Archive for the ‘நல்ல மனிதர்கள்’ Category

மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து சுமார் அரை மைல் தொலைவில் கம்பீரமாகத் திகழ்கிறது காந்தி அருங்காட்சியகம். (Gandhi Museum) 1959 ஆம் ஆண்டு இந்திய மக்கள் பலரின் நிதி உதவியால் காந்தி அறக்கட்டளை மூலமாகக் கட்டப்பட்டது. ஏப்ரல் 15 , 1959 ஆம் வருடம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.
இராணி மங்கம்மாள் அரண்மனை இந்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இந்த நினைவு இல்லத்தை அங்கீகரிக்கிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு காலகட்டங்களை விளக்கும் ஓவியங்கள் நம்மை வரவேற்கின்றன. (200 க்கும் மேற்பட்டவை!) அடுத்து மகாத்மா காந்தியின் வாழ்வில் நடைபெற்ற முக்கியமான சம்பவங்களை விளக்கும் ஓவியக்காட்சிகள். நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், குறிப்புகள் என்று பல்வேறு வடிவில் அவரது வாழ்க்கை சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
காந்தியடிகளின் சொற்பொழிவுகளிலிருந்து சிறந்த வாக்கியங்கள், அவரது கையெழுத்துப் பிரதியும், அரிய நிழற்படத் தொகுப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவர் பயன்படுத்திய பொருட்களில் 14 இங்கு இன்னும் பாதுகாக்கப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்கது அவர் இறக்கும்போது அணிந்திருந்த மேல்துண்டு. இரத்தக்கறையுடன் கண்ணாடிப் பேழையில் கவனமாகப் பாதுகாக்கப்படுகிறது. அவரைக் கொல்லப் பயன்படுத்திய கைத்துப்பாக்கியின் மாதிரியும் உள்ளது.
முன்னாள் பிரதமர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரால் பார்வையிடப்பட்ட நினைவில்லம். மதுரை மாநகரின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்று. மற்றவற்றைப் புகைப்படங்கள் சொல்லும். அவரது பிறந்த நாளில் வெளிவரும் இந்தப் பதிவு ஒவ்வொரு இந்தியனுக்கும் அர்ப்பணம்.
ஹே ராம்!
நன்றி ஸ்ரீ 

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….

<<< SHARE THIS >>>

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்…

“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை….

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம்
என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா…வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே…ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே….உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க…எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….

நன்றி – ஏகலைவன். Sangoothara Vayasula Sangeetha  #facebook

Courtesy: ம அசோக் குமார்

நான் ஏழை. எப்போதாவது சிறிது உணவு கிடைக்கும். என் அம்மா தன் பங்கு உணவையும் எனக்கே சாப்பிடத் தந்துவிடுவாள்.

அவள் தட்டிலிருக்கும் உணவை என் தட்டில் வைத்து, “இந்தா! இதையும் சாப்பிடு. எனக்குப் பசி இல்லை” என்பாள்.

இது அம்மா அடிக்கடி சொல்லும் முதல் பொய்.

அம்மா தன் ஓய்வு நேரங்களில் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆற்றில் மீன் பிடிக்கச் செல்வாள்.

ஒரு தடவை அவள் இரண்டு மீன்களைப் பிடித்து வந்து அதை சூப் செய்தாள். நான் சூப்பை அருந்தும் போது என் அருகில் அமர்ந்து கொண்டாள். நான் சாப்பிட்டுவிட்டு, தட்டில் மீதமிருந்ததை எடுத்து உண்டாள். அந்தக் காட்சி என் இதயத்தைத் தொட்டது.

மற்றொரு முறை நான் ஒரு மீனை அவளுக்குத் தந்தபோது, அவள் உடனே மறுத்து, “மகனே! நீயே சாப்பிடு! எனக்கு மீனே பிடிக்காது” என்றாள்.

இது அவளது இரண்டாம் பொய்.

பிறகு, என் படிப்பிற்காக அவள் தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். வீட்டுக்குத் திரும்பி வரும்போது காலித் தீப்பெட்டிகளையும் அவற்றில் அடுக்குவதற்காகத் தீக்குச்சிகளையும் எடுத்து வருவாள். அதன் மூலம் கிடைத்த பணத்தால் குடும்பத் தேவைகளை ஓரளவுக்குச் சமாளித்தோம்.

