ஒக்ரோபர், 2011 க்கான தொகுப்பு

என்ன கொடுமை சார் இது !

Posted: ஒக்ரோபர் 31, 2011 in சுட்டது, நகைச்சுவை
குறிச்சொற்கள்:, , ,
இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து
                மிழ் சினிமாவின் வரலாற்று புத்தகத்தில் வெள்ளிவிழாப்படங்களின் பட்டியலில் பவர் ஸ்டார்(?) டாக்டர் சீனிவாசனின் லத்திகா படமும் இணைந்துவிடும்.  நாளைய தலைமுறை, வெள்ளிவிழாப்படம் என்று லத்திகாவை தேடிப்பிடித்து, திரும்ப திரும்ப பார்த்தும் வெற்றிக்கான காரணத்தை கடைசிவரை அறியமுடியாமல் கிறுகிறுத்துப்போகும்.   இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து.

வெள்ளிவிழா நாயகன் பவர் ஸ்டாரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு (முதல் பிரம்மாண்ட படைப்பு எதுங்ணா) ‘ஆனந்த தொல்லை’ என்று சுவர் விளம்பரங்கள் கண்ணை கூசுகின்றன.  நிஜ வெள்ளிவிழா நாயகன் ‘மைக்’மோகன் இதைப்பார்த்து எப்படியெல்லாம் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்?
ஒருவர் படம் எடுப்பதோடு மட்டுமல்லாமல்,  அவரே தியேட்டர் வாடகை பிடித்து, அவரே தினக்கூலியில் ஆட்களை நியமித்து தியேட்டருக்குள் அமரவைத்து, அவரே 150வது நாள், 175 வது நாள், 200வது நாள், 365வது நாள் என்று தான் விரும்பும் நாட்களுக்கு ஓட்டி,    அவரே மகத்தான வெற்றி(?), ஆர்ப்பாட்டமான வெற்றி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டுவது மக்களுக்கும் தெரியும்.
இதெல்லாம் மக்களுக்கு தெரியும் என்பது தெரிந்தும் அவர் அப்படி செய்கிறார் என்பதுதான் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஆச்சரியம்.
பவர் ஸ்டாரின் ‘லத்திகா’ படத்தின் 200 நாள் விளம்பரமும் இப்படித்தான் என்கிறார்கள். கடைக்கோடியில் இருக்கும் பவர் ஸ்டார் (தனக்கு 5 லட்சம் தீவிர ரசிகர்கள் இருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார் சீனிவாசன்) போன்ற நடிகர்கள் மட்டுமல்லாமல்,  முன்னணியில் இருக்கும் நடிகர்களே இப்படி தங்களது படங்களை ஓட்டிக்கொண்டிருப்பதால், உண்மையான வெற்றிவிழா படங்களுக்கு உண்மையான வெற்றி என்று விளம்பரம் செய்யவேண்டிய நிலை இருக்கிறது.
ஆனால், பவர் ஸ்டாரே ‘உண்மையான வெற்றி’ என்று விளம்பரம் செய்திருக்கிறார்.  என்ன கொடுமை சார் இது.
உங்களுக்கு இந்த சேதி சொன்னது நக்கீரன் சினிமா தளமுங்க. நான் வெறும் எடுபிடிங்க. அடிக்கிறதா இருந்தா என்னை விட்டுறுங்கப்பா…
Advertisements

ஆண்கள் வாழ்வில் வரும் மூன்று நிலைகள் இதோ

தனி மனிதனாய் சந்தோசமாய்

—-

குடும்ப வாழ்வின் ஆரம்பத்தில்

—-

முடிவில் (குடும்ப வாழ்வின் முடிவில் என்றும் எடுத்து கொள்ளலாம்)

—-

ஆட்டோவுக்கு வாய் இருந்தால் ஐயோ என்று கத்தித் தனது வேதனையை வெளிப்படுத்தும். ஆனால் என்ன செய்வது ஆறறிவு படைத்த மிருகம் செய்யும் அத்தனை அநியாயங்களையும் தாங்கிக் கொள்ளும் மனது அதுக்கு ஆண்டவன் கொடுத்திருக்கிறான்.

அதனால்தான் என்னவோ ரெம்ப நல்ல ஆட்டோ என்று சொல்லுறாங்கள்.

