட்டுவண்டி, யாருமில்லாத railway station வெளியே நிக்குது. தண்டவாளத்த long shotல காட்டுறோம். அங்க இருக்கற clockஎ close upல காட்டுறோம். பயங்கரமா காத்து அடிக்குது சார்! மரத்துலேந்து இலை எல்லாம் கீழே விழுது சார்.

prod: எனக்கு தூக்கம் வரதுய்யா! catchingங்கா ஒன்னு இல்லையா!??

dir: சார், அதுக்கு தான் சார் வரேன். எப்போதுமே lateஏ வர train அன்னிக்கு மட்டும் சீக்கிரம் வந்துடுச்சு சார்.

prod: இது ரொம்ப புதுசா இருக்கே…வெரி குட்…மேல சொல்லு.

dir: எல்லாரும் நினைப்பாங்க. நேரம் சரியா இருக்குனு. ஆனா, எல்லாருக்கும் அது bad time!- அப்படின்னு பின்னாடி narration voice போடுவோம் சார். அந்த trainலேந்து ஒரு வயசான பாட்டி கண்ணு ஆபிரேஷன் முடிஞ்சு வறாங்க. கூடவே அவங்க பேத்தியும் இருக்கா.

prod: தமன்னா callsheet என்கிட்ட இருக்கு. அவங்கள இந்த ரோல போட்டுடுவோம்.

dir: இல்ல சார். பாட்டியும் பேத்தியும் ஒரு ஆளு தான் சார் பண்ணனும். double action sir.

prod: தமன்னாவே பண்ணுவாங்கய்யா. மேக் போட்டு பேத்தியா நடிப்பாங்க. போடாம பாட்டியா நடிப்பாங்க. அதலாம் நான் பாத்துகிறேன்…. நீ கதைய மேல சொல்லு.

dir: கண்ணாடி போட்ட ஒரு mechanic அதே ரயில வந்து இருங்குறாரு.

prod: அது என்னய்யா கண்ணாடி போட்ட மெக்கானிக்?

dir: பாரதிராஜா படத்துல கண்ணாடி போட்ட ஹீரோ வர மாதிரி நம்ம படத்துலயும் ஹீரோ கண்ணாடி போடுறாரு சார்…

prod: characters மட்டுமே சொல்லிகிட்டு இருக்க…கதைக்கு போய்யா! கதை இருக்கா இல்லையா?

dir: சார் வரேன் சார். இன்னும் நிறைய characters இருக்கு. ஒரு சின்ன பொண்ணு, 16 வயசு பொண்ணு சினிமால நடிக்கனும்னு ஆசைப்பட்டு ஓடி வறா அதே ரயில.

prod: கிராமத்துக்கு ஏய்யா வறா?

dir: ரயில் மாறி ஏறிட்டா சார்! (கண் கலங்குகிறார்)

prod: அப்பரம் என்ன ஆகுது? அந்த 16 வயசு பொண்ணா யார போடலாம்?

dir: நமீதா.

prod: நமீதாவா? நீ சொல்ற கதையவிட இது இன்னும் shockingஆ இருக்கே!

dir: கவலைப்படாதீங்க சார். ரெண்டே மாசம் 35 கிலோ குறைப்பாங்க. 16 வயசா மாறுவாங்க! நான் guarantee சார் அதுக்கு!

prod: சரி கதையில அப்பரம் என்ன ஆகுது…..

dir: புதுசா கல்யாணம் ஆனா ஜோடி, அமெரிக்கா return ஒரு பையன் – இத்தன பேரும் அந்த stationல நிக்குறாங்க. shot freeze!

எழுத்து-இயக்கம்: உங்கள் பாரதி கௌதம்
அப்படினு போடுறோம் சார்!

prod: title credits எல்லாம் editor பாத்து பாரு. அந்த மாட்டுவண்டி எதுக்கு வெளியே நிக்குது?

dir: பின்னிட்டீங்க சார்! ஒரு audienceஆ இந்த படத்துக்குள்ள நீங்க வந்துட்டீங்க. i like it sir. அந்த மாட்டுவண்டில தான் இவங்க எல்லாருமே கிராமத்துக்குள்ள போறாங்க. அந்த மாட்டுவண்டிய ஓட்டுறது அந்த கிராமத்துக்கே தெய்வம் மாதிரி.

prod: ஆமா அந்த ரோலுக்கு யார….

dir: சார் என் friend நவீன்குமார் பண்ணனும் சார். ‘அந்த பக்கம் போகாதீங்க இந்த பக்கம் வாங்க’ அப்படினு ஒரு ஹிட் படம் எடுத்தாரே அவரு சார்.

prod: ஓ ஆமா ஆமா!

dir: இந்த powerful role அவர் தான் பண்ணனும். என் படத்துல அவர் கண்டிப்பா நடிச்சே ஆகனும்.

prod: அவர் எடுத்த முந்தைய படத்துல கூட நீ நடிச்ச தானே?

dir: ஆமா சார். இப்படி மாத்தி மாத்தி நடிச்சு கொடுக்குறது தானே சார் இப்ப trend!

prod: (தலையில் அடித்து கொண்டார்) அப்பரம் அந்த மாட்டுவண்டிக்கு என்ன ஆகுது?

dir: திடீரென்னு மழை பெய்யுது. வண்டி வழில breakdown ஆவுது?

prod: மாட்டுவண்டி breakdownஆ? டேய் லாஜிக்கே இல்லையடா இதுல!??

dir: சார், வண்டில problem சார். அத சரி பண்ண மெக்கேனிக் கீழே இறங்கி வேலை பாக்குறாரு. அந்த வேலை பாக்குற ஸ்டைல பாத்து தமன்னாவுக்கு காதல் வரது?

prod: பாட்டி தமன்னாவுக்கா? பேத்தி தமன்னாவுக்கா?

dir: சார், பேத்திக்கு தான் சார் காதல் வரது!

prod: இப்படிலாம்கூட காதல் வருமா?

dir: சார் இது ஒரு வித்தியாசமான காதல் சார்! தமிழ் சினிமாவுல இப்படி ஒரு காதல் காட்சிய audience பாத்து இருக்க மாட்டாங்க!

prod: சரி சொல்லு….

dir: இங்க ஒரு பஞ் டயலாக் சார்! மெக்கேனிக் வண்டி சக்கரத்த கழட்டி உருட்டுறாரு. அத பாத்து பாட்டி கேக்குறாங்க, “தம்பி, ஏன் உருட்டுறீங்க?”

அதுக்கு மெக்கேனிக் பஞ் டயலாக் சொல்றாரு,
“உருட்டுறதுல நான் பூனை மாதிரி.
மிரட்டுறதுல நான் யானை மாதிரி.”

அப்படியே மெக்கேனிக் கண்கள close upல காட்டுறோம். கண்ணு சிவந்து போகுது சார்.

prod: யோ, பாட்டி சொன்னதுக்கு எதுக்கு டா பஞ் டயலாக்?

dir: சார், audience விரும்புவான் சார். நீங்க பாருங்க? இது தான் 2011 வருஷத்துல ஹிட் பஞ் டயலாக்கா வர போகுது. இந்த ஒரு பஞ் தான் படத்த 100 நாள் ஓட வைக்க போகுது.

prod: (producer தன் கோபத்தை அடக்கி கொள்கிறார்)

dir: repair பண்ணி முடிச்ச பிறகு வண்டி கிளம்புது…. போற வழில மின்னல், இடி, மழை… ஒரே இருட்டு! நாலு பேரு காட்டுக்குள்ளேந்து வராங்க. முஞ்சிய மூடி இருக்காங்க. கண்ணு மட்டும் தான் தெரியுது. கையில எல்லாருமே gun வச்சு இருக்காங்க. வண்டில இருக்குற எல்லாரையும் close upல காட்டுறோம். அப்படியே அடுத்த ஷாட்…. முஞ்சிய மூடி இருக்குற நாலு பேருல ஒருத்தர் மட்டும் name tag போட்டு இருக்காரு…. name tagஎ close upல காட்டுறோம்.

“அக்ரம் கான் – son of wasim khan”

இங்க தான் interval block!

எப்படி சார் கதை?

prod: எந்த தீவிரவாதிய்யா name tag போட்டு இருப்பான்?

dir: சார், நம்ம ஒரு வித்தியசாமன படம் எடுக்கறதயே நீங்க அப்பெப்ப மறந்துடுறீங்க!!

prod: சரி 2nd halfல கதை?

dir: இந்த கிராமத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன சம்மந்தம்? the mystery unfolds…….

prod: ஆமா? அப்பவே கேட்கனும்னு இருந்தேன். அந்த மெக்கேனிக் ரோலுக்கு…. யார போடலாம்னு…

dir: கார்த்தி தான் இதுக்கு சரியான மேச்.

prod: யோவ்… அவருக்கும் தமன்னாவுக்கும் ஏதோ கிசுகிசு….

dir: இருக்கட்டும் சார். நம்ம படத்துக்கு அப்பரம் அவங்க ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிகிட்டா நமக்கு தான் சார் பெருமை.

prod: யோ, அப்படிலாம் ஒன்னும் நடக்ககூடாதுய்யா! இன்னும் ரெண்டு படத்துக்கு தமன்னா கால்ஷீட் வாங்கி வச்சுருக்கேன்ய்யா!

dir: சார், தமன்னா கல்யாணத்துக்கு அப்பரம் நடிக்கமாட்டாங்க சார். அவங்க மாமனாரு ரொம்ப strict! 5 வருஷத்துக்கு அப்பரம் கார்த்தியும் தமன்னாவும் சேர்ந்து ஏதாச்சு சுக்கு காபி விளம்பரத்துல வருவாங்க சார், அப்ப பாத்துக்குங்க சார்!

prod: என்னய்யா நீ வேற……? சரி இந்த படத்துக்கு location எங்க?

dir: america. chicago பக்கத்துல இருக்குற ஒரு கிராமம்.

prod: என்னது? அமெரிக்காவா? யோ…. இந்த கதைக்கு எதுக்கு டா அமெரிக்கா.

dir: சார், போன படத்துல எச்சி துப்புற மாதிரி ஒரு காட்சி இருந்துச்சு. அந்த காட்சியவே நாங்க switzerlandல தான் shoot பண்ணுனோம்.

prod: (கையில் வைத்திருந்த பேப்பரை மேசையில் வீசினார்.) நான் கொலவெறியா போறதுக்குள்ள ஓடி போயிடு! நீ எல்லாம் ஒரு director??? உன்கிட்ட கதை கேட்டேன் பாரு…என்னைய…..

dir: சார் சார்…. கோபம் படாதீங்க சார்! என் குருநாதரின் ‘நடுநிசி நாய்கள்’ படம்
மாறி ‘பரதேசி பன்னிகள்’ அப்படினு ஒரு கதை வச்சு இருக்கேன் சார்…. அந்த கதைய கேக்குறீங்களா சார்?

producer: எடு அந்த வெளக்கமாத்த!!!!!!!

கதை கேட்ட கதைய சொன்னது: http://enpoems.blogspot.com

Aptitude டெஸ்டில்: அதிகாரி: நான் உன்கிட்ட முதல்ல ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள் குடுக்கிறேன். உன் கிட்ட இப்ப எத்தனை ஆப்பிள் இருக்கும்?
ரங்கமணி: எழு ஆப்பிள் சார்.
அதிகாரி: நான் சொன்னத நீங்க சரியா கேக்கல போல. திருப்பி கேக்கிறேன். நான் உன்கிட்ட முதல்ல ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள் குடுக்கிறேன். உன் கிட்ட இப்ப எத்தனை ஆப்பிள் இருக்கும்?
ரங்கமணி: எழு ஆப்பிள் சார்.
அதிகாரி: சரி வேற மாதிரி கேக்கிறேன். நான் உன்கிட்ட முதல்ல ரெண்டு ஆரஞ்சு, அப்புறமா ரெண்டு ஆரஞ்சு, அப்புறமா ரெண்டு ஆரஞ்சு குடுக்கிறேன். உன் கிட்ட இப்ப எத்தனை ஆரஞ்சு இருக்கும்?
ரங்கமணி: ஆறு ஆரஞ்சு சார்.
அதிகாரி: சரி. இப்ப சொல்லு. நான் உன்கிட்ட முதல்ல ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள் குடுக்கிறேன். உன் கிட்ட இப்ப எத்தனை ஆப்பிள் இருக்கும்?
ரங்கமணி: எழு ஆப்பிள் சார்.
அதிகாரி (கடுப்புடன்): அது எப்படியா எழு வரும்?
ரங்கமணி: என்கிட்டே ஏற்கனவே ஒரு ஆப்பிள் இருக்கே சார். அதான்..

பின்குறிப்பு: ரங்கமணிக்கு இன்னும் வேலை கெடைக்கல அப்படின்னு உங்களுக்கு தனியா சொல்லணுமா என்ன?. உங்க அலுவலகத்தில் ஏதாவது சான்ஸ் இருந்தா சொல்லுங்களேன்…

அப்பாடா.. ஒரு வழியா பர்ஸ்ட் இயர் முடிஞ்சுது..
போன வருஷ ஆரம்பத்தில.. என்னமா சீனியர்லாம் எங்கள ‘லுக்கு’ உட்டாங்க..  சொல்லி மாளாது..
காம்பஸ்  முழுசா எல்லாமே புதுசா இருந்திச்சு.. யாரப் பாத்தாலும் பயந்து பயந்து மரியாதையா நடந்துக்கணும்..
நல்ல வேலை.. எங்க காம்பஸ்ல  ‘ராகிங்’ கலாச்சாரம்லாம் இல்லை..
அது மட்டும் இருந்திருந்தா.. ம்ம்ம்.. இப்ப நெனைச்சாலும் பயங்கரமா இருக்கு !
வராண்டா பக்கம் தெரியாமப் போனாக் கூட திட்டு. அடி மட்டும்தான் வாங்கலை. அழுகை அழுகையாவரும். அழுதாலும் எங்கள, எங்க போக்குல விட மாட்டங்களே..  அவ்ளோ கண்டிப்பு….
மொதோ மூணு மாசம் எங்கள்ல யாராவது படிக்க ஆரம்பிச்சாங்க..? இல்லையே.. எப்படி முடியும்.. அழுகை, துக்கம், பயம்,… வேற என்னத்த அனுபவிச்சோம். அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமா என்ன செய்யணும் புரிய ஆரம்பிச்சுது.
இப்ப அடுத்த வருஷம் ஆரம்பம். இப்ப பயம், கவலை, அழுகை எதுவுமே இல்லை.. எப்படி நடந்துக்கணும்னு ஒரு வழியா ஐடியா கெடைச்சிடிச்சே. போன வருஷ அனுபவம்தான்..
இப்ப.. நாங்களும் சீனியர் தான்….. இல்லை இல்லை,
“நாங்க மட்டும்தாம் சீனியர்…..
எங்களுக்கு உண்டு ஜூனியர்.. “
போன வருஷ  ‘சீனியர்’ இப்ப நோ மோர் ‘சீனியர்’.. அவங்களாம் இப்போ ஏதோ  ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்டாம்………………..
“நானு  யாரா ?”, இந்த வருஷ சீனியர் கே.ஜி  கிளாஸ்ல  நானும் ஒரு ஸ்டூடன்ட் சார்.
டிஸ்கி : பொண்ணு ஜூனியர் கே.ஜி லேருந்து சீனியர் கே.ஜி போயிருக்கா.. அவ சார்பா, நா திங்க் (?) பண்ணி எழுதினது: http://madhavan73.blogspot.com

முதலில் ஆண்கள் எவ்வாறு பணம் பெறுகிறார்கள் என படி முறை வாயிலில் பாப்போம்

  • வாகனம் பார்க் பண்ணுதல்
  • ATM  மெசினுக்கு செல்லல்
  • கார்டை உள் நுழைத்தல்
  • பின் நம்பேர் அடித்தல்
  • பணம் பெறல
  • கார்ட் டை மீள பெறல
  • வண்டியை எடுத்து கொண்டு செல்லல்

இப்போது பெண்கள் எப்படி பணம் பெறுகிறார்கள்   என்று பாப்போம்

  1. வண்டியை பார்க் செய்தல்
  2. மேக்கப் சரி செய்தல் /சரி பார்த்தல்
  3. வண்டியின் என்ஜினை ஆப் செய்தல
  4. மேக்கப் சரி செய்தல்
  5. ATM க்கு செல்லுதல்
  6. தனது பணப்பையில் ATM அட்டையினை தேடுதல்
  7. கார்டை உல் நுழைதல்
  8. கன்சலை அழுத்துதல்
  9. பின் நம்பர் எழுதிய துண்டு சீட்டை மீன்டும் பண பையினுள் தேடுதல்
  10. கார்டை உள் நுழைதல்
  11. பணத்தை பெறல
  12. வண்டிக்கு செல்லல
  13. மேக்கப் சரி பார்த்தல்
  14. வண்டியை ஸ்ட்ராட் செய்தல்
  15. வண்டியை ஆப் செய்தல்
  16. மீண்டும் ATM  க்கு செல்லல்
  17. கார்டை எடுத்தல்
  18. வண்டிக்கு வரல்
  19. மேக்கப் சரி பார்த்தல்
  20. ஸ்ட்ராட செய்தல்
  21. வண்டியை 1/2 KM  தூரம் வரை ஒட்டி செல்லல்
  22. பின் ஹன்ட்பிரக்விடுவித்தல்
  23. வண்டியை தொடர்ந்து ஓட்டுதல

தெரிந்து கொண்ட இடம்: http://sangarfree.blogspot.com

என்னதிது? கி.மு / கி.பி தெரியும், காமு சோமு தெரியும்,  டீ காபி கூட தெரியும், இது என்ன புதுசா க.மு Vs  க.பி னு மண்டைய பிச்சுக்கரீங்களா….

அதான்… அதான் வேணும் எனக்கு…. நாலு பேரை மண்டைய பிச்சுக்க வெச்சா அன்னைக்கி நான் நிம்மதியா தூங்குவேன்…. ஹி ஹி ஹி… ஒகே ஒகே நோ டென்ஷன்….

விசியத்துக்கு போவோம்…. க.மு Vs  க.பி னா கல்யாணத்துக்கு முன் Vs கல்யாணத்துக்கு பின். அதாவது ரங்கமணிகள் ஒரே situation ஐ கல்யாணத்துக்கு  முன்னாடி எப்படி ஹீரோ மாதிரி டீல் பண்ணுறாங்க, அதே கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி (!!!!?????) மாறி போய்டராங்கங்கறதை  இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னை போன்ற அப்பாவி தங்கமணிகள் சார்பாக எடுத்து இயம்பவே இந்த பதிவு… ம்ம்ம்ம்…. மூச்சு வாங்குது போங்க…

இப்போ உங்க முகம் அப்படியே “வதனமோ சந்திர பிம்பமோ” னு சொல்லுற மாதிரி பிரகாசமாகுதா அப்போ நீங்க ஒரு “தங்கமணி”, அதே கேப்டன் படத்துல வர்ற மாதிரி கண்ணு இன்ஸ்டன்ட்ஆ சிவக்க உதடு துடிக்க மொறைக்கரீங்களா அப்போ நீங்க ஒரு “ரங்கமணி”

எப்படி நம்ம கண்டுபிடிப்பு…? ஒகே ஒகே…. நோபல் பரிசு எல்லாம் வேண்டாம்னு சொன்னா நீங்க கேக்கவா போறீங்க…. சரி சரி ரெண்டு மட்டும் குடுங்க போதும்…. எங்க வீட்டு showcase ல அவ்ளோ தான் எடம் இருக்கு…

********************************************

சிச்சுவேசன் ஒண்ணு - ரங்கமணிக்கு காய்ச்சல், ஆனாலும் Sincere சிகாமணியா பிசினஸ் விசியமா வெளியூர் போய் இருக்கார். அப்போ அவருக்கு போன் வருது 

கல்யாணத்துக்கு முன் : "ஹலோ சொல்லு டார்லிங்.... இப்போ தானே பேசின. என்ன? ஓ...எனக்கு இப்போ ஒடம்புக்கு பரவாயில்லயானு கேக்க கூப்டியா.... உனக்கு என் மேல எவ்ளோ அன்பு.... நான் ரெம்ப லக்கி"

கல்யாணத்துக்கு பின் : "சொல்லு. என்ன? மீட்டிங்ல இருக்கேன்... ம்... சரி வெய்யி....வேலை இருக்கு.... அப்புறம் பேசறேன்" (மனதிற்குள் - வெளியூர் வந்தும் மனுசன நிம்மதியா விடாம...ச்சே....)

********************************************

சிச்சுவேசன் ரெண்டு - ரங்கமணியும் தங்கமணியும் பீச்சில் அமர்ந்து இருக்கிறார்கள் 

கல்யாணத்துக்கு முன்: "எப்படி தங்கமணி இப்படி கோர்வையா கதை சொல்ற மாதிரி அழகா பேசற? நீ பேசறதை கேக்கறதுக்கே ஆபீஸ் எப்படா முடியும்னு இருக்கு எனக்கு தினமும்"

கல்யாணத்துக்கு பின்: "ஏன் இப்படி தொணதொணக்கற? உனக்கே வாயே வலிக்காதா? ( மனதிற்குள் - இதுக்கு பேசாம நான் ஆபீஸ்ல உக்காந்து internet browse பண்ணிட்டாச்சும் இருக்கலாம்)

********************************************

சிச்சுவேசன் மூணு - ரங்கமணியும் தங்கமணியும் கோவிலில். தங்கமணி ஒரு பெண்ணின் வளையலை காட்டி "அழகா இருக்கில்ல" னு சொல்றாங்க 

கல்யாணத்துக்கு முன்: (மனதிற்குள்) "வாவ்.... காதலிக்க ஆரம்பிச்சு 100 வது நாளுக்கு என்ன கிப்ட் வாங்கறதுன்னு மண்டைய ஒடைச்சுட்டு இருந்தேன்... வளையல் வாங்கி surprise ஆ அசத்தணும்"

கல்யாணத்துக்கு பின் : (மனதிற்குள்) "ஐயோ..... கல்யாண நாள் வேற வருதே... பர்சை காலி பண்ணாம விடாது போல இருக்கே. எப்பவும் போல காது கேக்காத மாதிரியே maintain பண்ணிக்கணும்.... அதான் நமக்கும் நல்லது நம்ம பர்சுக்கும் நல்லது"

********************************************

சிச்சுவேசன் நாலு - ரங்கமணியும் தங்கமணியும் ஒரு உணவகத்தில். ரங்கமணி காளிப்ளவர் மஞ்சூரியனை ரசித்து சாப்பிட "உங்களுக்கு ரெம்ப பிடிச்சதா... இருங்க chef கிட்ட எப்படி செய்தாங்கன்னு கேட்டுட்டு வரேன்"

கல்யாணத்துக்கு முன்: "எனக்கு ஒண்ணு பிடிக்கிதுனதும் இவ்ளோ ஆசையா கத்துக்க நினைக்கிறியே... இதுக்காகவே எப்படி சமைச்சு போட்டாலும் சந்தோசமா சாப்பிடுவேன்"

கல்யாணத்துக்கு பின்: "போதும் போதும்....ஏன்? எனக்கு காளிப்ளவர் மஞ்சூரியன் புடிக்காம போகணுமா?"

********************************************

சிச்சுவேசன் அஞ்சு - ரங்கமணிக்கு அசைவம் பிடிக்காது என்றதும் தானும் அதை சாப்பிடபோவதில்லை என்கிறார் தங்கமணி 

கல்யாணத்துக்கு முன்: "ஏம்மா? உனக்கு புடிச்ச எதையும் நீ எனக்காக தியாகம் பண்ண கூடாது. சரியா"

கல்யாணத்துக்கு பின்: "ஏன்? உனக்கு பிடிக்காத எதையாச்சும் என்னை விட சொல்ல போறியோ?" (இப்படி குதர்க்கமா யோசிக்கறது எல்லாம் ரங்கமணி போஸ்ட் குடுத்த அடுத்த நொடி வந்துடும் போல)

********************************************

சிச்சுவேசன் ஆறு - தங்கமணி புது புடவை கட்டி இருக்கிறார். "எப்படி இருக்கு?" னு ரங்கமணி கிட்ட கேக்கறாங்க 

கல்யாணத்துக்கு முன்: "புடவை சுமார் தான்... ஆன நீ கட்டி இருக்கறதால அதுக்கு மவுசு கூடிப் போச்சு"

கல்யாணத்துக்கு பின்: "பொடவை எல்லாம் நல்லாத்தான் இருக்கு....."  (அதுக்கப்புறம் ஒரு "indifferent look " அதுக்கு என்ன அர்த்தம்ன்னு ரங்கமணிகளுக்கே வெளிச்சம்)

********************************************'

சிச்சுவேசன் ஏழு - தங்கமணி அவங்க தோழி கல்யாணத்துக்காக வெளியூர் போறதா சொல்றாங்க 

கல்யாணத்துக்கு முன்: "என்னது ரெண்டு நாளா? சான்சே இல்ல... என்னால உன்னை பாக்காம இருக்க முடியாதும்மா. வேணும்னா நல்ல காஸ்ட்லி கிப்ட் வாங்கி அனுப்பிடலாம்"

கல்யாணத்துக்கு பின்: "அப்படியா.... பிரிண்ட்ஸ் எல்லாம் பாத்தா என்னை மறந்துடுவ இல்ல? வேணா இன்னும் ரெண்டு நாள் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாயேன்... உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்" (மனதிற்குள் - ஐ....தங்கமணி என்ஜாய்... உடனே நம்ம கோஷ்டிக்கு போன் போட்டு பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணனும்....) "என்னமா நீ இன்னும் போலயா?"

********************************************'

ஏழுக்கு மேல எழுதினா ஏழரை நாட்டு சனி ஆரம்பிக்கறதாவும் அதோட விளைவா ஆட்டோ இல்ல லாரியே வரும்னும் நம்பத்தகுந்த வட்டார செய்திகள் வந்தபடியால் அப்பாவி தங்கமணி உங்களிடம் இருந்து விடை மற்றும் வடை பெறுகிறாள்....  எஸ்கேப்......

Disclaimer Statement: இந்த பதிவை படிச்சதும்.... அதன் விளைவாக உங்கள் வீட்டில் நடக்கும் அடிதடி, சட்டி பானை பாத்திர சண்டை, இன்னும் மற்ற பிற (!!!???) விளைவுகளுக்கு அப்பாவியின் ப்ளாக் பொறுப்பில்ல... இந்த Disclaimer Statement மூலமாக சொல்லி கொள்வது என்னவென்றால் கேஸ் கோர்ட் எல்லாம் செல்லாது செல்லாது செல்லாது... (ஹி ஹி ஹி)

இப்படிக்கு,
முன்ஜாக்கிரதை மற்றும் முன் ஜாமீன் புகழ் - அப்பாவி தங்கமணி
தாங்க்ஸ்

முன் குறிப்பு:
சும்மா சிரிக்க மட்டும்… அதை மறந்து டென்ஷன் ஆகி தல தலையா அடிச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல…:))

“டாக்டர் ப்ளீஸ்… எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்ல”

“இன்னொரு முறை சொல்லுங்க…” என டாக்டர் சந்தோசமாய் பாட்டு படிக்க

“என்ன டாக்டர் இது? நாங்க எவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கோம்… உங்களுக்கு விளையாட்டா இருக்கா?” என அந்த பெற்றோர் கோபமாய் பேச

“சரி சரி… பேஷன்ட் எங்க?”

“இதோ… உங்க முன்னாடி உக்காந்துட்டு இருக்கறது தான் பேஷன்ட்”

“என்ன விளையாடறீங்களா? முழுசா முள்ளங்கி பந்தாட்டம் இருக்கற ஒரு ஜென்மத்தை என்னமோ ஐ.சி.யு கேஸ் மாதிரி எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்லனு சொல்லி ஏன் ஆசைய கிளப்பினீங்க?” என இப்போது கோபம் கொள்வது டாக்டர் முறையானது

“ஐயோ டாக்டர்… நீங்க என் புள்ளகிட்ட பேசி பாருங்க,உங்களுக்கே புரியும்” என அவன் அம்மா கூற

“அப்படியா?” என பேஷண்டை அளவெடுப்பது போல் பார்த்த டாக்டர் “உங்க பேர் என்ன?” என கேட்க

“எந்த பேரை கேக்கறீங்க? சொந்த பேரா இல்ல ப்ளாக் பேரா?”

“அதென்ன ப்ளாக்?” என டாக்டர் விழிக்க

“என்ன ப்ளாக்ஆ? ச்சே… நீங்க எல்லாம் என்ன டாக்டர்? அது வலைப்பூ… நம் மனதின் வலையில் சிக்கும் எண்ண பூக்களை எல்லாம் தொடுத்து மாலையாய் கோர்த்து போட ஒரு கழுத்து…” என பேஷன்ட் விளக்கம் கூற

“ஓ… முழுசா முத்திடுச்சு போல” என மனதிற்குள் நினைத்த டாக்டர் “எப்போல இருந்து இந்த மாதிரி இருக்கு?” என டாக்டர் பெற்றோரிடம் கேட்க

“நானே சொல்றேன் டாக்டர்?” என்ற பேஷன்ட் “ஆரம்பத்துல எல்லாம் யாரோ எழுதின ப்ளாக்ல போய் சும்மா படிச்சும் படிக்காமையும் கன்னா பின்னானு கமெண்ட் மட்டும் போட்டுட்டு இருந்தேன்… திடீர்னு ஒரு நாள் ஒரு பதிவர் ‘நீங்க இவ்ளோ சுவாரஷ்யமா கமெண்ட் எழுதறீங்களே… நீங்களே ஏன் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாது’னு கேட்டார்… அன்று விழுந்த விதை தான், இன்று ஆலமரமாய் 500 followerகளும் ஆயிரம் பதிவுகளும் என வளர்ந்து நிற்கிறது” என உணர்ச்சிவசப்பட்டார்

“சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தவன் ஒருத்தன்…இப்ப மாட்டிட்டு முழிக்கறது நான்” என மனதிற்குள் புலம்பிய டாக்டர் “அப்படி என்ன தான் எழுதுவீங்க?” என கேட்க

“எதை வேணாலும் எழுதுவேன் டாக்டர்… உதாரணத்துக்கு சொல்லணும்னா… ஒரு நாள் ஒரு கரப்பான் பூச்சிய அடிச்சுட்டேன்… அதை ‘நானும் கரப்பானும்’னு ஒரு போஸ்ட் போட்டேன்….இன்னொரு நாள், ஒரு பிச்சகாரனுக்கு பத்து பைசா போட அவன் இன்னும் பத்து பைசா சேத்து திருப்பி குடுத்தான், அதை ‘பிச்சையிடம் பிச்சை’ ஒரு போஸ்ட் போட்டேன்”

“அட கருமமே…அதெல்லாமா எழுதுவீங்க…படிக்கறவன் காரி துப்ப மாட்டான்”

“ஐயோ போங்க டாக்டர்… உங்களுக்கு விசயமே புரியல… அதிகமா திட்டப்படாத பதிவரும் அதிகமா துப்பப்படாத பதிவும் பிரபலமானதா சரித்தரமே இல்ல” என அவர் பெருமிதமாய் கூற

“கருமம் கருமம்” என தலையில் அடித்து கொண்ட டாக்டர் “அது சரி… இந்த எழுதற ஐடியா எல்லாம் எப்ப தோணும்?”

“அதுக்கு ஒரு எல்லையே இல்ல டாக்டர்… பல்லு விளக்கும் போது தோணும், பாலத்த கடக்கும் போது தோணும், சாப்பிடறப்ப தோணும், சண்டை போடறப்ப தோணும், தூங்கறப்ப தோணும், துப்பரப்ப தோணும், நடக்கறப்ப தோணும், நிக்கறப்ப தோணும், கொசு அடிக்கும் போது தோணும், கொசுறு நியூஸ் படிக்கறப்ப தோணும்… ட்ரெயின்ல போறப்ப தோணும்… தலைவலிக்கரப்ப தோணும்… தோணும் போது தோணும்… தோணாத போதும் தோணும்… தோணனும்னு நினைக்கறப்ப தோணாது… ஆனா தோணாதுனு நினைக்கறப்ப தோணும்… தோணினாலும் தோணும்னு நினைக்கறப்ப தோணாம கூட போகும்… ஆனா தோணவே தோணாதுனு நினைக்கறப்ப கண்டிப்பா தோணாம போகாது…அவ்ளோ ஏன்? இப்ப கூட ‘மெண்டல் டாக்டரும் மென்நவீனத்துவ பதிவரும்’னு ஒரு பதிவு எழுதணும்னு தோணுது”

“என்னது மெண்டல் டாக்டரா?” என டாக்டர் டென்ஷன் ஆக

“ப்ளீஸ் டாக்டர்… தப்பா எடுத்துக்காதீங்க… எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்ல” என பேஷன்டின் அப்பா கூற, அந்த “எவ்ளோ செலவானாலும் பரவால்ல” என்ற வாசகம் டாக்டரின் கோபத்தை காணாமல் போக செய்தது

“இங்க பாருங்க தம்பி… இப்படி நினைச்ச மாதிரி எல்லாம் எழுத கூடாது… அது நல்லதில்ல” என டாக்டர் அட்வைஸ் போல் கூற

“என்ன நல்லதில்ல? மழைல ஒரு பூ கீழ விழுகரத பாத்தா என்ன தோணும் தெரியுமா?

ஒருமுறை பூத்த பூ
ஒரே மழையில் விழுந்ததே
இன்னொருமுறை பூக்குமா
இருந்தாலும் அது போல் வருமா!!!

அதே மழைல எங்க பக்கத்துக்கு வீட்டு குண்டு மஞ்சுளா நடந்து போறதை பாத்தப்ப பீலிங்கோட இப்படி தான் எழுத தோணுச்சு..

மலையே
மழையில்
நனைந்து
நகர்கிறதே!!!

இந்த கவிதை எல்லாம் நல்லதில்லைன்னு நீங்க எப்படி சொல்றீங்க?”

“இங்க பாருங்க… நீங்க எழுதறது சமுதாயத்துக்கு உபயோகமா இருக்கணும் ” என டாக்டர் புரிய வைக்க முயன்றார்

“கண்டிப்பா… அப்படி கூட எழுதி இருக்கேன்… நான் எழுதின ‘குட்டையில் ஊறிய மட்டை’ போஸ்டை படிச்சுட்டு ஒருத்தர் இனி ஜென்மத்துல இன்டர்நெட் பக்கம் வர மாட்டேன்னு போய் இப்போ நல்ல வேலைல நிலைச்சு இருக்கறதா தகவல் வந்தது… அது மட்டுமில்ல, என்னோட ‘மண்டையில் ஒரு மரிக்கொழுந்து’ கதைய ஒரு கோமா பேஷன்டுக்கு தினமும் படிச்சு காட்டினதுல நாலே நாளுல அவர் ராவோட ராவா வீட்டுக்கு ஓடி போயிட்டாராம்… இப்ப அந்த ஹாஸ்பிடல்ல அதான் ட்ரீட்மென்ட்ஆ யூஸ் பண்றாங்களாம்… இப்ப சொல்லுங்க எவ்ளோ உபயோகமான வேலை எல்லாம் செய்யுது என் பதிவுகள்”

“ஸ்ஸ்ஸ்ஸ்ப்பப்பா…. எப்படி புரியவெக்கறது?” என வெகு நேரம் யோசித்த டாக்டர் “இங்க பாருங்க தம்பி… எதாச்சும் தத்துவம் பித்துவம்னு எழுதினாலும் உபயோகம்…” என டாக்டர் முடிக்கும் முன்

“ஓ இருக்கே… ஜில்லுனு ஒரு மோர்னு ஒரு அருமையான பதிவு இருக்கே” என உற்சாகமாகிறார் பேஷன்ட்

“என்னது? மோர்ல என்ன கொடும தத்துவம் இருக்கும்?” என டாக்டர் குழம்புகிறார்

“என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க? மோர் எப்படி தயாராகுது… பாலாடையை கடைந்து அதில் இருந்து கொழுப்பான வெண்ணையை நீக்கி உருவாவது தானே மோர்… இதுல இருந்து உங்களுக்கு என்ன புரியுது?”

