மே, 2011 க்கான தொகுப்பு

கொலைவெறியோடு வாராம்லேய் மக்கா

1 : சுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா…???
2 ; வீரியமுள்ள  விதை முளைக்காமல் அடங்காது…!!!
3 : பொற்கொல்லனுக்கு ராக்கெட் நுணுக்கம் தெரியாது…!!!
4 : மரணம் என்பது ரயில் பிரயாணம் மாதிரி, அவரவர் ஸ்டேசன் வந்தா இறங்கியே ஆகணும். மற்றவர்கள் அவரவர் ஸ்டேசன் நோக்கி தொடர்ந்து போயிகிட்டே இருக்கணும்…!!!
5 : அண்ணே என சொன்னால் உதடுகள் ஒட்டாது, தம்பி என்றால் உதடுகள் ஒட்டும்…!!! [[ம்ஹும் நாங்களும் சொல்லுவோம்ல]]
6 : அக்கா என்று சொன்னால் உதடு ஒட்டாது, தமக்கை என்று சொன்னால் உதடு ஒட்டுதே…!!! [[சரி சரி விடுங்க விடுங்க]]
7 : ஜன்னலை திறந்தாலும் காற்று வரும் [[சத்தியமா உள்குத்து இல்லை]]
8 : நான்கு செல்போனும், நான்கு பாக்கெட் சிகரெட்டும் கையில் இருந்தால்தான், அரபிகள் தங்களுக்குள் தங்களை மதிப்பார்கள். இது லேட்டஸ் டிரன்ட்….!!! [[போங்கடா]]
9 : ஃபிகரை நம்பாதே நம்பி குடைசாய்ந்து கதறாதே…!!!
10 : கடமை கண்ணியம் கட்டுபாடு என சொல்சிலம்பாடியவர்கள் எல்லாம் இப்போது மவுன விரதம்….!!!
11 : சொல்லால் அடிக்கும் சுந்தரி, செருப்பாலும் அடிப்பாள் ஜாக்குரதை…!!!
12 : பொண்டாட்டி பேச்சிக்கு மறு பேச்சு பேசாம இருக்குறவன் எல்லாம் சீக்கிரம் பணக்காரன் ஆகிவிடுரானே…..!!!????  ஒரு நண்பனின் ஆதங்கம்…!!
13 : ஆட்டை  கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில மனுஷனையே…..நோ நோ நோ நோ இப்போல்லாம் டைரக்டா மனுஷனையே கடிக்க ஆரம்பிச்சாச்சு…!!!
14 : அப்பா என்று கூப்பிடவே பத்துமுறையாவது ரிகர்சல் பார்க்கும் எனக்கு முன்பாக, என் எட்டு வயது மகள் சொல்கிறாள் தன் தோழியிடம் எங்க டாடிக்கு அறிவே இல்லையென…!!! [[உளறிட்டேனா]]
15 : நீ எத்தனை கோடி ரூவாயில் வாங்கினாலும் செருப்பு என்னைக்கும் காலில்தான், தலையில் வைக்க முடியாது…!!!
16 : எல்லையில் சீன ராணுவம் ரகசியமாக என்னெல்லாமோ செஞ்சிட்டு இருக்கு, நம்ம ராணுவ மந்திரி அண்டணி சேட்டன் மொட்டை மாடியில உக்காந்து வானத்தை பார்த்து இன்னமும் பேசிட்டு இருக்காராம், “என்கிட்டே அப்பிடி என்னதான் திறமை இருக்கு ராணுவ அமைச்சர் ஆகுறதுக்கு”ன்னு ம்ஹும் இவர் அதை கண்டுபிடிக்கும் முன் ஆட்சியும் முடிஞ்சிரும்…!!!
17 : ஒவ்வொரு குவாட்டர் துளியிலும் குடிமகனின் [[குடிப்பவன்]] பெயர் எழுதபட்டிருக்கிறது…!!!
18 : வேலி இருந்தா பாம்பும் இருக்கத்தான் செய்யும், எவ்வவோ நல்லவனா இருந்தாலும் அவனுக்குள்ளும் தீமை இருக்கத்தான் செய்யும்…!!!
19 : ஒரே சிகரெட்டை நான்குபேர் அடித்தால் அதற்க்கு பெயர் நட்பு, அதே சிகரெட்டை நான்கு பேர் ஜெயிலில் அடித்தால் அதன் பெயரென்ன..??
20 : மூன்றெழுத்தில் ஒரு கவிதை சொல்லு…???
“அம்மா” [[எப்பமோ விகடனிலோ, குமுதத்திலோ வாசிச்ச ஞாபகம்…!!!
டிஸ்கி : இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன…??? டவுட்டு…
ரசித்த இடம்: நாஞ்சில் மனோ
Advertisements


