Posts Tagged ‘comedi’

ஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,

“ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி
இருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை”

இதற்கு மனைவி பதில் சொன்னாள்,

“அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ…….?”

# காலங்கள் மாறினாலும்… மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை..

Courtesy: Facebook

Wife: U had lunch?

Husband(in fun mood) : U had lunch?

Wife : Im asking u.
Husband : Im asking u.

Wife: U copying me?
Husband: U copying me?

Wife: Lets go shopping

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
Husband: I had lunch..

ஆபிசுல சின்சியரா வேலை செஞ்சிட்டு இருந்தப்போ..
போன் வந்துச்சி … பார்த்தா புது நம்பர்…
யாருன்னு தெரியல .. ஆனாலும் பேசினேன்…

” Helo… யாரு? ! “ன்னேன்.

” நான் யாருங்குறது இருக்கட்டும் … உங்க ஆபிசுல A.C Work பண்ணுதா.? “ன்னு கேட்டான்.

” பண்ணுதே.. ! “ன்னேன் நான்

” Computer Work பண்ணுதா.? “ன்னு திரும்பவும் கேட்டான் அவன்.

” அதுவும் Work பண்ணுதே..! “ன்னேன் நான்.

அதுக்கு அந்த நாதாரி சொல்லுது,
” அப்ப நீங்க மட்டும் ஏன் சார் வெட்டியா Phone பேசிட்டு இருக்கீங்க..? … நீங்களும் போயி Work பண்ண வேண்டியதுதானெ …

 

Courtesy: Facebook

ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?

எப்போ?

ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி

ஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா?

யாரு பேசுறதுன்னு தெரியலயே?

நான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத் தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.

இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன?

ஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு. ஆனா பேசுனது என் பொண்ணு.

அது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன். என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா?

ஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா. இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.

சரி, எங்க வர்றாங்க?

ஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.

அப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால முடியாதும்மா. ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.

****
http://thendhisai.blogspot.in/2012/12/5.html

புது கணவன் தேடுகிறான் நம்பிகையோடு கூகிளில்

‘  மனைவியை  எப்படி சாமாளிப்பது ‘?

 

 

கூகுள் தேடல் முடிவு  அறிவிப்பு
‘இன்னும் தேடல் நடக்கிறது ‘
வெறுத்துவிட்டான்
கூகுள்  ,………..
கூகுள்  …………
பண்ணி  பார்த்தேன் கிடைக் கவில்ல
 யாகூ…. யாகூ……. பண்ணி பார்த்தேன் தெரியவில்ல
Courtesy: http://poovizi.blogspot.in

ஃப்ரம் ஃபேஸ்நூல் :

தேர் வாஸ் ஏ பாட்டி இன் கிராமம்.

1 டே சி வாஸ் சுட்டிங் ஏ வடை

அட் த டைம் 1 காக்கா கம் அன்ட் அபேஸ் த வடை.

தென் இட் சிட் ஆன் த ஒன் மரம்.

ஏ நரி கம் அன்ட் செட்

“யுவர் குரல் இஸ் ஸோ நைஸ் ஸோ ஸிங் ஏ பாட்டு பார் மீ”

தென் த காக்கா ஓப்பன் இட்ஸ் வாய் டு ஸிங்.

டொபக்கடீன்னு வடை பெல் டவுன்

த நரி கவ்விங் தட் வடை அன்ட் வென்ட் அவே

மாறல்::

“Vadai Poche“

ஆர் யு சிரிச்சிங்???? — feeling Haa Haa Hooo.

Courtesy: https://plus.google.com/111899839791634214271

ஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..

ரொம்ப அன்பா இருப்பாங்க…ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க…அதுல கணவனுக்கு மட்டும் high BP (blood pressure) இருந்துச்சி…டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு..

அதனால மனைவி கணவனுக்கு உப்பு இல்லாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து சமைச்சி போட்டு அவன கண்ணும் கருத்துமா பல வருடங்கள் பார்த்துட்டு வந்தா… சமீபத்தில் திடீர்னு ஒருநாள் மனைவி காலைல தூங்கி எழுந்து வந்து பார்க்கும்போது கணவன் பாத்ரூமுல செத்து கிடந்தான்..

மனைவி அவ்ளோ கவனமா கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்தாலும் கணவன் high BP வந்து திடீர்னு செத்ததற்கு என்ன காரணமா இருக்கும்…? யோசிச்சி பாருங்க…

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,

5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார்.
அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.

அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க.
1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு
போகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம
இறுந்துடுவாங்க.

ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு,
5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும்,
எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க.
அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில்
விட்டுடுங்கன்னு சொன்னாரு.

போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும்
எப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா நான்
ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த
காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன்.

இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன்.
இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன்.
இப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம்.

திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்.

Courtesy: Facebook

எளிய முறையில் பெண்களின் மனதை புரிந்து கொள்ள 10 வழிமுறைகள்

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்…!!!!!!

Courtesy: Facebook

தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்…

திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்…
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது…

மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..

சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.

புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..

”என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.”.கத்துகிறாள் மனைவி.

”என்னது எதிர்த்தா பேசுகிறாய்.”அவள் மேல் துப்புகிறான்

”என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..”அலற துவங்குகிறாள் மனைவி..

தெனாலி ராமன் விட்டீல் பிரசினை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..

”என்ன தெனாலிராமா இது ” கேட்கிறார்க்ள..

”பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்ப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ”எனகிறான்தெனாலிராமன்…

திருடன் பிடிபடுகிறான்….

சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.

பேமிலி டூர்.. வாங்களேன் சேர்ந்து போகலாம்.

உலகில் யாரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது.. நிறங்கள் மாறுபட்டாலும் யாவரும் சமமே.
 பேஸ் வாஷ் பண்ணாம போனா கேர்ள் பிரண்ட் துரத்தி விட்ருவா அதான்..
எப்புடி தெண்னை மரம்..
ஹே நான் இன்னும் பேச்சிலர்தான்..
இது எப்பூடி
முடிவையும் ஆரம்பத்திலேயே தீர்மானியுங்கள்.
இதுதான் பொறாமங்குறது..
ஹே ஹே
புறத்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட்டு விட முடியாது
சூப்பர்
ரசித்த இடம்: http://funnyworld-star.blogspot.com

நார்வேகாரர் ஒருவர் விபத்தில் சிக்கினார் .அருகில் இருந்த நம்மூர்க்காரர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, ரத்தமும் கொடுத்து காப்பாற்றினார் .
பிழைத்து எழுந்துவந்த நார்வேகாரர், நம்மூர்க்காரருக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றைப் பரிசளித்தார் .
நார்வே ஆளின் துரதிருஷ்டம் பாருங்கள், ஆறு மாதம் கழித்து அவர் மறுபடியும் விபத்தில் மாட்டினார்.
அதே நம்மூர் ஆசாமி மறுபடியும் காப்பாற்றினார் . ஆஸ்பத்திரியில் சேர்த்தார் .
உயிர் பிழைத்து வந்த நார்வேகாரர், நம்மூருக்கு நன்றி சொல்லி அரை கிலோ திருநெல்வேலி அல்வா கொடுத்தாராம் .
நம்மூர்க்காரர் ஏமாற்றமாகப் பார்க்க, நார்வேகாரர் சொன்னார்,

“‘ங்கொய்யால …. உன் ரத்தம்தான் எனக்குள்ள ஓடுது !

FB-படித்ததில் பிடித்தது

பொதுவா நாங்க தினமும் 8.30 மணிக்கு
எங்க ஆபீசை மூடிடுவோம்..

ஆனா நேத்து 9.00 மணி ஆகியும்
ஆபீஸ்ல தான் இருந்தோம்..
IPL Match பாத்துகிட்டு….

” உன்னை விட… இந்த உலகத்தில் ஒசந்தது
ஒண்ணுமில்ல…. ஒண்ணுமில்ல….! ”

( என் மொபைல் ரிங் ஆகுது… என் Wife
கூப்பிட்ட இந்த ரிங்டோன் தான் வரும் )

உடனே எங்க கடை பையன் ஓடி போய்
T.V வால்யூமை குறைச்சிட்டான்.. சமத்து..!

( ஹி., ஹி., ஹி, இல்லன்னா.. TV-ல
” ஜம்பிங் ஜபாங்கு ஜம்பங்க் ஜம்பங்க்
கிலிகிலியான்னு ” சவுண்ட் வருமே..
மாட்டிப்போம்ல..! )

” ஹலோ… ”

” மாமா… எப்ப வீட்டுக்கு வருவீங்க..? ”

” வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு..
ஒரு அரைமணி நேரம்..! ”

” இன்னும் அரைமணி நேரமா..?! ”

( என் Wife Upset ஆகறது எனக்கு நல்லவே
தெரிஞ்சது.. சே.. சும்மா சொல்லக்கூடாது
என் பொண்டாட்டிக்கு என் மேல பாசம்
அதிகம் தான்.. )

” மதியம் லஞ்ச்க்கு வந்தப்ப கூட உடனே
கெளம்பிட்டீங்க..! கொஞ்சம் நேரம் கூட
வீட்ல இல்ல.. ”

” முக்கியமான ஆர்டர் ஒண்ணு முடிக்க
வேண்டி இருந்தது.. அதான்..! ”

” இங்கே செம Bore.. நீங்க எப்ப வருவீங்க.,
எப்ப வருவீங்கன்னு வாசலையே பாத்துட்டு
இருக்கேன்..! ”

( அடடா.. என் மனைவியோட அன்புக்கு
முன்னாடி இந்த ஐ.பி.எல் எல்லாம்
என் கால் தூசு…! )

” இதோ உடனே வந்துட்டேம்மா… ”

நான் கடை பசங்களை பாத்து..

” இழுத்து மூடுங்கடா ஆபீசை..
நாளைக்கு ஹைலைட்ஸ் பாத்துக்கலாம்..! ”

அவனுங்க என்னை லூசை பாக்கற மாதிரி
பாத்தானுங்க…

அடுத்த 10வது நிமிஷம் வீட்ல இருந்தேன்.

” அப்பா “-னு ஓடி வந்து என் ரெண்டு
பசங்களும் என் காலை கட்டிகிட்டானுங்க.

” வந்துட்டீங்களா.! “-னு என் Wife கிச்சன்ல
இருந்து சந்தோஷமா வந்தாங்க…

( “அன்பாலே அழகாகும் வீடு ” – அது இதானோ..!? )

நான் புல்லரிச்சி போயி நிக்கறேன்..

” ஏங்க.. உங்க புது Smartphone-ஐ குடுங்க..
Temple Run 2 விளையாடணும்.. அதுக்காக
தான் நாங்க ரொம்ப நேரமா Waiting..! ”

” அடப்பாவிகளா..?!! ”

ரசித்த இடம்: http://gokulathilsuriyan.blogspot.in

நேத்து ராத்திரி ஒரு மோகினிப்பிசாச
நடந்து வர்றதை என் மனைவி பார்த்துட்டு,

என்னை எழுப்பி…

பயத்துல கட்டிப்பிடிச்சிட்டாங்களா?

.ஊஹூம்… அந்த
மாடல்லே கொலுசு வேணும்னு
கேட்டா..!

ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. விஷயம் முனிவரிடம் வந்தது. அவர் சீடர்களிடம், சீடர்களே! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதாமாகும். அதோ! இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள், என்றார்.

குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல், முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடன் சற்று பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே தாண்டில் மரத்தை தொட்டான். பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான். மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா! கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன், என்றான் பெருமையோடு.

இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான். அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர். அவர்கள் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். சிஷ்யனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்தான்.

இப்போது முனிவர் முதல் சீடனிடம், இரண்டாவது சீடன் தான் அதிபுத்திசாலி என்றார்.முதலாமவன் கோபப்பட்டான். சுவாமி! இன்னும் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படி சிறந்தவன் என சொன்னீர்கள்? என்றான்.முனிவர் அவனிடம், சிஷ்யா! நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டி தான்! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன்.

இரண்டாம் சீடனோ பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும் இன்னும் பல நாட்கள் பழங்கள் கிடைக்கும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே அதிபுத்திசாலி, என்றான்.இங்கே செயல் ஒன்று தான். ஆனால், செய்த விதத்தில் தான் வித்தியாசம்

Courtesy: Facebook

செல்வா சிறந்த கடவுள் பக்தர் என்பது நாமறிந்ததே.
சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் மாலை நேரம் செல்வா ஒரு சிற்றுண்டிக்கடையில் அமர்ந்து அவித்த முட்டை ஒன்றைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவும் போதுதான் அன்று வெள்ளிக்கிழமை என்பதும் அதுவும் ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதும் ஞாபகத்திற்கு வந்தது.
”ஐயோ! ” வெனத் தலையில் அடித்துக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பி வீட்டிற்கு வந்தார்.தெய்வக்குத்தம் ஆகிவிட்டதேயென்று ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தார்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு மிகச்சிறந்த யோசனை தோன்றியது. சந்தோசத்தில் செல்வாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தமிழ்ப்பட வில்லன்களைப் போல வானத்தைப் பார்த்து இரண்டு முறையும் பூமியைப் பார்த்து இரண்டு முறையும் சிரித்துவிட்டு ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து “ இன்று நான் இட்டது சைவ முட்டை” என்று எழுதினார்.
பின்னர் பக்கத்தில் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்த கோழியைப் பிடித்து அதன் காலில் மை தடவி வழுக்கட்டாயமாக அதனை அந்த வெள்ளைப் பேப்பரில் கோழியின் கால் ரேகையைப் பதித்தார்.
அதாவது கோழி அன்று இட்ட முட்டை சைவம் என்று கோழியே உறுதியளித்துள்ளது என்பதே செல்வாவின் யோசனை. அதற்கான சாட்சிதான் இந்தப் பத்திரம்.
பின்னர் வழக்கம்போல அன்று மாலை கோவிலுக்குச் சென்றார். ஆனால் திடீரென்று அவர் முன்னால் தோன்றிய கடவுள் “ முட்டை சாப்பிட்டுட்டு கோவிலுக்குள் வராதே! “ என்று மிரட்டலாகச் சொன்னார்.
“ ஐயனே நான் முட்டை சாப்பிட்டது உண்மைதான், ஆனால் அது சைவ முட்டை. இதோ அந்தக் கோழியே சாட்சியளித்துள்ளது!” என்று அந்தப் பேப்பரைக் கடவுளிடம் நீட்டினார் செல்வா.
அதை வாங்கிப்பார்த்த கடவுள் ஒரு புன்னைகையுடன் சொன்னார் “ லூசு, இது சேவலோட கால் ரேகை!”
ரசித்த இடம்: http://www.selvakathaikal.blogspot.in
செல்வாவின் நண்பர் ஒருவர் செல்வாவைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்திருந்தார்.
வீட்டிற்குள் நுழைந்தவருக்கு அங்கு அவர் கண்ட காட்சிகள் சிரிப்பினை வரவைத்தன. மேலும் சில இடங்களில் குழம்பியும் போனார்.
வீட்டின் முற்றத்தின் ஒரு பக்கத்தில் கொசுக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. மற்றொரு பக்கம் கொசுவின் படம் போட்டு அனுமதி இல்லை என்பதுபோல அதன்மேல் சிவப்புக் கோடு போடப்பட்டிருந்தது. அவர் செல்வாவின் நண்பர் என்பதால் ஒரு பக்கம் இருப்பது படித்த கொசுக்களுக்கான எச்சரிக்கை , மற்றொரு பக்கம் இருப்பது படிக்காத பாமரக் கொசுக்களுக்கான எச்சரிக்கை என்பதைப் புரிந்து கொண்டார்.
அதே போல இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றவர் அங்கு கண்ட காட்சியால்  சிரிப்பினை அடக்க முடியாமல் வாய்விட்டே சிரித்துவிட்டார். அங்கு பூனை போன்ற ஒரு வடிவம் செய்து அதன் மேலே எலிகள் ஜாக்கிரதை என்று எழுதப்பட்டிருந்தது. அந்த வடிவத்தினை ஒரு எலி தின்றுகொண்டிருந்தது.
” டேய் , உன்னோட பூனைய எலி திங்குதுடா ? “என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
” ச்சே ..அந்த எலிக்கு இருக்குற தைரியம் கூட நான் வளர்த்த பூனைக்கு இல்லையே ! ” என்று சலித்துக்கொண்டார் செல்வா.
” என்ன சொல்ற ? “
” ஆமா இதே மாதிரி இரும்புல எலி மாதிரி பண்ணி இது மாதிரி எதாச்சும் வந்தா பிடிக்கணும்னு நான் வளர்த்த பூனைகிட்ட சொன்னேன் .. அந்தப் பூனை அந்த இரும்பு எலிய கொஞ்சநேரம் கடிச்சுப் பார்த்திட்டு அப்புறம் கீழ போட்டிருச்சு.. இப்ப உண்மையான எலி வந்தா கூட பிடிக்க மாட்டேங்குது ! “
நண்பருக்கு மேலும் சிரிப்பு. அப்பொழுது செல்வா ” அங்க ஒரு மெழுகுவர்த்தி ஏத்தணும் , நான் எவ்ளோ நேரம் முயற்சி பண்ணினேன் ..ஆனா கெட்டுக் கெட்டுப் போகுது . நீ பத்த வச்சுத் தரியா ? ” என்றார்.
” சரி வா ” என்று செல்வாவுடன் அவர் காட்டிய அறையை நோக்கிச் சென்றார். அந்த அறையின் நுழைவாயிலிலும் அதே போல ஒரு பக்கத்தில் ” காற்றுக்கு அனுமதி இல்லை, மீறினால் பலூனில் அடைக்கப்பட்டு பாம் வைத்துக் கொல்லப்படும்” என்று எழுதப்பட்டிருந்தது. இதை படித்ததும் நண்பருக்கு மறுபக்கத்தில் எப்படி எழுதியிருப்பான் என்று ஆச்சர்யம் வந்தது. மறுபக்கத்தில் மோட்டார் ஒன்று பொருத்தப்பட்டு ஒரு குழாயின் மூலம் அதிலிருந்து வந்த காற்றானது அந்த இடத்தில் வெளியேறுமாறு வைக்கப்பட்டு அங்கே அனுமதி இல்லை என்பது போன்ற சிவப்புகோடு போடப்பட்டிருந்தது.
” டேய் என்னடா , இது ? “
” அதான் நான் இங்க மெழுகுவர்த்தி வச்சா வச்சா காத்து வந்து அணைச்சிடுது. அதனாலதான் இப்படி ! “
” அதுக்கு ஏன் இப்படி ? “
” லூசாடா நீ , காத்துக்கு உருவம் இல்லைல , அதுக்கு எப்படி சிம்பல் போடுறது , அதான் ஒரிஜினல் காத்து அடிக்கிற மாதிரி செட் பண்ணிட்டேன் ” என்றார் செல்வா.
” இப்ப மெழுகுவர்த்தி கெட்டுப் போறதுக்கு காரணமே இந்த மோட்டர்ல இருந்து வர்ற காத்துதான் , உன்னப் பார்த்து சிரிக்கிறதா அழுகறதா ? ” என்றவாறு அந்தக் குழாயை பிடுங்கினார்
ரசித்த இடம்: www.selvakathaikal.blogspot.in

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?

ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்….

ஆண்:ம்ம்ம்ம்ம்….. நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ…!

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!

பெண்: 😐

****************************************

ரசித்த இடம்: G+ இல் Rajagopal SM

காலைல எழுந்திருக்க ரொம்ப லேட் இன்னைக்கு.

அவசர அவசரமா ப்ரஷ் பண்ணிட்டு, ‘சுடுதண்ணி வெச்சிருப்பாங்களே’ன்னு சமையல் அறைக்குப் போனேன்.

நம்ம வீட்ல ஹீட்டர்லாம் கெடையாது. இட்லிப் பானைலதான் சுடுதண்ணி வைப்பாங்க. நல்ல்ல்லா சுடணும், சீக்கிரம் ஆகணும்னு மூடிபோட்டு தண்ணி சுட வைப்பாங்க.

நான் சமையலறைக்குப் போனப்ப, அந்த இட்லிப் பாத்திரம் கொதிச்சுக்கிட்டிருந்தது. ‘ப்பா.. இன்னைக்கு செம்ம குளியல் போடணும்டா’ன்னு அவசர அவசரமா பக்கத்துல இருந்த துணியை எடுத்துப் பாத்திரத்தைப் புடிச்சுகிட்டே பாத்ரூம் போய் வெச்சேன்.

துண்டெடுக்க போறமுன்னாடி வெளாவி வைக்கலாம்னு பாத்திரத்தைத் தொறந்தா…

உள்ள இட்லி வெந்துகிட்டிருக்கு!

மண்டைகாஞ்சு போய் ‘உமா பார்க்கறதுக்குள்ள மறுபடி கொண்டு போய் வெச்சுடணும்டா’ன்னு எடுத்தா, பின்னாடியே நிக்கறாங்க!

——-

கெளம்பறப்ப பூரிக்கட்டையைத் தொடைச்சுட்டு இருந்தாங்க. அநேகமா இன்னைக்கு நைட் பூரிதான்னு நினைக்கறேன் வீட்ல.