“ம்… உனக்கு முத்தி போச்சுன்னு புரியுது?” என தலையில் அடித்து கொண்டார் டாக்டர்

“ஹையோ ஹையோ… இதை புரிஞ்சுக்கற அளவுக்கு நீங்க பக்குவப்படலை டாக்டர்… அதாவது… எப்படி பாலாடையில் இருந்து வெண்ணையை நீக்கி மோர் உருவாகிறதோ அது போல நம் வாழ்வில் வெண்ணை போன்ற கெட்ட விசயங்களை அகற்றினால் மோர் போன்ற மோட்சத்தை அடையலாம்னு சொல்ல வரேன் டாக்டர்”

ஒரு நிமிடம் டாக்டருக்கே தனக்கு தான் விவரம் போதவில்லையோ என தோன்ற தொடங்கியது… ஒருவாறு சமாளித்து “தம்பி நான் என்ன சொல்ல வரேன்னா…” என்பதற்குள்

“டாக்டர், நான் என்ன சொல்ல வரேன்னா… நான் மொதலே மேட்டர் சொல்லிட்டா, நீங்க மேட்டர் படிச்சுட்டு மீட்டர் கட் பண்ணிட்டு போய்ட்டா நான் மீட்டர் வட்டி வாங்கி ப்ளாக் நடத்தற மேட்டர் என்ன ஆகறது. இன்னும் சொல்லப்போனா… மேட்டர்க்கு மேட்டர் தேத்த வழி இல்லாம தான் நான் இப்படி பீட்டர் விட்டுட்டு இருக்கேன்னு நீங்க என்னை பத்தி தப்பா நினைச்சுட்டா அப்புறம் என் மேட்டர் என்ன ஆகும், நீங்க கொஞ்சம் மீட்டர் கட் பண்றதுக்கு முன்னாடி இந்த மேட்டர் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இன்னும் தெளிவா சொல்லணும்னா….”

அதற்குள் டாக்டர் “ஹா ஹா ஹா ஹா… ஹி ஹி ஹி ஹி….” என கை தட்டியபடி சிரிக்கிறார்

“அப்பாடா… வழக்கம் போல புரியாத மாதிரி பேசினதும் இந்த டாக்டரும் மெண்டல் ஆய்ட்டாரு” என பதிவர் மனதிற்குள் சிரித்து கொள்கிறார்

“ஐயையோ என்னாச்சு… ஏன் டாக்டர் இப்படி சிரிக்கறாரு?” என சுற்றி இருந்தவர்கள் பயந்து போய் பார்க்க

“ஹா ஹா ஹா…. ஹி ஹி ஹி… நான் பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார டாக்டர்னு நீங்க நினைச்சா அதான் இல்ல… நான் பைத்தியமாகி பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார ஆஸ்பத்திரில பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்து அதனால பைத்தியமான பைத்தியகார டாக்டர்களில் ஒருத்தன் அப்படின்னு நீங்க நெனச்சா அது தப்பில்ல… இன்னும் தெளிவா சொல்லணும்னா…” டாக்டர் நிறுத்தாமல் பேசி கொண்டே போனார் தன் சட்டையை கிழித்தபடி

“ஐயையோ… இந்த டாக்டருக்கும் பைத்தியம் புடிக்க வெச்சுட்டானே நம்ம புள்ள” என அந்த பேஷன்டுடன் வந்த அம்மா தலையில் கை வைத்து அமர

“என்ன சொல்றீங்க? இதுக்கு முன்னாடி வேற டாக்டர்’க்கு இதே மாதிரி ஆகி இருக்கா?” என அங்கிருந்த நர்ஸ் கேட்க

“ஒரு டாக்டர் இல்ல சிஸ்டர்… இதுவரைக்கும் 99 டாக்டர்களை பைத்தியமாக்கிட்டான்… இவர் தான் நூறாவது… கங்க்ராட்ஸ் சிஸ்டர்”என்றார் பேஷன்டின் அப்பா, என்னமோ அந்த நர்ஸ் பரிட்சையில் நூத்துக்கு நூறு வாங்கின மாதிரி

அந்த நர்ஸ் பயமாய் ஒரு பார்வை பார்க்க “ஹ்ம்ம்… இனி இந்த ஊர்ல ஒரு டாக்டரும் பாக்கி இல்ல… வேற ஊர்ல தான் விசாரிக்கணும்” என பேஷன்டின் அம்மா முடிக்கும் முன் நர்ஸ் எஸ்கேப் ஆகி இருந்தார்

:))))

நான் சட்டைய கிழிச்சுகிட்ட இடம்: http://appavithangamani.blogspot.com

அண்ணே வந்துட்டேன் ..

எங்கே போயிருந்தேடா செல்லம்

தேர்தல் ஆணையத் தலைவரோட ,‘கா’ விட்டுட்டு வெளி நடப்பு செய்துட்டு உண்ணாவிரதம்,குடியா விரதம்,மௌனவிரதம்ன்னு இருந்துட்டேண்ணே..

ஏண்டா செல்லம்,

போங்கண்ணே இந்த தேர்தல் விதியே எனக்குப் புடிக்கலைண்ணே..

எதுக்குடா செல்லக்கண்ணு

பின்னே என்னண்ணே, நான் இந்ததேர்தல்ல நிக்கலாம்ன்னு இருந்தேண்ணே இந்த சின்ன தகறார்லே மிஸ் பண்ணிட்டேண்ணே….

அது என்னடா சின்ன தகறாரு..?.நீ எப்பவுமே பெரிய தகறாருபிடிச்சவனாச்சே…

அண்ணே சின்னத்தகாறார்னா தேர்தல் சின்னம்ணே..

என்னடா ஆச்சு ?

எனக்கு பிடிச்ச பாய் சின்னம் கேட்டேண்ணே…தர மாட்டேன்னுட்டாங்க அதான் நிக்கலை..

.பாய்ன்னா ???

அதாண்ணே பாய்..எம் ஃபார் மேட்… பா ஃபார் பாய் …

ஓ அந்த பாயா ?படுக்கற பாயச் சொல்றியா? நான் நம்ம கறிக்கடை பாய்ன்னு நினைச்சேன்…அது சரி அந்த பாய் மேலே உனக்கு என்னடா அவ்வளவு பிரியம்…அதைப் போய் சின்னமா கேட்டிருக்கே..
.
அண்ணே எலக்‌ஷண்லே நின்னு ஜெயிச்சா ஒரு ராசியான சின்னமா இருந்தாத்தானே நமக்கு நல்லது…

அடேடே நல்ல எண்ணம்தான் ,தொகுதிக்கு .நிறைய சேவை பண்ணலாம்ன்னு சொல்ல வரியா ?சீமண்ணை லைட் தலயா…

தொகுதியா ????அப்படின்னா என்னண்ணே…

கிழிஞ்சுது போ ..!அதுவே தெரியாம தேர்தல்ல நிக்றியாக்கும்…

எல்லாரும் அப்படித்தாண்ணே நிக்கிறாங்க

சரி சொல்லித் தொலைடா …எதுக்கு உனக்கு பாய் சின்னம் வேணும்….?

பாய் சின்னத்திலே நின்னு ஜெயிச்சாதானே நல்ல …….

.நல்ல ……நல்ல …சொல்லித்தொலையேண்டா நல்ல ?????

”நல்ல சுருட்டலாம்ணே…

ரசித்த இடம்: http://haasya-rasam.blogspot.com/

Thanks to : Dinamalar.com

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

இந்தப் பழமொழியின் உண்மையான விளக்கத்தை வாரியார் அவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று கூறுகிறார்.

பெண் புத்தி பின் புத்தி

நெற்றிக்கண் எனும் ஞானக்கண், முதன்முதலில் பார்வதிதேவிக்குத்தான் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவி சிவபெருமானுடன் சேர்ந்தபோது, தன் ஞானம் எனும் மூன்றாம் கண்ணை சிவபெருமானுக்குக் கொடுத்துவிட்டார் என்றும், சிவபெருமான் பார்வதிதேவியின் நெற்றிக் கண்ணை நினைவுகூரும் வகையில் செந்நிறத் திலகமிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே இன்றும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. அப்படி திலகம் பார்வதிதேவியின் நெற்றியில் இடப்படுவதற்கு முன், சிவபெருமான் தன்னை முழுமையாக பார்வதிதேவியின் கையில் கொடுத்துவிட்டார். இதை நினைவுகூறும் வகையில் இன்றும் திருமணங்களில் பெண்ணின் கையில் முக்கண்ணுடைய தேங்காய் கொடுக்கப்பட்டு திலகம் இடப்படுகின்றது. ஞானத்தை புத்தி என்றும் கூறுவர். ஞானமாகிய புத்தியை சிவபெருமானுக்கு பார்வதிதேவி தன் மூன்றாம் கண்ணாக அன்பின் வழியாகக் கொடுத்து, அவரின் பின்னால் சக்தியாகத் தாங்கி நிற்கின்றாள். அக்னி எனும் ஞானத்தை சிவபெருமானுக்குக் கொடுத்து அவரின் பின்னால் இருந்து புத்தியாக – சக்தியாக இருந்து செயல்படுகின்றார். இதுவே பெண்புத்தி பின்புத்தி என்று சொல்லப்படுகின்றது, பெண் சகோதரியாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும், சக்தியைக் கொடுத்துப் பாதுகாக்கின்றாள். பெண் எனும் சகோதரி, முருகன் கை வேல் போன்று காப்பவள், மனைவி எனும் பெண் ஆனந்தம், கருணை, அன்பு எனும் நித்யானந்த நிலைக்கு நம்மை வழி நடத்துபவள்.

ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா?

பொதுவாக நகரத்தார் சிக்கனவாதிகள் என்று சொல்லப்படுவதுண்டு. பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தான் தான தர்மத்திலும் சிறந்து விளங்குகிறார்கள். இன்றைக்கு இருக்கும் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைகளில் கணிசமானவை நகரத்தார்களின் நன்கொடையில் விளைந்தது. அந்தக் காலத்திலிருந்தே பல வகையான தான, தர்மங்கள் செய்து வந்தனர் நகரத்தார்கள். தானங்களில் சிறந்தது பசு தானம். எந்த ஒரு மங்கல நிகழ்ச்சி நடந்தாலும், பசுவைத் தானம் கொடுப்பது தலையாய தானமாய்க் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் எந்தவித பலனும் எதிர்பாராமல் தன் பாலை மக்களுக்குக் கொடையாக வழங்குவது பசு. அத்தகைய கொடை தரும் பசுவைக் கொடையாகத் தருவது புண்ணியம்தானே!.

ஆ-தானம் அதாவது பசு தானம் செய்வது வழக்கம். நகரத்தார்(செட்டியார்) எவரும் ஆ தானம் செய்யாது போனால், தன் வாழ்வில் செய்யத் தவறினால், அவன் தன் கடமையை ஆற்றாது போகிறான் என்பதாக வந்தது. ஆ தானம் செய்யாத செட்டி ஆற்றாது போகிறான் என்ற நகரத்தாரின் குணத்தைப் போற்றிய உண்மையான பழமொழி நாளடைவில் திரிந்து ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா என்று தவறுதலாக பேச்சுவழக்கில் கூறப்பட்டு வருகிறது.

பந்திக்கு முந்து படைக்கு பிந்து

வீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில் வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு பரிமாற வேண்டும். விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.

குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம்

நம்முடைய தகுதிக்கும், வசதிக்கும் தகுந்தது தான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இந்த பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம், குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்பந்தம். குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் அர்த்தம். இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று கூறப்படுகிறது.

சோழியன் குடுமி சும்மா ஆடாது!

சோழியன் என்பது பிராமண குலத்தில் ஒரு பிரிவு. பொதுவாக பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம் அடர்த்தியாக குடுமி வைத்திருப்பர். ஆனால் சோழியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் மலையாள நம்பூதிரிகளைப் போல தலையின் முன்பக்கத்தில் முடியும் வண்ணம் முன் குடுமி வைத்திருப்பார்கள். சோழியர்களின் குடுமி தலையின் முன்பக்கத்திலேயே அடர்த்தியாக முடியப்பட்டாலும் அது சும்மாட்டுக்கு இணையாக ஆக முடியாது. அதாவது சும்மாடு என்பது சுமை தூக்குபவர்கள் தலையில் துணியைச் சுருட்டி வசதிக்காக வைத்துக் கொள்வது. முன்குடுமி எவ்வளவு கட்டையாக இருந்தாலும் சும்மாடாகாது. அவர்களும் சுமை தூக்கும் போது சும்மாடு வைக்கத்தான் வேண்டும். சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பது தான் உண்மையான பழமொழி. இதுவே தற்போது சோழியன் குடுமி சும்மா ஆடாது என உச்சரிக்கப்படுகிறது.

பசி வந்திட பத்தும் பறந்து போகும்

அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை. இந்தப் பத்தும் இளகியிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது மற்றொரு பழமொழி. அதை சித்த வைத்தியர்கள் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என மிளகின் பெருமைகளை விளக்கும் சொல்லாக மாற்றி விட்டனர்.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

பைரவரின் வாகனமாக நாயைப் பார்க்கும் போது, அதை இறைவனின் அம்சமாக நினைத்து வணங்க வேண்டும். நாயின் வடிவத்தில் இருக்கும் கற்சிலையை பார்க்கும் போது அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும், வெறும் கல் என்று நினைத்தால் கல்லாகவே தெரியும். ஒரு பொருளின் அல்லது ஒரு விஷயத்தின் அழகும் பெருமையும் காண்பவர்களின் பார்வையைப் பொருத்தே உள்ளது என்பதே இதன் உண்மையான அர்த்தம். ஆனால் இப்போது நாயைக் கண்டால் கல்லைக் கொண்டு எறிய வேண்டும் என்பது போல் இந்தப் பழமொழி அமைந்து விட்டது.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்!

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் தென்னைக்குத் தானே நெறி கட்ட வேண்டும்? பனைமரத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா. இந்தப் பழமொழியை அப்படியே படித்தால் அர்த்தம் சரியாக இருக்காது. எங்கோ ஒரு செயல் நடந்தால், அதன் விளைவு வேறு எங்கோ தெரியும் என்றுதான் நமக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதன் உள்ளர்த்தம் வேறு. தென்னை மரத்தில் ஏறுபவர்கள் பூச்சிக்கடிகளால் பாதிப்பு வராமலிருக்க ஒருவிதமான எண்ணெய் அல்லது சாந்தை உடலில் பூசிக்கொண்டு மரமேறுவார்கள். அப்படி ஏறும்போது மரத்தில் இருக்கும் தேள் கொட்டினால், அவர்களுக்கு அந்த எண்ணெயின் மருத்துவ குணத்தால் வலி தெரியாது! ஆனால் தேளின் விஷம் தோலினுள் ஊடுருவி இருந்தால், சிறிது நேரத்துக்குப் பிறகு கொட்டிய இடத்தில் நெறிகட்டிக் கொள்ளும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மற்றொரு மரத்தில் ஏறும்போது தான் அதன் உண்மையான வலி தெரியும். அதன் பின் மருத்துவ சிகிச்சை எடுப்பர். தென்னை மரத்தில் ஏறும் போது தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏறும் போது நெறிகட்டும் என்ற உண்மையான பழமொழியே இப்போது தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்று கூறப்படுகிறது.

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு

மகாபாரதத்தில் கர்ணன் ஐந்து பாண்டவர்களோடு ஆறாவதாகப் பிறந்திருந்தாலும் அவனுக்கு சாவு தான்; நூறு கௌரவர்களோடு இருந்திருந்தாலும் கர்ணனுக்கு சாவு தான்; எனவே சாவு என்பது நாம் நிச்சயிக்க முடியாத ஒன்று. விதிப்படியே நடக்கும். இதைத் தான் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்

இந்தப் பழமொழியைப் படிக்கும் போது ஒரு பெண் தன் கணவனை கல்லுக்கும், புல்லுக்கும் ஒப்பிடுவது போல் உள்ளது. ஆனால் கள்வன் ஆனாலும் கணவன்; புலையன் (தீயவன்) ஆனாலும் புருஷன் என்பதுதான் உண்மையான பழமொழி. தனக்கு வாய்த்த கணவன், தீயபழக்கங்கள் மற்றும் தீயசேர்க்கையினால் கள்வனாகவும், தீயவனாகவும் இருந்தாலும் அவனை ஒதுக்கிவிடாமல் தன் அன்பினால் அவனைத் திருத்த வேண்டும் என்று அறிவுரை கூறுவதே இந்தப் பழமொழி. பெண்ணுக்கு பெருமை சேர்ப்பது போல் உள்ள இந்தப் பழமொழியே நாளடைவில் இப்படி மாறிவிட்டது.

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்

ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம். ஆனால் மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள் விளைநிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக் கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பினவ பலன் பெருகுகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம். அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும். பொன்னுக்கே உரம் என்றார்கள். இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.

அடி உதவுகிறார் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்

இங்கு அடி என்பது நிலத்தடியைக் குறிக்கிறது. அந்தக் காலத்தில் பொதுவாக மாதம் மும்மாரி பொழிந்த காலம். ஆறு, குளம், ஏரி என்று எப்போதும் நிறைந்திருக்கும். உறவுகள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி சோம்பலாக இருக்காதே! நிலத்தை நம்பு, உன் உழைப்பை நம்பு என்பதை விளக்கும் இந்தப் பழமொழியே இப்போது தலைகீழாக மாறி விட்டது

ஐம்பத்தி இரண்டு வயதான பெண் ஒருவர் மருத்துவரால் குணப் படுத்த முடியாத வியாதியினால் மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டார். அவரது கண்ணிற்கு இறைவன் புலப்பட.. அவரிடம் கேட்டார்,
“எனது இந்தப் பிறவி முடியும் தருவாயிற்கு வந்து விட்டதா ?”
“இல்லை இல்லை.. இன்னும் நாற்பத்தாறு ஆண்டுகள், அறுபத்தி மூன்று நாட்கள் மற்றும் எட்டு மணி நேரம் பாக்கி இருக்கிறது”.
 
இதனைக் கேட்ட அப்பெண்மணி, உடல் நிலை சற்று சரியானதும் தனது முகத்தில் விழுந்த சுருக்கங்களை நீக்கும் விதமாக முகத்தினை பிளாஸ்டிக் சர்ஜரியும், நரை முடியினை ‘டை’ செய்தும், பிரெஸ்ட் இம்ப்லான்ட்டும் இன்னும் பல விதமான காஸ்மெடிக் சர்ஜரியும் செய்து கொண்டு தன்னை ஒரு 20 வயது யுவதியாகவே மாற்றிக் கொண்டார். எப்பவுமே மாடர்ன் ட்ரெஸ்தான்….
ஆனாலும் விதி, சதி செய்து விட்டது.. ஆம்.. இரு மாதத்தில், ‘ஷாப்பிங்'(!) சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் சாலையைக் கடக்கும் பொது, கட்டுப்பாடு இழந்து வந்த ஒரு கணரக வாகனத்தால்  தூக்கி எறியப்பட்டு இறந்து விட்டார். இதனை சற்றும் எதிர்பாராத, அப்பெண்மணி இறைவனிடம் நியாயம் கேட்கச் சென்றார். அதற்கு இறைவன் சொன்ன பதில்………
“அடாடா.. அப்போது உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை”
ரங்கமணி : வர 'வெட்டிங்-டே'க்கு, ஒனக்கு என்ன கிஃப்ட்  வேணும் ?
தங்கமணி : ( மனசில புதிய காரை நினைத்துக் கொண்டு ) ம்ம்.. நா ஏறி மிதிச்ச சில செகண்டுக்குள்ள ஜீரோலேருந்து அறுபதுக்கு போகணும்.. அவ்ளோ ஸ்பீடா...
ரங்கமணி : ம்ம்ம் ஓகே.. புரியுது.. புரியுது..
மறுநாள் வீடு திரும்பிய ரங்கமணி மேஜை மீதி வைத்த காம்பாக்ட் சைஸ் கிஃப்ட் பாக்ஸை  கண்டதும் தங்கமணி மனசுக்குள்.. "அட.. சின்னதா டாய் கார் வாங்கிட்டு வந்துட்டாரா ?" என நினைத்துக் கொண்டே, அவரிடம் ,"என்னது விளையாட்டு பொம்மையா ?"
ரங்கமணி : இல்லை.. நிஜம்..
தங்கமணி, மனதினுள்  அது காரின் சாவியாக இருக்கலாம் என கற்பனை செய்து கொண்டு மேஜை மீதிருந்த பாக்ஸ்ஸினை பிரிக்க ஆரம்பித்தாள்........
பாக்ஸினுள் இருந்தது.....
----------------
-------------
-------- இன்னும் கீழ இருக்கு பாருங்க..
------------------------
------
---------
------  
------------------------
------இன்னும் கொஞ்சம் கீழ........
---------
------------------------
------
---------
------------------------
------
--------- இதோ.. இதுதான்.. பாருங்க..

டிஸ்கி : 
நன்றி - மூலம் ஆங்கிலம்.. சரியான ஞாபகம் இல்லாததால் சுட்டி கொடுக்க முடியவில்லை .. 
தமிழாக்கம் -- நானே http://vanavilmanithan.blogspot.com
                   
படங்கள் உதவி : கூகிள் இமேஜெஸ்..

பாகம் 1 படிச்சுடீங்களா? அப்போ மேல படிங்க

ஆமா இப்ப நிலம எப்படி இருக்கு
என்னது தெரிஜிடுச்சா அவ்வளவுதானா?
மாறு வேசத்துக்கு மாறிட்டிடோம்ல
கோழி சிக்கிடிச்சி மெதுவா போவோம்
ஆகா ஒன்னையும் விட மாட்டானுகளா
அமுக்கிடானுகயா அமுக்கிடானுக
நீ தீந்தடா மவனே
எப்படி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டுடானுகளே
உங்க சாவகாசமே வேமணடாம் சாமி
எனக்கு சொன்னவரு: http://ezuthuru.blogspot.com

தங்கமணி வேலைக்கு கிளம்பி கொண்டிருந்த ரங்கமணியிடம் “இன்னிக்கு நாம புது வீட்டுக்கு போறோம். திரும்பி வரும் போது நேரே அந்த வீட்டுக்கு வந்துருங்க” னு சொன்னாள். நம்ம ரங்கமணிக்கு தான் வழக்கம் போல மறந்து சாயங்காலம் பழைய வீட்டுக்கே வந்துட்டான். அப்புறம் தான் தங்கமணி காலையில் சொன்னது ரங்கமணிக்கு  ஞாபகம் வந்துச்சு. ஆனா, புது வீட்டு முகவரி தான் மறந்து போச்சு. என்ன பண்றதுன்னு யோசிச்சுகிட்டே வீட்ட விட்டு வெளிய வந்தான். அங்க விளையாடிகிட்டு இருந்த ஒரு குழந்தை கிட்ட “பாப்பா இந்த வீட்டுல இருந்து காலைல ஒரு லாரில போனாங்களே!. அது எந்த பக்கம் போச்சுன்னு தெரியுமா உனக்கு” அப்படின்னு கேட்டான். அதுக்கு அந்த குழந்தை என்ன பதில் சொல்லுச்சு தெரியுமா?

 

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

எனக்கு தெரியும்பா வாங்க கூட்டிட்டு போறேன். 🙂
ஆகா பெட்ரோல் விலை மறுபடியும் ஏறிடுச்சு    , இனி நம்மக்கு பெட்ரோல் போட்டு கட்டுபடியாகாது , என்ன பன்னலாம்னு மெரிடியன்ல ரூம் போட்டு யோசிச்சப்ப ஒரு அருமையான ஐடியா தோணிச்சு ,
“பேசாம நாம் ஏன் ஒரு குதிரை வாங்ககூடாது “
குட் , உடனே நம்ம ஏரியாவுல இருக்க சூபர் மார்கெட் போய், குதிரை இருக்கா?  என்னா விலைன்னு கேட்டேன் , அதுக்கு டக்குன் அந்த சூபர் மார்கெட் ஓனர் வேலைய ரிசைன் பன்னிட்டு போயிட்டாரு .
டுஸ்கி: ஒன்னு இருக்குன்னு சொல்லனும் , இல்ல இல்லைன்னு சொல்லனும். என்னா கோபகாரனா இருக்கானுக .
விசாரிச்சப்ப குதிரைல்லாம் சூபர் மார்கெட்ல விக்க மாட்டாங்கன்னு சொன்னாக , சரி எங்க கிடைக்கும்னு விசாரிச்சா, பீச்சுல கிடைக்கும்னு சொன்னாக , சரின்னு பீச்சுக்கு போய் பாத்தா அங்க நாலுபேரு காக்கி டிரஸ் போட்டு குதிரை ஓட்டிகிட்டு இருந்தாக ,
அண்ணே இந்த குதிர என்னா விலைன்னு தாங்க கேட்டேன் அவரு என்னா கோபத்தில இருந்தாரோ , நேரா குதிரையோட போய் கடல்ல குதிச்சு தற்கொல பண்ணிகிட்டார் .
என்னான்னு கேட்டா அவரு போலிசாம் குதிரை கவுருமென்டு குதிரையாம் , அங்க இருந்து சத்தம் இல்லாம எஸ்கேப் ஆகி கூகுள் தேடினால குதிர சவுதி அரேபியாவுல கிடைக்கும்னு இருந்துச்சு , சரின்னு பக்கத்து வீட்டு காரரிடம் passport கடன் வாங்கிட்டு சவுதி அராபியாவுல போய் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தேன்
மறுநாள் காலைல பந்தாவா ஆபிசுக்கு குதிரைல போனேன் , போகும்போது ஒன்னும் பிரச்னை இல்லை , ஆனா வரும் போது வழக்கம் போல நாலு டிராபிக் போலீஸ் நம்மள சுத்துபோட்டாக. என்னான்னு கேட்டேன் , மறுபடியும் ஆர்சி புக் , இன்சூரன்ஸ் , டிரைவிங் லைசென்ஸ் , எங்க குதிரைக்கு ஹெட் லைட்டு , அப்படி இப்படின்னு …கேட்டாக , என்னாது ? குதிரைக்கு ஆர்சி புக் , இன்சூரன்ஸ் , டிரைவிங் லைசென்ஸ்ஆ……. நான் டென்சனாகி குதிரைய அவுகல்டே குடுத்துட்டு பொடி நடையா வூடுபோய் சேந்தேன்.
டிஸ்கி:அன்னைக்கு நைட் புல்லா தூங்காம கொசு வத்தி சுருள சுத்திகிட்டே யோசிச்சதுல ஒரு சூபர் ஐடியா கிடைச்சு , இப்ப அத தான் நான் பாலோ பன்றேன், அது எப்படின்னு தெரியணும்னா கொஞ்சம் கீழ போங்க
??
?
?
?
?
?
?
?
?
?
கிஸ்கி : நல்லா பிராக்டிஸ் பன்னிட்டு அப்புறம் தான் ஓட்டனும்,….சரியா …….
?
?
?
?
?
?
?
?
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……….. வெயில் மண்டைய பொளக்குது . அதுல பைக்ல  டிராவல் பன்றது  மண்டை காயுது . என்ன பண்ணலாம் …….???????
பேசாம சூரியனுக்கு புல்லா ஏ.சி பண்ணிடலாமா ???
இம்ம்ம் …. அது சரிவராது கரண்ட்டு பில்லு ஜாஸ்த்தியா வரும் …… வேற என்ன பன்னலாம் ???????
என்னோட குளோஸ் பிரண்டுதான் பைக் மெக்கானிக் , நேர அவன் வொர்க் சாப் போனேன்
” மாமா வெயில் தாங்க முடியல என் பைக்கு  ஏ .சி போட்டு குடேன் “
” என்னானானானாது ………????”
” சென்ட்ரலைஸ்டு  ஏ.சி பண்ண முடியாட்டியும் பரவாஇல்லை ரெண்டு சீட்ட மட்டும் ஏ.சிபன்னி குடு “
” டேய் , மாப்ள நான் ஏற்கனவே காலைல என் பொண்டாட்டிகிட்ட செருப்படி வாங்குன வேகாலத்துல இருக்கேன் , மரியாதையா ஓடிப்போயிடு  அநியாயமா என்னைய ஒரு கொலைகாரனாக்காத “
அப்பத்தான்  ஏற்கனவே பிரண்டு கூட பைக்ல போகும் போது ஏ.சி போடச்சொல்லி பொலேர்ன்னு அடிவாங்கினது எனக்கு டக்குன்னு நியாபகம் வந்துச்சு , சரி பைக்கு ஏ.சி மாட்ட முடியாது போல ………..
” சரிடா மாமா பைக்கு ஏ.சி  பன்னமுடியாட்டி பரவாயில்ல , அட்லீஸ்ட் என் ஹெல்மெட்டுக்காவது ஏ.சி போட்டுகுடேன் “
” அடிங் ………. பிக்காளிப் பயலே , நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைடா உன்னைய மாதிரி ஆளுக இனி உயிரோட இருக்கக்கூடாது ” “
அப்படின்னு சொல்லிக்கிட்டே ஒரு ஸ்பானர   எடுத்துக்கிட்டு என்னைய நோக்கி கொலை வெறியோட  வந்தான் “
ஹே,ஹே,ஹே……. யாருகிட்ட? நம்ம கிட்டேயா?? ,நாங்க மானத்துல தமிழ் நாட்டு அரசியல்வாதிக ஜாதி ……  டக்குன்னு கால் விழுந்துட்டேன் …..
“மாமா கோபப்படாத எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கிடலாம் “
“……ங்ங்ங்கொய்யாலே…. பஸ்ட்டு உன்னைய தீத்துட்டு, அப்புறம் கோர்ட்டுல பேசிக்கிறேன்டா   “
அப்படியும் விடாம ஸ்பானரால  அடிக்க வந்தான் ………..
முடியுமா? , நடக்குமா ??…… நாமெல்லாம் யாரு ?????
பின்னங்கால் பிடரில அடிக்க  எடுத்தே….ன் பாரு ஓட்டம் ……… நேரா ஒரு ஹெல்மெட் விக்கிற கடைல போயி நின்னேன் …..
அங்க இருந்த பொண்ணு என்னைய  பைத்தியக்காறன பாக்குற மாதிரியே பாத்துச்சு .
” மேடம் , என்னோட ஹெல்மெட்டுல  ஏ.சி போடணும்  “
” என்னங்க சார் ?”
” என்னோட ஹெல்மெட்டுக்கு ஏ.சி பண்ணனும் “
இப்போ அந்த பொண்ணு  பைத்தியத்துக்கு  வைத்தியம் பாக்குற வைத்தியர பைத்தியமாக்குற பரம்பர பைத்தியக்காறன பாக்குறது மாதிரி   என்னை பாத்துச்சு
“இம்ம்ம்மம்ம்ம்ம் ………..ஆயிரம் ரூபா ஆகும் , பரவாயில்லையா ?”
“அட இவ்ளோ சீப்பா இருக்கே , உடனே பண்ணிக்குடுங்க மேடம் “
” பஸ்ட்டு பணத்த  கட்டுங்க “
” ஓகே மேடம் , இந்தாங்க “
பத்து நிமிஷம் ……….. என்னா  அழகா ஏ.சி போட்டு குடுத்துட்டாங்க பாருங்க ….
*
*
*
*
*
*
*

ஹி.ஹி.ஹி………. எப்புடி நல்லா இருக்கா ????

ஏ.சின்னா இப்படியா இருக்கும்……… குளு ,குளுன்னு இருக்கனுமே ????? ஒரே குழப்பமா இருக்கே ………..
ஆள் வைத்து அடிக்க முகவரி இதோ: http://manguniamaicher.blogspot.com/
அனேகமாக ரெண்டாம் ஆண்டு, மூண்டாம் ஆண்டு காலங்களிலை சிலம்பல்த்தலை பிரம்பை ஆட்டிக்கொண்டு டீச்சர் அடைச்ச குரலிலை மேற்கண்ட வசனத்தை கத்தி கத்தி சொன்ன கதைகள் கொஞ்சம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம் எண்டு கருதுறன்.
பல் + பசை பற்பசை என்றும் சிற்சில என்பதை சில + சில எண்டும் சேர்த்தும் பிரிச்சும்; எழுதியிருப்பியள். கோதாரியில விழுந்த நான் அதுகளை பப்பசை எண்டும் சில்லு சில எண்டும் எழுதின கதைகள் வேற.
இங்க அந்த நேரத்திலை நாங்கள் ஓட்டைக்காச்சட்டையையும் போட்டு மணியடித்துக்கொண்டு திரிந்த நாட்களைப்போல இங்க உள்ள குறுனிகள் படுறபாடு பெரும்பாடு.
நாங்கள் அந்த நேரத்திலை தமிழிலை பள்ளிக்கூடத்திலை கடமைக்கு படிச்சுப்போட்டு ரீயூசனுக்கு இங்கிலீசுக்கு, பாவம் ரீச்சர் நெடுகலும் அவவை ஏமாத்தக்கூடாது எண்ட எண்ணத்திலைதானே போறனாங்கள்.
இங்கை நிலைமை தலைகரணம் கண்டியளோ. குறுனிகள் கியா மாயா எண்டு இங்கிலீசு பள்ளிமுடிந்து ஓடிவந்து தமிழுக்கு ரியூசனுக்கு போகுதுகள்.
அதுகளின்ட நடவடிக்கைகளை கொஞ்சம் புலனாய்வு செய்ததிலைதான் இந்த சேத்தெழுதல் பரித்தெழுதல் நினைவுகள் வந்திச்சு.
இந்த சேத்தெழுதல், பிரித்தெழுதல் அந்த நேரத்திலையே கிளியர் ஆகாமல் விட்டால் பிறகு வாழ்க்கை முழுக்க சிக்கல்தான் கண்டியளோ.
அப்புடியான சிக்கலுகள் எனக்கு பாடையில போகுமட்டும் இருக்கு எண்டு எனக்கு தெரியும். எல்லாம் அந்த சந்திரமோகன் வாத்தியின்ட சாபமாத்தான் இருக்கும்.
நாங்கள் நாலாம் ஆண்டு படிக்கேக்க பள்ளிக்குடத்துக்கு தமிழ் படிப்பிக்க வந்தவர் சந்திரமோகன் வாத்தியார். வண்டியும், ண்டியுமாக ஆள் சைக்கிள்ள இருந்து மிதிச்சார் எண்டால் எண்டுமூலைபட்டம் முச்சை சிக்குப்பட்டு அங்கையும் இங்கையும் அல்லாடிக்கொண்டு நிக்குமாப்போல இருக்கும். பின்னாலை நிண்டு பாத்தால் சைக்கிள் சீட்டை காணஏலாது.
அவருக்கும் எனக்குமான அறிமுகம் சும்மா தளபதி படத்திலை மம்முட்டியும், ரசினிகாந்தும் அறிமுகமானதுபோல சுப்பரான கட்டம்.
அண்டைக்கு ஒரு வியாழக்கிழமை எண்டு நினைக்கிறன். வாத்திமார் ஸ்ராப் ரூமிலை இருந்து அலட்டுறதுக்கு தோதாத்தானே எங்களுக்கு பீட்டிப்பாடம் (உடற்பயிற்சி) எண்ட ஒண்டை ரைம்டேபிளிலை வக்கிறவை. சரி இண்டைக்கு ஏதாவது விளையாடுவம் எண்டுபோட்டு முழுபெடியளும் கபடி மாத்தி ஒப்பு எண்டு விளையாடத்தொடங்கிட்டாங்கள். எனக்கு அந்த விளையாட்டு சரிப்பட்டு வராது.
பாழ்படுவார் அத்தனைபேரும் சேர்த்து ஒருக்கா பிடிச்சாங்கள் எண்டால் பழைய கோவங்கள் எல்லாத்தையும் சேத்துவச்சு பிதுக்கிப்போட்டுத்தான் விடுவாங்கள்.
ஆகவே எனது கண்கள் அருச்சுனனின் அம்புப்பார்வைபோல வேறெதுவும் தெரியாமல் அசம்பிளி நடக்கிற இடத்திலை நிண்ட மாமரத்தில் இருந்த மாங்காய் ஒன்றின் மேலேயே இருந்தது. மற்றய நிகழ்வகள் ஒன்றிலும் எந்தவித ஒன்றிப்பும் இல்லை. இலக்கு மாங்காய் மாங்காய் மட்டுமே. (மாங்காய் எண்டதுமே எப்படி பனங்காட்டுத்தமிழ் சங்கத்தமிழ் ஆகுதெண்டதை கண்டியளே)
எதேட்சையாக ஒரு கல்லை எடுத்து லக்குப்பார்த்து விட்டன் ஒரு கல்லை, சரியா பிடிக்கேல்லை. அந்தநேரம் பார்த்து நாசமறுந்த இந்த சந்திரமோகன்சேர் சைக்கிளை விட இறங்கேக்கை முதுகிலை கும் எண்டு விழுந்திச்சு கல்லு.
பிறகென்ன வட்டாலக்கடி வடைகறிதான்.
சரி சந்திரமோகன் வாத்தியை நினைச்சு விசியத்தை மறந்துபோனன் பாத்தியளே!
ம்ம்ம் சேத்து பிரித்து எழுதுவதிலை நிதானம் படு அவதானமாக வேண்டும் கண்டியளோ.
இப்புடித்தான் ஒரு மாமனார் மருமோணிட்டை, டேய் உன்டை மச்சாள்மாரிண்டை பாவித்த சைக்கிள் இருக்கெல்ல அதை விக்கப்போறன் ஒரு போட் எழுதி வாசல்ல போடு எண்டாராம்.
மருமோன் கேட்டானாம் என்னெண்டுமாமா எழுத எண்டு
அவர் சொல்லி இருக்கிறார் ‘பாவித்த பெண்;கள்சைக்கிள் உடன் விற்பனைக்குண்டு’ என்று எழுதி வாசல்ல போடு எண்டு.
இந்த வேதாளம் எழுதினது எப்படித்தெரியுமே
‘பாவித்தபெண்கள் சைக்கிளுடன் விற்பனைக்குண்டு’
இதுபோலதான் ஊருக்க இன்னுமொரு வேதாளம் பெயிண்ட் அடித்துக்கொண்டு திரிஞ்சது. கொஞ்சம் மேல்வீட்ட சுகமில்லாத பெடியன்தான். என்ன செய்யிறது குறைமாதங்களை பெத்தால் தாய் தேப்பனுக்குத்தானே பாருங்கோ கவலை.
அப்புடித்தான் பழனிச்சாமியும், மாம்பழமக்காவும் அவனை நினைச்சு கவலைப்பட்டிருப்பினம். ஆனால் பெடியன்ட பெயிண்ட் அடியை அநியாயம் சொல்லக்கூடாது.
கோயில்ல மடப்பளிக்கு பக்கத்திலை பிராமாணர்கள் சாப்பிடும் இடம் இருந்திச்சு, அதுக்குள்ளை எல்லாரும் எட்டி பார்க்கினம் எண்டு, ‘பிராமணர்கள் சாப்பிடும் இடம் எண்டு சின்ன பலகையை கொடுத்து பெயிண்டாலை எழுதி கொழுவச்சொல்லிச்சினம்.
பேடியன் எழுதினான். பிராமணர் எண்டு எழுதும்போதே பலகை முடிஞ்சுபோச்சு எனவே மிச்சத்தை கீழே எழுதியிருந்தான்.
பிராமணர்
கள் சாப்பிடும் இடம்.
இப்ப விளங்குதே கண்டியளோ. அதுதான் சொல்லுறன் இந்த சேத்து பிரிச்சு எழுதுறது முக்கியம் கண்டியளோ.