காலைல அவசரம் அவசரமாக  என் மகளை பள்ளிக்கு கூட்டி  செல்லும் அவசரத்தில் பைக்ல அவளை ஏற்றினேன் .முன்னாடி இருந்து கொண்டு

என் மகள் :அப்பா இந்த பாலம் ரொம்ப பெருசு இல்லையாப்பா என்றாள்
நான் :ஆமாம் கோவில்பட்டில   ரெண்டு பாலம் இருக்குன்னு சொன்னேன்
என் மகள் :ஆமாம் ரெண்டு பெரிய பாலம் நிறைய குட்டி பாலம் இருக்கு என்றாள்
நான் :இல்லையே குட்டி பாலமே இங்கே கிடையாது என்று சொன்னேன் …..
என் மனைவி :வண்டில இருந்துகிட்டு பேசாம அப்பாவும் ,மகளும் வாங்க என்று சத்தம் போட்டாள்(எலேய் உன் மண்டைல கொட்டினார்கள்ன்னு சொல்லு ன்னு கமெண்ட்ஸ் போடா கூடாது)
நானும் அமைதியா வண்டிய ஓட்டி  என்னோட ஆபீஸ் வந்துட்டோம் .
என் மகள் :அப்பா பாலம்ன  என்ன……….?(தொடர்ந்து விடாம கேள்வி கணைகள் என் மகள் ஆயிற்றே )
நான் :கீழ ட்ரைன்,ஆறு இப்படி போகும் நாம மேல போவோம் அப்படின்னு சொன்னேன்
என் மகள் :ரோடுல மேலே  ஏறி கீழ இறங்கனும் அப்படி தானே என்றாள் .(என்னை மாதிரி என் புள்ள ரொம்ப அறிவாளி டக்குன்னு பாயிண்டுக்கு  வந்துட்டாள் )
நான் :ஆமாம் என்றேன் …….
என் மகள் :நாம ஸ்கூல்க்கு  போகும் போது  மூணு குட்டி  பாலம் வரும் நான் கான்பிக்குறேன் பாருங்க என்றாள் ….
நான் :இல்லை மக்கா குட்டி பாலம் கிடையாது .என்றேன்
என் மனைவி :அவள் வேற எதையோ சொல்லுறா உங்களுக்கு தான் விளங்க மாட்டுது ன்னு சொன்னால்
நான் அதை பற்றி மறந்துவிட்டேன் அவளை பள்ளிக்கு அழைத்து சென்றேன் …அவள் போகும் வழியில்
என் மகள் :அப்பா இந்த இருக்கு பாரு மூணு பாலம் என்றாள் .
நான் :அவள் கண்பித்ததை பார்த்து தலை சுற்றியது எனக்கு  இது பாலம் இல்லை மக்கான்னு சொன்னேன்

என் மகள் :பைக் ஏறி தானே இறங்குது ….அது பெரிய பாலம் …..இது குட்டி பாலம் …நான் சொல்வது தான் சரி என்கிறாள்(என் தலைல லாரி யே ஏறி இறங்கினது மாதிரி ஒரு பீலிங் )

அப்படி அவள் என்னதாண்ட காண்பித்தாள்  என்று எல்லோரும் கேக்குறீங்களா ………?
SPEED BREAKER  மக்கா ….காலைலேயே ………ஆரம்பிச்சுட்டா இனி ஸ்கூல் விட்டு வந்து கேப்பா கரெக்ட் விடை சொல்லணும்
ரசித்த இடம்: இம்சை அரசன் பாபு

2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெற்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?

