Archive for the ‘மொக்கை’ Category

ஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,

“ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி
இருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை”

இதற்கு மனைவி பதில் சொன்னாள்,

“அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ…….?”

# காலங்கள் மாறினாலும்… மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை..

Courtesy: Facebook

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார்.

கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், “வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே,
………
அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கறுப்பாகி விடும்…..” என்று சொல்ல,

குழம்பிப்போன சர்வர் கேட்டார், “சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?

“நம் சர்தார்ஜி சொன்னார், ” மக்கு இன்னுமா புரியவில்லை, ………………???????

நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்”…!!!!!!!!!!

Courtesy: Facebook

ஆபிசுல சின்சியரா வேலை செஞ்சிட்டு இருந்தப்போ..
போன் வந்துச்சி … பார்த்தா புது நம்பர்…
யாருன்னு தெரியல .. ஆனாலும் பேசினேன்…

” Helo… யாரு? ! “ன்னேன்.

” நான் யாருங்குறது இருக்கட்டும் … உங்க ஆபிசுல A.C Work பண்ணுதா.? “ன்னு கேட்டான்.

” பண்ணுதே.. ! “ன்னேன் நான்

” Computer Work பண்ணுதா.? “ன்னு திரும்பவும் கேட்டான் அவன்.

” அதுவும் Work பண்ணுதே..! “ன்னேன் நான்.

அதுக்கு அந்த நாதாரி சொல்லுது,
” அப்ப நீங்க மட்டும் ஏன் சார் வெட்டியா Phone பேசிட்டு இருக்கீங்க..? … நீங்களும் போயி Work பண்ண வேண்டியதுதானெ …

 

Courtesy: Facebook

ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?

எப்போ?

ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி

ஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா?

யாரு பேசுறதுன்னு தெரியலயே?

நான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத் தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.

இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன?

ஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு. ஆனா பேசுனது என் பொண்ணு.

அது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன். என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா?

ஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா. இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.

சரி, எங்க வர்றாங்க?

ஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.

அப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால முடியாதும்மா. ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.

****
http://thendhisai.blogspot.in/2012/12/5.html

புது கணவன் தேடுகிறான் நம்பிகையோடு கூகிளில்

‘  மனைவியை  எப்படி சாமாளிப்பது ‘?

 

 

கூகுள் தேடல் முடிவு  அறிவிப்பு
‘இன்னும் தேடல் நடக்கிறது ‘
வெறுத்துவிட்டான்
கூகுள்  ,………..
கூகுள்  …………
பண்ணி  பார்த்தேன் கிடைக் கவில்ல
 யாகூ…. யாகூ……. பண்ணி பார்த்தேன் தெரியவில்ல
Courtesy: http://poovizi.blogspot.in

ஃப்ரம் ஃபேஸ்நூல் :

தேர் வாஸ் ஏ பாட்டி இன் கிராமம்.

1 டே சி வாஸ் சுட்டிங் ஏ வடை

அட் த டைம் 1 காக்கா கம் அன்ட் அபேஸ் த வடை.

தென் இட் சிட் ஆன் த ஒன் மரம்.

ஏ நரி கம் அன்ட் செட்

“யுவர் குரல் இஸ் ஸோ நைஸ் ஸோ ஸிங் ஏ பாட்டு பார் மீ”

தென் த காக்கா ஓப்பன் இட்ஸ் வாய் டு ஸிங்.

டொபக்கடீன்னு வடை பெல் டவுன்

த நரி கவ்விங் தட் வடை அன்ட் வென்ட் அவே

மாறல்::

“Vadai Poche“

ஆர் யு சிரிச்சிங்???? — feeling Haa Haa Hooo.

Courtesy: https://plus.google.com/111899839791634214271

ஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..

ரொம்ப அன்பா இருப்பாங்க…ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க…அதுல கணவனுக்கு மட்டும் high BP (blood pressure) இருந்துச்சி…டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு..

அதனால மனைவி கணவனுக்கு உப்பு இல்லாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து சமைச்சி போட்டு அவன கண்ணும் கருத்துமா பல வருடங்கள் பார்த்துட்டு வந்தா… சமீபத்தில் திடீர்னு ஒருநாள் மனைவி காலைல தூங்கி எழுந்து வந்து பார்க்கும்போது கணவன் பாத்ரூமுல செத்து கிடந்தான்..

மனைவி அவ்ளோ கவனமா கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்தாலும் கணவன் high BP வந்து திடீர்னு செத்ததற்கு என்ன காரணமா இருக்கும்…? யோசிச்சி பாருங்க…

எளிய முறையில் பெண்களின் மனதை புரிந்து கொள்ள 10 வழிமுறைகள்

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்…!!!!!!

Courtesy: Facebook

ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான்.
அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.

உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே… இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல்தெரிகிறதே…” என்றான்.

சர்வர் முதலில் மழுப்பினான். அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.

“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன்.

“சம அளவு சார்!” என்றான் சர்வர்.

“சம அளவுன்னா… எவ்வளவுடா…” என்றான் அவன்.

சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு? சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரைதான் சம அளவு. அந்த அளவில் தான் கலப்போம்” என்றான் சர்வர்.

 

Courtesy: Facebook

ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.”கடமையில் கருத்தாக இருப்பான்.ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்.

”அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்துவிட்டு,’பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம்.எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?’என்று கேட்டார்.அவனோ,

”எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன்.இப்போது கூட ஒரு பந்தயம்.உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன்.பந்தயம் நூறு ரூபாய்.”என்றான்.’

எனக்கு முதுகில் மச்சமே கிடையாது.நீதோற்று விட்டாய்.நீயே பார்,”என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.

மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான்.

புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார்.”அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன்.இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்,”என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.

உடன் பதில் வந்தது.

”நீங்கள் தான் தோற்றுப் போய் விட்டீர்கள்.
 இடத்தில் வேலைக்கு சேர்ந்த அன்றே உங்களுடைய சட்டையைக் கழற்ற வைப்பதாக என்னிடம் ஐநூறு ரூபாய் பந்தயம் கட்டிவிட்டுத்தான்

அங்கு வந்தான்.வெற்றி அவனுக்குத்தான்.

Courtesy: Facebook

 

பேமிலி டூர்.. வாங்களேன் சேர்ந்து போகலாம்.

உலகில் யாரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது.. நிறங்கள் மாறுபட்டாலும் யாவரும் சமமே.
 பேஸ் வாஷ் பண்ணாம போனா கேர்ள் பிரண்ட் துரத்தி விட்ருவா அதான்..
எப்புடி தெண்னை மரம்..
ஹே நான் இன்னும் பேச்சிலர்தான்..
இது எப்பூடி
முடிவையும் ஆரம்பத்திலேயே தீர்மானியுங்கள்.
இதுதான் பொறாமங்குறது..
ஹே ஹே
புறத்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட்டு விட முடியாது
சூப்பர்
ரசித்த இடம்: http://funnyworld-star.blogspot.com

நார்வேகாரர் ஒருவர் விபத்தில் சிக்கினார் .அருகில் இருந்த நம்மூர்க்காரர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, ரத்தமும் கொடுத்து காப்பாற்றினார் .
பிழைத்து எழுந்துவந்த நார்வேகாரர், நம்மூர்க்காரருக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றைப் பரிசளித்தார் .
நார்வே ஆளின் துரதிருஷ்டம் பாருங்கள், ஆறு மாதம் கழித்து அவர் மறுபடியும் விபத்தில் மாட்டினார்.
அதே நம்மூர் ஆசாமி மறுபடியும் காப்பாற்றினார் . ஆஸ்பத்திரியில் சேர்த்தார் .
உயிர் பிழைத்து வந்த நார்வேகாரர், நம்மூருக்கு நன்றி சொல்லி அரை கிலோ திருநெல்வேலி அல்வா கொடுத்தாராம் .
நம்மூர்க்காரர் ஏமாற்றமாகப் பார்க்க, நார்வேகாரர் சொன்னார்,

“‘ங்கொய்யால …. உன் ரத்தம்தான் எனக்குள்ள ஓடுது !

FB-படித்ததில் பிடித்தது

2050-ம் வருடம், மனிதர்களைப்போலவே அனைத்து விலங்குகளும் பேசக் கற்றுக்கொண்டன. தமிழ்மொழி, மலையாள மொழிபோல் கோழிமொழி, ஆடு மொழி என தனித்தனி மொழிகள் உருவாகிவிட்டது. ஆங்கிலம், சீன மொழியை எல்லாம் பின்னுக்குத்தள்ளி கொசுவின் மொழிதான் மிக அதிகமாய்ப் பேசப்பட ஆரம்பித்தது. கொசுக்களின் குடும்பத்தில் மட்டும் ஒருமுட்டைதான் இடவேண்டும் என குடும்பக்கட்டுப்பாடு திட்டமே கொண்டுவரப்பட்டது.

ஒருவர் மளிகைக்கடை வைத்திருந்தார். அவரது கடைக்கு சாமான்கள் வாங்க கோழி ஒன்று வந்தது.
கோழி முட்டை என்ன விலை? என்றது கோழி.
ஐந்து ரூபாய்
ஒரு முட்டை கொடுங்க! என்று ஐந்து ரூபாயை நீட்டியது கோழி.
கடைக்காரருக்கு ஒரு சந்தேகம். கோழி தானே முட்டைபோட முடியுமே இது எதற்காக நம் கடையில் முட்டை வாங்குகிறது? ஒரு முட்டையை எடுத்து கோழியிடம் கொடுத்துவிட்டுக் கேட்டார். “நீயே முட்டைபோட முடியுமே பின் எதற்காகக் கடையில் வாங்குகிறாய்?”
கோழி எதுவுமே பேசவில்லை.
கடைக்காரர் திரும்பவும் விடாமல் வற்புறுத்திக் கேட்டார்.
“அது எனக்கும் என் கணவருக்கும் உண்டான ரகசியம், சொல்லக்கூடாது” என்றது கோழி.
கடைக்காரரால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை, திரும்பவும் கேட்டார், “அப்படியென்ன ரகசியம்?’
“என் புருசன் சேவல்தான் சொன்னாரு அஞ்சு ரூபா முட்டைக்காக எதுக்கு உன் அழகிய உடம்பை கெடுத்துக்கிறேனு? அதான் முட்டையை கடைல வாங்கிட்டு போறேன்!”

பொதுவா நாங்க தினமும் 8.30 மணிக்கு
எங்க ஆபீசை மூடிடுவோம்..

ஆனா நேத்து 9.00 மணி ஆகியும்
ஆபீஸ்ல தான் இருந்தோம்..
IPL Match பாத்துகிட்டு….

” உன்னை விட… இந்த உலகத்தில் ஒசந்தது
ஒண்ணுமில்ல…. ஒண்ணுமில்ல….! ”

( என் மொபைல் ரிங் ஆகுது… என் Wife
கூப்பிட்ட இந்த ரிங்டோன் தான் வரும் )

உடனே எங்க கடை பையன் ஓடி போய்
T.V வால்யூமை குறைச்சிட்டான்.. சமத்து..!

( ஹி., ஹி., ஹி, இல்லன்னா.. TV-ல
” ஜம்பிங் ஜபாங்கு ஜம்பங்க் ஜம்பங்க்
கிலிகிலியான்னு ” சவுண்ட் வருமே..
மாட்டிப்போம்ல..! )

” ஹலோ… ”

” மாமா… எப்ப வீட்டுக்கு வருவீங்க..? ”

” வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு..
ஒரு அரைமணி நேரம்..! ”

” இன்னும் அரைமணி நேரமா..?! ”

( என் Wife Upset ஆகறது எனக்கு நல்லவே
தெரிஞ்சது.. சே.. சும்மா சொல்லக்கூடாது
என் பொண்டாட்டிக்கு என் மேல பாசம்
அதிகம் தான்.. )

” மதியம் லஞ்ச்க்கு வந்தப்ப கூட உடனே
கெளம்பிட்டீங்க..! கொஞ்சம் நேரம் கூட
வீட்ல இல்ல.. ”

” முக்கியமான ஆர்டர் ஒண்ணு முடிக்க
வேண்டி இருந்தது.. அதான்..! ”

” இங்கே செம Bore.. நீங்க எப்ப வருவீங்க.,
எப்ப வருவீங்கன்னு வாசலையே பாத்துட்டு
இருக்கேன்..! ”

( அடடா.. என் மனைவியோட அன்புக்கு
முன்னாடி இந்த ஐ.பி.எல் எல்லாம்
என் கால் தூசு…! )

” இதோ உடனே வந்துட்டேம்மா… ”

நான் கடை பசங்களை பாத்து..

” இழுத்து மூடுங்கடா ஆபீசை..
நாளைக்கு ஹைலைட்ஸ் பாத்துக்கலாம்..! ”

அவனுங்க என்னை லூசை பாக்கற மாதிரி
பாத்தானுங்க…

அடுத்த 10வது நிமிஷம் வீட்ல இருந்தேன்.

” அப்பா “-னு ஓடி வந்து என் ரெண்டு
பசங்களும் என் காலை கட்டிகிட்டானுங்க.

” வந்துட்டீங்களா.! “-னு என் Wife கிச்சன்ல
இருந்து சந்தோஷமா வந்தாங்க…

( “அன்பாலே அழகாகும் வீடு ” – அது இதானோ..!? )

நான் புல்லரிச்சி போயி நிக்கறேன்..

” ஏங்க.. உங்க புது Smartphone-ஐ குடுங்க..
Temple Run 2 விளையாடணும்.. அதுக்காக
தான் நாங்க ரொம்ப நேரமா Waiting..! ”

” அடப்பாவிகளா..?!! ”

ரசித்த இடம்: http://gokulathilsuriyan.blogspot.in

புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.

Courtesy: Facebook

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ‘நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்’ என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ”அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை” என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

Courtesy: Facebook

நோயாளி: ”டாக்டர் என் கால் நல்லா ஆகிடுமா டாக்டர்”

டாக்டர்: ”இன்னும் மூணு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்”

நோயாளி: ”நான் நடக்கலாமா டாக்டர்?”

டாக்டர்: ”நடக்கிறது என்ன… மருந்தை மறக்காம தடவுனா ஓடவே செய்யலாம்”

நோயாளி: ”இந்த மருந்துக்கு அத்தனை பவரா… நான் சைக்கிள் ஓட்டலாமா டாக்டர்?’

டாக்டர்: ”ம்… ஓடலாம்னு சொல்றேன்… சைக்கிள் ஓட்டுறதா கஷ்டம்’

நோயாளி: ”இல்ல டாக்டர்… எனக்கு சைக்கிள் ஓட்டவேத் தெரியாது… அதான் கேட்டேன்!’

படித்ததில் பிடித்தது: naai-nakks.blogspot.in

ஆணி

Posted: ஏப்ரல் 19, 2013 in கதைகள், சுட்டது, நகைச்சுவை, மொக்கை
குறிச்சொற்கள்:,

சர்தார் வீடு கட்டிக் கொண்டிருந்தார்.. அவரே தச்சு வேலையும் செய்தார்.. ஒரு சன்னலைப் பொறுத்துவதற்காக ஆணி அடித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு செய்யும்போது… சில ஆணிகளை அடிப்பார்..சிலவற்றை தூக்கிப் போட்டுவிடுவார்.. இதைக் கவனித்துக் கொண்டிருந்த நண்பர் கேட்டார்..

” இந்த ஆணியெல்லாம் நல்லாதானே இருக்கு.. ஏன் தூக்கிப் போட்டுட்டே..?

” முட்டாள்.. நல்லா பாரு.. கூர் முனை என் பக்கம் இருக்கற ஆணியா இருந்தா எப்படி அடிக்க முடியும்..? கொண்டைப் பக்கம் என்னை நோக்கி இருந்தால் தானே அடிக்க முடியும்..?

இதை கேட்ட அந்த நண்பர் சொன்னார்
” ஹா… ஹா… இதுக்குதாண்டா நாமன்னா எல்லாரும் ஏளனம் பண்றாங்க.. அறிவு கெட்டவனே.. கூர் முனை நம்ம பக்கம் இருந்தா அதெல்லாம் சுவற்றுக்கு அந்தப் பக்கம் அடிக்கிற ஆணி..அதை வீட்டுக்கு உள்பக்கம் அடிக்க வேண்டியது தானே.. ஏன் தூக்கி போடறே..??!!!

Courtesy: FB

நேத்து ராத்திரி ஒரு மோகினிப்பிசாச
நடந்து வர்றதை என் மனைவி பார்த்துட்டு,

என்னை எழுப்பி…

பயத்துல கட்டிப்பிடிச்சிட்டாங்களா?

.ஊஹூம்… அந்த
மாடல்லே கொலுசு வேணும்னு
கேட்டா..!

செல்வா சிறந்த கடவுள் பக்தர் என்பது நாமறிந்ததே.
சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் மாலை நேரம் செல்வா ஒரு சிற்றுண்டிக்கடையில் அமர்ந்து அவித்த முட்டை ஒன்றைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவும் போதுதான் அன்று வெள்ளிக்கிழமை என்பதும் அதுவும் ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதும் ஞாபகத்திற்கு வந்தது.
”ஐயோ! ” வெனத் தலையில் அடித்துக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பி வீட்டிற்கு வந்தார்.தெய்வக்குத்தம் ஆகிவிட்டதேயென்று ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தார்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு மிகச்சிறந்த யோசனை தோன்றியது. சந்தோசத்தில் செல்வாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தமிழ்ப்பட வில்லன்களைப் போல வானத்தைப் பார்த்து இரண்டு முறையும் பூமியைப் பார்த்து இரண்டு முறையும் சிரித்துவிட்டு ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து “ இன்று நான் இட்டது சைவ முட்டை” என்று எழுதினார்.
பின்னர் பக்கத்தில் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்த கோழியைப் பிடித்து அதன் காலில் மை தடவி வழுக்கட்டாயமாக அதனை அந்த வெள்ளைப் பேப்பரில் கோழியின் கால் ரேகையைப் பதித்தார்.
அதாவது கோழி அன்று இட்ட முட்டை சைவம் என்று கோழியே உறுதியளித்துள்ளது என்பதே செல்வாவின் யோசனை. அதற்கான சாட்சிதான் இந்தப் பத்திரம்.
பின்னர் வழக்கம்போல அன்று மாலை கோவிலுக்குச் சென்றார். ஆனால் திடீரென்று அவர் முன்னால் தோன்றிய கடவுள் “ முட்டை சாப்பிட்டுட்டு கோவிலுக்குள் வராதே! “ என்று மிரட்டலாகச் சொன்னார்.
“ ஐயனே நான் முட்டை சாப்பிட்டது உண்மைதான், ஆனால் அது சைவ முட்டை. இதோ அந்தக் கோழியே சாட்சியளித்துள்ளது!” என்று அந்தப் பேப்பரைக் கடவுளிடம் நீட்டினார் செல்வா.
அதை வாங்கிப்பார்த்த கடவுள் ஒரு புன்னைகையுடன் சொன்னார் “ லூசு, இது சேவலோட கால் ரேகை!”
ரசித்த இடம்: http://www.selvakathaikal.blogspot.in
செல்வாவின் நண்பர் ஒருவர் செல்வாவைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்திருந்தார்.
வீட்டிற்குள் நுழைந்தவருக்கு அங்கு அவர் கண்ட காட்சிகள் சிரிப்பினை வரவைத்தன. மேலும் சில இடங்களில் குழம்பியும் போனார்.
வீட்டின் முற்றத்தின் ஒரு பக்கத்தில் கொசுக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. மற்றொரு பக்கம் கொசுவின் படம் போட்டு அனுமதி இல்லை என்பதுபோல அதன்மேல் சிவப்புக் கோடு போடப்பட்டிருந்தது. அவர் செல்வாவின் நண்பர் என்பதால் ஒரு பக்கம் இருப்பது படித்த கொசுக்களுக்கான எச்சரிக்கை , மற்றொரு பக்கம் இருப்பது படிக்காத பாமரக் கொசுக்களுக்கான எச்சரிக்கை என்பதைப் புரிந்து கொண்டார்.
அதே போல இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றவர் அங்கு கண்ட காட்சியால்  சிரிப்பினை அடக்க முடியாமல் வாய்விட்டே சிரித்துவிட்டார். அங்கு பூனை போன்ற ஒரு வடிவம் செய்து அதன் மேலே எலிகள் ஜாக்கிரதை என்று எழுதப்பட்டிருந்தது. அந்த வடிவத்தினை ஒரு எலி தின்றுகொண்டிருந்தது.
” டேய் , உன்னோட பூனைய எலி திங்குதுடா ? “என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
” ச்சே ..அந்த எலிக்கு இருக்குற தைரியம் கூட நான் வளர்த்த பூனைக்கு இல்லையே ! ” என்று சலித்துக்கொண்டார் செல்வா.
” என்ன சொல்ற ? “
” ஆமா இதே மாதிரி இரும்புல எலி மாதிரி பண்ணி இது மாதிரி எதாச்சும் வந்தா பிடிக்கணும்னு நான் வளர்த்த பூனைகிட்ட சொன்னேன் .. அந்தப் பூனை அந்த இரும்பு எலிய கொஞ்சநேரம் கடிச்சுப் பார்த்திட்டு அப்புறம் கீழ போட்டிருச்சு.. இப்ப உண்மையான எலி வந்தா கூட பிடிக்க மாட்டேங்குது ! “
நண்பருக்கு மேலும் சிரிப்பு. அப்பொழுது செல்வா ” அங்க ஒரு மெழுகுவர்த்தி ஏத்தணும் , நான் எவ்ளோ நேரம் முயற்சி பண்ணினேன் ..ஆனா கெட்டுக் கெட்டுப் போகுது . நீ பத்த வச்சுத் தரியா ? ” என்றார்.
” சரி வா ” என்று செல்வாவுடன் அவர் காட்டிய அறையை நோக்கிச் சென்றார். அந்த அறையின் நுழைவாயிலிலும் அதே போல ஒரு பக்கத்தில் ” காற்றுக்கு அனுமதி இல்லை, மீறினால் பலூனில் அடைக்கப்பட்டு பாம் வைத்துக் கொல்லப்படும்” என்று எழுதப்பட்டிருந்தது. இதை படித்ததும் நண்பருக்கு மறுபக்கத்தில் எப்படி எழுதியிருப்பான் என்று ஆச்சர்யம் வந்தது. மறுபக்கத்தில் மோட்டார் ஒன்று பொருத்தப்பட்டு ஒரு குழாயின் மூலம் அதிலிருந்து வந்த காற்றானது அந்த இடத்தில் வெளியேறுமாறு வைக்கப்பட்டு அங்கே அனுமதி இல்லை என்பது போன்ற சிவப்புகோடு போடப்பட்டிருந்தது.
” டேய் என்னடா , இது ? “
” அதான் நான் இங்க மெழுகுவர்த்தி வச்சா வச்சா காத்து வந்து அணைச்சிடுது. அதனாலதான் இப்படி ! “
” அதுக்கு ஏன் இப்படி ? “
” லூசாடா நீ , காத்துக்கு உருவம் இல்லைல , அதுக்கு எப்படி சிம்பல் போடுறது , அதான் ஒரிஜினல் காத்து அடிக்கிற மாதிரி செட் பண்ணிட்டேன் ” என்றார் செல்வா.
” இப்ப மெழுகுவர்த்தி கெட்டுப் போறதுக்கு காரணமே இந்த மோட்டர்ல இருந்து வர்ற காத்துதான் , உன்னப் பார்த்து சிரிக்கிறதா அழுகறதா ? ” என்றவாறு அந்தக் குழாயை பிடுங்கினார்
ரசித்த இடம்: www.selvakathaikal.blogspot.in

தந்தை தனது சிறுஎட்டு வயது மகனைக் கூப்பிட்டு,பணத்தைக் கையில் கொடுத்து,”கடைக்கு சென்று ஒரு கிலோ வெண்ணெய் வாங்கி,வா” என்றார்.பையனும் உடனே தனது குட்டி நாயை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றான்.கடையில் சாக்லேட்டுகளைப் பார்த்தவுடன் அவனுக்கு ஆசை வந்துவிட்டது.எனவே தந்தை கொடுத்த அவ்வளவு பணத்துக்கும் சாக்லேட்டுகள் வாங்கிக் கொண்டான்.பின் வீட்டிற்கு வந்தவுடன் சாக்லேட்டுகளை பத்திரமாக ஒரு இடத்தில் ஒளித்து வைத்துவிட்டு,முகத்தை மிகவும் கவலைப் படுகிறார்போலத் தொங்கப்போட்டுக்கொண்டு தகப்பன் முன் நின்றான்.தந்தை கேட்டார்,”எங்கேடா வெண்ணெய்?”பையன் சோகமாக,”வெண்ணெய் வாங்கி வந்தேன்.வழியில் இந்த குட்டி நாய் என்னிடமிருந்து பறித்து வெண்ணெய் முழுவதையும் சாப்பிட்டு விட்டது” என்றான்.உடனே தந்தை அந்த நாயைத் தூக்கி வீட்டில் இருந்த ஒரு தராசில் வைத்து நிறுத்தான் .அது ஒரு கிலோ இருந்தது.இப்போது பையனைப் பார்த்து அவர் கேட்டார்,”இதோ ஒரு கிலோ வெண்ணெய் இருக்கிறது.நாய் எங்கே?”

Courtesy: Facebook


இந்தியரும் அமெரிக்கரும் ஒரு சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர். அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார். சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர். 

அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து இந்தியரிடம் காட்டி, ‘நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! பார்த்தியா யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?.. என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல் உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா? என்று சவால் வேறு விட்டார் இந்தியரிடம். 

விடுவாரா இந்தியர். ‘.உள்ள வா. உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.

விற்பனை கவுன்டரில் இருந்த பையனிடம் சென்ற இந்தியர், அவனிடம் கேட்டார், நான் ஒரு வித்தை காட்டுறேன் பார்க்கிறியா?..