மீண்டும் நினைவூட்டிய இடம்: http://thavarnai.blogspot.com

அண்ணாத்த தங்கமணிகிட்ட பத்து கேள்விகள்  கேக்கராருங்களாமா… அதை படிச்சு போட்டு அப்பாவியான நானே பொங்கிட்டனுங்க…அதானுங்க இந்த எதிர் பதிவு…

அண்ணாரு கேட்ட ஒரு ஒரு கேள்வியும் “பதிவு”ன்னும் அதுக்கு என்னோட மறுமொழிய “எதிர் பதிவு”ன்னும் போட்டு இருக்கறனுங்… படிச்சுபோட்டு உங்க கருத்த சொல்லி போட்டு போங்… சரிதானுங்….

பதிவு 
உங்க கைப்பையில அப்படி என்ன குப்பையைத்தான் வெச்சிருப்பீங்க, அதுல இருக்கற அந்த 32 ஜிப்புகளை எப்ப திறந்தாலும், எது தேவையோ அதைத் தவிர மத்ததெல்லாம் எடுக்கறீங்களே?

எதிர் பதிவு 
எல்லாம் உங்களுக்கு தேவை பட்ற குப்பைக (!!!) தான். என்ன செய்ய? நீங்க கை வீசிட்டு வர்றப்ப நாங்களாச்சும் பொறுப்பா எல்லாத்தையும் கொண்டு வர வேண்டி இருக்கே…நல்லதுக்கு காலம் இல்ல… வேற என்ன சொல்ல

பதிவு 
ரூபா நோட்டை ரெண்டா மடிச்சு பிடிக்கத் தெரியாதா? அது ஏன் எல்லாத் தங்கமணியும் ஒவ்வொரு நோட்டையும் சுருட்டி உருட்டி 24 மடிப்பு மடிச்சு பிடிக்கறீங்க?

எதிர் பதிவு 
ரூபாயை எப்படி பிடிக்கறோம்கறது முக்கியம் இல்ல பாஸ்… எப்படி பிடிச்சு வெக்கறோம்கறது (சிக்கனம்) தான் மேட்டர்…. அதுல ரங்கமணிகள விட தங்கமணிகள் எப்பவும் சூப்பர் தான்னு statistics சொல்லுது… போய் பாருங்க…ஹா ஹா ஹா

பதிவு 
அரைச்ச சட்னில ரெண்டு மொளகாய ஜாஸ்தியா போட்டுட்டு, அவனவன் கண்ணுல தண்ணிவர அவஸ்தைப்பட்டா, “கொஞ்சம் காரமா இருந்தா விரும்பி சாப்பிடுவீங்களேன்னுதான் வெச்சேன்” னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியுது? (ஆனா உண்மையில அளவு தெரியாம போட்டதை எங்க போய்ச் சொல்ல)

எதிர் பதிவு 
சட்னி அரைச்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்… வெறும் தேங்காய கடிச்சுட்டு சாப்பிடுங்கன்னு விட்டுட்டா இனிமே சரியா போகும்… என்ன நான் சொல்றது….? (தேவையா இது தேவையா…ஹா ஹா ஹா)

ஒரு நாள் ஒரே நாள்… கிட்சன்ஐ போர்களமா மாத்தாம ஒரு உப்மா செய்ங்க அப்புறம் பேசலாம் மத்ததெல்லாம் (உடனே “நான் செய்வேனே”னு நாலு பேரு சொல்லுவீங்கன்னு தெரியும்…நான் நாலு நல்லவங்கள பத்தி பேசலைங்ண்ணா… மிச்சம் 96 பேரு தான் எங்க டார்கெட்….ஹி ஹி ஹி)

பதிவு 
பேஸ்கெட்பால் விளையாடு, டிராயிங் கிளாஸ் போ, இன்டர்நெட் பழகு, ஹேரி பாட்டர் படி, பரத நாட்டியம் பழகுன்னு அந்த பச்ச மண்ண இந்தப் பாடு படுத்தறீங்களே, அவ வயசுல நீங்க அ,ஆ,இ, ஈ ஒழுக்கமா எழுத பழகீருப்பீங்களா?

எதிர் பதிவு 
என்ன செய்ய? வாய்ச்சது தான் இப்படி விதின்னு ஆகி போச்சு…. நாம பெத்ததாச்சும் நல்லபடியா இருக்கட்டும்னு நெனைக்கறது தப்பாங்ண்ணா… நேரடியா சொன்னா உங்க மனசு கஷ்டப்படும்னு சொல்லாம விட்டது தங்கமணி தப்பு …. (இப்ப என்ன சொல்லுவீங்க… இப்ப என்ன சொல்லுவீங்க…ஹா ஹா ஹா)

பதிவு 
குழந்தைக்கு யூனிஃபார்ம் தான் வாங்கப் போறோம், அப்பவும் எதுக்கு மத்த துணியெல்லாம் பாத்துட்டு அப்புறமா யூனிஃபார்ம் வாங்கறீங்க?

எதிர் பதிவு 
அதுதாங்க மல்டி-டாஸ்கிங்…. ஓ… அப்படின்னா என்னனே ரங்க்ஸ்களுக்கு தெரியாதில்ல… அதாவது… ஒரு வேலை செய்யறப்பவே அவகாசம் கெடைச்சா பின்னாடி வேண்டியதையும் பாத்து வெச்சுக்கறது பெண்களுக்கே உரிய ஒரு குணம்… இல்லேனா உங்கள மாதிரி நூறு ரூபா பெறாத சட்டைய ஆயிரம் குடுத்து வாங்க வேண்டி வருமே பாஸ்… ஹே ஹே ஹே…

பதிவு 
எங்க சொந்தக்காரங்க கிட்ட நாங்க ஃபோன்ல பேசும் போது மட்டுமே ஏன் நீங்க மிக்ஸில மசால் அரைக்கறீங்க?

எதிர் பதிவு 
என்ன கொடுமைங்ண்ணா இது? “ஆகாத பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்” னு சொல்றாப்ல பேச்சு…. அரைச்சாலும் தப்பு அரைக்கலைனாலும் “என் தங்கமணிக்கு சமயல் அறையே எங்க இருக்குன்னு தெரியாது”ன்னு ஒரு டயலாக் சொல்லுவீங்க… ஏங்க கேக்க ஆள் இல்லைன்னு பேசறீங்களோ….? ஹும்… 33 % அரசாங்கம் குடுத்தாலும் வீட்டுல என்னிக்கி தான் விடியுமோ…

பதிவு 
உங்களுக்கு புடவை வாங்கணும்னா நீங்க ரெண்டு மணி நேரம் வேண்ணாலும் நின்னு வாங்கிக்கங்க, ஆனா நீங்க பாக்கற 237 புடவையையும் நானும் பாக்கணும்னா, இதெல்லாம் அராஜகமாத் தோணலயா?

எதிர் பதிவு 
என்னங்க செய்ய? உங்கள மாதிரியா நாங்க… நாங்க உடுத்துற புடவை கூட உங்களுக்கும் பிடிச்சதா இருக்கணும்னு நெனக்கற நல்ல மனசு தங்கமணிகளுக்கு இருக்கே… (ஹா ஹா ஹா)

பதிவு 
எங்க வெளீல கெளம்புனாலும் நாங்க கிளம்பி ஒரு கால் மணி நேரம் கழிச்சுதான் நீங்க ரெடியாகணும்கறது ஒரு சடங்காவே வெச்சிருக்கீங்களா? (அந்த கால் மணி நேரத்துல கேஸ் ஆஃப் பண்ணு, சன்னலை சாத்து, சாம்பாரை ஃபிரிட்ஜுல வைன்னு ஒரு 34 வேலைகள லிஸ்ட் போட்டு செய்ய வெக்கறீங்களே அது ஏன்)

எதிர் பதிவு 
உங்கள போல கை வீசிட்டு கெளம்ப நாங்க என்ன நீங்களா? உங்களுக்கு கிளம்பறது ஒண்ணு தான் வேலை… எங்களுக்கு அதுவும் ஒரு வேலை… அதோட சமைக்கறது (நீங்க மேல சொன்னாப்ல அந்த நேரத்துல தானே உங்க சொந்த காரங்க கூட அரட்டை அடிச்சுட்டு நாங்க mixie போடறத வேற கிண்டல் பண்ணுவீங்க… பின்ன என்ன ஹெல்ப் பண்றதா போச்சு…), பிள்ளைகள கிளப்பறது, வீட்டை ஒழுங்கு பண்றது எல்லாமும் இருக்கே (கரெக்ட் தானே பாஸ்…)

பதிவு 
பாத்ரூம் ஷெல்ஃபுல போதை வஸ்துக்கள் மாதிரி ஒரு 25 டப்பால கலர் கலரா கடந்த ஒரு நூற்றாண்டா என்னென்னமோ இருக்குதே, இதுல ஒரு ஐட்டத்தையாவது கடந்த மூன்று மாதங்கள்ல ஒருதரமாவது யூஸ் பண்ணீருக்கீங்களா?

எதிர் பதிவு 
//”போதை வஸ்துக்கள்”// உங்களுக்கு ஏங்ண்ணா எல்லாமும் இப்படியே தோணுது…? ஓ… நீங்க ரங்கமணி ஆச்சே… அப்படி தான் இருக்கும்… யூஸ் பண்றதெல்லாம் பிட் நோட்டீஸ் அடிச்சு சொல்லிட்டா பண்ண முடியும்… எல்லாம் பண்றது தான்..

பதிவு 
எந்த கடை முன்னால காரை நிறுத்த முடியாதோ, கண்டிப்பா அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு எப்படி கண்டு பிடிக்கறீங்க?

எதிர் பதிவு 
அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு தெரிஞ்சு வெச்சு இருக்கறதுக்கு பாராட்டறத விட்டுட்டு இதுக்குமா குத்தம்… ஆண்டவா காப்பாத்து…

பத்து கேள்வி கேட்டீங்களே… உங்ககிட்ட ஒரே கேள்வி…

அது எப்படிங்ண்ணா அத்தனை நேரம் வெட்டியா டிவி பாத்துட்டு இருந்தாலும் தங்கமணிக ஒரு வேலை சொல்றப்ப மட்டும் ரங்கமணிகளுக்கு முக்கியமான போன் கால் இல்லைனா ஆபீஸ் வேலை வருது…

என்னமோ போங்க… இனிமே பொண்ணுகள புரிஞ்சுக்கவே முடியலைன்னு யாரும் சொன்னா நான் டென்ஷன் ஆய்டுவேன் ஆமா… ஹா ஹா ஹா

பதில் சொன்னது: http://appavithangamani.blogspot.com

<<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். – வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா
<<>> புது செல்போன் வாங்கியிருக்கேன் : அதுல வாஷிங் மெஷின், மிக்சி, ஓவன் ன்னு எல்லாமே இருக்கு! # மேட் பை மேனியாக்.
<<>> மனைவியோட சமையல் வாசனை அருமைன்னு சொல்லற மனசு, மூக்கு அடைச்சிருக்கும்போதுதான் வருது… # வாழ்க பயம்!
<<>> நடுநிசி நாய்கள் படம் பார்த்தேன் – ஏற்கனவே அந்த படத்தை பத்து தடவை பார்த்த உணர்வு! # மீள்செயல் ஒழிக!!
<<>> மனிதன் நிலவுல தண்ணீரும், ஐஸ்சும் இருக்குன்னு கண்டுபுடிச்சிருக்கானாம் – நாம சரக்கோட போனா போதும்!! # யாரை மட்ட கட்டலாம்?
<<>> அலுவலகத்துல, காதல் திருமணமா? ஏற்பாட்டு திருமணமா? ன்னு வாக்குவாதம் – எப்டி செத்தா என்னாங்கடான்னு தோனுது எனக்கு! # நார்மலாதான் இருக்கேன்
<<>> மதத்துக்காக சாக விரும்புற மாக்கானுங்க, உடனே செத்து தொலைங்க – பாக்கி இருக்கிறவங்க வேலைய பார்போமுல்ல?? # வெங்காயம்
<<>> ஏழு வருஷம் நானும் என் மனைவியும் சந்தோஷமா வாழ்ந்தோம் 🙂 அப்புறம் கல்யாணம் பண்ணிகிட்டோம் 😦
<<>> உயிர் காப்பீடு: நீங்க 50,000 கொடுங்கள் – நீங்க செத்த உடன் திருப்பி தருகிறோம் !! – SLO”GUN”
<<>> முட்டாளுங்க கூட சகவாசம் வச்சிகிறது எவ்வளவு சுகம்… – என்னமா என்னை புகழ்றானுங்க….ம்?
<<>> ஓம் நித்தியாநந்தா ஸ்வாமியே நமக-ன்னு 100 தடவை சொல்லுங்க – இல்லனா, கடைசி வரை உங்க மனைவி கூட மட்டும் தான்! # கப்லிங்ஸ்
<<>> நான் ஏன் பொய் சொல்ல போறேன்?? என் பொண்டாட்டி என்னை கேள்வி கேட்கலைன்னா.
<<>> அடிக்கடி ROFL ன்னு எழுதுறவங்க என் ரூமுக்கு வாங்க… கூட்டி பல நாள் ஆகுது!
<<>> ஏய்.. எனக்கு லோன் வேண்டாம்ன்னு எத்தனை தடவ சொல்றது? நானும் அதே பேங்க்லதான் வேலை செய்றேன். # HDFC ஊழியர்
<<>> மருத்துவமணை குடும்ப கட்டுபாடு பிரிவு கதவின் மேல் உள்ள வாசகம் – “தயவுசெய்து பின்புற கதவை உபயோகிக்கவும்” # டீட்டெய்லு??
<<>> இந்தியாவுல ஊழல் என்பது, குளிக்கும்போது உச்சா போவது மாதிரி.. தப்புன்னு தெரிஞ்சும் சுகமா செய்வோம்! # அவன நிறுத்த சொல்லு..நா நிறுத்துறேன்
<<>> சில சமயங்களில் இன்டர்நெட் வேலை செய்யலைன்னா… கம்ப்யூட்டரே வேலை செய்யாதது போல பிரமை!! # எனக்கு மட்டுமா?
ரசித்த இடம்: http://kalakalkalai.blogspot.com
ராமு: வக்கிலுங்க கிட்டேயும் டாக்டருங்க கிட்டேயும் உண்மையை சொல்லணும்னு ஏன் சொன்னாங்க தெரியுமா?
சோமு: ஒரு வேலை, நம்ப கிட்ட எவ்வளவு பணம் இருக்குதுங்கற உண்மை தெரிஞ்சப்பின்னாடி அதுக்கேத்தமாதிரி வேலை செய்வாங்களோ என்னமோ?

சோமு: 
கோழியில இருந்து தான் முட்டை வந்தது. ஏன்னா, முட்டையில இருந்து சேவல் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கே
ராமு: 
சரி! கோழியில இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில இருந்து கோழி வந்ததா?
ராமு: சரி! ஒருத்தன் 8 அடிக்கு ஃப்ளூட் ஒன்னு செய்தான். அதுக்கு என்ன பேரு வைச்சான் சொல்லு?
சோமு: அது பெரிசா இருந்ததாலே புல்லாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் குழல்ன்னு பேரு வெச்சிருப்பான். ஜோக் புரியலையா புல்Long குழல். இப்போ புரிஞ்சதா?
ராமு: ஒரு தத்துவம் சொல்றேன் கேளு!
மெயில்ல (Train) மயிலை ஏத்தலாம்; அது தாங்கும். ஆனா மயில்ல மெயில் ஏத்தினா அது தாங்குமா? அது செத்துடும்.
சோமு: நானும் ஒரு தத்துவம் சொல்றேன் கேளு!
எருமை மேல சவாரி செய்றவன் எமன்.
புருஷன் மேல சவாரி செய்றவ வுமன்
ராமு: பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து உன்னை அடிக்க வரப்போறாங்க பாத்து பேசுப்பா!
சோமு: அப்படி வந்தா சரணாகதி தான். சட்டுனு அவங்க கால்ல விழுந்திட மாட்டேன்.
ராமு: நீ செய்தாலும் செய்வே சரி! இந்த பஞ்ச் டயலாக்கை கேளேன்!
பறந்து பறந்து அடிச்சா, அது ரஜினி
மறந்து மறந்து அடிச்சா, அது கஜினி
சோமு: சூப்பரு!
ராமு: ஒரு பெரியவரு, கையில கொம்பு வைச்சிட்டு, கல்யாண சத்திரத்தை சுத்தி சுத்தி வந்திட்டே இருந்தாராம் எதுக்கு சொல்லு சோமு?
சோமு: இது ரொம்ப சிம்பிள்! கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிருன்னு சொல்லுவாங்க இல்லை. அதனால காக்கா குருவி ஓட்டுறதுக்காக இருக்கும்.
அதை இப்படியும் சொல்வாங்க தெரியுமா? கல்யாண சத்திரத்தில, ஆடு மாடுங்களை உள்ளே விடமாட்டாங்க. ஏன்னா? கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிரு. அதை, இதுங்கல்லாம் மேய்ஞ்சிட்டு போயிடக்கூடாது இல்ல.
ராமு: ஆட்டோ ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ஆட்டோ ஓட்டுவாரு
ராமு: பஸ் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: பஸ்சை ஓட்டுவாரு
ராமு: ட்ரைன் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ட்ரைன் ஓட்டுவாரு
ராமு: சரி! அப்போ ஸ்க்ரு ட்ரைவர்???…
ரெண்டு அக்காங்க பேசிக்கிறாங்க!
விமலா: உன் புருஷன் தங்கமானவருன்னு சொன்னே!
கமலா: ஆமாம் சொன்னேன்.
விமலா: அதுக்காக அவரு பாதுகாப்பா இருக்கணும்னு, அவரை பீரோல வைச்சிப் பூட்டுறது, கொஞ்சம் கூட நல்லா இல்ல.
விமலா: எங்க விட்டில இன்னைக்கி விலை உயர்ந்த சமையல்ப்பா!
கமலா: அப்படி என்னப்பா செய்தே?
விமலா: 22 கேரட்ல பொரியலும், 18 கேரட்ல குழம்பும் வைச்சேன்
தங்கமணி: என்னங்க! ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
ரங்கமணி: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.

குறிப்பு: ஜாலியா சிரிங்க! ஜாலியா ஜோலியைப் பாருங்க! சில ஜோக்ஸ் எப்பவோ எங்கேயோ படிச்சது. பெயர் தெரியாத, முகம்தெரியாத ஜோக்ஸ் எழுத்தாளர்கள், சமூகத்துக்கு நல்லா சேவைச் செய்றாங்கப்பா! எழுதிய புண்ணியவான்க எல்லோருக்கும் தேங்க்ஸ்ங்கோ!

சிரித்த இடம்: http://uravukaaran.blogspot.com


  • கல்யாணம் பண்றதுல தப்பில்லை! நல்ல மனைவி அமைந்தால், உங்கள் வாழ்கையில் சந்தோஷம்! இல்லையென்றால் நீங்க தத்துவஞானி!! – சாக்ரடீஸ்
  • தீவிரவாதத்தை பற்றி எனக்கு பயமில்லை, ஏன்னா..நான் கல்யாணம் முடிச்சு 2 வருசம் ஆகுது! – சேம் கினிசன்
  • எனக்கு நடந்த இரண்டு கல்யாணத்திலும் ராசியில்லை.. முதல் மனைவி என்னை விட்டு போயடவிட்டாள்! இரண்டாவது மனைவி இன்னம் கூடவே இருக்கா!! – பேட்ரிக் முரே
  • உலத்திலேயே கடினமான கேள்வி – பெண்களுக்கு என்ன வேண்டும்? என்பதுதான் – சிக்மென்ட் பிராட்.
  • ஒரு நல்ல அருமையான வழி உங்கள் மனைவியின் பிறந்தநாளை ஞாயாபகம் வைத்துக்கொள்ள.. ஒரு தடவை அதை மறப்பதுதான்! – பிராங்களின்.
  • ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள், அவள் பக்கம் தப்பு இருந்தால்.. – மில்டன் பியர்லி
  • சந்தோஷமான திருமண வாழ்கையென்பது கொடு பெரு என்ற தத்துவத்தின் அடிப்படைதான். கணவர் கொடுக்கனும்! மனைவி வாங்கிக்கனும்!! – யாரோ
  • “காதல் என்பது நீண்ட அழகான கனவு! கல்யாணம் என்பது அலாரம்!!” – இயான் வுட்
  • பெண்னுக்கு எல்லாமும் வேண்டும், ஒரே “ஆண்” னிடம்!
    ஆனுக்கு ஒன்றே ஒன்று வேண்டும், எல்லா “பெண்” னிடம்!!

ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

  • பீரோ நிறைய துணிமனிகளை அடிக்கி வச்சிகிட்டு, மனைவிமார்கள் டிரஸ்சே இல்லாத மாதிரி “நைட்டியில” அலையறது ஏன்னு பிரியல?
  • 337 அயிட்டத்தை பாத்ரூம் குள்ள வச்சிகிட்டு, போனா போகுதுன்னு 2 பொருட்களை வச்சிக நமக்கு எடம் தர்றது ஏங்க? (அவங்க வச்சிருக்குற பாதி அயிடத்தோட பெயரே தெரியாது நமக்கு)
  • புதுசா கல்யாணமான ஆண் சந்தோஷமாக இருந்தால் ஏன்னு தெரியும்! ஆனா.. கல்யாணமாகி “10 வருடம்” ஆன ஆண் சந்தோஷமா இருந்தா ஏன்னு தெரிய மாட்டுது!!
  • பெண்கள் ஒருமணி நேரமா எழுதுன “மளிகை லிஸ்டை”, அவங்க கடைக்கு போகும்போது எடுக்க மறந்துட்டு போறது… ஏங்க?
  • பெண்கள் அவர்களது தோழிகளை அவர்கள் வீட்டில் பாத்து அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியதும், “அதே தோழியிடம்” 2 மணி நேரம் போன் செஞ்சு பேசுறது… ஏங்க?
  • பெண்கள் ஷாப்பிங் போகும் போதும், வீட்டை பெருக்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும், போன் பேசும் போதும், மெயில் அனுப்பும் போதும் மேக்கப் போட்டுகறாங்ளே.. ஏங்க? (மேல இருக்கறது பாதிதான்!!)
  • பெண்கள் சமைக்கும் போது.. இப்படி செய்யி, அப்படி செய்யுன்னு சொல்லாத நம்மல பார்த்து.. கார் அல்லது பைக் ஓட்டுபோது “பிரேக் போடுங்க”, “அப்டி வளைக்காதீங்க”, “பார்த்து ஓட்டுங்க”ன்னு சொல்றது… ஏங்க?
  • தேவையான பொருளை தள்ளுபடியில போட்டா கூட வாங்க நாம யோசிக்கிறபோது, “தேவையே இல்லாத பொருளை தள்ளுபடியில” போட்டுடாங்கன்னு.. தளராம கிளம்பி, தகதகன்னு தள்ளிகிட்டு வராங்களே… ஏங்க?(இன்னும் ஏங்க? போட நிறைய இருந்தாலும்.. என்னோட “ஏங்க” எகிறி..எகிறி அடிப்பாங்க என்பதால, இத்தோட நிறுத்திகிறேன்!)

ஆண்கள் மட்டும் ரசிக்கும் தமாசுகள்

இரு நண்பர்கள், பார்டியில்…
ந1 : “என் மனைவி தேவதை! ”
ந2 : “நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி உயிரோட இருக்கா!!”

நிச்சயத்தின்போது…
மகன்: “யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!”
அப்பா: “உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!”

மகன்: “கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?”
அப்பா: “தெரியலப்பா… இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!”

மனைவி: “ஏங்க.. திருடுபோன “கிரிடிட் கார்ட்” பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?”
கணவன்: “திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!”

இரண்டு நண்பர்கள் பாரில்…
கண்ணா: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?
விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.
கண்ணா: ஆஆ.. அப்புறம்?
விநோத்: அப்புறம் சொன்னா.. “மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!”

பொட்டு பட்டாசு:
மனைவிகிட்ட சண்டை வராமல் இருக்க… 5 வார்தை மந்திரம்!
“என்னை மன்னிச்சிகோ!” & “நீ சொன்னா சரிதான்!”

ரசித்த இடம்: http://kalakalkalai.blogspot.com

புதுசா கட்டுன   சட்டசபைய என்ன செய்யலாம் ஐடியா கேட்டு ஒரே தொந்தரவு ,”நானும் பத்து  ஐடியா சொன்னேன் வொர்கவுட் ஆகல அதுனால நீங்கதான் ஏதாவது பண்ணியே ஆகனுமின்னு”

சட்டசபை கட்டிடத்தோட பொறுப்ப  எந்தலைல  கட்டிட்டு போயிட்டார் , வேற வழியில்லாம நானும் செயல்ல இறங்கிட்டேன் …….பஸ்ட்டு வருமானத்துக்கு ஏதாவது  வழியிருக்கா  பார்ப்போம் ???

வாடகைக்கு – புதிதாக கட்டிய சட்டசபை


301524 சதுர அடிகள் பரப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம்  சட்டசபைக்கு (மட்டும்)  வாடகைக்கு விடப்படும் . எந்த மாநில அரசாக இருந்தாலும் பரவாயில்லை .
* வாடகை Rs 4000/-
* அட்வான்ஸ் – பத்துமாச வாடகை
* புரோக்கர் கமிசன் – ரெண்டுமாச  மாச வாடகை (ஹி.ஹி.ஹி….)
* காலைல 6 டு 8  , சாயந்திரம் 7 டு 9  இந்த டைம்ல தான் தண்ணி திறந்து விடுவோம்  நீங்க தேவைக்கு ஏற்ப புடிச்சு வச்சிக்கிரனும்
* அதேமாதிரி கரண்ட் – காலைல 11 டு 12  சாயந்திரம் 4  டு 5  டைம்ல மட்டும்  தான் இருக்கும் . யூனிட்டுக்கு Rs  250 /-
* பிரதி மாதம் 5 தேதி கரக்ட்டா வாடகைய குடுத்திடனும்
* சுவத்துல கண்ட இடத்துல ஆணி அடிக்ககூடாது
* சொந்தக்காவுங்க யாரும் வந்து தங்கக்கூடாது
* நான்-வெஜ் சமைக்க கூடாது
* நைட்டு 10  மணிக்கு கேட் மூடிடுவோம்
விருப்பமுடையவர்கள் தொடர்பு  கொள்ளவேண்டிய தொலைபேசி எண் – 99999 99999 .
அப்படி வருமானத்துக்கு செட் ஆகலைன்னா , மக்களுக்கு உபயோகப்படுறது மாதிரி சில ஐடியா இருக்கு அதை வேணா டிரை பண்ணுங்க …..
1  ) அதுக்குள்ளார ஒரு பீச் கட்டி விட்டோமின்னா மக்கள் பகல்ல வெயில் தொந்திரவு இல்லாம ஜாலியா பீச்சுக்கு வந்து போவாங்க .
2  ) இல்லைன்னா அதுக்குள்ளே ஒரு ரெண்டுமூணு புளோர்ல  மொட்டைமாடி கட்டிவிட்டா பசங்க பட்டம் விட வசதியா இருக்கும் .  இந்த பட்ட நூல் ஆக்ஸிடன்ட்   நடக்காது .
3 ) இல்லன்னா ஒரு இன்டோர் ஏர்போர்ட் கட்டலாம் , மழை காலங்கள்ல பிளைட் வந்து போக ஈசியா இருக்கும் .
4 ) அதுவும் சரியில்லைன்னா  பேசாம எனக்கு எழுதி வச்சிடலாம் . (ஹி.ஹி.ஹி……  இது நல்லா இருக்குல்ல )
டிஸ்கி : இன்னும் ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன(இந்த பதிவு  சும்மா காமடிக்கு மட்டும் )

அணுக வேண்டிய முகவரி: http://manguniamaicher.blogspot.com/
ஒரு ஊர்ல சீனுவும் பானுவும் ஃப்ரெண்ட்ஸாம். ஒருத்தரை ஒருத்தர் ரத்தம் வந்து ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ற அளவுக்குக் கடிச்சிப்பாங்களாம். நீங்களே பாருங்க பங்காளி! எப்படியெல்லாம் கடிச்சிக் குதறி எடுக்குறாங்கன்னு…

பானு:
 ம்…ம்..ம் ஒண்ணும் தெரியலையே! நீயே சொல்லிடு சீனு! சீனு: பானு! இதைக் கேளேன்! சமையல் செய்றதுக்கு விறகே இல்லாம கஷ்டப்பட்டானாம் ஒருத்தன். அப்புறம் ரொம்ப சிரமபட்டு எறும்பை வைச்சித் தான் சமாளிச்சானாம். அவன் என்ன செய்திருப்பான் சொல்லு?
சீனு: அவன் யூஸ் பண்ணது….. கட்டஎறும்பு. என்ன காதுல இருந்து ரத்தம் வருது. ரொம்ப கடிச்சிட்டேனோ?
பானு: ஆமாம் கடித் தாங்கல! சரி நான் ஒண்ணு கேட்கிறேன். அதுக்குப் பதில் சொல்லேன் பார்க்கலாம். மார்க் ஷீட்டுக்கும், பெட்ஷீட்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?
சீனு: ம்ம்ம்ஹும்… தெரியலை பானு. நீயே சொல்லிடுப் ப்ளீஸ்!
பானு: சரி சொல்றேன் கேளு! மார்க் ஷீட்டில் மார்க் இல்லன்னா கவலைப் படுவாங்க. ஆனா பெட்ஷீட்டில மார்க் இருந்தா தான் கவலைப் படுவாங்க. எப்படி? ராணி அம்மா கலக்கிட்டேன் இல்ல?
சீனு: கலக்கலா? கடியா கடிச்சிப்புட்டு கலக்கல்னா சொல்றே!!!???
சரி! இதுக்கு பதிலை சொல்லுப் பார்க்கலாம்! ஒருத்தனுக்கு நீச்சல் தெரியாதாம். அவன் ஆத்தைக் கடக்கும் போது போட்ல இருந்து எப்படியோ தவறி தண்ணிக்குள்ள விழுந்திட்டானாம். அவன் உடம்பு எல்லாம் மூழ்கிப் போச்சி. ஆனா தலைமட்டும் தான் மேல தெரியுதாம். எப்படி சொல்லு?
பானு: ம்…ம்.. ஆங்! கண்டுபிடிச்சிட்டேன். அவன் சரியான மரமண்ட. விடை சரியா? ஏன்னா மரம் தான் தண்ணியில முழுகாதே!
சீனு: அட! நீயும் என்னைப்போல புத்திசாலியா மாறிட்டு வர்றியே. பரவாயில்லையே!  சரி! ரூபா நோட்டில காந்தி ஏன் சிரிக்கிறாரு?
பானு: அட! இதுக்கூட தெரியாதா உனக்கு? அவரு அழுதா, ருபா நோட்டு நினைஞ்சுடும் இல்ல. எப்படி நம்ப ஆன்சர்?
சீனு: சரி! இதெல்லாம் கரைக்டாதான் சொல்லிட்டே. இந்த கேள்விக்கு சரியா பதில் சொல்லுப் பார்ப்போம். ஒருத்தன் காட்டில தன்னந்தனியா மாட்டிக்கிட்டான். வழி மறந்துப்போச்சு. திடீர்ன்னு பார்த்தா ஒரு சிங்கம் எங்கிருந்தோ மறைஞ்சி வந்து, அவன் மேல பாய்ஞ்சது. ஆனா, கொஞ்ச நேரம் பொருத்து அது முகம் சுளிச்சிக்கிட்டே அவனை விட்டு ஓடியேப் போச்சு. அது ஏன்னு சொல்லுப் பார்ப்போம்.
பானு: ம்…ம்..ம் ஒன்னும் தெரியலையே! நீயே சொல்லிடு சீனு!
சீனு: விடை தெரியலையா? அவன் சரியான மாங்கா மடையன்.  ஒரே புளிப்பு! வாயில வைக்கவே முடியல. சிங்கம் அவனோட முகத்தைக் கடிச்சதுமே நாக்குல சுர்றுன்னு புளிப்பு பட்ட உடனே அது ரொம்ப டென்ஷன் ஆயிடிச்சாம். அதனால தான் அப்படி ஒரு ஓட்டமா ஓடிப் போச்சாம் அந்த அறிவுக்கெட்ட சிங்கம்.
பானு: ஹையோ! ஹையோ! யாராவது என்னைக் காப்பாத்துங்களேன். இந்த சீனுவோட கடி தாங்க முடியலையே! ஆண்டவா ஏன் இந்த சீனுவை எனக்கு ஃப்ரெண்டா படைச்சே. நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கேன் இவ்வளவுப் பெரிய தண்டனை?
நான் சும்மா சொன்னேன் சீனு! கடி சூப்பர் கடி தான் சீனு! என் அளவுக்கு இல்லைன்னாலும் ஓரளவுக்கு நீயும் புத்திசாலி தான்னு ஒத்துக்கறேன்.
இவங்க கதை முடிஞ்சது…
ஒரு வீட்டில, ஒரு அம்மா பொண்ணு பேசிக்கிறாங்க. என்னான்னு நீங்களே கேளுங்க…
வாணி: அம்மா! ஊருக்குப் போறேன். எந்த ட்ரஸ் எடுத்துக்கட்டும்?
வேணி: அட்ரஸ் எடுத்துக்கமா. (இனி வருவதை சிவாஜி குரலில் படிக்கவும்) மத்த ட்ரஸ் இல்லைன்னா கூட ஊரல போய் வாங்கிக்கலாம். ஆனா அட்ரஸ் இல்லைன்னா எங்கப் போய் வாங்குவ?
பழக்கடையில் என்ன காமெடி நடக்குதுன்னு நீங்களே பாருங்களேன்…
பழம் வாங்க வந்தவர்: ஏம்பா! ஆரஞ்சுப் பழம் இருக்காப்பா?
பழம் கடைக்காரர்: இல்லைங்க
பழம் வாங்க வந்தவர்: சரி! பப்பாளிப் பழம் இருக்காப்பா?
பழம் கடைக்காரர்: அதுவும் இல்லைங்க
பழம் வாங்க வந்தவர்: சரி! செர்ரிப் பழம் இருக்காப்பா?
பழம் கடைக்காரர்: அதெல்லாம் நம்ப கிட்ட இல்லைங்க
பழம் வாங்க வந்தவர்: என்ன நீங்க எதைக்கேட்டாலும் இல்லை இல்லைன்னு சொல்றீங்க. சரி! அட்லீஸ்ட் ஞானப்பழமாவது இருக்கா இல்லையா?
பழம் கடைக்காரர்: என்னது ஞானப்பழமா? எங்கிருந்து சாரு வர்றீங்க? கீழ்பாக்கமா?
பழம் வாங்க வந்தவர்: அமாம்பா எப்படி கரைக்ட்டா கண்டுபிடிச்சே?
பழம் கடைக்காரர்: ஆமா இதைக் கண்டுப்பிடிக்க விஞ்ஞானி அப்துல் கலாமா வருவாரு! கடைவைக்கிறதுக்கு முன்னாடி நானும் கூடக் கொஞ்ச நாள் அங்கே தானுங்க இருந்தேன். அங்கிருந்து தப்பிச்சி வந்த கேஸா நீங்க. இங்கேயே இருங்க! அவங்களுக்கு ஃபோன் செஞ்சு உங்களைக் கூட்டிட்டுப் போகச் சொல்றேன்.
ஒரு மொக்கை தத்துவம்:
ஒரு சில விஷயங்கள் மட்டும் மாறாதுங்க. கல்யாணத்துக்கு முன்னாடி மிஸ்ஸானாலும் மிஸ்ட் கால் தான். கல்யாணத்துக்கு பின்னாடி மிஸ்ஸானாலும் மிஸ்ட் கால் தான்.
கல்யாணம் ஆயிடிச்சேன்னு அதை யாரும் மிஸஸ்ட் கால்னு சொல்ல மாட்டாங்க.
பங்காளி! எப்படியோ ஆசை தீர உங்களை கடிச்சிட்டேன்.பதிலுக்கு நீங்களும் என்னைக் கடிக்கலாமே தவிர அடிக்கக் கூடாது. சொல்லிட்டேன் டீலா??? நோ டீலா…???
ரசித்த இடம்: http://uravukaaran.blogspot.com

பாகம் 1 படிச்சுட்டீங்க இல்ல. இதோ பாகம் 2

கேள்வி: நான் ஒரு அரசியல்வாதி. நாளைக்கு முதலமைச்சரை போட்டுதள்ளுறதை ரகசியமா திட்டம் போடுறோம். பத்திரிக்கை ரிருபர் யாராவது வந்து கவர் பண்ணிருவாங்களோன்னு நினைச்சால் பயமா இருக்கு. ஒரு ஐடியா கொடுங்க.?

