Archive for the ‘வழிகாட்டுதல்கள்’ Category

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,

5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார்.
அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.

அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க.
1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு
போகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம
இறுந்துடுவாங்க.

ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு,
5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும்,
எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க.
அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில்
விட்டுடுங்கன்னு சொன்னாரு.

போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும்
எப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா நான்
ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த
காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன்.

இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன்.
இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன்.
இப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம்.

திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்.

Courtesy: Facebook

தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்…

திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்…
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது…

மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..

சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.

புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..

”என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.”.கத்துகிறாள் மனைவி.

”என்னது எதிர்த்தா பேசுகிறாய்.”அவள் மேல் துப்புகிறான்

”என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..”அலற துவங்குகிறாள் மனைவி..

தெனாலி ராமன் விட்டீல் பிரசினை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..

”என்ன தெனாலிராமா இது ” கேட்கிறார்க்ள..

”பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்ப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ”எனகிறான்தெனாலிராமன்…

திருடன் பிடிபடுகிறான்….

சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.

ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. விஷயம் முனிவரிடம் வந்தது. அவர் சீடர்களிடம், சீடர்களே! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதாமாகும். அதோ! இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள், என்றார்.

குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல், முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடன் சற்று பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே தாண்டில் மரத்தை தொட்டான். பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான். மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா! கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன், என்றான் பெருமையோடு.

இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான். அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர். அவர்கள் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். சிஷ்யனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்தான்.

இப்போது முனிவர் முதல் சீடனிடம், இரண்டாவது சீடன் தான் அதிபுத்திசாலி என்றார்.முதலாமவன் கோபப்பட்டான். சுவாமி! இன்னும் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படி சிறந்தவன் என சொன்னீர்கள்? என்றான்.முனிவர் அவனிடம், சிஷ்யா! நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டி தான்! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன்.

இரண்டாம் சீடனோ பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும் இன்னும் பல நாட்கள் பழங்கள் கிடைக்கும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே அதிபுத்திசாலி, என்றான்.இங்கே செயல் ஒன்று தான். ஆனால், செய்த விதத்தில் தான் வித்தியாசம்

Courtesy: Facebook

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….

<<< SHARE THIS >>>

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்…

“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை….

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம்
என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா…வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே…ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே….உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க…எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….

நன்றி – ஏகலைவன். Sangoothara Vayasula Sangeetha  #facebook

Courtesy: ம அசோக் குமார்

அது ஓர் அழகிய பனிக்காலம்.
ரவியும் சீதாவும் ஸ்கூலுக்கு போய்கிட்டு இருந்தாங்க. ரெண்டு பேரும்  ஒரேகிளாஸ் . படிப்பில் ரெண்டு பேருமே ரொம்ப கெட்டி. ஆனா, அவங்க ரெண்டு பேருக்குள்ள, யார் ஒசத்தின்னு  அடிக்கடி சண்டை வரும்.    அதை நிரூபிக்க, இருவரும் போட்டி போட்டுக்கிட்டு  படிப்பாங்க. அன்னிக்கும்  அப்படித்தான் ரவியும் சீதாவும் பேசிக்கிட்டு இருக்கும்போது, அவங்களுக்கிடையே சண்டை வந்துச்சு.

ரவி சொன்னான், “”நான்தான் உன்னை விட அறிவில் சிறந்தவன்” என்று.
ஆனா சீதாவோ “நிச்சயமா இல்லை… நாந்தான்” என்று  பதிலடி குடுத்தா. அவங்கவங்க தன்னோட  வீர தீர பிரதாபங்களை சொல்லிக்கிட்டு இருந்தாங்க.  இதே ரீதியில் பேச்சு வளர்ந்து சண்டை முத்தி போச்சு.

அப்போ, திடீர்ன்னு  அவங்க  முன்னாடி   ஒரு அழகிய தேவதை  வந்தாங்க. தேவதையைக் கண்ட ரெண்டு பேரும் என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு நின்னாங்க.  ரெண்டு பேரும்  சுதாரித்துக்கொண்டு, “”நீங்க யாரு?ன்னு கேட்டாங்க.

தேவதை அவங்ககிட்ட, “”நான் தேவலோகத்து பெண். இந்த வழியாகத்தான் தினமும் பறந்து உலகத்தை சுத்தி பார்ப்பேன்… இன்னிக்கும் அந்த மாதிரி போறப்போ நீங்க  சண்டை போடுறது கேட்டது. உங்க சத்தம்  தாங்க முடியாம  இறங்கி வந்தேன்” ன்னு சொல்லிச்சு.