பையனும் சரியென்று தலையாட்ட கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார். பிறகு 3-வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த பையனை ஏறிட்டுப் பார்த்தார்.

கவுன்டரில் இருந்த பையன் கேட்டான், ‘எல்லாம் சரி. இதில் வித்தை எங்கே இருக்கிறது?.’

இந்தியர் அமைதியாக பதில் அளித்தார், இப்போ ‘என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு. நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்.’

ஹா.. ஹா.. ஹா.. யாருகிட்ட.. எப்படி நாம்ம ஆளுக…(பேஸ்புக்கில் படித்தது)

Courtesy: http://kavithaiveedhi.blogspot.com

வேலைக்கான நேர்காணலில்…உண்மையைச் சொல்ல முடிந்தால்..

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!

*

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

*

உங்களுடைய தனித்திறமை என்ன..?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.

*

உங்கள் மிகப்பெரிய பலம்..?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

*

பலவீனம்..?

ஹி..ஹி.. பெண்கள்..!

*

இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?

*

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?

ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

*

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!

*

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?

நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.

ரசித்த இடம்: ஜோதிஜி திருப்பூர்

வெறி

Posted: மார்ச் 13, 2013 in கதைகள், சுட்டது, மொக்கை
குறிச்சொற்கள்:,
செல்வா தனது பள்ளிப் படிப்பினை முடித்துக்கொண்டு வெளியூரில் இருந்த கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தார்.
அவரது சொந்த ஊருக்கும் , அவர் பயின்ற கல்லூரிக்கும் நீண்ட தொலைவு என்பதால் கல்லூரிக்குப் பக்கத்தில் தனியாக ஒரு அறை எடுத்துத் தங்கி அங்கிருந்து கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தார்.
ஒருநாள் தெருவில் இருந்த குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று அவரது வலதுகாலை நன்றாகக் கடித்துவிட்டு ஓடிவிட்டது.
உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். செல்வாவின் காயங்களுக்கு மருந்து போட்ட மருத்துவர் “ இது வெறிநாய்க் கடியானு சரியா தெரியல, அதனால ஒரு மூனு நாளைக்கு உங்களக் கடிச்ச நாய வாட்ச் பண்ணுங்க, மூனு நாளைக்கு அப்புறம் அது என்னாச்சுனு வந்து சொல்லுங்க” என்று கூறி அனுப்பினார்.
செல்வாவும் மருத்துவர் சொன்னது போலவே அந்த நாயினைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டு வந்தார்.
மூன்றாம் நாள் மருத்துவமனைக்குச் சென்ற செல்வாவிடம் “ அந்த நாய் எப்படி இருக்குது ? நல்லா வாட்ச் பண்ணுனீங்களா ?“ என்று வினவினார் மருத்துவர்.
” அது ஒன்னும் ஆகல டாக்டர், அப்படியேதான் இருக்குது, என்ன கொஞ்சம் குண்டாகிருச்சு!”
” நல்லவேளை ஒன்னும் ஆகல, வெறிபிடிச்ச நாயா இருந்தா செத்துப் போயிருக்கும். ஒன்னும் பிரச்சினை இல்லை; நீங்க பயப்படாம போங்க! “ என்றார் மருத்துவர்.
” ஒரே நாய் இரண்டு தடவ சாகுமா என்ன ? “ ஆச்சர்யமாய்க் கேட்டர் செல்வா.
” என்ன சொல்லுறீங்க ? இரண்டு தடவ எப்படிச் சாகும் ? “
“ இல்ல டாக்டர், நீங்க அந்த நாய வாட்ச் பண்ணச் சொன்னீங்கள்ல, அப்பவே நான் அது பின்னாடி போனேன். ஆனா அது ஒரு எடத்துல நிக்கவே இல்ல, அதான் அப்பவே அத கொன்னு எங்க வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன். இந்த மூனுநாளா செத்துப் போன நாயத்தான் பார்த்துட்டு இருந்தேன். நீங்க மறுபடி செத்துப்போகும்னு சொல்லுறீங்களே, அதான் கேட்டேன்! “
இப்பொழுது டாக்டருக்கு வெறிபிடிக்க ஆரம்பித்திருந்தது!
ரசித்த இடம்: http://www.selvakathaikal.blogspot.in
ஒரு நாள் காலை செல்வா அவசர அவசரமாகக் குளித்துக்கொண்டிருந்தார். திடீரென குளியலறையில் இருந்து வெளியே தலை நீட்டிய செல்வா அவரது நண்பரிடம் கொஞ்சம் அவசரமாகச் ” சோப்பு வாங்கிட்டு வா”  என்று கத்தினார்.
அவரது நண்பரும் அவசர அவசரமாகக் கடைக்குச் சென்று சோப்பு வாங்கி  வந்தார். அதற்குள் செல்வா குளித்துவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவரது நண்பர் ” அதுக்குள்ளே ஏண்டா குளிச்ச ? “” பாத் ரூமுக்குள்ள தான் குளிச்சேன் , அங்கதானே குளிக்கணும் ?! “” ஐயோ , என்னைய சோப்பு வாங்கிட்டு வரச்சொல்லிட்டு சோப்பு வரதுக்கு முன்னாடியே ஏன் குளிச்சனு கேட்டேன் ? நீ எப்பவும் சுத்தமா இருப்பண்ணுதான் நான் அவ்ளோ வேகமா ஓடிப் போய் சோப்பு வாங்கிட்டு வந்தேன் ! இப்படிப் பண்ணுறதுக்கு எதுக்கு அவ்ளோ அவசரப்படுத்தி சோப்பு வாங்கிட்டு வரச்சொன்ன ?  “” அதுக்கு காரணம் இருக்கு , இரு சாப்பிட்டுட்டு வரேன் ! ”

” என்ன மண்ணாங்கட்டிக் காரணம் ? ” என்று கோபமாகக் கத்தினார் நண்பர்.

சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்த செல்வா நண்பர் வாங்கிவந்த சோப்பினை எடுத்துகொண்டு வேகமாக குளியலறைக்குச் சென்றார். மறுபடி குளிப்பானோ என்று நினைத்த அவரது நண்பர்

” ஏண்டா நீ எப்பவும் சாப்பிட்டுட்டுக் குளிக்க மாட்டியே , இன்னிக்கு எதுக்கு மறுபடியும் குளிக்கிற ? ”

” நான் எங்க குளிக்கப் போறேன் ?! ” என்று கூறியவர் குளியலறையில் இருந்து மற்றொரு சோப்பினைக் கையில் எடுத்து வந்தார்.

” ஏண்டா , இன்னொரு சோப்பு வச்சிட்டே எதுக்கு எங்கிட்ட எதுக்கு இன்னொரு சோப்பு வாங்கிட்டு வரச்சொன்ன ? ”

” சும்மா தொணதொணன்னு பேசாத , ஒரு நிமிஷம் இரு ! ” என்றவர் குளியலறையில் இருந்து எடுத்துவந்த சோப்பின் மீது தண்ணீரை ஊற்றி நண்பர் வாங்கிவந்த சோப்பால் தேய்க்க ஆரம்பித்தார்.

இதைப் பார்த்த அவரது நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. ” டேய் , என்ன பண்ணுற ? ”

” அது ஒன்னும் இல்ல , நான் குளிச்சிட்டிருக்கும்போது  இது கீழ விழுந்திடுச்சு , அதனால இது மேல கிருமி ஒட்டிருக்கும். அதான் இதுக்கு சோப்புப் போட்டு குளிப்பாட்டிட்டு இருக்கேன். இப்ப அதுமேல இருக்குற கிருமி எல்லாம் போயடும்ல ” என்றார் செல்வா.

” சோப்புக்கே சோப்புப் போட்ட ஆள் நீயாத்தாண்டா இருப்ப ! உன்னையும் ஒரு ஆளா மதிச்சு போய் சோப்பு வாங்கிட்டு வந்து கொடுத்தேன் பாரு என்னச் சொல்லனும் ? ”

” சுத்தமா இருக்கிறது தப்பாடா ? ”

” மொதல்ல இந்த சோப்பு விளம்பரத்த நிறுத்தனும் , போற போக்குல நீ பண்ணின மாதிரி பண்ணச்சொன்னாலும் சொல்லுவாங்க , அது சரி இனிமேல அந்தச் சோப்ப என்ன பண்ணுவ ? ”

” நாளைக்கும் இதே மாதிரி குளிப்பாட்டி விடுவேன் ?! ” என்றார் செல்வா.

” நாளைக்குமா ? எதுக்கு ? ”

” ஏன்னா இந்தச் சோப்பு 24 மணிநேரப் பாதுகாப்புத் தானே ! ” என்ற செல்வா கீழே விழுந்த சோப்பினை தண்ணீரில் கழுவத் தொடங்கினார்

Courtesy: http://selvakathaikal.blogspot.in/

 

மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு
கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே… மறந்துட்டியா…
மனைவி:- எப்போ சொன்னீங்க…நீங்க சொல்லவே இல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????

மனைவி :- கருமம்… கருமம்.. பக்கத்து வீட்டுக்காரிக்கு ரெண்டு பேரோட
                       கள்ளத் தொடர்பு இருக்காம்.
கணவன் :- அப்படியா!  இன்னொருத்தன் யாருன்னு தெரியலையே?
பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும்
நான் பங்கெடுத்துகுவேன!
ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!
பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!
கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி
                     சொல்றீங்க..!
ரசித்த இடம்: மின்மலர்

பூனை

Posted: பிப்ரவரி 21, 2013 in கதைகள், சுட்டது, மொக்கை
குறிச்சொற்கள்:, ,
இது செல்வா பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி.
அந்த வருடம் பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் விமரிசையாக ஏற்பாடாகிக்கொண்டிருந்தன.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என அனைத்து வகுப்பிலும் மாணவர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.
போட்டியில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ஒரு நாளுக்கு ஒரு போட்டி மட்டுமே நடத்தப்பட்டது.
செல்வாவின் வகுப்பு மாணவர்களுக்கு சதுரங்கம் மற்றும் மிமிக்ரி செய்யும் போட்டிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தன. செல்வாவும் இரண்டு போட்டிகளிலும் பங்கெடுக்க விரும்புவதாகக் கூறியிருந்தார்.
முதலில் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. உண்மையில் செல்வாவிற்கு சதுரங்கம் என்றால் என்னவென்றே தெரியாது. அது ஒருவகையான தாயக்கட்டை விளையாட்டு என்றே நினைத்திருந்தார். விளையாட்டிற்குச் சென்ற பின்னர்தான் அது வேறுவிதமான விளையாட்டு என்பதைப் புரிந்துகொண்டார்.
சிறிது நேரம் சமாளிக்க முயன்று தோற்றுப்போனார். இறுதியில் தனக்கு இந்த விளையாட்டு தெரியாதென ஒப்புக்கொண்டார். வெளியில் செல்வாவின் வகுப்புத் தோழர்கள் அவரைப் பலவாறு கிண்டல் செய்யத் தொடங்கினர். செல்வாவிற்குப் பெருத்த அவமானமாகிப் போய்விட்டது. அடுத்த போட்டியில் எப்படியேனும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் எனத் தீர்மானம் செய்துகொண்டார்.
அன்று இரவு முழுவதும் தனியாக உட்கார்ந்து மிமிக்ரி செய்ய ஆரம்பித்தார். ஆனால் ஒரு குரலைக் கூடச் சரியாக மிமிக்ரி செய்ய முடியவில்லை. செல்வாவிற்கு பயம் அதிகரித்தது. ஒருவேளை இந்தப் போட்டியிலும் தோற்றுப்போனால் நண்பர்களின் கிண்டலைத் தாங்கிக்கொள்ள முடியாதே என்று கவலைப்பட்டார்.
அடுத்த நாள் மிமிக்ரி செய்யும் போட்டியின் விதிமுறைகளில் மிமிக்ரி செய்யும்போது யாரையேனும் துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் செல்வாவிற்கு ரவியைத் துணைக்கு அழைத்துவந்தால் எப்படியும் இந்தப் போட்டியில் வென்றுவிடலாம் என்பதால் ரவியின் பெயரை உதவிக்கு என்பதில் சேர்த்துக்கொண்டார்.
போட்டிக்கான நாளும் வந்தது. கையில் ஒரு பூனையுடன் மிமிக்ரி செய்யும் மேடைக்குச் சென்றார் செல்வா. அங்கிருந்த நடுவர் ஆச்சர்யத்துடன் “ பூனை எதற்கு? “ என்றார்.
“ இது பேரு ரவிங்க சார், எனக்கு உதவிக்கு!,கார்டுல எழுதிருக்கும் பாருங்க “
“ சரி என்ன மாதிரி மிமிக்ரி செய்யப் போற ? “
” சாப்பாடு போட்டா பூனை எப்படி கத்தும், அடிச்சா எப்படி கத்தும்? இந்த ரண்டும் நான் செய்யப் போறேன் சார்”
“ வெரி குட், அப்புறம் பூனை எப்படி ஹெல்ப் பண்ணப் போகுது ? ”
” சாப்பாடு போடுறது , அடிக்கிறதெல்லாம் நான் பண்ணப்போறென் சார், கத்துற ஹெல்ப் மட்டும் அது பண்ணும்! “ என்றார்.
ரசித்த இடம்: http://www.selvakathaikal.blogspot.in

பவருன்னா சும்மாவா?

Posted: பிப்ரவரி 14, 2013 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை
குறிச்சொற்கள்:, , ,
*பவர் ஸ்டார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால்,மழை கேன்சல் செய்யப்பட்டது.
*பவர் ஸ்டார் மெயில் ஐ.டி. gmail@POWERSTAR. com* ஒரு நாள் பவர் ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.* 2012-ல் உலகம் நிச்சயம் அழியாது. ஏனெனில் பவர் ஸ்டார் 3 வருட வாரன்டியோடு ஒரு லேப்டாப் வாங்கியிருக்கிறார்.

* And, the POWERSTAR award goes to oscar….

*பவர் ஸ்டார், ஒரே நாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றார் – ப்ளூடூத் வழியாக.

* பவர் ஸ்டார் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி பவர் ஸ்டாரிடம் மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது.

* பவர் ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டார்.என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா? அந்த வருடத்தின் ஹாக்கிகோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.

* கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோது, ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் பவர் ஸ்டாரிடம் இருந்து வந்திருந்தன.

* பவர் ஸ்டார், தனது தோட்டத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கிணறுகள் வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக!

* நோக்கியா விளம்பரத்தில் கை குலுக்கிக்கொள்ளும் இரண்டு கரங் கள் யாருடையவை என்பது பவர் ஸ்டாருக்கு மட்டுமே தெரியும்.

* ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோது, அதை முதன்முதலில் பவர் ஸ்டாரிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக பவர் ஸ்டார்குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் – தன் ஹெலிகாப்டரில்.

* ரொனால்டினோ: என் காலால் ஒரு முறை பந்தை உதைத்தால், 3நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்…

பவர் ஸ்டார்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா?

கடவுள் பவர் ஸ்டார் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், ‘ஓ மை பவர் ஸ்டார்.’* பவர் ஸ்டார்ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ‘ஓவர் ஸ்பீடு’என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.* ஒருமுறை பவர் ஸ்டார் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீதுபறந்துகொண்டிருக்கும்போது தவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது. சுவிஸ் பேங்க் உருவானது.

* பவர் ஸ்டார் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்குப் பிற்காலத்தில்’கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்’ என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

* சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: பவர் ஸ்டார் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய.

* பவர் ஸ்டார் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமான கதை இதுதான்.

பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் ‘200 கேள்விகளில் ஏதேனும்150-க்குப் பதில் அளிக்கவும்’ என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர்ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், ‘இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்.
நன்றி – பேஸ்புக்
(நம்மாளுங்க இதையே தான் ரஜினி ஜோக்ஸ்கும் பயன்படுத்தினாங்க..)
Courtesy: http://ideas.harry2g.com

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?

ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்….

ஆண்:ம்ம்ம்ம்ம்….. நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ…!

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!

பெண்: 😐

****************************************

ரசித்த இடம்: G+ இல் Rajagopal SM

வாழ்க்கைல  எப்பவுமே நாங்க நினைக்கிற மேட்டர்ஸ்க்கும், ஆனா உண்மையா நடக்குற மேட்டர்ஸ்க்கும் இடையில் பாரியளவிலான வித்தியாசங்கள் இருக்கும் . அது போன்ற சில விடயங்களின் தொகுப்பே இப்பதிவு…..

1.  நாங்க யாருன்னா: யாரவது ஒரு  பிரபல நடிகரின் அதி தீவிர ரசிகர்கள்.

மேட்டர் என்னன்னா: நம்ம தலீவர் சமீபத்துல நடிச்ச எல்லா படங்களும் படு-மொக்கை படு-தோல்வி படங்கள். நம்ம தலீவர் அடுத்த தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ ஒரு படத்துல தீவிரமா(!!)  நடிச்சிகிட்டு இருப்பாரு. ஒலக மகா டைரக்டர் அந்த படத்த எடுத்துகிட்டு இருப்பாரு. அந்த படத்தோட புரோட்யூசர்  படத்துக்கு செமையா பில்டப் குடுத்து ப்ரோமோஷன் பண்ணிக்கிட்டு இருப்பாரு.
நாங்க நினைப்பது என்னன்னா: இந்த படம் மட்டும் வரட்டும், நம்ம தலீவர் ரேஞ்ஜே மாறபோகுது. கோலிவுட்ல நம்ம தலீவர்க்கு இருக்குற   அத்தன போட்டி நடிகர்களும் ஒட்டுமொத்தமா ஒம்போது நாளைக்கு கக்கூஸே கதின்னு கழிச்சிகிட்டு இருக்க போறங்கெ. எந்திரன், 3-இடியட்ஸ்ன்னு அத்தன பட கலெக்ஷன் ரெக்கார்ட்ஸையும் நம்ம தலீவர் படம் ஒரே வாரத்துல பீட் பண்ணிரும். இந்த படத்துக்கு பிறகு  தலிவர்க்கும் அரசியல்ல ஒரு நிலையான இடம் கெடைச்சிடும். நாங்களும் பொண்டாட்டி கொழந்த குட்டின்னு அப்புடியே செட்டில் ஆயிடலாம்.
ஆனா நடப்பது என்னன்னா: இதுக்கு முன்னாடி நம்ம தலிவர் நடிச்ச அந்த நாலு படு-மொக்கை படு-தோல்வி படங்களும் எவ்வளவோ மேல். இந்த புது படம் அந்த நாலத்தயும்  விட படு மொக்கையா, படு கேவலமா, நாறத்தனமா இருக்கும்.
 
*************************************************
2. நாங்க யாருன்னா:  சாப்ட்டுவேரு புடுங்குற கம்பேனிலயோ இல்ல அது மாதிரி வேற எதாவது ஒக்காந்துகிட்டே வேலை செய்ற 27,28+ வயசு இளைஞர்கள்.

 
மேட்டர் என்னன்னா: நாம ஒக்கந்துகிட்டே வேல செய்றோமா, அப்புறம் தினம் நாலு வேளை புல் மீல்சும் , இடையிடையில ஸ்னேக்ஸும் திங்கிறோமா, இப்ப நமக்கு லேசா இள-தொந்தி(தொப்பை) வந்துருக்கு.
 
நாங்க நினைப்பது என்னன்னா: இந்த தொந்திய குறைக்கிறதுக்காக (மறைக்கிறதுக்காக)  ஒலகத்துல இருக்குற அத்தன தில்லாலங்கடி வேலையையும் செய்வோம். காத்தாலயே ஜாகிங், வாக்கிங் போக ட்ரை பண்ணுவோம். கம்பெனில ஜிம் இருந்தா அதுக்கு போகயும் ட்ரை பண்ணுவோம். பக்கத்து தெருல இருக்குற சூப்பர் மார்க்கட்டுக்கு நடந்தே போவோம். அப்புடி நடந்து போனா, நம்ம தொந்தி அடுத்த நாளே கரைஞ்சிடும்னு நெனச்சுப்போம். பிரபல சேனல்கள்ள மிட் நைட்ல போடுற டெலி-பை புரோகிராம்ஸ எல்லாம் ஒன்னு விடாம பார்த்து அதுல சொல்ற  நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த எக்ஸேர்ஸைஸ் ஈக்விப்மென்ட எல்லாம் வாங்கிருவோம். அப்புடி அதுல எக்ஸேர்ஸைஸ் செஞ்சா ஒரே  மாசத்துல சல்மான்கானுக்கு போட்டியா  சிக்ஸ் பேக்ஸ்கோ, இல்ல அமீர்கானுக்கு போட்டியா எயிட்  பேக்ஸ்கோ கொண்டுவந்துரலாம்ன்னு நெனச்சிக்கிட்டு இருப்போம். எக்ஸேர்ஸைஸ் செஞ்சி முடிச்சிட்டு யாரும் இல்லாதப்போ, கண்ணாடி முன்னாடி ஷர்ட்ட தூக்கி தொந்திய அளந்து பார்போம். 2mm கொரஞ்சிருக்குன்னு நெனச்சுப்போம்.
 
ஆனா நடப்பது என்னன்னா: மேல சொன்ன ட்ரை பண்ணுற சமாச்சாரங்க எல்லாம் ட்ரை பண்ற லெவல்ல தாண்டியே இருக்காதுவாங்கிபோட்ட எக்ஸேர்ஸைஸ் ஈக்விப்மென்ட்ஸ நம்ம வீட்டு பொம்மனாட்டிக துணி காய போடுறதுக்கு யூஸ் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. நாங்க 35+ வயசுல  “ஜி” படத்துல வர்ற தல-ய மாதிரி ஆகுறதையும் , 45+ வயசுல தமிழ்நாட்டு போலீஸ்ல சேர்றதுக்கான தகுதிகள உருவாக்கிக்கிறதயும் யாராலுமே தடுக்க முடியாது.
 
*************************************************

3.  நாங்க யாருன்னா: தொழில் செய்துகொண்டே பதிவெழுதும் பதிவர்கள்மேட்டர் என்னன்னா: நம்ம ஆபிஸ்ல நமக்கு மேல இருக்குற மேனேஜர்/சூப்பர்வைசர்/ஹெட்னுன்னு யாராவது ஒரு மேலதிகாரி இந்த வாரத்துக்குள்ள முடிக்க சொல்லி நமக்கு பல ப்ராஜக்ட்ஸ் கொடுத்துருப்பாரு. எல்லா ப்ராஜக்ட்ஸ்க்கும் இன்னும் ரெண்டு நாள் டெட்லைனே இருக்கும். எப்புடிடா இத்தினி வேலையையும் ரெண்டே நாள்ல முடிக்கிறதுன்னு செம டென்ஷன்ல இருப்போம்.

நாங்க நினைப்பது என்னன்னா: இந்த டென்ஷன எல்லாம் குறைக்கிரதுக்கு ஒரு செம காமெடி பதிவு எழுதுனா மனசு ரிலாக்ஸ் ஆகிடும்னு நெனச்சிப்போம். தமிழில் சமகாலத்தில் பதிவெழுதும் தலைச்சிறந்த பின்நவீனத்துவவாதியான நம்மளோட பதிவுகள் ஏதும் சமீபத்துல வரலையேன்னு நமது வாசககோடிகள்   பீல் பணிகிட்டு இருப்பாங்களே, அவங்கள திருப்தி படுத்துறதுக்காகயேனும் ஒரு செம காமெடி பதிவு போடனும்னு நினைப்போம். ஏற்கனவே பிரபல பதிவரா இருக்குற நாங்க, இந்த பதிவ மட்டும் பப்ளிஷ் பண்ணிட்டா, விக்ரமன் பட ஹீரோ மாதிரி ஒரே நைட்ல பத்து லட்சம் ஹிட்ஸ்ங்குற நம்ம டார்கெட்ட அச்சீவ் பண்ணி, கேபிள்,சி.பி,உ.த அண்ணாச்சிகள் எல்லாரையும் தாண்டி  டாப் டென் தமிழ் பதிவர்கள்ள இடம்பிடிச்சிடலாம்ன்னு கன்போர்மா நெனச்சிப்போம்.ஆனா நடப்பது என்னன்னா: நாங்க செம காமெடின்னு நெனச்சிட்டு எழுதுன போஸ்ட் வழக்கம் போலவே செம மொக்கையா இருக்கும். பதிவுலகத்துல நமக்கு தெரிஞ்ச , நம்ம மேல பரிதாப பட்டு வர்ற ஒன்னு ரெண்டு நண்பர்கள்ல தவிர வேற யாருமே நம்ம பிளாக் பக்கம் வந்துருக்க மாட்டாங்க. வழக்கம்போலவே  இந்த போஸ்ட்டுக்கும் 200 ஹிட்ஸ்க்கு மேல வராது. ஏற்கனவே இருக்குற வேல டென்ஷன்+இந்த டென்ஷன்னு செம காண்டாகி கம்ப்யூடர் முன்னாடி உட்காந்து ஸ்க்ரீனையே வெறித்து பார்த்துகிட்டு  இருப்போம். நாளைக்கு ஆபிஸ் போய் மேலதிகாரிக்கு என்னெல்லாம் பொய் சொல்லலாம்னு சீரியா ஒக்காந்து யோசிச்சிட்டு இருப்போம்.

*************************************************

எழுதியவரோட டிஸ்கி: எங்குலச்சாமி பாடிகாட் முனூஸ்ரன் சத்தியமா இது அனுபவ பதிவு இல்லீங்…

எழுதியது: http://realsanthanamfanz.blogspot.in

ஒரு பணக்காரக் கஞ்சனின் வேலைக்காரன் ஒரு மருந்துக் கடைக்கு வந்து கடைக்காரரிடம் சொன்னான்,”அய்யா,எங்கள் முதலாளி ஏதோ வருத்தத்தில் இருக்கிறார்.என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்து ஏதாவது விஷம் வாங்கி வரச் சொன்னார் .எனக்கு பயமாக இருக்கிறது.”