கோலிவுட்டின் பதில்: சொல்றேன்… இதுரொம்ப ரிஸ்கான சமாச்சாரம். கவனமா கேளு. நீங்க ரகசியமா திட்டம் போடுற வீடு அனேகமா ஊருக்கு ஒதுக்குப்புறமாத்தான் இருக்கும். எதுக்கும் உங்க ஆளுங்கள ரெடியா வச்சுக்கோங்க பத்திரிக்கைகாரன்னு வந்து கவர் பண்ணும்போது எப்படியும் போட்டோ புடிப்பான் அப்போ பிளாஷ் அடிக்கும் அவனை புடிச்சுரலாம். இல்லைன்னா நிருபன் கிளம்பும்போது கேனத்தனமா எதையாச்சும் கிழேபோடுவான் அப்போது உஷராகி அவனை புடிச்சுக்கோ. அப்படியும் அவன் தப்பிச்சு ஓடுன்னான்னா பிரச்சினையே இல்லை. அவன் வருவது அனேகமாக ஓட்டை கைனடிக் ஹோன்டா அல்லது பழைய டிவிஎஸ் பிப்டியாத்தான் இருக்கும் ஈஸீயா புடிச்சுரலாம். அப்புடியும் அவன் தப்பிச்சு ஓடுவான்…ஆனா கடைசில… அவனுக்காகவே காட்டுல கூட ஒரு பப்ளிக் டெலிபோன் பூத் இருக்கும் அதுல ஹீரோவுக்கு போன் போடுவான் அவன் ஹலோ சொல்றதுக்குல்ல எப்படியுயும் உங்காளுங்க சங்கூதிருவாங்க…கவலைப்படாத … இதை மாத்துறதுக்கு இன்னும் கோலிவுட்டுல யாரும் வரல.

கேள்வி: நான் சிட்டி போலீஸ் கமிஷனர், சிட்டில ஒரு பெரிய தாதா இருக்கான். எங்களால அவனை ஒண்ணும் பண்ண முடியல? ஏதாவது ஐடியா குடுங்க.!!

கோலிவுட்டு பதில்: சப்பை மேட்டரு. கிராமத்துல இருக்குற ஹீரோ தன்னோட அக்கா அல்லது தங்கச்சியை உங்க சிட்டில தான் கல்யாணம் பண்ணிக்கொடுத்திருப்பாரு. எப்படியாவது ஹீரோவை சிட்டிக்கு வர வச்சுடுங்க. அப்புறம் ஹீரோவாச்சு ரவுடியாச்சு…நீ்ஙக ஃப்ரீ…

கேள்வி: சார் நான் ஒரு கமேன்டோ ஆபிசர். தீவிரவாதிகளை பிடிச்சு கொடுக்குற பொறுப்பை எங்கிட்டு கொடுத்திருக்காங்க..அதைப் பத்தின ஒரு பிரசன்டேஷன் என் மேலதிகாரிகளுக்கு காண்பிக்கனும். ஐடியா சொல்லுங்க.??

பதில்: குட் கொஷ்டின். இப்ப தீவிரவாதிகளை கொல்லுற மாதிரி நிறைய வீடியோ கேம்ஸ் கிடைக்குது. அதுல அவங்க தங்கியிருக்கிற ஏரியா மாதிரியே 3டி அனிமேட்டட் கேம்ஸ் நிறைய வருது.நீங்க என்டர் கீயை மட்டும் தட்டிட்டு இருங்க…டோட்டல் தீவிரவாதிங்களோட நெட்வோர்ட் உங்க ஸ்கிரின்ல வந்துரும். அப்புறம் பவர் பாயின்ட் ல கூட இந்த மாதிரி நிறைய பண்ணலாம்… நான் சொன்ன மாதிரி பண்ணுங்க…நம்ம கேப்டனுக்கு இந்த மாதிரி நிறைய ஐடியா கொடுத்திருக்கேன்.

கேள்வி:நான் வில்லனோட வொய்ப். ஹீரோ எப்ப என்னோட புருஷனோட கதையை முடிப்பாருன்னு தெரில பயமா இருக்கு. நீங்கதான் உதவி பண்ணனும்.

பதில்: ரொம்ப சிக்கலான கேள்வி இது. இருந்தாலும் சொல்லுறேன். ஹீரோ உங்க புருஷன்கூட சண்டைப்போட்டுட்டு இருப்பாரு. உங்களுக்கு கைகுழந்தை இருக்கான்னு நீங்க சொல்லலை. அப்படி உங்களுக்கு கைகுழந்தை இல்லைன்னா பக்த்துவீட்டு குழந்தையையாவது தூக்கிட்டு ஸ்பாட்டுக்கு போயிருங்க. அப்ப ஹீரோ உங்க புருஷனை அடிச்சுப்போட்டு அருவாளால வெட்டவரும்போது கரெக்டா குறுக்க விழுந்து தாலியையும், கைக்குழந்தையையும் ஹீரோ முன்னாடி காண்பிக்கவும். அதுக்கப்புறமும் ஹீரோ உங்க புருஷனை வெட்டப்போவாரு ஆனா ஆளை வெட்டாம பக்கத்துல தரைல குத்திட்டு போயிடுவாரு. ஓரு கண்டிஷன் ஹீரோ திரும்பி போனதக்கப்புறம் அதே அருவாள தூக்கிட்டு உம்புருஷன் ஹீரோவை வெட்டப்போனாரு…அப்புறம் பின்னாடியிருந்து யாராவது கத்தியால குத்திருவாங்க இல்லைன்னா போலீஸ் துப்பாக்கியால சுட்டுரும்…அதுக்கப்புறம் உம்புருஷன் ஸ்லோமோஷன்ல கீழே விழுந்து சாகவேண்டியதுதான்.

கேள்வி:நான் ஹீரோவோட மனைவி. அவரை சீரியஸா ஆஸ்பத்திரில சேத்துருக்கோம். அவரை காப்பாத்த ஒரு வழி சொல்லுங்க.???

பதில்: ரொம்ப சிம்பிள். டாக்டர் அவங்க வேலையைப்பார்ப்பாங்க…ஆனா நீங்க என்ன பண்ணணும்னா ஒரு மஞ்சள் கலர்ல சாரி கட்டிக்கோங்க, ரெண்டு கைலயும் வேப்பிலை…அப்புறம் எந்த அம்மன் கோயில்ல மணி அதிகமா கட்டித்தாங்கவிட்டுருக்காய்ங்களோ அங்கப்போயி உங்களுக்கு தெரிஞ்ச ஆட்டத்தைப்போடுங்க வேணும்னா உங்க பிரண்ட்ஸ்யும் கூட்டிக்கோங்க. ஆனா எல்லாரும் ஒரே மாதிரி டிரெஸ் போட்டுரக்கனும், தலையை விரிச்சு வுட்டுக்கோனும். கோவில் மணிகளை யாரைவாது சொல்லி கண்ணாபின்னா ஆட்டிவுட்ருங்க. உங்க ஆட்டம் முடியும் போது அங்க உங்க புருஷனுக்கு ஆப்பரேஷன் முடியவும் சரியா இருக்கும். ஆனா கண்டிப்பா பொழைச்சுருவாரு.

ஏதாச்சும் வுட்டுப்போச்சான்னு சொல்லுங்க மக்கா… பார்ட் 3 போட்டுரலாம்.

ரசித்த இடம்: http://vimarsagan1.blogspot.com

கேள்வி:
நான் பட்டணத்தில் வசிக்கும் அழகான ஹீரோவிக்கு அம்மா. அவனைதிரும்ப கிராமத்துக்கு வரவழைச்சு, கிராமத்து பெண்ணை காதலிக்கவைக்கனும். அவன் இங்க வரமாட்ரான்.. அவனை கிராமத்துக்குவரவழைக்க என்ன செய்யனும்?
பதில்:
ரொம்ப சிம்பிள்.. ஒரு தந்தி அடிக்கனும் “அம்மா சீரியஸ்! உடனே வா!!”.தந்திய பார்த்து வந்தவுடனே, “டேய், என் பேர குழந்தைங்கள பாக்காம என்உயிர் போகாதுடா” ன்னு ஒரு பிட்ட போடு. பாக்கி விஷயத்த நம்மஹீரோயின் பார்த்துப்பா.. அப்புறம் என்ன? ஒரு காப்பாத்துற சீனு.. இரண்டுகுத்துபாட்டு… சண்டை.. சுபம்!!

கேள்வி:
நான் ஒரு ஹீரோ, என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடிமாறுவேஷம் போடனும். ஏதாவது ஐடியா குடுங்க..
பதில்:
உங்களை கண்டுபிடிக்க முடியாதபடி மாத்த பல வழிகள் இருந்தாலும்..நான் உங்களுக்கு ரெக்கமண்ட் பண்றது என்னன்னா.. “கருப்புகூலிங்கிளாஸ் போட்டுட்டு, தலையை சீவாமல் கலைச்சிவிட்டுட்டீங்கன்னா” உங்க அம்மாவே எதிருல வந்தாலும் கண்டுபிடிக்கமுடியாதுவே! இன்னம் கொஞ்சம் கஷ்டமா டிரை பண்ணனுமா? “மீசையை எடுத்துட்டு, கேப் போட்டா போதும்” உங்க டைரக்டர்ராலையேகண்டுபிடிக்க முடியாது!

கேள்வி:
வெரி அர்ஜண்ட்! கண்டிப்பாக பதில் வேண்டும். ஹீரோயினை பாம்புகடித்துவிட்டது, இப்ப நான் ஹீரோவாக என்ன செய்ய வேண்டும்?பதில்:
பயப்பட வேண்டாம். பாம்புகள் விஷத்தை ஏற்ற மட்டும் செய்யாது,திரும்பவும் விஷத்தை உறியும் சக்தி கொண்டது. நீங்க திரும்ப விஷத்தைஎடுக்க வைக்க செய்ய வேண்டியது என்னன்னா.. நல்ல உயரமானமலையில் ஏறி நின்று பாம்பை புகழ்ந்து பக்தி பாடல் ஒன்றை பாடனும்!இப்ப பாம்புக்கு இரண்டுல ஒரு முடிவு எடுக்கனும். ஒன்னு மலையில ஏறிவந்து பாடுற உங்கள போடனும். இல்லனா, விஷத்தை திரும்பஊறிஞ்சிட்டு ஓடனும். பாம்பு மலை மேல ஏறி வந்து உங்களை கடிக்கசோம்பேறிதன பட்டு, விஷத்தை திரும்ப எடுத்துடு்ம். எப்புடி ஐடியா?
கேள்வி:
ஹீரோயின் பெண்களுக்கான ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள். ஹீரோ அவளை காதலிக்கிறதால.. யாருக்கும் தெரியாமல் ஹீரோயினை சந்திக்கறது எப்படி?

பதில்:
ரொம்ப ஈசியான கேள்விதான். கடைக்கு போய் ஒரு பர்தா வாங்கி போட்டுகோங்க.. நேரா ஹாஸ்டலுக்கு போங்க. நீங்க 6 அடிக்கு மேல இருந்தாலோ, கையில.. காலுல நிறைய முடி இருந்தலோ, கவலப்படாதிங்க.. யாரும் உங்களை கவனிக்க மாட்டாங்க! எக்ட்ரா பிட்டிங்ஸ் பத்தி நான் சொல்ல தேவையில்லைன்னு நினைகிறேன்..
கேள்வி:
நான்தான் படத்தில் ஹீரோவோட தங்கச்சி. எனக்கு கல்யாணம் நடக்க.. நான் எந்த வகையான ராசிகல் மோதிரம் அணிய வேண்டும்?

பதில்:
ராசிக்கல் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. எப்படியா இருந்தலும் உங்களை ஒருத்தவன் ரேப் பண்ணிடுவான் கவலப்படாதிங்க! ரேப் பண்ணிட்டு கல்யாணம் பண்ண முடியாதுன்னு உங்க அண்ணன்கிட்ட சவால் வேற விடுவான். அப்புறம் என்ன? அண்ணன் பொங்கி, அவனை கும்மி.. எது எப்படியோ.. உங்களுக்கு கடைசியல கல்யாணம் நடக்கும் அவ்வளவுதான்!!
கேள்வி:
என்னுடைய கார் ஹய்வே ரோட்டுல ரிப்பேராயிடுச்சு. இப்ப நா அதை எப்படி சரி பண்றது?

பதில்:
இந்த மாதிரி நேரத்துல.. ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு. அது… ரேடியேட்ர்ல தண்ணி ஊத்துனா சரியாகிடும். இப்ப நீங்க டிக்கியில இருக்குற வாட்டர் கேனை எடுத்துகிட்டு, உங்களுக்கு புடிச்ச திசையில போங்க.. கண்டிப்பா அங்க ஒரு அருவியும், அந்த அருவியில குளிச்சிகிட்டே பாட்டு பாடுற ஒரு அழகான பொண்ணும் இருக்கும்!

கேள்வி:
நான் ஹீரோயினா நடிக்கிறேன். குளிக்கும் சீனில் எப்படி நடிப்பது என்று எனக்கு உங்கள் ஆலோசனை தேவை!

பதில்:
இது கொஞ்சம் பிரைவசியான மேட்டர்தான்.. இருந்தாலும் நீ்ங்க கேட்கறீங்கன்னு சொல்றேன். உடம்பை சுத்தி புடவையோ, டவல்லோ கட்டிக்கனும். ஷவர்ல குளிக்கும்போது புடவையோ, டவல்லோ படாத இடங்களுக்கு சோப்பு போடனும் அவ்வளவுதான்!!

கேள்வி:
நான் வில்லன் நடிகராக ஆக ஆசபடுறேன். உங்களுடைய அட்வைஸ் வேனும் எனக்கு.. குடுப்பீங்களா?

பதில்:
கண்டிப்பாக! முதல் சீனில் இருந்து.. யாரை பார்த்தாலும் முரைக்கனும், அள்ளக்கைகளை அப்பபப்ப அறையனும், “ஹேய்.. ஏய்.. ஏயயய்ய்ய்ய்ய்”ன்னு சம்பந்தம் இல்லாம சவுண்டு விடனும், குறிப்பா ஹீரோ எத்தனை தடவை அடிச்சாலும்.. வலிக்காத மாதிரியே திரும்ப போய் அவங்கிட்ட அடிவாங்கனும், கடைசியா.. “திருந்தனும்” இல்லன்னா.. “செத்துபோகனும்”. அவ்வளவுதான் பாஸ்!!

கேள்வி:
நான் ஒரு ஏழை ஹீரோ. ஆனா.. வில்லன்களை நம்ப வச்சி பழிவாங்க, நான் பணக்காரன் போல் ஆக்ட் குடுக்கனும். ஐடியா ப்ளீஸ்?

பதில்:
முதல்ல நீங்க துபாய் வடிவேலு போட்ட ஷைனிங் துணியில சட்டை தச்சி போட்டுகிட்டு, முட்டிய தொடுற மாதிரி கோட் போட்டுகனும். அப்புறம் மூஞ்சை மறைக்கிற மாதிரி கண்ணாடியும், காலுக்கு சம்பந்தமே இல்லாத ஷூவையும் போட்டுகனும். சையிடுல எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மாதிரி.. மண்டைக்கு லைட் கலர், கையில 9 விரலுக்கு கிளிட்டரிங் மோதிரம், எருமை மாட்டு சங்கிலி போல ஒன்னு கழுத்துல போட்டுக்கனும். கூடவே.. லெப்ட் சைட் இரண்டு பேரு, ரைட் சைட் இரண்டு பேரு,(கண்டிப்பா அதுல 2 பேரு நீக்ரோவா இருக்கனும்) டிப்-டாப்பா நடந்து வரனும். எல்லாரோட காதுலேயும் செவிட்டு மிஷின் மாதிரி ஓயரை காதுல சொருகியிருக்கனும். வில்லன்கிட்ட பேசுறப்ப.. ஈரோப்காரன் கேட்டா செத்துபோற லெவலுக்கு இங்கிலிபீசு பேசுனா.. நீங்களும் மல்டி மில்லனியர்தான்!!

(எழுதறத்துக்கு இன்னும் நிறையா இருந்தாலும்.. டைப் அடிக்க கை வலிக்குதுன்னு உண்மைய சொல்லாம, உங்க பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பலன்னு பொய் சொல்லி முடிச்சிகிறேனுங்கோ!)

மறக்காம பாகம் 2 படிச்சுட்டு போங்க

ரசித்த இடம்: http://kalakalkalai.blogspot.com/

வீட்டு ஓனர்களும், வீட்டு புரோக்கர்களும், எனது ரூம் நண்பர்களும், மற்றஏனையவர்களும் மன்னிக்கவும். இது முழுதும் நகைச்சுவைக்கே.
நியூ ஏஜ் பாண்டவர்கள் ஆகிய நாங்கள் ஐந்து பெரும் ஐ.டி துறையில் அமெரிக்கர்களுக்கு அடிமை வேலை சொகுசாய் செய்கிறோம். இந்த பாண்டவர்களில்,

தருமன் Onsite -இல் தாய்நாட்டை விட்டு வனவாசம் இருக்கிறார்.
அர்ஜுனன் எப்போதும் அடுத்த வீட்டு ஆண்டிக்கு அம்பு விட்டு கொண்டிருப்பார். தினமும் செல்லும் ஜிம்மிலும் அம்புகளின் அட்டகாசம் தானாம்.

பீமருக்கு பீட்சா என்றால் பெரும் இஷ்டம். உருளை கிழங்கில் பண்ணிய அயிட்டம் என்றால் சாப்பிட்டு உருண்டு கிடப்பார்.

நகுலன் அனுஷ்காவின் இடுப்பை பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பார். “சுத்தம் சோறு போடும்” என்ற பழமொழியில் அவருக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.
சகாதேவன் சனிக்கிழமை ஆனால் டாஸ்மாக்கில் சரக்கடித்து விட்டு குப்புறப் படுத்து விடுவார்.

எங்கள் உண்மையான பெயர் முறையே சிவசங்கர், வினோத், மனோஜ், முருகன், கதிர்வேல்.

தங்கள் மகளின் குடும்பம் குடித்தனம் வரப்போகிறது என்று வீட்டு ஓனர் இணங்கி கேட்டு கொண்டதால் இப்போது இருக்கும் வீட்டை காலி பண்ண சம்மதித்து விட்டோம்.  😉

வாடகைக்கு அடுத்த வீடு தேடும் போது தான் தெரிந்தது சென்னையில் காலி வீடுகளை விட, வீட்டு புரோக்கர்கள் அதிகம் என்று. நாங்கள் சுலேகா போன்ற வெப் சைட்டுகளில் உலவி புரோக்கர் உதவி நாடாமல் வீட்டை பிடிக்க முயற்சி செய்தோம். Owner என்று search செய்து பொன் பண்ணினால், மறுமுனையில்

“சொல்லுங்க சார் நான் வீட்டு புரோக்கர் பேசறேன்”.

“அட நீங்களா?” ஒரே இன்ப அதிர்ச்சியில் நான்.

போங்கடா! பொறம்போக்குகளா!

நிறைய ப்ரோக்கர்கள் Owner என்ற பெயரில் ரெஜிஸ்டர் செய்து வைத்திருக்கிறார்கள். வீடு பார்த்து கொடுப்பதற்கு அவர்கள் சுலபமாய் கேட்பது ஒரு மாத வாடகை. நானும் புரோக்கர் வேலையை பகுதி நேரமாக செய்யலாமா என்று தீவிரமாக யோசித்து வருகிறேன்.

டூவீலர் எடுத்துச் சென்று வீடு வீடாக tolet போர்டு பார்த்து தேடலாம் என்றால், ஒவ்வொரு வீட்டின் கேட்டிலும் எண்ணற்ற “No Parking” மற்றும் “Contact for Plumper Service” விளம்பர பலகைகள் அடித்துபிடித்துக் கொண்டு இடம் பிடித்துள்ளன. இதற்குள் tolet போர்டை தேடி கண்டு பிடிப்பது, பத்து வருடத்திருக்கு முன் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை தமிழ் நாளிதழில் கண்டு பிடிப்பது போல வெகு சிரமமான விசயமாய் இருக்கிறது.
எப்படியாவது வீடு மாற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் ஆசை ஆசையாய் புரோக்கர்களையும் நாடினோம். மாமுல் போலீஸ்காரர்கள் போல ப்ரோக்கர்கள் ஒவ்வொருவருக்கும் தனி தனி ஏரியா இருக்கின்றது. நாம் ஒருவரிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டால், அவர் நம்மை இன்னொருவரிடம் அழைத்து செல்கிறார். அந்த இன்னொருவர், இன்னொருவரிடம் பேசி (குழப்பமா இருக்கா?) கடைசியாக வீட்டையும் ஓனரையும் கண்ணில் காண்பிக்கிறார்கள். அது கிட்டதட்ட கேங்க்ஸ்டர் படங்களில் ஒவ்வொரு அல்லக்கையையும் பார்த்து, பேசி முன்னேறி கடைசியில் வில்லன் தாதாவை சந்திப்பது போல் உள்ளது.
வீட்டு ஓனர்களும் வில்லன்களை போன்றே பேசியும், கேள்வி கேட்டும் பயமுறுத்துகிறார்கள். நானெல்லாம் என்ஜீனியரிங் நுழைவு தேர்வில் கூட ஆப்சன் (Option) உள்ள கேள்விக்கு மட்டுமே பதில் எழுதினேன். அதுவும் கணிதத்தில் உள்ள Probability என்பதை உபயோகித்துதான். Probability எனக்கு அருமையாக வரும் என்று நினைத்து விடாதிர்கள். Probability -க்கும் பென்சில் ரப்பர் தான் (dice) பேருதவியாய் இருந்தது. குழப்பம் வேண்டாம், நான் தருமனில்லை.

ஒரு வீட்டை வைத்திருந்தால், என்ன ஒரு ஆணவம்?
அதிலும் பேச்சுலர்கள் என்றால் மரியாதை அதிகம் கொடுத்து பேசுகிறார்கள்.

“எத்தனை பேரு?” (நாங்க என்ன அதுக்கா(சாப்பிடறதுக்கு) வர்றோம்?) 

“எந்த கம்பனில வேலை செய்றீங்க?” (மன்னாரன் கம்பனின்னு சொன்னா ஒத்துக்குவீங்களா?அதிலும் MNC கம்பனி என்று சொன்னால் தான் மதிப்பு.)
“நான்வெஜ் சாப்பிடுவீங்களா?” (இல்லைங்க சார்! நான்வெஜ் ஜோக் மட்டும் சொல்லுவேன்)
எல்லாத்துக்கும் பதில் சொல்லிவிட்டு வாடகை எவ்வளவு என்று கேட்டால், ஏலம் விடுவது போல பனிரெண்டாயிரம், பதினைந்தாயிரம், இருபதாயிரம். வாரணம் ஆயிரம் அளவுக்கு பயமுறுத்துகிறார்கள். வேலை இல்லாதவர்கள் தங்க வீடு தேட வேண்டும் என்றால், ஹோம் லோன் மாதிரி “Home Rent Loan” என்ற ஒன்றை வங்கிகள் அறிமுகப் படுத்த வேண்டும்.
இங்கு எனக்கு வேறு ஒரு சிந்தனையும் அடிமனதில் இருந்தது. இந்த பசங்களோடு எத்தனை நாள் தான் தங்குவது?

Sharing with Girls!

அமெரிக்காவில் உள்ளது போல் பெண்களோடு ரூம் ஷேர் பண்ணி தங்க முடியுமா என்றொரு நப்பாசை. வெப் சைட்டுகளில் தேடி பார்த்தால், “We need two female roommates to share our room” என்று அண்டர்லைன் செய்து விளம்பரம் கொடுத்து இருந்தார்கள் இந்திய கலாச்சாரம் கடைபிடிக்கும் பெண்கள். இந்த ஜென்மத்தில் கனவில் கூட இது நடக்காது. அடுத்த ஜென்மத்துல நாயாய் பிறக்க வைத்தாலும் அமெரிக்காவில் பிறக்க வை கடவுளே!
புரோக்கரை கூட்டிட்டு போய் வீட்டை பார்த்தாலும், ஆளாளுக்கு சொல்லும் ஒரு காரணத்தால் அந்த வீடு பிடிப்பதில்லை.
“தண்ணி சரி இல்லை” (ரெகுலரா டாஸ்மாக் போகிற நானே அமைதியா இருக்கேன்)

“நடக்க ரொம்ப தூரமா இருக்கு” (காண்டாமிருகம் பின்னாடி துரத்திட்டு வருதுன்னு நினைச்சிட்டு ஓடுங்க. தூரம் தெரியாது.)

“ஏரியா பசுமையாவே இல்லை” (சென்னையில் சுற்றி கொண்டிருக்கிற எருமை மாடே இதை பற்றி கவலை படுவதில்லை என்று சொன்னால், பசுமை=பிகர்கள் என்று அர்த்தம் சொல்கிறான் அவன்)

“வீட்டு ஓனருக்கு வயசுக்கு வந்த பொண்ணு இல்லை” (வயசுக்கு வந்தா நீ குடிசை கட்ட போறியா? வீட்டு ஓனருக்கு பொண்ணு இருந்தா, கரெக்ட் பண்ணி வீட்டோட செட்டில் ஆகிடலாம் என்கிற அல்ப கனவு.)
மொத்தத்தில் ஐந்து பேருக்கும் ஒத்து போகிற பாஞ்சாலி மாதிரி ஒரு வீடு வேணும். அது போல ஒரு வீடு கிடைக்க பொறுமை மிக அவசியம். சத்ய ஜித்ரே 1957 -இல் இயக்கிய பதர் பாஞ்சாலி (Pathar Panchali) என்ற பெங்காலி படத்தை உட்கார்ந்து நான்கு முறை பார்த்தால் அந்த பொறுமை நமக்கு கிட்டலாம்
ரசித்த இடம்: http://thegoodstranger.blogspot.com

என்னடா இவரு கன்னத்துல கைவச்சுகிட்டு கப்பல் கவிழ்ந்த மாதிரி சோகமா இருக்கிறாரேன்னுப் பார்க்கிறீங்களா?! பின்ன என்னங்க… எப்படி இருந்த இவரை இப்படி போட்டோ மார்ப்பிங்க்ல கவிழ்த்தா சோகமா இல்லாம சுகமாவ இருக்கும்?!

நம்ம ஊர் அரசியல் தலைவர்களைப் போல், அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் மாறினால் எப்படி இருக்கும் என நகைச்சுவை நயத்துடன் கணிணி துணையுடன் வரைந்த ஓவியங்களைக் காணுங்கள்! இதை எனக்கு மின் அஞ்சல் செய்த கத்தார் தோழர் திரு பிஜூ அவர்களுக்கும், இதனை பிரசுரித்த in.com இணையதளத்திற்கும் நன்றி! முகந்தெரியாத குசும்புக் கலைஞர், கணிணி ஓவியருக்கு நன்றியோ நன்றிகள்!!

ரசித்த இடம்: http://nellimoorthy.blogspot.com

இன்னமும் ஊடகங்கள் தி.மு.க. வினரைத் தான் கலாய்க்கின்றனறேத் தவிர, கோட்டை மாற்றம், சமச்சீர்க் கல்வி, மருத்துவக் காப்பீடு… எனப் பற்பல விஷயங்கள் கார்ட்டூன் வாயிலாக ஊடகங்கள் பிரதிபலிக்கும் என எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல் ஆளும் கட்சியின் சர்ச்சைகளுக்குரிய முடிவுகளுக்கெதிராக கல்கி வார இதழை தவிர வேறெந்த ஜனரஞ்சக இதழ்களிலும் நானறிந்த வரையில் கார்ட்டூன்களைக் காண முடியவில்லை.   நீதிமன்றங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்கான பணியினை அவ்வப்போது புரிகின்றன.  ஊடகங்கள் ஆளும் அரசினைக் குறைக் கூறவேயில்லையே என்பது என் புலம்பலல்ல. எவரெவர் எதைப் புரிந்திடினும் அதைத் தயங்காமல் தன்மைக்கேற்ப வாழ்த்தவும் வீழ்த்தவும் ஊடகங்கள் முனையவேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.

சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, விகடன் & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

ரசித்த இடம்: http://nellimoorthy.blogspot.com

இன்னமும் ஊடகங்கள் தி.மு.க. வினரைத் தான் கலாய்க்கின்றனறேத் தவிர, கோட்டை மாற்றம், சமச்சீர்க் கல்வி, மருத்துவக் காப்பீடு… எனப் பற்பல விஷயங்கள் கார்ட்டூன் வாயிலாக ஊடகங்கள் பிரதிபலிக்கும் என எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல் ஆளும் கட்சியின் சர்ச்சைகளுக்குரிய முடிவுகளுக்கெதிராக கல்கி வார இதழை தவிர வேறெந்த ஜனரஞ்சக இதழ்களிலும் நானறிந்த வரையில் கார்ட்டூன்களைக் காண முடியவில்லை.   நீதிமன்றங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்கான பணியினை அவ்வப்போது புரிகின்றன.  ஊடகங்கள் ஆளும் அரசினைக் குறைக் கூறவேயில்லையே என்பது என் புலம்பலல்ல. எவரெவர் எதைப் புரிந்திடினும் அதைத் தயங்காமல் தன்மைக்கேற்ப வாழ்த்தவும் வீழ்த்தவும் ஊடகங்கள் முனையவேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.

சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, விகடன் & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

ரசித்த இடம்: http://nellimoorthy.blogspot.com

இன்னமும் ஊடகங்கள் தி.மு.க. வினரைத் தான் கலாய்க்கின்றனறேத் தவிர, கோட்டை மாற்றம், சமச்சீர்க் கல்வி, மருத்துவக் காப்பீடு… எனப் பற்பல விஷயங்கள் கார்ட்டூன் வாயிலாக ஊடகங்கள் பிரதிபலிக்கும் என எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல் ஆளும் கட்சியின் சர்ச்சைகளுக்குரிய முடிவுகளுக்கெதிராக கல்கி வார இதழை தவிர வேறெந்த ஜனரஞ்சக இதழ்களிலும் நானறிந்த வரையில் கார்ட்டூன்களைக் காண முடியவில்லை.   நீதிமன்றங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்கான பணியினை அவ்வப்போது புரிகின்றன.  ஊடகங்கள் ஆளும் அரசினைக் குறைக் கூறவேயில்லையே என்பது என் புலம்பலல்ல. எவரெவர் எதைப் புரிந்திடினும் அதைத் தயங்காமல் தன்மைக்கேற்ப வாழ்த்தவும் வீழ்த்தவும் ஊடகங்கள் முனையவேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.

சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, விகடன் & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

ரசித்த இடம்: http://nellimoorthy.blogspot.com

1.செருப்புடன் வேலை செய்ய ஜெ அமைச்சருக்கு உத்தரவு#அப்படியே பொறுப்புடன் வேலை செய்யவும் உத்தரவு போட்டா தேவலை-இப்படிக்கு கடுப்புடன் ஒரு சாமான்யன்

2. மரபுக்கவிதைங்கறது முதிர் கன்னி மாதிரி.. புதுக்கவிதைங்கறது 20+ ஃபிகர் மாதிரி.. ஹைக்கூ என்பது டீன் ஏஜ் கேர்ள் மாதிரி#டேஸ்ட்  டிஃபர்ஸ்  ( அப்போ பின் நவீனத்துவக்கவிதைன்னா முகம் காட்டாம நமக்கு முதுகு காட்டி பஸ்ல உட்கார்ந்துட்டு வருமே அந்த ஃபிகரா? ராஸ்கள்.. சொல்றாம் பாரு வெளக்கம்.. )
3. ஹை கிளாஸ் ஃபிகர் கழுத்தில் எந்த ஆபரணங்களும் அணியாமல் இருந்தால்கூட ரசிக்கும் ஆண்கள் மிடில் கிளாஸ் ஃபிகர் எந்த ஆபரணம் அணிந்தாலும் ரசிப்பதில்லை#ஜெண்ட்ஸாலஜி
4. ஆஃபீசில் இருந்து கணவன் எப்போ வருவான் என மனைவி காத்திருப்பாள்.வீட்டுக்குப்போகவேண்டுமே என்று வருத்தத்தோடுஆஃபீசை விட்டு கணவன் கிளம்புவான்#ஆஃபீஸாலஜி
5. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிவதும் ஒரு வித சுதந்திரமே என பெண்ணும், அது ஆண்களைக்கவர செய்யும் குறுக்கு சால் தந்திரமே என்று ஆணும் நினைக்கிறார்கள்#கிழிஞ்சுது கிருஷ்ணகிரி
6. என்றென்றும் பாதுகாப்பான வாழ்வு வேண்டும் என பெண்ணும்,அன்றைய பொழுது ஜாலியாக கழிந்தால் சரி என ஆணும் நினைப்பதால் தான் பிரச்சனை வருகிறது #சைக்காலஜி
7. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பிரத்யேக நறுமணம் உண்டு.அது இயற்கையின் நியதி.ஆனால் இதை பெண்ணிடம் சொல்லிக்கொண்டிராதே#சைக்காலஜி
8. திருமண நாள் அன்று மணப்பெண் குதூகலமாக இருக்கிறாள்.பிறகும் அவ்வாறே..ஆனால் மாப்பிள்ளை அன்று ஒரு நாள் மட்டுமே பரவசமாக இருப்பான்#ஜெண்ட்ஸாலஜி
9. என்னதான் நாசூக்கு ,நளினம் இவற்றில் கை தேர்ந்தவளாக இருந்தாலும் பப்ஸ் சாப்பிடும்( தியேட்டர் இடைவேளை ) பெண்கள் குழந்தைகள் போல் தான் உதடுகளில் சிதற விடுகிறார்கள்#லேடீஸாலஜி
10. ரெட்,யெல்லோ,ரோஸ் என 3 நிறங்களில் 3 ரோஜாப்பூக்களை ஒரே ஹேர்பின்னால் கூந்தலில் சூடிய பெண் புதுக்காதலியாக அவதாரம் எடுத்தவளாக இருப்பாள்#லேடீஸாலஜி ( அப்பாடா.. டைட்டிலை நியாயப்படுத்தியாச்சு)
11. தன் நட்பு வட்டாரத்தை திருமணத்திற்குப்பின் சடார் என துறக்க பெண்களால் மட்டுமே எளிதாக முடிகிறது#லேடீஸாலஜி

12. சிநேகிதிகள் ஆண்களுடனான சந்திப்பில் சாப்பிட்டாச்சா? என்ன சாப்பிட்டீங்க? என நலம் விசாரிக்கிறார்கள்,ஆண்களுக்கு அப்படி கேட்க தெரிவதில்லை

ரசித்த இடம்: http://adrasaka.blogspot.com

1.ஸ்டிக்கர்பொட்டை விட சாந்துப்பொட்டே உனக்கு அழகு,ஏன் எனில் ஸ்டிக்கர்பொட்டை நீயே வெச்சுக்குவே,சாந்துப்பொட்டை நான் உனக்கெ வெச்சு விடுவேன்#லவ்வாலஜி இன் டெக்கரேஷன்

—————————
2. சினிமாவில் ரீமேக் மாதிரி வெற்றி பெற்ற நம் காதலை மீண்டும் வேறொரு லொக்கேஷனில் இருந்து ஆரம்பித்துப்பார்த்தால் என்ன?#ரெஃபிரஸ் லவ்

——————————–

3. காதலி எப்போதும் காதலனுக்கு ரியல் எஸ்டேட் தான்,அவள் மதிப்பு ஏறிக்கிட்டே இருக்கும்,அவன் சொல்லும் கவிதைகள் மட்டும் ரீல் அப்டேட்ஸ்
———————————
4.காதலியால் நிராகரிக்கபட்ட காதலர்கள் முற்றிலும் நம்பிக்கை இழப்பதில்லை,ரீ எண்ட்ரி சான்ஸூக்காக காத்திருக்கிறார்கள்#லவ்வாலஜி

———————————–

5. வீட்ல மாப்ளை பார்த்துட்டு இருக்காங்க அதனால… என நீ ஆரம்பிக்கும்போதே எலிமினேஷன் ரவுண்டில் நான் அபாயமான கட்டத்தில் இருப்பதை உணர்ந்தேன்
—————————–
6. ஏமாற்றிய காதலியை பழி வாங்க வேண்டும் என எந்த காதலனும் நினைப்பதில்லை, அப்படி நினைத்தால் அது காதல் இல்லை#லவ்வாலஜி

—————————

7. காதல் தோல்வியில் இருந்து மீள பெண் அதிக பட்சம் 6 மாதங்களே எடுத்துக்கொள்கிறாள்,ஆண் 6 வருடங்கள் ஆனாலும் காயத்துடன் காத்திருக்கிறான்
————————-
8. ரசத்தில் கறிவேப்பிலை போல் காதலியின் வாழ்வில் காதலன்.ரசத்தில் சீரகம் போல் காதலன் வாழ்வில் காதலி இரண்டற கலந்து விடுகிறாள்
————————
9.சித்தர்கள் மடம்,சாமியார்கள் மடம் என்பது போல் ஃபிகர்கள் மடம் என்று ஒன்றை கட்டி வைத்தால் செமயா இருக்குமே?ஏற்பாடு செய்யுமா புதிய அரசு?#எக்ஸ்பெக்டேஷன்
—————————

10. என்னைப்பற்றி கவிதை சொல்லுங்க என்றதுக்கு ஏன் என் கையைப்பிடிக்கறிங்க? என்றாள் காதலி.நீ தானே உன்னை “பற்றி” கவிதை சொல்ல சொன்னாய் என்றேன்#கில்மாலஜி

ரசித்த இடம்: அட்ரா சக்க 


ரசித்த இடம்: http://valaimanai.blogspot.com/

தயாரிப்பாளரின் மேசையில் எந்த டிவிடிகளுமே இல்லை. அச்சமயம், நம்ம இயக்குனர் பாரதி கௌதம் உள்ளே வருகிறார்.

இயக்குனர்: என்ன சார் காலியா இருக்கு மேசை. படம் எடுக்க போறது இல்லையா சார்?

தயாரிப்பாளர்: அட போயா? இப்போதைக்கு சினிமா காலியா தான் இருக்கு.

இ: ஏன் சார் அப்படி சொல்றீங்க?

த: எல்லாரும் கிரிக்கெட் விளையாட போயிட்டா அப்பரம் நான் யார வச்சு படம் எடுக்குறது?

இ: ஹாஹாஹா…ஐயோ சார் அதான் இந்த சோகமா!? இவங்க போனா என்ன? நம்ம கிரிக்கெட் வீரர்கள் தான் இப்போ டான்ஸ் போட்டி, பல்பொடி விளம்பரம் அப்படினு நடிக்க வந்துட்டாங்களே! இவங்கள வச்சு படம் எடுப்போம் சார்!

த: நீ சொல்றது உண்மை தான்! நம்ம virat kohli நல்லா அழகா smart இருக்குறார்… அவர வச்சு ஒரு படம் பண்ணலாமா பாரதி?

இ: ஹிந்தி படம் எடுக்க போறீங்களா?

த: இல்ல, தமிழ் படம் தான்!

இ: தமிழ் படத்துல நடிக்கறதுக்கு எதுக்கு சார் இவ்வளவு அழகு தேவை? இங்க பாருங்க இவர…. இவர் நடிச்சாருன்னா…படம் செம்ம ஹிட்!
(ஒரு ஃபோட்டோவை நீட்டுகிறார்!)

(ஃபோட்டோவை வாங்கி பார்த்து, முகம் சுழிப்புடன்)

த: யோவ்! யாருய்யா இது? shave பண்ணி 10 வருஷம் ஆனா மாதிரி! முடி என்னய்யா…விளக்கமாறு மாதிரி இருக்கு!

இ: என் தெருவுல இருக்கும் வளரும் ரவுடி.

த: வளரும் ரவுடியா???

இ: வளரும் கலைஞன் மாதிரி, வளரும் ரவுடி!!

த: இந்த மூஞ்சிய எப்படிய்யா படத்துல காட்டுறது!

இ: சார், என்ன சார் புரியாம பேசுறீங்க! இப்ப உள்ள trendஏ உங்கள தெரியாதா!? இந்த ரவுடி செம்ம ஹிட் ஹீரோவா வருவார் பாருங்க!

த: எப்படிய்யா சொல்றீங்க??

இ: சார், இந்த ஃபோட்டோவ படம் புடிச்சு உங்க மனைவிக்கும் பொண்ணுக்கும் mms அனுப்புங்க? அவங்க reaction பாத்த பிறகு நீங்களே சொல்வீங்க!

(இயக்குனர் சொன்ன படி செய்தார் தயாரிப்பாளர். சற்று நேரத்தில் இருவரிடமிருந்து பதில் வந்தது)

மனைவி: ஆபிஸ் நேரத்துல, இப்படி பயம் காட்டுற மாதிரி ஃபோட்டோ அனுப்புற?? வீட்டுக்கு வா, உங்க அம்மா ஃபோட்டோவ காட்டி பயம் காட்டுறேன் பாரு!

இ: என்ன சார்? உங்க மனைவி செம்ம டென்ஷனா ஆயிட்டாங்க போல!

த: யோ! என்னய்யா வம்புல மாட்டிவிட பாக்குறீயா?

இ: சார், பொறுங்க. உங்க பொண்ணு ஸ் எம் ஸ படிங்க

பொண்ணு: டாடி!! omg! who is this? so hot! so cute! semma rowdy look! awesome! super! you better fix him for your next movie. I’m going to share this picture with my collegemates!

த: (ஆச்சிரியத்துடன்) என்னய்யா நடக்குது?

இ: நான் தான் சொன்னேன்ல. எந்த ஒரு ஹீரோ முகம் ஆண்ட்டிஸ்க்கு பிடிக்காம, அவங்க பொண்ணுங்களுக்கு பிடிக்குதோ, அந்த ஹீரோ தான் டாப் ஹீரோ!

த: என்னமோ போயா! இது எல்லாம் சரியா வருமானு தெரியல!

இ: சார், இவர் நல்ல கிரிக்கெட் ஆடுவாரு சார்! தமிழ் படம் ஹீரோவுக்கு இதவிட வேற என்ன தகுதி வேணும்!?

த: (சலிப்புடன்) புதுசா எதாச்சு செய்யுவோம்? ஒரு reality tv show பண்ணா என்ன?

இ: பின்னீட்டீங்க சார்! இப்ப அது தான் hot business.

த: என்ன நிகழ்ச்சி பண்ணலாம்?

இ: பாட்டு போட்டி! airtel வழங்கும் cute singer இம்முறை உலகத்தையும் தாண்டி!

த: நல்லா தான் இருக்கு!

(ஒரு வாரம் சென்றது, நிகழ்ச்சி தேர்வு சுற்று நடந்தது. தேர்வு சுற்று அறையில், இயக்குனரும் தயாரிப்பாளரும் காத்து கொண்டிருந்தனர்)

த: உன்னைய நம்பி இதுல இறங்குறேன், பாத்து பண்ணுய்யா!!

இ: கவலைய விடுங்க! தேர்வு சுற்றே 15 episode காட்டலாம்! அப்பரம் டாப் ஹீரோ சுற்று, மொக்கை ஹீரோ சுற்று, மொக்கை ஹீரோக்களின் லவ் டூயட்ஸ், மொக்கை ஹீரோயின்களின் solo சுற்று, wildcard round 1, wildcard round 2, wildcard round 3, mega wildcard round, semi final 1, semi final version 2.0…இப்படி ஒவ்வொரு episode கணக்கு பண்ணாலே, பல கோடிய அள்ளிடலாம் சார்!

த: ஆமா, நமக்கு என்னமோ பாட்டு தெரிஞ்ச மாதிரி judge பண்ண வந்துட்டோமே, உனக்கு ஏதாச்சு சங்கீதத்த பத்தி தெரியுமா?

இ: மத்தவங்க பொண்டாட்டிய பத்தி நான் பேச மாட்டேன் சார்?

த: பொண்டாட்டியா????

இ: பாடகர் கிரீஷ் பொண்டாட்டி தானே சங்கீதா? அவங்கள பத்தி எனக்கு ஒன்னு தெரியாது சார்!

த: யோ! சங்கீதா இல்லையா? சங்கீதம்!!!!!!!

இ: (சிரித்து கொண்டே) அத பத்தி தெரியாம இருக்குமா? நான் எப்படி judge பண்றேன் மட்டும் பாருங்க!

(முதல் போட்டியாளர் வந்தார். பாடினார்)

இ: நீங்க பாடின மூன்றாவது வரில அந்த ரெண்டாவது வார்த்தையல கொஞ்சம் landing note தப்பா போயிட்டு!

த: (இயக்குனர் காது அருகே சென்று, மெதுவாய்) அவர் பாடினதே இரண்டு வரி தான். நீ என்னத்த மூன்றாவது வரிய கண்டு பிடிச்ச?

இ: (சமாளித்து கொண்டு) ஓகே, சார்! நீங்க அடுத்த ரவுண்டுக்கு selected.

(அடுத்த போட்டியாளர் பாடி முடித்தார்)

இ: சூப்பர்! சூப்பர்! இந்த சின்ன வயசுல….(கண் கலங்கினார்)

த: (இயக்குனரிடம் மறுபடியும் காது அருகே சென்று) அநியாயம் பண்ணாத டா! இவருக்கு 55 வயசு ஆச்சு! இது உனக்கு சின்ன வயசா? நல்லாவே பாடுல…reject him.

இ: (அமைதியான குரலில் தயாரிப்பாளரிடம்) சார், நல்லாவே பாடாம இருக்கறவங்கள தான் choose பண்ணனும். அது தான் புது rule.

(வெளியே வாக்குவாதம் நடந்தது. அதை சமாளிக்க ஓடினர் இருவரும்)

ஒரு அம்மா: எங்க புள்ள பாடனும்.

த: இல்ல மேடம். இது பெரியவங்க நிகழ்ச்சி.

ஒரு அம்மா: என் புள்ள, சின்னபுள்ள, இப்ப தான் 6 வயசு ஆகுது. சும்மா ஒரு guest appearance மாதிரி பண்ண வைங்க.

இ: மேடம், கவலைய விடுங்க! அடுத்த seasonல உங்க பையனுக்கு சான்ஸ் இருக்கு.

த: அடுத்த seasonக்குள்ளவா? இப்ப தான் பையனுக்கு 6 வயசு.

இ: சார், நம்ம ஒரு சீசன முடிக்கறதுக்குள்ள பையன் வயசுக்கு வந்து மேஜர் ஆயிடுவான் சார்.

(பிரச்சனையை சமாளித்த உற்சாகத்தில் உள்ளே வந்தனர் இருவரும். அடுத்த போட்டியாளர் பாடி கொண்டு இருக்கும் வேளையில்…)

இ: நிறுத்துங்க! (கத்தினார்)

த: (ஆச்சிரியம் அடைந்தார்)

இ: என்னங்க பண்றீங்க?? (போட்டியாளர் மிரண்டு போயிட்டார்)

த: (இயக்குனரிடம்) யோ! what’s happening?

இ: அவர் என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு தெரியுமா?

போட்டியாளர்: சாரி சார்! நான்….மறுபடியும் பாடவா?

இ: நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்!

(அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியில். யாருக்குமே என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர். போட்டியாளரின் சித்தி உள்ளே நுழைந்தார் கையில் ஒரு கேக். அனைவருக்கும் அப்போது தான் புரிந்தது. அனைவரும் கை தட்டினர்.)

சித்தி: இன்னிக்கு celebration time! எங்க கொள்ளு தாத்தா ஒருத்தர் இருந்தாரு. அவரோட நினைவு நாள் இன்னிக்கு. அதான்…(சிரித்து கொண்டே உள்ளே நுழைந்தார்கள் போட்டியாளரின் மொத்த குடும்பத்தினரும். இயக்குனரும் சேர்ந்து கொண்டார் கொண்டாடத்தில். கேமிரா மேன் ஒவ்வொரு angleலாய் படம் எடுத்தார்!)

த: (கோபத்துடன்) என்னய்யா நடக்குது!!! எல்லாரும் ஓடி போயிடுங்க!

(அனைவரையும் விரட்டினார்!!!)

இ: சார்… என்ன சார்?

த: நீ பேசாதய்யா!!??

இ: (புன்னகையித்து கொண்டே) சார், அங்க பாருங்க சார்?

த: என்ன?

இ: இப்ப பாடினாரே அவர் காதுல எத்தன தோடு போட்டு இருந்தார் தெரியுமா?

த: அவர சித்தியவிட அவருக்கு தான் நிறைய இருந்திருக்கும். அதுக்கு இப்ப என்ன?

இ: சார், ஒரு ஐடியா சார்? why not we start ‘நம்ம வீட்டு காது குத்து’ show?

த: உனக்கு இன்னிக்கு கும்மாங்குத்து தாண்டா!!! (விரட்டி கொண்டு ஓடினார் இயக்குனரை பிடிக்க!)

 

ரசித்த இடம்: http://enpoems.blogspot.com/

 

1. பிறரை தண்டிக்க வாய்ப்பிருந்து அதற்கான நியாயமும் இருக்கையில் எவனொருவன் தன்னை மாய்த்துக் கொண்டாவது அவர்களை விட்டுக் கொடுக்கிறானோ அவன் உண்மையிலேயே ஏமாளியல்ல ஏற்றமுடையவன்,

2. தவறே செய்யாதவனைவிட பெருந்தவற்றைச் செய்து திருந்தி விடுகிறவனின் மனோபலம் பெரிதாயும் தெளிவாயும் இருக்கும்,

3. மறக்கக் கூடாதவை மறந்து போய் விடுவதும், மறக்க வேண்டியவை மறக்க முடியாமல் போவதும் ஒரு மனிதனின் வாழ்வில் சகஜமானதாய் அமையும்போது வாழ்க்கையின் தடமும் சர்வ சகஜமாய் மாறிப்போய் விடுகிறது.

4. சாதாரணமாக ஒருவனை வீழ்த்த முற்படும்போது அவனது பலத்தை அறிந்து அதை முறியடிக்க முயல்வதைவிட பலவீனத்தை அறிந்து அதை அதிகப்படுத்துவதுதான் சரியானது அல்லது லாபகரமானது.

5. வாழ்க்கையில் ஓர் அர்த்தத்தையும் மதிப்பையும் அளிக்கக்கூடிய ஒரே அம்சத்தை இழந்துவிடும் பட்சத்தில் எவ்வளவு ஆதாயம் கிடைத்தாலும் வாழ்க்கையே அர்த்தமற்றதாய் தான் அமைகிறது.

6. பல விஷயங்களில் பல சந்தர்ப்பங்களில் பெண்ணானவள் நம்பிக்கையை தரக்கூடியவளாய் இருந்தாலும் அந்தரங்க உறவின் பேரில் ஏற்படும் சிறு சந்தேகத்தால் அனைத்து நம்பிக்கைளும் அர்த்தமற்றுப் போவதோடு அவநம்பிக்கைக்கு உரியவளாகவே கருதப்படுகிறாள்.

7. ஆழப்பதிந்துவிட்ட வெறுப்புக்குமுன்னால் பிற விஷயங்களின் பேரிலான ஆராய்ச்சி குறுகிய எல்லைக்குள் நடக்கிறதே தவிர உபரி பரிமாணங்களை அடைவதில்லை.

8. பிறர் உண்டாக்கி வைக்கும் சந்தேகம் என்பது நமது அறிவுக்கு வைக்கப்படும் தீயைப்போன்றது. தெளிவான சிந்தனையும் துணிவும் உள்ளவர்களால் அறிவினாலேயே அத்தீயை அனைத்துவிட முடியும். பெரும்பாலானவர்கள் தீயின் பிரவேசத்தாலேயே இவ்விரண்டையும் இழந்து விடுவதால் அத்தீ கணிசமான நாசத்தை உண்டாக்கி பின்பே அழிக்கிறது.

9. சுய சந்தேகத்தைவிட பிறரால் உருவாகும் சந்தேகள் அதிகமாகப் பாதிக்கக் கூடியது. ஏனென்றால் சுய சந்தேகத்தில் இருக்கும் பாதுகாப்பு பிறரால் உருவாக்கப்படும் சந்தேகத்தில் இருப்பதில்லை. தன் மனைவியின் நடத்தை பற்றி சுயசந்தேகள் கொள்பவன் அச்சந்தேகம் உண்மையாகும் போது வேதனைப்பட்டாலும் மற்றவர்களுக்குத் தெரியாத பட்சத்தில் ஓரளவு ஆறுதலடைகிறான். நிதானப்படவும் முயல்கிறான். ஆனால் அதே சந்தேகத்தை மற்றவர்கள் உருவாக்கி உண்மையாகவும் இருந்துவிடும் பட்சத்தில் அவனது கவலை அதிகமாகிறது. மற்றவர்களுக்கு தெரிந்து விட்டதால் உண்டாகும் அவமானம் அவனை வதைக்கிறது. நிதானப்பட முடியாமல் தவிக்கிறான். சிலர் வெறிக்கும் ஆளாகிறான்.

10. வாழ்க்கை என்பது நாம் உணர்கிற அனுபவம் அல்லது அனுபவிக்கும் உணர்வே தவிர சமூகமும் சம்பிரதாயமும் சொல்லி வைத்துள்ள அமைப்பல்ல.

11. கெடுப்பவர் கெடுத்தால் கடவுளும் கெடலாம். ஒரு பிரச்சனையை முறியடிப்பது என்பது அதைச் சமாளிக்க முயல்வோரின் திறமையைப் பொறுத்து என்று சொல்வதைவிட அது எப்படிப்பட்ட நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்பதைப் பொருத்து என்று சொல்வதே சரியானது. வெறும் பிடிவாத்ததால் பிரச்சனையை துவக்குகிறவனை எப்படிப்பட்டவனாலும் எளிதில் மாற்றிவிட முடியாது. பிரச்சனைக்காகவே பிரச்சனையை உண்டாக்க்கிறவன் கொஞ்சத்தில் அசைந்து கொடுக்க மாட்டான்.

12. ஒரு காரியத்தில் தோல்வியும் ஏமாற்றமும் தடைகளும் குறுக்கிடும் போது அறிவு பூர்வமாய் இறங்கியவர்கள் லட்சியமாக எண்ணித் தொடர்கிறார்கள். மற்றவர்களோ அவற்றால் அலட்சிப்படுத்தப்பட்டு அகன்று விடுகிறார்கள்.

13. தன் சுயநலத்தை மதித்து செயல்படும் எந்த மனிதனாலும் பிறர் குடும்பத்தை கெடுக்காமல் இருக்க முடியாது என்பதும் பிறர் குடும்பத்தை கெடுக்கும் எந்த மனிதனும் நிம்மதியாக இருக்க முடியாது என்பதும் மனித வாழ்க்கையின் அடிப்படை உண்மைகள்.

— ‘மனவிலங்கில்’ உதயணன்

பேருந்தில் ந‌ட‌த்துன‌ரிட‌ம் காசு கொடுத்து ப‌ய‌ண‌ச்சீட்டு வாங்கும்போது அடிக்க‌டி ந‌ட‌க்கும் விஷ‌ய‌ம் இது. 5.50 ப‌ய‌ண‌ச்சீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்தால், 4 ரூபாய்தான் திருப்பி தருவார். எப்போதும் அவ‌ர் த‌ரும் பாக்கி சில்ல‌றையில் 50 காசு குறைவாக‌ இருக்கும். வெறும் 50 காசுதானே என்று நீங்க‌ள் சொன்னாலும், அது என் காசு. இருந்தாலும் அதை கேட்காம‌ல் விட்டுவிடுவேன், கேட்காம‌லிருப்ப‌து த‌ப்பென்று தெரிந்தும். ஏனெனில்…

____________________________________________________________________________

அதே பேருந்தில் இருக்கையில் அம‌ர்ந்திருப்பேன். ம‌ற்ற‌ இருக்கைக‌ளில் அம‌ர்ந்திருக்கும் எவ‌ரும் தூங்காம‌ல் இருப்ப‌ர். ஆனால் என் ப‌க்க‌த்தில் அம‌ர்ந்திருக்கும் ஆசாமி ம‌ட்டும் தூங்கி வ‌ழிந்து, அடிக்க‌டி என் தோளில் வ‌ந்து இடித்துக்கொண்டிருப்பார். நான் இன்னும் கொஞ்ச‌ம் த‌ள்ளி உட்கார்ந்து கொள்வேனே த‌விர‌ எதுவும் சொல்ல‌மாட்டேன். ஏனெனில்…

“இதுவே ப‌க்க‌த்துல‌ ஒரு பொண்ணு இருந்தா…” என்றெல்லாம் பின்னூட்ட‌ம் வேண்டாம் பாஸ். ப‌திலைத் தெரிந்துகொண்டே கேள்வியைக் கேட்டால் நானென்ன சொல்ல‌?…;))

____________________________________________________________________________

ஒரு முறை தி.ந‌க‌ருக்கு அவ‌ச‌ர‌மாக‌ செல்ல‌ வேண்டிய‌ சூழ்நிலை. ப‌ஸ் ஸ்டாப்பில் வெகு நேர‌மாய் நின்று கொண்டிருந்தேன். தி.ந‌க‌ருக்கு செல்ல‌ வேண்டிய‌ பேருந்துக‌ள் அனைத்தும்‌, கூட்ட‌ மிகுதியால் பைசா கோபுர‌ம் போல் ஒரு ப‌க்க‌மாய் சாய்ந்து கொண்டே வ‌ர‌, ச‌ரி ஆட்டோவில் போய்விட‌லாம் என்று முடிவு செய்தேன். சிறிது நேர‌த்தில் ஆட்டோ ஒன்று வ‌ர‌, நான் கேட்ப‌த‌ற்கு முன் அருகில் நின்றுகொண்டிருந்த‌வ‌ர் “டி.ந‌க‌ர் போக‌ணும்…..எவ்ளோ” என்று கேட்டார். அந்த‌ ஆட்டோ டிரைவ‌ர் ம‌ற‌ந்து, யூனிஃபார்மோடு ம‌ன‌சாட்சியையும் கழ‌ற்றி வைத்துவிட்டார் போல‌. ச‌ர்வ‌ சாதார‌ண‌மாக‌ “ஒன் ஃபிஃப்டி குடுங்க‌” என்றார். அந்த‌ ந‌ப‌ர் ஆட்டோ வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கி நின்று கொண்டார். அவ‌ருட‌ன் பேசி ஒரே ஆட்டோவை பிடித்து தி.ந‌க‌ருக்கு சென்று ஆட்டோ சார்ஜை ஷேர் செய்திருக்க‌லாம். ஆனால் நான் செய்ய‌வில்லை. ஏனெனில்…

____________________________________________________________________________


அடையார் ஆன‌ந்த‌ ப‌வ‌ன் ரெஸ்டார‌ண்ட்டுக்கு சென்று ஆசையாக‌ ஒரு ஆனிய‌ன் ர‌வாவை அள்ளி அள்ளி உள்ளே த‌ள்ளிக்கொண்டிருப்பேன். 80% முடித்த‌பின்பு மீத‌ம் இருக்கும் தோசைக்கு தொட்டுக்கொள்ள‌ சாம்பாரும் இருக்காது, ச‌ட்னியும் இருக்காது. ச‌ர்வ‌ரிட‌ம் கூப்பிட்டு கேட்டால், ‘இம்மாத்துண்டு தோசைக்கு ஒரு க‌ப்பு சாம்பார் கேக்குதா’ என்று அழ‌கு சென்னைத் த‌மிழில், பார்வையாலேயே ந‌ம் இராசி, ந‌ட்ச‌த்திர‌ம் கேட்காம‌ல் அர்ச்ச‌னை செய்வார். செய்தால் என்ன‌? என் ப‌சிக்கு சாப்பிடுகிறேன். என‌க்கு தேவை இர‌ண்டு க‌ப் சாம்பார், ச‌ட்னி என்றால் அவ‌ர் த‌ர‌வேண்டும். ஆனால் கேட்க‌மாட்டேன். வெறும் தோசையையே அள்ளி ம‌டித்து, ச‌மோசா ஷேப்புக்கு கொண்டு வ‌ந்த‌ பின், பூலோக‌த்தை வாயினுள் காட்டிய‌ க‌ண்ணன் போல் வாயைத் திற‌ந்து, வெற்றிலை போடுவ‌து போல் உள்ளே த‌ள்ளிவிடுவேன். ஏனெனில்…

____________________________________________________________________________

ஒரு அழ‌கான‌ பெண்ணை பார்த்து சைட் அடிக்கும்போது இருக்கும் தைரிய‌ம், அதே பெண்ணிட‌ம் முத‌ல் முறை பேசும்போது இருப்ப‌தில்லை. முத‌ல் முறை ம‌ட்டும். அது போல், பெற்றோரோ, உற‌வின‌ரோ அருகில் இருக்கும்போது, ஒரு பேஏஏஏர‌ழ‌கி க‌ட‌ந்து போனாலும், போக்கிரி விஜ‌ய் ரேஞ்சிற்கு முக‌த்தில் எந்த‌வித‌ ரியாக்ஷ‌னும் காட்டாம‌ல் இருப்ப‌துண்டு. ஏனெனில்…

கேள்வி:    நீங்கள் என்ன சாப்பிவிரும்புகிறிர்கள்? பழஜூஸ்,சொக்கலேடே , சோடா ,டி

பதில்             டீ மட்டும்

கேள்வி         இலங்கை டி ,மூலிகை டி,ஏலம கலந்த டி,புஷ் டீ ,கிரீன் டி ?

பதில் :         சிலோன் டி

கேள்வி :    அதிலும் வெள்ளை டி ,கருப்பு டி ?

பதில் ;       வெள்ளை

கேள்வி :  பால் அதிகம் விட்டோ இல்லை குறைத்தோ?

பதில் ;      பால் சேர்த்து

கேள்வி :  ஆட்டு பால் ,பசுப்பால் ,ஓட்டக பால் எது தேவை ?

பதில் :      பசும பாலே போதும் டீ கொண்டு வாங்க.

கேள்வி  :இனிப்புக்கு என்ன ?சீனி  இல்லாவிடின் கரும்பு சாறு

பதில் :சீனி

கேள்வி :கட்டி சீனி யா ?இல்லை தூள் சீனியா ?

பதில் :தூள் சீனி

கேள்வி :வெள்ளை சீனி ,பிரவுன் சீனி ,மஞ்சள் சீனி எது வேண்டும் ?

பதில் :தம்பி டியே வேணாம் கொஞ்சம் தண்ணீ கொண்டு வா ?

கேள்வி :மினரல் வாட்டர் வேணுமா ? இல்ல நார்மல் தண்ணிர் போதுமா?

பதில் :மினரல் வாட்டர்

கேள்வி :சுவை சேர்த்த நீரோ இல்லாமல வெறும் நீரோ ?

பதில் :::::::::::::::::::::::;;ஆணியே புடுங்க வேணாம் நான் போறன்

(சீனி =சக்கரை )

ரசித்த இடம்: http://sangarfree.blogspot.com/

இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு

1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’

இலக்கியப் பணி

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
      – பாரதி.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் – பாரதி

தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என கவிபுணைந்த கவிஞாயிறு. சமஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.

  • குயில் பாட்டு
  • கண்ணன் பாட்டு – இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
  • பாஞ்சாலி சபதம்

ஆகியன அவர் படைப்புகளில் சில.

பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்

பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல்செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தேசியக் கவி

விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே… மாநிலமீதிதுபோல் பிறிதிலையே… இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே… இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். “வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் – என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.

பெண்ணுரிமைப் போராளி

தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.

பாஞ்சாலி சபதம்

இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.

பாரதியார் நினைவுச் சின்னங்கள்

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்றுபஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

நன்றி: http://ta.wikipedia.org

  1. காலையில் எழுந்ததும் உங்க தங்கமணி கடைக்குப் போகச் சொல்வாங்க. பர்சை எடுத்து பாக்கெட்டில் வைத்தபின் பழக்க தோஷத்தில் ID கார்ட எடுத்து கழுத்துல மாட்டுவீங்களே!
  2. ஒருநாளும் இல்லாத திருநாளா ஹோட்டலுக்குக் குடும்பத்தோடு சாப்பிடச் செல்வீர்கள். சாப்பிட்டு முடித்ததும் அலுவலக பழக்கத்தில் தட்டை கையிலெடுத்துக் கொண்டு கை கழுவப் போவீர்கள்!
  3. அப்படிப் போகையில் தங்கமணி முறைத்து தவறைச் சுட்டியதும் தட்டை டேபிளில் வைத்துவிட்டு கை கழுவப் போவீர்கள். அங்கு போய் அலுவலக ஞாபகத்தில் கையை நீட்டிக் கொண்டு காத்திருப்பீர்கள்….தானே தண்ணீர் வருமென்று!
  4. ரொம்ப நாள் கழித்து உங்க நண்பர் தொலைபெசியிருப்பார். ஊர் கதை உலகக் கதையெல்லாம் அடித்துவிட்டு போனை வைக்கும் போது பழக்க தோஷத்தில் ‘ஓகே பை பை, ஏதாவது பிரச்சனைனா திரும்பக் கூப்பிடறேன்’ என்பீர்கள்!
  5. நாள் முழுதும் அவசரம் அவசரம்னே பேசிக்கேட்ட பழக்கத்தில் வீட்டில் சாப்பிடும் போது உங்க மனைவியிடம் அர்ஜென்ட்டா ஒரு தோசை கொடு என்பீர்கள். வெந்தா தான் தர முடியும் ரொம்ப அவசரம்னா தோசைய நேரடியா தட்ல தான் வார்க்கனும்னு சொல்வாங்களே!
  6. உங்க பிறந்த நாளுக்கோ அல்லது கல்யாண நாளுக்கோ உங்க பாஸ் வாழ்த்து அனுப்புவார். அதை படிக்காமலே பழக்க தோஷத்தில் உங்களுக்கு கீழே வேலை செய்பவருக்கு “please review & discuss ” என்று பார்வார்ட் செய்வீர்கள்!
  7. கைப்பேசியில் SMS எதையோ டெலீட் செய்துவிட்டு அவுட்லுக் ஞாபகத்தில் செல்போனில் “deleted items ” தேடுவீர்கள்!
  8. வேக வேகமாய் வீட்டுக்கு வந்து சாவியை எடுத்து பூட்டைத் திறக்காமல் கதவு திறக்க கார்டை நீட்டுவீர்களே!  (இதை யாரும் பார்கவில்லை என்றாலும் சுயமாய்க் கொடுக்கும் சூப்பர் பல்பு இது.)
  9. ரொம்ப நாளைக்குப் பிறகு சினிமாவுக்குப் போயிருப்பீங்க. இடைவேளையின் போது உங்க மனைவி டைம் என்னங்கன்னு கேட்பாங்க. அதுக்கு நீங்களோ கடிகாரம் பார்க்காமல் திரையின் வலது புறம் கீழ் மூலையைப்  பார்ப்பீர்கள்!
  10. ரொம்ப நாள் யோசிச்சு இந்த மாதிரி ஒரு ஐடியா க்ளிக்காகும். சரி ஒரு பதிவ தேத்தலாம்னு ஜிமெயில் லாகின் செய்வீர்கள். பாஸ்வார்ட் இன்வாலிட் என்று வரும். அப்ப தான் தெரியும் நீங்க போட்டது ஆபீஸ்  USER ID என்று!
இந்தப் பத்தில் ஐந்து உங்களுக்கு நடந்திருந்தால்….அட நீங்க நம்மாளு!
ரசித்த இடம்: http://somayanam.blogspot.com

செயின் திருடர்கள் எல்லாரும் ஆந்திரா போயிட்டாங்கன்னு அம்மா சொன்னாங்களே.. அப்புறம் எப்படி நகை திருட்டு நடந்தது?

அட நீ வேற .. இவங்க எல்லாம் நெக்லஸ் திருடங்களாம் …
———————————–
 ஏம்ப்பா.. 2006 டூ 2010 மேரேஜ் ஆன ஆண்கள் எல்லாம் ஏன் குஷியா இருக்காங்க?
அந்த கால கட்டத்துல நடந்த மேரேஜ் எதுவும் செல்லுபடி ஆகாதுன்னு அம்மா அறிவிச்சுட்டாங்களாமே?
——————————-
 ஆக்சிடெண்ட்ஸ்  நடந்த தகவல்களை எல்லாம் தலைவர் எதுக்கு கலெக்ட் பண்றாரு?
அவை எல்லாம் திட்டம் இட்டு நடந்த கொலைகள்னு அறிக்கை விடத்தான்..
————————————–
அரசியல்வாதி பையனை லவ் பண்ணுனது தப்பா போச்சு..
ஏன்?
எனக்கு வேற பக்கம் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சதும் லவ் ஃபெயிலருக்கு தார்மீகப்பொறுப்பு ஏற்று காதலன் பதவியை ராஜினாமா பண்ணிடறேன்னாரே..?
———————————————-
பொதுத்தேர்தல்ல படு தோல்வி அடைந்தும் தலைவரோட பந்தாவுக்கு மட்டும் குறைச்சல் இல்ல..
ஏன்?
இடைத்தேர்தல்ல ஜெயிச்சுத்தான் எனக்கு பழக்கம்னுட்டாரே?
————————————–
ஆஃபீஸ் மேனேஜர் ஏன் கடுப்பா இருக்காரு?
ஒழுங்கா வேலை செய்யலைன்னு டிஸ்மிஸ் செய்யப்பட்ட கிளார்க் ஆஃபீசை விட்டுக்கிளம்பறப்ப  எனக்கு ஓய்வு கொடுத்த  மேனேஜருக்கு நன்றின்னாரே?
——————————
தலைவர் ஏன் கோபமா இருக்காரு?
ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் சரி.. எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி.. மைனாரிட்டியாகத்தான் இருப்பேன்னு ஏன் அடம் பிடிக்கறீங்க?ன்னு நிருபர்கள் கேட்டாங்கலாம்..
———————————-
செயின் திருடர்கள் டூரிஸ்ட்டா?ன்னு ஏன் கேட்கறீங்க?
பின்னே? அவங்க தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகான்னு ரவுண்டிங்க்ல இருக்கறதா சொன்னா என்ன அர்த்தம்?
————————————-
அந்த காக்காவை ஏன் குளத்துல முக்கி எடுக்கறாங்க?
காகம் கரையும்னு சொன்னாங்களாம் டீச்சர்.. அதை செக்கிங்க்..
——————————–
மேடம்.. ஏன் மாசாமாசம் உங்க புருஷனை மாத்திடறீங்க?