G+ இல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டவர்: பரிசல்காரன் கிருஷ்ணா

RT @maethaavi: பையில் பணமிருக்கும் மனிதனுக்கு இருக்கும் தைரியம், கடவுளுக்கே அதை பிச்சை போட சொல்லுகிறது..
RT @Alexxious: வேலை இடம் சரி இல்லை என்பவர்களே , துப்புரவு பணியாளர்கள் வொர்க் அட்மாஸ்ஃபியர் பார்க்க ஆரம்பித்தால் உலகம் நாறிடும் !!
RT @MissLoochu: மனைவி சீரியல் பார்க்க கணவன் டிவிட்டரில் மொக்கை போட குழந்தை திருதிருன்னு முழிக்கும் உலகமிது
RT @RealRenu: ரகசியம்னு சொல்லிட்டு ஊருக்கே கேட்குற மாதிரி காதுல சொல்ற கலை குழந்தைகளுக்கு மட்டுமே தெரிந்தது !
RT @tamilyouthcafe: மற்றவரை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவர்கள் என்பதற்கு சரியான உதாரணம் ERASER

RT @karaiyaan: முதலாவது நமக்கு பெண்ணாக பிறக்கட்டும் – தவறவிட்ட உனது முதலிருபது வருடங்களை அவள் உருவில் கண்டு ரசிப்பேன்!! RT @KaarVannan Superb!
RT @arasu1691: கோபித்துக்கொண்டால் சமைக்காமல் படுத்துக்கொள்வது மனைவி..சமைத்துவிட்டு சாப்பிடாமல் படுத்துக்கொள்வது அம்மா #அம்மா
RT @sweetsudha1: ஒரு வெஜ் பி‌ட்ஸா கொடுங்க! நாலா கட் பண்ணட்டுமா? எட்டா கட் பண்ணட்டுமா? நாலாவே கட் பண்ணுங்க. என்னால எட்டு ‌‌பீஸ திங்க முடியாது
RT @Siva_Buvan: நீ LO LO னு அவ பின்னாடி அலையணும்.. அதுக்கு அவ VE VE VE னு சொல்லிட்டுப் போவா..! #இதாம்லே LOVE!

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6 பாக்கலன்னா பார்த்துருங்க

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம பொன்ராஜ் .

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம பொன்ராஜ் க்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி – “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், பொன்ராஜ் .

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” – செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம பொன்ராஜ் .

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்… டிக் டிக்… டிக் டிக்…

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா… ” – மனசுக்குள் பொன்ராஜ் .

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

பொன்ராஜ் அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

பொன்ராஜ் ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” – கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”

—–
தமிழன்டா !!!!!

நீதி :- ஹாஹாஹா…! விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!

Courtesy: Sukumar Swaminathan

எங்க கணக்கு வாத்தியார் இன்னைக்கு பயங்கர கடுப்புல வந்தாரு. இப்போ தான்  இடைவகுப்புதேர்வு முடிஞ்சுச்சு. சரி ரொம்ப சொதப்பிட்டோம் போலன்னு மெல்லமா என்னன்னு கேட்டா நம்ம பசங்க எழுதுன சில பதில்களை காமிச்சாரு. ஏன் அவருக்கு கோவம் வந்துச்சுன்னு தெரியல. உங்களுக்கு ஏதாவது புரியுதான்னு சொல்லுங்களேன்

.

.

.

.

.

.

.

.

.

Courtesy: Google images


டீம் லீடர்

வேலைக்கு ஆள் தேடும் டேமேசர்

கூட்டு உழைப்பு

வருடாந்தர ரிவியு கூட்டத்தில் நாம்

நமக்கு படி அளக்கும் அப்பாவி கிளயன்டிர்க்கும் நமக்கும் நடுவில் சண்டை மூட்டி உயிர் வாழும் நம் ஆன்சைட் கூட்டாளி

ஒவ்வொரு தப்பு கண்டு பிடிக்கும் போது நம்முடைய முகம் இப்படி தானே இருக்கும்

ஓவர் டைம் செய்து களைத்த நாம் தூங்குவது இப்படி தானே

விடுமுறை கேட்க்கும் போது

Courtesy: Funtoosh.com

கையில 15,000 ரூபா இருக்கு
என்ன பண்ணலாம்..?

Fridge-ஐ மாத்திட்டு புதுசு வாங்கலாமா..?

TV-ல விளம்பரம் வர்ற அந்த
புது மாடல் Fridge கூட பாக்க
நல்லா தான் இருக்கு.,

கூடவே Offer-ல ஒரு குக்கர் வேற
தர்றாங்கலாம்..

சரி., நாளைக்கே அதை வாங்கிடலாம்..!

இப்படி சில பேர் டக்கு டக்னு முடிவு
எடுத்துடறாங்க.. இது ரொம்ப தப்பு..!

( ஆமா.., இதுல என்ன தப்பு இருக்கு..? )

” என்ன தப்பு இருக்கா…? சொல்றேன்
நோட் பண்ணிக்கோங்க…! ”

1. 15,000 ரூபா இருக்குங்கறதுக்காக
அதை செலவு பண்ண நினைக்கிறது
முதல் தப்பு.

2. பழசுங்கறதுக்காக நல்லா இருக்குற
ஒரு பொருளை மாத்த நினைக்கிறது
ரெண்டாவது தப்பு.

3. புது Fridge வாங்கணும்னு முடிவு
பண்ணினதும்., உடனே வாங்கிடணும்னு
துடிக்கிறது மூணாவது தப்பு.

4. ” எந்த Fridge நல்லா இருக்குன்னு..? ”
தெரிஞ்சவங்க நாலு பேர்கிட்ட Opinion
கேக்காதது நாலாவது தப்பு.

5. Free-யா வருதேன்னு தேவையில்லாத
குக்கர்க்கு ஆசைப்படறது அஞ்சாவது தப்பு..!

6. Offer-ன்னு சொல்லி தரமில்லாத
Fridge-ஐ வாங்க நினைக்கிறது
ஆறாவது தப்பு..!

இப்படிக்கு..,

வீட்டில் சொல்ல முடியாததை எல்லாம்
தைரியமாக Blog-ல் சொல்லுவோர் சங்கம்..

சேலம் கிளை.

( அவ்வ்வ்வ்….!!! )
.

சேலம் கிளை தலைவர் முகவரி: http://gokulathilsuriyan.blogspot.com

RT @iamkarki: 4வது படிக்கும் போது ஹோம் ஒர்க் பன்ணலைன்னு கவலைப்பட்ட நண்பனிடம், நீதான் ஹாஸ்டலில் இருக்கிறியேன்னு ஆறுதல் சொன்னேனாம். #அம்மா கொசுவர்த்தி
RT @iamkarki: சில பொண்ணுங்க வேலைன்னு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துடுறாங்க. சாக்ஸ கைல போட்டுட்டு ஷூவ கால போட்டுட்டு ஒரு பொண்ணு ஆஃபீஸ் போகுது
RT @Tottodaing: சுவிஸ் வங்கியில் பாண்டிய மன்னர்களின் பணம் முதலீடு?: விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு # என்ன பாண்டியா!.. இப்டி ஆயிடுச்சே பாண்டியா!
RT @thoatta: வாக்கிங் போன எங்க தெரு பெருசுகளை ஜாக்கிங் ஓட விட்டுக்கொண்டிருக்கிறது காத்து.!
RT @aLLiSweLLsR: குசும்பு NO 1 RT @NforNeil: வறுமை கோட்டை அழிக்கவாவது இனி நம் நாட்டில் அதிக அளவு ‘ரப்பர்’ மரங்கள் வளர்க்கபடவேண்டும்
RT @_santhu: ஜோசியம் பார்ப்போமா மாட்டோமான்னு அவங்களுக்கு ஜோசியம் தெரியாதா?? எதுக்கு ஒவ்வொருத்தரா ஜோசியம் பாக்றிங்களான்னு கேட்டுக்ட்டு
RT @thoatta: எல்லா ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களும் ஒரு முறை அமைச்சரானா அது தமிழ்நாடு, எல்லா எம்.எல்.ஏக்களும் ஒரு முறை முதல்வரான அது கர்நாடகா
RT @Tottodaing: ஆசைப்பட்டவுடன் கேட்டுவிடுவது, கிடைக்காவிட்டால், அழுதுவிட்டு அத்தோடு மறந்து விடுவது! # நமக்கு இல்லாமல் போயிற்றே…. குழந்தை மனது!
RT @drkvm: RT@iamkarki சைட்டடிக்க வேண்டியது அம்மாவையா பொண்ணையான்னு சந்தேகம் வந்தா உங்களுக்கு வயது 28-30

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5 பாக்கலன்னா பார்த்துருங்க

கணக்கு என்றாலே நம்மில் பலருக்கு ஆமணக்கு, அதிலும் இவர்கள் சொல்லித்தருவது போல கணக்கு போட்டால் விடை சரியாக வராது…சிரிப்பு தான் வரும்…  வார இறுதி, சிரிச்சுக்கிட்டே  சந்தோசமாக உங்கள் விடுமுறையை ஆரம்பிக்க  இந்த காணொளிகளை உங்களோடு இன்று பகிர்ந்துகொள்கிறேன்.

Courtesy: http://adhithakarikalan.wordpress.com

கேள்வி: 18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த ஓவியர்கள் பற்றி எழுதவும் ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
பதில்: அவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள்!
Back Bench Boyz Rockzzzzzzz 🙂

Courtesy: Vijay Saravanan

ஆமாங்க.சும்மா சும்மா’வ பற்றி எழுதிய பதிவ சும்மா படிங்க.என்ன இத்தன ‘ சும்மா’ன்னு பாக்கீறீங்களா?.இது ‘சும்மா’ என்ற வார்த்தையை பற்றிய பதிவு.
‘சும்மா’ என்கிற வார்தைக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு.அதைப் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம்.

·         ஒருவனிடம் “இன்னிக்கு முழுவதும் வீட்டில் என்ன செய்தாய்?”என்று கேட்டால் அவன் கூறுவான் “சும்மாதான் இருந்தேன்.” என்று.அப்படியென்றால் “சும்மா” என்பது இங்கு எதையுமே செய்யாமல் வெட்டியாக இருந்ததை குறிக்கிறது.
·         ஒருவன் ஒரு பெண்ணை உற்று பார்த்துக்கொண்டே இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.அந்த பெண் அவனிடம் “எதுக்கு என்னை பார்த்தாய்?” என்று கேட்டால் அவன் கூறுவது “சும்மாதான் பார்த்தேன்” என்பதாகத்தான் இருக்கும்.இங்கு அவன் அந்த பெண்ணிடமிருந்து தப்பிக்க ஏதோ கூறவேண்டுமென்று ‘சும்மா’என்கிறான்.
·         “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டால் அதற்கு மற்றொரு கேள்வியை கேட்பீர்கள் “எதற்காக கேட்கிறாய்?”என்று.அதற்கு ஒரு சிலர் “சும்மாதான் கேட்கிறேன்” என்று பதில் அளிப்பார்கள்.இங்கு ‘சும்மா’ என்றால் ‘தெரிந்து கொள்ள’ என்ற அர்த்ததில் வருகிறது.
·         “என்ன பன்ற?”
“சும்மா,படிச்சுக்கிட்டு இருக்கேன்”
இங்கு ‘சும்மா’ என்பது கருத்தோடு ஒரு செயல் செய்வதை குறிக்கிறது.
·         “என்ன திடீரென்று என் வீட்டிற்கு வந்திருக்கிறாய்?”
“சும்மா,இந்த பக்கம் வேலை இருந்தது.அப்படியே உன்னையும் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன்”
இங்கு ‘சும்மா’ என்பது எதேர்ச்சையாக நடைபெற்ற செயலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
·         “நேர்க்காணல் என்னவாயிற்று?”
“வழக்கம் போலதான்.வேலை கிடைக்காது என்று தெரியும்.சும்மாதான் போயிட்டு வந்தேன்.”
இங்கு ‘சும்மா’ என்பது நடக்கப் போவதை தெரிந்துகொண்டே செய்வதை குறிக்கிறது.
·         “புது பேனாவா?”
“ஆமாம்.இந்த புத்தகத்தை வாங்கும்போது சும்மா கெடச்சுது.”
‘சும்மா’ என்பதற்கு ‘இலவசம்’ என்றும் பொருள் வருகிறது.
·         “இந்த குழந்தை சும்மா சும்மா அழுவுது” என்று நாம் கூறுவதுண்டு.இங்கு ‘சும்மா சும்மா’ என்றால் ‘அடிக்கடி’ என்று பொருள்படுகிறது.
·         “சும்மா இருக்கிறவனை ஏண்டா வம்புக்கு இழுக்குற?”
‘சும்மா’ என்றால் வம்புக்கு போகாமல் தன் வேலையைப் பார்த்தால் என்பது அர்த்தம்.
·         வகுப்பறையில் வாத்தியார் “எல்லாம் பேசாம சும்மா இருங்க” என்றால் அமைதியாக இருங்கள் என்று அர்த்தம்.
·         யாராவது உங்களை தொந்தரவு செய்துகொண்டிருந்தால் “கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறாயா?” என்று கேட்போம்.அதாவது “என்னை தொந்தரவு செய்யாதே” என்பதற்கு மாற்றாக அதை கேட்கிறோம்.
·         “அந்த பையில ஏதாவது இருக்கா?”
“இல்ல.சும்மாதான் இருக்கு.”
அதாவது காலியாக இருக்கிறது.
·         வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர் உங்களுக்கு எதுவும் எடுத்து வரவில்லை என்றால் “வெளிநாட்டிலிருந்து வருகிறீர்கள்.சும்மாவா வருவது?” என்று கேட்போம். ‘சும்மா’ என்பது வெறும் கையோடு வந்ததை குறிக்கிறது.
·         “அய்யோ! பாம்பு!”
“அய்யோ! எங்க?”
“ஏய்! பயந்துட்டியா? சும்மா சொன்னேன்.”
‘சும்மா’ என்பது ‘பொய்’ என்று பொருள் தருகிறது.

இந்த மாதிரி ‘சும்மா’ என்ற வார்த்தை நேரம் மற்றும் இடத்திற்கு தகுந்தாற்போல் தனது அர்த்தத்தை மாற்றிக்கொள்கிறது.‘சும்மா’பற்றி இன்னும் எழுதவேண்டும் என்றால் சும்மா எழுதிக்கிட்டே போகலாம். ஆனா உங்களுக்கு கடுப்பாகுமே!
அப்புறம் ஏன் இத எழுதினேன்னா கேக்கிறீங்களா? அது ஒன்னும் இல்லைங்க.நானும் வீட்டில சும்மாதான் இருக்கேன்.அதான் சும்மா எழுதினேன்.
சும்மா உக்காந்து யோசிச்சது: http://tamilcrazy.blogspot.in

இவங்க ஏன் இப்படி வண்டி ஓட்டுறாங்க தெரியுமா?

இப்போ

இப்போ  இப்போ

இன்னும் கண்டு பிடிக்க முடியலையா?

அவங்க கிட்ட ரெண்டு சக்கர வாகனம் ஓட்ட தான் licence இருக்காம். அதான்

courtesy: http://www.funtoosh.com

கோழிப்பண்ணை வச்சார் சர்தார்ஜி! முதல்ல 100 கோழிக்குஞ்சுகளோட ஆரம்பிச்ச சர்தார் விரைவிலேயே இன்னொரு 100 குஞ்சுகளுக்கு ஆர்டர் குடுத்தாரு..! அடுத்த மாசமே இன்னொரு 100 வாங்கினாரு!

சப்ளை பண்றவர்: என்ன சிங்கு..? வியாபாரம் எகிறுது போலருக்கு…?

சர்தார்ஜி: எங்கே..? எல்லா குஞ்சும் செத்து செத்து போகுது…!

சப்ளை பண்றவர்: என்னது..? செத்துடிச்சா..? தண்ணியெல்லாம் காமிச்சியா…?

சர்தார்ஜி: அதெல்லாம் சரியாதான் செஞ்சேன்! மண்ணு தான் சரியில்லேன்னு நெனைக்கிறேன்…!

சப்ளை பண்றவர்: என்னது? மண்ணா..?

சர்தார்ஜி: ஆமாம்.. ரெண்டு அடி ஆழத்துல பொதைச்சாலும் கோழி முளைக்க மாட்டேங்குது…! அரை அடி ஆழத்துல பொதைச்சாலும் முளைக்க மாட்டேங்குது…!

சப்ளை பண்றவர்: தலைசுத்தி விழுந்தான்!

ஏன்னா…, சர்தார் முதலில் வச்சிருந்து விவசாயப் பண்ணை!

courtesy: http://eutamilar.eu

வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. உடனே குடும்ப தலைவர் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து விளக்கம் கேட்டார்.

அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் பாருங்க இவ்வளவு தொகை வந்து இருக்கு பாருங்க. யார் இதற்க்கு காரணம்?
அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது
மகன்: நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்லாக்பெர்ரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாது அப்பா
இப்போது அனைவைருக்கும் ஒரே அதிர்ச்சி. நாம் யாரும் உபயோக படுத்தலன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க. அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான்: உங்கள மாதிரி தான் நானும். என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன். என்ன தப்பு?
நீதி: சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதே இல்ல வேறொருவர் நமக்கு அத செய்யும் வரை.

ஆங்கில மூலம்: http://rammalar.wordpress.com

சமீபத்தில் திருமணமான உயிர் நண்பன், படத்துக்கு கூப்பிட்டாக் கூட ரொம்ப நல்லவன் மாதிரியே பேசுனான். இடையில இடையில அவன் மனைவியோட சிரிப்புக்குரல் வேற கேட்டுச்சு. ரொம்ப நல்லவன் மாதிரி சீன் போடுறானேனு, டவுட்டோட,

“ஏன்டா ஸ்பீக்கர் போட்டு பேசுறியாடா?”னு கேட்டேன்.

“இல்லையே”ன்னான்.

“ம்.. சரி சரி..  அப்புறம் மச்சி.. பழைய ஃபிகர் சுப்ரபா கூட இன்னும் கான்டாக்ட் இருக்காடா?”ன்னு ஒருவார்த்தைதான் கேட்டேன்.

அப்ப கட் ஆன கால்தான்.

# பயபுள்ள பொய் சொல்லிட்டான் போலிருக்கு

Courtesy: http://valaimanai.blogspot.in

தொப்பி வியாபாரி.. குரங்குகள் தொப்பி தூக்கிக் கொண்டு ஓடின.. வியாபாரி தான் போட்டிருந்த தொப்பி கீழே போட்டார் எல்லாக் குரங்குகளும் தொப்பியைத் தூக்கி எறிந்தன.. இப்படியான படக் கதை எல்லோருமே சின்ன வயசிலே பாடப் புத்தகத்திலே படித்திருப்போம்

ஏன் குரங்கு இப்படி செய்ய வேண்டும்

சார்லஸ் டார்வின் ஒருதரம் குறிப்பிட்டாராம் : யாராவது ஜேவலின் த்ரோ போட்டியில் வேலை எறிவதைப் பார்க்கும் போது, நம்மை அறியாமல், நாமும் முட்டியை அவர் போலவே செய்வதுண்டு, அதே போல் கத்திரிக்கோலை வைத்து யாராவது எதையாவது வெட்டும் போது, அதைப் பார்ப்பவரின் தாடை இறுகியும் பின்னர் தளர்வதுமுண்டு

சினிமாவிலே வரும் உணர்ச்சிக் காட்சிகளில், பார்ப்பவர்களுக்கு கண்ணீர் வருவது

Giacomo Rizzolatti என்பவரின் ஆராய்ச்சிகளைப் பற்றி வாசிக்க நேர்ந்தது ( உபயம் : The Tell Tale Brain என்ற புத்தகம்… இந்தப் புத்தகத்தை நாலு தரம் முழுசாக வாசித்து விட்டேன்.. அங்கிருந்து மேலும் வாசிக்க வேணும் என்பதான சங்கதி Giacomo Rizzolatti பத்தினது)

மிரர் நியூரான் என்பதைக் குறித்த இவரது ஆராய்ச்சி, தொடர் ஆராய்ச்சி அதன் விபரங்கள் ரொம்பவுமே வசீகரிக்கிறது

Giacomo Rizzolatti பத்தின விபரம் ( போன் நம்பர் , இமெயில் ஐடி உட்பட http://www.unipr.it/arpa/mirror/english/staff/rizzolat.htm இங்கே சிக்குகிறது)..

இங்கே அவரின் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பிடிஎப் கிடைக்கிறது

“அப்படி என்ன கண்ணு விரிய இத்தனை காலங்கார்த்தால எழுந்து எல்லார் தூக்கமும் கெடுத்து லைட் போட்டுண்டு படிச்சாறது”

ரொம்ப ஆர்வமாக என் கேட்ட என் மனைவிக்கு விளக்கம் சொன்னேன்

“எனக்கு இப்போது டீ வேண்டும்,, எதோ பொஸ்தகம் அலமாரிலேர்ந்து எடுத்து வரச் சொல்லப் போறன்.. இது மாதிரி என் இன்டென்ஷன் எல்லாம் என்னோட ஆக்டிவிடிலேர்ந்து உன் மூளைல இருக்கிற மிரர் நியூரான் பண்றதாம்.. மிரன் நியூரான்ன்னா என்னான்னா…… ” நல்ல விளக்கமா சொன்னேன்

“எல்லா பொண்ணுங்களுக்கும் அப்படின்னா இந்த மாதிரி மிரர் நியூரான் ஜாஸ்தி இருக்குனு சொல்லுங்கோ”

“அது தெரியலம்மா ஆனா ராமசந்திரன் பொஸ்தகத்திலே வேற மாதிரி போட்டிருக்கு”

“என்ன போட்டிருக்கு”

“மனுஷாளை விட சிம்பன்சி, ஒரங்குட்டான் மாதிரி பிராணிகளுக்குத் தான் மிரர் நியூரான் ஜாஸ்த்தியாம்”

எனக்கு ரிஃப்ளெக்ஸ் போதவில்லை.. வேகமாக எறியப்படும் கரண்டி முன் நெற்றியில் படாமல் விலகிக் கொள்ளத் தெரியவில்லை

Courtesy: G+ Chandramowleeswaran. V

ஒருத்தன் இண்டர்வ்யூ போனானாம். ஆஃபீஸர் டேபிள்மேல துப்பாக்கிய வெச்சு, ‘நெக்ஸ்ட் ரூம்ல உன் பொண்டாட்டி இருக்காங்க. அவங்களை ஷுட் பண்ணினா, உனக்கு இங்க ஒரு லட்சம் சம்பளத்துல வேலை’ன்னாராம்.