அவனது முதலாளியை ஏற்கனவே அறிந்திருந்த கடைக்காரர்,”தம்பி,நீ கவலைப் படாதே,உங்கள் முதலாளியிடம் போய் இப்போது விசத்தின் விலை பதினோரு ரூபாய் என்று சொல்.அவன் வேண்டாம் என்று சொல்லிவிடுவான்,”என்றார்.

********
செருப்பு திருடியதாக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.நீதிபதி அவனுடைய விளக்கத்தைக் கேட்டார்.அவன் சொன்னான்,”அய்யா,இந்த செருப்பை என் முதலாளி எனக்குத் தந்தார்.நான் திருடவில்லை.”அவன் முதலாளி ஊரறிந்த மகாக் கஞ்சன்.

நீதிபதிக்கும் அந்தக் கஞ்சனைப் பற்றி தெரியும்.எனவே அவர் இவ்வாறு தீர்ப்பு கூறினார்,”செருப்பு திருடியதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.பொய் சொன்னதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.”

********

ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவருமே கஞ்சர்கள்.அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சொல்லாமல் கொள்ளாமல் தம்பி எங்கோ ஓடி விட்டான்.பல ஆண்டுகளுக்குப் பின் தான் திரும்ப வருவதாக அண்ணனுக்கு தந்தி கொடுத்திருந்தான்.அவனை வரவேற்க அண்ணன் ரயில் நிலையத்திற்கே வந்துவிட்டான்.தம்பி வந்ததும் அவனை ஆரத்தழுவி ”தம்பி,நலமாக இருக்கிறாயா?”என்று கேட்டுவிட்டு,”ஆமாம் ,ஏன் இவ்வளவு நீண்ட தாடியுடன் இருக்கிறாய்?இங்கிருந்து போனதிலிருந்து நீ முக சவரம் செய்தது மாதிரி தெரியவில்லையே!”என்று அன்புடன் கேட்டான்.தம்பி சற்றே வருத்தத்துடன்,”நீ தான் நான் அடிக்கடி முக சவரம் செய்து காசை விரயம் செய்கிறேன் என்று சொல்லி நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங் சேட்டை ஒளித்து  வைத்து விட்டாயே!”என்றானே பார்க்கலாம்!

Courtesy: தென்றல்

காலைல எழுந்திருக்க ரொம்ப லேட் இன்னைக்கு.

அவசர அவசரமா ப்ரஷ் பண்ணிட்டு, ‘சுடுதண்ணி வெச்சிருப்பாங்களே’ன்னு சமையல் அறைக்குப் போனேன்.

நம்ம வீட்ல ஹீட்டர்லாம் கெடையாது. இட்லிப் பானைலதான் சுடுதண்ணி வைப்பாங்க. நல்ல்ல்லா சுடணும், சீக்கிரம் ஆகணும்னு மூடிபோட்டு தண்ணி சுட வைப்பாங்க.

நான் சமையலறைக்குப் போனப்ப, அந்த இட்லிப் பாத்திரம் கொதிச்சுக்கிட்டிருந்தது. ‘ப்பா.. இன்னைக்கு செம்ம குளியல் போடணும்டா’ன்னு அவசர அவசரமா பக்கத்துல இருந்த துணியை எடுத்துப் பாத்திரத்தைப் புடிச்சுகிட்டே பாத்ரூம் போய் வெச்சேன்.

துண்டெடுக்க போறமுன்னாடி வெளாவி வைக்கலாம்னு பாத்திரத்தைத் தொறந்தா…

உள்ள இட்லி வெந்துகிட்டிருக்கு!

மண்டைகாஞ்சு போய் ‘உமா பார்க்கறதுக்குள்ள மறுபடி கொண்டு போய் வெச்சுடணும்டா’ன்னு எடுத்தா, பின்னாடியே நிக்கறாங்க!

——-

கெளம்பறப்ப பூரிக்கட்டையைத் தொடைச்சுட்டு இருந்தாங்க. அநேகமா இன்னைக்கு நைட் பூரிதான்னு நினைக்கறேன் வீட்ல.

G+ இல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டவர்: பரிசல்காரன் கிருஷ்ணா

தங்கமணி அம்மா வீட்டுக்கு போயிட்டு ஒரு வாரம் கழிச்சு அன்னைக்கி தான் வந்திருக்காங்க. கணவனும் மனைவியும் அரட்டை அடிச்சுட்டு இருக்காங்க
ரகளை இப்படி தான் ஆரம்பிக்குது….
தங்கமணி : டிட் யு மிஸ் மீ?
ரங்கமணி : நோ ஐ மிசஸ்ட் யு (என அதிபுத்திசாலி லுக் விட்டு சிரிக்கிறார்)
தங்கமணி : (முறைக்கிறாள்)
ரங்கமணி : ஹா ஹா… நான் சொன்னது உனக்கு புரியலைன்னு நினைக்கிறேன்… இதெல்லாம் அதையும் தாண்டி புனிதமானது உனக்கு புரியறது கொஞ்சம் கஷ்டம் தான் (என சிரிக்கிறார்)
தங்கமணி : பித்துக்குளிதனமா எதுனா ஒளர வேண்டியது… அதுக்கு இப்படி ஒரு மொக்க விளக்கம் வேற… கஷ்டம்டா சாமி… உங்கூரு ஜோசியர் குத்தாலத்துல ஏதோ பரிகாரம் பண்ணனும்னு சொன்னாருனு உங்கம்மா சொன்னது சரி தான் போல இருக்கு

ரங்கமணி : என்ன கிண்டலா?

தங்கமணி : இல்ல சுண்டல்

ரங்கமணி : ஹ்ம்ம்… புரியலைனா புரியலைனு ஒத்துக்கோ, சும்மா சமாளிக்காத

தங்கமணி : சரி சாமி… ஒத்துக்கறேன், உங்க மேலான விளக்கத்தை இந்த பீமேல்’க்கு புரியற மாதிரி கொஞ்சம் சொல்றீங்களா?
ரங்கமணி :ஹா ஹா… நீ கூட சமயத்துல நல்லா காமடி பண்றே தங்கம்… சரி விளக்கம் என்னனா… நீ “டிட் யு மிஸ் மீ”னு கேட்டயா, அதுக்கு நான் என்ன சொன்னேன்…

தங்கமணி : ஐயோ… மறுபடி மொதல்லேந்தா… (என தலையில் கை வைக்க)
ரங்கமணி : சரி நானே சொல்றேன்… நான் “நோ ஐ மிசஸ்ட் யு”னு சொன்னேன்… அதாவது உன்னை கல்யாணம் பண்ணிட்டு மிஸ்சா இருந்த உன்னை மிசஸ் ஆக்கினேன்னு சொன்னேன்… இப்ப புரியுதா… (என காலரை தூக்கிவிட்டு கொண்டு கேட்க)
தங்கமணி : நல்லா புரியுது…
ரங்கமணி : என்ன புரியுது?
தங்கமணி : குத்தாலம் பரிகாரத்தை நாள் கடத்தாம செய்யணும்னு புரியுது
ரங்கமணி : பொறாம பொறாம… ஹையோ ஹயோ… (என சிரிக்க)
தங்கமணி : அதெல்லாம் இருக்கட்டும் நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லல
ரங்கமணி : என்ன கேட்ட?
தங்கமணி : ம்… சொரக்காய்க்கு உப்பு பத்தலனு கேட்டேன் (என்றாள் கடுப்பாய்)
ரங்கமணி : ஜோக்கா? ஹி ஹி… சிரிச்சுட்டேன் போதுமா… (என பல்லை காட்ட)
தங்கமணி : இங்க பாருங்க எனக்கு கெட்ட கோவம் வந்துரும்
ரங்கமணி : கோவத்துல கூட நல்லதா வராதா உனக்கு… ஹா ஹா
தங்கமணி : (முறைக்கிறாள்)
ரங்கமணி : சரி சரி சொல்றேன்… உன்னை மிஸ் பண்ணாம இருப்பனா தங்கம்
தங்கமணி : நிஜமா? (என்றாள் சந்தேகமாய் பார்த்தபடி)
ரங்கமணி : செத்து போன எங்க அப்பத்தா மேல சத்தியமா
தங்கமணி : எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?
ரங்கமணி : எவ்ளோனா…அதெப்படி சொல்றது (என விழிக்கிறார்)
தங்கமணி : அதேன் சொல்ல முடியாது… அப்ப நீங்க என்னை மிஸ் பண்ணல
ரங்கமணி : அது…. அப்படி இல்ல தங்கம்… நெறைய மிஸ் பண்ணினேன்… அதை எப்படி சொல்றது?
தங்கமணி : (இடைமறித்து) இந்த மழுப்பற வேலை எல்லாம் வேண்டாம்… இன்னிக்கி சாயங்காலத்துக்குள்ள எவ்ளோ மிஸ் பண்ணீங்கனு சொல்லணும்
ரங்கமணி : என்ன தங்கம் இது? எங்க மேனேஜர் டெட்லைன் வெக்கற மாதிரி சொல்ற
தங்கமணி : அந்த டெட் லைன் மிஸ் பண்ணினா வேலை தான் போகும்… இந்த டெட்லைனா மிஸ் பண்ணினா லைப்லைனே போய்டும் சொல்லிட்டேன் (என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறாள்)
ரங்கமணி : அடிப்பாவி… இப்படி சொல்லிட்டு போயிட்டாளே… என்ன பண்றது இப்போ? ப்ராஜெக்ட்ல சந்தேகம்னா டீம் மீட்டிங் போடலாம்… இந்த விசயத்துக்கு மீட்டிங் போட்டா என் மானம் டைடானிக்ல டிக்கெட் வாங்கிருமே… என்ன பண்ணலாம்… (என யோசிக்க…) ஐடியா… (என குதிக்கிறார்) கூகிள் இருக்க பயமேன்
ரங்கமணி : ( கூகிளில் “How” என டைப் செய்ததுமே “How to Tie a tie” என சஜசன் வர… ) இதொண்ணு என் வீட்டுக்காரி மாதிரியே குறுக்க குறுக்க பேசிகிட்டு…
தங்கமணி : (உள்ள இருந்து) என்னமோ சொன்ன மாதிரி கேட்டுச்சு?
ரங்கமணி : உன்னை ஒண்ணும் சொல்லல தங்கம்… இந்த சனியம் புடிச்ச கம்பியூட்டர் தான் (என சமாளிக்கிறார்)
தங்கமணி : (சைலண்ட்)
ரங்கமணி : ஹ்ம்ம்… (என பெருமூச்சு விட்டபடி… “How to measure how much…” என டைப் செய்து முடிக்கும் முன் “how to measure how much paint i need” என ஒரு நூறு லிங்குகள் வர) அடச்சே… ஆணியே புடுங்க வேண்டாம் போ… (என சலித்து கொண்டு கம்பியூட்டரை ஆப் செய்கிறார்)
சற்று நேரம் கழித்து…
தங்கமணி : ரெடியா? இப்ப சொல்லுங்க… என்னை எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?
ரங்கமணி : “ஐயையோ…அதுக்குள்ள டெட்லைன் வந்துடுச்சா” என தனக்குள் புலம்பியவர் “ம்… அது… சரி என்னை கேக்கறியே? நீ சொல்லு பாப்போம்… என்னை நீ எவ்ளோ மிஸ் பண்ணின?” என மடக்கினார். அல்லது மடக்கி விட்டதாக புளங்காகிதம் அடைந்தார்
ஆனால் அதெல்லாம் வெறும் காகிதமாக ஆக போவதை பாவம் அவர் அறியவில்லை
தங்கமணி : நானா? இங்கிருந்து கிளம்பின நிமிசத்துல இருந்து எப்படா திரும்பி வருவோம்னு நெனச்சேன்…அவ்ளோ மிஸ் பண்ணினேன்
ரங்கமணி : “ஐயையோ… எனக்கு இது தோணாம போச்சே…ச்சே…எவ்ளோ ஈஸியா சொல்லிட்டாளே… இந்த மாதிரி வேற எதுவும் தோண மாட்டேங்குதே” என புலம்பியவர் “பேசாம நானும் அப்படித்தான்னு சொல்லிடுவோம்” என தீர்மானித்து வாயை திறக்கும் முன்…
தங்கமணி : நானும் அப்படித்தான்னு சொல்றத தவிர வேற எது வேணா சொல்லுங்க… உங்களுக்கு இன்னும் இருபத்திநாலு மணி நேரம் டைம் (என எழுந்து செல்கிறாள்)
ரங்கமணி : ………………………………….
என்ன செஞ்சாரா? மேல உள்ள படத்த பாருங்க…அப்படி தான் முழிச்சுட்டு இருக்காராம். ஹையோ ஹையோ… :))

ரசித்த இடம்: http://appavithangamani.blogspot.in

————————————————————————————————————————————————–

சாமியாரு – படத்தோட முதல் பாதி, ரொம்ப கேவலமா, மொக்கையா, குப்பையா, அருவருப்பா, ரொம்ப அசிங்கமா தான் அமையும்
பொது மகன் – அப்போ ரெண்டாம் பாதி நல்லா இருக்குமா சாமி??

சாமியாரு – இல்லை இல்லை.. அதுவே பழகிடும்

————————————————————————————————————————————————–

Courtesy: http://ideas.harry2g.com

சரி,முதல்ல நம்ம நடிகை அஞ்சலியை பார்ப்போம்.

1.வேட்டை படத்துல ஆர்யாவுடன் முத்த வேட்டைக்கு தயாராகும் அஞ்சலி இப்டி ஒரு புக் எழுதலாம்.

2. Trisha bathing Video க்கு பிறகு இப்டி நினைச்சிருக்கலாம் நம்ம த்ரிஷா:)

3.கரகாட்டக்காரன் மாபெரும் வெற்றிக்கு பிறகு இப்டி ஒரு புக் எழுதி இருக்கலாம் நம்ம கலர் சட்டை ராமராஜன்:)

4.ஊர் முழுக்க ப்ளேபாய் பேரெடுத்த நம்ம சிம்பு இந்த மாதிரி ஒரு புத்தகம் எழுதலாம்.

5.என்னதான் நம்ம பிரபுதேவா நயனை விட்டு பிரிஞ்சிட்டாலும் பயன் இல்லாமலா? இருந்திருக்கும் ஹிஹிஹி:)

6. நம்ம ரவுசு பார்ட்டிய பத்தி சொல்லவே தேவை இல்லை.வாயாலையே ம்யூசிக் போட்டு ஆஸ்கார் வாங்குவார் டி.ராஜேந்தர்:)

7.பூஜா வீடியோ பார்த்து ஒதுங்கிபோன ஆர்யா இப்டி உண்மைய எழுத நினைக்கலாம்.:)

8.ரஜினியின் பாபா தோல்விக்கு பிறகு இந்த மாதிரி ஒரு புக் எழுதி விளக்கம் கொடுத்திருக்கலாம்.

9.இந்தப்புத்தகத்தை வாங்காதீங்கன்னு சொல்லி சொல்லியே வாங்க வைச்ச கோபிநாத் அதன் தொடர்ச்சியா இப்டி ஒரு புக் எழுதினா என்ன ஆகும்?

10. பாட்டி சொல்ல கூட தட்டலாம் ஆனா நம்ம தல சொல்ல!!!!

நன்றி:)

Courtesy: http://www.mazhai.net

அந்த பக்கம் போகாதீங்க.ஏதோ ஆர்ப்பாட்டம் நடக்கிறது.”

ஆனால் அந்த பக்கம் போனால்தான் வீடுக்கு சீக்கிரம் போகலாம்.இது சுற்று வழி.

எப்படியோ ஆர்ப்பாட்டத்தில் நுழைந்து சமாளித்துப்போய் விட வேண்டியதுதான்.எதிர் வந்தவர் கூறியதை காற்றில் பறக்க விட்டேன்.
வேகமாக நடை போட்டேன்.

ஒரே பெண்கள் கூட்டம்.ஆவேசமாக கூக்குரல்[ அவர்கள் மொழியில் கோசம்] போட்டுக்கொண்டிருந்தனர்.
ஏதாவது மாதர் சங்கமாக இருக்கும்.எங்காவது பெண் பாலியல் பலாத்காரம் விவகாரமாக இருக்கலாம்.

ஆனால் கோசங்கள் சற்று வேறுமாதிரி இருந்தது.கவனித்தேன்.
“வெறும் சம்பளம் மட்டும் போதாது.விலைவாசிப் புள்ளிகளுக்கேற்ப அகவிலைப்படி வேண்டும்,,வேண்டும்,
ஆண்டுக்கொருமுறை மிகை ஊதியம் போனஸ் வேண்டும்,,வேண்டும்.”
அடடா.சத்துணவு பெண்களாக இருக்காலாம்.அல்லது அங்கன்வாடி இனத்தவர்களாக இருக்கலாம்.மகளிர் காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொன்டிருப்பது பார்வையில் பட்டது.

அது யார் .?

ஒரு ஓரமாக.காசி போல் தெரிகிறதே.
அது நண்பன் காசியேதான்.

ஏன் ஒரு ஓரமாக ஒளிந்து நிற்பது போல் இருக்கிறான்.என்னைப் பார்த்து விட்டான்.

கையை அசைத்து ரகசியமாக அல்லது பயத்துடன் கூப்பிடுவது தெரிந்தது.
வேகமாக அதே நேரம் அவனின் ரகசியத்துக்கு ஈடு கொடுத்து கள்ளக்காதலியை நெருங்கும் காதலன் போல் சென்றேன்.
“பேசாமல் அந்தவழியில் போயிருக்கலாம்லே”?
ஏன்?என்ன விசயம்.?
“இந்த ஆர்ப்படத்தில் மாட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதில்லையா?
“என்ன ஆர்ப்பாட்டம்.சத்துணவா,மகளிர் சங்கமா?இதில் நாம் மாட்டி என்ன ஆகப்போகிறது?”
“அங்கே பாருடா மடையா?”
நானும் மடையன்போல் பார்த்தேன்.அட எனது மனைவி.அருகில் காசியின் பத்தினி.அருகில் பார்க்க பார்க்க திகைப்பு.
தெருவில் உள்ள அத்தனை மனைவிகளும்.அங்கு இருந்து கோசமிட்டனர்.

என்ன இழவு போராட்டம்.?

“மனைவிகளுக்கு மாதா,மாதம் சம்பளம் கொடுக்க நீதிமன்றம் உத்திரவிட்டு விட்டது அல்லவா?
இவங்களுக்கு சம்பளம் மட்டும் போதாதாம்.அகவிலைப்படி.மிகை ஊதியம்,கொடுபடா ஊதியம்.இன்னமும் எத்தனைவகை ஊதியம் உள்ளதோ அத்தனையும் வேண்டுமாம்.அதான் இந்த ஆர்ப்பாட்டம்.’ காசி கிசு,சிசுத்தான்.எனக்கோ தலையை சுற்றிவந்தது.கீழே விழுந்து விடும் அபாயம் தெரிந்தது.
ஆனால் விழும் இடம் சாலை போட பல ஆண்டுகளுக்குமுன்பே கொட்டி வைத்த கற்குவியல்.
அதில் விழாமல் இருக்கவும் ,அதன் மீது அமர்ந்து சற்று சிரமபரிகாரம் செய்து கொள்ளும் எண்ணத்திடன் அருகில் போனேன்.

கால் செருப்பில் சிறு கல்.உறுத்தியது.

ஆர்ப்பாட்டத்தை சோகத்துடன் பார்த்துக்கொண்டே ,செருப்பினூடே புகுந்த சுண்டைக்காய் அளவு கல்லை எடுக்க முயற்சித்தேன்.செருப்பு கீழே கழன்று விழுந்து விட்டது.செருப்பை எடுத்தேன்.

“ஆர்ப்பாட்டத்தில் செருப்பையா வீசுகிறாய்?’
கழுத்தில் கை விழ திரும்பினேன்.பெண் காவலர்.சும்மா சொல்லக்கூடாது பார்த்தாலே பயம் வரும் தடித்த உருவம்.

‘நான்.செருப்பு,கல்லு,”

போலிசை பார்த்தாலே பயம்.
அதிலும் இது பெண் போலீசு.வார்த்தைகள் தடுமாற ஒருகையில் செருப்பும்-மறுகையில் கல்லுமாக கையும் -களவுமாக,

மாட்டிக்கொண்ட நிலை.காசியைப்பார்த்தேன்.பாவி பறந்து போய் பத்து நிமிடம் ஆகியிருக்கும் போல் தெரிந்தது.
செருப்பு கையோடே ஏதோ கசாப்பை பிடித்து விட்ட பெருமிதத்துடன்.தர,தர வென காலரை பிடித்து இழுக்க

‘நான் சும்மா,நான்,செருப்பு,நான் கல் .நான் இல்லை”

என தொடர்புகளே அற்ற வார்த்தை உளறல்களுடன் இழுபட்டு சென்றேன்.
சாதாரண பெண்ணை விட்டு தப்பிக்க இயலா அளவு பயம்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு கல் ஒரு கண்ணாடிஅளவுக்கு என்னைப் பார்த்து கோபத்துடன் முன்னேற, அதிலும் எனது பத்தினி முகம் அதிகோரமாக தெரிய

“நான் இல்லை.நான் கல்.நான் செருப்பு ” என்ற உளறல் அதிகரித்தது.

‘நான் ஈ ‘என்று கூட சொன்ன ஞாபகம்.
—————————————————-
“என்ன.சொல்றீங்க .நீங்க இல்லீனா யாரிந்த நூறு ரூபாயை எடுத்தாங்க.”
மனைவி உலுக்க தூக்கம் கலைந்தது.

“என்ன.நூறு ரூபாய்?”

“உங்க சம்பளத்தை இந்த மாதம் எடுக்க ஏடிஎம் போய் பார்த்தால்.சம்பளத்தில் வழக்கத்தை விட நூறு ரூபாய் குறையா கணக்கு சீட்டு வருகிறதே”
அட தூக்கத்தில் என்னவோ கெட்ட கனவு.

“ஆபீசிலே ஒருத்தர் வீட்டு கல்யாணம்.எல்லோரும் நூறு ரூபாய் மொய் ஒரு ஆள்கிட்டே கொடுத்து விட்டோம்.அதான்.
உங்கிட்டே சொல்லனும்னு இருந்தேன் மறந்துட்டு.”அசடு வழிந்தேன்.

“வர,வர வெட்டி செலவு அதிகமாயிட்டு.பஸ்-காபி செலவுக்கு கொடுக்கிறதை குறைச்சாத்தான் சரி வருவீங்க.”

கோபம் வர தூக்கி எறிந்தேன்.தலயணையைத்தான்.
அதுவும் அவள் போய் விட்டாள் என்று நிச்சயம் ஆன பின்புதான்.

யாராவது மாதமானால் சம்பளத்தை அல்லது ஏடிஎம் அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு நம்  மாத செலவுக்கு பணம்தர மறுக்கும் பெண்சாதிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டீர்களா?

நான் முழு ஒத்துழைப்பு தர தயார்.

மனதளவில் தான்.

ஒன்று படுவோம்,

-போராடுங்கள்-

வெற்றி பெறுவோம்.