நடிகை – மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாற்றம் இல்லாததுன்னு உலகுக்கு உணர்த்த விரும்பறேன

ரசித்த இடம்: அட்ரா சக்க

உங்க கைப்பையில அப்படி என்ன குப்பையைத்தான் வெச்சிருப்பீங்க, அதுல இருக்கற அந்த 32 ஜிப்புகளை எப்ப திறந்தாலும், எது தேவையோ அதைத் தவிர மத்ததெல்லாம் எடுக்கறீங்களே?

ரூபா நோட்டை ரெண்டா மடிச்சு பிடிக்கத் தெரியாதா? அது ஏன் எல்லாத் தங்கமணியும் ஒவ்வொரு நோட்டையும் சுருட்டி உருட்டி 24 மடிப்பு மடிச்சு பிடிக்கறீங்க?

அரைச்ச சட்னில ரெண்டு மொளகாய ஜாஸ்தியா போட்டுட்டு, அவனவன் கண்ணுல தண்ணிவர அவஸ்தைப்பட்டா, “கொஞ்சம் காரமா இருந்தா விரும்பி சாப்பிடுவீங்களேன்னுதான் வெச்சேன்” னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியுது? (ஆனா உண்மையில அளவு தெரியாம போட்டதை எங்க போய்ச் சொல்ல)

பேஸ்கெட்பால் விளையாடு, டிராயிங் கிளாஸ் போ, இன்டர்நெட் பழகு, ஹேரி பாட்டர் படி, பரத நாட்டியம் பழகுன்னு அந்த பச்ச மண்ண இந்தப் பாடு படுத்தறீங்களே, அவ வயசுல நீங்க அ,ஆ,இ, ஈ ஒழுக்கமா எழுத பழகீருப்பீங்களா?

குழந்தைக்கு யூனிஃபார்ம் தான் வாங்கப் போறோம், அப்பவும் எதுக்கு மத்த துணியெல்லாம் பாத்துட்டு அப்புறமா யூனிஃபார்ம் வாங்கறீங்க?

எங்க சொந்தக்காரங்க கிட்ட நாங்க ஃபோன்ல பேசும் போது மட்டுமே ஏன் நீங்க மிக்ஸில மசால் அரைக்கறீங்க?

உங்களுக்கு புடவை வாங்கணும்னா நீங்க ரெண்டு மணி நேரம் வேண்ணாலும் நின்னு வாங்கிக்கங்க, ஆனா நீங்க பாக்கற 237 புடவையையும் நானும் பாக்கணும்னா, இதெல்லாம் அராஜகமாத் தோணலயா?

எங்க வெளீல கெளம்புனாலும் நாங்க கிளம்பி ஒரு கால் மணி நேரம் கழிச்சுதான் நீங்க ரெடியாகணும்கறது ஒரு சடங்காவே வெச்சிருக்கீங்களா? (அந்த கால் மணி நேரத்துல கேஸ் ஆஃப் பண்ணு, சன்னலை சாத்து, சாம்பாரை ஃபிரிட்ஜுல வைன்னு ஒரு 34 வேலைகள லிஸ்ட் போட்டு செய்ய வெக்கறீங்களே அது ஏன்)

பாத்ரூம் ஷெல்ஃபுல போதை வஸ்துக்கள் மாதிரி ஒரு 25 டப்பால கலர் கலரா கடந்த ஒரு நூற்றாண்டா என்னென்னமோ இருக்குதே, இதுல ஒரு ஐட்டத்தையாவது கடந்த மூன்று மாதங்கள்ல ஒருதரமாவது யூஸ் பண்ணீருக்கீங்களா?

எந்த கடை முன்னால காரை நிறுத்த முடியாதோ, கண்டிப்பா அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு எப்படி கண்டு பிடிக்கறீங்க?

ரசித்த இடம்: http://tharaasu.blogspot.com

மறக்காம தங்கமணி பதில்களையும் பாத்துட்டு போய்டுங்க

எடையைக் குறைப்பதற்கான மருந்துகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி.

கடுகு எண்ணெயைக் கப்சியூல் ஆக்கி, எடை குறைக்கும் மருந்து என தொலைக்காட்சியில் நிறைய விளம்பரம் கொடுத்து விற்றதால் ஒருவர் பெரும் பணக்காரர் ஆனாராம்.

இதைக் கேள்விப்பட்ட டாக்டர் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என உளங் கொண்டார்.

தனது கிளினிக் வாசலில் ஒரு விளம்பரம் போட்டார்.

உள்ளே நுழைந்தால் இப்படி ஒரு மருந்து கிடைக்கிறது.


எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களால்
இந்தக் கண்ணாடிக் கடைக்காரருக்கு
அமோக வியாபாரம்.
“என்ன எனது எடை அதிகரித்துவிட்டதே!”

“சோறு சாப்பிடாமல் கேக் சாப்பிட்டு,
பால் குடியாமல் கோக் குடித்து,
மீன் சாப்பிடாமல் சொசேசஸ் சாப்பிட்டு
பத்தியம் இருந்தும் இப்படியாகிவிட்டதே”

என அதிசயித்த பெண்ணுக்கு தனது எடை உயர்ந்ததற்கான காரணம் இப்பொழுது புரிந்தது!!!!!

பிள்ளைகள் கொழுப்பதற்கு எத்தனையோ காரணங்கள்.

ஆனால் இந்த அம்மாவின் குழந்தை, கவலையால் கொழுத்ததாம்
இவர் தனது உணவில் மிகக் கவனம்.
அதிகம் சாப்பிடுவதில்லை.
சின்னச் சாப்பாடுதானாம்.
அதிகம் சமைப்பதும் இல்லை.
ஆனாலும் எப்படி எடை அதிகரிக்கிறது என்பது அவருக்கும் புரியவில்லை.

இந்த அம்மா எடையைக் குறைப்பதற்கு காலை முதல் இரவு வரை முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.

முழுநேர உடற் பயிற்சிதான். உடற் தசைகளுக்கு. ஆயினும் அவளது எடை குறையவில்லை.

காலை முதல் இரவு வரை கால்களுக்குப் பயிற்சி.

உட்கார்ந்த இடத்திலிருந்து கால்களை ஆட்டியபடியே இருக்கிறாள்.

அது மட்டுமல்ல மற்றொரு தொகுதி தசைகளுக்கும் ஓயாத பயிற்சி.

ஆம் வாய்த் தசை நார்களுக்குத்தான்.

மகன் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்ற கவலை இந்த அம்மாவுக்கு.
தனது ஆசை தீர மகனுக்கு உணவு அளிக்கிறாள்.
ஆனாலும் சாப்பிடுவது வலு குறைவென்ற கவலை.

ரசித்த இடம்: மறந்து போகாத சில

காலேஜ் விழாக்களில் ஃபிகர்களின் முகங்களிலும் ,உடம்பிலும் தங்கி விடும் ஜிகினாக்கள் அவர்களை தேவதைகள் ஆக்குகின்றன
#ஜெண்ட்ஸாலஜி
பெண்கள் இடையில் ஒட்டியாணம் அணிவது நாம் ஒட்டியாணத்தை ரசிக்க அல்ல,அந்த சாக்கில் கூச்சம் இல்லாமல் அவர்கள் இடையை ரசிக்க
#ஜெண்ட்ஸாலஜி
கலகலப்பாக சிரித்துப்பேசும் பெண்ணை விட அமைதியாக இருக்கும் ஃபிகர் தான் அட்ராக்டிவ்
#ஜெண்ட்ஸாலஜி

இடையில் செருகும் சேலைக்கொசுவத்துக்கான சேஃப்டி பின்னில் கூட டிசைண்டு பின்னாக செலக்ட் பண்ணுவது ஹை க்ளாஸ் ஃபிகரின் நுட்பமான மெனக்கெடல்
#ஜெண்ட்ஸாலஜி

சைட் அடிக்கும் ஃபிகர் மாடர்ன் கேர்ளாகவும், தாலி கட்டும் ஃபிகர் குடும்பப்பாங்காக சேலை கட்டியும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஆண்கள் மனசு
#ஜெண்ட்ஸாலஜி

திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி விட்டு திருமணத்துக்கு மறுப்பதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்
#செட்டில்மெண்ட் எவ்வளவு வேணும்?

சீமான்  3 வருடங்களாக பழகி ஏமாற்றி விட்டார் என நடிகை 4 பக்கங்கள்  புகார் கடிதம்
#அடச்சே,வெறும் 4 தடவை தான் ஏமாத்துனாரா?

நான் ஒரே ஒரு முறை தான் அந்த நடிகையை சந்தித்தேன் -சீமான்
#ஓஹோ ஒரு தடவை சந்திச்ச பின் 3 வருஷம் பிரியாமயே இருந்தீங்களா?

ஜெ ஆட்சிக்கு வந்ததும் திருட்டு விசிடி கடைகள் மூடப்பட்டு விட்டன – கலைப்புலி ஜி.சேகரன்
#அண்ணன் செம ஜால்ராவா இருக்காரே..எந்த கச்சேரிலண்ணே?

தனது வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க தைரியம் உள்ள டைரக்டர் யாராவது இருந்தா என்கிட்ட வாங்க-.நடிகை சோனா
#நீளப்படமா இருந்தா ம்ஹூம்,நீலப்படம்னா ஓஹோ

 

வைகோ-ம.தி.மு.க., வளர்வது தமிழகத்திற்கு நல்லது; நாங்களும் ஒரு நாள், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவோம்
#நல்ல வேளை ராம்தாஸ் மாதிரி தேதி சொல்லல

விஜயகாந்த்: எனது தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற அரசு ஒதுக்கும் பணத்தில், ஒரு நையா பைசா கூட எடுக்க மாட்டேன்
#ஓப்பனிங்க் நல்லாதான் இருக்கு

நாற்பதை தொட்ட த்ரிஷா#40 வது படமா?வயசு 40 ஆச்சா?40 வயசான தொழில் அதிபரை தொட்டாரா?எந்த விளக்கமும் இல்லாம ஹெட்டிங்க் போட்டா எப்படி? 
#சந்தேகம்

கனிமொழியுடன் நடிகை குஷ்பு சந்திப்பு 
#செய்தில கிக்கே இல்லையே? நாளை ஆ ராசாவுடன் குஷ்பூ சந்திப்புன்னு நியூஸ் வந்தா ஓக்கே#எக்ஸ்பெக்டேசன்

ஆஸ்காருக்கு பணம் கொடுத்தாரா ரஹ்மான்? : கிளம்பியது சர்ச்சை
#இசைஞானிக்கு கொண்டாட்டமான நியூஸ் ஆச்சே..இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே பாடுவாரோ?

முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: விஜய்! 
#நீங்க ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்தா போதும் சார்,தானா வலு ஆகிடும்

காதலன்:  எனக்கு 24 மணி நேரமும் உன் நினைப்புத்தான்….

காதலி: பொய் சொல்லாதீங்க..  அப்படி நீங்க என்னை நினைச்சிருந்தா எனக்கு விக்கல் வந்திருக்குமே?
—————————————
குப்பன்: அவருக்கு ஏகப்பட்ட பசங்களாம்..
சுப்பன்: இருக்கட்டும்.. அதுக்காக ராம்சாமி 1, ராம்சாமி 2 , ராம்சாமி 3 …… அப்படியா வைப்பாங்க?
——————————–
குப்பன்: நீ அவ கிட்டே ஐ லவ் யூ சொன்னியா?

சுப்பன்: சொன்னேன்.. ஆனா அது நடக்காது..
குப்பன்: ஏன்?
சுப்பன்: அவ வேற யாரோ 2 பேரை லவ் பண்றா போல.. ஐ லவ் டூ அபடின்னாளே..?
குப்பன்: அட வெளங்காதவனே.. ஐ லவ் TWO என சொல்லலை.. ஐ லவ் TOO  அப்படின்னு சொன்னா.. அப்டீன்னா அவளும்  உன்னை லவ் பன்றா-னு அர்த்தம்…
—————————-
குப்பன்: அவன் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?
சுப்பன்: பள்ளிக்கல்வியில் மாற்றங்கள் வந்த மாதிரி புதிய ஆட்சியில் பள்ளியறைக்கல்வியிலும் மாற்றங்கள் வருமா?ன்னு கேட்கரானே!
————————–
குப்பன்:  தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் எதை எதை கேட்கனும்னு ஒரு விவஸ்தை இல்லாம போயிடுச்சு..
சுப்பன்: ஏன்?
குப்பன்: தலைவர் தேர்தல்ல ஏன் தோத்தாருனு கேட்டு மனு குடுத்திருக்காங்க./..

க்கையின் மாமியார் செத்துப் போயிட்டாங்க..! மொக்கை திடீர்ன்னு குமுறிக்குமுறி அழ ஆரம்பிச்சாரு.. மிஸஸ்.மொக்கை கடுப்பாயிருச்சு..

“சரிதான் நிறுத்துங்க.. எங்கம்மாவை உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. எதுக்கு இப்போ அவங்க செத்துக் கிடக்கறதைப் பார்த்து உருகி, உருகி ஓவர் ஆக்ட் பண்றீங்க..?”

“இல்லேப்பா.. என் அழுகைக்குக் காரணம் என்னன்னா.. உங்க அம்மா அசையறது போல இருக்கு.. பொழைச்சு எழுந்துடுவாங்களோன்னு பீதியா இருக்கு..!”

ஆசிரியர்:ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு??

மாணவன்: ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார்.
மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”

 நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
ஆசிரியர்: எங்கே ஆங்கில எழுத்துக்களை வரிசையா சொல்லு

மாணவன்: பி, சி, டி,எப்

ஆசிரியர்: டே! ஏன்டா முதல் எழுது ஏ விட்ட??

மாணவன்: அது வயது வந்தவங்களுக்கு மட்டும் சார்
ஜோன்ஸ் : படத்தின் முடிவில் தற்கொலை செய்துகொள்கிறார்

பீன்ஸ் : யார் வில்லனா?? கதாநாயகனா??

ஜோன்ஸ்: தயாரிப்பாளர்
இயக்குனர் :,இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,

அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்

திரும்பிடுது!”

கதாநாயகன் :”படத்தோட பேரு?”

இயக்குனர் “ஜிம்மி ரிடர்ன்ஸ்!”
ஜோன்ஸ் : என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.

பீன்ஸ் :இப்பவாது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு.
ஜோன்ஸ் : இன்னிக்கு பேங் லீவு. இல்லைன்னா பணம் கிடைச்சிருக்கும்.

பீன்ஸ் :பேங்க்ல அக்கௌண்ட் வெச்சிருக்கியா…?

ஜோன்ஸ் : ம்ஹூம் பேங்க் கிளார்க் கிட்ட கடன் வாங்குவேன்.
டுத்திக் கொள்ள முடியாத டிரஸ் எது?

‘Addres’
ஜோன்ஸ் : பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.

பீன்ஸ் :துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்.

ஜோன்ஸ் : இவர் பழக இனிப்பானர்

பீன்ஸ் :என்ன செய்றார்?

ஜோன்ஸ் : ஸ்வீட் கடை வச்சிருக்கார்.
ஜட்ஜ் சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?

திருடன் ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.
ஜோன்ஸ் : ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கிறீங்க?

பீன்ஸ் :அது வாயில்லா ஜீவன்.
லோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?

உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாது.

பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே…!

ரசித்த இடம்: பனித்துளி ஷங்கர் 

\

ரசித்த இடம்: இட்லி வடை 

“தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே…ஏன்?”
“அந்த மீடிங்க்ல நோட்டு மாலையா போடுறத சொலிட்டு,ஸ்கூல் நோட்புக்கை மாலையா கட்டி போட்டுடங்களாம்…”

“திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஏன் போலீஸ் வந்திச்சி?”
“சிறந்த நீலப்பட விருதுகளும் வழங்கிநாங்களாம்!”

“தலைவர் செம கோபமா இருக்காரே?..ஏன்
“அவர் எழுதின காதல் கடிதங்களை எல்லாம் தொகுத்து மகளிர் அணி தலைவி தனி புத்தகமாக வெளியிட்டுடாங்களாம்…”

“கணக்கு பரீட்சை எழுதசொன்ன ஏண்டா டான்ஸ் ஆடுறாய்?”
“ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் மார்க்க உண்டென்னு நீங்கதானே சொன்னிங்க சார்”..அது தான் ஆடுறன்..

“தொகுதியில தண்ணி கேட்டு மறியல் பண்ணியவங்க கிட்ட தலைவர் போய் என்ன சொல்லிடாரென்று அவங்க கோபபட்டாங்க?…”
“உங்களுக்கெல்லாம் என்னென்ன “பிராண்டு” வேணும்னு கேட்டாராம்…”

“மன்னர் மினரல் வாட்டர் பாட்டிலை அரியணையில் வைத்து தாளம் போடுறாரே..ஏன்?”
“தண்ணியடிக்க போக வேண்டும்,சீக்கிரமாக அரசவை கூட்டத்தை முடியுங்கள் என்று சிம்பாலிக்காக சொல்கிறாராம்…”

“நீதிபதி ஏன் அந்த வக்கீலை கண்டிக்கிறார்?”
“போலி டாக்டர்,போலி மருந்து என போலிகள் பெருகிவிட்ட இந்த யுகத்தில்,போலி சாட்சிகளையும் நீதிமன்றத்தில் அனுமதிக்கணும் யுவர் ஆனார்னு பேசிட்டாராம்…”

“தலைவர் “கிளினிக்”குக்கு போலாமான்னு கேக்கறாரே…. உடம்புக்கு முடியலையா?”
“ம்ஹும்… அவருக்கு டாக்டர் பட்டம் குடுத்ததுலயிருந்து, கட்சி ஆபீஸ் போறதை இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்காரு!”

“கபாலி ரொம்ப உணர்ச்சிவசப்படறானா… அப்படி என்ன செய்தான்?”
“திருடப் போற இடத்துல எல்லாம், “என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கு நன்றி”ன்னு எழுதி வச்சுட்டு வந்துடறான்..!”

கபாலியோட சம்சாரம் சரியான சினிமா பைத்தியம்னு எப்படிச் சொல்றே?”
“பின்னே…. ‘கபாலி சென்னைக்குப் போயிருக்கான்’கிறதை ‘களவாணி மதராசபட்டினம் போயிருக்கு’ன்னு சொல்றாளே!”

“எதுக்குய்யா ஒவ்வொரு ரீல்லயும் படத்தோட டைரக்டர் நடுவுல வந்து ஏதாவது ஒரு கேரக்டரை தொட்டுட்டுப் போறாரு?”
“அவரோட போன படத்துல, டைரக்டறோட “டச்”சே இல்லைன்னு விமர்சனம் எழுதிட்டாங்களாம்…. அதான்….!”

ரசித்த இடம்: தமிழ் ஜோக்ஸ்!

அட வெயில் ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு இதபத்தி சீரியஸா நெறையா பேசியாச்சு இன்னும் என்னத்த சொல்றது…. சரி ….
ஆரம்பிப்போம் நம் சேட்டையை ….”
பி. கு : ஜோக்ஸ படிச்சிட்டு எனக்கு நானே சொல்லி கொண்டது “வெயில் ஜாஸ்தியான இப்படிதான்”

1 ஏன் அண்ணே இப்படி வெளில சுத்துறீங்க …. வெயில் எப்படி அடிக்குதுன்னு பாருங்க ”
“அடபோப்பா இது கொஞ்ச நேரம் தான் அடிக்கும் வீட்டுக்கு போனா பொண்டாட்டி தொடர்ந்து அடிக்கும்”

2 . “என்னப்பா டீ இவ்வளவு ஆறி பொய் இருக்கு ”
” கொஞ்ச நேரம் கைல வெச்சுக்குங்க அதுவே சூடாகிடும்”

3 “பசங்களா கேளுங்க எந்த உணவையுமே காச்சி சூடா வெச்சாத்தான் பேக்டீரியா தங்காது ”
” போங்க டீச்சர் அப்படி பார்த்த பூமியே பயங்கர சூடா இருக்கு எல்லா பேக்டிரியாவும் இந்நேரத்துக்கு செத்திருக்கனுமே

4 . “சர்வர் சூடா என்னையா இருக்கு ”
“பூமி தான்

5 . “தம்பி, இராமாயணம் இந்த காலத்துல நடந்திருந்தா எப்படி இருந்திருக்கும்”
“ராமர் சீதாவ அக்னி குண்டதுல நடந்துவர சொல்றதுக்கு பதிலா வெயிலில நடந்து வர சொல்லிருப்பார் ”

6 “தலைவரே வெயில கொடுமை தாங்க முடியலைதான் அதுக்காக தினமும் ஒரு பிரபலத்த கூப்பிட்டு உங்கள புகழ சொல்லி உச்சி குளிர்றது கொஞ்சம் டூ மச் ”

7 “டாக்டர் நீங்க என் புருஷன்கிட்டே வேயில் காலமா இருக்கு நெறைய நீர் ஆகாரமா சாப்பிடுங்கன்னு சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டு உயிரை எடுக்கறாரு ”
“ஏன் மா என்ன ஆச்சு
” நீருக்கு சாராயமும் ஆகாரத்துக்கு சைடுடிஷும் கேக்கறாரு

8 . “டேய் மொட்டை மாடில தண்ணி ஊத்துடா கூலா இருக்கும் ”
“அடபோங்கப்பா அப்ப பூமி மேல தண்ணி ஊத்த சொல்லுங்க உலகமே கூலா இருக்கும்”

பி. கு. 2 : நேத்து மழைக்கு முன்னாடி எழுதுனது. நான் இப்போ தான் படிச்சேன். ஹீ ஹீ!

ரசித்த இடம்: நக்கல் நய்யாண்டி
தலைவர் ஏன் கோபமா இருக்காரு?
எல்லாப் பத்திரிக்கையிலும் அவர் பேரு வந்துடுச்சாம் ஆனா குற்றப் பத்திரிக்கையில மட்டும் வரலியாம் அதான் கோபமா இருக்கார்.
தேர்தல்ல ஜெயிப்போம்னு நம்ம தலைவர் நினைச்சுக் கூட பார்க்கலியாம்!
எத வச்சு சொல்றே?
ஜெயிச்ச நியுஸ் வந்தப்புறமும் கரெக்டான நியுஸான்னு தன்னதானே கிள்ளிப் பார்த்துகிட்டாராமே!
தேர்தல்ல தோத்தாலும் தலைவருக்கு போஸ்டர் ஆசை விடலை பாத்தியா?
ஏன்?
எட்டு தடவை தோற்கடித்த எனதருமை மக்களுக்கு நன்றின்னு தெருப்பூறா போஸ்டர் அடிச்சிருக்காரே!
அமைச்சர் கூடவே சுத்திடிருந்தானே உங்க பையன் இப்போ எப்படி இருக்கான்?

 

 ஜெயில் ஜெயிலா சுத்திகிட்டு இருக்கான்.
ஏங்க உங்களுக்கு சனி பெயர்ச்சி ஆகுதாமே?
  என்னது நீ உங்க்ம்மா ஊருக்கு போறியா?
உங்களை கட்டிகிட்டதுக்கு ஒரு எருமை மாட்டை கட்டிகிட்டு இருக்கலாம்!
  ம்ம்.. அது தப்பிடுச்சு நான் வந்து மாட்டிகிட்டேன்.
ஈ.பி. காரனை கல்யாணம் கட்டிகிட்டது தப்பா போயிடுச்சு!
 ஏன் என்னாச்சு?
 அடிக்கடி காணாம போயிடறார்.
அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
இவ்விடம் ஒரு ஊசி போட்டுகொண்டால் ஒரு ஊசி இலவசமுன்னு போர்டு வச்சிருக்காரே!
அந்த டைரக்டர் ரொம்ப சிக்கனமானவருப் போல
 எப்படி சொல்ற?
படம்முழுக்க ஹீரோயின டூ பீஸ் லயே காட்டி காஸ்ட்யூம் செலவை குறைச்சிருக்காரே!
அடிச்சு அடிச்சு வளர்த்தியே உன் பையன் இப்ப என்ன செய்யறான்?
சர்க்கஸ்ல ரிங் மாஸ்டரா இருக்கான்.
டாக்டர் நான் பொழைப்பேனா?
இதபாருங்க இந்த மாதிரி கஷ்டமான கேள்வியெல்லாம் எங்கிட்ட கேக்கக் கூடாது
தமன்னாவுக்கு பிடிக்காத தமிழ் மாசம் எது?
‘கார்த்தி’கை மாசம்தான்.
மொழியை காப்பாத்துங்க மொழிய காப்பாத்துங்க தலைவர் பாடு பட்டது இப்பதான் விளங்குது.
அந்த எம்.எல்.ஏ ஆனாலும் அப்பாவியா இருக்காரு!
ஏன் என்னாச்சு!
தொகுதிக்கெல்லாம் விசிட் அடிக்கிறாரே!
நம்ம தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சு!
ஏன்?
டாக்டர் பட்டம் கொடுத்தீங்க ஆனா எம். எஸ் ஆ,எம்.பி.பி.எஸ் ஆன்னு சொல்லலியேன்னு கேட்டு அறிக்கை விட்டிருக்காரு!
அந்த பிளெயர் ஏன் கிரவுண்ட சுத்தி சுத்தி வர்ரார்?
அவரு பெரிய ஆல்- ரவுண்டராம்!
ரசித்த இடம்: தளிர்

1. எலெக்‌ஷன்ல  தோத்த  பிறகும்  கூட  தலைவர்  எதுக்காக  மக்கள்ட்ட  நிதி  திரட்டறாரு?

டெபாசிட்  கூட  கிடைக்கலை.  என்ன  பண்ணுவாரு?  இழந்த  பணத்தை  எப்படி  மீட்டெடுப்பது?

—————————-

2. குடிமக்களின்  நன்மதிப்பைப்  பெற  வேண்டும்ங்கற  எண்ணம்  தலைவரோட  தேர்தல்  அறிக்கைல  தெரியுது.

எப்படி  சொல்றே?

நடமாடும்  டாஸ்மாக்  கடை  அமைத்து  வீட்டுக்கு  வீடு  சரக்கு  சப்ளை  டோர்  டெலிவரி  செய்யப்படும்கறாரே?

—————————–

3. அவர்  ஒரு  பரம்பரைக்  குடிகாரர்-னு  எப்படி  சொல்றே?

இனிமே  நான்  சரக்கடிக்க  மாட்டேன்…  இது  குவாட்டர்  பாட்டில்  மேல  சத்தியம்  அப்டீன்னாரே?

————————–

4. நாங்க  பொண்ணு பார்க்க  வந்தப்ப  நீ  ஒரு  ஸ்வீட்  வெச்சியே…  அது  ரொம்ப  கேவலமா  இருந்துச்சு…அதை  ஏன்  அப்பவே  சொல்ல்லை?அம்மா  சொன்னாங்க…  பொண்ணே  ரொம்ப  கேவலமாத்தான்  இருக்கு;  ஸ்வீட்  கேவலமா  இருந்தா  என்ன?-னு…

——————————

5. சேலை  இல்லாத  பெண்களுக்கு  லேப்டாப்  ஃப்ரீனு  தலைவர்  அறிக்கை  விட்டிருக்காரே?

வேலை இல்லாத  ஆண்களுக்கு  மட்டும்தான்  வேலை  வாய்ப்பா?-னு  யாரும்  கேள்வி  கேட்டுடக்  கூடாதே?

———————————

6. தலைவர்  எப்பவும்  மேடைல  டபுள்  மீனிங்லதான்  பேசுவாராம்.

அதுக்காக  டபுள்  டிஜிட்ல  சீட்  வேணும்னு  கூட்டணி  கட்சி  கிட்டே  நிர்ப்பந்தம்  விதிச்சா  எப்படி?

————————————

7. நாட்டில்  இருக்கிற  எல்லா  கள்ளர்  இன  மக்களையும்  தலைவர்  தொகுதிக்கு  கூட்டிட்டு  வந்து  இறக்கிட்டாரே! ஏன்?

கள்ள  ஓட்டுக்கள்  போடனும்னா  கள்ளர்கள்  போடற  ஓட்டு-னு  நினச்சுட்டார்.

————————————

8. தலைவருக்கு  ரெண்டே  ரெண்டு  சின்ன  வீடுதான்  இருக்காம்.  அதுலயும்  ஒரு  சின்ன  வீட்டுக்கு  மட்டும்தான் போய்ட்டு  இருக்காராம்.

ஓஹோ…  ஒன்றுக்கு  மேல்  இப்போது  வேண்டாம்…  இரண்டுக்கும்  மேல்  எப்போதும்  வேண்டாம்-னு  சொல்றாங்களே… அதை  ஃபாலோ  பண்றார்  போல…

———————————

9. தலைவரோட  தேர்தல்  அறிக்கை  நம்பற  மாதிரி  இல்லையாமே?  ஏன்?

வீட்டுக்கு  வீடு  ஜிப்சி  ஜீப்  இலவசம்ங்கறாரே?

——————————-

10.  தலைவருக்கு  சினிமா  நாலெட்ஜ்  கம்மின்னு  எப்படி  சொல்றே?பவர்  ஸ்டாரின்  லத்திகா  படம்  லத்திகா  சரணின்  சுயசரிதையா?  அப்டினு  கேட்கறார்.ரசித்த இடம்: சட்னி-சாம்பார் 

கடி கடி

Posted: ஜூன் 7, 2011 in சுட்டது, நகைச்சுவை
குறிச்சொற்கள்:, , , , ,
அரசியல்வாதி (மேடையில்) : விலைவாசி உயர்வு திரும்பக்
குறையும் வரை நான் சாகாவிரதம் இருக்கப் போகிறேன்
என்பதை மக்களே, உங்கள்முன் உறுதியிட்டுக் கூறிக் கொள்கிறேன்!!!
………………………………………………………………………………………………………………………………
தொண்டர் 1 : பதவி பெருசா, குடும்பம் பெருசா?

தொண்டர் 2 : பதவியில் இருக்கிற குடும்பம்தான் பெருசு!
……………………………………………………………………………………………………………………………..
தளபதி: மன்னா, காளைப் படை ஒன்றை நமது படையில்
சேர்ப்போமா?
மன்னர்: நான்தான் காலையே படையாக வைத்து
இருக்கிறேனே, காளைப் படை என்று எதற்கு தனியாக?
……………………………………………………………………………………………………………………………
தலைவர் : நாங்கள் போனமுறை 500 கோடி ஊழல் செய்தோம்;
இந்த முறை 300 கோடி ஊழல் செய்தோம்…

தொண்டன் 1: தலைவர் என்னப்பா சொல்றாரு?
தொண்டன் 2:  இது கொள்ளை விளக்க பொதுக் கூட்டமாம்!
………………………………………………………………………………………………………………………….
அரசன்  (செய்தி கொண்டுவந்த புறாவைப் பார்த்து ) : புறாவே,
வா! உன்னை வறுக்க வறுக்க என்று  வரவேற்கிறேன்.
…………………………………………………………………………………………………………………………
விமான நிலைய அதிகாரி:  சார் நீங்க   அளவுக்கு அதிகமாகக்
குடித்திருக்கிறீர்கள். உங்களை விமானத்தில் அனுமதிக்க முடியாது.
பயணி:  அப்படின்னா   சரக்கு விமானத்திலயாவது ஏத்திக்குங்க சார்!
………………………………………………………………………………………………………………………….
தலைவர் ( மேடையில்) : நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
வெறும் வாயை மெல்லுபவர்களுக்காக  இலவச  அவல்
திட்டம்  கொண்டு வரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறோம்.
………………………………………………………………………………………………………………………….
–தூங்கும்போது செல்போன் பேசறாமாதிரி கனவு
கண்டேன்டா..
–அப்புறம் என்ன ஆச்சு?
–விடிஞ்சதும் போன்ல  பேலன்ஸ் இல்லடா!

………………………………………………………………………………………………………………………..

நண்பன் 1: காலம்பூரா உட்கார்ந்து சாப்பிடுரமாதிரி
வசதி செஞ்சி  வச்சிட்டுப் போயிருக்காரு எங்க தாத்தா!
நண்பன் 2:  அவ்வளவு சொத்து வசதியா?
நண்பன் 1: இல்லடா, நல்ல ஸ்ட்ராங்கா மர பெஞ்ச் செஞ்சி வச்சிட்டாரு…!
…………………………………………………………………………………………………………………………
சேவகன்: மன்னா,  போர் நிறுத்தம் ஆகிவிட்டது…மன்னன்:  கண்கள் பனித்தன!  இதயம் இனித்தது!!
ரசித்த இடம்: நிஜாம் பக்கம்
அண்ணே

என்னடா தம்பி எங்கேடா செல்ல போயிருந்தே..

நான் ஆட்சியைப் பிடிச்சுட்டேன் அதான் பிசி

டேய் கோணமண்டையா என்னடா சொல்றே நீ ஆட்சியைப் பிடிச்சியா
நெசமாத்தான் சொல்றேண்ணே நான்.ஆட்சியைப் பிடிச்சுட்டேன்…
எந்த கட்சியிலே நின்னு பிடிச்சேடா .முள்ளம்பண்ணித் தலயா
அண்ணே! மரியாதை மரியாதை…
ரெண்டுதரம் சொன்னா உனக்கு மரியாதை கொடுத்துடுவேனா …சொல்லுடா எப்படா பிடிச்சே

நேத்துதாண்ணே

யார்டா உனக்கு ஓட்டு போட்டது,எந்த கட்சியிலே நின்னே..

ஆட்சியைப் பிடிக்க எதுக்குண்ணே கட்சி கொடி எல்லாம்…  ஓட்டு. ஹி ஹி சரியான தேங்கா மடையனா இருக்கீங்களே  ஐயோ ஐயோ நினைச்சாலே சிரிப்பாணி சிரிப்பாணியா  வருது

மரமண்டையா சிரிக்காதேடா…ஓட்டு இல்லாம எப்படிடா ஆட்சியை பிடிக்க முடியும்
அதெல்லாம் வேண்டாண்ணே..

எப்டிடா..
அதெல்லாம் வேஸ்ட்ண்ணே..

சரி யார்டா உனக்கு பீரங்கி பிரச்சாரம் பண்ணினது,என்ன சின்னம்டா உன்னுது ஐய்யோ மண்டையப் பிச்சுக்கலாம்னு இருக்குடா…

எதுக்குண்ணே இப்படி தேவையில்லாத டென்சன்லே குதிச்சுட்டு வாரீங்க… சின்னம் ஓட்டு பிரச்சாரம் ..அதெல்லாம் ஆட்சியை பிடிக்க, திறமை இல்லாதவங்களுக்குத்தாண்ணே வேணும் எனக்கு இதெல்லாம் பஞ்சுமிட்டாய் .ஜுஜூபி…ரெண்டாவது லட்டுண்ணே..ஒண்ணும்தெரியாத அப்ராணியா இருக்கீங்களே…உங்ககிட்டே போய் அடியும் உதையும் வாங்கினதை நினைச்சா ஷேம் ஷேம் வெக்கம் வெக்கம்

டேய் என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறே….

நான் சொல்ல்றேன் ஆனா இந்த ஐடியாவை வச்சு நீங்களும் ஆட்சியைப் பிடிக்கக்கூடாது ஆமா சொல்லிட்டேன்.