”பொண்டாட்டியக் கொன்னு, கிடைக்கற வேலை வேணாம்”ன்னுட்டு போய்ட்டான் அவன்.

ரெண்டாவது வந்தவன்கிட்டயும், ஆஃபீஸர் அதையே -நெக்ஸ்ட் ரூம்ல உன் பொண்டாட்டி இருக்காங்க. அவங்களை ஷுட் பண்ணினா, உனக்கு இங்க ஒரு லட்சம் சம்பளத்துல வேலை – சொன்னார். அவன் துப்பாக்கிய எடுத்துட்டு நேரா அந்த ரூமுக்குப் போனான். அங்க அவனோட மனைவி நின்னுட்டிருந்தாங்க. அவங்க முகத்தைப் பார்த்ததும் மனசு மாறி, துப்பாக்கியை ஆஃபீஸர்கிட்டயே குடுத்து ‘போய்யா – நீயும் உன் வேலையும்’ன்னுட்டுப் போய்ட்டான்.

மூணாவது ஒருத்தன் வந்தான். அவன் பொண்டாட்டி, நெக்ஸ்ட் ரூம்ல இருந்தாங்க. அவன்கிட்டயும் ஆஃபீஸர் அதைச் சொன்னார். அவன் துப்பாக்கியத் தூக்கீட்டு அந்த ரூமுக்குப் போனான்.

கொஞ்ச நேரத்துல அந்த ரூம்லேர்ந்து அவனோட மனைவி ‘ஐயோ.. அம்மா’ன்னு அலர்ற சத்தம்.

ஆஃபீஸர் ஓடிப் போய்ப் பார்த்தார். மனைவி தலைல ரத்தம் ஒழுகுது. வந்த ஆஃபீஸர் ஓடிப்போய்த் தடுக்க, அவன் சொன்னான்:

“சார்…. கொல்லச் சொல்லீட்டு உள்ள புல்லட் வைக்காம குடுத்துட்டீங்க. அதான் திருப்பிப் போட்டுச் சாத்தீட்டிருந்தேன்

Courtesy: பரிசல்காரன் கிருஷ்ணா in G+

பிரான்ஸ் நாட்டில உள்ள ரெண்டு நண்பர்கள் நீண்ட நாளைக்கு அப்புறமா சந்தித்திருக்கிறாங்க. “காட்டான் அண்ணே, உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு” அப்படீன்னு துஸிப் பையன் சொல்லியிருக்கான். பதிலுக்கு காட்டானும் ஆமாங்க, “ரொம்ப நாளாச்சு துஸியந்தன்” அப்படீன்னு பேசியிருக்காரு.
“அப்படீன்னா வாங்கண்ணே, காப்பி சாப்பிட்டு பேசுவோம்”என்று எதிர்த்தாப்பில இருந்த காப்பி சாப் பக்கமா கையை காண்பித்து கேட்டிருக்காரு துஸி.
“இல்ல தம்பி, நான் வீட்டிற்கு போற டைம்மாகுது” அப்படீன்னு சொல்லி நழுவப் பார்த்திருக்காரு காட்டான்.
“ரொம்ப நாளைக்கு அப்புறமா பார்த்திருக்கோம். சொல்லுங்கண்ணே,ஒங்க வீட்டுக்காரங்க, புள்ளைங்க எல்லோரும் சௌக்கியமா இருக்காங்களா?” அப்படீன்னு கேட்டிருக்காரு துஸி.
“நான் வீட்டிற்கு போகனும்”, அப்படீன்னு மறு மறுபடியும் சொல்லியிருக்காரு காட்டான்.

இதனால ரொம்பவே கடுப்பான துஸி, “என்னங்க அண்ணே! ரொம்ப நாளைக்கு அப்புறமா ரெண்டு பேரும் மீட் பண்ணியிருக்கோம். வீட்டிற்கு போக துடிக்கிறீங்க. வீட்டில ஏதாச்சும் விஷேசங்களா?” அப்படி கேட்டிருக்காரு. ”விஷேசம் ஒன்னுமில்லை.என் பொண்டாட்டி சாப்பிடாம எனக்காக காத்திட்டிருப்பா” அப்படீன்னு சொல்லியிருக்காரு காட்டான்.
“அடடா! கையை கொடுங்க சார்! இந்தக் காலத்தில இப்படி ஒரு பொண்டாட்டியா! அதுவும் கணவன் வரும் வரைக்கும் காத்திருந்து சாப்பிடுற பொண்டாட்டியா!” ஆச்சரியமா இருக்கே! என்று துஸியும் காட்டான் சாரைப் பத்தி பெருமையா பேசியிருக்காரு.
“அடப் போங்க தம்பி!அவங்களாச்சும் எனக்காக சாப்பிடாம காத்திட்டிருப்பதாவது. நான் போய் தான் அவங்களுக்கே சமைச்சு போடனும்” அப்படீன்னு சொன்னாரு காட்டான்.

Courtesy:  www.thamilnattu.com

ரங்கமணி: “இன்னிக்கி சமையல் என்ன பண்ணப் போறே?”
தங்கமணி: “நீங்க சொல்றதப் பண்ணீட்டாப் போச்சு.”
ரங்கமணி: “பருப்பும் சாதமும் பண்ணீடு.”
தங்கமணி: “நேத்து ராத்திரி தான் பருப்பும் சாதமும் சாப்டீங்க.”
ரங்கமணி: “காலிஃப்ளவர், உருளைக் கிழங்கு கூட்டு?”
தங்கமணி: “கொழந்தைங்களுக்கு அது புடிக்காதே.”
ரங்கமணி: “அப்போ பூரியும் சோளேயும் பண்ணு.”
தங்கமணி: “பூரி சோளே எனக்கு ஒத்துக்கறது இல்லீங்க. ஜீரணமாக மாட்டேங்குதுங்க.”
ரங்கமணி: “முட்டெக்கறி எல்லருக்கும் புடிக்குமே? அதெப்பண்ணு.”
தங்கமணி: “இன்னிக்கி வியாளெக் கெளெமெயாச்சே. எனக்கு விரத நாளு இல்லியா? முட்டெக் கறி எப்படிங்க பண்ணறது?”
ரங்கமணி: “பரோட்டா பண்ணீடேன்.”
தங்கமணி: “ராத்திரிலெ போய் பரோட்டாவா?”
ரங்கமணி: “அப்போ ஹோடல்லேந்து எதுனா வர வழிச்சுடலாம்.”
தங்கமணி: “தினோம் ஹோட்டல் சாப்பாடு வாணாங்க.”
ரங்கமணி: “பின்னெ மோர்க்குழம்பு சாதம் பண்ணீடு.”
தங்கமணி: “தயிர் இல்லியே.”
ரங்கமணி: “இட்லி சாம்பார் பண்ணு.”
தங்கமணி: “அதெப்படிங்க? திடீல்னு சொன்னா இட்லி பண்ண முடியும்? மொத நாளே மாவு அரைச்சு வெச்சாதாங்க இட்லி பண்ண முடியும். இல்லேன்னா அரைச்ச மாவு சாயங்காலமே வாங்கிட்டு வந்திருக்கணும்.”
ரங்கமணி: “மேகீ நூடுல்ஸ் பண்ணீடு.”
தங்கமணி: “நூடுல்ஸ் ஒரு சாப்பாடுங்களா? வயிறு ரொம்பாதுங்களே.”
ரங்கமணி: “அப்பொ என்னதான் பண்ணப் போறே ராத்திரிக்கி சமையல்?”
தங்கமணி: “நீங்க என்ன சொல்லுறீங்களோ அதைப் பண்ணுறேங்க.”

ரங்கமணி: “*?*?*?*? (மனதுக்குள்: கஞ்சி வரதப்பா… கஞ்சியாவது வருமாப்பா?)”

G+ டொனால்ட் ராபர்ட் பகிர்ந்தது

நாட்டில எல்லாரும் பொட்டி தட்டுரவங்கள பத்தி திட்டி கிட்டே இருக்கீங்க. பொட்டி தட்டுரவங்க வாழ்க்கை எப்படி எல்லாம் இருக்கு தெரியுமா?

நம்ம Google கிட்ட கேட்டப்போ கொடுத்தாரு இந்த படங்களை

நான் ரசித்தேன்……………………நீங்களும்????????????????.

.

.

.

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6பாகம் 7,  பாகம் 8,பாகம் 9 பாக்கலன்னா இப்போ பார்த்துடுங்க

நான் ரசித்தேன்……………………நீங்களும்????????????????.

.

.

.

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6பாகம் 7,  பாகம் 8 பாக்கலன்னா இப்போ பார்த்துடுங்க

போன சனிக்கிழமை என் பையன்
ஸ்கூல்ல Parents Meeting..

ஓவ்வொரு Parents Meeting-மே
ஒரு கண்டம் தான்..

ஸ்கூலுக்கு போன உடனே
எங்க பையனோட க்ளாஸ் மிஸ்ஸு
கண்ணுல சிக்கிட்டோம்..

உடனே அவங்களும் என் பையனோட
அருமை ( ?! )., பெருமைகளை (?! )
மூச்சு விடாம பேச ஆரம்பிச்சிட்டாங்க..

” உங்க பையனை என்னால Control
பண்ணவே முடியல சார்..! ”

” ஏன் மேடம்..?! என்ன ஆச்சி ”

” 1. க்ளாஸ்ல ஒழுங்கா ஒரு இடத்துல
உக்கார்றதே இல்ல.. அங்கே , இங்கே
தாவிட்டே இருக்கான்..

2. பக்கத்துல இருக்குற பசங்களை
க்ளாஸ் கவனிக்க விடாம சும்மா
தொண தொணன்னு பேசிட்டே இருக்கான்…

3. திடீர்னு எந்திரிச்சு ” டவுட் மிஸ்னு ”
Subject-க்கு சம்பந்தமே இல்லாம
எடக்கு மடக்கா கேள்வி கேக்கறான்..

4. மிரட்டினாலும் பயப்பட மாட்டேங்குறான்.!

5.அடிச்சாலும் அடங்க மாட்டேங்குறான்..!

நான் என்னதான் சார் பண்றது..?!! ”

” உஸ்ஸப்பா.. Same Complaint..! ”

” Same Complaint-ஆ..? என்ன சார்
சொல்றீங்க..?! ”

” டீச்சர் மாறிட்டாங்க.. ஆனா
Complaint மட்டும் மாறலைன்னு சொல்ல
வந்தேன்..! ”

” ஓ.. போன வருஷம் 3rd Std மிஸ்ஸும்
இதே தான் சொன்னாங்களா..?! ”

” ஹி., ஹி., ஹி… இல்லங்க மேடம்..
நான் படிக்கிறப்ப., எங்க க்ளாஸ் மிஸ்ஸும்
இதே Complaint தான் எங்கப்பாகிட்ட
சொல்லுவாங்க..! ”

” ??!?!?!!! ”
.

Courtesy: http://gokulathilsuriyan.blogspot.in

ஒருமுறை என்னுடைய நண்பரிடம் கேட்டேன் “உன்னுடைய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன?”அவன் சொன்னான், “பொறுப்புகளை பகிர்ந்து, ஒருவரையொருவர்  மதித்து வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் பிரச்சினையே இல்லை. “”புரியவில்லை” என்றேன்.

“என் வீட்டில், என் மனைவி சிறிய பிரச்சினைகள் மீது முடிவு செய்வாள், பெரிய விஷயங்களில் நான் முடிவெடுப்பேன்.  நாங்கள் ஒருவருடைய முடிவுகளில் மற்றவர் தலையிட மாட்டோம்.”
மீண்டும் “புரியவில்லை” என்றேன்.”நாம் என்ன கார் வாங்க வேண்டும், எந்த சோபா, துணி, வீடு, வேலைக்காரி, டிவி, மாத செலவுகள் இது போன்ற சிறிய பிரச்சினைகளை என் மனைவி முடிவு செய்வாள். நான் அதற்கு ஒப்புக்கொள்வேன்.”
 “உன்னுடைய பங்கு என்ன?” என்றேன்.
“பெரிய முடிவுகளை மட்டுமே நான் எடுப்பேன். சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறவேண்டும், அமெரிக்கா ஈரான்மீது தாக்குதல் நடத்த வேண்டும், அன்னா ஹசாரே உண்ணா விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் இது போன்ற பெரிய முடிவுகளை மட்டுமே நான் எடுப்பேன்.இதற்கு என் மனைவி எப்பொழுதும் இதற்கு மறுத்துப் பேசுவதே இல்லை….!!!!!!”

பொருட்களை பாதுகாக்க நம் மக்கள் என்ன எல்லாம் செய்வாங்க தெரியுமா?
படங்கள் உதவி: http://chellakirukkalgal.blogspot.com

டேய் !நான் உன்னை என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன் …..
ஷூ வாங்கிட்டு வரச்சொன்னிங்க….
எத்தனை ஷூ வாங்கிட்டு வரச்சொன்னேன்
ரெண்டு ஷூ
ரெண்டு வாங்கிட்டு வரச்சொன்னேனா ,ஒண்ணு இங்கே இருக்கு ,இன்னொரு ஷூ எங்கே
அதாண்ணே இது……..
டேய் ! !!!!!??????????????

courtesy: http://haasya-rasam.blogspot.com

“என்னங்க?”

“சொல்லு…” என்றேன் டிவியில் இருந்து கண்ணை எடுக்காமலே

தான் பேசுவதை நான் காதில் வாங்கவில்லை என்பதை உணர்ந்த நம்ம புத்திசாலி தங்கமணி ரிமோட் எடுத்து

டிவிய ஆப் பண்ணினாங்க

“ஐயோ… ஏய் ஏய்… ரிமோட் குடு தங்கம்… ” என பதறினேன் 

“வீட்டுல இருக்கிற கொஞ்ச நேரமும் இந்த டிவிய கட்டிட்டு அழறதே வேலையா போச்சு… நான் சொல்றத

காது குடுத்து கேளுங்க அப்புறம் தர்றேன்…”

“காது மூக்கு எல்லாம் குடுக்கறேன்… மொதல்ல ரிமோட் குடு”

“நான் சொல்றதுக்கு ஒரு நிமிஷம் தான் ஆகும்… அப்புறம் நீங்க தாராளமா பாருங்க… எங்க…” என தங்கமணி

ஏதோ சொல்ல வர அதற்குள் இடைமறித்த நான் 

“தங்கம் டென்ஷன் பண்ணாதம்மா… இந்த நடிகை பேட்டி முதல் வாட்டி போட்டப்பவே மிஸ்

பண்ணிட்டேன்னு பீல் பண்ணிட்டு இருந்தேன்… கடவுளா பாத்து அந்த சேனல்காரனுக்கு தோண வெச்சு

மறுபடி போட்டுருக்கான்… ரிமோட் குடு” என நான் பதட்டப்பட தங்கமணி பூலான்தேவி மாதிரி முறைச்சாங்க

(பூலான்தேவி மொறைச்சு நீ எப்ப பாத்தேன்னு யாராச்சும் கேட்டீங்கன்னா உங்கள சாம்பல்

பள்ளதாக்குக்கு அனுப்பிடுவேன்…:)))))

இதுக்கு மேல பேசினா வம்பாய்டும்னு “சரி சொல்லு… என்ன விசயம்?” னேன்.

“எங்க சித்தப்பா பொண்ணு சுசிலா இருக்கால்ல..”

“ம்… இருக்கா இருக்கா… அவளுக்கென்ன இப்போ…” என்றேன் ரிமோட்டை ஒரு பார்வை பார்த்து கொண்டே

“அவ வீட்டுகாரருக்கு கால்ல அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்காராம்… எங்கம்மா போன் பண்ணினாங்க…

போய் பாத்துட்டு வந்துடலாம்”

“இப்பவா…?” என பயந்து போய் கேட்டேன், எனக்கு அந்த நடிகை பேட்டி மிஸ் ஆய்டுமேனு கவலை

“இல்ல… இப்ப நேரமாய்டுச்சு… நாளைக்கி ஒரு ஒன் ஹவர் பர்மிசன் போட்டுட்டு வாங்க…

போயிட்டு வந்துடலாம்” “நாளைக்கி போறதுக்கு இப்பவே என்ன… மொதல்ல ரிமோட் குடு”

என டென்ஷன் ஆனேன். “நேரத்துல வரீங்க தானே, அதை சொல்லுங்க மொதல்ல”

“சரி வரேம்மா… ரிமோட் குடு” என்றேன் பொறுமை இழந்தவனாய்.

“ச்சே… ’16 வயதினிலே கமல் ஆத்தா வெயும் காசு குடு’ டயலாக் மாதிரி ரிமோட் குடு ரிமோட் குடுனு….

சகிக்கல” என்றவாறே ரிமோட்டை குடுத்தார் தங்கமணி

தங்கமணி சொல்வது என்காதில் விழுந்தால் தானே சண்டை எல்லாம்… ரிமோட் கையில் கிடைத்ததும்

டிவியில் முழ்கினேன்.

*************************

ஒருவழியா நடிகை பேட்டி முடிஞ்சு என் சுயநினைவுக்கு வந்தேன்.

அதுக்கே காத்திருந்த மாதிரி தங்கமணி என் பக்கத்துல வந்து உக்காந்தாங்க

“ஏங்க….?” என தங்கமணி அன்பாய் ஒரு பார்வை பார்க்க

“என்ன தங்கம்?” என திகிலாய் விழித்தேன். 

“அது… உங்களுக்கு ஒரு சவால் தர போறேன்…” என தங்கமணி சிரித்து கொண்டே கூற

“அதான் உங்கப்பா நாலு வருஷம் முன்னாடியே குடுத்துட்டாரே… கன்னிகாதானமா” என முணுமுணுத்த

நான், தங்கமணி முறைப்பதை பார்த்ததும் சமாளிப்பாக “அது…. உன்னை போல ஒரு புத்திசாலிய

சமாளிக்க வேண்டிய பொறுப்பை குடுத்துட்டாறேனு சொல்ல வந்தேன்… ” என்றேன் 

“சரி… என்னை நல்லா பாருங்க…” என தங்கமணி அன்போடு கூற

“ஐயயோ… என்னாச்சு தங்கம்…” என பதறினேன்.

“என் முகத்துல ஒரு மாற்றம் இருக்கு, என்னனு கண்டுபிடிங்க பாக்கலாம்…” என சவால் பார்வை

பார்த்தார் தங்கமணி

“அடக்கடவுளே… தங்கம்… வேண்டாம் இந்த சோதனை… இதுக்கு பதிலா நீ டிவில பாத்து புதுசா

எதாச்சும் சமைப்பியே…அது வேணும்னாலும் செஞ்சு குடு… சத்தமில்லாம சாப்பிடறேன்…”

என டெர்ரர் ஆனேன்.

“இங்க பாருங்க… நீங்க சொல்லித்தான் ஆகணும்… அது பெரிய மாற்றம் ஈஸியா கண்டுபிடிக்கலாம்…”

என்றார் தங்கமணி தீர்மானம் போல்

“ஐயோ… யார் மூஞ்சில முழிச்சேன் இன்னிக்கி…”என முதலில் விழித்த நான் பிறகு “அடடா…

இவ மூஞ்சில தான் முழிச்சேனா…. ஹும்… ” என முணுமுணுத்தேன்,  “சரி சரி…சொல்றேன்”

என வசீகரன் சிட்டி ரோபோ தயாரிக்க செஞ்ச ஆராய்ச்சி ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பித்தேன்.


என்ன இவ்ளோ யோசனை…சட்டுன்னு சொல்லுங்க… என்ன மாற்றம்…” என தங்கமணி அவசரப்பட
“இரும்மா… தப்பா சொன்னா பின் விளைவுகள் எனக்கில்ல தெரியும்” என டென்ஷன் ஆனேன்.
“சரி சரி…சீக்கரம்…” என்றார் தங்க்ஸ்”ம்… ஆ… கண்டுபிடிச்சுட்டேன்… ” என்றேன்.
பல்பு கண்டுபிடிச்சப்ப தாமஸ் ஆல்வா எடிசன் கூட இவ்ளோ சந்தோசப்பட்டு இருக்க மாட்டார்னா
பாத்துக்கோங்களேன்” சொல்லுங்க சொல்லுங்க… ” என எக்ஸ்சைட் ஆனார் தங்கமணியும்
“அது… நீ கம்மல் போட்டு இருக்க” என  நான் பெருமையாய் கூறவும்”பின்ன இதுக்கு முன்ன
கமண்டலமா போட்டிருதேன்” என தங்கமணி முறைக்க

“இல்லம்மா… வேற மாதிரி தானே போட்டு இருப்ப” என தப்பிக்க பார்த்தேன்.

“அதெல்லாம் இல்ல… நான் சொன்ன மாற்றம் வேற…கண்டுபிடிங்க” என்றார் தங்கமணி விடுவென என

“அதில்லையா… ஹும்… வேற என்ன…?” என மீண்டும் வசீகரன் ஆனேன் நான்.