 

Courtesy: http://www.manithantv.com

IPhone, IPad, ITouch போன்றவைகளை இந்த ஸ்டீவ் உலகத்துக்கு அறிமுகப்படுத்தி விட்டு  நல்ல பெயரோடும் புகழோடும் போய் சேர்ந்துவிட்டார். அவரின் இந்த நல்ல சேவையை நான் தொடர்ந்ததால் எனக்கு என் மனைவியிடம் கிடைத்த பெயர்தான்IBad என்பதாகும். அதோடு இருந்திருந்தால் பரவாயில்லை ஆனால் எனக்கு நேர்ந்த விபரிதத்தை கண்டால் யாருமே எதிர்காலத்தில் இப்படி எல்லாம் நடக்க மாட்டீர்கள். அப்படி என்ன நடந்தது என்று கேட்கீறிர்களா? அதை கடைசியில் பார்க்கலாம்.

அதற்கு முன்னால் என்ன நடந்தது என்பதை இங்கே கொஞ்சம் விபரமாக சொல்லுகிறேன். அதை படியுங்க முதலில் மக்கா..
எனக்கு   பிறந்த நாள் வந்துச்சுங்க…. என் பிறந்த நாளுக்கு என் மனைவி iPhone வாங்கி கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப சந்தோசமுங்க….யாருக்குதான் சந்தோஷம் வராதுங்க…
ஒரு 2 மாசம் கழித்து என் அண்ணன் பொண்ணுக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க அப்ப என் மனைவி அவளுக்கு iPad வாங்கி கொடுத்தாங்க…அவளுக்கும் ரொம்ப சந்தோசமுங்க…
போன மாசம் என் பொண்ணுக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க அப்ப என் மனைவி அவளுக்கு iPod Touch வாங்கி கொடுத்தாங்க…
அவளுக்கும் ரொம்ப சந்தோசமுங்க.
இந்த மாசம் என் மனைவிக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க….இந்த ஸ்டீவ் வேற புதுசா ஏதும் கண்டுபிடிக்காம போய்ட்டாருங்க…நான் என் மண்டைய போட்டு உடைச்சேங்க….என்னடா வாங்கி கொடுக்குறதுனு…. என் மனைவியோ எல்லோருக்கும் i ல ஆரம்பிச்ச பொருளாதான்  வாங்கி கொடுத்து இருக்கா எனவே அவளுக்கும் அது மாதிரி பொருளாதான் வாங்கி கொடுக்கனுமுனு நல்லா யோசிச்சு அவளுக்கு கடைசியா நல்ல அழகாக லைட் வெயிட்டா இருக்க கூடிய iRon Box  வாங்கி கொடுத்தேங்க…
இதுல என்னங்க தப்பு ? அப்ப ஆரம்பிச்சுதுங்க வினை….
என் மனைவி என் திறமையை, ஸ்மார்ட்னசை புரிஞ்சுக்க தவறிட்டாங்கனு நினைக்கிறேனுங்க… நான் வாங்கி கொடுத்த இந்த iRon Box  ஹோம் நெட்வொர்க்கோட கனெக்ட் பண்ணினால்  நிறைய பயன்பாடுகள் இருப்பது அவளுக்கு தெரியலைங்க… உதாரணமாக இதை எதோடு எல்லாம் தொடர்பு கொள்ளலாம் என்பதை அவளிடம் சொன்னதை நான் உங்களுக்கும் சொல்லுகிற்னுங்க..இதை iWash, iCook and iClean போன்றவைக்ளோடு இணைத்து உபயோகிக்கலாமுங்க
ஆனா என் மனைவி இதை எல்லாம் கேட்டுவிட்டு என் ஸ்மார்ட்னசை புரியாம என்னை  iKnock பண்ணிட்டு இப்ப அவள்iMad ஆகி iNag* பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்போ என் நிலமை இப்படி iBad ஆகிபோச்சு (///*nag – someone (especially a woman) who annoys people by constantly finding fault//)
என் கூட வேலை  பார்க்கும் அமெரிக்க நண்பர் சொன்ன ஜோக்கை வைத்து என் வழியில் நான் இதை உங்களுக்கு பகிர்ந்து உள்ளேன். கொஞ்சமாவது சிரித்து இருப்பிர்கள் என நினைக்கிறேன்.
புலம்பியவர்: http://avargal-unmaigal.blogspot.com
ரசித்த இடம்: வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்

போட்டோ கமெண்ட்ஸ் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல

“என்ன தாயி சொல்ற…  உள்ளாட்சியில நமக்குதான் வெற்றியா எப்படி…???””மகனே ஒழுங்கா ஓட்டு போடுறீங்களா… இல்லை விருதகிரி பார்ட் 2 எடுக்கவான்னு ஒரு வார்த்தை கேளுங்க போதும்….”