ஒரு குளிர்கால இரவு. தூக்கத்தின் நடுவில் நான் விழித்துப் பார்த்தேன். அம்மா தீக்குச்சி அடுக்கிக் கொண்டிருந்தாள். நான், “படும்மா, காலையில் மீதி வேலையைப் பார்க்கலாம்” என்றேன்.

அவள் சிரித்துக் கொண்டே, “நீ போய்த் தூங்கு. எனக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லை” என்றாள்.

இது அவளது மூன்றாம் பொய்.

நான் எனது பள்ளி இறுதித் தேர்வை எழுதச் சொல்லும்போது, அம்மா என்னுடன் வருவாள். கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் எனக்காகக் காத்திருப்பாள்.

பரீட்சை முடிந்ததும் வெளியே வரும்போது, தான் கொண்டு வந்திருந்த தேநீரை எனக்குத் தருவாள்.

அம்மாவின் அன்புக்கு முன், தேநீர் எனக்கு ஒரு பொருட்டல்ல. நான் கொஞ்சம் குடித்துவிட்டு, அம்மாவையும் குடிக்கச் சொன்னேன்.

“நீயே குடி! எனக்குத் தேவையில்லை” என்பாள்.

இது அம்மாவின் நான்காம் பொய்.

என் அப்பா திடீரென்று இறந்தபின், அம்மாவே எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றாள். எங்கள் வாழ்வு மிகவும் சிக்கலானது. வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தோம்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எங்கள் நிலை கண்டு, என் அம்மாவிடம் மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.

அதற்கு அவள், “எனக்கு அப்படி ஓர் உறவு மறுபடியும் தேவையே இல்லை” என்று மறுத்துவிட்டாள்.

இது அவளுடைய ஐந்தாவது பொய்.

படிப்பை முடித்த பிறகு, எனக்கு ஒரு வேலை கிடைத்தது. ‘அம்மாவை நான் காப்பாற்ற வேண்டும்’ என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. அப்போது அவள் சந்தையில் காய்கறிகள் விற்று வந்தாள்.

நான் அவளுக்கு அனுப்பிய பணத்தை, எனக்கே திருப்பி அனுப்ப ஆரம்பித்தாள். காரணம் கேட்டபோது, “என்னிடம் தேவையான பணம் உள்ளது” என்றாள்.

இது அவள் சொன்ன ஆறாவது பொய்.

நான் பெற்ற முதுநிலைப் பட்டம் என் சம்பளத்தைப் பெரிய அளவில் உயர்த்தியது.

அம்மாவை என்னுடன் அமெரிக்காவில் வைத்துக் கொள்ள முடிவு செய்தேன். அந்தச் சுகபோக வாழ்வை விரும்பாத அம்மா என்னிடம், “இங்கு கிராமத்தில் நான் மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறேன்” என்றாள்.

இது அவளுடைய ஏழாவது பொய்.

முடிவில் புற்றுநோயால் அவதிப்பட்ட அம்மா ஆஸ்பத்திரியில் சேர்ந்தாள். வெளிநாட்டில் வாழ்ந்து வந்த நான், சிகிச்சை செய்து கொண்ட அம்மாவைப் பார்க்கத் தாய் நாட்டுக்குத் திரும்பினேன்.

என்னைப் பார்த்துப் புன்சிரிப்புடன், “அழாதே மகனே! எனக்கு வலிக்கவே இல்லை” என்றாள். இதயம் சுக்கு நூறாய் நொறுங்கினாற்போல் இருந்தது எனக்கு. இது அவளது எட்டாவது பொய்.

அம்மாவின் ஒவ்வொரு பொய்யும் அவள் என்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுகள். என் அம்மா கூறிய பொய்கள். ‘தாய்மையின் உண்மையை’ எனக்கு உணர்த்தும் உபதேசங்கள் – மொத்தத்தில் ‘அம்மா’ என்பதில் இந்த அகிலமும் அடங்கும்.

உணர்ந்த இடம்: http://www.natpu.in/

இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு

1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’

இலக்கியப் பணி

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
      – பாரதி.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் – பாரதி

தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என கவிபுணைந்த கவிஞாயிறு. சமஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.

  • குயில் பாட்டு
  • கண்ணன் பாட்டு – இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
  • பாஞ்சாலி சபதம்

ஆகியன அவர் படைப்புகளில் சில.

பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்

பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல்செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தேசியக் கவி

விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே… மாநிலமீதிதுபோல் பிறிதிலையே… இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே… இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். “வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் – என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.