பின், “”உங்க ரெண்டு பேருக்குள் என்ன பிரச்சினை? என்கிட்ட சொல்லுங்க.. முடிஞ்சா தீர்த்து வைக்குறேன்”ன்னு சொல்லிச்சு..

உடனே ரவி, “”தேவதையே! இவளைவிட நான்தான் அறிவில் சிறந்தவன் ன்னு சொன்னா, இவ  ஒத்துக்க  மாட்டேங்கிறா” என்றான்.

“”ஒண்ணும் கெடையாது… நாந்தான் இவனை விட அறிவாளி…” என்று சீதா சொல்ல, ரவி மறுக்க, சூடான விவாதம் மீண்டும் தொடங்கியது.
இதைக் கண்ட தேவதை வருந்தியது. ஒரு கணம் யோசித்தது.

“”சரி, சரி… உங்கள சண்டையைகொஞ்சம்  நிறுத்துறீங்களா? இதுக்கு  நான் ஒரு வழி செய்கிறேன்” என்று கூறியது.

“”உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறீர்களோ, அவங்கதான் அறிவில் சிறந்தவர்” என்று கூறி, “”உங்களுக்கு இதில் சம்மதமா?”ன்னு  கேட்டது.

ரவியும் சீதாவும் “சம்மதம்’ ன்னு தலையாட்டினாங்க.

உடனே போட்டி என்னன்னு  தேவதை அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தது. “”நான் உங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு குடுவை தரேன். இது பனிக்காலம்.  அந்தக் குடுவையில் ராத்திரி பெய்யுற  பனித்துளிகளைச் சேர்த்து வைக்கனும்.  ரெண்டு பேரில் யார் அதிகமா  சேக்குறாங்களோ அவரங்கதான் இந்தப் போட்டியில் ஜெயிச்சவங்க”ன்னு  தேவதை சொல்லிச்சு.


“”ஆனால் ஒரு கண்டிஷன். இந்த நிமிசத்திலிருந்து போட்டி முடியுற வரை நீங்க ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்குறதோ,  பேசிக்குறதோ கூடாது. நான் நாளைக்கு சாயந்தரம் இதே நேரத்துக்கு மறுபடியும் இங்க வரேன். இதே மைதானத்தில எனக்காகக் காத்திருங்க”ன்னு சொல்லி, மூடியில்லாத ரெண்டு குடுவைகளை அவங்ககிட்ட கொடுத்துட்டு மறைஞ்சுடுச்சு.

ரெண்டு பேரும் குடுவையுடன் அவங்கவங்க  வீட்டுக்கு போய்ட்டாங்க.  சூரியன் மறைஞ்சு,  இரவும்  வந்தது. கொஞ்ச  நேரத்துல பனியும் கொட்ட ஆரம்பிச்சுச்சு.  ரவி குடுவையை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு போனான்.  திறந்தவெளியில் வச்சுட்டு, தூங்க போய்ட்டான். ஆனா, தூக்கமே வரலை. அடிக்கடி போய் குடுவையில் பனித்துளிகள் சேர்ந்துச்சான்னு  பார்த்துக்கிட்டே இருந்தான்.

சீதாவும் அவளது வீட்டின் முன்னாடி  உள்ள புல்தரையில குடுவையை வச்சுட்டு அடிக்கடி  பனித்துளியின் அளவைப் பார்த்துக்கிட்டேயிருந்தா. “நாளைக்கு எப்படியாவது ரவியை ஜெயிக்கணும்’ன்ற நினைப்பிலேயே  தூங்கிப்போனாள்.

மறுநாள் பொழுது விடிந்தது…,

சீதாவும், ரவியும் போய்  அவங்கவங்க குடுவையைப் பார்த்தங்க. ஓரளவுக்கு இருவரது குடுவையிலும் பனி நிறைந்திருந்தது. ஆனால் ரவியின் குடுவையில் இதை விட அதிகம் இருக்குமோ?ன்னு  சீதாவும், சீதாவின் குடுவையில் அதிகம் இருந்தா என்ன செய்றதுன்னு ரவியும் நினைச்சங்க. 

மதியத்துக்கு மேல ரெண்டுபேரும் மைதானத்துக்கு தேவதையைப் பார்க்கக் கிளம்பினர். அப்போத மற்றவரது குடுவையில் அதிகமாக இருந்தால் நாம தோத்துபோய்டுவோமேன்னு  ரெண்டு பேருமே நினைச்சதால, குடுவை நிறையத் தண்ணியை ஊத்தி  எடுத்து போனாங்க.

மைதானத்தில ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காம குடுவையை மறைச்சபடி காத்திருந்தனர். மாலை ஆனதும் தேவதை வந்தது.