இல்லடா செல்லம்  பிடிக்க மாட்டேன் ஆட்சியை நீயே வச்சுக்க..சொல்லுடா சொல்லுடா

அண்ணே நேத்து நான் வீட்டுக்குப் போனேனா

அங்கே வச்சுதான் ஆட்சியை பிடிச்சேன்…
என்னடா சொல்றே வீட்ல வச்சு ஆட்சியைப் பிடிச்சியா…
ஆமாண்ணே எங்க ஆட்சி ஊர்லேருந்து வந்திருந்தாங்ஹ…அவங்யளைப் பார்த்ததும் நாம வெளையாடுவோமே டிங்கிலோனா அதுமாதிரி ,நானும் ஆட்சியும்  ஓடிப்பிடிச்சு விளையாடுறது ஞாபகத்துக்கு வந்துச்சு, ஒரே ஃப்ளாஷ் பேக்கா வந்துச்சா ஒரே ஓட்டமா ஓடிப்போய் ஒரே ’லபக் ’ஆட்சியை பிடிச்சுட்டேன்..
டேய் நீ இவ்வளவு நேரமா ஆட்சி ஆட்சின்னு சொன்னது உன்னோட ஆட்சியா…டேய் அது ஆட்சி இல்லடா அது ஆ.+..ச்..+.சி =ஆச்சி…
ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் பாக்கப்ப்டாதுண்னே….ஆட்சின்னும் எழுதலாம் ஆச்சின்னும் எழுதலாம் ரெண்டு ஒண்ணுதாண்ணே…
டேய் அரை வேக்காடு உனக்கு ஆச்சியும் ஆட்சியும் ஒண்னாடா…
ஐயோ யாராவது துணைக்கு வாஙகளேன் …ஒண்டியா இந்த மாங்கா மடையனைச் சாத்தமுடியாது…ஐயா !தாய்மார்களே அம்மா !தகப்பன்மார்களே…வாங்க வாங்க…

ரசித்த இடம்: ஹா ஹா ஹாஸ்யம்

 

தருமி: பிரிக்க முடியாதது என்னவோ?
ராசா: ஊழலும், காங்சிரசும்

தருமி: பிரிய கூடாதது?
ராசா: அன்னையும், தாத்தாவும்

தருமி: சேரக்கூடாதது?
ராசா: அன்னையும், அம்மாவும்

தருமி: சேர்ந்தே இருப்பது
ராசா: பணமும், அரசியல்வாதியும்


தருமி: சேராமல் இருப்பது
ராசா: காங்கிரசும், காந்தியமும்

தருமி: பார்க்கக்கூடாதது?
ராசா: தணிக்கைகுழு முடிவு

தருமி: பார்த்து ரசிப்பது
ராசா : மக்களின் வயிற்றெரிச்சல்

தருமி: சொல்லக்கூடாதது
ராசா : பத்திரிக்கையிடம் ரகசியம் 

தருமி: சொல்லக்கூடியது

ராசா : மக்களிடம் பொய்

தருமி: பதவியில் சிறந்தது
ராசா : மத்திய அமைச்சர்

தருமி: அமைச்சருக்கு அழகு
ராசா:  ஊழல் செய்வது

 தருமி: ஊழல் என்பது
ராசா:  அரசியலுக்கு மறுபெயர்
 
தருமி: அரசியலென்பது

ராசா : ஏமாற்றுவது

தருமி: ஏமாற்றுவதற்கு
ராசா: நான்

தருமி: ஏமாறுவதற்கு
ராசா: நீ

============================
ரசித்த இடம்: நாஞ்சில் எக்ஸ்பிரஸ்

எந்திரன் பாகம்-3 ல் மீண்டும் இணைகிறது சூப்பர் ஸ்டார், ஷங்கர் கூட்டணி.கதாநாயகி யார்? நடிகை மீனாவின் மகளா ? ஐஸ்வர்யா ராயின் மகளா??அதிருகிறது… கோடம்பாக்கம்…

“எனது உயிர் இத்தாலியில் தான் போக வேண்டும்- மனம் திறக்கிறார் சோனியா காந்தி- மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார் டி.ஆர்.பாலு” தமிழகத்தில் பரபரப்பு.

“அந்த அம்மாவுக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை, மக்கள் பாடம் புகட்டுவார்கள்…”திமுக பொதுக்கூட்டத்தில் குமுறும் வைகோ…

“நடிகர் விஜய கட்சிடன் கூட்டணி அமைக்க மாட்டேன், சாகும் வரை தனியாகவே நிற்பேன்…” மனம் திறக்கிறார் கேப்டன்.

“யாரும் நடுவராக கூப்பிடுவதில்லை…பேரக்குழந்தைகளுக்கு வீட்டில் “கெமிஸ்ட்ரி” கற்றுக்கொடுக்கிறேன்” கலா மாஸ்டர் குமுறல்…

“வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும்…??!!”- மனம் திறக்கிறார் நயன்தாரா

“சமீபத்தில் நல்ல தெலுங்கு படங்கள் எதுவும் வெளியாகவில்லை” தனது மார்க்கெட் டவுன் பற்றி மனம் திறக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.

“மு.க.அழகிரி அ.தி.மு.க(அழகிரி திராவிட முன்னேற்ற கழகம்) பெயரில் கட்சி ஆரம்பிக்ககூடாது, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வேன்” ஜெயலலிதா ஆவேசம்…

“எங்கள் கட்சி தனித்து அமைக்கும் ஆட்சி…பார்க்கத்தான் போறிங்க அந்த காட்சி… இதுக்கு ஆண்டவனே சாட்சி” மிரட்டுகிறார் விஜய டி.ராஜேந்தர்.

“முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து திமுக இளைஞரணி தலைவராக தொடர்வார்…வேறு யாருக்கும் தகுதி இல்லை” ஆற்காடு வீராசாமி பரபபரப்பு பேட்டி….

“பொள்ளாச்சி பேரன்- நான் போட்ட ரீமிக்ஸ் ஆட்டம்” – தனது புதிய படம் பற்றி கூறுகிறார் நடிகர் சத்யராஜ்.

 

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போட்ட பதிவு. இப்பவும் சரியாய் இருக்கு.

நம்ம மங்குனிக்கு ஒரு போஸ்ட் (அட லெட்டர்தாங்க) வந்துச்சு,

போஸ்ட்மேன்: சார் உங்க ஒருத்தருக்காக அஞ்சு கிலொமீட்டர் வரேன்

மங்குனி: யோவ் ஏன்யா இப்படி வேஸ்ட்டா அலையறே? பேசாம போஸ்ட் பண்ணிட வேண்டியதுதானே?

*****

சிரிப்பு போலீஸ்: என்னடா டெர்ரர் பாண்டி, ஜெராக்ஸ் எடுக்க போயிட்டு இவ்வளவு நேரம் கழிச்சி வர்ரே? ஜெராக்ஸ் எடுக்க கொடுத்த காச முறுக்கு வாங்கி தின்னுபுட்டியா?

டெர்ரர் பாண்டியன்: பின்ன, நீ பாட்டுக்கு 10 பக்கத்த கொடுத்துட்டே, ஜெராக்ஸ்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் வந்திருக்கான்னு எல்லாத்தையும் படிச்சி  செக் பண்ணி பார்க்க வேணாமா?

*****

நம்ம இம்சை பாபு இல்ல, அவரு ஒரு பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பண்ணாரு,

அதுக்கு அந்த பொண்ணு, எனக்கு உங்களவிட ஒரு வயசு ஜாஸ்திங்க…

இம்சை அரசன் பாபு: சரி, அப்போ அடுத்த வருசம் வர்ரேன்….!

*****

சிரிப்பு போலீஸ்: ஏன்டா நரி.. ஏன் கண்ணாடிக்கு முன்னாடி இப்படி கண்ண மூடிக்கிட்டு ரொம்ப நேரமா நிக்கிறே? ஏதாவது புதுசா யோகா பண்ணி திருந்தி வாழ முயற்சி பண்றியா?

நரி: அட போ மச்சி… அதுலாம் ஒண்ணுமில்ல…. நான் தூங்கும் போது எப்படி இருப்பேன்னு பாக்க ட்ரை பண்றேன் மச்சி, நீயும் வேணா ட்ரை பண்ணி பாரேன்…..!

*****

டெர்ரர் பாண்டியன்: ஏன் எல்லாரும் ஓடிக்கிட்டு இருக்காங்க…?

மங்குனி: இது ஓட்டப்பந்தயம், ஜெயிக்கிறவருக்கு கப்பு கொடுப்பாங்க…!

டெர்ரர்: அப்போ ஏன் மத்தவங்க ஓடுறாங்க…?

மங்குனி: ??????!!!!!!! %&^%^%$%

*****
மங்குனி : ஏண்டா டெரரை போட்டு இந்த அடி அடிக்கிற?
சிரிப்பு போலீஸ்: நம்ம புரோக்கர் கூடஅக்ரிமென்ட் போடுறதுக்கு பத்திர பேப்பர் வாங்கிட்டு வாடான்னா வெறுங்கைய வீசிட்டு வந்து நிக்கிறான். ஏன்னு கேட்டா பத்திர பேப்பர் பத்திரமா இருக்கட்டும்னு பேங்க் லாக்கர்ல வச்சிட்டேன்னு சொல்றான்.
டெரர் : நான் சரியாதான செஞ்சேன். எதுக்கு என்னை அடிக்கிறான். !#@@@@

*****

நம்ம நரி ஒரு இண்டர்வியூவுக்கு போயிருந்தான் (வேறெதுக்கு… வேலைக்குத்தான்…!). அங்க துரதிர்ஷ்டவசமா சிரிப்பு போலீசுதான் டேமேஜரு…!

சிரிப்பு போலீசு: இப்போ ஒரு கேள்வி கேப்பேன், கரெக்டா பதில் சொல்லனும்!

நரி: கேளுங்க சார், அதுக்குத்தானே வந்திருக்கேன்!

சிரிப்பு போலீசு: நான் உங்களுக்கு மொதல்ல ரெண்டு பெருச்சாளி, அப்புறம் ரெண்டு பெருச்சாளி, அப்புறம் ரெண்டு பெருச்சாளி தந்தா, இப்போ உங்ககிட்ட எத்தன பெருச்சாளி இருக்கும்…!

நரி: ம்ம்ம்…. ஏழு சார்…!

சிரிப்பு போலீசு: தம்பி அவசரப்படாம யோசிச்சு பதில் சொல்லனும், நான் உங்களுக்கு மொதல்ல….. ரெண்டு பெருச்சாளி…….., அப்புறம் ரெண்டு பெருச்சாளி……….., அப்புறம் ரெண்டு பெருச்சாளி….. தந்தா, இப்போ……….. உங்ககிட்ட எத்தன பெருச்சாளி இருக்கும்…!

நரி: இப்பவும் ஏழு தான் சார்…..!

சிரிப்பு போலீசு: (என்ன எழவுடா இது…. ஒண்ணு ரெண்டு கூட எண்ணத்தெரியாம காலங்காத்தால வந்து நம்ம உயிரெடுக்கிறானுக…!), அது எப்படி தம்பி ஏழு வரும்….?

நரி: ஏன்னா என்கிட்ட ஏற்கனவே ஒரு பெருச்சாளி இருக்கே…!

சிரிப்பு போலீசு: %^#&& ^&^%%^$%

*****
கேப்டன்… வேணாம்…. விட்ருங்க…. !
ரசித்த இடம்: http://shilppakumar.blogspot.com/

 

நம்ம போலிசுக்கு எப்பவுமே தான் ஒரு டேமேஜர் அப்படீங்கிற கர்வம் அதிகம்..  இவருக்கு மட்டும் இல்ல! அடுத்தவன் உழைப்பில் குளிர்காயும் இவரைப்போல பலபேரு இப்பிடித்தான்! என்னதான் வேலை செய்யுறவன் முன்னாடி கெத்தா திரிஞ்சாலும் அவரும் இங்க்ரிமென்டுக்கும் பிரமோசனுக்கும் அவரு முதலாளி கால்ல விழுகிறது பல பேருக்கு தெரியாமலே போயிருது! அவரின் இந்த முகமூடிய கிழிக்கும் பொருட்டு சமீபத்தில் நம்ம போலிஸ் அவரின் முதலாளி கால்ல விழுந்து சம்பள உயர்வுக்கு கெஞ்சியதையும் அவரின் முதலாளி அவரு மூஞ்சில காறி துப்பி விரட்டி அடிச்ச உரையாடலை நமது கும்மியின் உளவுப்பிரிவு பதிவு செய்தது! உலக பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக அந்த உரையாடலின் தொகுப்பு உங்களுக்காக தரப்படுகிறது! படித்துவிட்டு நீங்களும் காறி துப்பிரவேண்டாம்.. பிளீஸ் சொன்னா கேளுங்க.. காறி துப்பிராதிங்க!

சிரிப்பு போலிஸ்       : பாஸ் எனக்கு நீங்க கூட்டித்தரனும்…..அதாவது சம்பளத்த……(எதா இருந்தாலும் ஓக்கேதான்.. ஹி..ஹி)

அவரின் முதலாளி   : நீ இங்க ஒரு நாள் கூட வேலையே செய்யல நான் எப்படி உனக்கு சம்பளம் தர முடியும்

சிரிப்பு  போலிஸ்       : என்னது… நான் ஒரு நாள் கூட வேலையே செய்யலையா…? (உண்மை தெரிஞ்சிருச்சா?)

அவரின் முதலாளி  : ஒரு வருஷத்துக்கு எத்தன நாள்…?

சிரிப்பு  போலிஸ்       : ஏன் உங்களுக்கு தெரியாதா? 365 நாளு…. நாலு வருஷத்துக்கு ஒரு வாட்டி 366 நாளு…

அவரின் முதலாளி  : இதெல்லாம் வக்கனையா சொல்லு….ஒரு நாளுக்கு எத்தன மணி நேரம் ?

சிரிப்பு  போலிஸ்       : 24 மணி நேரம் ( சரிதானே?)

அவரின் முதலாளி  : ஒரு நாளுக்கு எவ்வளவு மணி நேரம் வேலை செய்வே….

சிரிப்பு  போலிஸ்       : (நான் ஏன் செய்யணும்?) காலையில 10 மணியில இருந்து சாய்ந்திரம் 6 மணி வரைக்கும்… அதாவது 8 மணி நேரம் வேலை செய்றேன்….

அவரின் முதலாளி  : அதாவது ஒரு நாளைக்கு மூனுல ஒரு பங்கு ( 8/24=1/3) வேலை செய்யுற…

சிரிப்பு  போலிஸ்       : ஆமா… (நம்பிட்டானோ?)

அவரின் முதலாளி  : சரி…. அப்போ ஒரு வருஷத்துக்கு 366 நாளுல மூனுல ஒரு பங்கு எவ்வளவு …?

சிரிப்பு  போலிஸ்       : (கணக்கு கேட்டே கொல்றானே?) 122 நாளு… ( 1/3 * 366 =122)

அவரின் முதலாளி  : சனி, ஞாயிறுக்கிழமை வேலைக்கு வரியா…?

சிரிப்பு  போலிஸ்       : இல்ல… (எனக்கு என்ன கெரகமா? அதான் தொழிலாளி பசங்க இருக்காங்களே?)

அவரின் முதலாளி   : ஒரு வருஷத்துக்கு எத்தனை  சனி, ஞாயிறு வருது…?

சிரிப்பு  போலிஸ்        : 52 சனி கிழம, 52 ஞாயிறு கிழம… மோத்தம் 104 நாள் வருது.. (அவ்வவ்.. சம்பளம் கேட்டது தப்பா?)

அவரின் முதலாளி   : அப்போ 122 நாளுல…. 104 நாள் கழிச்சிடு…

சிரிப்பு  போலிஸ்       : 18 நாள் வருது…. (சரியாத்தானே சொல்றேன்?)

அவரின் முதலாளி  : ஒரு வருஷத்துக்கு எத்தன நாள் லீவ் தராங்க…

சிரிப்பு  போலிஸ்       : ரெண்டு வாரம்…. 14 நாள் (பாவம் அவரே கொன்புயீஸ் ஆயிட்டாரு போல?)

அவரின் முதலாளி  : சரி… 18 நாளுல…. 14 நாள் கழிச்சிக்கோ… எவ்வளவு வருது…?

சிரிப்பு  போலிஸ்       : 4 நாள்…. (முடியல…ஸ்..ஸ்..)

அவரின் முதலாளி   : சுதந்திர தினம், குடியரசு தினம் வேலை செய்யுரியா….

சிரிப்பு  போலிஸ்       : இல்ல… (வேலை நாள்லே செய்யுறதில்ல.. இதுல லீவு நாள்ல..?)

அவரின் முதலாளி  : 4 நாள… 2 நாள் கழிச்சிக்கோ

சிரிப்பு  போலிஸ்       : 2 நாள் வருது… ( நல்லா சொல்றாருயா டீட்டைலு)

அவரின் முதலாளி  : தீபாவளி, பொங்கல் அன்னைக்கு வேலை செய்யுரியா….

சிரிப்பு  போலிஸ்       : இல்ல…. ( அன்னிக்குதான்யா பல ஓசி சாப்பாடு கெடைக்கும் என் வென்று!)

அவரின் முதலாளி  : இப்போ… அந்த 2 நாளையும் கழிச்சிக்கோ

சிரிப்பு  போலிஸ்       : கழிச்சாச்சு.. கழிச்சாச்சு….. (எத்தன?)
அவரின் முதலாளி   : இப்போ… எத்தன நாளு இருக்கு…

சிரிப்பு  போலிஸ்        : எல்லா நாளும் கழிஞ்சிடுச்சு…
அவரின் முதலாளி    : இப்போ சொல்லு நான் எதுக்கு உனக்கு சம்பளம் தரனும்…

சிரிப்பு  போலிஸ்       : ஆ…..ஆ….

அவரின் முதலாளி   : இதுக்கே ஆன்னா.. எப்பிடி இன்னும் இருக்கு….

சிரிப்பு  போலிஸ்        : இன்னுமா?

அவரின் முதலாளி    : ஆமா… இதுல பாதிநாளு அவன் வர்றான் இவன் வர்றான்னு பல இடத்துக்கு ஓசி சாப்பாட்டுக்கு போயிற.அந்த கணக்குல பார்த்தா கூட ரெண்டுநாள் வேலை பார்க்கணும்! உனக்கு எப்பிடி வசதி? சம்பளம் கூட வேணுமா?

சிரிப்பு  போலிஸ்       : என்னைய மன்னிச்சிருங்க பாஸ்.. இனிமே எப்பிடி வேலை பார்க்கனும்னு வைகை.. டெரர் மாதிரி உள்ள தொழிலாளி பசங்கள்ட்ட இருந்து அவங்க கால்ல விழுந்தாவது கத்துக்கிறேன்! என்னைய வேலைய விட்டு மட்டும் தூக்கிராதிங்கோகோகோ!!!

என்ன மக்களே.. இது ஒரு கதையல்ல.. போலிஸ் மாதிரி உள்ள டேமேஜர்களுக்கு ஒரு எச்சரிக்கை……!

ரசித்த இடம்: http://terrorkummi.blogspot.com/

 

( புதிதாக பள்ளியில் 6 -ஆம் வகுப்பில் சேர வரும் மாணவியிடம், தனியார் பள்ளி நடத்தும் இண்டர்வியூ)
ஆசிரியை(கணக்கு):உன் அம்மா ஐந்து சாக்லெட்  வாங்கி   
                                            வருகிறார்.அதில்  ஒன்றை தம்பிக்கு கொடுத்தால்   
                                            உனக்கு என்ன வரும்?
மாணவி: கோபம் வரும்

ஆசிரியை: அட…இரண்டு மாங்காய் இருக்கு.ஒரு மாங்காய் சாப்பிட்ட      
                         பின்னால் மீதி என்ன் இருக்கும்
மாணவி: ஒரு கொட்டை, ஒரு மாங்காய்


ஆசிரியை(ஆங்கிலம்):இப்படியெல்லாம், பதில் சொல்லக்கூடாது…சரி எ,பி,சி,டி எத்தனை எழுத்து?

மாணவி:நாலு…

ஆசிரியை: சனியனே… மொத்தம் எவ்வளவு?

மாணவி: “மொத்தம்” நாலு தான்…

ஆசிரியை:முட்டாள்…

மாணவி:அதுவும் நாலு எழுத்து தான்.
ஆசிரியை(அறிவியல்):ஊர்வனவுக்கு ஒரு உதாரணம் கொடு

மாணவி:பல்லி

ஆசிரியை:இன்னொரு உதாரணம் கொடு

மாணவி இன்னொரு பல்லி
ஆசிரியை:(தமிழ்):நான் அழகா இருக்கேன்.. எந்த காலம்?

மாணவி: இறந்தகாலம்
ஆசிரியை:(வர்லாறு):நமக்கு கிழக்கே கடல்,தெற்கே கடல்,வடக்கு என்ன இருக்கு?

மாணவி:(திரும்பி பார்த்து) பள்ளிக்கூடத்து கதவு டீச்சர்…

(அனைத்து ஆசிரியர்களும் வடக்கு நோக்கி ஓடுகிறார்கள்…)

எல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா?  பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்ள வேணும் தானே !? இவைகள் ஒன்றும் ” பீலா ” இல்லை. 

மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே. பீர் அருந்துவது உடலுக்கு நல்லது. கவனிக்கவும்- அருந்துவது. வயிறு முட்ட குடித்து விட்டு வண்டியை  மெயின் ரோடில் ட்ராபிக் மெரிடியனில் முட்டி விட்டு மல்லாந்து கிடக்க அல்ல.


1 . பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. உண்மை 
பொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்.
2 .  பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.
1982-1996 இந்த வருட இடை வெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர்அருந்தும்
பழக்கமுள்ளவர்களுக்கு 20 – 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.
3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.
பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L – High Density Lipoprotein ) தருகிறது.எனவே இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting)
4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber) 

இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார்60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.
5 . பீர் வைட்டமின் செறிந்தது. ( பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு) 
பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன.மக்னீசியம்,செலினியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின்,
போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.
6 . பீர் மாரடைப்பை தடுகிறது.
2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.
காரணம், அளவான மது இரத்தத்தின் அடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள மூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள்அதிகரிக்கிறது.
 7. பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது. 
2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு – Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40%குறைவாக உள்ளது .
 8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது. 
மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களைஅகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் “வளர் சிதை மாற்றம் ” காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன  This is from Beer Net Publication, April 2001 Biological Institute.
 9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia) 
லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில்இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives)  செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.
10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது. 
நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதைதடுக்கிறதாம்.
****************************************
என்ன, ரொம்ப குஷியா ?? 
சரி சரி அளவோட இருந்தா தான் இதெல்லாம்.
இல்லன்னா ஆசுபத்திரி கேசுதான்.
ரசித்த இடம்: சட்னி-சாம்பார்

’செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக்  குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம்.

ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல!

ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், ’செவ்வடை அந்தஸ்து எந்த வடைக்கு?’ என்கிற கேள்வி மட்டும் பல டீக்கடைகளிலும், ‘பார்’களிலும்  கேட்கப்பட்டுவந்த கேள்விதான்.

‘என்று தணியும் இந்த தயிர்வடை தாகம்? என்று மடியும் எங்கள் கீரைவடை மோகம்?’ என்று புரட்சி மகாகவி பாரதியாரையே புலம்பவைத்த மேட்டர் அல்லவா!

’செவ்வடையான மசால் வடை’க்குத்தான் எவ்வளவு எதிரிகள், எவ்வளவு அரசியல் உள்குத்துகள்?

இது பற்றிய நமது நிருபரின் கைப்பக்குவக் கிளறல்!

*************************

பாரெங்கும் ஆயிரக் கணக்கான வடைகள் இருந்தாலும், ஏன் இந்தியாவிலேயே பலாப்பழ வடையிலிருந்து, பம்பளிமாஸ் வடை வரை இருந்தாலும், தென்னகத்தில் புழங்கும், குறிப்பாகச் சென்னையில் மணக்கும் மசால் வடையே செவ்வடை அந்தஸ்துக்கு உரியது என்று இந்திய அரசும் அறிவித்திருக்கிறது. இதன் பின்னணி அரசியல் என்ன? ஆலூ வடை, தயிர் வடை, கீரை வடை, காலிஃப்ளவர் வடை, வெங்காய வடை போன்ற இந்திய வடைகளுக்குள்ளும் இந்த செவ்வடை ஸ்டேடசுக்குக் கடும் போட்டி. மற்ற எல்லா வடைகளையும் ஊசிப்போனவை, உப்பு போதவில்லை, ‘கப்’படிக்கிறது, காரம் போதவில்லை என்றெல்லாம் சொல்லித் துப்பி மசால் வடை மட்டுமே செவ்வடை ஏன்று வாய் கொள்ளாமல் எல்லோரையும் சொல்லவைத்தது எப்படி?

ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து வெளிபிட்ட குறிப்பொன்றில், ‘எவ்வடை செவ்வடை?’ என்பதையெல்லாம் இனிமேல் தீர்மானிக்க ஊசவடோ என்கிற ஜப்பானியர் ஒருவடை -மன்னிக்கவும், ஒருவரை- நியமித்திருக்கிறது என்பது தெரியவந்தது.

என்னடா இது மசால்வடைக்கு வந்த சோதனை, ஜப்பானுக்கும் மசால் வடைக்கும் என்னய்யா சம்பந்தம் என்றெல்லாம் கேட்டால் நாம் வடைத்துரோகி ஆகி விடுவோம் என்று பயமாகவும் இருக்கிறது. இருந்தாலும் அவரையே ஒரு முறை துணிந்து இதுபற்றிக் கேட்டுவிடுவோம் என்று அவரைத் தொலைபேசினேன்.

சம்பிரதாயமாக முதலில் ஏழெட்டு தடவை குனிந்து நிமிர்ந்து ’யூகோசோ இரஷாய் மாஷிடா’ என்று நாங்கள் வணக்கங்கள் சொல்லிக்கொண்ட பிறகு நான் முதுகுவலியுடன் என் சந்தேகத்தைக் கேட்டேன்:

”அறுவடைவீடுகொண்ட திருமுருகா’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு முருகன் ஆறு வடைகளை ஒரே நேரத்தில் எப்படி அபேஸ் செய்தார் என்கிற பிரமிப்பு வரும். நக்கீரரும் ஆறு வடைகளைப் பற்றித்தானே பொதுவில் புகழ்ந்திருக்கிறார், இதிலே மசால் வடைக்கு மட்டும் அப்படி என்ன தனி மகிமையை நீங்கள் கண்டீர்கள்? செவ்வடையாக மசால்வடையை மட்டும் எப்படி அங்கீகரித்தீர்கள்?”

ஊசவடோ ஒரு முறை ஜப்பானிய மொழியில் கனைத்துக் கொண்டார்.

”திருமுருகாற்றுவடையில் ஆறுவடைகளைப் பற்றிச் சொல்லி இருப்பதாகச் சொல்வதே முதலில் தவறு. ‘ஆறு’ என்றால் வழி; ‘ஆற்றுப்படுத்துதல்’ என்றால் ‘வழிகாட்டுதல்’. ‘ஆற்றுவடை’ என்பது தமிழ்க் கவிதை வகைகளில் ஒன்று. ஒரு வள்ளலிடம் பரிசுகள் பல பெற்றுத் தன் வறுமை அழிந்த ஒருவன், வறுமையில் வாடும் இன்னொருவனை அந்த வள்ளல் இருக்கும் இடம், போகும் வழி, வள்ளலின் ஊர், பெயர், அவன் குணங்கள் யாவற்றையும் சொல்லி, “அங்கே போய் உன் வறுமையை நீக்கிக்கொள், பெரிய விருந்து இல்லாவிட்டாலும், வடையாவது கிடைக்கும்” என்று ஆற்றுப்படுத்துவது இப்பாடல் வகையின் இலக்கணம். திருமுருகாற்றுவடை என்ற நூலில் முருகன் இருக்கும் ஆறு தலங்களின் பெருமைகளைக் கூறி ஆத்மவடைக்கும் வழிகாட்டுகிறார் நூலாசிரியர் நக்கீரர்.

’ஆற்றுவடையில் சொல்லப்பட்ட ஆறு வீடுகள்’ என்ற வழக்கு மாறி, பின்பு படைவீடு, ஆறுபடை வீடு , ஆறு வடை வீடு என்று பேச்சு வழக்கிலும், நூல்களிலும் வரத் தொடங்கின என்பது தணிகைமணி செங்கல்வராய பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்து. அருணகிரிநாதர் கூட ‘ஆறுபடை வீடு’ அல்லது ‘ஆறுவடை வீடு’ என்கிற சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல், ‘ஆறு திருப்பதி’ ‘அறுபத நிலை’ ‘ஆறு நிலை’ போன்ற சொற்றொடர்களையே பயன்படுத்தினார். குமரகுருபரர் கூட ஆறு வடை வீடு என்று சொல்லவில்லை. ‘ஆறு திருப்பதி கண்டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே’ என்கிறது கந்தர் கலிவெண்பா. குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். அதனால்… ஆறு படை வீடுகள் என்ற தொடர் கடந்த 400-ஆண்டுகளில் வந்த ஒரு சொற்றொடர் என்பது தெளிவாகிறது. ஆறுவடை என்கிற பதமே தற்காலப் புழக்கத்தில் இருக்கிறது”

இப்படிப் போட்டு சாத்து சாத்தென்று சுத்தத் தமிழில் சாத்தினால் நான் என்ன செய்வேன்? ’சயோனாரா’ கூடச் சொல்லாமல் லைனை உடனே கட் செய்துவிட்டேன்.

இந்த ஓட்டை வடை மேட்டர் இவ்வளவு சீரியஸான மேட்டர் என்பது தெரியாததால், வேறு யாரைக் கேட்டுத் தெளியலாம் என்று நான் யோசித்தேன்.

சுள்ளிக்காட்டுப் புலவர் ஒருவரை செல்போனில் பிடித்தேன்.

’எனக்கு டை பிடிக்கும், அடை பிடிக்கும், சொல்லடை பிடிக்கும், துடியிடை பிடிக்கும், நன்னடை பிடிக்கும், ஏன் எனக்கு செவ்வடையான மசால்வடையும் மிகப் பிடிக்கும்’

ஆஹா, யாப்பு, காப்பு, ஆப்பு என்று செமத்தியாக ஏதோ மாட்டிக்கொண்டேன் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

’என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக மசால்வடை செய்யுமாறே’ என்று திருமூலரே திருமந்திரத்தில் என் புகழைப் பற்றிச் சொல்லி விட்டார்’ என்று சொந்த சரக்கைப் பற்றி ஆரம்பித்தார் சுள்ளிக்காட்டார்.

திருமந்திரத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், அவர் அப்படியா சொன்னார் என்று நான் திரு திருவென்று விழிக்கையில் அவர் தொடர்ந்தார்:

”மசால்வடையை மட்டம் தட்டிப்பேசுவது ஆரிய, பார்ப்பன சூழ்ச்சி. அது பலிக்காமல் போனதால் இப்போது மசால்வடையும் கைபர் கணவாய் வழியாக இங்கே வந்ததுதான் என்று ‘சோ’ போன்றவர்கள் சொல்லி வருவது கண்டனத்திற்குரியது. மாஷாபூபம் என்கிற மொத்தை வடையைத்தான் சவுண்டி பிராமணர்கள் காலம் காலமாகச் சாப்பிட்டு ஊரையே நாறடித்து வந்தார்கள் என்பதற்கு சிலப்பதிகாரத்திலேயே குறிப்பு இருக்கிறது.

’நீலவிதானத்து நித்திலப் பூப்பந்தர்க்கீழ்
வான் ஊர் மதியம் சகடனைய வானத்துச்
சாலியொரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மசால்வடை காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பென்னை’
என்று சிலப்பதிகார நூல் கண்ணகி_கோவலன் திருமணச் சடங்கைக் கூறுகிறது. அங்கே நெருப்பிலே இடப்பட்டது மசால்வடையே அன்றித் தயிர் வடையல்ல, சாம்பார் வடையுமல்ல. சாம்பாரையோ, தயிரையோ நெருப்பிலே போட்டால் அது அணைந்து போய் துர்சகுனமாகும் என்பது பகுத்தறிவுத் தமிழருக்குத் தெரியாததல்ல. மசால்வடை நின்று திகுதிகுவென்று எரியும், கமகமவென்று மணக்கும். எலிப்பொறியில் மசால்வடை மணத்துக்காக எலி சிக்குவது போல் என் அன்பினால், காதலினால் உன்னைக் காலம் காலமாகச் சிறை வைக்கப் போகிறேன் என்று மணமகன் சொல்வதாக இங்கே அது குறிப்பினால் உணர்த்தப்படுகிறது.

இங்கே இன்னொரு கருத்தையும் நான் சொல்லிவிடக் கடமைப்பட்டிருப்பதை நினைவு கூர்கிறேன். ‘மாமுது பார்ப்பான்’ என்பது மகா கெழபோல்ட்டான அய்யரைக் குறிக்கும். ஏன் அழகான பிராமண இளைஞனை அங்கே சடங்கு செய்யச் சொல்லாமல் வயதான முதியவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள், அவன் மேல் ஏன் பெண் வீட்டாருக்கு நம்பிக்கை வரவில்லை என்கிற முக்கியமான விஷயத்தை நான் உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இதற்கும் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா?’வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

‘மசால்வடை காட்டிட’ என்கிற வரிகளை உற்றுக் கவனியுங்கள். தீப ஆராதனை கூட அந்தக் காலத்தில் இருந்தது கிடையாது. கையில் மசால்வடையை வைத்துக்கொண்டு தீப ஆராதனை போல் மேலும் கீழும் ஆட்டி ஆட்டி, நெருப்பையும் சுற்றிச் சுற்றி வருவதே பழந்தமிழர் வழக்கம். பிறகு தான் அது தாலியாகப் பெண்ணின் கழுத்தில் ஏறும். இதை வடைத்தாலி என்றும் கூறுவர். சமீபத்திய பெரும் இதிகாசப் படமொன்றில் நான் இந்த ஐடியாவைச் சொல்லி, பெரிய இயக்குனர் ஒருவரும் இதை ஒரு பாடல் காட்சியில் சேர்த்திருக்கிறார். உசிரே போனாலும் இந்த மாதிரி உதிரிக் காட்சிகளின் உள்குத்தை நீங்கள் ரசிக்காமல் இருக்கக்கூடாதென்பதை இங்கே சொல்லிக் கொல்வதும் என் கடமை. எடிட்டிங்கில் இது கட் பண்ணியிருக்கப்படலாம்., அமிதாபுக்கெல்லாம் இது புரியாது.

சொல்லப்போனால் தங்கத்தில் தாலி கட்டுகின்ற சடங்கு கூட சிலப்பதிகாரத் தமிழரிடையே இருந்தது கிடையாது. தங்கத்தின் விலை கன்னாபின்னாவென்று பிற்காலத்தில் எகிறப்போகிறது, ஒரு கிராம் தங்கம் வாங்கக்கூடக் காசில்லாமல் தமிழன் சிங்கி அடிக்கப் போகிறான் என்பது சிலப்பதிகாரத்திலேயே உட்கருத்தாய்ப் பொதிந்திருக்கிறது. பிற்காலத் தமிழருக்கும் பொருந்தும் வகையில் மஞ்சள் மசால்வடையில் மஞ்சள் நூலைக்கட்டி அதை மணாளன் மங்கையின் கழுத்தில் கட்டி, மங்கையும் அதையே மணாளனும் முதல் மசால் வடையுமே தன் பாக்கியம் என்றெடுத்துக் கண்ணில் ஒத்திக்கொள்கிற வழக்கம், ஒரு கடி கடிக்கிற வழக்கம்தான் (மணாளனை அல்ல, மசால் வடையை) தமிழ்ப் பெண்களின் வழக்கம். அதை விடுத்துத் தமிழ்ப் பெண்களின் கற்புக்கே மாசு கற்பிக்கும் வழியில் வடநாட்டுப் பெண்கள் இங்கே வந்து மசால் வடையாவது மண்ணாங்கட்டியாவது, கல்யாணத்திற்கு முன்பே மசால்வடையை ஒரு வெட்டு வெட்டுவதில் தப்பில்லை என்று சொல்வது விந்தையிலும் விந்தை.”

சார், சார்! போதும், போதும். நீங்க எங்கேயோ கோவில் கட்டற ரேஞ்சுக்குப் போயிட்டீங்க. அப்படியே நிப்பாட்டிக்கறது தான் உங்களுக்கும் எனக்கும் நல்லது”

வெளிநாட்டுக் கிழாரும் சொல்லிவிட்டார், உள்நாட்டுத் தமிழ்ப் புலவரும் சொல்லிவிட்டார், இன்னும் ஒரே ஒரு அரசியல்வியாதியைவாவது கேட்டு விடலாம் என்று தெருமாவைப் பிடித்தேன் போனில்.

**********************

”நாம் அன்றாடம் கலந்தடிக்கும் சாம்பார் வடைக்கும் தயிர் வடைக்கும் கூட செவ்வடை அந்தஸ்து கிடையாதா, தெருமா? இது அடுக்குமா?”