யாருங்க அது தங்கமணிக்கு லிங்க் அனுப்ப பாக்கிறது? எழுதினது நான் இல்லங்க: இவரு  தான்: http://suransukumaran.blogspot.in

செல்வா சுயதொழில் ஆரம்பித்திருந்த சமயம்.
தனது தொழில் சிறக்க என்னவெல்லாம் செய்யலாமோ, நண்பர்கள் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறார்களோ அனைத்து அறிவுரைகளையும் ஏற்றுக்கொண்டு அனைத்தையும் செய்துவந்தார்.
இப்படித்தான் ஒருமுறை உறவினர் ஒருவர் பக்கத்தில் இருக்கும் திட்டமலை முருகன் கோவிலை பௌர்ணமி நாளில் நூற்றியெட்டு முறை சுற்றி வந்து கடவுளிடம் வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்று கூறியிருந்தார்.
அதை உண்மையென நம்பிய நமது செல்வா அதே போல ஒரு பௌர்ணமி நாளில் சுமார் 300 அல்லது 400 மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த மலையை நூற்றியெட்டுமுறை சுற்றிவந்தார்.
தனது தொழில் எப்படியாவது சிறப்பாக நடைபெற வேண்டுமென நினைத்ததால் அவருக்கு அந்த மலையைச் சுற்றுவது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.
மலையைச் சுற்றி முடித்துவிட்டு கடவுளிடமும் வேண்டிக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்.
மறுநாள் செல்வாவைப் பார்க்க அவரது வீட்டிற்கு வந்த நண்பர், செல்வா மொட்டைமாடியில் நின்று அழுதுகொண்டிருப்பதைக் கண்டார்.
ஒருவேளை மலையைச் சுற்றியதால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அழுகிறாரோ என்று நினைத்துக்கொண்டு ஏன் அழுகிறார் என்பதற்கான காரணத்தைக் கேட்டார்.
“ நான் நூத்தியெட்டுத் தடவ சுத்தி முடிச்சிட்டு கடைசியா முருகன்கிட்ட வேண்டிக்கும்போது என்ன வேண்டிக்கிறதுனு மறந்துட்டு ’ கணக்கு டீச்சர் என்னைத் திட்டவே கூடாதுனு’ வேண்டிக்கிட்டேன்” என்றார் சோகமாக.
பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே செல்வாவிற்கு கணக்கு வராது என்பதால் கணக்கு ஆசிரியர்களைப் பார்த்தால் எப்பொழுதுமே பயம்தான்.
” அதனால என்ன, மறுபடி உன்னோட தொழில் நல்லா வரணும்னு வேண்டிக்க வேண்டியதுதானே ? “
“ இல்ல, மலைய சுத்தி வந்த உடனே முதல்ல என்ன வேண்டிக்கிறோமோ அதுதான் நடக்குமாமா! “
“அடடா, கொஞ்சம் கவனமா இருக்கவேண்டாமா? சரி விடு. இன்னொரு தடவ சுத்தி மறுபடி வேண்டிக்கலாம்!” என்று சமாதானப்படுத்தினார் நண்பர்.
சிறிது நேரம் அழுகையை நிறுத்திய செல்வா மீண்டும் அழத்தொடங்கினார்.
இப்பொழுது எதற்கு அழுகிறார் என்று குழம்பிய அவரது நண்பர் “ மறுபடி எதுக்கு அழுற ? கால் வலிக்குதா ? “ என்றார்.
“இல்ல, கணக்கு டீச்சர் திட்டக் கூடாதுனு வேண்டுனதுக்குப் பதிலா கணக்கு டீச்சர் அடிக்கக் கூடாதுனு வேண்டியிருக்கலாம். அதயும் மறந்துட்டேன்! “
செல்வாவின் நண்பர் கடுப்பாகிவிட்டார்.
“எரும, உனக்கு ஏழு கழுத வயசாகுதுல. இப்ப என்ன பள்ளிக்கூடத்துலயா படிச்சுட்டு இருக்க, கணக்கு டீச்சர் வந்து அடிக்கிறதுக்கு ? கணக்கு டீச்சர் அடிச்சா என்ன ? கொஞ்சினா உனக்கு என்ன ? “ என்று கோபமாகக் கத்த ஆரம்பித்தார்.
“ அதில்ல, என்னோட பொண்டாட்டியும் ஒரு கணக்கு டீச்சர் தான்! “ என்றார் செல்வா அழுதவாறே
ரசித்த இடம்: http://www.selvakathaikal.blogspot.in
ஒரு ஊர்ல 4 விஞ்சாணிகள் இருந்தாங்க. அவங்க வேல மிருகங்களை பத்தி ஆராய்ச்சி பண்றது. குரங்குகளை பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு 10 குரங்குகளை புடிச்சிட்டு வந்து பெரிய கூண்டுல அடைச்சாங்க. கூண்டுக்குள்ள பெரிய வாழைத்தார தொங்க விட்டு, பக்கத்துல ஒரு ஏணியவும் வெச்சாங்க. வாழைப்பழத்த பார்த்த உடனே ஒரு குரங்கு உடனே ஏணில ஏற ஆரம்பிச்சது. ஏணில ஏறுன உடனே சுத்தி பயங்கர குளிர்ச்சியான தண்ணிய எல்லா குரங்குகள் மேலயும் பீச்சி அடிச்சாங்க. மேல ஏறுன குரங்கு தண்ணி வேகம் தாங்காம கீழே வந்துடுச்சு. அது ஏணில இருந்து இறங்கின உடனே தண்ணிய அடிக்கிறத நிப்பாட்டிட்டாங்க.
கொஞ்ச நேரத்துல இன்னொரு குரங்கு அதே மாதிரி வாழைப்பழத்த சாப்பிடலாம்னு ஏணில ஏற தொடங்குச்சி. அது ஏணிய தொட்ட உடனே மறுபடியும் அதே மாதிரி குளிர் நீர் பீச்சுனாங்க. தாங்க முடியாம ஏறுன குரங்கும் உடனே இறங்கிடுச்சு. இப்படியே தொடர்ந்து 3 வாட்டி நடந்துச்சு. குரங்குகள் எல்லாத்துக்கும், அந்த ஏணிய டச் பண்ணா எல்லார் மேலேயும் குளிர்நீர் பீச்சியடிக்கும்னு புரிஞ்சிடுச்சு. அதுனால எல்லாம் அமைதியா உக்காந்திருச்சுங்க.
அப்போ கூண்டுக்குள்ள இருந்து ஒரு குரங்க வெளில எடுத்துட்டு, புதுசா ஒரு குரங்க உள்ள விட்டாங்க. அதுக்கு தண்ணி மேட்டர் எதுவுமே தெரியாதே. உள்ள போன உடனே வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணி பக்கத்துல போச்சு. அத பார்த்த உடனே மத்த குரங்குகள்லாம் ஓடிவந்து புதுக் குரங்க ஏணிய டச் பண்ண விடாம இழுத்துட்டு வந்து போட்டு அடிச்சதுங்க. புதுக்குரங்குக்கு ஒண்ணுமே புரியல. ஏணில ஏறுனா அடிப்பாங்கன்னு நெனச்சிட்டு சும்மா உக்காந்துச்சு.
இப்ப,இன்னொரு பழைய குரங்க வெளில எடுத்துட்டு இன்னொரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க, அதுவும் வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணில ஏற முயற்சி பண்ணி மத்த குரங்குகள்கிட்ட அடிவாங்கிச்சு. ஏற்கனவே உள்ள போன புதுக்குரங்கும் அடிக்கிறதுல சேர்ந்துக்கிச்சி. உள்ள வந்த புதுக்குரங்குக்கும் எதுக்கு இப்படி போட்டு அடிக்கிறாங்கன்னு தெரில.
இப்படியே ஒவ்வொரு குரங்கா வெளில எடுத்துட்டு ஒரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க. கொஞ்ச நேரத்துல எல்லா பழைய குரங்கும் வெளில வந்துடுச்சு.உள்ள புது குரங்குகள் மட்டும்தான். அப்பவும் எல்லாம் மத்த குரங்குகளை ஏணில ஏற விடாமே அடிச்சிட்டு இருந்துச்சுங்க. ஆனா அதுக எதுக்கும் வாழைப்பழத்த எடுக்க ஏணில ஏறுனா குளிர்ந்த நீர் பீச்சி அடிக்கும், அதுனாலதான் ஏறவிடாம அடிக்கிறோம்னு எதுவும் தெரியாது. முன்னாடி இருந்த குரங்குங்க, அடிச்சது, நாங்களும் அடிக்கிறோம்னு அடிச்சிட்டு இருந்துச்சுங்க. இப்படித்தாங்க உலகத்துல பல விஷயங்கள் நடக்குது………


நன்றி: கூகிள் இமேஜஸ், இது கார்ப்பரேட் கம்பெனிகளில் இருக்கும் ஒர்க் கல்ச்சர் பற்றி கிண்டலடிக்கும் ஒரு பழைய கதை… அவ்வளவே!

எவ்வளவுகாலந்தான்  நம்ம மண்டையை இதையே சொல்லி காயவைப்பாங்க?அதுதான் சிறிது நகைச்சுவையாக இருக்கட்டுமே என்பதற்காக இப்பதிவு.

உலகம் அழியும்போது நம்ம பிரபலங்கள்என்ன செய்வார்கள்?  அண்ணன் சீனிப்பிரபுவின் நகைச்சுவைக்கலாட்டா…கீழே வீடியோவாக இருக்கின்றது பார்த்து சிரியுங்கள்

மன்மோகன்-என்னப்பா சொல்லுறீங்கோ எந்த உலோகம் அழியப்போது?
மம்முட்டி-இரும்பு அழியப்போகுது..உலோகம் இல்லை சார் உலகம்
மன்மோகன்-உலகம் அழியப்போகுதா அப்ப இந்தியாவும் அழிஞ்சிடுமா?

முடிவில ஒரு ருவிஸ்ட் இருக்கு நீங்களே பாருங்க..

அது சரி சின்னதா ஒரு மொக்கை

உலகம் அழியப்போகிறதாம் சாரே…என்ன செய்யப்போறீங்க எப்படி தப்பப்போகின்றோம்?

ரஜனி-என்னாது அழியப்போகுதா ஹா ஹா ஹா கண்ணா….170,000 கோடி அடிச்சப்பவே அழியாத உலகம் இப்பவா அழியப்போது. அட போங்கப்பா

கவுண்டமணி-ஆமா உலக விசயம் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டாராம்

கமல்-உலகம் அழிவது என்பதில் இரு மாற்றுக்கருத்துக்கள் உண்டு மக்கள் அழிவது உலகம் அழிவது இதில் இரண்டும் நடக்கலாம் ஒன்றும் நடக்கலாம் ஆனால் ஒன்றை ஒன்று நிச்சயம் சார்ந்திருக்கும்..

கவுண்டமணி-நாம ஒன்னு கேட்ட நம்மள அசரவைக்கிறமாதிரி ஒரு பதில் சொல்லுவாரு பாரு அது நமக்கு இங்க விளங்காது வீட்ட போனாத்தான் புரியும் பல பேர் பதில் தெரியாமலே ஓடியிருக்காங்க..

விஜய்-ணா எனக்கு பயம்னா என்னான்னே தெரியாதுன்னா?
பிரபு-அப்ப ஏன்யா பாண்டு நனைஞ்சிருக்கு?

அஜித்-அத்திப்பட்டி அத்திப்பட்டி…..
விஜயகாந்த்-ஏய் உலகமே அழியப்போகுதெங்கிறன் வத்திப்பெட்டியதேடிக்கிட்டிருக்காய்…..

ரசித்த இடம்: http://www.venkkayam.com

என்ன கத்துச்சு?

Posted: திசெம்பர் 14, 2012 in கதைகள், சுட்டது, மொக்கை
குறிச்சொற்கள்:, ,

ஒரு குளத்துல 25 எறும்புகள் குளிச்சிக்கிட்டு இருந்துச்சாம். குளத்துல ‘டபக்’குன்னு ஒரு யானை குதிச்சதாம். குதிச்ச வேகத்துல 24 எறும்புகள் தெறிச்சு வெளியே வந்துடுச்சாம். ஒரு எறும்பு மட்டும் யானை தலைமேல ஏறிடுச்சாம். அப்போ 24 எறும்புகளும் கோரஸா கத்துச்சாம். என்ன கத்துச்சு?
#
#
#
#

#
#
#
#
#
#
#
#
#

#
#
#
#
#

#
#
#
#

#
#
#
#
#
#
#
#
#

#
#
#
#
#

தக்காளி, அவன அப்படியே தண்ணில போட்டு அமுக்கிப் பிடிடா மாப்ளே..!

ரசித்த  இடம்: Facebook

திரு என்.சொக்கனின் பதிவிலிருந்து ரசித்த ஒரு பகுதி உங்கள் பார்வைக்காக

நேற்று காலைதான், மனைவியார் கடலை வறுத்திருந்தார். உப்புத் தண்ணீரில் ஊறவைத்து மைக்ரோவேவ் அவனில் வறுத்த கடலையை அவர் முறத்தில் போட்டுப் புடைத்துத் தோலுரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்திருந்தேன்.

அந்தக் கடலை, இப்போது எங்கே?

எங்கள் வீட்டுச் சமையலறையில் அநேகமாக எல்லா டப்பாக்களையும் வெளியிலிருந்து பார்த்தாலே உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்துவிடும். ஆகவே, புத்தக ஷெல்ஃபில் எதையோ தேடுகிறவன்போல் வரிசையாக டப்பாக்களைப் பார்வையிட்டேன். கடலைக்கான சுவடுகளைக் காணோம்.

வேறு வழியில்லை, ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்துவிடவேண்டியதுதான்.

அதையும் செய்தேன். அப்போதும் கடலை சிக்கவில்லை.

அடுத்து, இந்தப் பக்கம் எவர்சில்வர் பாத்திரங்கள். அவற்றையும் வரிசையாகத் திறந்து தேடினேன். முந்திரி, பாதாம் என்று ஏதேதோ கிடைத்தது. இந்தப் புலிப் பசிக்குக் கடலைதான் வேண்டும் என்று அவற்றை ஒதுக்கிவிட்டேன்.

சுத்தமாகப் பதினைந்து நிமிடங்கள் பொறுமையாகத் தேடியபிறகும், அந்தக் கடலையாகப்பட்டது தென்படவே இல்லை. இப்போது என்ன செய்ய?

இந்த அற்ப மேட்டருக்காக, தூங்கிவிட்ட மனைவியை எழுப்பிக் கேட்பது நியாயமல்ல (பத்திரமும் அல்ல), மனத்தளவில் கடலை போடத் தயாராகிவிட்டதால், வேறெதையும் தின்னத் தோன்றவில்லை.

ஒரே நல்ல விஷயம், எழுதுவதை நிறுத்திவிட்டுக் கடலை தேடிய நேரத்தில் என்னுடைய பசி அடங்கிவிட்டது. ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

அப்புறம், காலை எழுந்து பல் தேய்த்த கையோடு, ‘நேத்திக்குக் கடலை வறுத்தியே, என்னாச்சு?’ என்றேன்.

‘ஏன்? என்ன ஆகணும்?’ என்று பதில் வந்தது.

‘இல்ல, நேத்து நைட் அதைத் தேடினேன், கிடைக்கலை.’

’ஆம்பளைங்களுக்குத் தேடதான் தெரியும், பொம்பளைங்களுக்குதான் கண்டுபிடிக்கத் தெரியும்’ என்றார் அவர், ’மத்தியானமே அதை மிக்ஸியில போட்டு வெல்லம் சேர்த்து அரைச்சாச்சு, அப்புறம் உருண்டை பிடிக்கறதுக்குள்ள ஏதோ வேலை வந்துடுச்சு, மறந்துட்டேன்’ என்றபடி மிக்ஸி ஜாடியைத் திறந்து காட்டினார்.

***

Courtesy:  http://nchokkan.wordpress.com/

எங்க கணக்கு வாத்தியார் இன்னைக்கு பயங்கர கடுப்புல வந்தாரு. இப்போ தான்  இடைவகுப்புதேர்வு முடிஞ்சுச்சு. சரி ரொம்ப சொதப்பிட்டோம் போலன்னு மெல்லமா என்னன்னு கேட்டா நம்ம பசங்க எழுதுன சில பதில்களை காமிச்சாரு. ஏன் அவருக்கு கோவம் வந்துச்சுன்னு தெரியல. உங்களுக்கு ஏதாவது புரியுதான்னு சொல்லுங்களேன்

.

.

.

.

.

.

.

.

.

Courtesy: Google images

என் மச்சான் கல்யாணம்..
மண்டபம் களை கட்டி இருந்தது..

அப்ப என் சகலை என்கிட்ட..

” சகலை.. அந்த பொண்ணு யாரு..? ”

” எந்த பொண்ணு..? ”

” அதோ.. பச்சை கலர் சுடிதார் போட்டிருக்குல்ல
அந்த பொண்ணு..! ”

” எதுக்கு கேக்கறீங்க..? ”

” ஜெனரல் நாலேட்ஜ் வளர்த்துக்க தான்..! ”

நான் அந்த பொண்ணை பாத்தேன்..

சினிமா நடிகை அஞ்சலி சாயல்ல
இருந்தது.. ( ஹி., ஹி., போட்டோவுக்காக
எப்படி லாஜிக்கா ஒரு வரி சேர்த்தேன்
பார்த்தீங்களா..? )

” அது யார்னு தெரியலையே..! ”

” என்னா சகலை நீங்க… என்னை விட சீனியர்,
நம்ம சொந்தக்காரங்க யார் யார்னு தெரிஞ்சி
வெச்சிக்க வேணாமா..? ”

” ஓ… அப்ப நீங்க சொந்தகாரங்களை
தெரிஞ்சிக்க தான் கேக்கறீங்க..?! ”

” எக்ஸாக்ட்லி..! ”

” அப்ப முன் வரிசையில் வெள்ளை சட்டை
போட்டுட்டு, ஒரு தாத்தா இருக்காரே..
அவர்ல இருந்து ஆரம்பிக்கலாம் வாங்க..! ”

” விளையாடாதீங்க சகலை… சொல்லுங்க..! ”

” நிஜமாலுமே தெரியலை.. ஒருவேளை
பொண்ணு வீட்டு சொந்தமா இருக்கும்..! ”

” சான்ஸே இல்ல.. பொண்ணோட அண்ணனை
பிடிச்சி விசாரிச்சிட்டேன்.. அவங்க சைடு
இல்லன்னு சொல்லிட்டான்..! ”

( ஆஹா.. ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காரு..! )

” சரி அப்ப உங்க Wife-கிட்ட கேளுங்க..! ”

” அவ தெரிஞ்சாலும் சொல்ல மாட்டா.. ”

” அப்ப என் Wife மாலாகிட்ட கேளுங்க..,
அவளுக்கு தெரியும்.. ”

” சரி இருங்க.. கேட்டுட்டு வரேன்.. ”

நானும் பாத்துட்டுடே இருந்தேன்..
என் Wife-கிட்ட போயி என்னமோ
ரகசியமா பேசினாப்ல..

கொஞ்ச நேரத்துல சந்தோஷமா வந்தாரு

” சக்ஸஸ்… கண்டுபிடிச்சிட்டேன்..! ”

” ஆமா.. இவரு பெரிய எடிசனு…
கரண்ட் கண்டுபிடிச்சிட்டாரு..!! ”

” எப்படியோ கண்டுபிடிச்சோம்ல..! ”

” ஆமா என் பொண்டாட்டிக்கிட்ட போயி
என்னான்னு சொல்லி கேட்டீங்க..? ”

” அந்த பச்சை கலர் சுடிதார் போட்ட
பொண்ணு யாருன்னு சகலை உங்ககிட்ட
கேக்க சொன்னார்னு சொன்னேன்..!! ”

” அடப்பாவி மனுஷா..?!!! ”

டிஸ்கி : எதோ என் பொண்டாட்டிக்கு
பப்ளிக்ல புருஷனை அடிக்கிற கெட்ட பழக்கம்
இல்லாததால அன்னிக்கு நான் தப்பிச்சேன்..
.
.

மனைவியிடம் தப்பித்து வந்து நமக்கு பாடம் நடத்தியவர்: கோகுலத்தில் சூரியன்

தனது நீண்ட ஆராய்ச்சியின் பயனாக செல்வா பெட்ரோல் இல்லாமல்  மின்சாரத்தால் இயங்கும் வண்டியைக் கண்டுபிடித்தேவிட்டார்.
இதுவரை மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் செல்வாவின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய மாற்றத்தை உண்டுபண்ணும் என்று கூறிக்கொண்டிருந்தார்.
பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருந்தன. பெட்ரோல் இல்லாமல் ஓடுகின்ற வண்டியைக் கண்டுபிடிப்பதென்பது சாதாரண விசயமல்லவே!
உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சியாளர்கள் செல்வாவின் பெட்ரோல் இல்லாமல் ஓடும் வாகனத்தைப் பார்க்க ஆவலுடன் வந்துகொண்டிருந்தனர்.
செல்வா தனது வாகனத்தினைப் பார்வைக்கு வைத்திருந்தார். அது இயங்குவதற்கு பெட்ரோல் எதுவும் தேவைப்படாது என்றும் மின்சாரம் மட்டுமே போதுமானது என்றும் விளக்கிகொண்டிருந்தார்.
ஊர்ப்பொது மக்களும் ஆராய்ச்சியாளர்களும் செல்வாவின் வாகனத்தை அதிசயமாகப் பார்த்துகொண்டிருந்தனர்.
அப்பொழுது இது எவ்வாறு இயங்குகிறது என்று ஒரு ஆராய்ச்சியாளர் செல்வாவிடம் கேட்டார்.
” இது முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கக்கூடியது , இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் அனைத்து வாகனங்களும் சிறிது நேரத்திற்கே மின்சாரத்தைத் தேக்கி வைக்கக்கூடியது. ஆனா என்னோட இந்த வாகனம் நீண்ட நேரத்திற்கு இயங்கும். அதனால எங்க போறதுனாலும் நீங்க இத நம்பி போலாம்! ” என்று தனது கண்டுபிடிப்பைப் பற்றி பெருமையாகச் சொன்னார் செல்வா.
” அதுக்கு எவ்ளோ நேரம் சார்ஜ் போடணும் ? ” என்றார் மற்றொருவர்.
” சார்ஜ் போட வேண்டியதில்லை , நம்ம வண்டிக்குப் பக்கத்துல இன்னொரு வண்டி இருக்கு பாருங்க அதுல ஒரு ஜெனரேட்டர் இருக்கும் அதுல இருந்துதான் இதுக்கான கரண்ட் வருது! “
” அப்ப அதுக்கு பெட்ரோல் ஊத்தனும்ல ?”
” கண்டிப்பா அதுக்கு ஊத்தித்தான் ஆகணும்! “
” அப்புறம் இது என்ன பெரிய கண்டுபிடிப்பு, நமக்கு அதிகமா செலவுதானே ஆகுது ?” என்று குழப்பமாகக் கேட்டார் அந்த நபர்.
” இந்த வண்டிய மட்டும் நீங்க வச்சிட்டு , அந்த வண்டிய வேற ஒருத்தருக்கு வித்திடுங்க , இப்ப நீங்க அதுக்கு பெட்ரோல் ஊத்த வேண்டாம்ல! ” என்று தனது அறிவாளித்தனத்தை நிலைநாட்டினார் செல்வா.
ரசித்த இடம்: http://www.selvakathaikal.blogspot.in

என் துணைவியாரின் வருங்காலச் சக்களத்தி நேற்று வீட்டுக்கு வந்திருந்தார். இப்போதுதான் வயது இரண்டு ஆகிறது. சக்தி – பிரியத்துக்குரிய மருமகள் – என் நெருங்கின தோழியின் புதல்வி. மாமனைச் சந்திக்குமுன்பாக அவளை நன்றாகவே தயார் செய்திருந்தார் தோழி.

யாரைப் பாக்க வந்தீங்க?

மாமாவ..

எந்த மாமாவ..

மக்கு மாமா..

(சுத்தம்..)

அய்யோ தங்கக்குட்டி.. மாமா போன தடவ எங்க பார்த்தீங்க..

பாப்பா ஊஞ்சி ஆடுனா.. மாம்மா பெய்ய புக்கு வந்தான். நா வேணா வேணா சொன்னே. மாமா ஊஞ்சி ஆட்ட வேணா..

(சென்ற முறை அவளை ஒரு பூங்காவுக்கு அழைத்துப் போயிருந்தேன். கையில் ரமேஷ் பிரேமின் மகாமுனியோடு)

செல்லம். பாப்பாக்கு என்ன வேணும்..

பூ

வேற?

ஐஜீம், சாக்கி வாங்கித்தா..

குட்டிக்கு எத்தனை சாக்கி வேணும்?

டூ நைன் வேணும்

(ஒன்றைத் தாண்டி எதுவானாலும் டூ நைன் தான்)

சூப்பர். மாமா உனக்கு நிறைய சாக்கி வாங்கித் தர்றேன். என்னக் கட்டிக்கிறியா..

போடா.. எனக்கு சாக்கி வேணாம்மா..

(அவ்வ்வ்….)

அத்தனையும் பொறுமையாய் பார்த்தபடி அமைதியாய் இருந்த ஒரு ஜீவன் இப்போதுதான் வாய் திறந்தது.

பரவாயில்ல.. உனக்காவது அந்த அறிவு இருக்கே

# எம்பொண்டாட்டி நெம்ப நல்லவ

Courtesy: கார்த்திகைப் பாண்டியன் in Google+

FB Chat:
He : வணக்கம்
Me : வணக்கம்
He : எப்படி இருக்கீங்க
Me : நல்லாருக்கேங்க
He : ஈரோட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?
அப்படியே இடி என் தலையில விழுந்த மாதிரி இருந்துச்சு, ஈரோட்ல இருக்கிற மக்கள் எப்படியிருக்காங்கன்னு கேக்குற பாசத்த நினைச்சு ஒரு விநாடி திக்னு ஆயிடுச்சு…
மனச திடமாக்கிட்டு
Me : ஈரோட்ல இருக்கிற எல்லோரும் எப்படி இருக்காங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?
He :  ஈரோட்ல எதும் அசம்பாவிதம் நடக்கலன்னா, எல்லாரும் நல்லாருக்காங்கன்னு அர்த்தம்
பல படங்களில் அழும் காட்சியில்வரும் கமலின் அழுகை நினைவிற்கு வந்தது.
Me : சன் நியூஸ்ல ஒன்னும் சொல்லலைங்க

ஒரு முறை சர்தார்ஜி, நண்பர் வீட்டுக்கு விருந்துக்குச் சென்று இருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தனர். நண்பர், சர்தாரிடம், ”நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?” என்று கேட்டார். அதற்கு சர்தார் ”வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்” என்றார். உடனே நண்பர் சொன்னார், ”அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயே தான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே” என்றார். பல்பு வாங்கியதால் சர்தார் அசடு வழியச் சிரித்தார்.

வீட்டுக்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று ”நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?” என்று கேட்டார். அதற்கு அவர் மனைவி ”ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன்” என்றார். உடனே சர்தார் கடுப்பாகி, ”போடி… எட்டு இட்லினு சொல்லி இருந்தா, ஒரு நல்ல ஜோக் சொல்லி இருப்பேன்” என்றார்.

படித்ததில் பிடித்தது: naai-nakks.blogspot.in

எட்டு செகண்டுல 1018 பெயரை சொல்லமுடியுமா..?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.

கண்1000, 7மலை, 6முகம், 5எலி….. எப்பூடி…?

நிறுத்துங்க. அடிக்கிறதா இருந்தா இவர (Vijay Saravanan) அடிங்க. அவரு தான் இந்த மொக்கைக்கு அதிபதி

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த

ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.
பெரிய பெரிய மருத்துவர்களிடம் போய்ப் பார்த்து, மருந்து ,
ஊசி எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்
கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய அறிவுள்ள மனைவி ஒரு நாள் சொன்னா,
‘நீங்க மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கிற மருத்துவர்களை விட்டுட்டு ,
ஏதாவது ஒரு நல்ல விலங்கு மருத்துவர் கிட்ட
போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்கு
சரியான மருத்துவம் கொடுக்க முடியும்’னாள்.