கொஞ்சம் நேரம் யோசித்த பின்  “அடப்பாவமே…உன்னை பொண்ணு பாத்த அன்னைக்கு கூட இவ்ளோ

டீப்பா பாக்கலையே தங்கம்…எதாச்சும் க்ளூ குடேன் ப்ளீஸ்…” என தங்கமணியை பாவமாய் பார்க்க

ஒரு நிமிஷம் மௌனமாய் யோசித்த தங்கமணி “சரி விடுங்க… உங்களுக்கு இதெல்லாம் வராது” என எழுந்து

போய் விட்டார்

“அப்பாடா தலைக்கு வந்தது தலை பாகையோடு போச்சுனு சொல்றதை இன்னிக்கி தான் உணர்றேன்” னு ரொம்ப

ஹாப்பி ஆனேன், பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல் (ஹா ஹா ஹா…!!!)

கொஞ்ச நேரம் கழிச்சு உள் அறையில் இருந்து வந்த தங்கமணி “ஏங்க… கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு ப்ரோக்ராம் பாத்தீங்களே…”என கேள்வியை முடிக்கும் முன்

“ஆமா…நடிகை ஜில்பா ரொட்டி ப்ரோக்ராம் தானே…  என்ன அழகு இல்லையா தங்கம்” என முகம் எல்லாம்

பூரிக்க கேட்டேன் நான். பல்லை கடித்து கோபத்தை அடக்கி கொண்ட நம்ம தங்கமணி “ஆமா ஆமா…

அவங்க போட்டு இருந்த கம்மல் நல்லா இருந்தது இல்லிங்க” என வலை விரித்தார்

“ஆமாம் தங்கம்… அந்த ஸ்டார்க்கு ஏத்த ஸ்டார் டிசைன்ல சூப்பர் கம்மல்” என தங்கமணி எதிர்பார்த்தது

போல் வலையில் விழுந்தேன் “அப்புறம் அவங்க டிரஸ் என்ன கலர் அது?” என தங்கமணி குழியை ஆழமாய்

தோண்ட தன் அபிமான நடிகை பற்றி தங்கமணி ஆர்வமாய் பேசியதும் உற்சாகமான நான்

“என்ன தங்கம் நீ? இது கூட கவனிக்கலையா… நல்ல டார்க் மெரூன் கலர் டாப்ஸ்… ப்ளாக் பேன்ட் …

நல்ல காம்பினேசன் இல்ல தங்கம்”

“ஆமா ஆமா…சூப்பர்… அது சரி… அவங்க பொட்டு வெச்சு இருந்தாங்களா என்ன?”

“என்ன தங்கம் நீ? உனக்கு சுத்தமா கவனிக்கற புத்தியே போய்டுச்சு போ… கம்மல்க்கு மேட்ச்ஆ ஸ்டார்

டிசைன்ல டிரஸ்க்கு மேட்ச்ஆ மெரூன் கலர்ல எவ்ளோ அழகா ஒரு பொட்டு…நடுல கூட ஒரு ஸ்டோன்

கூட இருந்ததே, நீ பாக்கலையா” என நீட்டி முழக்கினேன்.

அடுத்த கணம் தங்கமணி “நான் போறேன்..எங்க அம்மா வீட்டுக்கே போறேன்” என கண்ணை கசக்க,

அப்போது தான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த நான் “ஐயயோ…என்னாச்சு தங்கம்” என பதற

“யாரோ ஒரு நடிகை… அதுவும் கன்றாவியா நடிக்கற ஒரு ஜென்மம்… அந்த சிறுக்கி… அவ கம்மல்,

டிரஸ் கலர், பொட்டு டிசைன் நடுல ஸ்டோன் எல்லாம் ஞாபகம் இருக்கு ப்ரோக்ராம் பாத்து

ஒரு மணி நேரம் கழிச்சு கூட… உங்கள நம்பி கழுத்தை நீட்டினவ நான்… எப்பவும் வட்ட பொட்டு

வெக்கறவ இன்னிக்கி உங்களுக்கு பிடிக்கும்னு நீட்ட பொட்டு வெச்சுட்டு வந்து என்ன வித்தியாசம்னு

ஆசையா கேட்டா… ஒரு மணிநேரம் ஆராய்ச்சி செஞ்சும் தெரில இல்ல…

நான் போறேன்… எங்க அம்மா வீட்டுக்கே போறேன்” என தங்கமணி கண்ணை கசக்கி கொண்டே

உள்அறைக்குள் சென்றார்

நான் என்ன செஞ்சேன்னு சொல்லி தான் தெரியணுமா… வழக்கம் போல “சொந்த செலவுல சூனியம்

வெச்சுக்கிட்டனே”னு பீலிங்ல இருக்கேன். ஹையோ ஹையோ…:)))

“குழந்தை பாவம்….”

“அதை ஏண்டி திட்டுற…”
உனக்கு கொஞ்சமாவது புள்ளைய வளர்க்க தெரியுதா?  என்று எங்க வீட்டு ப.சிதம்பரம், அதாங்க.. எங்க வீட்டு home minister என் பொஞ்சாதி.. அவளை தான் இப்படி ஒரு கேள்வி கேட்டு திட்டினேன்.  பின்ன என்னங்க…எப்ப பாத்தாலும்   ஜெயலலிதாவிடம்  அடிவாங்கி கூட்டணியை விட்டு வெளியே  தலைதெறிக்க ஓடி வர்ற  வைகோ,   விஜயகாந்த்  மாதிரி, நான் பெத்தெடுத்த   பயபுள்ள,  அவன் அம்மாகிட்ட அடிவாங்கிட்டு  வீல்ல்ல்ல்ல்…னு கத்திகிட்டே  வீட்டுக்கு வெளியே ஓடி வந்தாங்க…  எனக்கு உயிரே  போச்சுங்க..   என்ன இருந்தாலும் நான் பெத்தெடுத்த புள்ள இப்படி அழும்போது எனக்கு செம கோவம் வந்துடுங்க… இன்னைக்கு எனக்கு தாங்கமுடியாம தான் இப்படி கேட்டுட்டேன்…
வழக்கம் போல நாம கோவமா கேள்வி கேட்டா பிரதமர் ஆயிடுவா.. ஒரு பதில் கூட வராது.. இத்தனை தடவை  கலைஞரா அமைதியா இருந்த நான் இந்த தடவ அன்ன ஹசாரே மாதிரி திரும்ப திரும்ப கேட்டேன்ங்க… ஒரு பதில் தாங்க சொன்னா.. எனக்கு பெரிய தன்மான பிரச்னையாகி போச்சு..
“உங்க புள்ளைய ஒரு மூணு மணிநேரம் சமாளிச்சி பாருங்க….” அப்போ தெரயுமுன்னு” சொன்னா பாருங்க…
அட நம்ம ஆபீஸ்ல நாம எத்தன பயபுள்ளைங்கள சமாளிக்கிறோம்… இந்த மூணு வயசு புள்ளைய சமாளிக்க மாட்டோமான்னு”…. அவளை கூட்டிட்டு கிளம்பிட்டேங்க.. மாலை ஆறு மணி இருக்கும்..
என் பொண்ணுக்கு பைக் னா உசுருங்க… அவளுக்கு அழகா டிரஸ், தொப்பி, செருப்பு எல்லாம் போட்டுவிட்டு, முன்னாடி உக்கார வச்சிக்கிட்டு ஸ்டார்ட் பண்ணிட்டு கேட்டேன்.. “பாப்பா எங்க போகலாம்..”
 “பீச்க்கு போலாமா?”.. என்று என்னை பார்த்து சிரித்தாள்.  ஓகேனு சொல்லி சிரித்தேன் என்னோட பைக் பீச் நோக்கி பறந்தது….
சிக்னலில் ரைட் எடுக்கணும்.. ரைட்ல இன்டிகேடர் போட்டுட்டு திரும்பி போகும்போது.. பின்னாடி வந்த ஆடோகாரன் .. சாவு கிராக்கி… left இன்டிகேடர் போட்டுட்டு right ல போறான் பாருனு என்ன திட்டிட்டான்.. எனக்கு கோவம் தலைகேறியது… என்னடானு  பாத்தா என் பயபுள்ள இன்டிகேடர் பட்டன்ல கை வச்சிக்கிட்டு.. டிக்…டிக்..னு விளையாடிகிட்டு இருக்கு…
கண்ணா அத தொட கூடாது.. ஆட்டோ மாமா, அப்பாவ எப்படி கேவலமா திட்டிட்டு போறாரு பாருனு .. செண்டிமெண்டா பேசினேன்.. நம்ம பொண்ணாச்சேசொன்னதும் புரிஞ்சிக்கிட்டு மண்டைய ஆட்டுனா. அப்பா fast ஆ போங்கப்பா என்றாள்… நம்ம சொன்னத அவ கேட்டா.. அவ சொல்றத நம்ம கேக்கலாமேனு.. வண்டி அறுபதை தொட்டு பறந்தது.. அய்யா..ஜாலி…..னு என் பொண்ணு என்னை பெருமையா பாத்தான்… இப்பவும் நான் என் பொண்டாட்டிய திட்டிட்டே போனேன்.. புள்ளைய வளர்க்க தெரியுதா அவளுக்கு…
அவளை நினைத்ததும் அறுபது எழுபதானது…அடுத்த நொடி..அப்படியே அவள் தொப்பி பறந்து என் முகத்தில் ஒட்டி கொண்டது… எனக்கு ஒன்னும் தெரியாமல்.. மெதுவாக பிரேக் போட்டு…நான் நிறுத்தும்முன்பே ஒரு “டமார்” சத்தத்துடன் நின்றது… முன்னே ஸ்விப்ட் கார் லைட் காலி… உள்ளே இருந்து ஒரு ஆள் என்னிடம் பேசும்முன்பே 500 ருபாய் நோட் ரெண்டை எடுத்து நான் நீட்ட.. மனிதர் என் நிலை உணர்ந்து வண்டியை எடுத்தார்… அங்கிருந்து கிளம்பிவிடலாம்னு வண்டிய எடுத்து கொஞ்ச தூரம் போன பிறகு.. என் புள்ள அழ ஆரம்பித்தது… என்ன என்று கொஞ்சம் கோபமுடன் நான் கேட்க.. என் தொப்பி வேணும்ம்ம்ம்ம்ம்ம்….ஒரே கத்தல்.. அவ தொப்பியை காணோம்… சரிடா செல்லம் வாங்கிக்கலாம்..புதுசா… இப்படி ஏதோ சொல்லி சமாளிச்சு.. அவ வாயை மூடினேன்..
பெசன்ட் நகர் பீச் வந்ததும்.. ஒரு சூப்பர் ஆன்டி எதிரே வரவும்.. அப்பா அது யாருன்னு கேட்டா. நான் என் மனைவி பக்கத்தில் இல்லாததால் “உங்க சித்தி”டா  செல்லம்னு சொல்ல, அவன் இல்லப்பா… அது எங்க மிஸ் என்றாள். இல்லடா சித்தி தான்டா என்றேன்.. உடனே என் கையை விட்டு விலகி அந்த ஆன்டி அருகே ஓடினா. நான் உடனே அவளை இழுக்க ஒடும்முன்,   “நீங்க எனக்கு மிஸ்ஆ? .. இல்ல சித்தியா?” னு கேட்க.. அவங்க “ஐ ஆம் யுவர் மிஸ் ஒன்லி”னு சொல்லிவிட்டு என்னை பார்த்து முறைத்துவிட்டு சென்றார்.  “அப்பா.. அவங்க எங்க ஸ்கூல் மிஸ், உனக்கு தெரியாதா?”  என்றானே பார்க்கலாம்..” எனக்கு தலை சுற்றி லேசாக மயக்கம் வந்தது.. பயபுள்ளைக்கோ வாயெல்லாம் பல்..
மணி எட்டு. மூன்று மணி நேர சவாலில் இன்னும் ஒரு மணி நேரம் பாக்கி இருந்தது.. இதுக்கு மேல நமக்கு தாங்காதுடா மவனேன்னு.. அவளை தூக்கி வண்டில போட்டுட்டு… வீட்டை நோக்கி பறந்தேன்… வாசலிலே என் குலதெய்வம் நாங்கள் வரும் அழகை பார்த்தவாரே.. ஏங்க… இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு என்றாள்.. நானோ.. நம்ம பொண்ணு ரொம்ப சமத்துடி…ரெண்டு மணி நேரம் நான் அப்படி பாத்துகிட்டேன்.. போடி உள்ளே..என்றேன்..
எங்கங்க தொப்பிய காணோம், ஒரு செருப்ப காணோம்… ஏங்க இப்படி பொறுப்பு இல்லாம இருக்கீங்க என்றாள்… இதை எல்லாம் பாத்துகிட்டு இருந்த பயபுள்ள ஒன்னு சொன்னுச்சு பாருங்க….
“அம்மா…. அப்பாவ ஆட்டோமாமா, எங்க மிஸ் எல்லோரும் திட்டிட்டாங்க..”,  “நீயும் திட்டாதேம்மா” … “அப்பா பாவம்”
சொந்த சோகத்தை புலம்பியவர் : http://sathish-chandran.blogspot.com/
ஒரு பெண் தனியாக கோல்ப் விளையாடி கொண்டு இருந்தாள். அவள் அடித்த பந்து அருகில் இருக்கும் புதருக்குள் பொய் விழுந்தது. அங்கு அவள் ஒரு தவளை வலையில் சிக்கி இருப்பதை கண்டாள்.  இவளை பார்த்ததும் அந்த தவளை “என்னை நீங்கள் இந்த வலையிலிருந்து விடுவித்தால், நான் உங்களுக்கு மூன்றுஆசைகளை நிறைவேற்றி தருவேன்” என்று சொன்னது. அந்த பெண் அந்த தவளையை வலையிலிருந்து விடுவித்தாள்.
தன் ஆசைகளை சொல்ல அந்த பெண் தயாரான போது, அந்த தவளை குறுக்கிட்டு “ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அது போல பத்து மடங்கு உன் கணவருக்கும் கிடைக்கும். இப்போது சொல்லுங்கள் என்றது.
சரி என்ற பெண் “முதல் ஆசையாக நான் உலகிலே மிக அழகான பெண் ஆக வேண்டும்” என்று கேட்டாள்.  தவளை “நன்றாக யோசித்து விட்டாயா?உன் கணவனும் உலகிலே மிக சிறந்த ஆணழகனாக இருப்பான். எல்லா பெண்களும் அவனை கண்டது மயங்கி அவனிடம் செல்வர். இது பரவாயில்லையா?” என்று கேட்டது. அவளும் சம்மதிக்கவே, அப்படியே நடந்தது.
இரண்டாவது ஆசையாக “நான் உலகிலே பணக்கார பெண் ஆக வேண்டும்” என்று கேட்டாள். தவளை “தருகிறேன். ஆனால் உன் கணவன் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனாக இருப்பான். சம்மதம் தானே” என்று கேட்டு அந்த ஆசையையும் நிறைவேற்றி தந்தது.
மூன்றாவது ஆசையாக ‘எனக்கு சிறிய அளவிலே ஹார்ட் அட்டாக் வர வேண்டும்’ என்று கேட்டாள்.
இந்த கதையின் நீதி என்ன என்றால் “பெண்களை சாதாரணமாக நினைக்காதிர்கள். எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு”
பெண் வாசகர்களுக்கு – கதை இங்கே முடிந்து விட்டது. தயவு செய்து அடுத்த இணைய பக்கத்திற்கு செல்லுங்கள்.
ஆண் வாசகர்களே – நீங்கள் தொடருங்கள்.
கணவனுக்கு அந்த பெண்ணுக்கு வந்ததை போன்று பத்து மடங்கு குறைவாக ஹார்ட் அட்டாக் வந்தது.

இந்த கதையின் நீதி என்ன என்றால் “பெண்கள் தங்களை புத்தி சாலியாக நினைத்து கொள்வார்கள் ஆனால் அப்படி இல்லை என்பது அவர்களுக்கு தெரியாது”. அவர்களை அப்படியே விட்டு விடுங்கள்

பின்குறிப்பு: நீங்கள் ஒரு பெண் வாசகராக இருந்து இன்னமும் இதை வாசித்து கொண்டிருந்தால், ஆண்கள் சொல்வதை கேட்க பழகுங்கள். 🙂
சிவா காயத்ரியை உயிருக்கு உயிராக நேசித்தான். அவளும் அப்படிதான்.ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழவே முடியாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாக உருவானது. அவர்கள் காதல் நாளுக்கு நாள் வலுவாக, ஆழமாக, சுவாசமாக வளர்ந்துகொண்டே போனது..
சிவாவின் குடும்ப நிலை.. காயத்ரியின் படிப்பு..  இது தான் அவர்களுக்கு தடையாக இருந்தது. எவ்வளவு நாட்களானாலும் காத்திருக்க தயாராக இருந்தனர்,  மாறாத காதலுடன்.
திடீரென்று அவளுடைய அப்பாவுக்கு அவர்கள் காதல் தெரிய வந்தது.வழக்கமான அப்பா தான். அடி உதை மிரட்டல்.. வீட்டில் சிறை வைக்கப்பட்டாள். அவர்களால் சந்திக்கவே முடியவில்லை. வேறு வழியில்லாமல் அவள் அப்பாவிடம் அவளை பெண் கேட்டு சிவா வீட்டிற்கே போனான். சொந்த பந்தங்கள் சேர்ந்து அவனை விரட்டி விட்டது..
அன்று இரவு தொலைபேசியில் இருவரும் அழுதனர்.  மறுநாள் காலை வீட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்தனர்.
யாருக்கும் தெரியாமல் சிவா ரயில் நிலையம் வந்து அவளுக்காக காத்திருந்தான். நேரம் கடந்தது.. காயத்ரி வரவில்லை. காத்திருந்தான்..வரவே இல்லை.
குழம்பிய அவன் அவளுடைய வீட்டிற்கு சென்று பார்க்க முடிவு செய்து புறபட்டான். வழியில் அவன் நண்பர்கள் வழிமறுத்து, அந்த அதிர்ச்சியான தகவலை அவனிடம் கூறினர்.
“காயத்ரி தற்கொலை செய்துகொண்டாள்“
ஆம்.. காயத்ரி கிளம்பும்போது அவளுடைய தந்தை பார்த்துவிட்டதாகவும் அவளை அடித்ததாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார்.
அவன் அவனாக இல்லை.. வெறி பிடித்தவனாய் ஓடினான். அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.  காயத்ரியை புதைத்து விட்டார்கள்.
அழுதான்.. அழுதான்.. அவனால் அதை மட்டும் தான் செய்ய முடிந்தது..
பல நேர தேற்றளுக்குப் பிறகு வீடு வந்தான்..
வெகுநேரம் பித்துப் பிடித்தவன் போல இருந்தவன், திடீரென கத்தியால் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டான். ஆனால் விதி வலியது. காப்பாற்றப்பட்டுவிட்டான்.
வேறு வழி? காலம் போன போக்கில் நடைபிணமாய் நடமாடினான்.
ஒரு நாள் மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தான். காயத்ரியின் நினைவில் இருந்து அவனால் மீள முடியவில்லை..
 “ஏன் என்னை தனியா விட்டுட்டுப் போன காயத்ரி?  நான் என்ன தப்பு பணினேன்?”  கதறி அழுதான்.
அப்போது திடீரென்று தொலைபேசி சிணுங்கவே எடுத்து பார்த்தான்.Display-ல் காயத்ரி என்று வந்தது.. குழப்பத்தில் நெற்றியைச் சுருக்கினான் சிவா.
ஒருவேளை அவள் வீட்டிலிருந்து வேறு யாரவது அழைக்கலாம் என்று காதில் வைத்து..
“ஹலோ” என்றான்.
“சிவா..  சிவா… ” என்று அழுகுரல் கேட்டது.
ஒரு நிமிடம் நடுங்கித்தான் போனான்.. உடல் சட்டென வியர்த்தது..
“இது.. இது… என் காயத்ரியின் குரல்.. ஆனால்.. ஆனால்.. எப்படி?”பதறினான்.. பயந்தான்..
என்ன செய்வதென அறியாமல் அழைப்பை துண்டித்து விட்டான்..
தனக்கு ஏற்பட்டது கனவாக, பிரமையாக கூட இருக்கலாம். சதா காயத்ரியையே நினைத்துக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட உளைச்சலாக இருக்கலாமென ஆறுதல் படுத்தினான்.
மீண்டும் அங்கு மௌனம் நிலவியது. நிமிடங்கள் கரைந்தன..
ஒன்று.. இரண்டு.. மூன்று..
முழுதாக பதினைந்து நிமிடத்திற்குப் பின் மீண்டும் மணி ஒலித்தது.
அதே காயத்ரி..
உள்ளூர பயம் இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான் சிவா.
சிவா: “ஹலோ..”
காயத்ரி: “சிவா.. சிவா..  எப்படி இருக்கீங்க?”
மீண்டும் அதே குரல்.. யாராவது தன்னை காயத்ரி குரல் மாதிரி பேசி ஏமாற்றுகிறார்களோ???
இல்லை சத்தியமாக இல்லை. காயத்ரியின் குரல் அவனுக்கு அத்துப்படி. எத்தனையோ நாட்கள் காதலாகக் கேட்டு மயங்கிய அதே குரல்.. நிச்சயம் இது காயத்ரி தான். ஆனால்…. ஆனால்…
ஆயிரம் கேள்விக் கணைகள் அவனுள் எழ ஆரம்பித்த நொடி.. மீண்டும் அந்தக் குரல்..
காயத்ரி: “ப்ளீஸ் சிவா.. பேசுங்க.. ஏன் எங்கிட்ட பேச மாட்டீங்கிறீங்க??”
தொண்டைக்குழியில் ஏற்பட்ட நடுக்கத்தை அடக்கிக்கொண்டு பேசினான் சிவா.
சிவா: “நீ…….. நீ இறந்துட்டனு சொன்னங்க.. ஆனா ….” குரலில் பயம் தெரிந்தது..
“புதைச்ச இடத்துக்கு கூட நான் வந்து பாத்தேனே… பின்ன எப்படி…”புரியாத புதிராய் கேட்டான்.
காயத்ரி: “ஹா ஹா ஹா ”..
பேரொளியாய், இடியென ஒரு சிரிப்பொலி எழுந்து அடங்கியது..
மீண்டும் பேச ஆரம்பித்தாள்.. ”புதைச்சா என்ன? நான் எங்க இருந்தாலும் உங்க காயத்ரி தான். என்னால உங்க கூட பேசாம இருக்கவே முடியாது..செத்தாலும் கூட..”
முகத்தில் வியர்வை வழிய, துடைக்க மறந்தவனாய் பயத்தில் உறைந்தவனாய் சிவா..
சிவா: “எ… எ… என்ன சொல்ற?? அதெப்படி முடியும்???”
அப்போது… அப்போது.. திடீரென ஒரு குரல் கேட்கிறது…
அது….
அது…
எங்களுடைய டவர் எங்கும் இருக்கும்…
ஏர்டெல்.. ஒரு அற்புதமான நெட்வொர்க்..
டின் டி டி டின் டின்….
———————-
இன்னும் என்ன பாக்குறீங்க??? கதை அவ்ளோ தான்.
(பின்ன தலைப்பு ஏன் அப்படி வச்சிருக்கனு கேக்குறீங்களா??? பதிவு தான் டெரரா இல்ல.. தலைப்பாவது டெரரா இருக்கட்டுமேனு தான்… எப்பூடிஈஈஈஈ…)
போய் வேலையப் பாருங்க.
நொந்த இடம்: http://chellakirukkalgal.blogspot.com