“”சரியாக வந்துட்டீங்களே! எங்கே உங்க குடுவையைக் காட்டுங்க” என்று குடுவைகளை வாங்கிப் பார்த்தது.

பின்னர் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தது தேவதை. இதைக் கண்ட இருவரும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு ரவி கேட்டான், 
“”ஏன் இப்படிச் சிரிக்கிறீங்க?”ன்னு…,

அதுக்குப் பதில் சொல்லாம மீண்டும் சிரித்த தேவதை, “”பனித்துளின்னா  என்ன தெரியுமா உங்களுக்கு? மேலே உள்ள நீராவியின் மேல் குளிர்ந்த காற்றுப் படும்போது, அது பனித்துளியாக மாறுகிறது. அந்தப் பனித்துளி மீது நல்ல வெயில் படும்போது, அது மீண்டும் நீராவியாகிடும். அப்படிப் பார்த்தால் நீங்கள் மதியத்திலிருந்து இங்கே காத்திக்கிட்டு இருக்கீங்க. என்னதான் குடுவையில் பனித்துளி சேர்ந்திருந்தாலும் இந்த வெயிலில் கொஞ்சமாவது ஆவியாகியிருக்கும். மீதிக் கொஞ்சம்தான் குடுவையில் தங்கியிருக்கும். ஆனால் உங்கள் இருவரது குடுவையும் நிரம்பி வழியுதே!  எப்படி? இதைப் பார்த்து சிரிக்காமல் என்ன செய்யட்டும்?” ன்னு கேட்டுச்சு.

“”இப்போ சொல்லுங்க…. உங்களில் அறிவில் சிறந்தவர் யார்ன்?” ன்னு அவர்களைப் பார்த்துக் கேட்டது தேவதை.

இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகவிழ்ந்து நின்றனர்.

“”பார்த்தீங்களா? இது நம்ம வாழ்வில் தினமும் நிகழும்  சாதாரண 
ஒரு நிகழ்வு. இதைக்கூட நீங்க  தெரிஞ்சுக்கலை. உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். இந்த உலகில் எல்லாமே தெரிந்தவர்கள், புத்திசாலிகள்ன்னு யாருமே இல்லை. இந்த உலகத்தில உள்ளவர்கள் கற்றுக்கொண்டது வெறும் கையளவு மட்டுமே. கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்ளத்தான் நீங்க முயற்சிக்கனுமே தவிர, இப்படி வீணா சண்டை போட்டுகிட்டு, உங்க எனர்ஜி, நேரம்லாம் வீணாக்கிட்டு இருப்பது எந்த வகையில்   எவ்வகையில் சரியாகும்?”ன்னு கேட்டது தேவதை.

அதைக் கேட்ட இருவரும் தம் தவறை உணர்ந்து, “”எங்களை மன்னிச்சுடுங்க. நாங்க இனிமேல் இதுபோன்ற தவறுகளை செய்யமாட்டோம்” ன்னு சொன்னாங்க.

பின் தேவதை அவங்களைப் பார்த்து, “”உங்களுக்கு ஏதாவது பரிசு தர விரும்புகிறேன். என்ன வேண்டும்? கேளுங்க” ன்னு சொல்லிச்சு.

“”நீங்கள் கொடுத்த இந்த அறிவுரையே எங்களுக்கு விலைமதிக்க முடியாத பரிசு”ன்னு  ஒரே குரலில் சொன்னாங்க.

“”உங்க பரிசை எங்களது ஃப்ரெண்ட்ஸ்களுக்கும் கொடுத்து, அவர்களையும் நல்வழிப்படுத்துவோம்”ன்னு சொன்னாள் சீதா.

“”மாணவர்களாகிய நீங்கதான் இந்த பூலோகத்தின் தூண்கள். தன்னம்பிக்கையும் தன்னடக்கமும் கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்” என்று கூறி மகிழ்ச்சியுடன் மறைந்தது தேவதை.

ரவியும் சீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கிட்டாங்க…, உண்மையான நட்புடன்.டிஸ்கி: இன்னிக்கு என்ன பதிவு போடலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ என் பையன் அப்பு, கம்யூட்டர் ஷார்ட் கீ கண்டுபிடிக்க சொல்லி ஒரு புதிர் பதிவு போடும்மான்னு சொன்னான். இதெல்லாம் போட்டால் யாரும் படிக்க மாட்டாங்க. எனக்கு எல்லாம் தெரியும் நீ போடான்னு சொன்னேன். அப்போ இந்த கதையை சொல்லி, ”கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு” அதனால, ரொம்ப அலட்டிக்காதன்னு சொன்னான். கதையும் நல்லா இருந்துச்சு. அந்த கதையே ஒரு பதிவாக்கிட்டேன்.