பெண்ணுரிமைப் போராளி

தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.

பாஞ்சாலி சபதம்

இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.

பாரதியார் நினைவுச் சின்னங்கள்

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்றுபஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

நன்றி: http://ta.wikipedia.org

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நாம் இறந்துபோவதற்குள் ஏதேனும் ஒரு சிறப்பை செய்திருக்கவேண்டும் அப்பொழுதுதான் இந்த மனித பிறப்பிற்கு ஒரு சிறப்பு இருக்கிறது என்று படித்த ஞாபகம். அதுபோல் ஒவ்வொரு மனிதனும் சில சிறந்த பண்புகளால் பலரின் இதயங்களில் இடம்பிடித்து விடுகிறார்கள். சிலருக்கு தங்கள் குழந்தை, சிலருக்கு மனைவி, சிலருக்கு ரசிகன், சிலருக்கு தொண்டர்கள் என ஒவ்வொரு துறையைப் பொருத்தும் இந்த சிறப்புகள் மாறிக்கொண்டே செல்கிறது என்றபோதிலும் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரே விஷயம் நல்ல பண்புகள், சிறப்பான செயல்கள் என்பவை மட்டுமே இருக்கக் கூடும். இன்னும் சிலர் எண்ணிக் கொள்வதுண்டு பணம் இருந்தால்தான் ஒரு மனிதன் அனைவருக்கும் தெரிந்த ஒருவனாக மாறுகிறான் என்பது சில நாட்களுக்கு மட்டுமே பொருத்தமான வார்த்தைகள் என்று சொல்லவேண்டும். இன்று நம்மிடம் இருக்கும் பணத்தால் நமக்கு கிடைக்கும் மதிப்புகள் மரியாதைகள் அனைத்தும் பணம் இல்லாத நிலைகளிலும் கிடைக்குமா என்பது ஒரு கேள்விக் குறியே. சரி இப்படி ஒவ்வொரு மனிதனையும் வேறுபடுத்திக் காட்டும் பல சிறப்புகள் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு என்பது நாம் அறிந்ததே. இதில் பலர் மறைந்த பிறகும் எல்லோரின் இதயங்களிலும் மறக்காத பல சிறப்புகளை ஏற்படுத்தி செல்பவர்களும் உண்டு . இது போன்ற சிறப்புகளுக்கு உரிய ஒரு உயரிய எண்ணங்களைக் கொண்ட மனிதரைப் பற்றியப் பதிவுதான் இது. இவரைப் பற்றி அதிக அறிமுகங்கள் தேவை இல்லை. பல யதார்த்தங்களுக்கு சிறப்பு சேர்த்த ஒரு சிறந்த பண்பாளர் என்று சொல்லலாம். எளிமையான ஒரு அரசியல்வாதி. நேர்மை தவறாத கறுப்புத் தேகத்திற்கு சொந்தக்காரர். முதலில் எனக்கு காமராஜர் பற்றி எழுத ஆர்வத்தை ஏற்ப்படுத்திய ஆனந்த விகடன் இதழுக்கு நன்றிகள் பல.

னது சிறந்த பண்புகளால் தனது பெயருக்கு ஒரு புது முகவரி தந்தவர். இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!

இவருக்கு காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு காலா காந்தி’, பெரியாருக்கு ‘பச்சைத் தமிழர்’, காங்கிரஸ்காரர்களுக்கு ‘பெரியவர்’ என்று ஒரு காலத்தில் திரும்பும் திசை எங்கும் பல புனைப் பெயர்களுடன் ஒற்றை முகத்தில் பல லட்சம் இதயங்களை கொள்ளைகொண்டவர் என்று சொல்லலாம்.

ன்று எந்த அரசியல் வாதியிடமும் இல்லாத யதார்த்தப் பேச்சு குவிந்து கிடந்த ஒரு களஞ்சியம் என்று சொல்லலாம். இந்த மனிதர் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளை. இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!

யாருக்காகவும் தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத மனிதராக திகழ்ந்தார் நேரு. உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதையும் மீறித் திறந்த சிலை இவருடையதுதான் என்றால் பார்த்துகொள்ளுங்கள் எந்த அளவிற்கு இந்த மனிதர் வாழ்ந்திருப்பார் என்று..!.

பாராட்டுக்களையும், பட்டங்களையும் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளும் அரசியல் வாதிகளின் மத்தியில் தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்! கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்..!

