ஒக்ரோபர், 2013 க்கான தொகுப்பு

விசிட்டிங் பீஸ்

Posted: ஒக்ரோபர் 17, 2013 in சுட்டது

ஒருவன் நடுராத்திரியில் சென்று டாக்டர் வீட்டுக் கதவைத் தட்டுகிறான்.
டாக்டர் எழுந்து “என்ன வேண்டும்?” என்று கேட்கிறார்.
 வந்தவனோ ஒரு முகவரியைக் காட்டி, “இந்த இடத்திற்கு வர வேண்டும் மிகவும் அவசரம்” என்கிறான்.
டாக்டரும் காரை எடுத்துக் கொண்டு அந்த ஆளுடன் குறிப்பிட்ட ஊருக்குச் செல்கிறார்.
 ஊர் வந்ததும் டாக்டரை அழைத்து வந்தவன் காரிலிருந்து இறங்கினான். 
 
டாக்டரைப் பார்த்து, “உங்களது விசிட்டிங் பீஸ் எவ்வளவு?” என்றான்.
டாக்டர்,”நூறு ரூபாய்” என்றார்.
உடனே அவன் நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டு, “மிகவும் நன்றி 
டாக்டர். அங்கேயிருந்து இங்கே வர டாக்ஸிக்காரன் முன்னூறு ரூபாய் கேட்டான்” என்றான்.