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள்,
மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம்
அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும்
இருந்தார்,

மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல
தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது
சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே
கேட்டு விட்டான்!

நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக
நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடை
விடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..

சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன்,
ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ
கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி
என்று கேட்டான்!..

நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன்
என்று சொன்னான் நண்பன்!

மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து
மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன்
அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,

மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க
வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்,

மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன்
நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும்
அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக
அமர்ந்தான்,

ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை
தீட்டி கொண்டிருந்தான்!

Courtesy: http://rammalar.wordpress.com

ஒரு பெண் தனியாக கோல்ப் விளையாடி கொண்டு இருந்தாள். அவள் அடித்த பந்து அருகில் இருக்கும் புதருக்குள் பொய் விழுந்தது. அங்கு அவள் ஒரு தவளை வலையில் சிக்கி இருப்பதை கண்டாள்.  இவளை பார்த்ததும் அந்த தவளை “என்னை நீங்கள் இந்த வலையிலிருந்து விடுவித்தால், நான் உங்களுக்கு மூன்றுஆசைகளை நிறைவேற்றி தருவேன்” என்று சொன்னது. அந்த பெண் அந்த தவளையை வலையிலிருந்து விடுவித்தாள்.
தன் ஆசைகளை சொல்ல அந்த பெண் தயாரான போது, அந்த தவளை குறுக்கிட்டு “ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அது போல பத்து மடங்கு உன் கணவருக்கும் கிடைக்கும். இப்போது சொல்லுங்கள் என்றது.
சரி என்ற பெண் “முதல் ஆசையாக நான் உலகிலே மிக அழகான பெண் ஆக வேண்டும்” என்று கேட்டாள்.  தவளை “நன்றாக யோசித்து விட்டாயா?உன் கணவனும் உலகிலே மிக சிறந்த ஆணழகனாக இருப்பான். எல்லா பெண்களும் அவனை கண்டது மயங்கி அவனிடம் செல்வர். இது பரவாயில்லையா?” என்று கேட்டது. அவளும் சம்மதிக்கவே, அப்படியே நடந்தது.
இரண்டாவது ஆசையாக “நான் உலகிலே பணக்கார பெண் ஆக வேண்டும்” என்று கேட்டாள். தவளை “தருகிறேன். ஆனால் உன் கணவன் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனாக இருப்பான். சம்மதம் தானே” என்று கேட்டு அந்த ஆசையையும் நிறைவேற்றி தந்தது.
மூன்றாவது ஆசையாக ‘எனக்கு சிறிய அளவிலே ஹார்ட் அட்டாக் வர வேண்டும்’ என்று கேட்டாள்.
இந்த கதையின் நீதி என்ன என்றால் “பெண்களை சாதாரணமாக நினைக்காதிர்கள். எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு”
பெண் வாசகர்களுக்கு – கதை இங்கே முடிந்து விட்டது. தயவு செய்து அடுத்த இணைய பக்கத்திற்கு செல்லுங்கள்.
ஆண் வாசகர்களே – நீங்கள் தொடருங்கள்.
கணவனுக்கு அந்த பெண்ணுக்கு வந்ததை போன்று பத்து மடங்கு குறைவாக ஹார்ட் அட்டாக் வந்தது.

இந்த கதையின் நீதி என்ன என்றால் “பெண்கள் தங்களை புத்தி சாலியாக நினைத்து கொள்வார்கள் ஆனால் அப்படி இல்லை என்பது அவர்களுக்கு தெரியாது”. அவர்களை அப்படியே விட்டு விடுங்கள்

பின்குறிப்பு: நீங்கள் ஒரு பெண் வாசகராக இருந்து இன்னமும் இதை வாசித்து கொண்டிருந்தால், ஆண்கள் சொல்வதை கேட்க பழகுங்கள். 🙂

கடும் கோபத்தில் அந்த முதலாளி தனது ஊழியர்களிடம் கத்தினார். ‘நான்தான் இங்கு முதலாளி. நீங்கள் ஒன்றுமே இல்லை.
வெறும் பூஜ்யம். புரிகிறதா! இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார்?’

ஊழியர்கள் அமைதியாகப் பதில் அளித்தார்கள்: ‘… பூஜ்யம்!’

‘அப்படியானால் நான் யார்?’ முதலாளியின் அடுத்த கேள்வி.
ஊழியர்கள் மீண்டும் அமைதியாக: ‘பூஜ்யத்தின் முதலாளி’!

நீதி உங்களுக்குக் கீழ் இருப்பவர்களை மதிப்பானவர்களாக நியமித்து, மதிப்பானவர்கள் மதிப்பவராக உங்களை நீங்கள் தகுதிப் படுத்திக்கொள்ளுங்கள்!