என்னது விலங்கு மருத்துவர்கிட்டேயா? உனக்கென்ன மூளை
கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே
கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி
விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய்
மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி மூஞ்ச வெச்சிகிட்டு ரெண்டு வாய்
தின்னுட்டு , பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி அலுவலகத்துக்குப்
போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே
வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் அலுவலகம்
விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பேருந்துல அடைஞ்சு வீட்டுக்கு
வர்றீங்க!

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே
நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி
இரவு சாப்பாட்டை ‘லபக் லபக்’’னு முழுங்கிட்டு, எருமை மாடு
மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!
இப்படி இருக்கிறவங்களை மனித மருத்துவர் எப்படிங்க
குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே
ஒரு கால்நடை மருத்துவரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில்
சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க,
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’ போங்கன்னு முத்தாய்ப்பு
வச்சாளாம் மனைவி..!

Courtesy: http://nanjilmano.blogspot.in

நீங்க நினைக்கலாம் நான் போடுற மொக்க எல்லாம் சிரிக்கிற மாதிரியே இல்லன்னு அது உண்மைதான் ஏன்னா ???
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.

bcoz எங்கம்மா சொல்லி இருக்காங்க நாலு பேரு சிரிக்கிற மாதிரி ஏதும் செய்ய கூடாதுன்னு 🙂

திங்களை கொண்டாடுவோம் 🙂

Courtesy: Vijay Saravanan

”வீட்டிலே என் மனைவி எப்போதும் தகராறு செய்கிறாள்.நிம்மதியே இல்லை,”என்று ஒருவன் நண்பனிடம் புலம்பினான்.நண்பன் சொன்னான்,”அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.எனக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி திட்டினால் அடுத்தவள் வீட்டிற்கு போய்விடுவேன்.எனக்கு அதனால் எந்த பிரச்சினையும் இல்லை.”இவனும் இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று நினைத்து இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டான்.இதை அறிந்த முதல் மனைவி அவனை வீட்டை விட்டு துரத்தி விட்டாள்.உடனே இரண்டாவது மனைவியிடம் சென்றான்.ஏற்கனவே திருமணம் ஆனதை சொல்லாமல் இவளைக் கல்யாணம் செய்து கொண்டது தெரிந்து இவளும் அவனை வீட்டிற்குள் விடவில்லை.அவன் இப்போது நடுத்தெருவில்.புலம்பியபடியே அவன் கோவிலுக்குப் போய் அங்கு ஒரு ஓரமாகப் படுத்தான்.அப்போது பக்கத்தில் ஒருவன் புலம்பிக் கொண்டிருந்தான்.அவனை உற்றுப் பார்த்த போதுதான் அவன் இவனுடைய நண்பன்தான் என்று தெரிந்தது.”என்னடா,நிம்மதியா இருந்த நீயும் இங்கே இருக்காயே?”என்று கேட்க அவன் சொன்னான்,”என்னையும் இரண்டு பேரும் வெளியே அனுப்பி விட்டனர்,”என்றான்.”பின் ஏன் எனக்கு அந்த ஆலோசனை சொன்னாய்?”என்று இவன் கேட்க அவன் சொன்னான்,”நான் அடிக்கடி பிரச்சினை காரணமாக இங்குதான் வந்து படுத்திருப்பேன்.எனக்கு தனியாகப் படுத்திருக்க பயமாக இருப்பதால் துணைக்கு ஆள் தேடினேன்.அப்போதுதான் நீ அகப்பட்டாய்.”

கோவிலில் படுத்திருந்த நண்பர்: http://jeyarajanm.blogspot.in/. துணையாய் அகப்பட்டது நான் இல்லீங்கோ.

கையில 15,000 ரூபா இருக்கு
என்ன பண்ணலாம்..?

Fridge-ஐ மாத்திட்டு புதுசு வாங்கலாமா..?

TV-ல விளம்பரம் வர்ற அந்த
புது மாடல் Fridge கூட பாக்க
நல்லா தான் இருக்கு.,

கூடவே Offer-ல ஒரு குக்கர் வேற
தர்றாங்கலாம்..

சரி., நாளைக்கே அதை வாங்கிடலாம்..!

இப்படி சில பேர் டக்கு டக்னு முடிவு
எடுத்துடறாங்க.. இது ரொம்ப தப்பு..!

( ஆமா.., இதுல என்ன தப்பு இருக்கு..? )

” என்ன தப்பு இருக்கா…? சொல்றேன்
நோட் பண்ணிக்கோங்க…! ”

1. 15,000 ரூபா இருக்குங்கறதுக்காக
அதை செலவு பண்ண நினைக்கிறது
முதல் தப்பு.

2. பழசுங்கறதுக்காக நல்லா இருக்குற
ஒரு பொருளை மாத்த நினைக்கிறது
ரெண்டாவது தப்பு.

3. புது Fridge வாங்கணும்னு முடிவு
பண்ணினதும்., உடனே வாங்கிடணும்னு
துடிக்கிறது மூணாவது தப்பு.

4. ” எந்த Fridge நல்லா இருக்குன்னு..? ”
தெரிஞ்சவங்க நாலு பேர்கிட்ட Opinion
கேக்காதது நாலாவது தப்பு.

5. Free-யா வருதேன்னு தேவையில்லாத
குக்கர்க்கு ஆசைப்படறது அஞ்சாவது தப்பு..!

6. Offer-ன்னு சொல்லி தரமில்லாத
Fridge-ஐ வாங்க நினைக்கிறது
ஆறாவது தப்பு..!

இப்படிக்கு..,

வீட்டில் சொல்ல முடியாததை எல்லாம்
தைரியமாக Blog-ல் சொல்லுவோர் சங்கம்..

சேலம் கிளை.

( அவ்வ்வ்வ்….!!! )
.

சேலம் கிளை தலைவர் முகவரி: http://gokulathilsuriyan.blogspot.com

நேத்து சாயந்திரம், கவிதா என் கிட்ட “டீ போடட்டுமா”ன்னு கேட்டாங்க. நான் “எனக்கு காஃபி வேணும்”னு சொன்னேன். வழக்கம்போல, “நீ கேக்குறதெல்லாம் குடுக்க முடியாது. டீ தான் போடமுடியும், குடிச்சா குடி இல்லைன்னா கிட”ன்னு மரியாதையா சொல்லிட்டாங்க.

சரி நம்ம வீட்டுக்குத்தான் கெஸ்ட் வந்திருக்காங்களே, அவங்க சாக்கை வச்சி நாம காபி குடிக்கலாம்னு, “அவர் கிட்ட என்ன வேணும்னு கேளுங்க. ஒரு வேளை அவரு காஃபி வேணும்னு கேட்டார்னா, எனக்கும் கிடைக்கும்ல”ன்னு சொன்னேன்.

அவர் கீழ இறங்கி வந்ததும், அவர் மனைவி அவர்கிட்ட, “ஏங்க உங்களுக்கு டீ, காஃபி ரெண்டுல எதுனாலும் ஓக்கே தானே” அப்பிடின்னு (இப்ப தெரிஞ்சிருக்குமே அவங்க பதிவராத்தான் இருக்கணும்னு?) கேக்கவும், அவரு, “ஆமாம்மா, எதுனாலும் எனக்கு ஓக்கே”ன்னு சொன்னாரு.

நான்,  “என்னங்க இப்பிடி சொல்லிட்டீங்க. டீ காஃபி ரெண்டுல உங்களுக்கு எது வேணுமோ அதைத் தெளிவா சொல்லிக் கேளுங்க” அப்பிடின்னு சொன்னா, அதுக்கு அவர் சொல்றாரு

“அப்பிடியில்லைங்க. இப்பிடி சொன்னோம்னா, அவங்களுக்கு ரெண்டுல எது போட நல்லா வருமோ அதைப் போட்டுத் தருவாங்கன்னு சொல்றாரு”

இப்பிடி ஒரு அப்பாவியை எங்கயாச்சும் பாக்க முடியுமா??

Courtesy: முகிலன் தினேஷ்

விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கணவன் மட்டும் எழுந்து போனான். கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார்.

“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார்.

கணவனோ “முடியவே முடியாது ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்.

“யாரது?” என்று மனைவி கேட்டாள்.

“எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்”

“நீங்க உதவி செஞ்சீங்களா?”

“இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?”

“பார்த்தீங்களா? 3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்”

கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான்.

“ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?”

“ஆமா சார்”

“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?”

“ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்”

“எங்கே இருக்கீங்க”

“இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க….”

Courtesy: Nagarajachozhan MA

நேத்து Evening என் கூட +2-ல படிச்ச
என் Friend கணேஷ் போன்
பண்ணியிருந்தான்..

” ஹலோ..! ”

” டேய்.. நீ என்ன படிச்சி இருக்க..? ”

எடுத்தவுடனே இப்படி ஒரு கேள்வியை
அவன் கேட்டதும் எனக்கு தூக்கி வாரி
போட்டது..,

( பொதுவா என் படிப்பு சம்பந்தமா
யாராச்சும் கேட்டா எனக்கு அப்படிதான்
ஆகும்…! ஹி., ஹி., ஹி.. )

” ஏன்டா.. என்ன விஷயம்..? ”

” நீ மொதல்ல சொல்லு..! ”

” நான் இந்த உலக இலக்கியம்.,
இந்திய இலக்கியம் எல்லாம்
படிச்சி இருக்கேன்..! ”

” டேய்… போதும்.. நான் கேட்டது
அதில்ல. நீ காலேஜ்ல என்ன
டிகிரி படிச்ச..? ”

” ஓ.. அதை கேக்கறியா..? நான் MCA
படிச்சி இருக்கேன்..! ”

” அது கம்பியூட்டர் சம்பந்தமான படிப்பா..?! ”

” ஆமா…! ”

” டிகிரி வாங்கிட்டியா. இல்ல எதாச்சும்
அரியர் இருக்கா..? ”

” ஹேய்… யாரை பாத்து… நான் தான்
MCA-ல காலேஜ் First..! ”

” அப்ப உன் திறமையை Use பண்ணவேண்டிய
நேரம் வந்துடுச்சி மச்சி…! ”

” நேரம் வந்துடிச்சா…? அப்படின்னா…”

( ஐய்யயோ… சாப்ட்வேர் எதாச்சும்
டெவலப் பண்ண சொல்லுவானோ..! )

( கொஞ்சம் ஓவராதான் போயிட்டோமோ..!! )
” என் பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல…. “
” ஸ்கூல்ல….. “
” தெர்மோகோல்ல கம்பியூட்டர்
பண்ணிட்டு வர சொல்லி இருக்காங்க…
கொஞ்சம் வந்து பண்ணி குடேன்..! “
” அடி செருப்பால… புல்லு புடுங்க
பில்கேட்ஸ் வேணுமாடா உனக்கு…? “
” டென்ஷன் ஆகாதடா.. உன் படிப்பை மதிச்சி
எவனாவது உனக்கு வேலை குடுத்தானா..?
நானாவது இந்த வேலை குடுத்தேன்னு
சந்தோஷப்படுவியா.. அதை விட்டுட்டு..!! “
” ஹி., ஹி., ஹி.., தெர்மோகோல் எல்லாம்
ரெடியா இருக்கா மச்சி…! “
வேலை கிடைத்த இடம்: http://gokulathilsuriyan.blogspot.in

ஹலோ

ஹலோ

யார் பேசறது?

நான் தான்

நான் தான்னா யார்?

நான் தான் ரேவதி

ரேவதி, அப்பா இல்லையா?

இல்லை

அம்மா

இல்லை

சரி அப்பா வந்தா ராமன் போன் பண்ணிதா சொல்றியா?

யாரு?

ராமன், எழுதிக்கோ   ரா… ம… ன்..

ரா எப்படி எழுதறது?

சரியாப்போச்சு, வீட்ல வேற யாரும் இல்லையா?

சேகர் இருக்கான்.

சரி சேகரைக் கூப்பிடு..

சேகர் இந்தா..  ரேவதி சேகரிடம் டெலிபோனைக் குடுக்கிறாள்.

(சேகருக்கு வயது ஒன்று!)

Courtesy: G+ Shankar. G

கணக்கு என்றாலே நம்மில் பலருக்கு ஆமணக்கு, அதிலும் இவர்கள் சொல்லித்தருவது போல கணக்கு போட்டால் விடை சரியாக வராது…சிரிப்பு தான் வரும்…  வார இறுதி, சிரிச்சுக்கிட்டே  சந்தோசமாக உங்கள் விடுமுறையை ஆரம்பிக்க  இந்த காணொளிகளை உங்களோடு இன்று பகிர்ந்துகொள்கிறேன்.

Courtesy: http://adhithakarikalan.wordpress.com

மிக அழகான விலைமாது ஒருத்தி ஒரு ஊரில் இருந்தாள் அவ்வூர் பணக்காரர்களும் பெரிய மனிதர்களும் .ஒரு நாளைக்கு
ஒரு லட்சம் கொடுத்தேனும் அவளுடன்  தங்குவதை பெரும் பாக்கியமாகக் கருதினார்கள். அவள் தினசரி வந்து செல்லும் பாதையில் ஏழைத் தொழிலாளர்கள்  வாழ்ந்த ஒரு பகுதி இருந்தது.தினசரி
அவள் செல்வதை அவர்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவள் அவர்களின் கற்பனைக்கு எட்டாத
உயரத்தில் இருந்தாள் .ஒருநாள் அவர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவு செய்தனர்.
அதாவது அவர்கள் நூறு பேர் சேர்ந்து ஆளுக்கு
ஆயிரம் ரூபாய் போட்டு ஒரு லட்சம் சேர்க்க வேண்டியது;அதன்பின்
அவர்கள் பெயர்களைத்  தாள்களில் எழுதி
குலுக்கல்  முறையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அந்த அழகியிடம் அனுப்பி
அவன் அனுபவத்தை பின் எல்லோரும்
கேட்டுக் கொள்வது. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் அங்கு சென்றபோது
அவனை அழைத்து அவள்
வரவேற்றாள்.
காலையில் அவன் புறப்படும்போது அவள் கேட்டாள் ,”உங்களைப் பார்த்தால்  ஏழை போலத் தெரிகிறது.உங்களால் எப்படி ஒரு லட்சம் பிரட்ட முடிந்தது?”அவன் நடந்ததை  சொன்னான். அவள் மிக உணர்ச்சி வசப்பட்டு அவனிடம் சொன்னாள் ,”எனக்கு இதைக் கேட்க மகிழ்ச்சியாகவும் அதே சமயம்
.வருத்தமாகவும் உள்ளது. உங்கள் பணம் எனக்கு வேண்டாம்,”என்று கண்ணீர் மல்கச் சொன்னாள்.தங்கள்
பணம் ஒரு லட்சமும் திரும்பக் கிடைக்கும்
என்று அவன் மகிழ்ச்சியுடன் காத்திருக்க அவள் ஆயிரம் ரூபாயை அவனிடம்
கொடுத்து,”உங்கள் பணத்தை எடுத்துக்
கொள்ளுங்கள்,”என்றாள் .அவன் மயக்கம் போடாத குறைதான்.

Courtesy:  http://jeyarajanm.blogspot.in

டேனிக்கு ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்தாகிவிட்டது.
மூன்று நாட்கள் அவனுடைய யுகேஜி வகுப்புகளுக்கும் போய் வந்துவிட்டான் அவன்.
மூன்றாம் இரவு தூங்கும் முன் அவன் அப்பாவிடம் வந்த டேனி கண்களை விரித்துக் கொண்டு சொன்னான்.
“தெரியுமாப்பா… எங்க அனிதா மிஸ் முந்தாநேத்து சொன்னாங்க… அவங்க
நம்ம வீட்ல ஒரு சீக்ரெட் கேமரா ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க.!”.
ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட டேனியின் அப்பாவும்
அதே ஆச்சர்யத்துடன் அவனிடம் கேட்டார்.
“அப்படியா… எதுக்கு.?”.
டேனி தன் அப்பாவுக்கு தெரியாத ஒரு விஷயத்தை விளக்கும் ஆர்வத்துடன் அவரிடம் தொடர்ந்து சொன்னான்.
“ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் டெய்லி நைட்டு பெட்டுக்கு போறதுக்கு முன்னாடி பிரஷ் பண்ணிட்டுத்தான் தூங்கணும். இல்லைனா, ஸ்டூடன்ட்ஸ் காலைல
வந்ததும் எங்க அனிதா மிஸ் அந்த சீக்ரெட் கேமராவை ஓப்பன் பண்ணிப் பாப்பாங்க. யாரெல்லாம் நைட் பிரஷ் பண்ணலையோ அவங்களுக்கெல்லாம் பனிஷ்மென்ட்… தெரியுமா.?”.
டேனி சொன்னதும் அவன் அப்பா அதே தொனியில் அவனிடம் சொன்னார்.
“அய்யய்யோ… அப்ப நீ தூங்கப் போறதுக்கு முன்ன இன்னிக்கு பிரஷ் பண்ணனுமா.?”.
அவர் கேட்டதும் டேனி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்.
“இல்லப்பா… வேணாம்.!”.
டேனி அப்படிச் சொன்னதும் அரண்டு போன அவன் அப்பா அவனிடம் கேட்டார்.
“என்னது வேண்டாமா… அப்புறம் மிஸ் பனிஷ்மென்ட் கொடுப்பாங்களே.!”.
அவர் அப்படிக் கேட்டதும் டேனி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னான்.
“நேத்துக் கூடத்தான் நான் பிரஷ் பண்ணல… ஆனா, மிஸ் ஒண்ணுமே சொல்லலியே.!”
.
.
கேள்வி: 18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த ஓவியர்கள் பற்றி எழுதவும் ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
பதில்: அவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள்!
Back Bench Boyz Rockzzzzzzz 🙂

Courtesy: Vijay Saravanan

ஒரு சிறுவன் தன் தந்தையிடம்,”அப்பா,உனக்கு அறிவு இருக்கா?”என்று கேட்டான்.தந்தையும் சிரித்துக் கொண்டே,”ஓ ,இருக்கே !”என்றார் . சிறுவனும் விடாது ”சரி,நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லு.நான்கை ஒன்றால் பெருக்கினால் என்ன வரும்?”என்று கேட்க அவரும் நான்கு என்று சொன்னார்.அடுத்து நான்கை
இரண்டால் பெருக்க என்ன வரும் என்று கேட்க,எட்டு என்று விடை சொன்னார்.
பின் நான்கை மூன்றால் பெருக்கினால் என்ன வரும் கேட்க அதற்கும் பன்னிரண்டு
என்று சொன்னார்.பையன் உற்சாகமாக,”முதலில் உன்னிடம் நான் என்ன கேள்வி
கேட்டேன் ?”என்று கேட்டான் தந்தை சொன்னார்,”நான்கை ஒன்றால் பெருக்கினால் என்ன
வரும் என்று கேட்டாய்,”என்றார்.

.

.

.

.

.

.

.

.

.

.

.

பையன் உற்சாகமாகத் தாவிக் கொண்டே சொன்னான்,”அதுவா முதல் கேள்வி?உனக்கு அறிவு இருக்கா
என்று கேட்டேனே,athu thaane muthal kelvi?”

Courtesy: http://jeyarajanm.blogspot.in

English Story :-

.He Smiled
..She Smiled
……Life Smiled 🙂

தமிழ் டப்பிங் ?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.நீ சிரிப்பே
..அவ சிரிப்பா
…உன் பொழப்பு சிரிப்பா சிரிக்கும் 🙂

G+ இல் படித்தது

ஆமாங்க.சும்மா சும்மா’வ பற்றி எழுதிய பதிவ சும்மா படிங்க.என்ன இத்தன ‘ சும்மா’ன்னு பாக்கீறீங்களா?.இது ‘சும்மா’ என்ற வார்த்தையை பற்றிய பதிவு.
‘சும்மா’ என்கிற வார்தைக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு.அதைப் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம்.

·         ஒருவனிடம் “இன்னிக்கு முழுவதும் வீட்டில் என்ன செய்தாய்?”என்று கேட்டால் அவன் கூறுவான் “சும்மாதான் இருந்தேன்.” என்று.அப்படியென்றால் “சும்மா” என்பது இங்கு எதையுமே செய்யாமல் வெட்டியாக இருந்ததை குறிக்கிறது.
·         ஒருவன் ஒரு பெண்ணை உற்று பார்த்துக்கொண்டே இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.அந்த பெண் அவனிடம் “எதுக்கு என்னை பார்த்தாய்?” என்று கேட்டால் அவன் கூறுவது “சும்மாதான் பார்த்தேன்” என்பதாகத்தான் இருக்கும்.இங்கு அவன் அந்த பெண்ணிடமிருந்து தப்பிக்க ஏதோ கூறவேண்டுமென்று ‘சும்மா’என்கிறான்.
·         “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டால் அதற்கு மற்றொரு கேள்வியை கேட்பீர்கள் “எதற்காக கேட்கிறாய்?”என்று.அதற்கு ஒரு சிலர் “சும்மாதான் கேட்கிறேன்” என்று பதில் அளிப்பார்கள்.இங்கு ‘சும்மா’ என்றால் ‘தெரிந்து கொள்ள’ என்ற அர்த்ததில் வருகிறது.
·         “என்ன பன்ற?”
“சும்மா,படிச்சுக்கிட்டு இருக்கேன்”
இங்கு ‘சும்மா’ என்பது கருத்தோடு ஒரு செயல் செய்வதை குறிக்கிறது.
·         “என்ன திடீரென்று என் வீட்டிற்கு வந்திருக்கிறாய்?”
“சும்மா,இந்த பக்கம் வேலை இருந்தது.அப்படியே உன்னையும் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன்”
இங்கு ‘சும்மா’ என்பது எதேர்ச்சையாக நடைபெற்ற செயலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
·         “நேர்க்காணல் என்னவாயிற்று?”
“வழக்கம் போலதான்.வேலை கிடைக்காது என்று தெரியும்.சும்மாதான் போயிட்டு வந்தேன்.”
இங்கு ‘சும்மா’ என்பது நடக்கப் போவதை தெரிந்துகொண்டே செய்வதை குறிக்கிறது.
·         “புது பேனாவா?”
“ஆமாம்.இந்த புத்தகத்தை வாங்கும்போது சும்மா கெடச்சுது.”
‘சும்மா’ என்பதற்கு ‘இலவசம்’ என்றும் பொருள் வருகிறது.
·         “இந்த குழந்தை சும்மா சும்மா அழுவுது” என்று நாம் கூறுவதுண்டு.இங்கு ‘சும்மா சும்மா’ என்றால் ‘அடிக்கடி’ என்று பொருள்படுகிறது.
·         “சும்மா இருக்கிறவனை ஏண்டா வம்புக்கு இழுக்குற?”
‘சும்மா’ என்றால் வம்புக்கு போகாமல் தன் வேலையைப் பார்த்தால் என்பது அர்த்தம்.
·         வகுப்பறையில் வாத்தியார் “எல்லாம் பேசாம சும்மா இருங்க” என்றால் அமைதியாக இருங்கள் என்று அர்த்தம்.
·         யாராவது உங்களை தொந்தரவு செய்துகொண்டிருந்தால் “கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறாயா?” என்று கேட்போம்.அதாவது “என்னை தொந்தரவு செய்யாதே” என்பதற்கு மாற்றாக அதை கேட்கிறோம்.
·         “அந்த பையில ஏதாவது இருக்கா?”
“இல்ல.சும்மாதான் இருக்கு.”
அதாவது காலியாக இருக்கிறது.
·         வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர் உங்களுக்கு எதுவும் எடுத்து வரவில்லை என்றால் “வெளிநாட்டிலிருந்து வருகிறீர்கள்.சும்மாவா வருவது?” என்று கேட்போம். ‘சும்மா’ என்பது வெறும் கையோடு வந்ததை குறிக்கிறது.
·         “அய்யோ! பாம்பு!”
“அய்யோ! எங்க?”
“ஏய்! பயந்துட்டியா? சும்மா சொன்னேன்.”
‘சும்மா’ என்பது ‘பொய்’ என்று பொருள் தருகிறது.

இந்த மாதிரி ‘சும்மா’ என்ற வார்த்தை நேரம் மற்றும் இடத்திற்கு தகுந்தாற்போல் தனது அர்த்தத்தை மாற்றிக்கொள்கிறது.‘சும்மா’பற்றி இன்னும் எழுதவேண்டும் என்றால் சும்மா எழுதிக்கிட்டே போகலாம். ஆனா உங்களுக்கு கடுப்பாகுமே!
அப்புறம் ஏன் இத எழுதினேன்னா கேக்கிறீங்களா? அது ஒன்னும் இல்லைங்க.நானும் வீட்டில சும்மாதான் இருக்கேன்.அதான் சும்மா எழுதினேன்.
சும்மா உக்காந்து யோசிச்சது: http://tamilcrazy.blogspot.in

துறவி ஒருவர் தன் சீடனை அழைத்து ஒரு நாள் முழுவதும் அரண்மனையில் தங்கி பாடம் கற்று வருமாறு கூறினார்.ஆசிரமத்தில் படிக்காத பாடமா அரண்மனையில் படிக்க என்று எண்ணினாலும் குருவின் கட்டளைப்படி அவன் அன்று அரண்மனை சென்றான்.அரசன் அவனை நன்கு உபசரித்து அன்று அங்கு தங்கிச்செல்லுமாறு கூறி அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தான்.ஆனால் சீடன் பார்க்கையில் எங்கு பார்த்தாலும் ஆட்டமும்,பாடலும்,குடியுமாக இருந்தது அவனுக்கு அருவருப்பாக இருந்தது.இருந்தாலும் மனத்தைக் கட்டுப்படுத்தி படுத்து உறங்கினான்.அதிகாலையில் அரசன் சீடனை அழைத்து அரண்மனையின் பின்புறம் செல்லும் நதியில் குளித்து வர அழைத்தார்.சீடனும் அரசனும் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென அரண்மனையில் தீப்பற்றியது.அதை அரசன் சீடனிடம் காண்பித்தான்.உடனே சீடன் அவசரமாக குளிப்பதை விட்டு, தன் கோவணம் எரிந்து விடாமல் காக்க வேண்டி ஓடினான். கோவணத்தைக் கையில் எடுத்தபின் திரும்பிப் பார்த்தால் அரசன் இன்னும் ஆற்றிலே குளித்துக் கொண்டிருந்தான்..அரண்மனை பற்றி எரியும்போது அரசன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்போது தான் மட்டும் கோவணத்திற்காக ஓடி வந்ததை எண்ணி தலை கவிழ்ந்தான்.அரசனின் காலில் விழுந்து எப்படி அவரால் பதட்டப்படாமல் இருக்க முடிந்தது என்று கேட்டான்.அரசன் சொன்னார்,”இந்த அரண்மனை என்னுடையது என்று நினைத்திருந்தால் நான் இங்கே நின்றிருக்க மாட்டேன்.இது ஒரு அரண்மனை.நான்,நான்தான்.அரண்மனை எப்படி என்னுடையதாகும்?நான் பிறக்காத போதும் இந்த அரண்மனை இங்கு இருந்தது.நான் இறந்த பின்னும் அது இங்கு இருக்கும்.இது எப்படி என்னுடையதாகும்?கோவணம் உங்களுடையது என்றும் அரண்மனை என்னுடையது என்றும் கருதியதால் நீங்கள் அதைப் பின்பற்றி ஓடினீர்கள்.நான் அவ்வாறு கருதாததால் ஓடவில்லை.”
தன் மனப்பாங்கினால்தான் மனிதன் அடிமை ஆகிறான்.அதை மாற்றினால்தான் அவன் விடுதலை பெறமுடியும்.