இப்படித்தான்…

தமிழ்

முதலில் “கடவுள் வாழ்த்து”
மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
சிங்களவனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி
தமிழின துரோகியே போற்றி போற்றிஅடுத்து மொழி வரலாறு.

தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.
தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.
20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன.  2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.
 கணிதம்.

திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக   பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.
1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது.  2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

புவியியல்

உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர்.  முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

 வரலாறு

தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது.  முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார்.  அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.
கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயகுமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது.  உதயகுமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.
கருணாநிதிக்கு மூன்று மகன்கள்.  ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.

தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன்.  அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார்.  21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.
பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்….

ரசித்த இடம்: சாம்பார் சட்னி

குழந்தைய பெத்து வளர்த்துவது என்பது சாதாரண விசயமல்ல. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய குழந்தை வளரும் போதுதான் தன்னை வளர்த்த அந்த காலத்தில் தம்முடைய பெற்றோரின் சிரமங்களை உணர்கிறான். அப்படி உணர்ந்தவர்கள் பெரும்பாலும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதில்லை. ( வேறு வழியில்லாமலும், விருப்பப்பட்டும் (எத்தனை ப) அனுப்புவர்கள் வேறு)
பார்த்தீங்கன்னா ரங்கமணிங்க எப்பவுமே ஒரு டென்சனாகவே இருப்பாங்க ஏன்னா குழந்தைங்க எந்த நேரத்துல என்ன செய்வாங்கன்ன சொல்ல முடியாது. சனி, ஞாயிருகளில் கொஞ்ச நேரம் தங்கமணிகள் கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு போங்க திரும்பி வந்து பாருங்க எவ்வளவு டென்சனாக இருப்பாங்கன்னு.

அதிலயும் இந்த ஆம்பிளை பசங்க பண்ற ரவுசு இருக்கே. அடங்க மாட்டய்ங்க.

கீழ உள்ள படங்கள் எல்லாம் ஒரு சின்ன சாம்பிள் அவ்வளவுதான். ஒவ்வொரு வீட்லயும் வித விதமா இருக்கும். நம்ம எல்லாம் போட்டோ எடுக்கும் அளவுக்கு பொருமை இல்லாம காப்பாத்துவோம். இவிங்க போட்டோ எடுத்து இருக்காய்ங்க.

இவரு மேலே இருந்து பல்டி அடிக்கிறாராம்

இவர்தான் ஸ்பைடர்மேன் ஆச்சே அதான் பீரோ மேல எல்லாம் அப்படியே எறுகிறார். மேல சாயாம இருந்த சரி


விருது பெற்ற புகைப்பட கலைஞராக வேண்டுமாம்


எப்பவும் பெண்களாள ஆண்களுக்கு பாதிப்பு ஆபத்துன்னு தெரியும். இந்த பிரச்சினை க்ரீச்லயே தொடங்கிடுது. அதை விளக்க கீழே உள்ள படத்த பாருங்க

இப்படியும் சில சமயம் ஆண்களே நமக்கு ஆப்பை தேடி உட்கார்ந்து கொள்கிறார்கள் 😉 என்ன செய்ய.

photos courtesy : various website
படத்த பார்த்துட்டு சும்மா போகதீங்க. உங்க கருத்தை சொல்லிட்டு போங்கப்பூ!

ரசித்த இடம்: பலாச்சுளை 

ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி ” டாக்டர்
அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது..” அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே ” யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, “தூ… தூ… இது எருமை சாணி..” அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. ” அட.. உங்களுக்கு ருசி தெரிய
ஆரம்பிச்சுருச்சி” ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி ” டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..” அப்படின்னாரு.. இப்ப
அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு
மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட..” அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு”
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே…!!

******************************

ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில்
விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து
[த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.

த.க.நி. ; ஜிம்மி…

ஜிம்மி ; லொள்.. லொள்..