Thanks to : Dinamalar.com

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

இந்தப் பழமொழியின் உண்மையான விளக்கத்தை வாரியார் அவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று கூறுகிறார்.

பெண் புத்தி பின் புத்தி

நெற்றிக்கண் எனும் ஞானக்கண், முதன்முதலில் பார்வதிதேவிக்குத்தான் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவி சிவபெருமானுடன் சேர்ந்தபோது, தன் ஞானம் எனும் மூன்றாம் கண்ணை சிவபெருமானுக்குக் கொடுத்துவிட்டார் என்றும், சிவபெருமான் பார்வதிதேவியின் நெற்றிக் கண்ணை நினைவுகூரும் வகையில் செந்நிறத் திலகமிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே இன்றும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. அப்படி திலகம் பார்வதிதேவியின் நெற்றியில் இடப்படுவதற்கு முன், சிவபெருமான் தன்னை முழுமையாக பார்வதிதேவியின் கையில் கொடுத்துவிட்டார். இதை நினைவுகூறும் வகையில் இன்றும் திருமணங்களில் பெண்ணின் கையில் முக்கண்ணுடைய தேங்காய் கொடுக்கப்பட்டு திலகம் இடப்படுகின்றது. ஞானத்தை புத்தி என்றும் கூறுவர். ஞானமாகிய புத்தியை சிவபெருமானுக்கு பார்வதிதேவி தன் மூன்றாம் கண்ணாக அன்பின் வழியாகக் கொடுத்து, அவரின் பின்னால் சக்தியாகத் தாங்கி நிற்கின்றாள். அக்னி எனும் ஞானத்தை சிவபெருமானுக்குக் கொடுத்து அவரின் பின்னால் இருந்து புத்தியாக – சக்தியாக இருந்து செயல்படுகின்றார். இதுவே பெண்புத்தி பின்புத்தி என்று சொல்லப்படுகின்றது, பெண் சகோதரியாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும், சக்தியைக் கொடுத்துப் பாதுகாக்கின்றாள். பெண் எனும் சகோதரி, முருகன் கை வேல் போன்று காப்பவள், மனைவி எனும் பெண் ஆனந்தம், கருணை, அன்பு எனும் நித்யானந்த நிலைக்கு நம்மை வழி நடத்துபவள்.

ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா?

பொதுவாக நகரத்தார் சிக்கனவாதிகள் என்று சொல்லப்படுவதுண்டு. பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தான் தான தர்மத்திலும் சிறந்து விளங்குகிறார்கள். இன்றைக்கு இருக்கும் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைகளில் கணிசமானவை நகரத்தார்களின் நன்கொடையில் விளைந்தது. அந்தக் காலத்திலிருந்தே பல வகையான தான, தர்மங்கள் செய்து வந்தனர் நகரத்தார்கள். தானங்களில் சிறந்தது பசு தானம். எந்த ஒரு மங்கல நிகழ்ச்சி நடந்தாலும், பசுவைத் தானம் கொடுப்பது தலையாய தானமாய்க் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் எந்தவித பலனும் எதிர்பாராமல் தன் பாலை மக்களுக்குக் கொடையாக வழங்குவது பசு. அத்தகைய கொடை தரும் பசுவைக் கொடையாகத் தருவது புண்ணியம்தானே!.

ஆ-தானம் அதாவது பசு தானம் செய்வது வழக்கம். நகரத்தார்(செட்டியார்) எவரும் ஆ தானம் செய்யாது போனால், தன் வாழ்வில் செய்யத் தவறினால், அவன் தன் கடமையை ஆற்றாது போகிறான் என்பதாக வந்தது. ஆ தானம் செய்யாத செட்டி ஆற்றாது போகிறான் என்ற நகரத்தாரின் குணத்தைப் போற்றிய உண்மையான பழமொழி நாளடைவில் திரிந்து ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா என்று தவறுதலாக பேச்சுவழக்கில் கூறப்பட்டு வருகிறது.

பந்திக்கு முந்து படைக்கு பிந்து

வீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில் வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு பரிமாற வேண்டும். விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.

குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம்

நம்முடைய தகுதிக்கும், வசதிக்கும் தகுந்தது தான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இந்த பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம், குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்பந்தம். குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் அர்த்தம். இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று கூறப்படுகிறது.

சோழியன் குடுமி சும்மா ஆடாது!