Courtesy: http://jeyarajanm.blogspot.in

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்து மது இல்லாத மாநிலமாக மாற்றினால் எப்படி இருக்கும் நம்ம ஊர்….???

1. 20 சதவீத குடிகாரர்களுக்கு கை நடுங்கும்
2. சாக்கனாக் கடையில் அதிக விலை என்று புலம்பத்தேவையில்லை
3. சிக்னலில் போலீசார் வாயை ஊத சொல்ல மாட்டாங்க
4. பொஞ்சாதிக்கு பம்பீட்டு வீட்டுக்குள் போகத்தேவையில்லை
5. பக்கத்து வீட்டுக்காரனிடம் சண்டைக்கு போவது குறையும்
6. மப்புல மனைவியிடம் அடி வாங்கியவர்கள் இனி தப்பித்துக்கொள்ளலாம்
7. ஞாயிற்றுக்கிழமை போலீசார் அரசு மருத்துவமனை டாக்டர்ஸ் நிம்மதியாக இருப்பார்
8. எப்ப வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் தைரியமாக இரத்தம் வாங்கலாம்…
9. ஓவராக்குடிச்சு ரோட்டோரம் மட்டையாவது இருக்காது..
10. பேருந்தில் பயணம் செய்யும் போது சரக்கடித்தவர் நாற்றம் தாங்கமுடியாமல் தவிர்த்து நிற்போம் இனி அது இருக்காது…
11. பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா சுற்றுலா செல்வது அதிகரிக்கும்…
12. அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும்.
13. காதல் தோல்வியில் சிக்கியவர்கள் மாற்று வழி இன்றி அலைவார்கள்

Sathish Sangkaviக்கு தோணியது இவ்வளவுதான்… மேலும் இருப்பதை சொல்லுங்க

வாலிப வயோதிக அன்பர்களே, இன்னிக்கு எல்லாரும் சாப்பிடுறோமோ இல்லியோ எடையை (இடை இல்லீங்கோ…) குறைக்கனும்னு கவலைப்படுறோம். கண்ட கண்ட வைத்தியர்கள்கிட்ட போய் லேகிய உருண்டை வாங்கி சாப்புடுறது, கண்ட கண்ட சூப் குடிக்கிறது, ஜிம்முக்கு போறது, வாக்கிங் போறது, பட்டினி கெடக்கறது, இப்படியெல்லாம் பாடுபடுறாங்க. இதுனால எல்லாம் எடை குறையுதோ இல்லியோ பாடி ரொம்ப அடிவாங்கிடுது. இதிலேயும் எந்தக் கஷ்டமும் படாம நோகாம எடை மட்டும் குறையனும்னு திரியறவனுங்க நிறைய பேரு இருக்கானுங்க. இவங்க எல்லாருக்கும் ஒரு நற்செய்தி….

ஆமாங்க நற்செய்திதான், எந்த கஷ்டமும் படாம, சாப்பாட்டை குறைக்காம, எக்சர்சைஸ் எதுவும் பண்ணாம வெறும் ஒரு மணி நேரத்துல உங்க எடையை குறைக்க வழி வந்தாச்சு. காசு வேணாம், பணம் வேணாம், சும்மா நான் சொல்ற மாதிரி மட்டும் பண்ணா போதும் உங்க எடை குறைவது நிச்சயம். வீட்ல சொந்தமா ஒரு எடை பார்க்கும் மெசின் ஒண்ணு வாங்கி வெச்சுக்குங்க.
முதல்ல உங்க எடையை நைட்டு சாப்பாடு முடிஞ்சதும் செக் பண்ணி ஒரு நோட்புக்ல எழுதி வைங்க.
அடுத்து காலைல எந்திரிச்சதும், வெறும் வயித்துல (தண்ணி கூட குடிக்கப்படாது!) கீழ சொன்ன மாதிரி வரிசையா செய்யனும்….
1. போய் முடிய வெட்டிட்டு வாங்க
மொட்டை போட விரும்புபவர்கள் தாரளமா போட்டுக்கலாம். அது உங்க வசதிய பொறுத்து. (ஏற்கனவே வழுக்கையாக இருப்பவர்கள் கவனிக்க: நீங்க எதுவுமே செய்ய முடியாதுன்னாலும் சும்மா சலூனுக்கு போய் மெசினை ஒரு ரவுண்டு மண்டைல ஓட விட்டுட்டு வாங்க சார்)
2. கை கால் நகத்த வெட்டுங்க
ஒரு நகம்கூட பாக்கி இல்லாம வெட்டிப்புடனும். அழுக்கு எதுவும் இருந்தாலும்  கிளீனா கழுவிடுங்க.
3. கக்கூஸ் போய்ட்டு வாங்க
இது ரொம்ப முக்கியம். அதுனால கக்கூஸ்ல உக்காந்து முக்கியாவது போய்டுங்க. அப்படியும் வராதவங்க வெளக்கெண்ணை மாதிரி எதையாவது ட்ரை பண்ணலாம். மொத்ததுல போய்டனும் அதுதான் முக்கியம்.4. குளிங்க
ஆமா வேற வழி இல்ல குளிச்சித்தான் ஆகனும். சோப்பு போடுவீங்களோ இல்லியோ நல்லா அழுக்கு போற மாதிரி தேய்ச்சு குளிக்கனும். செங்கல் யூஸ் பண்ணா பெட்டர். குளிச்சு முடிச்ச உடனே, ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாம தொடச்சிடனும்.
5. ட்ரெஸ் எல்லாத்தையும் அவுத்துடுங்க
ட்ரெஸ், அண்டர்வேர் (போட்டிருந்தா…) எல்லாத்தையும் ஒண்ணுவிடாம அவுத்துடனும். உடம்புல ஒரு நூல் இருக்கப்படாது. யாருக்கும் தெரியாம பண்ணனுமா இல்ல தனியா பண்ணனுமாங்கறது உங்க சவுகர்யத்த பொறுத்து! வாட்ச், செருப்பு, ஷூ எல்லாத்தையும் கூட கழட்டிரனும்..!

இப்போ நீங்க ரெடியாகிட்டீங்க.

அடுத்து,அதே எடை மெசின்ல உங்க எடையை செக் பண்ணவும்…உங்க எடை நிச்சயமா குறைஞ்சிருக்கும்……

எப்பூடி நம்ம டெக்குனிக்கு………?

இப்போ மறுபடியும் எடை குறையனும்னா மறுக்கா அதே மாதிரி முதல்ல இருந்து பண்ணுங்க…….. ஹி..ஹி…!

இதெல்லாம் ஒரு பதிவுன்னு வந்து…….. சரி விடுங்க…..!

நன்றி: கூகிள் இமேஜஸ் & http://shilppakumar.blogspot.in

அப்புறம் இது கூட உங்களுக்கு உதவும்னு நெனைக்கிறேன்

இவங்க ஏன் இப்படி வண்டி ஓட்டுறாங்க தெரியுமா?

இப்போ

இப்போ  இப்போ

இன்னும் கண்டு பிடிக்க முடியலையா?

அவங்க கிட்ட ரெண்டு சக்கர வாகனம் ஓட்ட தான் licence இருக்காம். அதான்

courtesy: http://www.funtoosh.com

ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான்.அவன் மகாக் கருமி.அந்த ஊரில் பொதுவில் கோவில் கட்டிக் கொண்டிருந்தார்கள்.அதற்கு நிதி பலரிடமும் வாங்கிவிட்டு பணக்காரனிடம் வந்தார்கள்.அவனிடம்  பணம் வசூலிக்க முடியாது என்று பலரும் சொல்லியும் எப்படியும் அவனிடம் வசூலிக்க வேண்டும் என்று சிலர் வந்தனர்.இதுவரை பணம் கொடுத்தவர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டனர்.அதில் பணக்கார்கள் முதல் பாமரர் வரை பணம் கொடுத்த விபரம் இருந்தது.அதை முழுவதும் வாசித்தால் இப்படி அனைத்துத் தரப்பினரும் பணம் கொடுத்திருக்கும்போது தான் மட்டும் கொடுக்காவிடில் ஊரில் அசிங்கம் என்று நினைத்து அவன் எப்படியும் பணம் கொடுத்து விடுவான் என்று நினைத்தார்கள்.அப்படியே அந்த பட்டியலையும் அவனிடம் வாசித்தார்கள்.அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி.வந்தவர்களுக்கு நம்பிக்கை.கோவிலுக்கு எவ்வளவு எழுதப் போகிறீர்கள் என்று அவர்கள் கேட்க அந்தக் கஞ்சன் சொன்னான்,”நீங்கள் எண்ணப் புரிந்து கொள்ளவில்லை.நான் இதுவரை பல வகையில் பொருள் சேர்த்துள்ளேன்.இப்போது நீங்கள் எனக்குப் புது வழி காண்பித்து விட்டீர்கள்,” வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழிக்க அவன் தொடர்ந்தான்,”இது வரை நான் பிச்சை எடுத்து பொருள் சேர்த்ததில்லை.இப்போது இந்த ஊரில் பிச்சை போட நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.அதை முயற்சி செய்யப் போகிறேன்.தங்கள் ஆலோசனைக்கு நன்றி.”

Courtesy: http://jeyarajanm.blogspot.in

ஒரு மனிதன் ஒரு காரை ஓட்டுவதுபோல கற்பனையான ஸ்டீரிங்கை
இயக்கிக் கொண்டு காலை ஆக்சிலேடரை மிதிப்பதுபோல பாவனை செய்து கொண்டே நடந்து வந்தான்.அவனுடன் உதவியாளன் போல ஒருவனும் வந்தான்.முதல் மனிதனின் வித்தியாசமான நடவடிக்கை கண்டு அங்கு ஒரு
கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது.அந்த பரிதாபத்திற்குரிய மனிதனின் நடவடிக்கையைப் பார்த்து கூட்டத்தில் ஒருவர் அந்த உதவியாளரிடம் விபரம் கேட்டார்.அவனும் சொன்னான்,”இவருக்கு கார் ஓட்டுவது என்றால் மிகுந்த ஆசை.நிறையப் போட்டிகளில் கூடக் கலந்து பரிசுகள் வாங்கியிருக்கிறார்.
துரதிருஷ்ட வசமாக அவருக்கு மன நோய் ஏற்பட்டு விட்டது.அதனால் அவரைக் கார் ஓட்ட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.என்றாலும் பழக்க தோசத்தின் காரணமாக தினசரி இங்கு இதேபோல வந்து இந்தக் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு பார்க்குக்குப்போவார்.பிறகு வந்து காரை எடுத்துசெல்வதுபோல
செல்வார்.”கூட்டத்தில் ஒருவர் கேட்டார்,”ஏனப்பா,நீயாவது நிலையை அவருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி இதைத் தடுக்கப் பார்க்கலாமே?”
அவன் உடனே படபடப்புடன் சொன்னான்,”தயவு செய்து சப்தம் போட்டுப் பேசாதீர்கள்.அவர் தினசரி காரை நிறுத்துவது போல் செய்து விட்டு என்னிடம் நூறு ரூபாய் கொடுத்து நன்றாக சுத்தம் செய்து வைக்க சொல்வார்.நானும் அதுபோல நடித்து நூறு ரூபாய் வாங்கி என் பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அதைக் கெடுத்து விடாதீர்கள்.”கூட்டம் வாயைப் பிளந்தது.

courtesy: http://jeyarajanm.blogspot.in

ஒரு நல்லது சொன்னா தப்பா சார் , இப்படி போட்டு தொரத்தி ,தொரத்தி அடிக்கிறானுக
நேத்தைக்கு அயன் வண்டி வந்து துணி இருக்கான்னு கேட்டான் , நானும் என்  வைஃப்  கிட்ட ,
” ஏம்மா அயன் பண்ண துணி இருக்கா?”
“இல்லைங்க “
“அயன் வண்டி வர்றதே ரொம்ப ரேர் , துணி இருக்கான்னு நல்லா பாரும்மா “
‘இல்லைங்க  எல்லாம் துவைக்கணும்”
“ஏம்மா அவன் வந்ததே பெரிசு , நீ ஒன்னுபன்னு  பஸ்ட்டு எல்லா துணியையும் இன்னைக்கு அயன் பன்னிக்க  அப்புறமா துவைச்சுக்க “
“போடா……@#@#@#௬௬௬…………”
ஏய் , ஏய் ………ஸ்டாப் , ஸ்டாப் , ஸ்டாப் …….
என்ன அநியாயம் சார் இது , இப்போ பொம்பளைங்க கூட கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க சார் .
கீழே வர்ற இந்த சின்ன கதையை படிச்சுட்டு சிரிக்காம இருக்கறவங்களுக்கு, 1 குச்சி மிட்டாயும், 3 குருவி ரொட்டியும் இலவசமாக தருவதாக ஒரு அறிவிப்பு வந்துருக்குங்க. நாஸ்தா பிரியர்களுக்கும் நகைச்சுவை உணர்வு மங்கியவர்களுக்கும் ஜமாய்ச்சிட நல்ல ஒரு வாய்ப்பு!  நழுவ விட்டுடாதிங்கோ!! சமீபத்துல மக்கள் மன்றத்துல, அதாங்க பார்லிமெண்ட்ல நடந்த கதை தானுங்க…. இதோ மீதி உங்கள் பார்வைக்கு!
மக்களவையில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் பேசும் போது நம்ம பாக்யராஜ் ஸ்டைல்ல ஒரு குட்டிக் கதையை சொன்னாருங்க. அவர் சொன்ன கதையை அப்படியே நீங்களும் கேட்டுக்கோங்க…
”அதாவது…. ஒரு தந்தை தனது 3 மகன்களிடமும் 100ரூபாயினை தந்து அவருடைய அறை முழுவதும் நிரம்பும் படியான பொருளை வாங்கிட்டு வரச் சொன்னாருங்க.   உடனே அவரோட முதல் மகன் ஏதோ ஒன்னு வாங்கி வந்தாருங்க. ஆனா, அது ஒரு குட்டி கப்போர்டு சைஸைக் கூட நிரப்பலிங்க.  உடனே இரண்டாவது மகன், இலவம் பஞ்சா வாங்கி வந்து அறை முழுவதும் நிரப்ப பார்த்தாருங்க.  ஆனாலும்  அந்த முயற்சியும் அவுட்டாகி போச்சுங்க.  மூணாவது மகன் நேரா கடைக்கு போயி ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கிவந்து தந்தையோட அறையில ஏத்துனாரு பாருங்க… உடனே வெளிச்சம் பளிச்சுன்னு அறை முழுவதும் நிரம்பிடுச்சு!
இந்தக் கதையை சொல்லிட்டு கம்பீரமா அவை உறுப்பினர்களை பார்த்துகிட்டு, தன் தொண்டையைக் கனைச்சுகிட்டு அந்தக் காங்கிரஸ் எம். பி, கொஞ்சம் எம்பி தன்னோட மாஸ்டர் பீஸை சொறுவுனாரு பாருங்க…
“இந்தக் கதையில வர்ற மூணாவது மகனைப் போல தான் நம்ம பிரதமர் மன்மோகன் சிங். அவர் பதவியேற்ற நாளிலிருந்து நம் இந்தியா முழுவதும் ஒளிவீசத் தொடங்கிவிட்டது!
இத சொல்லி முடிச்சுட்டு அப்பளத்துக்காக, சாரி அப்ளாசுக்காக காத்திருந்தவருக்கு கடைசிபெஞ்சு வழியா ஒரு ஆப்புதாங்க வந்தது.  அது என்னான்ன….
கடைசி பெஞ்ச்:  “அடுங்கொய்யால….  பாக்கி 99ரூபாய் எங்கலேய் போச்சு…?”
ஹி. ஹி… இந்தக் கதையை மின் அஞ்சல் வழியாக எனக்கு கிச்சு கிச்சு மூட்டி ஒரு குச்சி மிட்டாயும் 3 குருவி ரொட்டியும் தர விடாம பண்ணின நண்பர்திரு. ஜெயராமன் அவர்களுக்கும், இதனை வடிவமைத்த மூலகர்த்தாவிற்க்கும்ஒரு பெரிய கும்புடு போட்டுகிட்டு நன்றியும் சொல்லிகிட்டு நான் நடையைக் கட்டறேனுங்கோ…

வழக்கமா நாலு உதை விட்டாலும் ஸ்டார்ட் ஆவாத பைக்(பெரும்பாலும் சாவி போட்டு இருக்க மாட்டேன் இல்லாட்டி சாவியை ஆன் பண்ணி இருக்க மாட்டேன் நோ நோ.. இதுக்கெல்லாம் பிளக்ஸ் பேனர் ரோம்ப ஓவர்) இன்னிக்கு ஒரே உதையில ஸ்டார்ட் ஆயிடிச்சி.

ஹோட்டல்ல போயி சட்னி கேட்டா சட்னி இல்ல கிட்னி வேணுமான்னு கேப்பானுங்க.. இன்னிக்குன்னு பாத்து சார் தேங்கா சட்னி,தக்காளி சட்னி, புதினா சட்னி எது வேணுமான்னு கேக்குறாங்க.

பசி உயிரை போவுற அன்னிக்கு நமக்கு முன்னாடி கியூவுல பத்தாயிரம் பேரு நிப்பான் அதுவும் நமக்கு முன்னாடி இருக்குறவனுக்கு கவுண்டர் கிட்ட வந்த அப்புறம் தான் எதை திங்கலாமுன்னு ஆராய்ச்சி செய்யுற ஆசையோ இல்ல இதை எப்படி செய்து இருப்பாங்க அதை எப்படி செய்து இருப்பாங்கன்னு டவுட் வந்து கவுண்டருல இருக்குறவன் கிட்ட கேள்வியா கேட்டு கொலையா கொல்லுவான்.. அதுவும் இல்லாட்டி அவனுக்கு தெரிந்த ஒரு பத்து பேரு வந்து எனக்கு சேத்து வாங்குடான்னு அவன் கிட்ட இருக்குற ஆயிரம் பக்க லிஸ்ட் பத்தாதுன்னு இவனுங்க ஒரு ஆயிர ஆயிட்டம் சொல்லுவானுங்க ஆனா இன்னிக்குன்னு பாத்து எல்லா கவுண்டரும் காலியா இருக்கு வசந்த் & கோ மாதிரி வாங்க வாங்கன்னு வரவேற்ப்பு வேற

வழக்கமா வங்கியில போயி விண்ணப்பம் இல்லைன்னு சொன்னா யோவ் அங்க தான் இருக்கும் போயி ஒழுங்கா பாருயான்னு அன்பா சொல்லுவாரு, ஆனா இன்னிக்கு பாருங்க ஒரு ஆபீசர் பணிவா வந்து பாத்து எடுத்து குடுக்குறாரு. கையெழுத்து போடுற இடத்துல இருந்த மல்லு ஆன்டி என்ன கோர்ஸ் படிக்கிறீங்க, நல்ல கோர்ஸா இருக்கேன்னு ஒரு ரெண்டு மூணு நிமிஷம் கடலை போட்டு கஸ்டமர் சேடிஸ்பேக்‌ஷனை வேற இம்ப்ரூவ் பண்ணுது.

நமக்கு தேவைன்னு வரும் பொழுது.. cartridge காலி ஆவுறது, பேப்பர் தீர்ந்து போவுறது, நடுவுல வேலை செய்யாம போவுறதுன்னு கெத்த காட்டும் பிரிண்டரு இன்னிக்கு பிரிண்ட் பட்டனை தட்டின உடனே சும்மா பள பளன்னு பிரிண்ட் அவுட்டு எடுத்து குடுக்குது.

இதெல்லாம் நல்லதுக்கா இல்ல பெரிய ஆப்போட சின்ன ஆரம்பமான்னு நெனைச்சிட்டே இருந்தா பின்னாடி ஒரு குரல் டேய் எருமை பத்து மணி ஆச்சி ஆபீசுக்கு போவாம அப்படி என்ன தூக்கமுன்னு, ஸ்யப்பா நல்ல வேளை கனவா போச்சி..இந்த மாதிரி பிரச்சனை இல்லாத உலகத்துல பிரச்சனையை fancy banianனா போட்டு பொங்கிட்டு இருக்குற நம்மால உயிர வாழ முடியுமா என்ன?

வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. உடனே குடும்ப தலைவர் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து விளக்கம் கேட்டார்.

அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் பாருங்க இவ்வளவு தொகை வந்து இருக்கு பாருங்க. யார் இதற்க்கு காரணம்?
அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது
மகன்: நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்லாக்பெர்ரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாது அப்பா
இப்போது அனைவைருக்கும் ஒரே அதிர்ச்சி. நாம் யாரும் உபயோக படுத்தலன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க. அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான்: உங்கள மாதிரி தான் நானும். என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன். என்ன தப்பு?
நீதி: சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதே இல்ல வேறொருவர் நமக்கு அத செய்யும் வரை.

ஆங்கில மூலம்: http://rammalar.wordpress.com

” ஒரு மனுஷனுக்கு எந்த கஷ்டம்
வேணாலும் வரலாம்.. – ஆனா…

பொங்கி வர்ற சந்தோஷத்தை
Control பண்ணிட்டு சோகமா
இருக்குற மாதிரி ஆக்ட் குடுக்குற
நிலைமை மட்டும் வரவே கூடாது…! ”

சரி., நாம மேட்டர்க்கு போவோம்..

எங்க மாமனார் வீட்ல நானும் ,
என் சகலையும் ஒரு கோடு கிழிச்சா…
அதை யாரும் தாண்ட மாட்டாங்க..

( அது மேலயே நடந்து போவாங்க..
அது வேற விஷயம்..)

போன வாரம் என் மச்சானுக்கு
பொண்ணு பார்க்க போயிருந்தோம்..

பொண்ணை பாத்துட்டு.. எல்லோரும்
டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க..

ஆனா எங்க ரெண்டு பேரையும்
கண்டுக்கவே ஆள் இல்ல.. நாங்களும்
என்ன தான் பண்றாங்கன்னு வேடிக்கை
பாத்துட்டு இருந்தோம்.. ( வேற வழி..?! )

கொஞ்ச நேரம் கழிச்சி., என் மச்சான்,
என் சகலை Wife, என் Wife மூணு பேரும்
எங்க கிட்ட வந்து..

” ஏங்க பொண்ணு ஓ.கேவா..? ”

” மாப்ள பக்கத்துல தானே இருக்கான்..
அவனை கேளுங்க…! ”

” இந்த லூசு.. நீங்க ரெண்டு பேரும்
ஓ.கே சொன்னாதான் ஓ.கேன்னு
சொல்லிடுச்சு..! ”

( ஆஹா.. தெய்வ மச்சான்..! )

இதை கேட்டதும் நான்…

” இப்படி டக்னு கேட்டால்லாம் எங்களால
பதில் சொல்ல முடியாது.. ஒரு வாரம்
டைம் வேணும்..! இல்லியா சகலை..”

” என்னாது ஒரு வாரமா..? ” எங்க மச்சான்
டென்ஷன் ஆகிட்டான்..

இப்ப என் சகலை திருவாய் மலர்ந்தாரு..

” ஒரே நாள்ல முடிவு பண்ணி., எங்களை
மாதிரி நீயும் மாட்டிக்க கூடாதுல்ல..
அதுக்குதான் ஒரு வாரம் டைம் கேக்கறோம்..
அப்படித்தானே சகலை…?! ”

( ஆஹா.. கோத்து விட்டுட்டான்யா..! )

ஹும்ம்.., இப்ப பதிவோட
முதல் ரெண்டு வரியை
மறுபடியும் படிச்சிக்கோங்க..
.
.

Courtesy: http://gokulathilsuriyan.blogspot.in

அது ஓர் அழகிய பனிக்காலம்.
ரவியும் சீதாவும் ஸ்கூலுக்கு போய்கிட்டு இருந்தாங்க. ரெண்டு பேரும்  ஒரேகிளாஸ் . படிப்பில் ரெண்டு பேருமே ரொம்ப கெட்டி. ஆனா, அவங்க ரெண்டு பேருக்குள்ள, யார் ஒசத்தின்னு  அடிக்கடி சண்டை வரும்.    அதை நிரூபிக்க, இருவரும் போட்டி போட்டுக்கிட்டு  படிப்பாங்க. அன்னிக்கும்  அப்படித்தான் ரவியும் சீதாவும் பேசிக்கிட்டு இருக்கும்போது, அவங்களுக்கிடையே சண்டை வந்துச்சு.