”கிடையவே கிடையாது. சிங்களவனின் சதியால் மல்லுங், சம்போல், சொதி போன்ற சிங்கள ஐட்டங்களுக்கும் செவ்வடை அந்தஸ்து கொடுக்கவேண்டுமென்று அலைகிறது ஒரு ராஜபக்‌ஷய பட்டாளம். இந்த சதிக்கு ’ரா’ போன்ற நம் உளவு நிறுவனங்களும் துணை போவதே நம் கேவலத்தை, அவலத்தை, வெட்கக்கேட்டை சுட்டிக் காட்டுகிறது. நீண்ட தூர இந்திய ரயில் பயணங்களில் இந்த ஐட்டங்களை செவ்வடை என்று பொய் சொல்லி விற்பதற்கான ஒரு ஒப்பந்தம் இலங்கையுடன் போடப்பட்டிருக்கிறதென்பது எனக்கும் தெரியும். இரயில்களில் செவ்வடை தவிர வேறு எதையாவது யாராவது விற்க முனைந்தால் சும்மா இருக்காது எங்கள் ’செவ்வடை காப்புப் படை’. தண்டவாளத்தைப் பெயர்த்தெடுத்தாவது நாங்கள் இந்த சதியை முறியடிப்போம். ஆனால் அதற்கு முன்னாலேயே எங்கேயாவது துருப்பிடித்த தண்டவாளங்கள் உடைந்து நொறுங்கி விழுந்தால் அதற்கும் எங்கள் செவ்வடை காப்புப் படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நான் இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். என் தம்பி கோமானின் கருத்தும் இதேதான் என்று போட்டுக் கொள்ளுங்கள்”

இவ்வளவு பேரைக்கேட்டுவிட்டு சினிமாக்காரர்கள் யாரையும் கருத்து கேட்காமல் விட்டால் எப்படி?

”வெளிநாட்டுப் படப்பிடிப்பிலே நான் இருந்தாலும் உள்நாட்டு செவ்வடை விடயங்கள் எனக்குத் தெரியாமல் போகலாமென்று மனப்பால் குடித்தவர்கள் சற்றே மனங்குமுறிக் கமற நேரிடலாம். ஏனென்றால் கருப்புச் சட்டை போட்டாலும் நானும் செவ்வடைக்காரனே என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த லாபமும் இல்லையென்றாலும் அதைச் சொல்லாமல் விட்டுவிட்டால் பொருட்குற்றம் வந்துவிடுமோ என்று நான் பயப்படுவதாக யார் வேண்டுமானாலும் ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொள்ளட்டும். பரமக்குடி தமிழ்ப் பாட்டி சுட்ட வடையும் மசால்வடையேயன்றி மற்றேதுமில்லை. இது பற்றித் தென்னாப்பிரிக்காவிலே படமெடுக்க நான் ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்துக்கொண்டு கிரேக்க நாட்டு ஃபைனான்சுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதிலே நான் செவ்வடை மசால்வடையாகவே நடிப்பதாக வரும் செய்திகளின் உண்மைத்தொனியை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் ஊகத்திற்கே விடலாமா என்று நான் யோசிக்கிறேன்”

இத்தனை பிரபலங்களைப் பேட்டி கண்டபின், சு. சுவாமியைப் பேட்டி காணாவிட்டால் எப்படி இதெல்லாம் பூரணமாகும் என்று நான் யோசித்துக்கொண்டே இருக்கும்போது என் செல்பேசி ஒலித்தது.

“இந்த மசால் வடை – செவ்வடை மேட்டர்ல நீங்க யார் யாரைப் பேட்டி கண்டேள், அவா என்னென்ன சொன்னாள்ங்கறதெல்லாம் நேக்கு எஃப்பிஐ ரிப்போர்ட்ஸ் கொடுத்துட்டா. இன் ஃபேக்ட் நான் இப்ப சான் ஃப்ரான்சிஸ்கோவில தான் இருக்கேன். நீங்க என்னைக் கேட்கலைன்னாலும் நான் சொல்றேன் எழுதிக்குங்கோ. ஜூனியர் கக்கன்ஜி தெரியுமில்லியா, அவரும் இப்ப என் கூடத்தான் வந்திருக்கார். அவர் தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர். அம்மாவும் ஓகேன்னு கொடநாட்லேர்ந்து சொல்லிட்டா.

இந்த செவ்வடை மேட்டர்லாம் சுத்த ஹம்பக். சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து பண்ற அட்டகாசம். ஒபாமாவே என்னை போன்ல கூப்பிட்டுச் சொல்லிட்டார். நான் வோர்ல்ட் கோர்ட்ல இது பத்திக் கம்ப்ளெய்ன் பண்ணி இருக்கேன். ‘தி ஹேக்’ல ஆர்க்யூ பண்ண டேட்ஸ் கொடுத்துட்டா. முப்பது பில்லியன் நஷ்ட ஈடு கேட்டு போபால் விக்டிம்சுக்குத் தந்துடுவேன்.

செவ்வடையாவது, வெங்காய அடையாவது? எல்லாமே சுத்தப் பேத்தல். ஓட்டையே இல்லாத மசால் வடையிலே எப்படிப்பா தாலியை கோர்ப்பாளாம்?

இன் ஃபேக்ட் இந்த வடைக்கெல்லாம் ஆதிமூலமே அமெரிக்காள் சாப்டற பேகிள் (Bagel) தான். மாவுல ஓட்டை இல்லாட்டா பேகிள். ஓட்டை போட்டுட்டா அது டோநட் (doughnut). எங்க டோநட்டையும் சேப்பு டோநட்டுன்னு சொல்லுங்கோன்னு அமெரிக்காள் பிடிவாதம் புடிக்றாளா, என்ன? நம்மளோட இட்லி, தோசை, வடை எல்லாமே ரொம்ப ஹெவி வாயுப் பண்டம். இதையெல்லாம் ரெகுலரா சாப்டா, ராக்கெட் இல்லாமலேயே நாம் சந்திரனுக்குப் போய்டலாம்னு யாரோ தமிழ்நாட்ல தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்திருக்கா.

ஒரு ரகஸ்யம் சொல்றேன். சசிகலா கிட்டே மட்டும் சொல்லிடாதீங்கோ. டோநட்லேருந்து தான் வடையே வந்துது.

நான் திரும்ப வந்து ‘முருகன் டோநட் கடை’ன்னு ஆரம்பிக்கப் போறேன். அவஸ்யம் திறப்பு விழாவுக்கு வந்துடுங்கோ!”

எனக்கு வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது. நானே லைனை கட் பண்ணி விட்டேன்.

இவ்வடை தோற்கின் எவ்வடை ஜெயிக்கும்?!

ரசித்த இடம்: லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கொலைவெறியோடு வாராம்லேய் மக்கா

1 : சுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா…???
2 ; வீரியமுள்ள  விதை முளைக்காமல் அடங்காது…!!!
3 : பொற்கொல்லனுக்கு ராக்கெட் நுணுக்கம் தெரியாது…!!!
4 : மரணம் என்பது ரயில் பிரயாணம் மாதிரி, அவரவர் ஸ்டேசன் வந்தா இறங்கியே ஆகணும். மற்றவர்கள் அவரவர் ஸ்டேசன் நோக்கி தொடர்ந்து போயிகிட்டே இருக்கணும்…!!!
5 : அண்ணே என சொன்னால் உதடுகள் ஒட்டாது, தம்பி என்றால் உதடுகள் ஒட்டும்…!!! [[ம்ஹும் நாங்களும் சொல்லுவோம்ல]]
6 : அக்கா என்று சொன்னால் உதடு ஒட்டாது, தமக்கை என்று சொன்னால் உதடு ஒட்டுதே…!!! [[சரி சரி விடுங்க விடுங்க]]
7 : ஜன்னலை திறந்தாலும் காற்று வரும் [[சத்தியமா உள்குத்து இல்லை]]
8 : நான்கு செல்போனும், நான்கு பாக்கெட் சிகரெட்டும் கையில் இருந்தால்தான், அரபிகள் தங்களுக்குள் தங்களை மதிப்பார்கள். இது லேட்டஸ் டிரன்ட்….!!! [[போங்கடா]]
9 : ஃபிகரை நம்பாதே நம்பி குடைசாய்ந்து கதறாதே…!!!
10 : கடமை கண்ணியம் கட்டுபாடு என சொல்சிலம்பாடியவர்கள் எல்லாம் இப்போது மவுன விரதம்….!!!
11 : சொல்லால் அடிக்கும் சுந்தரி, செருப்பாலும் அடிப்பாள் ஜாக்குரதை…!!!
12 : பொண்டாட்டி பேச்சிக்கு மறு பேச்சு பேசாம இருக்குறவன் எல்லாம் சீக்கிரம் பணக்காரன் ஆகிவிடுரானே…..!!!????  ஒரு நண்பனின் ஆதங்கம்…!!
13 : ஆட்டை  கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில மனுஷனையே…..நோ நோ நோ நோ இப்போல்லாம் டைரக்டா மனுஷனையே கடிக்க ஆரம்பிச்சாச்சு…!!!
14 : அப்பா என்று கூப்பிடவே பத்துமுறையாவது ரிகர்சல் பார்க்கும் எனக்கு முன்பாக, என் எட்டு வயது மகள் சொல்கிறாள் தன் தோழியிடம் எங்க டாடிக்கு அறிவே இல்லையென…!!! [[உளறிட்டேனா]]
15 : நீ எத்தனை கோடி ரூவாயில் வாங்கினாலும் செருப்பு என்னைக்கும் காலில்தான், தலையில் வைக்க முடியாது…!!!
16 : எல்லையில் சீன ராணுவம் ரகசியமாக என்னெல்லாமோ செஞ்சிட்டு இருக்கு, நம்ம ராணுவ மந்திரி அண்டணி சேட்டன் மொட்டை மாடியில உக்காந்து வானத்தை பார்த்து இன்னமும் பேசிட்டு இருக்காராம், “என்கிட்டே அப்பிடி என்னதான் திறமை இருக்கு ராணுவ அமைச்சர் ஆகுறதுக்கு”ன்னு ம்ஹும் இவர் அதை கண்டுபிடிக்கும் முன் ஆட்சியும் முடிஞ்சிரும்…!!!
17 : ஒவ்வொரு குவாட்டர் துளியிலும் குடிமகனின் [[குடிப்பவன்]] பெயர் எழுதபட்டிருக்கிறது…!!!
18 : வேலி இருந்தா பாம்பும் இருக்கத்தான் செய்யும், எவ்வவோ நல்லவனா இருந்தாலும் அவனுக்குள்ளும் தீமை இருக்கத்தான் செய்யும்…!!!
19 : ஒரே சிகரெட்டை நான்குபேர் அடித்தால் அதற்க்கு பெயர் நட்பு, அதே சிகரெட்டை நான்கு பேர் ஜெயிலில் அடித்தால் அதன் பெயரென்ன..??
20 : மூன்றெழுத்தில் ஒரு கவிதை சொல்லு…???
“அம்மா” [[எப்பமோ விகடனிலோ, குமுதத்திலோ வாசிச்ச ஞாபகம்…!!!
டிஸ்கி : இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன…??? டவுட்டு…
ரசித்த இடம்: நாஞ்சில் மனோ


காலைல அவசரம் அவசரமாக  என் மகளை பள்ளிக்கு கூட்டி  செல்லும் அவசரத்தில் பைக்ல அவளை ஏற்றினேன் .முன்னாடி இருந்து கொண்டு

என் மகள் :அப்பா இந்த பாலம் ரொம்ப பெருசு இல்லையாப்பா என்றாள்
நான் :ஆமாம் கோவில்பட்டில   ரெண்டு பாலம் இருக்குன்னு சொன்னேன்
என் மகள் :ஆமாம் ரெண்டு பெரிய பாலம் நிறைய குட்டி பாலம் இருக்கு என்றாள்
நான் :இல்லையே குட்டி பாலமே இங்கே கிடையாது என்று சொன்னேன் …..
என் மனைவி :வண்டில இருந்துகிட்டு பேசாம அப்பாவும் ,மகளும் வாங்க என்று சத்தம் போட்டாள்(எலேய் உன் மண்டைல கொட்டினார்கள்ன்னு சொல்லு ன்னு கமெண்ட்ஸ் போடா கூடாது)
நானும் அமைதியா வண்டிய ஓட்டி  என்னோட ஆபீஸ் வந்துட்டோம் .
என் மகள் :அப்பா பாலம்ன  என்ன……….?(தொடர்ந்து விடாம கேள்வி கணைகள் என் மகள் ஆயிற்றே )
நான் :கீழ ட்ரைன்,ஆறு இப்படி போகும் நாம மேல போவோம் அப்படின்னு சொன்னேன்
என் மகள் :ரோடுல மேலே  ஏறி கீழ இறங்கனும் அப்படி தானே என்றாள் .(என்னை மாதிரி என் புள்ள ரொம்ப அறிவாளி டக்குன்னு பாயிண்டுக்கு  வந்துட்டாள் )
நான் :ஆமாம் என்றேன் …….
என் மகள் :நாம ஸ்கூல்க்கு  போகும் போது  மூணு குட்டி  பாலம் வரும் நான் கான்பிக்குறேன் பாருங்க என்றாள் ….
நான் :இல்லை மக்கா குட்டி பாலம் கிடையாது .என்றேன்
என் மனைவி :அவள் வேற எதையோ சொல்லுறா உங்களுக்கு தான் விளங்க மாட்டுது ன்னு சொன்னால்
நான் அதை பற்றி மறந்துவிட்டேன் அவளை பள்ளிக்கு அழைத்து சென்றேன் …அவள் போகும் வழியில்
என் மகள் :அப்பா இந்த இருக்கு பாரு மூணு பாலம் என்றாள் .
நான் :அவள் கண்பித்ததை பார்த்து தலை சுற்றியது எனக்கு  இது பாலம் இல்லை மக்கான்னு சொன்னேன்

என் மகள் :பைக் ஏறி தானே இறங்குது ….அது பெரிய பாலம் …..இது குட்டி பாலம் …நான் சொல்வது தான் சரி என்கிறாள்(என் தலைல லாரி யே ஏறி இறங்கினது மாதிரி ஒரு பீலிங் )

அப்படி அவள் என்னதாண்ட காண்பித்தாள்  என்று எல்லோரும் கேக்குறீங்களா ………?
SPEED BREAKER  மக்கா ….காலைலேயே ………ஆரம்பிச்சுட்டா இனி ஸ்கூல் விட்டு வந்து கேப்பா கரெக்ட் விடை சொல்லணும்
ரசித்த இடம்: இம்சை அரசன் பாபு

2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெற்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?

இப்படித்தான்…

தமிழ்

முதலில் “கடவுள் வாழ்த்து”
மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
சிங்களவனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி
தமிழின துரோகியே போற்றி போற்றிஅடுத்து மொழி வரலாறு.

தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.
தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.
20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன.  2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.
 கணிதம்.

திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக   பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.
1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது.  2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

புவியியல்

உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர்.  முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

 வரலாறு

தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது.  முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார்.  அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.
கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயகுமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது.  உதயகுமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.
கருணாநிதிக்கு மூன்று மகன்கள்.  ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.

தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன்.  அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார்.  21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.
பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்….

ரசித்த இடம்: சாம்பார் சட்னி

ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி ” டாக்டர்
அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது..” அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே ” யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, “தூ… தூ… இது எருமை சாணி..” அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. ” அட.. உங்களுக்கு ருசி தெரிய
ஆரம்பிச்சுருச்சி” ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி ” டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..” அப்படின்னாரு.. இப்ப
அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு
மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட..” அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு”
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே…!!

******************************

ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில்
விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து
[த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.

த.க.நி. ; ஜிம்மி…

ஜிம்மி ; லொள்.. லொள்..

த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]

த.க.நி. ; ஜாக்கி….

ஜாக்கி ; லொள்..லொள்..

த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியே
செய்கிறது ]

த.க.நி. ; மாதவ்..

மாதவ் சிங் ; லொள்..லொள்..

த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற
எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும்
புரியாது..!

*****************************************

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது
அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

************************************

நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.

எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..

லைசென்ஸா..? அப்படின்னா..?

அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..

ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )

அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?

*********************************

நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ்டைலாக
திருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார். இவருக்குதான் எல்லாவற்றையும் தானும்
செய்யவேண்டும் என்ற ஆவல் ஆயிற்றே.. தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக்
கொண்டார். வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார்..

ஓயே.. ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..?

********************************

நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்
கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்
சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.
அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து
கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே
திரும்பினார்..

நண்பர் கேட்டார்..” எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?’

சர்தார் சொன்னார்.. ” எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு…!

***************************************

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. ” மாமியாரின் அன்புப்
பரிசு..”

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்
வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே
இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்.. “போய்த் தொலை..
எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து
வச்சிருக்க..?” மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு..”
மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!

***********************************

ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். வழிகாட்டியிடம்
பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு
மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை
கொடுத்து ‘காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி
பேரை**சொல்லிட்டு போவோம்…!

ரசித்த இடம் : வால்பையன் 

 கேள்விகள்: கார்க்கிபாவா

1) பாஸ்போர்ட் சைசு ஃபோட்டோ ஏன் பாஸ்போர்ட்ட விட சின்ன சைசுல இருக்கு?

2) SAVE TIGERS என்னும் இந்திய அரசு ஏன் இலங்கையில் வாழ்ந்த புலிகளை அழித்தது?

3) வெளியே செல்லும்போது இந்திரா நூயி, ரிலையன்ஸ் என்றெல்லாம் சொல்லாமல் டாடா என்று சொல்வது ஏன்?

4) செவ்வணக்கம், செம்மண் என்பதெல்லாம் சிவப்பு நிறத்தை குறிக்குமென்றால் செம்மொழி என்பதன் மூலம் நாமும் சிவப்பாகிறோமா?

5)  பெண் சிங்கம் பார்க்காமல், சிங்கம், முரட்டு சிங்கம் பார்த்தால் ஆணாதிக்கமா?

6) செம்மொழி மாநாட்டை நடத்தியதன் மூலம் கோவையை மதிமுக ஆக்கியதா தமிழக அரசு?அதவாது கோவையை “தலைகீழாக” மாற்றியதா?

7) அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் அடுத்து  அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா?

8) இந்த தடவ யாருக்கும்மா ஓட்டு என்றால் அம்மிணிகள் திமுக என்பார்களா?இல்லை சந்தோஷ் அல்லது சக்திக்கு என்பார்களா? (கே.கு – அவங்க சூப்பர் சிங்கர்ஸ்)

9) சந்திரபாவும் , கவுண்டமணியும் லெஜெண்ட்ஸ் என்றால், கோவை சரளாவும் மனோரமாவும் லெ”லேடிஸ்” என்று சொல்லலாமா?

10) பதிலே சொல்ல முடியாத படி 9 கேள்வி அமைக்க நான் மண்டைய உடைச்சுக்கிட்ட மாதிரி, பதில் எழுதுபவரும்   மண்டைய உடைச்சுப்பாரா?

பதில்கள்: உமா கிருஷ்ணன் 

1.பெருசா போட்டா அது passport இல்ல failport ஆகிடும் அதனால
2.save tigers என்பதை shave tigers என்று தவறாக புரிந்து கொண்டார்களோ என்னவோ ?
3.ஊர் சுற்றுவது பெரும்பாலும் ஆண் பாலாக இருப்பதால் ட்டா டா வாக இருக்கலாம்.ரிலையன்ஸ் அவ்வளவு கன்வீனியன்ஸ் இல்ல
4. செம்மொழி என்றால் மொழி தானே சிவப்பாகும் நீங்கள் எப்படி ?அது என்ன facial cream aa?
5.பெண் சிங்கம் பார்க்கவே முடியாது.எனவே அது off ஆதிக்கம் ஆண் சிங்கம் தொலைக்காட்சியில் தானே பார்ப்பீர்கள் on ஆதிக்கம் செய்தால் தவறில்லை
6.நிச்சயம் இல்லை ஏற்கனவே அம்மாவிடம் தலைகீழாக கிடைக்கும் வைகோ வை மன்னிக்க கோவையை திரும்ப எப்படி அப்படி ஆக்க முடியும்?
7.அ.த.ம. சீசன் இரண்டு வராது.குருவி வந்தால் அதனை வேட்டையாட வேட்டைக்காரன் வருவார்
8.சந்தோசமா சக்தியோட ஓட்டு போடுவோம் திருட்டு முழி கண்ணா ன்னு பதில் சொல்லுவாங்க
9.ஏன் மனோரமாவையும் சரளாவையும் லே லேடிஸ் சொல்லணும் கில்லேடிஸ் நு சொல்லலாமே
10.இப்படி எல்லாம் கேள்வி கேட்ட உங்க மண்டைய உடைக்காம விட்டாலே புண்ணியம் நு நினைச்சுகோங்க

* 16 வயதினிலே படத்துல இருந்தே வெளியூர்க்காரனோ, வெளிநாட்டுக்காரனோ நமக்கு எப்பவுமே இளப்பம்தான். வெளிநாட்டுல இருந்து வர்ற மாப்பிள்ளைன்னாவே சாம்பார்தான். ரெண்டு சீன்ல மட்டுதான் வருவானுங்க, அப்புறமா கண்டிப்பா அல்வா பொட்டலம் கட்டி குடுத்தனுப்பிருவாங்க.

* வெளிநாட்டுல இருந்து ஊருக்குப் போறேன்னு போன் பண்ணி சொன்னாவே போதும், “மாப்ளே சரக்கோட வந்திருடா”ன்னு கண்டிப்பா சொல்லுவானுங்க. நாமளும் நல்லதா சரக்கு வாங்கிட்டு போய் குடுத்தா “மாப்ள, இது டாஸ்மாக்ல இருக்கிற சரக்க விட மட்டமா இருக்கேடா. இதைப் போய் எப்பிடிறா சப்பி சப்பி குடிக்கிறீங்க”ன்னு கடுப்பாக்குவானுங்க. சரி, வாங்கிட்டு போவலைன்னா “வெளிநாடு போயிட்டாவே எங்களை மதிக்க மாட்டீங்களேடா”ம்பாங்க.

டேய், நாதாரிங்களா நாம எல்லாம் வேலி ஓரத்துல திருட்டுத் தெளுவு குடிச்ச குரூப்டா.

* ”மாப்ள. அங்கதான் லட்சமா லட்சமா சம்பாரிக்கிறியே. ஒரு 10 இருந்தா குடுத்துட்டு போடா அப்புறமா தர்றேன்”ம்பாங்க. நாமளும் சரி பத்தாயிரம்தான்னு நினைச்சு குடுத்தா, “டேய், பத்தாயிரத்துக்கா நான் சிங்கி அடிக்கிறேன்? என்னடா நெனச்சுகிட்ட என்னை? பத்து லட்சம்டா நான் கேட்டது”ம்பாங்க.

டேய், பத்துலட்சத்துக்கு நான் சிங்கி அடிக்கனும்டா.

* வெயில் பட்டைய கிளப்பும், கால தரையில வெக்க முடியாது. ஊர்ல எவனும் மத்தியானத்துல வரமாட்டானுங்க. ஆனா நம்மளால ஒன்னுஞ் சொல்ல முடியாது. . வீட்ல மின்சாரம் கட் ஆவும், வேத்து புளுங்கும், அப்பக்கூட நாம சிரிச்சாப்ல இருக்கனும். மகா மட்டமான சாப்பாடு இருந்தாலும் சிரிச்சிகிட்டே சாப்பிட்டாகனும். இதுல ஒன்னுல நாம கொஞ்சம் முகஞ்சுளிச்சாலும் “வெளிநாட்டுல வேலை பார்க்கிற திமிரு”ம்பாங்க. இல்லைன்னா ரொம்ப மாறிப் போயிட்டடா’ம்பானுங்க

டேய், பீத்த ரப்பர் செருப்புக்கே சிங்கி அடிச்ச கோஷ்டிடா நாம.

* நாம் எதை வேணுமின்னாலும் இங்கே போட்டுகிட்டு திரியலாம். ஆனா நண்பர்களுக்கு துணி வாங்கிட்டு போவும்போது பார்த்து வாங்கிட்டு போவனும். Made in Indiaவோ, பங்களாதேசோ, பாகிஸ்தானோ இருந்திடக் கூடாது. மானம் போயிரும். “ஏண்டா, இதை ஏன் அங்க இருந்து வாங்கிட்டு வர்ற. நம்ம சந்தைக்குப் போனா இதை விட நல்லதாவே கிடைக்குமே. அட நம்ம திருப்பூர் மூர்த்தி கடைக்கு போனா சும்மா குடுப்பான்டா. வாங்கிட்டு வரானாம் அங்கேயிருந்து” அப்படிம்பாங்க தேவையா?

டேய், ஒத்த டீ சர்ட்டுக்காக PD சார்கிட்ட கெஞ்சி கூத்தாடி 16 மைல் மாரத்தான் ஓடினவங்கடா நாம.

* சோமாலியாவுல பிச்சையெடுத்தாலும் அவன் NRIதான்,. ஆட்டோக்காரங்க, ரியல் எஸ்டேட்காரங்கலிருந்து பார்பர் வரைக்கும் டபுள் ரேட் போடுவாங்க.

* வெளிநாட்டுல கஞ்சிக்கே சிங்கியடிச்சாலும் இவுங்கள மட்டும் நடுத்தர ஓட்டலுக்கு கூட கூட்டிட்டு போவ கூடாது. ஸ்டார் லெவல் ஓட்டலுக்குத்தான் சாப்புட கூட்டிட்டு போயாவனும். நறுக்குன்னு சாப்பிட்டு பில்லை நம்ம தலையில கட்டுவானுங்க. அதுவும் பில் வந்தா கண்டுக்காம நம்ம பக்கம் தள்ளிவிட்டுருவானுங்க.

டேய் நாமெல்லாம் இதே ஸ்டார் ஓட்டலுக்கு முன்னாடி இருக்கிற கையேந்தி பவன்லதாண்டா அக்கவுண்ட் வெச்சி சாப்பிட்டோம்.

* வெளிநாட்டுல கிடைக்காத சில விசயங்களை ஊர்ல இருந்து வாங்கிப்போவோம். அப்பவும் அதுக்கு கிண்டல் வரும் “வெளிநாடு போனாலும் நீ திருந்தலையாடா? ”

டேய், பாதானிக்கா அடிக்க சைக்கிள் எடுத்துட்டு அடுத்த ஊருவரைக்கும் ட்ரிபில்ஸ் அடிச்சவங்கடா நாம.

*ஊருக்கு கிளம்பும்போது எல்லாரும் ஒரு லிஸ்ட் வேற குடுத்து அனுப்புவாங்க. எதுக்கு தெரியுங்களா? லிஸ்ட்ல இருக்கிறத எல்லாம் வாங்கி,  யாராவது வந்தா அங்கேயிருந்து இந்தியா வந்தா குடுத்து  அனுப்பனும், காசு கேட்க கூடாது. அதுக்கு நாம எத்தனைப் பேர கெஞ்ச வேண்டியிருக்கனும்னு அவுனுங்களுக்குத் தெரியாது. பொருள் போய் சேர்ந்துச்சான்னும் நாமதான் போன் போட்டு கேட்டு உறுதிப்படுத்தின்னும்.

டேய், எனக்கு குடுத்த 30 ரூபா வாங்க எத்தனை முறை வீட்டுக்கு நடையா நந்திருப்பே?
ரசித்த இடம்: விவசாயி
ரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க வுக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரம் செய்வாரா என கேள்விக்கணைகள் அவரை துளைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் வலைப்பதிவர்களுக்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்…சென்னையில் அவரது அலுவலகத்தில் சில முக்கிய பதிவர்கள் கலந்துகொண்டனர்…நடிகர் கவுண்டமணியும் உடன் இருந்தார்..அதை பற்றிய ஒரு கவர் ஸ்டோரி;
 
விஜய்;வணக்கங்கண்ணா…தமிழர்களுக்கு ஒரு கஸ்டம்னா என்னால தாங்க முடியாது..அதனால தமிழர்களை காப்பாத்த நான் கட்சி தொடங்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்…
கவுண்டமணி; ஆமா இவர் மட்டும்தான் தமிழர்களை காப்பாத்த கட்சி தொடங்குறாரு..கலைஞர் ராசாவையும்,கனிமொழியையும் காப்பாத்த கட்சி தொடங்குனாரு…சரிடா விஷயத்தை சொல்லு
விஜய்; நான் நிறைய ஓட்டு வாங்கி முண்ணனிக்கு வரணும்….
ரஹீம் கஸாலி; அது ரொம்ப ஈஸி..உங்களை நம்பித்தான் கட்சி தொடங்கியிருக்கேன்..மறக்காம வந்து ஓட்டு போடுங்கன்னு சாட் மெஸேஜ் பண்ணினா முண்ணனிக்கு வந்துடலாம்…
விஜய்;நம்ம கட்சி பலமுள்ள கட்சியா வளரணும்….மக்கள் என் பின்னால் அணி வகுத்து வரணும்…

பன்னிகுட்டி ராமசாமி;அப்ப நமீதாவை முன்னாடி நடக்க விடுங்க தலைவரே….
விஜய்; வேற ஐடியா சொல்லுங்க ராமசாமி
கவுண்டமணி;அப்போ சங்கவிய நடக்க வுடு….
பன்னிகுட்டி ராமசாமி; சபாஷ் கவுண்டரே..நான் மறந்துட்டேன் அவங்களை
கவுண்டமணி; அதெல்லாம் மறக்கலாமா தம்பி…விஜய்யை மறந்தாலும் சங்கவியை மறக்க கூடாது
சி.பி.செந்தில்குமார்;நமீதா கட்சிக்கு வர்றாங்களா..அப்போ லட்சம் ஓட்டு கன்ஃபார்ம்..சங்கவியும் வந்தா இரண்டு லட்சம் ஓட்டு கன்ஃபார்ம்
கவுண்டமணி; தம்பி …இன்னிக்கு எதுவும் புதுப்படம் ரிலீஸ் ஆகலையா…பேப்பரும் பேனாவும் எடுத்துகிட்டு கிளம்பு…ஜோதியில அருமையான பிட்டு படம் ரிலீஸ் ஆகியிருக்காம்…
பன்னிகுட்டி ராமசாமி; செந்தில்,உங்க பதிவுலக..வரலாறுல உங்களை யாரும் இந்தளவுல இறக்கலை போல….ஹஹா.
விஜய்;  சார் என் கட்சியை பத்தி பேசுங்க….
கவுண்டர்;  ஆங்..எதுல விட்டோம்…
பன்னிகுட்டி ராமசாமி;நமீதா வுல விட்டீங்க..சரியா சொன்னேனா?.
கவுண்டர்; தம்பி..நீ வந்ததுல இருந்து ராங்காவே பேசுற..வார்த்தை குளறக்கூடாது…விஜய் தம்பி நம்மை நம்பி வந்துருகாப்புல…பாவம்..
விஜய்;எப்போ கட்சி ஆரம்பிக்கலாம்…..?
தொப்பி..தொப்பி; சீக்கிரம் முடிங்க……கலைஞரை நாறடித்த நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் னு நல்ல நேரம் சதீஷ் ஒரு பதிவு ரெடி பண்ணிட்டாராம்..அதை நக்கலடிச்சி நான் 50 கமெண்ட் போடணும்..
ரஹீம் கஸாலி;ஆமா நானும் அம்மாவை காய்ச்சி ஒரு எதிர் பதிவு போடணும்…
கவுண்டமணி;உன்னை வாழ்த்துற பதிவர் ஒருத்தனும் இல்ல போல…
பன்னிகுட்டி ராமசாமி;ஏண்ணா நான் இருக்கேனே டாக்குடர் விஜய் வாழ்க…ங்கிற என்னோட போஸ்ட் .அகில உலக பேமஸ்….

கவுண்டர்;இல்லையே அதுல தம்பியை ரொம்ப கேவலப்படுத்தி இருந்ததா பேசிகிட்டாங்களே…
விஜய்;சரி அதை விடுங்க…என்னை கோமாளி ஆக்கி பார்க்குறதே இந்த பதிவர்களுக்கு வேளையா போச்சி..கட்சியில யாருக்கு என்ன பதவி கொடுக்கலாம்..?கட்சி சின்னம் என்ன?.
கவுண்டர்;நமீதா கொள்கை பரப்பு செயலாளர்
பன்னிகுட்டி ராமசாமி;அண்ணே சங்கவியை அரசியல் அனாதை ஆக்கிடாதீங்க..?
கவுண்டர்;       விட்ருவனா…சங்கவி துணை  பொது செயலாளர்…
விஜய்;         எங்கப்பாவுக்கு..?
கவுண்டர்;    அவனுக்கு நீயே எதாவது கொடுத்துடு..நாகையில நல்லா கூட்டத்தை கட்டுபடுத்துனார்..கட்சி செக்யூரிட்டி படை தலைவராக்கிடு…
விஜய்;    அவர்கிட்டியே இதை நீங்க சொல்லிடுங்க..

கவுண்டர்;அவனை பார்த்தா எனக்கு வாமிட் வாமிடா வரும்..நீயே சொல்லிடு..
பன்னிகுட்டி ராமசாமி; எனக்கும்தான்..ஆனா நமிகிட்டியும் சங்கவிகிட்டியும் நானும் என் தலைவர் கவுண்டமணியும் தான் சொல்வோம்…
கவுண்டர்; நீதான் என் தளபதி…
விஜய்;   கட்சிக்கு எதிர்ப்பு வருமா…?

ஜாக்கிசேகர்;நாமதான் மாஸ் ஆச்சே….எவனாவது கண்டிப்பா எதிர்ப்பான்..அப்ப..ங்கோத்தா நான் லோக்கல்..எவனும் மயிரை கூட புடுங்க முடியாதுன்னு சவுண்ட் விடுங்க..அப்படியே அலறுவானுக…
விஜய்;நான் தமிழக சட்டசபையில முதல்வரா அமர்வேனா?..மோசமான அரசியலை திருத்துவனா…?
டெரர் பாண்டியன்;த்தூ..முதல்ல நீங்க திருந்துங்கடா அப்புறம் நாட்டை திருத்தலாம்
ரசித்த இடம்: நல்ல நேரம்

செல்வா ஒரு முறை தனது தொலைபேசியைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தார். வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. ஆகவே தனது நண்பர்களிடம் கேட்கலாம் என்று முடிவெடுத்தார்.

” டேய் பிரபு , என்னோட போன காணோம் , நீ பார்த்தியா ? “
” நீ உண்மைலேயே லூசா , இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா ? ” என்றார் பிரபு சற்று கோபமாக.
” ஏண்டா ? “
” என்ன நோண்டா , இனிமேல் என்கிட்டே போன காணோம் , கீன காணோம் சொல்லிப்பாரு ” என்று கோபமாக கூறினார் பிரபு.
” போடா , உன்னோட போன் தொலைஞ்சா தெரியும் “
” போன் தொலைஞ்சா எப்படி தெரியும் ? லூசு மாதிரி பேசு ! ” என்று சிரித்தார் பிரபு.
” போடா , உங்கிட்ட கேட்டேன் பாரு ” என்று கூறிவிட்டு அவரது மற்றொரு நண்பரிடம் கேட்டார்.
” மச்சி , என்னோட போன பார்த்தியா ? “
” இல்ல , ஏன் காணாம போச்சா ? எப்ப இருந்து காணோம் ? அது காணாம போகும் போது என்ன கலர் டிரஸ் போட்டிருந்தது ? “
“ங்கொய்யால , போன் எப்படிடா டிரஸ் போடும் ? “
” ஒ , சாரி , வழக்கம்போல கேட்டுட்டேன். சரி அத எப்படி கண்டுபிடிக்கிறது ? “
” அதான் எனக்கும் தெரியல ,ஆ , ஐடியா .. உன்னோட போன்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் விடேன் , அத வச்சு கண்டுபிடிச்சிடலாம்ல ” என்றார் செல்வா சற்று மகிழ்ச்சியாக.
” மிஸ்ட் கால எதுக்கு கண்டுபிடிக்கணும் ? “
” டேய் , மிஸ்ட் கால கண்டுபிடிக்கல , என்னோட போன கண்டுபிடிக்கலாம்னு சொன்னேன் ! “
” சரி , இரு விடுறேன் …. ஐயோ என்னோட போன்ல பேலன்ஸ் இல்ல மச்சி , சாரிடா ” என்றார் அவரது நண்பர்.
” ச்சே , சரி விடு , நானே தேடிப்பாக்குறேன் ” , என்று காணமல் போனதாகத் தேடிக்கொண்டிருந்த தொலைபேசியின்  இணைப்பைத் துண்டித்தார் செல்வா.
ரசித்த இடம்: செல்வா கதைகள்: http://selvakathaikal.blogspot.com

Courtesy: Tamil Stories Online: http://www.tamilstoriesonline.com