தாறுமாறாக ஒருவன் காரை ஓட்டிவருவதைக் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காரை நிறுத்தினார்.குடித்துவிட்டு காரை அவன் ஓட்டி வந்திருக்கிறான் என்று சந்தேகப்பட்ட அவர் அவை சோதிப்பதற்கான  கருவியின்முன் ஊதச் சொன்னார்.அவன் சொன்னான்,”அதுமட்டும் என்னால் முடியாது.எனக்குக் கடுமையான ஆஸ்த்மா.பலமாக ஊதினால் எனக்கு மூச்சுத் திணறல் வந்துவிடும்.”அதை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறுநீர் சோதனைக்கு ஒரு பாட்டிலில் சிறுநீர் சேகரித்துத் தரச் சொன்னார்..உடனே அவன் பெருங்குரலில்,”இதுவும் என்னால் முடியாது. நான் நீரழிவு  நோய்க்காரன்.நான் திடீரென சிறுநீர் கழித்தால் என் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும்.அதனால் நான் இறக்கக் கூடும்,”அதையும் ஏற்றுக்கொண்ட அதிகாரி அவன் இரத்தத்தை சோதனை செய்ய முடிவெடுத்தார்.உடனே ஓட்டுனர்,”இதுவும் என்னால் முடியாது.எனக்கு ஒருவிதமான நோய் உள்ளது அதனால் என் உடலிலிருந்து இரத்தம் எடுத்தால் அதற்குப்பின் இரத்தம் நிற்காமல் வந்து கொண்டேயிருக்கும்.”சற்று மனம் தளராத அதிகாரி  சொன்னார்,”சரி,பரவாயில்லை.எனக்காக இதோ,இங்கு போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கோட்டில்  நடந்து வா.”இப்போது அவன் கத்தினான்,”இதுவும் என்னால் முடியாது.”ஏன் என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். அவன் சொன்னான்,”ஏனென்றால்,நான் குடித்திருக்கிறேன்.”இன்ஸ்பெக்டர் புன்முறுவலுடன் அவனை கைது செய்தார்

கதை கேட்ட இடம்:  http://jeyarajanm.blogspot.com

இனிமேல் குடும்ப ப்ளாக் எழுதகூடாதுன்னு தான் நினச்சேன். ஆனா எழுதும்படியா ஆயிடுச்சி.  சிவா சொல்றான்..  “மச்சி இப்படியே எழுதிட்டே  போனா,  நம்ம பதிவர் சமூகம் உனக்கு  சீரியல்  பதிவர்னு  பேரு  வச்சிடும்“னு  சொல்லி பயம் காட்றான்.  “ஏங்க அப்படியா…?”  ஆனா நமக்கு ஒரு பிரச்சனைன்னு ஆண்டவன் கிட்ட சொன்னா ஒரு பதிலும் வரல.  ஆனா நம்ம நண்பர் பயபுள்ளைங்க,  பதிவர் சமூக மக்காவும் எதாவது சொல்லும்ல..   அட திட்டுனா கூட பரவா இல்லீங்க.. அதுவும் ஒரு ரெஸ்பான்ஸ் தான்...( நம்ம பொழப்பு ஏன் இப்படி…?  சரி விடு.. படிக்கிறவங்க நிலைமை.. ?   அதை பத்தி நமக்கெதுக்கு… நாம படிக்கல..? ) 
முன்குறிப்பு : மேற்கொண்டு படிக்கும் முன் பொண்டாட்டியோ,  தங்கச்சியோ அருகில் இருந்தால் படிப்பதை தவிர்க்கவும்.  மீறி படித்தால்.. மேலே போட்டோவில் இருக்கும் என் நண்பரின் நிலை தான்.   பயபுள்ள சொன்ன பேச்சை கேக்காம பொண்டாட்டி இருக்கும்போதே படிச்சிபுட்டான்.

இந்த தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டிக்கும், கூட  பொறந்த  தங்கச்சிக்கும் இடையில் நான் படுற பாடு இருக்கே.. அப்பப்பப்பா…   ஒரு நாள் என் பொண்டாட்டி, தங்கச்சி  ரெண்டு பேரையும் காமிச்சி யாரடா செல்லம் புடிக்கும்னு ஒரு வீணா போன கேள்விய என்  மூணு வயசு பையன  பார்த்து கேட்டுபுட்டேன்..  அந்த பயபுள்ள தங்கச்சிய பாத்து கை நீட்டிட்டு,  என்னைய நக்கலா பாத்துட்டு சிரிச்சிட்டு போயிடுச்சி…  ஆனா தங்கச்சியோ.. பெருமை பொங்கும் பாசமுகத்தோட போகவும்.. ( மற்றவை உங்க கற்பனைக்கே… ஐ..ஐ.. நான் திட்டு வாங்கினதெல்லாம் ப்ளாக்ல  சொல்ல மாட்டேனே… அதையே சொல்லி சொல்லிடெர்ரர் காட்டுவீங்க…).  ஆனா என் பையன பாத்து என் பொண்டாட்டி ஒன்னு சொன்னா..  “அப்பன போல தானே புள்ளையும் இருக்கும்”.

கூட பொறந்த தங்கச்சி மேல பாசம் வைக்கலாம்.  தொட்டு  தாலி கட்டுன பொண்டாட்டி மேல பாசம் வைக்கலாம்.  ஆனா ரெண்டு பேரும் இருக்கும் போது நம்ம வீட்டு பூனை குட்டிமேல தான் பாசம் வைக்கணும்.  ஆனா நான் “மனைவி சொல்லே மந்திரம்”, “தாய்க்கு பின் தாரம்”, மனைவி ஒரு மாணிக்கம் “  படங்களை ஒரு தடவை பார்ப்பேன். ஆனா “திருப்பாச்சி”,  “பாசமலர்”, “முள்ளும் மலரும்” படங்கள ரெண்டு ரெண்டு தடவ பாத்துருவேன்…. அவ்ளோ தங்கச்சி பாசம்.   இதான் என் பிரச்சனையே

ஒரு தடவை இந்த முக்கோண பாச போராட்ட்டதுல என் பொண்டாட்டி கேட்டுட்டா உனக்கு நான் முக்கியமா, உனக்கு தங்கச்சி முக்கியமா? முடிவு பண்ணிக்கோ?  இது என்னங்க கேள்வி?  அம்மா புடிக்குமா? அப்பா புடிக்குமா? னு  ரெண்டு வயசு பாப்பா கிட்ட கேட்டா அது என்னங்க சொல்லும். அந்த நிலமையில நான் நின்னேன்.  அதுவும் இந்த பொண்ணுங்க பாசமே வைக்க மாட்டாங்க.. ஆனா தங்கச்சி மேல பாசம் வைக்கிற வீட்டுக்காரன் மேல அப்படி ஒரு பாசம் பொங்கும்.

சரி மக்களே.. இன்னைக்கு ஒரு முடிவு எடுதுரனும்னு முடிவு பண்ணிதான் இந்த பதிவே போட்டேன். தங்கச்சியா?  பொண்டாட்டியா?   பதில் சொல்லுங்க. உங்க பதிலை வச்சி தான் ஒரு முக்கிய முடிவு எடுக்க போறேன்.  கொஞ்சம்
யோசிச்சி பதில் சொல்லுங்க மக்கா…  இந்த தடவ பப்ளிக் வோட்டு தான்… மக்கள் தீர்ப்பு தான்.. மகேசன் தீர்ப்பு.
பதில் சொல்றதுக்கு முன்னாடி ஒரு விஷயத்த நல்லா ஞாபகம் வச்சிகோங்க.  கூட பொறந்த தங்கச்சின்னு
சொன்னது என் கூட பொறந்தது இல்ல.. என் பொண்டாட்டி கூட பொறந்த தங்கச்சி..  (  என்னங்க.. எதையோ 
தேடற  மாதிரி  இருக்கு..  எதை  கொண்டு  அடிச்சாலும்  உடைய   போறது உங்க மானிட்டர் தான்…) 

நேத்து சாயந்தரம் என் குட்டி பையன் ஸ்கூலிலிருந்து வந்து ஃப்ரெஷ் அப் பண்ணிக்கிட்டு ஹோம் வொர்க் செய்ய ஆரம்பித்தான். , அவன் ஹேண்ட் புக்கை எடுத்துக்கிட்டு  அப்பு! அம்மா  கேள்வி கேட்பேனாம். நீ பதில் சொல்வியாம்ன்னு கேட்டேன். வீட்டு வாசல்ல ஏழரை நாட்டு சனி எட்டி, என்னை உற்று  பார்ப்பதை அறியாமல்…,

நான் கேள்விகளை கேட்க, பதில் சொல்லி, சொல்லி கடுப்பான அவன், எப்ப பாரு என்னையவே கேள்வி கேக்குறியேம்மா! இன்னிக்கு ஒரு நாளைக்கு நான் கேள்வி கேட்குறேன் நீ பதில் சொல்லும்மான்னு சொன்னதற்கு…, சரி சரின்னு மண்டையை ஆட்டினேன். ஏழரை சனி மெல்ல உள்ளே வந்து என் பக்கத்தில் அமர்ந்ததை அறியாமல்…,

1.தண்ணீரை “தண்ணீ”ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை “பன்னி”ன்னு சொல்லமுடியுமா?
…………………………………………………………………..
2.மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் புடிக்கறவனை மாணவன்னு சொல்ல முடியுமா?
…………………………………………………………..
3.புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளியிருக்கும்,
ஆனா, கன்னுக்குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா? .
………………………………………………………….

4. ஃபேண்ட் போட்டுக்கிட்டு முட்டி போடலாம்..,
முட்டி போட்டுக்கிட்டு ஃபேண்ட் போட முடியுமா?
………………………………………………………….
5. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
வைகை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்..,
ஆனால் ஐய்யராத்துல மீன் புடிக்க முடியுமா?
……………………………………………………..
5.  இட்லி பொடியை தொட்டு  இட்லி சாப்பிட முடியும்.
ஆனால், மூக்கு பொடியை வச்சு மூக்கை சாப்பிட முடியுமா?
……………………………………………………..

6. கோலமாவில் கோலம் போடலாம் ,
கடலை மாவில் கடலை போட முடியுமா?
…………………………………………………………
7. சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Macineலவெச்சா

washing சோடாவாகுமா?
…………………………………………………………………
8. பாம்பு எத்தனை தடவை படமெடுத்தாலும்
அதால், ஒரு முறையாவது  ஒரு படத்தையாவது
தியேட்டர்ல ரிலீஸ் பண்ண முடியுமா?
…………………………………………………………………..
9.என்னதான் கோழிக்கு வயிறு ஃபுல்லா தீனி போட்டு வளர்த்தாலும்,
கோழி முட்டைதான் போடும்.
100/100 லாம் போடுமா?.
………………………………………………………………….
10. நீ எவ்வளவு பெரியா படிப்பாளியா இருந்தாலும்,
பரிட்சை ஹால்ல போய் எழுதத்தான் முடியும்.
படிக்க முடியுமா?ஐயா சாமி, என்னை ஆளை விடு.., ன்னு
எழுந்து ஓட ஆரம்பித்தேன்.அம்மா! அம்மா! எங்கேம்மா ஓடுறே. இனிமே இதுப்போல கேட்கமாட்டேன். வாம்மா வந்து உக்காரும்மா. இனி, சமர்த்தா படிக்கலாம். என் செல்ல அம்மா தானே நீன்னு கொஞ்ச ஆரம்பித்தபின் தான் மீண்டும அவன் அருகில் வந்தமர்ந்து பாடம் படிக்க ஆரம்பித்தோம்.

மொக்கையானவர்: http://rajiyinkanavugal.blogspot.com

போன் அடிக்கிறது.

எடுத்தால் காலையிலேயே ராங் கால்.

“நேத்தி லோட் ஏத்தியாச்சு. நாளக்கி டெலிவரி ஆய்டும்”

“நேத்தி ஏத்தினா நாளைக்கே எப்டிய்யா டெலிவரி ஆகும்?”

“ஏன் ஆகாம, பூனாவிலேருந்தே இப்பல்லாம் நாலு நாள்தான். டிரன்க் ரோடு ரெடியாயிடிச்சு. லாஸ்ட் லோடுக்கே இன்னும் பேமென்ட் வரலை”

“ஏன் வராம, தம்பி பேருக்கு செக் அனுப்பியாச்சே?”

“யாரு ராஜலிங்கம் பேருக்கா?”

“ம்ம்ம்”

“அவனுக்கு அக்கவுண்டே கிடையாதே?”

“அதனால என்ன, செல்ப் செக்தான் அனுப்பியிருக்கேன்”

“எவ்ளோ அமவ்ண்டு?”

“இருபத்திநாலு கோடி”

“என்னது, மொளகா லோடுக்கு இருபத்திநாலு கோடியா?”

“மொளகாயா? கஞ்சா இல்லையா?”

“கஞ்சாவா? யாருங்க பேசறது?”

“இதத்தான்யா மொதல்ல கேட்டிருக்கணும்”

ரசித்த இடம்: http://kgjawarlal.wordpress.com

இந்த வருடத்தின் சிறந்த அடிமை விருது இவருக்கு வழங்க படுகிறது.

ஒருவர்: உங்க முகத்தை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்…!

மற்றவர்: இருக்காதே! என் முகம் எப்பவும் என்கூடத்தான் இருக்கும்!

பி.ஜெபா ஷைனி,

=============================================

* (பரீட்சை ஹாலில்)

ரகு : வயித்தைக் கலக்குதுடா..!

ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா?

.சு.கவின்சூரியா,

=====================================

முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?

ஆசிரியர்: நீங்க விக்கறீங்கஅவன் வாங்குறான்..!

பி.கவிதா,

======================================

* வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்!

கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்குப்
பெரிய பை எங்க கடையில இல்லியே!

துரை.இராமகிருஷ்ணன்,

=======================================

அப்பா: என்னடாமார்க் ஷீட்ல ரொம்ப கம்மியா மார்க்
வாங்கிட்டு வந்திருக்கே?

பையன்: விலைவாசி ரொம்ப ஏறிப்போச்சுப்பா
எதையுமே நிறைய வாங்க முடியல

இரா.அனுக்கிரஹா,

=======================================

சோமு: என்னப்பாவியாபாரமெல்லாம் எப்படி நடக்குது?

ராமு: எல்லாமே தலைகீழா நடக்குது!

சோமு: என்னப்பா சொல்றே..?

ராமு: முன்னாலே வைர வியாபாரம் செஞ்சேன்
இப்ப ரவை வியாபாரம் செய்யறேன்..!

.அருண்பாலாஜி

=======================================
நன்றி: சிறுவர் மணி

ரசித்த இடம்:  http://rammalar.wordpress.com

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. ” மாமியாரின் அன்புப்பரிசு..”ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்.. “போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்துவச்சிருக்க..?” மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.

“மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!

G+ ல்  ஈரோடு தங்கதுரை பகிர்ந்தது

கூகிளில் அலுவலக ஆணி சம்பந்தமாக ஒரு படம் தேடி கொண்டு இருந்த பொழுது இது மாதிரி ஒரு படம் வந்துச்சு. உடனே ஆணிய விட்டுட்டு இத பத்தி தேடினேனா. வந்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு


1. நான்: ஏன் பப்பு உனக்கு 7 வயசுதான் ஆகுது எப்ப பாரு 70 வயசு கெழவி மாதிரி பேசாதே

வர்ஷா : அம்மா அவ ஃப்ரெண்ட் எல்லாம் யாருன்னு தெரியாதா? பாட்டி, அத்தை பாட்டி, பக்கத்து வீட்டு கற்பக பாட்டி..

பப்பு : மறக்காம அம்மாவையும் சேர்த்துக்க

தேவையா? எனக்கு சொன்னேன் :)))

2.

வர்ஷா : அம்மா ஏம்மா அழுதா கண்ணுல தண்ணி வருது?

நான் : தெரியலைடா

பப்பு: இதெல்லாம் ஒரு கேள்வியா? எவ்ளோ தண்ணி குடிக்கறே, பாதி ஒன் பாத்ரூம்ல போகும் மீதி கண்ணுல வரும

தேவையா .. வர்ஷாக்கு :))

3. முடிவெட்ட பார்லர் கூட்டிட்டு போனேன், அங்க அவங்க கேக்கறாங்க, அவளுக்கு பப்பு ரொம்ப ஃப்ரெண்ட்.

பப்பு செல்லம் என்ன கட்டிங் வேணும்? மஷ்ரூமா? .பாய்கட்டா?

பப்பு : அதெல்லாம் வேண்டாம் ஆண்ட்டி, எங்கம்மாக்கு குளிக்க வைக்க எது ஈஸியோ அதை வெட்டுங்க

எல்லாரும் சிரிச்சாங்க..(ஊரே சிரிச்சுதுன்னும் சொல்லலாம்)

#புள்ளயா பெத்து வச்சிருக்கேன் 🙂

விஜி ராம் அவர்கள் G+ இல் பகிர்ந்தது

IPhone, IPad, ITouch போன்றவைகளை இந்த ஸ்டீவ் உலகத்துக்கு அறிமுகப்படுத்தி விட்டு  நல்ல பெயரோடும் புகழோடும் போய் சேர்ந்துவிட்டார். அவரின் இந்த நல்ல சேவையை நான் தொடர்ந்ததால் எனக்கு என் மனைவியிடம் கிடைத்த பெயர்தான்IBad என்பதாகும். அதோடு இருந்திருந்தால் பரவாயில்லை ஆனால் எனக்கு நேர்ந்த விபரிதத்தை கண்டால் யாருமே எதிர்காலத்தில் இப்படி எல்லாம் நடக்க மாட்டீர்கள். அப்படி என்ன நடந்தது என்று கேட்கீறிர்களா? அதை கடைசியில் பார்க்கலாம்.

அதற்கு முன்னால் என்ன நடந்தது என்பதை இங்கே கொஞ்சம் விபரமாக சொல்லுகிறேன். அதை படியுங்க முதலில் மக்கா..
எனக்கு   பிறந்த நாள் வந்துச்சுங்க…. என் பிறந்த நாளுக்கு என் மனைவி iPhone வாங்கி கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப சந்தோசமுங்க….யாருக்குதான் சந்தோஷம் வராதுங்க…
ஒரு 2 மாசம் கழித்து என் அண்ணன் பொண்ணுக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க அப்ப என் மனைவி அவளுக்கு iPad வாங்கி கொடுத்தாங்க…அவளுக்கும் ரொம்ப சந்தோசமுங்க…
போன மாசம் என் பொண்ணுக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க அப்ப என் மனைவி அவளுக்கு iPod Touch வாங்கி கொடுத்தாங்க…
அவளுக்கும் ரொம்ப சந்தோசமுங்க.
இந்த மாசம் என் மனைவிக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க….இந்த ஸ்டீவ் வேற புதுசா ஏதும் கண்டுபிடிக்காம போய்ட்டாருங்க…நான் என் மண்டைய போட்டு உடைச்சேங்க….என்னடா வாங்கி கொடுக்குறதுனு…. என் மனைவியோ எல்லோருக்கும் i ல ஆரம்பிச்ச பொருளாதான்  வாங்கி கொடுத்து இருக்கா எனவே அவளுக்கும் அது மாதிரி பொருளாதான் வாங்கி கொடுக்கனுமுனு நல்லா யோசிச்சு அவளுக்கு கடைசியா நல்ல அழகாக லைட் வெயிட்டா இருக்க கூடிய iRon Box  வாங்கி கொடுத்தேங்க…
இதுல என்னங்க தப்பு ? அப்ப ஆரம்பிச்சுதுங்க வினை….
என் மனைவி என் திறமையை, ஸ்மார்ட்னசை புரிஞ்சுக்க தவறிட்டாங்கனு நினைக்கிறேனுங்க… நான் வாங்கி கொடுத்த இந்த iRon Box  ஹோம் நெட்வொர்க்கோட கனெக்ட் பண்ணினால்  நிறைய பயன்பாடுகள் இருப்பது அவளுக்கு தெரியலைங்க… உதாரணமாக இதை எதோடு எல்லாம் தொடர்பு கொள்ளலாம் என்பதை அவளிடம் சொன்னதை நான் உங்களுக்கும் சொல்லுகிற்னுங்க..இதை iWash, iCook and iClean போன்றவைக்ளோடு இணைத்து உபயோகிக்கலாமுங்க
ஆனா என் மனைவி இதை எல்லாம் கேட்டுவிட்டு என் ஸ்மார்ட்னசை புரியாம என்னை  iKnock பண்ணிட்டு இப்ப அவள்iMad ஆகி iNag* பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்போ என் நிலமை இப்படி iBad ஆகிபோச்சு (///*nag – someone (especially a woman) who annoys people by constantly finding fault//)
என் கூட வேலை  பார்க்கும் அமெரிக்க நண்பர் சொன்ன ஜோக்கை வைத்து என் வழியில் நான் இதை உங்களுக்கு பகிர்ந்து உள்ளேன். கொஞ்சமாவது சிரித்து இருப்பிர்கள் என நினைக்கிறேன்.
புலம்பியவர்: http://avargal-unmaigal.blogspot.com

பார்க்க முரட்டுத் தனமா இருந்த ஒரு ஆள் தன்னோட பைக்கில ஒரு பாருக்கு போனான். வண்டியை பாருக்கு முன்னாடி நிறுத்திட்டு உள்ளே போய் சாப்ட்டு வெளியே வந்தான். அங்கே அவன் பைக்கை காணோம்!