த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]

த.க.நி. ; ஜாக்கி….

ஜாக்கி ; லொள்..லொள்..

த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியே
செய்கிறது ]

த.க.நி. ; மாதவ்..

மாதவ் சிங் ; லொள்..லொள்..

த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற
எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும்
புரியாது..!

*****************************************

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது
அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

************************************

நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.

எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..

லைசென்ஸா..? அப்படின்னா..?

அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..

ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )

அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?

*********************************

நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ்டைலாக
திருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார். இவருக்குதான் எல்லாவற்றையும் தானும்
செய்யவேண்டும் என்ற ஆவல் ஆயிற்றே.. தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக்
கொண்டார். வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார்..

ஓயே.. ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..?

********************************

நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்
கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்
சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.
அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து
கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே
திரும்பினார்..

நண்பர் கேட்டார்..” எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?’

சர்தார் சொன்னார்.. ” எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு…!

***************************************

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. ” மாமியாரின் அன்புப்
பரிசு..”

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்
வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே
இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்.. “போய்த் தொலை..
எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து
வச்சிருக்க..?” மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு..”
மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!

***********************************

ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். வழிகாட்டியிடம்
பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு
மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை
கொடுத்து ‘காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி
பேரை**சொல்லிட்டு போவோம்…!

ரசித்த இடம் : வால்பையன் 

 கேள்விகள்: கார்க்கிபாவா

1) பாஸ்போர்ட் சைசு ஃபோட்டோ ஏன் பாஸ்போர்ட்ட விட சின்ன சைசுல இருக்கு?

2) SAVE TIGERS என்னும் இந்திய அரசு ஏன் இலங்கையில் வாழ்ந்த புலிகளை அழித்தது?

3) வெளியே செல்லும்போது இந்திரா நூயி, ரிலையன்ஸ் என்றெல்லாம் சொல்லாமல் டாடா என்று சொல்வது ஏன்?

4) செவ்வணக்கம், செம்மண் என்பதெல்லாம் சிவப்பு நிறத்தை குறிக்குமென்றால் செம்மொழி என்பதன் மூலம் நாமும் சிவப்பாகிறோமா?

5)  பெண் சிங்கம் பார்க்காமல், சிங்கம், முரட்டு சிங்கம் பார்த்தால் ஆணாதிக்கமா?

6) செம்மொழி மாநாட்டை நடத்தியதன் மூலம் கோவையை மதிமுக ஆக்கியதா தமிழக அரசு?அதவாது கோவையை “தலைகீழாக” மாற்றியதா?

7) அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் அடுத்து  அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா?

8) இந்த தடவ யாருக்கும்மா ஓட்டு என்றால் அம்மிணிகள் திமுக என்பார்களா?இல்லை சந்தோஷ் அல்லது சக்திக்கு என்பார்களா? (கே.கு – அவங்க சூப்பர் சிங்கர்ஸ்)

9) சந்திரபாவும் , கவுண்டமணியும் லெஜெண்ட்ஸ் என்றால், கோவை சரளாவும் மனோரமாவும் லெ”லேடிஸ்” என்று சொல்லலாமா?

10) பதிலே சொல்ல முடியாத படி 9 கேள்வி அமைக்க நான் மண்டைய உடைச்சுக்கிட்ட மாதிரி, பதில் எழுதுபவரும்   மண்டைய உடைச்சுப்பாரா?