ரவி சொன்னான், “”நான்தான் உன்னை விட அறிவில் சிறந்தவன்” என்று.
ஆனா சீதாவோ “நிச்சயமா இல்லை… நாந்தான்” என்று  பதிலடி குடுத்தா. அவங்கவங்க தன்னோட  வீர தீர பிரதாபங்களை சொல்லிக்கிட்டு இருந்தாங்க.  இதே ரீதியில் பேச்சு வளர்ந்து சண்டை முத்தி போச்சு.

அப்போ, திடீர்ன்னு  அவங்க  முன்னாடி   ஒரு அழகிய தேவதை  வந்தாங்க. தேவதையைக் கண்ட ரெண்டு பேரும் என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு நின்னாங்க.  ரெண்டு பேரும்  சுதாரித்துக்கொண்டு, “”நீங்க யாரு?ன்னு கேட்டாங்க.

தேவதை அவங்ககிட்ட, “”நான் தேவலோகத்து பெண். இந்த வழியாகத்தான் தினமும் பறந்து உலகத்தை சுத்தி பார்ப்பேன்… இன்னிக்கும் அந்த மாதிரி போறப்போ நீங்க  சண்டை போடுறது கேட்டது. உங்க சத்தம்  தாங்க முடியாம  இறங்கி வந்தேன்” ன்னு சொல்லிச்சு.

பின், “”உங்க ரெண்டு பேருக்குள் என்ன பிரச்சினை? என்கிட்ட சொல்லுங்க.. முடிஞ்சா தீர்த்து வைக்குறேன்”ன்னு சொல்லிச்சு..

உடனே ரவி, “”தேவதையே! இவளைவிட நான்தான் அறிவில் சிறந்தவன் ன்னு சொன்னா, இவ  ஒத்துக்க  மாட்டேங்கிறா” என்றான்.

“”ஒண்ணும் கெடையாது… நாந்தான் இவனை விட அறிவாளி…” என்று சீதா சொல்ல, ரவி மறுக்க, சூடான விவாதம் மீண்டும் தொடங்கியது.
இதைக் கண்ட தேவதை வருந்தியது. ஒரு கணம் யோசித்தது.

“”சரி, சரி… உங்கள சண்டையைகொஞ்சம்  நிறுத்துறீங்களா? இதுக்கு  நான் ஒரு வழி செய்கிறேன்” என்று கூறியது.

“”உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறீர்களோ, அவங்கதான் அறிவில் சிறந்தவர்” என்று கூறி, “”உங்களுக்கு இதில் சம்மதமா?”ன்னு  கேட்டது.

ரவியும் சீதாவும் “சம்மதம்’ ன்னு தலையாட்டினாங்க.

உடனே போட்டி என்னன்னு  தேவதை அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தது. “”நான் உங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு குடுவை தரேன். இது பனிக்காலம்.  அந்தக் குடுவையில் ராத்திரி பெய்யுற  பனித்துளிகளைச் சேர்த்து வைக்கனும்.  ரெண்டு பேரில் யார் அதிகமா  சேக்குறாங்களோ அவரங்கதான் இந்தப் போட்டியில் ஜெயிச்சவங்க”ன்னு  தேவதை சொல்லிச்சு.


“”ஆனால் ஒரு கண்டிஷன். இந்த நிமிசத்திலிருந்து போட்டி முடியுற வரை நீங்க ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்குறதோ,  பேசிக்குறதோ கூடாது. நான் நாளைக்கு சாயந்தரம் இதே நேரத்துக்கு மறுபடியும் இங்க வரேன். இதே மைதானத்தில எனக்காகக் காத்திருங்க”ன்னு சொல்லி, மூடியில்லாத ரெண்டு குடுவைகளை அவங்ககிட்ட கொடுத்துட்டு மறைஞ்சுடுச்சு.

ரெண்டு பேரும் குடுவையுடன் அவங்கவங்க  வீட்டுக்கு போய்ட்டாங்க.  சூரியன் மறைஞ்சு,  இரவும்  வந்தது. கொஞ்ச  நேரத்துல பனியும் கொட்ட ஆரம்பிச்சுச்சு.  ரவி குடுவையை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு போனான்.  திறந்தவெளியில் வச்சுட்டு, தூங்க போய்ட்டான். ஆனா, தூக்கமே வரலை. அடிக்கடி போய் குடுவையில் பனித்துளிகள் சேர்ந்துச்சான்னு  பார்த்துக்கிட்டே இருந்தான்.

சீதாவும் அவளது வீட்டின் முன்னாடி  உள்ள புல்தரையில குடுவையை வச்சுட்டு அடிக்கடி  பனித்துளியின் அளவைப் பார்த்துக்கிட்டேயிருந்தா. “நாளைக்கு எப்படியாவது ரவியை ஜெயிக்கணும்’ன்ற நினைப்பிலேயே  தூங்கிப்போனாள்.

மறுநாள் பொழுது விடிந்தது…,

சீதாவும், ரவியும் போய்  அவங்கவங்க குடுவையைப் பார்த்தங்க. ஓரளவுக்கு இருவரது குடுவையிலும் பனி நிறைந்திருந்தது. ஆனால் ரவியின் குடுவையில் இதை விட அதிகம் இருக்குமோ?ன்னு  சீதாவும், சீதாவின் குடுவையில் அதிகம் இருந்தா என்ன செய்றதுன்னு ரவியும் நினைச்சங்க. 

மதியத்துக்கு மேல ரெண்டுபேரும் மைதானத்துக்கு தேவதையைப் பார்க்கக் கிளம்பினர். அப்போத மற்றவரது குடுவையில் அதிகமாக இருந்தால் நாம தோத்துபோய்டுவோமேன்னு  ரெண்டு பேருமே நினைச்சதால, குடுவை நிறையத் தண்ணியை ஊத்தி  எடுத்து போனாங்க.

மைதானத்தில ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காம குடுவையை மறைச்சபடி காத்திருந்தனர். மாலை ஆனதும் தேவதை வந்தது.

“”சரியாக வந்துட்டீங்களே! எங்கே உங்க குடுவையைக் காட்டுங்க” என்று குடுவைகளை வாங்கிப் பார்த்தது.

பின்னர் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தது தேவதை. இதைக் கண்ட இருவரும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு ரவி கேட்டான், 
“”ஏன் இப்படிச் சிரிக்கிறீங்க?”ன்னு…,

அதுக்குப் பதில் சொல்லாம மீண்டும் சிரித்த தேவதை, “”பனித்துளின்னா  என்ன தெரியுமா உங்களுக்கு? மேலே உள்ள நீராவியின் மேல் குளிர்ந்த காற்றுப் படும்போது, அது பனித்துளியாக மாறுகிறது. அந்தப் பனித்துளி மீது நல்ல வெயில் படும்போது, அது மீண்டும் நீராவியாகிடும். அப்படிப் பார்த்தால் நீங்கள் மதியத்திலிருந்து இங்கே காத்திக்கிட்டு இருக்கீங்க. என்னதான் குடுவையில் பனித்துளி சேர்ந்திருந்தாலும் இந்த வெயிலில் கொஞ்சமாவது ஆவியாகியிருக்கும். மீதிக் கொஞ்சம்தான் குடுவையில் தங்கியிருக்கும். ஆனால் உங்கள் இருவரது குடுவையும் நிரம்பி வழியுதே!  எப்படி? இதைப் பார்த்து சிரிக்காமல் என்ன செய்யட்டும்?” ன்னு கேட்டுச்சு.

“”இப்போ சொல்லுங்க…. உங்களில் அறிவில் சிறந்தவர் யார்ன்?” ன்னு அவர்களைப் பார்த்துக் கேட்டது தேவதை.

இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகவிழ்ந்து நின்றனர்.

“”பார்த்தீங்களா? இது நம்ம வாழ்வில் தினமும் நிகழும்  சாதாரண 
ஒரு நிகழ்வு. இதைக்கூட நீங்க  தெரிஞ்சுக்கலை. உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். இந்த உலகில் எல்லாமே தெரிந்தவர்கள், புத்திசாலிகள்ன்னு யாருமே இல்லை. இந்த உலகத்தில உள்ளவர்கள் கற்றுக்கொண்டது வெறும் கையளவு மட்டுமே. கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்ளத்தான் நீங்க முயற்சிக்கனுமே தவிர, இப்படி வீணா சண்டை போட்டுகிட்டு, உங்க எனர்ஜி, நேரம்லாம் வீணாக்கிட்டு இருப்பது எந்த வகையில்   எவ்வகையில் சரியாகும்?”ன்னு கேட்டது தேவதை.

அதைக் கேட்ட இருவரும் தம் தவறை உணர்ந்து, “”எங்களை மன்னிச்சுடுங்க. நாங்க இனிமேல் இதுபோன்ற தவறுகளை செய்யமாட்டோம்” ன்னு சொன்னாங்க.

பின் தேவதை அவங்களைப் பார்த்து, “”உங்களுக்கு ஏதாவது பரிசு தர விரும்புகிறேன். என்ன வேண்டும்? கேளுங்க” ன்னு சொல்லிச்சு.

“”நீங்கள் கொடுத்த இந்த அறிவுரையே எங்களுக்கு விலைமதிக்க முடியாத பரிசு”ன்னு  ஒரே குரலில் சொன்னாங்க.

“”உங்க பரிசை எங்களது ஃப்ரெண்ட்ஸ்களுக்கும் கொடுத்து, அவர்களையும் நல்வழிப்படுத்துவோம்”ன்னு சொன்னாள் சீதா.

“”மாணவர்களாகிய நீங்கதான் இந்த பூலோகத்தின் தூண்கள். தன்னம்பிக்கையும் தன்னடக்கமும் கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்” என்று கூறி மகிழ்ச்சியுடன் மறைந்தது தேவதை.

ரவியும் சீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கிட்டாங்க…, உண்மையான நட்புடன்.டிஸ்கி: இன்னிக்கு என்ன பதிவு போடலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ என் பையன் அப்பு, கம்யூட்டர் ஷார்ட் கீ கண்டுபிடிக்க சொல்லி ஒரு புதிர் பதிவு போடும்மான்னு சொன்னான். இதெல்லாம் போட்டால் யாரும் படிக்க மாட்டாங்க. எனக்கு எல்லாம் தெரியும் நீ போடான்னு சொன்னேன். அப்போ இந்த கதையை சொல்லி, ”கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு” அதனால, ரொம்ப அலட்டிக்காதன்னு சொன்னான். கதையும் நல்லா இருந்துச்சு. அந்த கதையே ஒரு பதிவாக்கிட்டேன்.

அப்பாவி நண்டும் பொல்லாத தேள்கள் இரண்டும்

அந்த நண்டுக்கு ஒரு தேளுடன் கலியாணம் ஆனது ; அதெப்படி என்று யோசிக்காமல் மேலே படிக்கவும்.

இரண்டு பேரும் மிகவும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்தனர்.. அதன் அடையாளமாகவும் இந்த விநோத தம்பதியினரின் மகிழ்ச்சியாகவும் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.. அதுவும் தேளாகவே இருந்தது.. இந்த குடும்பமானது ஒரு வலையில் குடியிருந்தது.

சின்னத் தேளானது மிகவும் மகிழ்ச்சியாகவும் , பெரிய தேள், நண்டு இவற்றின் பராமரிப்பில் மிகவும் செல்லமாகவும் வளர்ந்தது. ஆனாலும் சின்னத் தேளுக்கு ஒரு குறையிருந்தது.. தினசரி இரவு தூங்கப் போகும் போது, நண்டிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்தது.. காரணம் ஒன்றும் பெரிசில்லை.. அந்த நண்டானது கொழுத்த உடம்பு கொண்டதாக இருந்தபடியால் தூங்கும் போது சின்னதாக குறட்டை ஒலி எழுப்பி தூங்குவதை வழக்கம் கொண்டிருந்தது.. இதனால் தனது தூக்கம் கெடுவதாகவும் சின்னத் தேளானது பெரும் சண்டை போடத் தொடங்கினது.. பெரிய தேளானது இந்த சங்கதியில் சின்னத் தேளுடன் ஒத்துப் போவதாகவே இருந்தது..

இந்த இரண்டு தேள்களும் சேர்ந்து கொண்டு, அந்த அப்பாவி நண்டை நடு நிசியில் எழுப்பி குறட்டை ஒலி எழுப்பாமல் தூங்கும் படிக்கு வற்புறுத்துவதும், அந்த அப்பாவி நண்டு தூக்கம் கலைந்து அழுவதுமாகத் தொடர்ந்தது

இந்தக் கதையினை மேலே தொடர்ந்து எழுதுவதற்குள் ஒரு ஃபோன் கால் வந்தது.. அதனைக் கவனித்து வருவதற்குள் , இதனை என் மனைவி படித்து விட்டு பெரிய தேள், சின்ன தேள் என்பது விருச்சிக ராசிக்காரர்களான அவளையும் என் மகளையும் குறிப்பதாகவும் , நண்டு என்பது கடகராசியான என்னை சொல்வதாகவும் சண்டைக்கு வந்ததோடு, கதையின் தலைப்பை பொல்லாத நண்டும், அப்பாவி தேள்களும் என்று மாற்றும்படி சொல்கிறாள்

என்ன செய்யலாம் நீங்கள் சொல்லுங்கள்

G+ இல் Chandramowleeswaran. V

தங்கமணி: ஜவ்வரிசி வாங்கிட்டு வந்தோம்ல

ரங்கமணி: ஆமா

தங்கமணி: அதை வச்சி இது வரை ஒண்ணும் செய்யல

ரங்கமணி: என்ன பண்ணலாம்

தங்கமணி: இன்னைக்கு உன் ஃப்ரண்ட் xxxxxக்குப் பொறந்தநாளுல்ல

ரங்கமணி: ஆமா

தங்கமணி: அதனால பாயசம் செய்றேன், ஆஃபிஸ் முடிஞ்சு வந்து அவருக்குக் கொண்டு போய் கொடு

ரங்கமணி: சரி ஒகே. என்ன திடீர்னு என் ஃப்ரண்ட் மேல இவ்வளவு அக்கறை?

தங்கமணி: உன் தம்பி yyyy ஊருக்குப் போனதுலேர்ந்து நம்ம சமையலை டெஸ்ட் பண்ண ஒரு சரியான ஆடு கிடைக்கல. இன்னைக்கு xxxxx தான் அந்த ஆடு

#மனைவி அமைவதெல்லாம் _____________

Courtesy: கேவி ஆர்

தொப்பி வியாபாரி.. குரங்குகள் தொப்பி தூக்கிக் கொண்டு ஓடின.. வியாபாரி தான் போட்டிருந்த தொப்பி கீழே போட்டார் எல்லாக் குரங்குகளும் தொப்பியைத் தூக்கி எறிந்தன.. இப்படியான படக் கதை எல்லோருமே சின்ன வயசிலே பாடப் புத்தகத்திலே படித்திருப்போம்

ஏன் குரங்கு இப்படி செய்ய வேண்டும்

சார்லஸ் டார்வின் ஒருதரம் குறிப்பிட்டாராம் : யாராவது ஜேவலின் த்ரோ போட்டியில் வேலை எறிவதைப் பார்க்கும் போது, நம்மை அறியாமல், நாமும் முட்டியை அவர் போலவே செய்வதுண்டு, அதே போல் கத்திரிக்கோலை வைத்து யாராவது எதையாவது வெட்டும் போது, அதைப் பார்ப்பவரின் தாடை இறுகியும் பின்னர் தளர்வதுமுண்டு

சினிமாவிலே வரும் உணர்ச்சிக் காட்சிகளில், பார்ப்பவர்களுக்கு கண்ணீர் வருவது

Giacomo Rizzolatti என்பவரின் ஆராய்ச்சிகளைப் பற்றி வாசிக்க நேர்ந்தது ( உபயம் : The Tell Tale Brain என்ற புத்தகம்… இந்தப் புத்தகத்தை நாலு தரம் முழுசாக வாசித்து விட்டேன்.. அங்கிருந்து மேலும் வாசிக்க வேணும் என்பதான சங்கதி Giacomo Rizzolatti பத்தினது)

மிரர் நியூரான் என்பதைக் குறித்த இவரது ஆராய்ச்சி, தொடர் ஆராய்ச்சி அதன் விபரங்கள் ரொம்பவுமே வசீகரிக்கிறது

Giacomo Rizzolatti பத்தின விபரம் ( போன் நம்பர் , இமெயில் ஐடி உட்பட http://www.unipr.it/arpa/mirror/english/staff/rizzolat.htm இங்கே சிக்குகிறது)..

இங்கே அவரின் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பிடிஎப் கிடைக்கிறது

“அப்படி என்ன கண்ணு விரிய இத்தனை காலங்கார்த்தால எழுந்து எல்லார் தூக்கமும் கெடுத்து லைட் போட்டுண்டு படிச்சாறது”

ரொம்ப ஆர்வமாக என் கேட்ட என் மனைவிக்கு விளக்கம் சொன்னேன்

“எனக்கு இப்போது டீ வேண்டும்,, எதோ பொஸ்தகம் அலமாரிலேர்ந்து எடுத்து வரச் சொல்லப் போறன்.. இது மாதிரி என் இன்டென்ஷன் எல்லாம் என்னோட ஆக்டிவிடிலேர்ந்து உன் மூளைல இருக்கிற மிரர் நியூரான் பண்றதாம்.. மிரன் நியூரான்ன்னா என்னான்னா…… ” நல்ல விளக்கமா சொன்னேன்

“எல்லா பொண்ணுங்களுக்கும் அப்படின்னா இந்த மாதிரி மிரர் நியூரான் ஜாஸ்தி இருக்குனு சொல்லுங்கோ”

“அது தெரியலம்மா ஆனா ராமசந்திரன் பொஸ்தகத்திலே வேற மாதிரி போட்டிருக்கு”

“என்ன போட்டிருக்கு”

“மனுஷாளை விட சிம்பன்சி, ஒரங்குட்டான் மாதிரி பிராணிகளுக்குத் தான் மிரர் நியூரான் ஜாஸ்த்தியாம்”

எனக்கு ரிஃப்ளெக்ஸ் போதவில்லை.. வேகமாக எறியப்படும் கரண்டி முன் நெற்றியில் படாமல் விலகிக் கொள்ளத் தெரியவில்லை

Courtesy: G+ Chandramowleeswaran. V

ஒருத்தன் இண்டர்வ்யூ போனானாம். ஆஃபீஸர் டேபிள்மேல துப்பாக்கிய வெச்சு, ‘நெக்ஸ்ட் ரூம்ல உன் பொண்டாட்டி இருக்காங்க. அவங்களை ஷுட் பண்ணினா, உனக்கு இங்க ஒரு லட்சம் சம்பளத்துல வேலை’ன்னாராம்.

”பொண்டாட்டியக் கொன்னு, கிடைக்கற வேலை வேணாம்”ன்னுட்டு போய்ட்டான் அவன்.

ரெண்டாவது வந்தவன்கிட்டயும், ஆஃபீஸர் அதையே -நெக்ஸ்ட் ரூம்ல உன் பொண்டாட்டி இருக்காங்க. அவங்களை ஷுட் பண்ணினா, உனக்கு இங்க ஒரு லட்சம் சம்பளத்துல வேலை – சொன்னார். அவன் துப்பாக்கிய எடுத்துட்டு நேரா அந்த ரூமுக்குப் போனான். அங்க அவனோட மனைவி நின்னுட்டிருந்தாங்க. அவங்க முகத்தைப் பார்த்ததும் மனசு மாறி, துப்பாக்கியை ஆஃபீஸர்கிட்டயே குடுத்து ‘போய்யா – நீயும் உன் வேலையும்’ன்னுட்டுப் போய்ட்டான்.

மூணாவது ஒருத்தன் வந்தான். அவன் பொண்டாட்டி, நெக்ஸ்ட் ரூம்ல இருந்தாங்க. அவன்கிட்டயும் ஆஃபீஸர் அதைச் சொன்னார். அவன் துப்பாக்கியத் தூக்கீட்டு அந்த ரூமுக்குப் போனான்.

கொஞ்ச நேரத்துல அந்த ரூம்லேர்ந்து அவனோட மனைவி ‘ஐயோ.. அம்மா’ன்னு அலர்ற சத்தம்.

ஆஃபீஸர் ஓடிப் போய்ப் பார்த்தார். மனைவி தலைல ரத்தம் ஒழுகுது. வந்த ஆஃபீஸர் ஓடிப்போய்த் தடுக்க, அவன் சொன்னான்:

“சார்…. கொல்லச் சொல்லீட்டு உள்ள புல்லட் வைக்காம குடுத்துட்டீங்க. அதான் திருப்பிப் போட்டுச் சாத்தீட்டிருந்தேன்

Courtesy: பரிசல்காரன் கிருஷ்ணா in G+

இரண்டு கழுதைகள் ரொம்ப நெருங்கி நண்பர்களாக இருந்தன. ஒன்றை ஒரு பெரிய பணக்காரர் வாங்கினார். இன்னொன்றை ஒரு பெரிய வியாபாரி வாங்கினார்.

பணக்காரர் அவரோட கழுதையை அவரோட குழந்தை மாதிரி நடத்தினார். ஆனா வியாபாரியோ அவரோட கழுதையை மோசமா நடத்தினார், சரியா சாப்பாடு போடக் கூட மாட்டார், ஆனா கடுமையா வேலை வாங்குவார்.

சில வருடங்களுக்கு இரண்டு கழுதைகளும் சந்தித்து கொண்டது. இரண்டும் பேசிகிட்டு இருந்தப்ப, பணக்காரரோட கழுதை, தன் நண்பன் படுற கஷ்டத்தை நினைச்சு கஷ்டப்பட்டு சொல்லிச்சு “என் முதலாளியால உன்னை உன் முதலாளிகிட்ட வாங்க முடியும். உனக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கும்”

ஆனா வியாபாரியோட கழுதை சொல்லிச்சு. “வேண்டாம், எனக்கும் அங்க ஒரு நம்பிக்கை இருக்கு”

“என்ன நம்பிக்கை?”

“வியாபாரிக்கு ஒரு அழகான பெண் இருக்கிறாள். அவன் ஏதாவது தப்பு பண்ணும்போதெல்லாம், வியாபாரி அவகிட்ட சொல்வார்- இதே மாதிரி செஞ்சிகிட்டு இருந்தன்னா உன்னை இந்த கழுதைக்கு கல்யாணம் செஞ்சு வச்சிடுவேன்”

G+ இல் மாணவன் சிலம்பு பகிர்ந்து கொண்டது

நல்ல பல பண்புகளைக் கொண்ட ஒரு மருத்துவரும் ஒரு பொறியியலாளரும் தவறாக வாகனத்தை ஓட்டிய போது ஒரு ஆலயத்தின் சுவரில் மோதி இறந்துவிட்டனர். இதில் ஒரு ஆலய பக்கதரும் கொல்லப்பட்டார். ஆலயத்திற்கு சேதம் விளைவித்ததாலும் பக்தரைக் கொன்றதாலும் அவர்கள் இருவரும் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர். நரகத்திற்குச் சென்ற இருவரும் அங்கு தமது சேவையைத் தொடர்ந்தனர். மருத்துவர் அங்குள்ளவர்களின் நோய்களைக் குணப்படுத்தினார். பொறியிலாளர் குளிரூட்டி, மலசல கூட வசதிகள், நல்ல இருப்பிட வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தினார். நரகத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினர்.

கடவுளிடம் நரகம் பல வசதிகளைப் பெறுகிறது என்று யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள். கடவுள் நரகத்தின் பொறுப்பாளியை அழைத்து நரகத்தில் பாவிகள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அங்கு என்ன நடக்கிறது என்று வினவினார். நரகப் பொறுப்பாளி மருத்துவரினதும் பொறியியலாளரினதும் சேவையை விபரித்தார். அப்போது கடவுள் அவர்கள் இருவரையும் என்னிடம் அனுப்பு என்றார். நரகத்தின் பொறுப்பாளி அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டார். அதற்கு கடவுள் அனுப்பாவிடில் உன் மீது வழ்க்குத் தொடருவேன் என்றார். நரகத்தின் பொறுப்பாளி சிரித்துக் கொண்டு சொன்னார். வழக்குப் போடுவதாயின் சட்ட அறிஞர்கள் வேண்டும். அவர்கள் எவரும் உங்களிடம் இல்லை. அனைவரும் என்னிடம் தான் இருக்கிறார்கள் என்றார்.

Courtesy: http://veltharma.blogspot.in

சங்கரன்பிள்ளைக்கும் அவர் மனைவிக்கும் ஒருநாள்
பெரிய சண்டை வெடித்தது. உலக யுத்தம் அளவுக்கு
அது போய் விட்டது.

சங்கரன்பிள்ளை விரக்தியுடன் கால் போன போக்கில்
நடந்தார். ஊர் எல்லையைத் தாண்டி நடந்தார்.

வெகு தொலைவு நடந்த பிறகு ஒரு மரத்தடியில், சாது
ஒருவர் அமர்ந்து இருப்பதைக் கவனித்தார்.
அந்தச் சாதுவின் முகத்தில் அத்தனைச் சந்தோஷம்.
அபார அமைதி.

சங்கரன் பிள்ளை அவரை வணங்கினார்.

“”ஐயா, வீட்டில் என் மனைவி ரொம்பப் பிரச்னை
பண்ணுகிறாள். உட்கார்ந்தால் தப்பு, நின்றால் குற்றம்
என்று வாட்டி எடுக்கிறாள். பேசாமல் இருந்தால்,
ஊமையா என்று கத்துகிறாள். பேசினால், எதிர்த்துப்
பேசுகிறாயா என்று புரட்டி எடுக்கிறாள். நிம்மதி இழந்து
அல்லாடுகிறேன். அவளைச் சமாளிக்க சுலபமான வழி
ஏதாவது இருந்தால், சொல்லிக்கொடுங்களேன்”என்று
பணிவுடன் கேட்டார்.