தவி ஏற்ற மறுநொடியே மொத்த நாட்டையும் தனதாக்கிக்கொள்ள துடிக்கும் தலைவர்களின் மத்தியில் தான் முதலமைச்சர் ஆனது. இவரின் தாய் சிவகாமி தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கு காமராசரோ நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் கெட்டப் பெயர்தான் உருவாகும். ஆகவே விருதுநகரிலேயே இருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இது மட்டும் இல்லாது வீட்டையாவது சற்று பெரிதாக்கித் தரும்படி கேட்ட தனது அன்னையிடம் முடியாது என்று மறுத்தவர்.

இப்படி திகழ்ந்த இந்த மனிதரின் உணவுரகசியங்கள் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்றுத் தெரியலை. இதோ தெரிந்துகொள்ளுங்கள். மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து என்று இவரின் சிறப்பை பற்றி ஒரு ஊடகம் எழுதியக் கட்டுரை ஒன்றில் படித்திருக்கிறேன்.

ப்படித்தான் ஒரு முறை சுற்றுப்பயணம் சென்றிருந்த பொழுது தொண்டர்கள் தனக்கு கொடுத்த அன்பளிப்புகளை வாங்க மறுத்து கஷ்டப்படும் தியாகிக்கோ அல்லது விவசாயிக்கோ கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதுமட்டும் இல்லாது முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது அதில் செல்ல மறுத்து. ‘நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?’ என்றுக் கேட்டு அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தவர்.

நான் இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். இந்த நிகழ்வை . உண்மையாக ஒரு மனிதனின் வார்த்தைகளுக்கு இத்தனை சக்தியா என்பதை இவரைப் பற்றி படித்தபொழுதுதான் உணர்ந்து கொண்டேன்.ஆம் நண்பர்களே..! இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார் இந்த மனிதர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மிழ் நாட்டில் இன்னும் பலருக்கு படிக்காத தலைவர்கள் என்று சொன்னால் முதலில் இவரின் பெயரைத்தான் உச்சரிக்கிறார்கள். ‘ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ ஆனால் உண்மையில் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்துகொண்டிருக்கிறார் இந்த மனிதர் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

திக கேள்விகளுக்கு குறைந்த நேரத்தில் பதில் அளிப்பது எப்படி என்று இந்த மனிதரிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும். அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு ஊடங்கங்களின் சந்திப்பில் 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். ‘இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று மட்டுமேசொல்லி விட்டு மேடையில் இருந்தி இறங்கிவிட்டார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

இதுவரை இருந்த முதல் அமைச்சர்களிலே மிகவும் வித்தியாசமான ரசனை கொண்டவர் இவர் என்று சொல்வது சால சிறந்ததே ஆம் நண்பர்களே. மொத்த அரசியல் தலைவர்களில்நாற்காலி விரும்பாத ஒரு தலைவர் இவர்தான் என்று சொல்லவேண்டும். நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

ன்று இருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு பின் வரும் சிறப்புகள் இருக்கும் என்று தெரியவில்லை ஆனால் இந்த சிறந்தப் பண்புகளை முதன் முதலில் அரசியலில் விதைத்து சென்ற ஒரே மனிதர் இவர்தான் என்று சொல்லவேண்டும். ஆம் நண்பர்களே..! தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்..!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். ‘இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர். தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

இப்படிப்பட்ட ஒரு சிறந்த மாமமனிதர் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு1975 அக்டோபர் 2-ம் தேதி இறந்துபோனார். ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம் மட்டுமே என்றால் பார்த்துகொள்ளுங்கள் !

இன்று உலகத்தில் நீங்கள் ஒருவராக இருக்கலாம் ஆனால் யாரேனும் ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம். இந்த வரிகளுக்கு முழுவதும் பொருத்தமானவராக வாழ்ந்து சென்றிருக்கிறார் தலைவர் காமராசர்.


                   ன்று இருக்கும் அரசியல் வியாதிகளில் மன்னிக்கவும் அரசியல் வாதிகள் சொத்தின் மதிப்பில் மில்லியன் கோடிகளை நெருங்கிக் கொண்டிருக்கிரார்கள். தினமும் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளி இன்னும் கை ஏந்திக் கொண்டேதான் இருக்கிறார்கள் .

வாசித்த இடம்: பனித்துளி ஷங்கர்