சோழியன் என்பது பிராமண குலத்தில் ஒரு பிரிவு. பொதுவாக பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம் அடர்த்தியாக குடுமி வைத்திருப்பர். ஆனால் சோழியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் மலையாள நம்பூதிரிகளைப் போல தலையின் முன்பக்கத்தில் முடியும் வண்ணம் முன் குடுமி வைத்திருப்பார்கள். சோழியர்களின் குடுமி தலையின் முன்பக்கத்திலேயே அடர்த்தியாக முடியப்பட்டாலும் அது சும்மாட்டுக்கு இணையாக ஆக முடியாது. அதாவது சும்மாடு என்பது சுமை தூக்குபவர்கள் தலையில் துணியைச் சுருட்டி வசதிக்காக வைத்துக் கொள்வது. முன்குடுமி எவ்வளவு கட்டையாக இருந்தாலும் சும்மாடாகாது. அவர்களும் சுமை தூக்கும் போது சும்மாடு வைக்கத்தான் வேண்டும். சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பது தான் உண்மையான பழமொழி. இதுவே தற்போது சோழியன் குடுமி சும்மா ஆடாது என உச்சரிக்கப்படுகிறது.

பசி வந்திட பத்தும் பறந்து போகும்

அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை. இந்தப் பத்தும் இளகியிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது மற்றொரு பழமொழி. அதை சித்த வைத்தியர்கள் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என மிளகின் பெருமைகளை விளக்கும் சொல்லாக மாற்றி விட்டனர்.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

பைரவரின் வாகனமாக நாயைப் பார்க்கும் போது, அதை இறைவனின் அம்சமாக நினைத்து வணங்க வேண்டும். நாயின் வடிவத்தில் இருக்கும் கற்சிலையை பார்க்கும் போது அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும், வெறும் கல் என்று நினைத்தால் கல்லாகவே தெரியும். ஒரு பொருளின் அல்லது ஒரு விஷயத்தின் அழகும் பெருமையும் காண்பவர்களின் பார்வையைப் பொருத்தே உள்ளது என்பதே இதன் உண்மையான அர்த்தம். ஆனால் இப்போது நாயைக் கண்டால் கல்லைக் கொண்டு எறிய வேண்டும் என்பது போல் இந்தப் பழமொழி அமைந்து விட்டது.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்!

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் தென்னைக்குத் தானே நெறி கட்ட வேண்டும்? பனைமரத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா. இந்தப் பழமொழியை அப்படியே படித்தால் அர்த்தம் சரியாக இருக்காது. எங்கோ ஒரு செயல் நடந்தால், அதன் விளைவு வேறு எங்கோ தெரியும் என்றுதான் நமக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதன் உள்ளர்த்தம் வேறு. தென்னை மரத்தில் ஏறுபவர்கள் பூச்சிக்கடிகளால் பாதிப்பு வராமலிருக்க ஒருவிதமான எண்ணெய் அல்லது சாந்தை உடலில் பூசிக்கொண்டு மரமேறுவார்கள். அப்படி ஏறும்போது மரத்தில் இருக்கும் தேள் கொட்டினால், அவர்களுக்கு அந்த எண்ணெயின் மருத்துவ குணத்தால் வலி தெரியாது! ஆனால் தேளின் விஷம் தோலினுள் ஊடுருவி இருந்தால், சிறிது நேரத்துக்குப் பிறகு கொட்டிய இடத்தில் நெறிகட்டிக் கொள்ளும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மற்றொரு மரத்தில் ஏறும்போது தான் அதன் உண்மையான வலி தெரியும். அதன் பின் மருத்துவ சிகிச்சை எடுப்பர். தென்னை மரத்தில் ஏறும் போது தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏறும் போது நெறிகட்டும் என்ற உண்மையான பழமொழியே இப்போது தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்று கூறப்படுகிறது.

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு

மகாபாரதத்தில் கர்ணன் ஐந்து பாண்டவர்களோடு ஆறாவதாகப் பிறந்திருந்தாலும் அவனுக்கு சாவு தான்; நூறு கௌரவர்களோடு இருந்திருந்தாலும் கர்ணனுக்கு சாவு தான்; எனவே சாவு என்பது நாம் நிச்சயிக்க முடியாத ஒன்று. விதிப்படியே நடக்கும். இதைத் தான் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்

இந்தப் பழமொழியைப் படிக்கும் போது ஒரு பெண் தன் கணவனை கல்லுக்கும், புல்லுக்கும் ஒப்பிடுவது போல் உள்ளது. ஆனால் கள்வன் ஆனாலும் கணவன்; புலையன் (தீயவன்) ஆனாலும் புருஷன் என்பதுதான் உண்மையான பழமொழி. தனக்கு வாய்த்த கணவன், தீயபழக்கங்கள் மற்றும் தீயசேர்க்கையினால் கள்வனாகவும், தீயவனாகவும் இருந்தாலும் அவனை ஒதுக்கிவிடாமல் தன் அன்பினால் அவனைத் திருத்த வேண்டும் என்று அறிவுரை கூறுவதே இந்தப் பழமொழி. பெண்ணுக்கு பெருமை சேர்ப்பது போல் உள்ள இந்தப் பழமொழியே நாளடைவில் இப்படி மாறிவிட்டது.