பதில்கள்: உமா கிருஷ்ணன் 

1.பெருசா போட்டா அது passport இல்ல failport ஆகிடும் அதனால
2.save tigers என்பதை shave tigers என்று தவறாக புரிந்து கொண்டார்களோ என்னவோ ?
3.ஊர் சுற்றுவது பெரும்பாலும் ஆண் பாலாக இருப்பதால் ட்டா டா வாக இருக்கலாம்.ரிலையன்ஸ் அவ்வளவு கன்வீனியன்ஸ் இல்ல
4. செம்மொழி என்றால் மொழி தானே சிவப்பாகும் நீங்கள் எப்படி ?அது என்ன facial cream aa?
5.பெண் சிங்கம் பார்க்கவே முடியாது.எனவே அது off ஆதிக்கம் ஆண் சிங்கம் தொலைக்காட்சியில் தானே பார்ப்பீர்கள் on ஆதிக்கம் செய்தால் தவறில்லை
6.நிச்சயம் இல்லை ஏற்கனவே அம்மாவிடம் தலைகீழாக கிடைக்கும் வைகோ வை மன்னிக்க கோவையை திரும்ப எப்படி அப்படி ஆக்க முடியும்?
7.அ.த.ம. சீசன் இரண்டு வராது.குருவி வந்தால் அதனை வேட்டையாட வேட்டைக்காரன் வருவார்
8.சந்தோசமா சக்தியோட ஓட்டு போடுவோம் திருட்டு முழி கண்ணா ன்னு பதில் சொல்லுவாங்க
9.ஏன் மனோரமாவையும் சரளாவையும் லே லேடிஸ் சொல்லணும் கில்லேடிஸ் நு சொல்லலாமே
10.இப்படி எல்லாம் கேள்வி கேட்ட உங்க மண்டைய உடைக்காம விட்டாலே புண்ணியம் நு நினைச்சுகோங்க

* 16 வயதினிலே படத்துல இருந்தே வெளியூர்க்காரனோ, வெளிநாட்டுக்காரனோ நமக்கு எப்பவுமே இளப்பம்தான். வெளிநாட்டுல இருந்து வர்ற மாப்பிள்ளைன்னாவே சாம்பார்தான். ரெண்டு சீன்ல மட்டுதான் வருவானுங்க, அப்புறமா கண்டிப்பா அல்வா பொட்டலம் கட்டி குடுத்தனுப்பிருவாங்க.

* வெளிநாட்டுல இருந்து ஊருக்குப் போறேன்னு போன் பண்ணி சொன்னாவே போதும், “மாப்ளே சரக்கோட வந்திருடா”ன்னு கண்டிப்பா சொல்லுவானுங்க. நாமளும் நல்லதா சரக்கு வாங்கிட்டு போய் குடுத்தா “மாப்ள, இது டாஸ்மாக்ல இருக்கிற சரக்க விட மட்டமா இருக்கேடா. இதைப் போய் எப்பிடிறா சப்பி சப்பி குடிக்கிறீங்க”ன்னு கடுப்பாக்குவானுங்க. சரி, வாங்கிட்டு போவலைன்னா “வெளிநாடு போயிட்டாவே எங்களை மதிக்க மாட்டீங்களேடா”ம்பாங்க.

டேய், நாதாரிங்களா நாம எல்லாம் வேலி ஓரத்துல திருட்டுத் தெளுவு குடிச்ச குரூப்டா.

* ”மாப்ள. அங்கதான் லட்சமா லட்சமா சம்பாரிக்கிறியே. ஒரு 10 இருந்தா குடுத்துட்டு போடா அப்புறமா தர்றேன்”ம்பாங்க. நாமளும் சரி பத்தாயிரம்தான்னு நினைச்சு குடுத்தா, “டேய், பத்தாயிரத்துக்கா நான் சிங்கி அடிக்கிறேன்? என்னடா நெனச்சுகிட்ட என்னை? பத்து லட்சம்டா நான் கேட்டது”ம்பாங்க.

டேய், பத்துலட்சத்துக்கு நான் சிங்கி அடிக்கனும்டா.

* வெயில் பட்டைய கிளப்பும், கால தரையில வெக்க முடியாது. ஊர்ல எவனும் மத்தியானத்துல வரமாட்டானுங்க. ஆனா நம்மளால ஒன்னுஞ் சொல்ல முடியாது. . வீட்ல மின்சாரம் கட் ஆவும், வேத்து புளுங்கும், அப்பக்கூட நாம சிரிச்சாப்ல இருக்கனும். மகா மட்டமான சாப்பாடு இருந்தாலும் சிரிச்சிகிட்டே சாப்பிட்டாகனும். இதுல ஒன்னுல நாம கொஞ்சம் முகஞ்சுளிச்சாலும் “வெளிநாட்டுல வேலை பார்க்கிற திமிரு”ம்பாங்க. இல்லைன்னா ரொம்ப மாறிப் போயிட்டடா’ம்பானுங்க

டேய், பீத்த ரப்பர் செருப்புக்கே சிங்கி அடிச்ச கோஷ்டிடா நாம.