“அப்படியா!”ன்னுட்டு பாருக்குள்ளே போய், ”நான் இன்னும் ஒரு கிளாஸ் சாப்பிடப் போறேன். நான் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள என் பைக் வரலை, எங்க ஊர்ல நான் என்ன பண்ணேனோ அது இங்கயும் நடக்கும்!” அப்படின்னு கோபமா கத்தினாரு.

உடனே பார் மேனேஜேரு அங்க இருந்த ஆளுங்க எல்லாம் எப்படியோ தேடி அவர் வண்டியை கண்டு பிடிச்சு பார் முன்னாடி நிறுத்திட்டாங்க. பைக்காரனும் கிளம்பினான்.  கிளம்புறப்ப ஒருத்தர் கேட்டாரு…

“சார் உங்க ஊர்ல என்ன நீங்க பண்ணீங்க?”

அவன் பதில் சொன்னான் “வீட்டுக்கு நடந்தே போனேன்!”

நேத்து ஒரு நியூஸ் படிச்சேன் புதுசா ஒரு படம் எடுக்குறாங்களாம் பேரு 6, எல்லாம் 6 மாசம் / 6 வாரம் / 6 நாள் / 6 மணி / 6 நிமிஷம் / 6 செகண்ட்-ல நடக்குற சம்பவங்கள் கதையாம். சரி நாமளும் 6 வச்சி ஏதாவது பதிவை தேத்த முடியுமான்னு யோசிச்சேன் அதோட விளைவு கீழே

கல்யாணம் பண்ண 6 வாரத்துல / 6 மாசத்தில / 6 வருசத்தில என்ன நடக்குது

கொஞ்சல்ஸ்

6 வாரத்தில        :    ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு நெனச்ச நேரம் எல்லாம்
6 மாசத்தில        :    எப்பயாவது ஐ லவ் யு
6 வருசத்தில    :    லவ்வா  அப்பிடின்னா?

ஆஃபிஸ் முடிச்சு வீட்டுக்கு வந்தா

6 வாரத்தில        :    அன்பே    நான் வந்துட்டேன் – சாயந்தரம் 6 மணிக்கே
6 மாசத்தில        :    வந்துக்கிட்டே இருக்கேன் – சாயந்தரம் 8 மணிக்கு
6 வருசத்தில    :    (மனைவி பையன் கிட்ட) நீ தூங்குடா உங்க டாடி எப்ப வருவாரோ தெரியாது  – மணி நைட் 11 மணி


பரிசு

6 வாரத்தில        :    செல்லம் நான் ஒரு மோதிரம் வாங்கிட்டு வந்து இருக்கேன் உனக்கு பிடிச்சு இருக்கா பாரேன்
6 மாசத்தில        :    பூ ஏன் பேக்-ல இருக்கு கொஞ்சம் சாமிக்கு போட்டுட்டு நீ கொஞ்சம் வைச்சுக்கோ
6 வருசத்தில    :    இந்தா பணம் ஏதாவது வாங்கிக்கோ

ஃபோன் அடிச்சா

6 வாரத்தில        :    கண்ணு உனக்கு தான் ஃபோன் உங்க அம்மா லைன்-ல
6 மாசத்தில        :    ஃபோன் உனக்கு தான் இங்க இருக்கு
6 வருசத்தில    :    எவ்வளவு நேரம் ஃபோன் அடிக்குது பாரு சீக்க்ரம் எடுத்து தொலையேன்

சமையல்

6 வாரத்தில        :    இவ்வளவு ருசியா நான் சாப்பிட்டதே இல்லை
6 மாசத்தில        :    இன்னைக்கு என்ன சமையல்
6 வருசத்தில    :    இன்னைக்கும் அதே தானா

டிரஸ்

6 வாரத்தில        :    இந்த டிரஸ்-ல நீ தேவதை மாதிரி இருக்கே
6 மாசத்தில        :    திருப்பியும் புது டிரஸ் எடுத்து இருக்கியா
6 வருசத்தில    :    இவ்வளவு காசு போட்டு இப்ப புது டிரஸ் தேவையா

6 வருசமா உக்காந்து ஆராய்ச்சி பண்ணது: http://meithedi.blogspot.com

எப்பவாச்சும் மனசுக்கு கஷ்டமா இருந்தா ஏதாவது புரட்சிக் கருத்துக்களைப் படிச்சு என்னை ரிலாக்ஸ் பண்ணிக்குவேன். போன வெள்ளிக்கிழமையும் அப்படித்தான் படிச்சுக்கிட்டு இருந்தப்போ, சமையல் வேலைல ஆண்களும் பெண்ணுக்கு உதவி செய்யணும்..அப்படி செய்யாதவங்க ஆணாதிக்கவாதிகள்னு போட்டிருந்துச்சு. அதைப் படிச்ச உடனே எனக்கு சந்தோசம் தாங்கல. இந்த நல்ல காரியத்தை உடனே செய்யறதுன்னு முடிவு பண்ணேன்.
அது ஈவ்னிங் காஃபி போடற நேரம். அதனால தங்கமணிகிட்ட “இன்னிக்கு நாந்தான் காஃபி போடுவேன். நீ சமையல் கட்டுப் பக்கமே வரக்கூடாது”ன்னு சொல்லி ஹால்ல உட்கார வச்சுட்டு, கிச்சன்ல பூந்தேன். அது ‘இந்த மனுசன் நல்லாத்தானே இருந்தாரு..இன்னிக்கு என்னாச்சு’ன்னு குழம்பிப்போய் ஹால்ல உட்கார்ந்துட்டாங்க.
நானும் பால் சட்டியை (இதுக்கு என்னமோ பேர் சொல்வாங்களே..) அடுப்புல வச்சி, பாலை ஊத்திட்டு, அடுப்பை பத்தவச்சேன். ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. முதல்ல, தங்கமணிகிட்ட நல்ல பேர் வாங்கிக்கலாம். அப்புறம் ‘மனைவி என்ன சமையல் எந்திரமா?’ன்னு தலைப்பு வச்சி வெள்ளிக்கிழமை ஃபுல்லா நாந்தான் சமைச்சேன்னு டுபாக்கூர் பதிவு எழுதி புரட்சிவாதி ஆயிடலாம். முடிஞ்சா டேமேஜான பேரையும் சரி பண்ணிடலாம்னு பல திட்டங்கள் மனசுல.
அப்புறம் தான் பார்க்குறேன், பால் ஒரு மாதிரி திரிஞ்சு போச்சு. என்னடா இது, எக்ஸ்பைரி ஆன பாலான்னு பார்த்தா, அதுல ஒன்னும் பிரச்சினை இல்லை. ஒருவேளை பால் சட்டில ஏதாவது இருந்திருக்குமோன்னு டவுட் வந்துச்சு. சரின்னு, திரிஞ்ச பாலை கீழ கொட்டிட்டு, மறுபடி நல்லா பாத்திரத்தைக் கழுவினேன்.
ஹால்ல இருந்து ‘இன்னும் முடியலியா’ன்னு சவுண்ட் வந்துச்சு. ‘இதோ ரெடி..ஒரே நிமிசம்’னு சொல்லிட்டு, மறுபடி பாலை ஊத்தி அடுப்பை பத்தவச்சேன். ச்சே..பெண்ணியவாதி ஆகறதுன்னா இவ்வளவு கஷ்டமா-ன்னு ஃபீல் பண்ணிக்கிட்டே அடுப்பைப் பார்த்தா..அடங்கொக்கமக்கா…பால் மறுபடியும் திரிஞ்சு போச்சு!
’நம்மளே திருந்த நினைச்சாலும் விதி விட மாட்டேங்குதே..எப்படி இது’-ன்னு கன்ஃபியூஸ் ஆகி நிக்கும்போது, தங்கமணி பொறுமை இழந்து உள்ள வந்துட்டாங்க.
‘என்ன ஆச்சு?’ன்னு ஒரு அதட்டல்.
நான் பரிதாபமா ‘இப்பிடி ஆயிடுச்சு..பாரு’ன்னு திரிஞ்ச பாலை காட்டிட்டு ”என்ன பிரச்சினை? ஏன் இப்பிடி ஆகுது”ன்னு கேட்டேன்.
அதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.
’அய்யய்யோ’-ன்னு அந்த பால் பாட்டிலை பார்த்தா Laban-ன்னு இங்கிலீஸ்ல எழுதிட்டு காச்சாமூச்சான்னு அரபில என்னமோ எழுதியிருக்கு..தயிருக்கு இங்கிலீஸ்ல லபான்னு பேரா.இப்படி கேள்விப்பட்டதே இல்லையே-ன்னு யோசிக்கும்போதே
“உங்களுக்கு எதுக்கு இந்த வேலை…ஏதாவது பதிவு எழுதுனமா..கமெண்ட்டுக்கு மிக்க நன்றின்னு பதில் போட்டமான்னு இல்லாம இது தேவையா..”-ன்னு கிச்சன்ல இருந்து விரட்டி விட்டுட்டாங்க.
நம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே..
காஃபியில்
கலந்து
கொடுத்தேன் – என்
காதலை!
-ன்னு ஒன்னுக்குக் கீழ ஒன்னா ப்ளூகலர்ல போல்டா எழுதி அருமை கமெண்ட் வாங்குவோம்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சே.
பாலும் வெள்ளையத்தான் இருக்கு..தயிரும் வெள்ளையாத்தான் இருக்கு..ஃப்ரிட்ஜ்ல வச்சு எடுத்தா, ரெண்டுமே குழுகுழுன்னு தான் இருக்கு..நான் என்ன செய்ய…எவ்வளவு திட்டம் வச்சிருந்தேன்..எல்லாம் பாழா(!) போச்சே..

ரங்கமணியின்காபி அனுபவத்தை தெரிந்து கொண்ட இடம்: http://sengovi.blogspot.com

என்னோட வெஜ் சாம்பார் செய்வது எப்படி பதிவு பார்த்து அத ட்ரை பண்ணி இருப்பிங்க. இதோ என்னோட அடுத்த சமையல் குறிப்பு. இந்த சமையல் குறிப்பு முக்கியமா ஆண்களுக்காக அதுவும் திருமணம் ஆகாத கன்னி பையன்களுக்காக மட்டுமே. அதனால மத்தவங்க தயவு செய்து இதுக்கு மேல படிக்காதிங்க.

– முதலில் அதிகாலை ஐந்து மணிக்கு எந்திரிக்கவும்! என்னது அது ரொம்ப கஷ்டமா? யோவ், அலாரம் வச்சு எந்திரியுங்கையா! எதிரிச்சு, பாத்ரூம் போங்க!பிரஸ் எடுத்து, பல்லு வெளக்குங்க! அப்புறம் முகத்தை கழுவி, இன்னும் ஏதாவது மிச்சம் மீதி வேலைகள் இருந்தா, அதையும் முடிச்சுட்டு, மெதுவா பாத்ரூம விட்டு, வெளிய வாங்க!

யோவ், எடுபட்டபயலே, சமையல் குறிப்பு சொல்றதாதானே பேச்சு! அப்புறம் என்ன பாத்ரூம்ல, மூஞ்சி கழுவுறதப் பத்தி, சிறப்புரையாற்றிக்கிட்டு இருக்கே?” அப்டீன்னு டென்சன் ஆவாதீங்க! பொறுமை! பொறுமை!!

ஓகே! பாத்ரூம்ல இருந்து வெளியே வந்துட்டீங்களா? யோவ்…. அதெல்லாம் வந்து ரொம்ப நேரமாச்சு! மேல சொல்லுய்யா!, சரி, இப்போ நீங்க நேரா பூஜை அறைக்குப் போங்க! உங்க இஸ்ட தெய்வம் எதுவோ, அதை நல்லா மனசார கும்புடுங்க! எதுவும் தப்பா நடந்துடக்கூடாதுன்னு நல்லா கடவுள வேண்டிக்குங்க! ஆமா…. இருநூறு கோடி ரூபா பட்ஜெட்டுல படம் எடுக்குறார் பாரு! எதுவும் தப்பா நடக்கக்கூடாதாம்!

அப்புறம், ஒரு பேனா, ஒரு நோட் புக், கேமரா வசதியுள்ள உங்க செல்ஃபோனு இதெல்லாத்தையும் எடுத்துக்குங்க! யோவ்…. நிறுத்துயா! சமையல் குறிப்பு சொல்றதுன்னுதானே, நம்மளையெல்லாம் லெட்டர் போட்டு வரச்சொன்னே! அப்புறம் என்ன, விஜய் டி வி ல வர்ர, ‘ அது இது எது’ ப்ரோகிராம்ல வர்ர மாத்தியோசி ரவுண்ட் மாதிரி, மாத்தி மாத்தி பேசுறே!

அண்ணே, எதுக்கு அவசரப்படுறீங்க! மேல படியுங்க!

இப்போ, உங்க அம்மாவைக் கூப்பிடுங்க! அம்மா தூங்கறாங்களா? இன்னும் சத்தமா கூப்பிடுங்க! இப்போ அம்மா எந்திரிச்சு வர்ரா! ‘ குட்மோர்னிங் அம்மா’ சொல்லுங்க!

அம்மா கேப்பா ‘ எதுக்குடா, இப்ப கத்துறே’!
அதுக்கு நீங்க சொல்லணும்! “ அம்மா இன்னிக்கு நான் சமையல் பண்ணலாம்னு இருக்கேன்”

‘ என்னது சமையல் பண்ணப் போறியா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்! போய் வேற வேல இருந்தாப் பாரு!”

“ இல்லம்மா, நான் இன்னிக்குச் சமைச்சே ஆகணும்! “

“ அதுக்கு என்னைய என்ன பண்ணச் சொல்லுறே?”

“ கிச்சன் எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா, கொஞ்சம் சவுகரியமா இருக்கும்”

அப்டீன்னு நீங்க சொன்னதும், உங்கம்மா உங்கள மொறைச்சுப் பார்ப்பாங்க! சப்போஸ், இதெல்லாம் எங்க சமைச்சு உருப்படப்போவுது? அப்டீன்னு திட்டவும் கூடும்! அதெல்லாத்தையும் கண்டுக்காதீங்க! நீங்க திட்டுவாங்கறது இதுதான் மொதல்தடவையா என்ன? ( எல்லாப் பதிவர்களுமே வீட்டுல திட்டு வாங்குறதா, ஒரு வாய்மொழித் தகவல் சொல்லுது )
இப்போ, கிச்சன் எங்க இருக்குன்னு உங்கம்மா, சொல்லிட்டாங்களா? நேர கிச்சனுக்குப் போறீங்க! வாசல்ல நின்னு, சிவாஜி கணேஷன் மாதிரி, இடுப்புல கையை வச்சுக்கிட்டு, ஒரு வாட்டி மேலேயும் கீழேயும் கிச்சனை உத்துப் பாருங்க!

அப்புறம் உங்க செல்ஃபோன்ல, கிச்சன ஃபோட்டோ எடுங்க! ஏன்னா, வரலாற்றில முதல் முறையா கிச்சனுக்குப் போறீங்க இல்லையா? அதுதான் இந்தப் ஃபோட்டோ!

சரிங்க! நம்ம சமையல் குறிப்பு பகுதியில இன்னிக்கு, கிச்சனை எப்படிக் கண்டுபுடிக்கறது? அப்டீன்னு பார்த்தோம்! இனிமேல்தான் சமைக்கறது பத்தி சிந்திக்கணும்!

அதை அப்புறமா சொல்லித் தாரேன்! ஓகே வா?

என்ன இன்னும் வெயிட் பண்றீங்க? நீங்க கெளம்புனா தான் இந்த சமையல் குறிப்பா எனக்கு சொன்ன அண்ணன் ஐடியா மணி கிட்ட அடுத்த பாகம் கேட்க போக முடியும். கெளம்புங்க கெளம்புங்க

குப்பு சுப்பு ரெண்டு பேரும்,  இந்த வார கடைசில போரடிக்குதேன்னு மலையேற (trucking) போனாங்க.

அது ஒரு அடர்ந்த காடு கொஞ்ச தூரம் உள்ள போகும் போதே ஒரே கும்மிருட்டு, அவ்வளவு அடர்ந்து இருந்துச்சு காடு. கொஞ்ச தூரத்தில கொஞ்சம் வெளிச்சம் அதை நோக்கி நடை போட்டாங்க, வெளிச்சத்துகிட்ட வந்து பார்த்தா ஒரு புலி உக்காந்து இருந்துச்சி

மூஞ்சில பசி வெறி தெரிஞ்சது, புலிய பார்த்த உடனே  சுப்பு எடுத்தாரு ஓட்டம், ஆனா குப்பு தன்னோட பேக்-ல  இருந்து ரீபோக் ஷூவை எடுத்துக்கிட்டு இருந்தாரு.

இதை பார்த்த சுப்பு “ரீபோக் ஷூ போட்டா புலிய விட வேகமா ஓட முடியுமா சீக்கிரம் வாலே புலி புடிக்கிற முன்னாடி ஓடிரலாம்” மின்னு சொன்னாரு

“நெசம் தாம்லே  புலிய விட வேகமா ஓடமுடியாது ஆனா உன்னை விட வேகமா ஓட முடியும்”

தெரிந்து கொண்ட இடம்: http://meithedi.blogspot.com

கொஞ்ச நேரம் இந்த குட்டீச கவனிக்காம விட்டோம்னா என்ன என்ன பண்ணிருவாங்க தெரியுமா? கீழ பாருங்க.


பாகம் 1, பாகம் 2, பாகம் 3 பார்க்கலன்னா இப்போ பார்த்துருங்க

1. இரண்டு சகோதரர்கள் பால்யகாலத்தில் பிரிந்தார்கள் என்றால், அவர்களில் ஒருவன் போலீஸால் துரத்தப்படுபவனாகவும், இன்னொருவன் போலீஸ்காரனாகவும் இருக்கவேண்டும். போலீஸால் துரத்தப்படுபவன் கடைசிக்காட்சியில் திடாரென்று திருந்தி உண்மையான வில்லனை அடித்து நொறுக்கவேண்டும். இந்த சகோதரனுக்கு ஹீரோயின் இருந்தால் மட்டும், இறுதியில் குடும்பம் இணைந்து போஸ் கொடுப்பதற்கு அவனது குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும். (விதி இரண்டைப் பார்க்கவும்)

2. ஹீரோக்களின் எண்ணிக்கை ஹீரோயின் எண்ணிக்கைக்கு சமமாக இல்லையெனில் உபரியான ஹீரோக்கள் அல்லது ஹீரோயின்கள் அ) இறக்கவேண்டும் ஆ) செஞ்சிலுவைச் சங்கம், ராமகிருஷ்ணா மிஷன், ஸ்விட்சர்லாந்து போன்ற சமாச்சாரங்களில் பட இறுதியில் காணாமல் போகலாம்.

3. ஒரு படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருந்தால், அவர்கள் இருவரும் காட்டுமிராண்டித்தனமாக குறைந்தது 5 நிமிடம் சண்டை போடவேண்டும் (சகோதரர்களாக இருந்தால் 10 நிமிஷம்)

4. எந்த கோர்ட் சீனிலும், ‘அப்ஜக்ஸன் மைலார்ட் ‘ என்ற வசனம் இருந்தே ஆகவேண்டும். அந்த வசனத்தை ஹீரோவோ அல்லது அவரது வழக்குறைஞரோ சொன்னால், அது ஓவர் ரூல்டாகவும், இல்லையெனில் அது ஸஸ்டெய்ண்ட் ஆகவும் ஆகவேண்டும்.

5. ஹீரோவின் சகோதரி ஹீரோவின் உயிருக்குயிரான தோழனை (அதாவது இரண்டாவது ஹீரோ) கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். இல்லையெனில் அவள் படம் ஆரம்பித்து 30 நிமிடங்களுக்குள் வில்லனால் கற்பழிக்கப்படவேண்டும். அவள் பின்னால் தற்கொலை செய்துகொள்ளவேண்டும்.

6. சேஸ் நடந்தால், ஹீரோ எப்படியும் வில்லனை பிடித்துவிடவேண்டும், அது மாட்டுவண்டி காரை துரத்தினாலும் சரி.