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்

ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம். ஆனால் மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள் விளைநிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக் கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பினவ பலன் பெருகுகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம். அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும். பொன்னுக்கே உரம் என்றார்கள். இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.

அடி உதவுகிறார் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்

இங்கு அடி என்பது நிலத்தடியைக் குறிக்கிறது. அந்தக் காலத்தில் பொதுவாக மாதம் மும்மாரி பொழிந்த காலம். ஆறு, குளம், ஏரி என்று எப்போதும் நிறைந்திருக்கும். உறவுகள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி சோம்பலாக இருக்காதே! நிலத்தை நம்பு, உன் உழைப்பை நம்பு என்பதை விளக்கும் இந்தப் பழமொழியே இப்போது தலைகீழாக மாறி விட்டது

அனேகமாக ரெண்டாம் ஆண்டு, மூண்டாம் ஆண்டு காலங்களிலை சிலம்பல்த்தலை பிரம்பை ஆட்டிக்கொண்டு டீச்சர் அடைச்ச குரலிலை மேற்கண்ட வசனத்தை கத்தி கத்தி சொன்ன கதைகள் கொஞ்சம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம் எண்டு கருதுறன்.
பல் + பசை பற்பசை என்றும் சிற்சில என்பதை சில + சில எண்டும் சேர்த்தும் பிரிச்சும்; எழுதியிருப்பியள். கோதாரியில விழுந்த நான் அதுகளை பப்பசை எண்டும் சில்லு சில எண்டும் எழுதின கதைகள் வேற.
இங்க அந்த நேரத்திலை நாங்கள் ஓட்டைக்காச்சட்டையையும் போட்டு மணியடித்துக்கொண்டு திரிந்த நாட்களைப்போல இங்க உள்ள குறுனிகள் படுறபாடு பெரும்பாடு.
நாங்கள் அந்த நேரத்திலை தமிழிலை பள்ளிக்கூடத்திலை கடமைக்கு படிச்சுப்போட்டு ரீயூசனுக்கு இங்கிலீசுக்கு, பாவம் ரீச்சர் நெடுகலும் அவவை ஏமாத்தக்கூடாது எண்ட எண்ணத்திலைதானே போறனாங்கள்.
இங்கை நிலைமை தலைகரணம் கண்டியளோ. குறுனிகள் கியா மாயா எண்டு இங்கிலீசு பள்ளிமுடிந்து ஓடிவந்து தமிழுக்கு ரியூசனுக்கு போகுதுகள்.
அதுகளின்ட நடவடிக்கைகளை கொஞ்சம் புலனாய்வு செய்ததிலைதான் இந்த சேத்தெழுதல் பரித்தெழுதல் நினைவுகள் வந்திச்சு.
இந்த சேத்தெழுதல், பிரித்தெழுதல் அந்த நேரத்திலையே கிளியர் ஆகாமல் விட்டால் பிறகு வாழ்க்கை முழுக்க சிக்கல்தான் கண்டியளோ.
அப்புடியான சிக்கலுகள் எனக்கு பாடையில போகுமட்டும் இருக்கு எண்டு எனக்கு தெரியும். எல்லாம் அந்த சந்திரமோகன் வாத்தியின்ட சாபமாத்தான் இருக்கும்.
நாங்கள் நாலாம் ஆண்டு படிக்கேக்க பள்ளிக்குடத்துக்கு தமிழ் படிப்பிக்க வந்தவர் சந்திரமோகன் வாத்தியார். வண்டியும், ண்டியுமாக ஆள் சைக்கிள்ள இருந்து மிதிச்சார் எண்டால் எண்டுமூலைபட்டம் முச்சை சிக்குப்பட்டு அங்கையும் இங்கையும் அல்லாடிக்கொண்டு நிக்குமாப்போல இருக்கும். பின்னாலை நிண்டு பாத்தால் சைக்கிள் சீட்டை காணஏலாது.
