இதோ சில நகைச்சுவை துணுக்குகள் பகிர்ந்திருக்கிறேன் வாசித்து மகிழுங்கள் .

* * * * * * *

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில்
ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து
கூண்டில் இருந்த எலி கேட்டது. எதுக்கு அவனைக் கொன்னேனு…

புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப்
பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனை”ன்னு.

& & & & & & &

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி…
தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது….

^  ^  ^  ^  ^  ^ ^

ஜனவரி – 14 க்கும், பிப்ரவரி – 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி – 14 !
அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி – 14 !!

$ $ $ $ $ $ $

அம்மா: என்னடா… இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே?

பையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன்.

அம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க?

பையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்சதுன்னு கேட்டாங்க.

# # # # # # #

மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?

கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.

@ @ @ @ @ @ @

கணவன்: எனக்கு கால் வந்த நான் வீட்ல இல்லன்னு சொல்லு! கொஞ்ச நேரம் கழித்து மொபைலில் கால் வருகிறது…
மனைவி: ஹலோ! என் கணவர் வீட்ல தான் இருக்கார்!
கணவன்: ஏண்டி அப்படி சொன்ன?
மனைவி: அது என்னோட லவர்!
கணவன்: ?!?…..

( ( * * * ) )

அறிவாளி 1 : மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும், ஞாபகப்படுத்து….

அறிவாளி 2: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?

அறிவாளி 1 : இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்……..

& & & & & & &

அமலா : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
விமலா : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே..!

Courtesy: பனித்துளி சங்கர்

பின்னூட்டங்கள்
  1. Tamil Comedy World சொல்லுகின்றார்:

    நல்ல காமெடி…….
    தொடர்ந்து எழுதுங்கள்…….

    நன்றி,
    கண்ணன்

  2. harry potter சொல்லுகின்றார்:

    copy adicchathukku comment vera kekkutho………………?????????…..

  3. Sekkaali சொல்லுகின்றார்:

    // கணவன்: ஏண்டி அப்படி சொன்ன?
    மனைவி: அது என்னோட லவர்! //
    தனியா இருந்தாலும் சத்தம் போட்டு சிரித்து விட்டேன். இந்த நகைச்சுவையை படித்து விட்டு.

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s