7. ஹீரோ வில்லனை நோக்கி சுட்டால்,

அ) குறி தவறவே தவறாது

ஆ) துப்பாக்கிக் குண்டு தீர்ந்து போகும். (அப்படியாயின் கைச்சண்டைதான்).

வில்லன் ஹீரோவை நோக்கிச் சுட்டால், நிச்சயம் குறி தவறும். இல்லையெனில் அது இரண்டாவது (சாகவேண்டிய) ஹீரோ.

8) எல்லா சண்டைக் காட்சிகளும் நடக்கவேண்டிய இடம்

அ) சட்டிப்பானைகள் இருக்கும் இடம்

ஆ) சந்தை.. காய்கறி இன்ன இதர சாமான்கள் தள்ளுவண்டியில் இருக்கும் இடம்

இ) கண்ணாடி பாட்டில்கள் .. இவை அனைத்து நிச்சயம் உடைக்கப்படவேண்டும்

9) காணாமல் போய் சேரும் சகோதரர்கள் பற்றிய கதை இருந்தால், நிச்சயம் அனைவருக்கும் தெரிந்த குடும்பப் பாடல் ஒன்று நிச்சயம் வேண்டும். இது

அ) சகோதரர்கள் பாடவேண்டும்

ஆ) கண்குருடியான அம்மா பாடவேண்டும் (இறுதிக்காட்சியில் அவளுக்கு கண்பார்வை கிட்டும்)

இ) குடும்ப நாய் அல்லது பூனை

10) போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் படத்தில் வந்தால் இரண்டு வகையில் வருவார்கள் (போலீஸாக ஹீரோ இல்லாத பட்சத்தில்)

அ) படு நேர்மையான போலீஸ் அதிகாரி பெரும்பாலும் ஹீரோவின் அப்பா. டைட்டில் போடுவதற்கு முன்னால் இவர் சாகவேண்டும். அப்பாவாக இல்லாத பட்சத்தில், கெட்ட ஹீரோ (அண்டி ஹீரோ)வை ‘சட்டத்திலிருந்து நீ தப்பமுடியாது ‘ என்று பேசிகொண்டே 23ஆவது ரீல் வரை துரத்திவிட்டு, இறுதியில் தன் மகளை அவனுக்கு மணம் முடித்துவைத்து தோளில் தட்டிக்கொடுக்கவேண்டும்.

இ) படு மோசமான கெட்ட போலீஸ் அதிகாரி. உண்மையான வில்லனின் கையாள். கிளைமாக்ஸில் ஹீரோவால் சாகவேண்டும்.

விதிகளை தெரிந்து கொண்ட இடம்: thothavanda.blogspot.com

நான் ரசித்தேன்……………………நீங்களும்???????????????

ரசித்த இடம்: http://flypno.blogspot.com/

கொஞ்ச நேரம் இந்த குட்டீச கவனிக்காம விட்டோம்னா என்ன என்ன பண்ணிருவாங்க தெரியுமா? கீழ பாருங்க.

பாகம் 1, பாகம் 2 பார்க்கலன்னா இப்போ பார்த்துருங்க

கொஞ்ச நேரம் இந்த குட்டீச கவனிக்காம விட்டோம்னா என்ன என்ன பண்ணிருவாங்க தெரியுமா? கீழ பாருங்க.

பாகம் 1 பார்க்கலன்னா இப்போ பார்த்துருங்க

(டெலிபோன் மணி அடிக்கிறது)

தங்கமணி : காய் நறுக்கறதுக்குள்ள நாப்பது போன்… ச்சே…  ஒரு வேலை செய்ய விடறாங்களா (என முணுமுணுத்தபடி வந்து போன் எடுத்து)
ஹெலோ (என்றாள் ஸ்டைலாய்)

எதிர்முனையில் ஒரு பெண் : சத்ஸ்ரீஅகால்ஜி

தங்கமணி : என்னது சசிரேகாவா? அப்படி யாரும் இங்க இல்லங்க

(ச்சே… இந்த ராங் நம்பர் தொல்ல பெரிய தொல்லையா போச்சு என முணுமுணுக்கிறாள்)

எதிர்முனை : நை நை
தங்கமணி : (ஏற்கனவே வேலை கெடுகிறதே என கடுப்பில் இருந்த தங்கமணி இன்னும் கடுப்பாகி) என்னது? யார பாத்து நை நைனு சொன்ன? என் வீட்டுக்காரர் கூட அப்படி சொன்னதில்ல… பிச்சுபுடுவேன் பிச்சு

எதிர்முனை : நை நை ஜி… (என அந்த பெண் ஏதோ சொல்ல வருவதற்குள்)

தங்கமணி : என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல? மறுபடி நை நை’ங்கற

எதிர்முனை : Is this XXXXXXX? (என ஒரு போன் நம்பர் சொல்லி கேட்க)
தங்கமணி : நோ நோ ராங் நம்பர் (என போனை கட் செய்தவள் “ஹ்ம்ம்.. வேற வேலை இல்ல இதுகளுக்கு… ராங் கால் பண்ணினதும் இல்லாம என்னை வேற திட்டுது… கொழுப்பு” என முணுமுணுத்தபடி வேலையை தொடர்ந்தாள்)

சிறிது நேரத்தில் ரங்கமணி என்ட்ரி….

“ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா…. என்னா வெயிலு என்னா வெயிலு… சாயங்காலம் வரைக்கும் கொளுத்துது போ” என்றபடி மின் விசிறியை சுழல விட்டார்

“ஹ்ம்ம்… ஊட்டில ஒரு வேல பாருங்க… குளுகுளுனு இருக்கலாம் வருஷம் பூரா” என்றாள் கேலியாய்

“ஏன் அண்டார்டிக்கால பாத்தா வேண்டாம்பியோ?” என்றார் அவரும் கேலியாய் பதிலுக்கு

“ஹும்க்கும் இங்க இருக்கற ஆக்ராக்கு போய் தாஜ் மகாலை பாக்க வழியைக்காணோம்… இதுல அன்டார்டிக்காவாம் ஆப்ரிகாவாம்” என கழுத்தை நொடிக்கிறாள்

“பாத்து பாத்து… ரெம்ப திருப்பாத, கழுத்து சுளுக்கிக்க போகுது…”

“இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல”

“ஏன் தங்கம்? என்னமோ 5ம் நம்பர் பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்ல எறங்கற மாதிரி இங்க இருக்கற ஆக்ராங்கற… அது போகணும் ரெண்டு நாளு ட்ரெயின்ல”

“மனசிருந்தா அமெரிக்காவும் அரை மையில் தான்… மனசில்லைனா அடுத்த தெருவும் அரை நாள் தொலைவு தான்”

“ஆரம்பிச்சுட்டயா உன் பழமொழி ரீமிக்ஸ் வேலைய? அது சரி… என்ன டிபன் இன்னிக்கி?” என பேச்சை மாற்றுகிறார்

“சேமியா கிச்சடி”

“எப்ப பாத்தாலும் இதே தானா? வேற எதாச்சும் வெரைட்டியா செய்யேன்”

“என்னது? எப்ப பாத்தாலும் இதேவா? இன்னைக்கி காலைல பொங்கல் செஞ்சேன், நேத்து சாயங்காலம் தோசை காலைல ஆப்பம், முந்தின நாள் சாயங்கலாம் அடை காலைல உப்மா, அதுக்கு முந்தின நாள் சாயங்காலம் இட்லி காலைல எலுமிச்சபழ சேவை… இதுக்கு மேல என்ன வெரைட்டி செய்ய சொல்றீங்க?” என முறைக்கிறார்

“அதில்லம்மா… இந்த சப்பாத்தி சன்னா, பூரி மசால், நான் குருமா, புலாவ் பச்சிடி இப்படி எதுனா செய்யலாமே?”

“அதுக்கு எவளாச்சும் ஹிந்திகாரியா பாத்து கட்டி இருக்கணும்…” என்கிறாள் கடுப்பாய்

“ஹ்ம்ம்… இப்ப யோசிச்சு என்ன புண்ணியம்?” என வேண்டுமென்றே சலித்து கொள்கிறார்

“ஓஹோ… அப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா?” என தங்கமணி டெரர் லுக் கொடுக்க

“இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல தங்கம்… நீ மட்டும் ‘உம்’னு ஒரு வார்த்த சொல்லு….”

அதற்குள் இடைமறித்து “என்ன சொன்னீங்க?” என தங்கமணி முறைக்க

“ஹி ஹி… அதில்ல தங்கம்… உனக்கும் கூட மாட உதவியா… ” என்றவர், தங்கமணி ருத்ரதாண்டவம் ஆட தயாராவதை உணர்ந்து

“ஹா ஹா… டென்ஷன் ஆகாத… சும்மா கிண்டலுக்கு சொன்னேன்… நான் டிரஸ் மாத்திட்டு வரேன்… கிச்சடி எடுத்து வெய்யி சாப்பிடலாம்” என்றபடி அறைக்குள் செல்கிறார்

அவர் சென்ற பின், ஏனோ தங்கமணிக்கு சற்று முன் வந்த ராங் கால் நினைவுக்கு வந்தது

“ஒருவேளை அந்த பொண்ணு பேசினது ஹிந்தியா இருக்குமோ” என ஒரு நொடி நினைத்தவர், “என்னமோ இருக்கட்டும் ராங் கால் பத்தி நமக்கென” என மேல் வீட்டுக்கு விளையாட சென்ற மகளை அழைத்து வர செல்கிறாள்
“வா தங்கம்… டிபன் வேலை எல்லாம் ஆச்சா?” என வரவேற்கிறாள் மேல் வீட்டு ஐஸ்வர்யா

“செஞ்சாச்சு ஐஸு…  இனி தான் சாப்பிடணும்… அதான் பாப்பாவ கூட்டிட்டு போலாம்னு வந்தேன்” என்றாள்

“உனக்கு விஷயம் தெரியுமா தங்கம். நம்ம வசந்தி, அவ வீட்டுக்காரரை டைவர்ஸ் பண்ண போறாளாம்”
“ஐயையோ என்னாச்சு?” என்கிறாள் தங்கமணி அதிர்ச்சியாய்

“அதையேன் கேக்கற… என்னமோ சொல்லுவங்களோ, கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும்….னு…அப்படி தான் ஆச்சு கதை… இந்த காலத்துல யாரையும் நம்பறதுக்கில்ல”

“ஹ்ம்ம்… ” என்றாள் யோசனையாய் “சரி, அவர் டிபன் சாப்பிட வெயிட் பண்ணிட்டு இருக்கார், நான் அப்புறம் வரேன்… பாப்பா வா போலாம்” என மகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வருகிறாள்

அன்றிரவு….“கிச்சடி நல்லா இருந்தது தங்கம்” என்றார் ரங்கமணி

“ம்… அது சரி… உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?”

“என்ன இப்படி கேட்டுட்ட? கல்யாணம் ஆன புதுசுலையே சொன்னனே”

“ஆமா, வெவரங்கெட்டவ ஒருத்தி சிக்கினானு சும்மா என்ன என்னமோ புருடா விட்டீங்க… அதெல்லாம் யாரு நம்பினா”

“அடிப்பாவி, எல்லாம் நேரம். அப்படினா நான் அப்ப சொன்ன எதையுமே நீ காதுலையே வாங்கிக்கலையா?” என்றார் பாவமாய்

“இப்படி பாவமா மூஞ்சிய வெச்சுட்டு கேட்டாலும் அதே பதில் தான்..”

“ஹும்… நான் கூட என் புது பொண்டாட்டி எவ்ளோ அக்கறையா நாம பேசறத ரசிச்சு கேக்கறான்னு நினைச்சு எவ்ளோ சொன்னேன்… எல்லாம் வீணா போச்சே” என பீலிங் காட்டுகிறார்

“சரி சரி… அத விடுங்க… உங்களுக்கு ஹிந்தி நல்லா பேச தெரியுமா?” என மேட்டர்க்கு வருகிறார்

“ஹிந்தி மட்டுமில்ல, பஞ்சாபி கூட கொஞ்சம் பேசுவேன்” என்றார் பெருமையாய், பின்னால் வரப்போகும் விபரீத்ததை அறியாமல்

“எப்படி கத்துகிட்டீங்க?” என ஆர்வம் போல் காட்டி விசயத்தை கறக்க முயல்கிறாள் தங்கமணி

“அது… எங்க ஆபீஸ்ல ஒரு பஞ்சாபி பொண்ணு இருந்தா… சும்மா சொல்லக்கூடாது… நல்ல பொண்ணு… லஞ்ச் எல்லாம் எனக்கும் சேத்து கொண்டு வருவா… அதுவும் அந்த புலாவ் & நவரத்னகுருமா டேஸ்ட் இன்னும் நாக்குலையே இருக்கு போ” என சிலாகிக்கிறார், தற்போது தன் நாக்கில் சனி பகவான் ‘தாம் தரிகிட தீம் தரிகிட’ என ஜதி பாட ரெடியா இருக்கறது தெரியாம

தங்கமணி கோபத்தை கட்டுப்படுத்தியபடி “ஓஹோ.. அதான் சப்பாத்தி, நான், புலாவ் எல்லாம் வேணும்னு கேட்டீங்களோ?”

“ஹி ஹி… ஆமாம்… அந்த பொண்ணு தான் கொஞ்சம் ஹிந்தி பஞ்சாபி எல்லாம் சொல்லி குடுத்தது”

“அவள மனசுல வெச்சுட்டு தான் கொஞ்ச நேரம் முன்னாடி ‘நீ மட்டும் உம்’னு சொல்லு’ னு சொன்னீங்களோ”

“என்ன தங்கம் நீ…”

“அதுவும் எனக்கு கூட மாட உதவியா?”

“ஐயோ… என்னை கொஞ்சம் பேச விடேன்…”

“ஐயையோ… இப்படி மோசம் போயிட்டனே… அம்மா அப்பா, என்னை இப்படி ஒரு மனுஷன்கிட்ட சிக்க வெச்சுட்டீங்களே” என தங்கமணி அழத்துவங்க

“என்னாச்சு தங்கம்? நீ கேட்ட கேள்விக்கு தானே பதில் சொன்னேன்” என ஒன்றும் புரியாமல் ஜெர்க் ஆகிறார்

“எனக்கு தெரியும்…எல்லாம் தெரியும்… அவ பேரு கூட சசிரேகா தானே… ” என அழுகிறாள் தங்கம்

“இல்லையே… அவ பேரு ஜெய்பரீத் ஆச்சே..” என அந்த நேரத்துலயும் திருத்தம் செய்கிறார்

“ஓஹோ… அவ பேரு ஊரு போன் நம்பர் எல்லாம் மனப்பாடமா இருக்கா?”
“இல்ல தங்கம்…” என்றவரை பேச விடாமல்

“நீங்க பொய் சொல்றீங்க… அவ பேரு சசிரேகாதான்… இன்னிக்கி போன் பண்ணி இருந்தா.. எடுத்த உடனே சஸ்ரிகாஜினு என்னமோ சொன்னா… என்னை கூட நை நை’னு என்னமோ திட்டினா… நான் சுதாரிச்சதும் வேணும்னே ராங் நம்பர் மாதிரி நடிச்சுட்டு கட் பண்ணிட்டா”

“ஐயோ…இல்ல தங்கம்….அது வந்து…” என ரங்கமணி சொல்ல வருவதை காதில் வாங்காமல்

“நான் எங்க ஊருக்கே போறேன்… நாளைக்கே போறேன்” என தங்கமணி புலம்பல் தொடர்கிறது

அதுக்கப்புறம் ரங்கமணி தனியா உக்காந்து பொலம்பினது இதான்

“அட ஆண்டவா… அது சசிரேகாவும்  இல்ல லலிதாகுமாரியும் இல்ல, சத்ஸ்ரீஅகால்ஜி… பஞ்சாபி மொழில சத்ஸ்ரீஅகால்ஜினு சொன்னா நாம வணக்கம் சொல்ற மாதிரினு இவளுக்கு எப்படி சொல்லி புரிய வெக்கறது… ஹும், சப்பாத்தி கேட்டது ஒரு குத்தமா… என் கெட்டநேரம், இன்னைகினு பாத்து ஏதோ ஒரு பஞ்சாபி லூசு ராங் கால் பண்ணி இருக்கு, நான் வசமா சிக்கிட்டேன்… இவ ஒருத்திய சமாளிக்கவே நான் திணறிட்டு இருக்கேன். இதுல இன்னொன்னு வேற வேணுமா? ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பபா…”

புலம்பலை ரசித்த இடம்:  http://appavithangamani.blogspot.com

முஸ்கி : என்னது சமையல் குறிப்பா? என்ன பண்ணி தொலையிறது இந்த குரூப்ல ” கல்யாணம் ஆகாத பசங்க இருக்காங்க ” ” ( எப்பவும் ) கல்யாணமே ஆகாத பசங்களும் இருக்காங்க..  அவங்களுக்காக தான்.. இது.. ( எல்லாம் என் தலையெழுத்து.. )

( கம கமக்கும் வெஜ் சாம்பார் )

தேவையான பொருட்கள் :

கிச்சன் :1 (உங்க வீட்டில் இருக்கணும் )

கேஸ் அடுப்பு : 1 (இரண்டு பர்னர் கொண்டது )

கேஸ் சிலிண்டர் : 1 (கேஸ் உடன் )

கேஸ் : தேவையான அளவு

பாத்திரம் : 2 (சைஸ் உங்களுக்கு தேவையான அளவு )

கரண்டி : 2 ( பாதாள கரண்டி இல்லை )

டேபிள் ஸ்பூன் : 3 ( டேபிள் இல்லாமல் )

லைட்டர் : 1 ( இல்லாவிட்டால் தீப்பெட்டி )

தண்ணீர் : 6 லிட்டர்

டுஸ்கி : நோ , நோ ….. இதுக்கே கோவப்பட்டு அருவாள எடுத்தா எப்படி? இன்னும் செய்முறை வேற இருக்கே ?

செய்முறை :

முதலில் கிச்சனுக்குள் நுழையவும் ,லைட்டர் அல்லது தீப்பெட்டி கொண்டு கேஸ் அடுப்பைபற்ற வைக்கவும்.ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து இரண்டு பாத்திரங்களையும் கழுவி கொள்ளவும் ,ஒரு பாத்திரத்தை பற்ற வைத்த அடுப்பின் மேல் வைக்கவும் ,அதில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

கொதிக்க வைத்த நீரை வைத்து அடுத்த பாத்திரத்தைகழுவவும் ,பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து இடது பக்கத்து வீட்டில் ஓசி வாங்கி மீதமுள்ள சாம்பாரை எடுக்கவும்..அதை அந்த பாத்திரத்தில் ஊற்றி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.

இப்போது சுவையான “வெஜ் சாம்பார்” ரெடி .அடுத்து உங்கள் இஷ்டம் போல் வலது பக்கத்து ( தக்காளி….. தப்பி தவறி கூட இடது பக்கத்து வீட்டுக்கு போயிடாதிங்க செருப்படி விழும் , நேத்துதான் சாம்பார் ஓசி வாங்கி இருக்கோம் ) வீட்டிலோ ,எதிர்த்த வீட்டிலோ தேவையான அளவு சோறு ஓசி வாங்கி ,இந்த சுவையான “வெஜ் சாம்பார்” ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

டிஸ்கி : ஹி,ஹி,ஹி…….. இன்னும் நிறையா ஐட்டம் இருக்கு ஒன்னு ஒன்னா எடுத்து விடுறேன் .

இப்படிக்கு

மங்குனி அமைச்சர்

தலைவர்

ஓசியில் உடம்பை தேத்துவோர் சங்கம்

சமையல் குறிப்பு படித்து நொந்த இடம்: http://www.terrorkummi.com

ரிமோட் கண்ட்ரோல் தன்னுடைய வாழ்க்கையை பற்றி பேசுகிறது…

ஐயோ வாங்க என் வாழ்க்கையை பற்றி கேளுங்க, எல்லாரும் என்னை நோன்டோ நோன்டுன்னு நோன்றாயிங்க, உங்களை நோண்டு நோன்டுன்னு நோன்டுனா உங்களுக்கு எப்பிடி இருக்கும்…??

இதுக்காக எனக்கு எப்போ சான்ஸ் கிடைக்குதோ, அப்பப்போ சோபா’க்கு கீழே போயி ஒளிஞ்சிகிடுறேன், இருந்தாலும் தடியணுக, தடிச்சிக, சோபா’மேலே ஏறி உக்காருறதுனால எனக்கு மூச்சி முட்டுது…!!!

நீங்க நல்லா காத்து வாங்கிட்டு உக்காந்து இருக்கீங்க, என்னை மட்டும் மூச்சி முட்ட வைக்கிறீங்க, உங்க மேல யாராவது குண்டா உக்காந்தா, உங்களுக்கு எப்பிடி இருக்கும்…???

நீங்க சிரிக்கனும்னாலும் என்னை நோன்டுறீங்க, அழனும்னாலும் [[சீரியல்]] என்னை நோன்டுறீங்க, திட்டனும்னாலும் [[விஜய்]] என்னை நோன்டுறீங்க…..??? கோவம் வந்தா என்னை தூக்கி எதுக்குடா எறியுறீங்க ராஸ்கல் ம்ஹும்…..!!! [[இதை ஹிந்தியில் சொல்லும் போது இன்னும் சூப்பரா இருக்கு…!!!]]

கதை கேட்ட இடம்: http://nanjilmano.blogspot.com

கிரிக்கெட்ல நம்மள நல்லா ஏமாத்தறாங்கப்பா..

எப்படி தெரியுமா..!!