“எங்களையே கௌம்புங்க காத்து வரட்டும்னு மக்கள் வீட்டுக்கு அனுப்பிடுச்சுங்க.. இதுல உங்களுக்கு ஃபேர்வெல் பார்ட்டி வச்சு மரியாதையா கூட்டணியை விட்டு அனுப்பனுமா… எதுனா சொல்லிட போறேன்…..”

“என்னய்யா உள்ளாட்சி.. தேர்தல்லு.. ஓட்டு .. எண்ணிக்கை… யுடியூப்ல டி.ஆரை விட எனக்குதான் ஹிட்ஸ் அதிகம் .. அதை வச்சு நான் ஜெயிச்சதா அறிவிக்கனும்… இதான் என்னோட புது திட்டம்…”

“உனக்கு ஹிந்தி தெரியுமா..?””தெரியாதுண்ணே.. ஏன் கேக்க…??”

“அவன் இவன்பார்த்தே தமிழ்நாட்டுல பாதி பேரு செத்துட்டான்.. இப்போ வெடியால மீதி பேரும் செத்துப்போயிட்டா.. அப்புறம் அடுத்த படத்தை யார்கிட்டயா போட்டு காட்டுறது… ?”

‘கடவுளை படைத்தவர் விஜய்’னு பேனர் போட்டீங்க சரி.. அது கீழேயே ‘இதை எழுதச்சொன்னவர் உங்கள் விஜய்’னு எவன்யா எழுதுனது..? எதிர்கட்சிகாரன் பார்த்தா என்ன நினைப்பான்..?

ஆடி தள்ளுபடி விளம்பரத்துக்கெல்லாம் இப்போ மேடி வந்தாச்சு.. நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடா…

“அய்யா .. ராசா.. என்னையும் கேஸ்ல இழுத்து விட்டுடாதய்யா… எப்படியாவது உன்னை ரிலீஸ் பண்ணிடறேன்…””ம்ம்..அது… சப்பாத்தி சாப்புடற உங்களுக்கே அவ்ளோ அதுப்புன்னா… சால்னா சாப்புடுற எங்களுக்கு எவ்ளோ இருக்கும்…”

“பிராணாப்பு…கொஞ்ச நேரத்துலு என் தோள்ல இருக்கிற துண்டை எடுத்து தலையில போட பாத்தியேயா… இது உனக்கே நல்லாயிருக்கா”

“டீ சாப்பிட்டுக்கிட்டே அடுத்த படம் பத்தி பேசுவோம்.””நான் வேணா போய் டீ சொல்லவாண்ணே…??”

“விட்டா நீ அப்படியே ஓடி போயிருவ தெரியும்… வேணா ஒக்காரு..”

“அம்மா.. அண்ணா நாமம் வாழ்க எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க சொன்னீங்க… அப்படியே கேப்டனுக்கும் ஒரு நாமம் பார்சல் சொல்லிடுங்கம்மா….”

ரசித்த இடம்: http://valaimanai.blogspot.com

இன்னைக்கு ஆபிசுல ஆணி கம்மி. அதனால நெட்ல என்ன மேயலாம்னு யோசிச்சப்போ ஆபிசுக்கு வரும்போது பார்த்த நம்ம ஊரு பேருந்து நிறுத்தம் ஞாபகம் வந்தது.


மத்த ஊருல எல்லாம் அது எப்படி இருக்கும்னு கொஞ்சம் தேடி பார்த்தேனா. சிலது நம்ம ஊர விட மோசமா இருக்கு. ஆனா நெறைய நல்லா இருக்கு. நீங்களே பாருங்க

Curitiba, Brazil

Curitiba, Brazil

Sao Paulo, Brazil

Sao Paulo, Brazil

Japan

Japan

Yosemite Falls, USA

Yosemite Falls, USA

Hammock Bus Stop

Hammock Bus Stop

Dubai

Air Conditioned Bus Stop in Dubai

Spain

Casar de Caceres Bus Stop in Spain

Cornwall, England

Cornwall, England

Estonian Bus Stop

Estonian Bus Stop

Ishaya, Japan

Ishaya, Japan

Athens, Ga

Athens, Ga

London, England

London, England

Germany

Germany

Sheffield, England

Sheffield, England

Paris

LED Bus Shelter

Yemin Orde, Israel

Yemin Orde, Israel

Australia

Australia

Kapan, Armenia

Kapan, Armenia

Seattle, USA

Seattle, USA

Salinas, Puerto Rico

Salinas, Puerto Rico

California, USA

California, USA
California, USA

Volgograd, Russia

Volgograd, Russia

Wellington, New Zealand

Wellington, New Zealand

படங்கள் உதவி: http://www.google.com