* நாம் எதை வேணுமின்னாலும் இங்கே போட்டுகிட்டு திரியலாம். ஆனா நண்பர்களுக்கு துணி வாங்கிட்டு போவும்போது பார்த்து வாங்கிட்டு போவனும். Made in Indiaவோ, பங்களாதேசோ, பாகிஸ்தானோ இருந்திடக் கூடாது. மானம் போயிரும். “ஏண்டா, இதை ஏன் அங்க இருந்து வாங்கிட்டு வர்ற. நம்ம சந்தைக்குப் போனா இதை விட நல்லதாவே கிடைக்குமே. அட நம்ம திருப்பூர் மூர்த்தி கடைக்கு போனா சும்மா குடுப்பான்டா. வாங்கிட்டு வரானாம் அங்கேயிருந்து” அப்படிம்பாங்க தேவையா?

டேய், ஒத்த டீ சர்ட்டுக்காக PD சார்கிட்ட கெஞ்சி கூத்தாடி 16 மைல் மாரத்தான் ஓடினவங்கடா நாம.

* சோமாலியாவுல பிச்சையெடுத்தாலும் அவன் NRIதான்,. ஆட்டோக்காரங்க, ரியல் எஸ்டேட்காரங்கலிருந்து பார்பர் வரைக்கும் டபுள் ரேட் போடுவாங்க.

* வெளிநாட்டுல கஞ்சிக்கே சிங்கியடிச்சாலும் இவுங்கள மட்டும் நடுத்தர ஓட்டலுக்கு கூட கூட்டிட்டு போவ கூடாது. ஸ்டார் லெவல் ஓட்டலுக்குத்தான் சாப்புட கூட்டிட்டு போயாவனும். நறுக்குன்னு சாப்பிட்டு பில்லை நம்ம தலையில கட்டுவானுங்க. அதுவும் பில் வந்தா கண்டுக்காம நம்ம பக்கம் தள்ளிவிட்டுருவானுங்க.

டேய் நாமெல்லாம் இதே ஸ்டார் ஓட்டலுக்கு முன்னாடி இருக்கிற கையேந்தி பவன்லதாண்டா அக்கவுண்ட் வெச்சி சாப்பிட்டோம்.

* வெளிநாட்டுல கிடைக்காத சில விசயங்களை ஊர்ல இருந்து வாங்கிப்போவோம். அப்பவும் அதுக்கு கிண்டல் வரும் “வெளிநாடு போனாலும் நீ திருந்தலையாடா? ”

டேய், பாதானிக்கா அடிக்க சைக்கிள் எடுத்துட்டு அடுத்த ஊருவரைக்கும் ட்ரிபில்ஸ் அடிச்சவங்கடா நாம.

*ஊருக்கு கிளம்பும்போது எல்லாரும் ஒரு லிஸ்ட் வேற குடுத்து அனுப்புவாங்க. எதுக்கு தெரியுங்களா? லிஸ்ட்ல இருக்கிறத எல்லாம் வாங்கி,  யாராவது வந்தா அங்கேயிருந்து இந்தியா வந்தா குடுத்து  அனுப்பனும், காசு கேட்க கூடாது. அதுக்கு நாம எத்தனைப் பேர கெஞ்ச வேண்டியிருக்கனும்னு அவுனுங்களுக்குத் தெரியாது. பொருள் போய் சேர்ந்துச்சான்னும் நாமதான் போன் போட்டு கேட்டு உறுதிப்படுத்தின்னும்.

டேய், எனக்கு குடுத்த 30 ரூபா வாங்க எத்தனை முறை வீட்டுக்கு நடையா நந்திருப்பே?
ரசித்த இடம்: விவசாயி