அவருக்கும் எனக்குமான அறிமுகம் சும்மா தளபதி படத்திலை மம்முட்டியும், ரசினிகாந்தும் அறிமுகமானதுபோல சுப்பரான கட்டம்.
அண்டைக்கு ஒரு வியாழக்கிழமை எண்டு நினைக்கிறன். வாத்திமார் ஸ்ராப் ரூமிலை இருந்து அலட்டுறதுக்கு தோதாத்தானே எங்களுக்கு பீட்டிப்பாடம் (உடற்பயிற்சி) எண்ட ஒண்டை ரைம்டேபிளிலை வக்கிறவை. சரி இண்டைக்கு ஏதாவது விளையாடுவம் எண்டுபோட்டு முழுபெடியளும் கபடி மாத்தி ஒப்பு எண்டு விளையாடத்தொடங்கிட்டாங்கள். எனக்கு அந்த விளையாட்டு சரிப்பட்டு வராது.
பாழ்படுவார் அத்தனைபேரும் சேர்த்து ஒருக்கா பிடிச்சாங்கள் எண்டால் பழைய கோவங்கள் எல்லாத்தையும் சேத்துவச்சு பிதுக்கிப்போட்டுத்தான் விடுவாங்கள்.
ஆகவே எனது கண்கள் அருச்சுனனின் அம்புப்பார்வைபோல வேறெதுவும் தெரியாமல் அசம்பிளி நடக்கிற இடத்திலை நிண்ட மாமரத்தில் இருந்த மாங்காய் ஒன்றின் மேலேயே இருந்தது. மற்றய நிகழ்வகள் ஒன்றிலும் எந்தவித ஒன்றிப்பும் இல்லை. இலக்கு மாங்காய் மாங்காய் மட்டுமே. (மாங்காய் எண்டதுமே எப்படி பனங்காட்டுத்தமிழ் சங்கத்தமிழ் ஆகுதெண்டதை கண்டியளே)
எதேட்சையாக ஒரு கல்லை எடுத்து லக்குப்பார்த்து விட்டன் ஒரு கல்லை, சரியா பிடிக்கேல்லை. அந்தநேரம் பார்த்து நாசமறுந்த இந்த சந்திரமோகன்சேர் சைக்கிளை விட இறங்கேக்கை முதுகிலை கும் எண்டு விழுந்திச்சு கல்லு.
பிறகென்ன வட்டாலக்கடி வடைகறிதான்.
சரி சந்திரமோகன் வாத்தியை நினைச்சு விசியத்தை மறந்துபோனன் பாத்தியளே!
ம்ம்ம் சேத்து பிரித்து எழுதுவதிலை நிதானம் படு அவதானமாக வேண்டும் கண்டியளோ.
இப்புடித்தான் ஒரு மாமனார் மருமோணிட்டை, டேய் உன்டை மச்சாள்மாரிண்டை பாவித்த சைக்கிள் இருக்கெல்ல அதை விக்கப்போறன் ஒரு போட் எழுதி வாசல்ல போடு எண்டாராம்.
மருமோன் கேட்டானாம் என்னெண்டுமாமா எழுத எண்டு
அவர் சொல்லி இருக்கிறார் ‘பாவித்த பெண்;கள்சைக்கிள் உடன் விற்பனைக்குண்டு’ என்று எழுதி வாசல்ல போடு எண்டு.
இந்த வேதாளம் எழுதினது எப்படித்தெரியுமே
‘பாவித்தபெண்கள் சைக்கிளுடன் விற்பனைக்குண்டு’
இதுபோலதான் ஊருக்க இன்னுமொரு வேதாளம் பெயிண்ட் அடித்துக்கொண்டு திரிஞ்சது. கொஞ்சம் மேல்வீட்ட சுகமில்லாத பெடியன்தான். என்ன செய்யிறது குறைமாதங்களை பெத்தால் தாய் தேப்பனுக்குத்தானே பாருங்கோ கவலை.
அப்புடித்தான் பழனிச்சாமியும், மாம்பழமக்காவும் அவனை நினைச்சு கவலைப்பட்டிருப்பினம். ஆனால் பெடியன்ட பெயிண்ட் அடியை அநியாயம் சொல்லக்கூடாது.
கோயில்ல மடப்பளிக்கு பக்கத்திலை பிராமாணர்கள் சாப்பிடும் இடம் இருந்திச்சு, அதுக்குள்ளை எல்லாரும் எட்டி பார்க்கினம் எண்டு, ‘பிராமணர்கள் சாப்பிடும் இடம் எண்டு சின்ன பலகையை கொடுத்து பெயிண்டாலை எழுதி கொழுவச்சொல்லிச்சினம்.
பேடியன் எழுதினான். பிராமணர் எண்டு எழுதும்போதே பலகை முடிஞ்சுபோச்சு எனவே மிச்சத்தை கீழே எழுதியிருந்தான்.
பிராமணர்
கள் சாப்பிடும் இடம்.
இப்ப விளங்குதே கண்டியளோ. அதுதான் சொல்லுறன் இந்த சேத்து பிரிச்சு எழுதுறது முக்கியம் கண்டியளோ.

மீண்டும் நினைவூட்டிய இடம்: http://thavarnai.blogspot.com