1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே
No Ball-ன்னு சொல்வாங்க.,

2. ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு
சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான்
இருக்கும்.

3. All Out-ன்னு சொல்லுவாங்க..,
ஆனா 10 பேர் தான் Out ஆகி
இருப்பாங்க..

4.அம்பயர் ஒரு கைய தூக்கினா
ஒரு Batsman அவுட்..,
ரெண்டு கையயும் தூக்கினா Six..
( லாஜிக் இடிக்குதே..!! )

5. Goal Keeper-ன்னா கோல் விழாம
தடுக்கணும்.. அப்ப.., Wicket Keeper
விக்கெட் விழாம தடுக்கணும் தானே…!
ஆனா அவரே ஏன் Out பண்ணுறாரு..?

6. சில ஒவர் மட்டும் Powerplay-னு சொல்றாங்களே..
அப்போ, மீதி ஒவர் எல்லாம் பவர் இல்லாம
இருட்டிலயா விளையாடுறாங்க??

7. ஒருத்தரை மட்டும் Night Watchman-னு
சொல்வாங்க.. ஆனா அவரும் மேட்ச் முடிஞ்ச
Ground-ஐ காவல் காக்காம ரூம்க்கு தூங்க
போயிடுவாரு..

8. Tea Break-னு சொல்வாங்க.. ஆனா
கூல் ட்ரிக்ஸ் தான் குடிப்பாங்க..

9. என்னதான் எல்லா பக்கமும்
Light எரிஞ்சாலும்., ஒரு பக்கத்தை மட்டும்
“OFF ” Sideனு தான் சொல்வாங்க..

10.ஆட்டம் முடிஞ்ச உடனே ஒருத்தரை
மட்டும் தான் ” Man of the Match “-ன்னு
சொல்லுறாங்க.. அப்ப மீதி பேரெல்லாம்
Women-ஆ..?

தெரிந்து கொண்ட இடம்: www.terrorkummi.com

கொஞ்ச நேரம் இந்த குட்டீச கவனிக்காம விட்டோம்னா என்ன என்ன பண்ணிருவாங்க தெரியுமா? கீழ பாருங்க.


@vembaikrishna

அரசுடிவிக்காக உள்ளூர்சானல்கள் முடக்கம்., சீக்கிரம் செய்யுங்கம்மா… தமிழன் பாடபுத்தகம் இல்லையென்றால் கூட ஒத்துக்குவான்; டிவி இல்லாம செத்துருவான்.
@iKrishS
சதானந்தா-வை முதல்வராக்கியிருக்கும் எடியூரப்பாவிற்கு, அமாவாசை சத்யராஜ் கலக்கிய அமைதிப்படை டிவிடி யை அனுப்பிவைக்க உத்தேசித்துள்ளேன்.
@aadhireyan

சிறிய கரித்துண்டால் ஒருவருடைய மானத்தை தீர்மானித்துவிடுகிறோம்.

@iParisal
பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய்க்கு கம்மியாய் வாங்குவதில்லை. போலீஸ்காரர்கள் நூறு ரூபாய்க்கு கம்மியாய் வாங்குவதில்லை.

@kanapraba
சின்னத்திரை நாடகம், இசை, நடன நிகழ்ச்சி, talk show எல்லாவற்றிலும் அழுகை, செண்ட்டிமெண்ட் கண்டிப்பாக இருக்கணும் என்பது எழுதப்படாத விதியோ.
@sheik007
சென்னை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டை தடுக்க பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா திருட்டு.. #ஆட்டை ஆப் தி இயரு..

@ThalaThalapati
சிங்கம் சிங்கம் மன்மோகன் சிங்கம்

@cheethaa
சோம்பேறி என்பவன் செய்கிற வேலையை பாதியிலேயே
@anuthinan
கதிர்காம கந்தனின் நூலை கையில் கட்டி விடும் அன்பு அம்மாவுக்கு கூட நான் அந்த முருகன் போல இருப்பதில் உடன்பாடில்லை!!!! # ஆண்டி கோலம்.
@Kannamoochi
எந்த வேலையையும் மறுநாளுக்குத் தள்ளிப் போடாதீங்க. …. இன்றைக்கே யாரையாவது செய்ய சொல்லிடுங்க!
@umakrishh
ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் ஆயிரம் காரணங்களை மனம் கற்பித்துக் கொள்கின்றது அதற்கு சாதகமாகவே .

@naiyandi
அய்ய…ஜாலி, டீச்சர் லீவு! வா சிதம்பரம் கொஞ்ச நேரம் வாயை திறந்து கத்தி விளையாடலாம் -மன்மோகன் சிங்:-)

@PoetVM
@kodaangi
தெரிந்தவர்களிடம் நான் அதிகம் எதிர்ப்பார்ப்பது; எதிரில் வரும் போது ஒரு சிறு புன்னகை தான்!
@Vaanmugil
விக்ரம் நன்றாக நடிப்பார். அஜித் நன்றாக நடப்பார். விஜய் நன்றாக பறப்பார்.
@kodaangi
ஒருவழிசாலையிலும் இரு பக்கமும் பார்த்து கடக்க நேரிடுகிறது நம்மூரில்!
@pokkiris
இவ்வருடம் மழை அவ்வளவாக பொழியாது என்ற இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பு, நம்பிக்கை அளிக்கிறது.
@kolaaru
பைக் சாவி தொலைஞ்சுபோனா கூட மிஸ்ட்கால் கொடுத்து பாக்கலாம்னு லாஜிக்கே இல்லாம ஒரு யோசன வருது..மூளை வேலை முழுவதும் மொபைல் !

@pokkiris Is this true? If so, Explosive information!!!!

@minimeens
மனைவியை பிரிய அர்னால்ட் முடிவு.! #பாருங்கய்யா அவ்ளோ பெரிய பலசாலி, அவராலயே முடியல. சொம்மா எங்ககிட்ட வந்துக்கிட்டு.!!!

@araathu
பிரச்சனைகளை சமாளிப்பவர் – கலைஞர் . பிரச்சனைகளை உருவாக்கி சமாளிப்பவர் – ப்ப்புரட்சித்தலைவி.

@g_for_guru

தங்கபாலுவும் டிராவிடும் ஒன்றுதான்..எப்பிடி பால் போட்டாலும் அடிக்கவும் மாட்டேங்குறானுங்க..அவுட்டும் ஆக மாட்டேங்குறானுங்க..நான்சென்ஸ்!!
@Ganesukumar
சினிமா வில்லன்கள் எவ்ளோ வளர்ச்சியடைந்தாலும் அலைபேசியை இயக்க மட்டும் தெரிவதில்லை. # அவனுக்கு போன போடறா …

@krpthiru
நான் சற்று முன் பார்த்து முகம் சுளித்தவனின் மூச்சை இப்போது நான் சுவாசித்து கொண்டிருக்கலாம் ! # அன்பே கடவுள் !
@arattaigirl
தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளும்பாடம்… அடுத்த முறை ‘தவறை சரியாக செய்ய வேண்டும்’ என்பதாக இருக்கக்கூடாது

@Kaniyen
நண்பனுக்கு தெரியாமல் அவனுடைய அழுக்கு சாக்ஸை குப்பைதொட்டியில் போட்டுவிட்டேன்”நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எதுவுமேதப்பில்லை”

@Tparavai
எக்செல் சீட்டையே வெறித்துக் கொண்டிருக்கிறார் என் பாஸ்.நாம் மாற்றாதவரை அதில் எதுவும் மாறாது என அவருக்கு தெரியவில்லை பாவம்..
@thoatta
மாநகர வாழ்க்கை எனக்கு தந்தது மிதமான தொப்பை, மாநகரத்திற்கு நான் தந்தது முடிந்தளவு குப்பை.!!!
@kolaaru
மண்வெட்டியின் ஓயாத உழைப்பிற்கும்,துண்டாகும் மண்புழுக்களுக்கும் சமயத்துக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கிறது எனது மனிதாபிமானம்

@powshya
அறுவடை செய்யப்பட்ட வயல் வெளியை விரைந்து கடக்கின்றன பறவைகள்.

@selvu

பல்லி விழும் பலன்கள் உண்மைதான்.நேற்று பக்கத்து வீட்டுப் பாட்டி மீது பல்லி விழுந்துதது, இன்று 4 பேர் இறந்துவிட்டதாக பேப்பரில் பார்த்தேன்!
@arasu1691

எல்லாவற்றிலும் நம்பிக்கையிருக்கும் மனிதர்கள் இருக்கும் வரை எல்லாவற்றிற்கும் பரிகாரம் இருக்கிறது ஜோசியகாரர்களிடம்..

இந்த கீச்சுக்களை தொகுத்தவர்: பாரத் பாரதி

புதுசு புதுசா கண்டுபிடிக்கிறதுக்கு
அடிப்படையான விஷயம் அதீத கற்பனை தான். இந்த மாதிரி
விஷயத்தில இப்பல்லாம் Photo Editing Softwares ரொம்பவே நல்லா
Use ஆகுது.  மனுசப்பசங்க “Monitor” அடிச்சிக்கிட்டே  “Monitor” முன்னாடி
உக்காருவாங்க போல. நல்லா தான் யோசிக்கிறாங்க.

இனிமே உள்ளாற மழை பெய்தாலும் கவலை இல்லை.

இந்த ஒத்த Mouse போதாது, நம்மளுக்கு.

          பல்லு விலக்கும் போதாவாது போனுக்கு ரெஸ்ட் கொடுங்கப்பா!
                          நம்மளுக்கு வேற Keyboard இல்ல கொடுத்தாங்க.
                                                             இரும்மா சூடு ஆறட்டும்.

Flashback வரப்போகுது .

கணிப்பொறி அடிமைகள் பற்றிய கேலிசித்திரங்கள்; சிறிது பழையது ஆனாலும் இன்றைய உலகத்தை காட்டுவது. அதனால் உங்கள் பார்வைக்கு

பாகம் 1 பார்த்து விட்டீர்கள் என நம்புகிறேன்

நம்ம பில்கேட்ஸ் கம்பெனியோட நகைச்சுவை பாகம் 1 படிச்சுருப்பீங்க. இதோ உங்கள் பார்வைக்கு மேலும் சில

கடைசியாக…

நண்பர் Rama Sethu Ranga Nathan G+ல் பகிர்ந்து கொண்டது

வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.

வித்யா : என்ன குழப்பம்?

நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற

பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான் சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.

வித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.

வித்யா : மேனஜரா? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு.

நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்.

நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?

நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.

நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம “அறிவாளி” படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு “நீ ரொம்ப நல்லவனு”சொல்லனும். அவ்வளவு தான்.

வித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்…

G+ல் நண்பர் போஸ்கோ ஆனந்தராஜ் பகிர்ந்தது

நாட்டில் மடிக்கணினிகளின் எண்ணிக்கை அலைபேசிகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. இதே நிலைமை நீடித்தால் இப்படி தான் பழைய மடிக்கணினிகளை உபயோகிக்க வேண்டி வரும் …

படங்கள் உதவி: http://www.tamilcomedyworld.com

கணிப்பொறி அடிமைகள் பற்றிய கேலிசித்திரங்கள்; சிறிது பழையது ஆனாலும் இன்றைய உலகத்தை காட்டுவது. அதனால் உங்கள் பார்வைக்கு
 

கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
இறுதியில் மதிப்பெண்ணை கணக்கிட்டு கொள்ளுங்கள்.
நீங்கள் தெரிவு செய்யும் பதில் அ எனில் 10 மதிபெண்  ஆ எனில் 5 மதிபெண் இ எனில் 1 மதிப்பெண் 
1 . ஆண்/ பெண் இணைந்து சாலையில் நடக்கும் போது உங்களுக்கு   தோணுவது.
   அ) கடுப்பு                            ஆ) சந்தோஷம்                           இ) ஏதுமில்லை
2. நீங்கள் விரும்பும் படம்
   அ) காதல்                    ஆ) சண்டை                       இ) ஏதுமில்லை
3. “அந்த காலத்துல நாங்கல்லாம்….” என அடிக்கடி சொல்வீர்களா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
4. ஓடும் பஸ்ஸில் ஏறுவிர்களா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
5. அடிக்கடி கோவம் வருமா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
6. காதல் கவிதைகள் படிக்க விருப்பமா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
7. உடை விஷயத்தில் அலட்சியமாக இருப்பிர்களா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
8. மொபைல் பயன் படுத்துபவர்களை கண்டால் கோவம் வருகிறதா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது

மதிப்பெண் கண்டுபிடித்துவிட்டிற்களா ?
முடிவு :

எனக்கு இன்னும் வயசு ஆகவில்லை, நான் என்றும் இளமைதான் என நினைப்பவர்கள் யாரும் இந்த டெஸ்டில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள். வயசானா போல பீலிங் உள்ளவங்கதான் மார்க் என்னனு தேடுவிங்க.. 

ஹைய்யா எல்லாருக்கும் பல்பா.
நான் உங்களுக்கு கொடுத்த பல்பை எனக்கு வழங்கியவர்:  http://rajamelaiyur.blogspot.com

Surreal but Real

Minor Paddle

Dean Potter – on the line, solo at Taft Point

Falling Up

NOT PHOTOSHOPPED. It actually came out like this.

GeorgeV wrapped building

I’ve heard of a headless horseman, but this is rediculous!

Minor Air

Big hand, little city

Waterworld

Waiting autumn

What is really real? Can you trust your senses?

The Writer

A gull for every buoy.

Please don’t fall, cloud

Playing with perspective

winter kiss II

நன்றி: http://www.webdesigncore.com


என்ன மாமு நாங்களும் சும்மா கலக்குவோம்ல


தீயா வேல செய்யணும்


மேக் டொனால்ட் உங்களை கடுப்புடன் வரவேற்கின்றது


இதே சுகம் இதே சுகம் எந்நாளுமே வந்தால் என்ன


ஏலே ஆம்ஸ்ராங்கு உன்னால மட்டுமா முடியும்?


என் இனிய பொன் நிலவுடன்


யாரது ?? காத்தமுத்து பேரனா நீயி??


மலர்களே மலர்களே இது என கனவா??


ரொம்ப குண்டாயிட்டமோ ?


என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை


மாப்பு எவனோ வட்சிடான்யா ஆப்பு


தூக்கு மேடை எங்களுக்கு பூச்சோலை


காலங்காத்தால ஒரு தம்மு இல்லேன்னா செத்துறாலம் போல இருக்குதே ….


ஹாய் ஐ எம் ஹுங்காய் சிபிஐ ஆபிசர் பிரோம் சீனா


பார்த்த முதல் நாளே அவளை பார்த்த முதல் நாளே


ஸ்பைடர் மேன் ரிட்டர்ன்


அட அட அட அட ….பால் குளியல் சூப்பர் ..


இந்த கோடை வெயிலுக்கு ஜில்லுனு ஒரு பீர்


அவன் ஒரு சுத்த பட்டிக்காடு ஹ ஹ ஹ ஹ ஹா ஹா


அய்யய்யோ குளிருதே …


என்னை காப்பாற்ற யாருமே இல்லையா??


என் செல் பில்லை கட்ட ஒருத்த சிக்கிடாண்டி


காதலித்து பார் உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்


என்ன கொடும சரவனா எனக்கு மட்டும் ஒருத்தனும் சிக்குரானுங்க இல்லையே ….


நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்

வித்தை கண்ட இடம்: http://qaruppan.blogspot.com

உலகில் சர்வாதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இல்லாமல் போய் விடலாம். ஆனால் அவர்களைப் பற்றி ஜோக்குகள் இல்லாமல் போகாது. இதோ சில:
———
ஒரு சர்வாதிகார நாட்டில் பார்க்கில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். திடீரென்று ஒருவர் ”தூ’ என்று துப்பினார்..
அவரைப் பார்த்து மற்றவர் சொன்னார்:

“நமது ஜனாதிபதியின் உரையைப் பற்றி பொது இடத்தில் அபிப்பிராயம் தெரிவிப்பது தவறு.”
*
ஓர் அரசியல்வாதி பொதுக்கூட்டத்தில் முழங்கினார் பெருமையாக. “இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் நானேதான்” கூட்டத்திலிருந்து ஒரு குரல்: `மன்னிப்பு ஏற்கப்பட்டது.’
*
ஒரு சர்வாதிகாரி பெரிய துணிக் கடைக்குச் சென்றார். விலையுயர்ந்த சூட் ஒன்று அவருக்குப் பிடித்திருந்தது. “என்ன விலை?” என்று கேட்டார். “விலையெல்லாம் எதுக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பரவாயில்லை” என்று கடைக்காரர் குழைந்தார்.
“சேச்சே… இலவசமாக எதையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்” என்றார்.
கடைக்காரர் உடனே, “சரி, இதன் விலை இரண்டு ரூபாய்” என்றார்.
சர்வாதிகாரி நாலு ரூபாயை அவரிடம் கொடுத்து, “அப்படியானால் இரண்டு சூட் எடுத்துக் கொடுங்கள்” என்றார்.
*

ஹிட்லரைப் பற்றிய சில கேலி ஜோக்குகள் அவர் காதுக்கு எட்டின. யார் இந்த ஜோக்குகளை ஆரம்பித்து வைத்தவர் என்று கண்டுபிடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்கள் அரும்பாடு பட்டு ஒரு முதியவரைக் கண்டுபிடித்து வந்து ஹிட்லரிடம் விட்டார்கள்.
“என்னய்யா, நீர்தான் என்னைப் பற்றி கேலி ஜோக்குகளைப் பரவ விடுகிறீரா? நான் இறந்தால் உலகம் முழுதும் கொண்டாடுவார்கள் என்கிற ஜோக் உங்களுடையது தானே?”
“ஆமாம்.”
“நான் ஆற்றில் மூழ்கிய போது ஒருவர் காப்பாற்றுகிறாராம். அவருக்கு நான் நன்றி தெரிவித்த போது, `நன்றி எதுவும் வேண்டாம். நான்தான் உங்களைக் காப்பாற்றினேன் என்று வெளியே யாருக்கும் சொல்லாமலிருந்தாலே பெரிய உதவியாயிருக்கும்’ என்ற ஜோக்கும்…”
“ஆமாம். என்னுடையதுதான்.”
“இவ்வளவு துணிச்சலா உங்களுக்கு? நான் யார் தெரியுமா? உலகிலேயே சர்வ வல்லமை படைத்தவன்.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் என் வம்சம்தான் உலகை ஆளப் போகிறது என்பது தெரியாதா?”
“அய்யய்யோ, இப்போது நீங்கள் சொல்வதுதான் முதல்தர ஜோக்! ஆனால் இந்த ஜோக்கை நான் சொல்லவில்லை. இதுக்கு முன்னே நான் இதைக் கேட்டதுகூட இல்லை” என்றார் அந்த முதியவர்.
*
குருஷ்சேவுக்குப் பயங்கர கோபம் கேலி ஜோக்குகள் சொல்பவர்கள் மீது. “இந்த மாதிரி யாராவது ஜோக் சொன்னால் அவனைப் பிடித்துக் கொண்டு வந்து என் முன் நிறுத்துங்கள்” என்று உத்தரவிட்டார்.
அதிகாரிகள் ஒரு ஜோக் எழுத்தாளரைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.
குருஷ்சேவின் மாளிகைக்குள் நுழைந்த அவர், அதன் ஆடம்பர அலங்காரங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்.
அவரைப் பார்த்து குருஷ்சேவ், “என்ன, சாப்பிட்டு விடுவது போல் பார்க்கிறாய்?” என்று கேட்டார்.
“பரவாயில்லை. நீங்கள் வசதியாகத்தான் இருக்கிறீர்கள.”
“அதற்கென்ன, பார்த்துக் கொண்டே இரு. இன்னும் இருபது வருஷங்களில் இந்த நாட்டில் உள்ள எல்லாரும் இப்படித்தான் இருக்கப் போகிறார்கள்” என்றார்.
“ஆஹா, ஒரு புது ஜோக் எனக்குக் கெடைச்சுது” என்றார் ஜோக் எழுத்தாளர்.
*
பயில்வான் போன்று இருந்தத ஒரு ஆசாமி, தெருவில் எதிரே வந்த நோஞ்சான் ஆசாமியின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
நோஞ்சான் திருப்பி அடிக்கத் தயங்கி, “ஏ… என்னை நிஜமாக அடிச்சியா? இல்லை விளையாட்டா அடிச்சியா?” என்று கேட்டான்.
“நிஜம்மாத்தான் அடிச்சேன். அதுக்கு என்ன?” என்று கர்ஜித்தான் பயில்வான்.
“அதுதானே… எனக்கு விளையாட்டெல்லாம் பிடிக்காது. கெட்ட கோபம் வரும்…” என்று சொல்லிக் கொண்டே நடந்தான் நோஞ்சான்.
*
பள்ளிக்கூட ஆசிரியை மாணவர்களுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தார். “அப்போது கடவுள் அங்கு தோன்றி எல்லாக் குழந்தைகளுக்கும் ரொட்டியும், வெண்ணெயும் கொடுத்தார்…” என்றாள்.
ஒரு மாணவன், “டீச்சர், கடவுள் என்பவர் கிடையாது என்று சர்வாதிகாரி நேற்றுகூட டி.வி.யில் சொன்னாரே” என்றான்.
டீச்சருக்கு உதறலெடுத்தது. உடனே சமாளித்துக் கொண்டு, “இது கற்பனைக் கதைதான். ரொட்டியும், வெண்ணையும் எங்கே இருக்கிறது நமது நாட்டில்? அது கற்பனைதானே! அதுபோல் கடவுளும் கற்பனைதான்” என்றார்

ரசித்த இடம்: http://kadugu-agasthian.blogspot.com/