ஓகஸ்ட், 2013 க்கான தொகுப்பு

ஜவுளிக் கடைக்குச் சென்றிருந்தோம் நானும் என் மனைவியும்.

வாசலில் நான் … உள்ளே அவள்.

சிறிது நேரத்தில் உள்ளிருந்து ஓடி வந்தாள். (அதற்குள் 5 முறை பக்கத்தில் இருந்த கடையில் டீ குடித்து முடித்திருந்தேன்”

“செலக்சன் பண்ணிட்டேன் … வாங்க”

உள்ளே போனேன் … மலைபோல் குவிந்திருந்த சேலைகளைக் காட்டி,

“இதையெல்லாம் செலக்சன் பண்ணி வச்சிருக்கேன் … இதுல உங்களுக்கு எது பிடிக்குதுன்னு சொல்றீங்களோ அதை எடுத்துக்கிறேன்”

“இந்த Blue கலர் Sஅரே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” குத்துமதிப்பாய் சொன்னேன் … நானா கட்டிக்கப் போறேன் என மனதுக்குள் நினைத்தபடி.

“ஐயே.. நல்லாவே இல்ல..”

எனக்கு தெரியும்.

நாம் தான் ஏடிஎம் என்பதனால் மட்டுமே ஒரு வார்த்தை நம்மிடம் கேட்டு வைக்கிறார்களே தவிர, நாம் விரும்பியதை கண்டிப்பாக எடுக்க மாட்டார்கள்.

“நம்ம தமிழ் பண்பாடு என்ன சொல்லுது தெரியுமா..?” சொற்பொழிவாற்ற தயாரானேன் நான்.

“என்ன சொல்லுது..??”

“புருஷனுக்கு எது பிடிச்சாலும் … அது பொண்டாட்டிக்கும் பிடிக்கணும்..”

“ஓஓ…பைத்தியம் பிடிச்சா கூடவா..??!!”

“!!???”

ஷப்பா… மிடியல..

 

Courtesy: Facebook