அந்த சாது சங்கரன்பிள்ளையைப் பரிதாபமாகப் பார்த்தார்.
”அடப்போடா ! முட்டாள் !! எனக்கு அந்தச் சுலபமான
உபாயம் தெரிந்து இருந்தால், நான் எதற்கு இப்படிச்
சந்நியாசம் வாங்கிக் கொண்டு வந்து உட்காரப்போகிறேன் ?”
என்றார்….!

சத்குரு ஜக்கி வாசுதேவ் via: http://rammalar.wordpress.com

ரங்கமணி: “இன்னிக்கி சமையல் என்ன பண்ணப் போறே?”
தங்கமணி: “நீங்க சொல்றதப் பண்ணீட்டாப் போச்சு.”
ரங்கமணி: “பருப்பும் சாதமும் பண்ணீடு.”
தங்கமணி: “நேத்து ராத்திரி தான் பருப்பும் சாதமும் சாப்டீங்க.”
ரங்கமணி: “காலிஃப்ளவர், உருளைக் கிழங்கு கூட்டு?”
தங்கமணி: “கொழந்தைங்களுக்கு அது புடிக்காதே.”
ரங்கமணி: “அப்போ பூரியும் சோளேயும் பண்ணு.”
தங்கமணி: “பூரி சோளே எனக்கு ஒத்துக்கறது இல்லீங்க. ஜீரணமாக மாட்டேங்குதுங்க.”
ரங்கமணி: “முட்டெக்கறி எல்லருக்கும் புடிக்குமே? அதெப்பண்ணு.”
தங்கமணி: “இன்னிக்கி வியாளெக் கெளெமெயாச்சே. எனக்கு விரத நாளு இல்லியா? முட்டெக் கறி எப்படிங்க பண்ணறது?”
ரங்கமணி: “பரோட்டா பண்ணீடேன்.”
தங்கமணி: “ராத்திரிலெ போய் பரோட்டாவா?”
ரங்கமணி: “அப்போ ஹோடல்லேந்து எதுனா வர வழிச்சுடலாம்.”
தங்கமணி: “தினோம் ஹோட்டல் சாப்பாடு வாணாங்க.”
ரங்கமணி: “பின்னெ மோர்க்குழம்பு சாதம் பண்ணீடு.”
தங்கமணி: “தயிர் இல்லியே.”
ரங்கமணி: “இட்லி சாம்பார் பண்ணு.”
தங்கமணி: “அதெப்படிங்க? திடீல்னு சொன்னா இட்லி பண்ண முடியும்? மொத நாளே மாவு அரைச்சு வெச்சாதாங்க இட்லி பண்ண முடியும். இல்லேன்னா அரைச்ச மாவு சாயங்காலமே வாங்கிட்டு வந்திருக்கணும்.”
ரங்கமணி: “மேகீ நூடுல்ஸ் பண்ணீடு.”
தங்கமணி: “நூடுல்ஸ் ஒரு சாப்பாடுங்களா? வயிறு ரொம்பாதுங்களே.”
ரங்கமணி: “அப்பொ என்னதான் பண்ணப் போறே ராத்திரிக்கி சமையல்?”
தங்கமணி: “நீங்க என்ன சொல்லுறீங்களோ அதைப் பண்ணுறேங்க.”

ரங்கமணி: “*?*?*?*? (மனதுக்குள்: கஞ்சி வரதப்பா… கஞ்சியாவது வருமாப்பா?)”

G+ டொனால்ட் ராபர்ட் பகிர்ந்தது

நாட்டில எல்லாரும் பொட்டி தட்டுரவங்கள பத்தி திட்டி கிட்டே இருக்கீங்க. பொட்டி தட்டுரவங்க வாழ்க்கை எப்படி எல்லாம் இருக்கு தெரியுமா?

நம்ம Google கிட்ட கேட்டப்போ கொடுத்தாரு இந்த படங்களை

கடவுள் ஒரு நாள் ஏதோ ஆசையில் ஒரு பாருக்குள் நுழைந்தாராம்.ஏகப்பட்ட வகைகள் இருக்கவும் விற்பனையாளர் இவர் கெட் அப் பார்த்து விட்டு “என்ன வேண்டும்?” என்றார்.

“நல்லதா ஏதாவது குடுப்பா” என்று சொல்ல ஒரு ஃபுல் எடுத்து தந்தார்.
ஐந்து நிமிடத்தில் முடித்து விட்டு அடுத்து என்றார்
இன்னொரு புல் தர அதையும் குடித்து விட்டு அடுத்து என்றார்

இதே போல பத்து முறை குடிக்க பார்டெண்டருக்கே கை வலித்து விட்டது.கடவுள் கொஞ்சமும் சலிக்காமல் அடுத்து என்றார்.பார்டெண்டருக்கு ஆச்சர்யம்,”இவ்ளோ அடிச்சும் கொஞ்சமும் உளரல,குரல் பிசிறாம அடுத்துங்கிறீங்களே,உங்களுக்கு மப்பு ஏறவே இல்லயா?”

கடவுள் பெருமிதமா,”நாந்தாம்ப்பா கடவுள் எனக்கு எப்படி மப்பு ஏறும்”னாரு

உடனே பார்டெண்டர்,”சரி சரி மப்பு ஓவராவே ஏறிடுச்சு போல.”

Courtesy: http://funnyworld-star.blogspot.com

ஆண்கள்நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,”இங்கு தன மனைவியுடன் சொர்க்கம்போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.”

ஒருவனைத்தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,”ஏனய்யா,உனக்குமட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?”

‘என் மனைவிமட்டும் சொர்க்கம் போனால் போதும்’

”ஏன்அப்படிச்சொல்கிறீர்கள்?”

‘என் மனைவிசொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல்தான் இருக்கும்.’

ஒரு முறை மூன்று ஊழல் அரசியல்வாதிகள் தனி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்

ஒருவர் ஒரு நூறு ரூபாய் நோட்டை கீழே போட்டு,”நான் ஒரு இந்தியனுக்கு மகிழ்ச்சியளித்தேன்”என்றார்.
இன்னொருவர் இரண்டு நோட்டுக்களைக் கீழே போட்டு”நான் இரு இந்தியர்களை மகிழ்ச்சியடையச் செய்தேன்” என்றார்.
மூன்றாமவர் நூறு ஒரு ரூபாய் நாணயங்களப் போட்டு “நான் நூறு  இந்தியர்களுக்கு

மகிழ்ச்சியளித்தேன்” என்றார்.

இவையனைத்தையும் கேட்ட விமான ஓட்டி சொன்னார்”இப்போது நான் உங்கள் மூவரையும் கீழே போட்டால் நூறு கோடி இந்தியர்கள் மகிழ்வார்கள்” !
ஒரு கணவன்,மனைவி  ஐந்து நட்சத்திர ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஓர் அழகிய பெண் அந்தக் கணவனின் அருகில் வந்து”டார்லிங்!நாளை மறக்காமல் வந்து விடுங்கள்” என்று சொல்லி அவன் கன்னத்தில் தட்டிச் சென்றாள்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்குக் கடுங்கோபம் வந்தது. கணவனிடம் கேட்டாள்”யார் அந்த மேனா மினுக்கி?”
கணவன் சொன்னான்”அவள் என் சின்ன வீடு!”
மனைவிக்குக் கோபம் அதிகமானது.”இனி உங்களுடன் வாழ்வது கடினம்.நான் விவாக ரத்துக் கோரப்போகிறேன்”
கணவன்  அமைதியாகச் சொன்னான்”உன் இஷ்டம்.ஆனால் அதன் பின்,ஒவ்வொரு ஆண்டும் கோடையில் ஒரு மாதம் ஸ்விட்சர்லாந்தில் மகிழ்ச்சியாகக் கழிக்க முடியாது;BMW காரில் ஜாலியாக ஊர் சுற்ற முடியாது.க்ளப்பில் போய் பெருந் தொகைக்குச்  சீட்டு விளையாட முடியாது .விலை உயர்ந்த உடைகளை வாங்கிக் குவிக்க முடியாது”
மனைவி யோசித்தாள்.அப்போது அவர்கள் நண்பன் ஒருவன் ஒரு பெண்ணுடன் அவர்களைக் கடந்து,அவர்களைப் பார்க்காதது போல் சென்றான்.
மனைவி கேட்டாள்”கோபாலுடன் போவது யார் ?மனைவி இல்லையே?”
கணவன் சொன்னான்”அவனுடைய சின்ன வீடு!”
மனைவி சொன்னாள்”அவளை விட நம்ம சின்ன வீடு அழகுதான்!”
ஒரு தன்னினந் தின்னி,நர மாமிச உண்ணி(cannibal)  காட்டினுள்நடந்து சென்று கொண்டிருந்தான்.வழியில் மற்றொரு  அவன் இனத்தானால் நடத்தப்படும் ஒரு உணவு விடுதியைக் கண்டான் .
அவனுக்குப் பசியாக இருந்ததால் அங்கு சென்று அமர்ந்து உணவுப் பட்டியலட்டையைப் பார்த்தான்.அதில்—
1)சுற்றுலாப்பயணி—ரூ.500
2)வாட்டிய சமயப் பரப்பூழியர்—ரூ.750
3) வறுத்த புதியவை தேடுபவர்—ரூ.1000
4)வேக வைத்த அமெரிக்க அரசியல்வாதி—ரூ.1250
5)மசாலா நிரப்பிய இந்திய அரசியல்வாதி—ரூ.2500
 அவன்  பணியாளை அழைத்துக் கேட்டான்”ஏன் இந்திய அரசியல் வாதிக்கு இந்த விலை?”
அவன் சொன்னான்.”எப்பவாவது அவங்களைச் சுத்தம் பண்ணிப் பாத்திருக்கீங்களா?  ஒரே அழுக்கு,அசுத்தம், ஒரு நாள் முழுவதும் ஆகும்!”

போன சனிக்கிழமை என் பையன்
ஸ்கூல்ல Parents Meeting..

ஓவ்வொரு Parents Meeting-மே
ஒரு கண்டம் தான்..

ஸ்கூலுக்கு போன உடனே
எங்க பையனோட க்ளாஸ் மிஸ்ஸு
கண்ணுல சிக்கிட்டோம்..

உடனே அவங்களும் என் பையனோட
அருமை ( ?! )., பெருமைகளை (?! )
மூச்சு விடாம பேச ஆரம்பிச்சிட்டாங்க..

” உங்க பையனை என்னால Control
பண்ணவே முடியல சார்..! ”

” ஏன் மேடம்..?! என்ன ஆச்சி ”

” 1. க்ளாஸ்ல ஒழுங்கா ஒரு இடத்துல
உக்கார்றதே இல்ல.. அங்கே , இங்கே
தாவிட்டே இருக்கான்..

2. பக்கத்துல இருக்குற பசங்களை
க்ளாஸ் கவனிக்க விடாம சும்மா
தொண தொணன்னு பேசிட்டே இருக்கான்…

3. திடீர்னு எந்திரிச்சு ” டவுட் மிஸ்னு ”
Subject-க்கு சம்பந்தமே இல்லாம
எடக்கு மடக்கா கேள்வி கேக்கறான்..

4. மிரட்டினாலும் பயப்பட மாட்டேங்குறான்.!

5.அடிச்சாலும் அடங்க மாட்டேங்குறான்..!

நான் என்னதான் சார் பண்றது..?!! ”

” உஸ்ஸப்பா.. Same Complaint..! ”

” Same Complaint-ஆ..? என்ன சார்
சொல்றீங்க..?! ”

” டீச்சர் மாறிட்டாங்க.. ஆனா
Complaint மட்டும் மாறலைன்னு சொல்ல
வந்தேன்..! ”

” ஓ.. போன வருஷம் 3rd Std மிஸ்ஸும்
இதே தான் சொன்னாங்களா..?! ”

” ஹி., ஹி., ஹி… இல்லங்க மேடம்..
நான் படிக்கிறப்ப., எங்க க்ளாஸ் மிஸ்ஸும்
இதே Complaint தான் எங்கப்பாகிட்ட
சொல்லுவாங்க..! ”

” ??!?!?!!! ”
.

Courtesy: http://gokulathilsuriyan.blogspot.in

ஆபீசுல தூங்குபவரா நீங்க.     அப்பிடி தூங்கி மேலதிகாரிக்கிட்ட மாட்டி  அடிக்கடி டோஸ் வாங்குபவரா? உங்களுக்கான டிப்ஸ் இதோ…,
இதுப்போல செய்தால் மேலதிகாரிங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க வேணாம் பாருங்க. ரொம்ப யோசிச்சு யாரோ ஒரு புத்திசாலி இப்படிலாம் ஐடியா கண்டுபிடிச்சிருக்காரு பாருங்க.




டிஸ்கி: நம்ம பிளாக்கர்ஸ் யாரும் ஆபீசுல தூங்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அம்புட்டு நல்ல பசங்க நாங்கன்னு காலரை தூக்கிவிட வேணாம்… பதிவை ரெடி பண்ணாவௌம், போஸ்ட் போடவும், திரட்டிகளில் இணைக்கவும், கமெண்டுக்கு ரிப்ளை பண்ணவும், மொய் கமெண்ட் வைக்கவுமே சரியா இருக்கும்போது எங்கிருந்து தூங்குவது?! என்ன நான் சொல்றது சரிதானே?!

Courtesy: http://rajiyinkanavugal.blogspot.com

பொருட்களை பாதுகாக்க நம் மக்கள் என்ன எல்லாம் செய்வாங்க தெரியுமா?








படங்கள் உதவி: http://chellakirukkalgal.blogspot.com

என் டேபிள் மேல ஒரு Bag
இருந்தது.. அதை பார்த்த என் Wife…

” என்னங்க இது Bag..? ”

” அதெல்லாம் மாஸ்டர் பிளான்..
சொன்னா உனக்கு புரியாது..! ”

” மாஸ்டர் பிளானா..?! அப்ப அது
நீங்க போட்டதா இருக்காதே..
கரெக்ட்டா..?!! ”

” நீ ஒரு ஜீனியஸ்கிட்ட பேசிட்டு
இருக்கேன்னு அடிக்கடி மறந்துடற..! ”

” ஹி.,ஹி., முதல்ல உங்க ப்ளான்
என்னான்னு சொல்லுங்க.. அப்புறம்
நீங்க ஜீனியஸா இல்ல ஜீனியஸ்க்கு
எதிர்வீட்டுக்காரரான்னு பார்க்கலாம்..!  ”

” என் Friend ரவியோட பொண்ணு
‘ ஹோலி கிராஸ்ல ‘ 2nd Std
படிக்கிறால்ல..”

” ஆமாம்..! ”

” அவ வீட்ல கூட இங்கிலீஷ்ல தான்
பேசறாளாம்.. ”

” சரி.. அதுல என்ன பிரச்னை..? ”

” நம்ம ஆளுக்கு தான் இங்கிலீஷ்
சரளமா பேச வராதே.. ”

” அட.. என்னமோ நீங்க தினமும்
இங்கிலீஷ்ல எட்டு பாட்டு எழுதற
மாதிரி பேசறீங்க.. இங்கேயும் அதே
கதை தானே..?! ”

” ஹி., ஹி., ஹி.. இருக்கலாம்.. ஆனா
இன்னும் ஒரு மாசம் கழிச்சி இப்படி
எல்லாம் நீ எங்களை கிண்டல்
பண்ண முடியாது.. ”

” ஏன் ரெண்டு பேரும் எதாவது
ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்
போக போறீங்களா..?! ”

” சே., சே., அதெல்லாம் கஷ்டம்..
நாங்க வேற ஒரு ஈஸியான
மாஸ்டர் ப்ளான் வெச்சி இருக்கோம்ல.. ”

” அட அது என்னான்னு தான்
சொல்லுங்களேன்.. ”

” அந்த Bag-ஐ திறந்து பாரு..
உனக்கே புரியும்..! ”

பையை திறந்து பார்த்த
என் Wife ஆச்சரியத்தோட…

” என்ன இது… எல்லாம் இங்கிலீஷ் பட
DVD-யா இருக்கு..! ”

” ம்ம்.. தினமும் ஒரு இங்கிலீஷ் படம்
பாக்கறது., ஒரு மாசத்துல சரளமா
இங்கிலீஷ் பேசறது.. இதான் எங்க ப்ளான்..!!
எப்பூடி..?! ”

” இந்த மாதிரி எத்தனை படம் பார்த்தாலும்
நீங்க இங்கிலீஷ்ல பேசவே முடியாது..! ”

” ஏன் முடியாது.? ஏன் முடியாது.?
ஏன் முடியாது.? ”

” ஏன்னா.. இதெல்லாம் தமிழ்ல டப்பிங்
பண்ணின இங்கிலீஷ் படங்க..! ”

” Oh My God..! அவ்வ்வ்வ்வ்..!! ”

( யானைக்கும் அடி சறுக்கும்னு
சொல்றது எம்புட்டு கரெக்ட்டு..! )

Courtesy: http://gokulathilsuriyan.blogspot.com

Mr.பிரபாகரன்.. இவர் தான்
எங்க +1 Maths மாஸ்டர்..

எங்களுக்கு அவர் Maths மாஸ்டரா
வந்ததுக்கு இந்த நாடே அவருக்கு
கடமைப்பட்டு இருக்கு..

( இல்லன்னா.. நாங்க Maths-ல
Centum எடுத்து., அதனால Cut-Off-ல
200/200 வந்து., டாக்டர் சீட் கிடைச்சி.,
MBBS படிச்சி, MD முடிச்சி., FRCS
படிக்க லண்டன் போயி, அப்புறம்
வெளி நாட்லயே செட்டில் ஆகி……

உஸ்ஸப்பா.. சொல்லும் போதே
இப்படி மூச்சு வாங்குதே..!! )

ஒரு தடவை கிளாஸ்ல அவர்
” பிதோகரஸ் தியரம் ” எடுத்துட்டு
இருந்தாரு..

அப்ப கிளாஸ்ல இருக்குற மொத்த
36 பேர்ல 34 பயலுக மனசுக்குள்ள
அந்த ” பிதோகரஸ்சை ” கண்டபடி
திட்டிட்டு இருந்தானுக..!

ம்ம்…அன்னிக்கு ” பிதோகரஸ்சை ”
திட்டாத அந்த ரெண்டு நல்ல உள்ளங்கள்..
நானும்., என் Friend ஆனந்தும்..

( அரை தூக்கத்துல இருக்கும் போது
எங்களால யாரையும் திட்ட முடியாது.
ஹி., ஹி., ஹி.! )

அப்ப திடீர்னு Mr.பிரபாகரன்
என் பக்கத்துல இருந்த ஆனந்த்-ஐ
எழுப்பி….

Board-ல வரைஞ்சி வெச்சிருந்த
ஒரு முக்கோணத்தை காட்டி..

” இதுல ” C “-யோட Value-ஐ
எப்படி கண்டுபிடிப்ப..? அந்த
Formula சொல்லு..! ”

அவன் திரு திருன்னு முழிச்சான்..

” என்னடா.. முழிக்கிற..? ”

” சார் அது வந்து.. ”

” சரி ஒரு பேச்சுக்கு இந்த முக்கோணத்துல
A = 3 , B = 4-னு வெச்சுக்க… அப்ப ” C “-ன்
Value என்ன..? ”

அவன் ” டக்னு ” Answer சொல்லிட்டான்..

” C = 7 சார்..! ”

” என்னாது 7-ஆ..? ஏழு எப்படிடா வரும்.?
ஏழு எப்படி வரும்.? கிளாஸ்ல ஒழுங்கா
கவனிச்சா தானேன்னு ” ஆனந்த்-ஐ
அடி பின்னி எடுத்துட்டாரு..

( நல்லவேளை நான் எஸ்கேப்..! )

கிளாஸ் முடிச்சப்புறம்..
ஆனந்த் என்கிட்ட ரொம்ப பீல்
பண்ணி சொன்னான்..

” ஏன்டா.. எனக்கொரு நியாயம்..
அவருக்கு ஒரு நியாயமாடா..? ”

” என்றா சொல்ற..? ”

” பின்ன., அவரு மட்டும் A = 3,
B=4 ன்னு ஒரு பேச்சுக்கு சொல்லலாம்..
நான் மட்டும் ” C = 7 “-னு
ஒரு பேச்சுக்கு சொல்ல கூடாதா..?! ”

” அட ஆமா.. இது கூட லாஜிக்கா தானே
இருக்கு..?!! ”

( என் பக்கத்துல உக்காந்து இருக்கறதால
இந்த பையனுக்கு தான் எவ்ளோ அறிவு..?!! )

Courtesy:  http://gokulathilsuriyan.blogspot.com

டேய் !நான் உன்னை என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன் …..
ஷூ வாங்கிட்டு வரச்சொன்னிங்க….
எத்தனை ஷூ வாங்கிட்டு வரச்சொன்னேன்
ரெண்டு ஷூ
ரெண்டு வாங்கிட்டு வரச்சொன்னேனா ,ஒண்ணு இங்கே இருக்கு ,இன்னொரு ஷூ எங்கே
அதாண்ணே இது……..
டேய் ! !!!!!??????????????

courtesy: http://haasya-rasam.blogspot.com

நேத்து மதியம் 3 மணிக்கு நண்பர் கிட்ட இருந்து போன்..

” ஹலோ., என்ன பண்ணிட்டு
இருக்க..?! ”

” இப்பத்தான் லஞ்ச் முடிச்சிட்டு
வர்றேன்.! ”

” இப்பத்தான் சமைச்சிட்டு வர்றேன்னு
சொல்லு..! ”

” நோ.,நோ., சாப்பிட்டுட்டு வர்றேன்..! ”

” சமைக்காத மாதிரியே பேசறான்யா..!
ஆமா.. லஞ்சுக்கு என்ன ஸ்பெஷல்..? ”

” வஞ்சரம் மீன் குழம்பு..! ”

” சேலத்துல வஞ்சரம் மீனா..?
ஆச்சரியமா இருக்கே..!!! ”

” இது மேட்டூர் Dam வஞ்சரம்..! ”

” என்னாது வஞ்சரம் மீன் Dam-லயா.???!

” ஏன் இருக்காதா..? ”

” ம்ஹூம்… அது கடல் மீன்யா
Dam-ல எல்லாம் வளராது..! ”

” ஆஹா ஏமாத்திட்டானுகளா..?!! ”

” இதுக்குதான் மீன் வாங்கும்போதே
ஒரிஜினல் வஞ்சரமான்னு செக் பண்ணி
வாங்கணும்கறது..! ”

” அது எப்படி செக் பண்றது..?!! ”

” அப்படி கேளு…”

” சரி சொல்லுங்க..! ”

” நல்லா நோட் பண்ணிக்க.. இனிமே
எப்ப மீன் வாங்கினாலும் முதல்ல
அதை ஒரு கையில தூக்கி…”

” ம்ம்…! ”

” அது மூஞ்சிக்கு நேரா கேளு..

 What is Your Name..? “

” ??!!?!!?!?!?!?! ”

மொக்கையான இடம்: http://gokulathilsuriyan.blogspot.com

“என்னங்க?”

“சொல்லு…” என்றேன் டிவியில் இருந்து கண்ணை எடுக்காமலே

தான் பேசுவதை நான் காதில் வாங்கவில்லை என்பதை உணர்ந்த நம்ம புத்திசாலி தங்கமணி ரிமோட் எடுத்து

டிவிய ஆப் பண்ணினாங்க

“ஐயோ… ஏய் ஏய்… ரிமோட் குடு தங்கம்… ” என பதறினேன் 

“வீட்டுல இருக்கிற கொஞ்ச நேரமும் இந்த டிவிய கட்டிட்டு அழறதே வேலையா போச்சு… நான் சொல்றத

காது குடுத்து கேளுங்க அப்புறம் தர்றேன்…”

“காது மூக்கு எல்லாம் குடுக்கறேன்… மொதல்ல ரிமோட் குடு”

“நான் சொல்றதுக்கு ஒரு நிமிஷம் தான் ஆகும்… அப்புறம் நீங்க தாராளமா பாருங்க… எங்க…” என தங்கமணி

ஏதோ சொல்ல வர அதற்குள் இடைமறித்த நான் 

“தங்கம் டென்ஷன் பண்ணாதம்மா… இந்த நடிகை பேட்டி முதல் வாட்டி போட்டப்பவே மிஸ்

பண்ணிட்டேன்னு பீல் பண்ணிட்டு இருந்தேன்… கடவுளா பாத்து அந்த சேனல்காரனுக்கு தோண வெச்சு

மறுபடி போட்டுருக்கான்… ரிமோட் குடு” என நான் பதட்டப்பட தங்கமணி பூலான்தேவி மாதிரி முறைச்சாங்க

(பூலான்தேவி மொறைச்சு நீ எப்ப பாத்தேன்னு யாராச்சும் கேட்டீங்கன்னா உங்கள சாம்பல்

பள்ளதாக்குக்கு அனுப்பிடுவேன்…:)))))

இதுக்கு மேல பேசினா வம்பாய்டும்னு “சரி சொல்லு… என்ன விசயம்?” னேன்.

“எங்க சித்தப்பா பொண்ணு சுசிலா இருக்கால்ல..”

“ம்… இருக்கா இருக்கா… அவளுக்கென்ன இப்போ…” என்றேன் ரிமோட்டை ஒரு பார்வை பார்த்து கொண்டே

“அவ வீட்டுகாரருக்கு கால்ல அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்காராம்… எங்கம்மா போன் பண்ணினாங்க…

போய் பாத்துட்டு வந்துடலாம்”

“இப்பவா…?” என பயந்து போய் கேட்டேன், எனக்கு அந்த நடிகை பேட்டி மிஸ் ஆய்டுமேனு கவலை

“இல்ல… இப்ப நேரமாய்டுச்சு… நாளைக்கி ஒரு ஒன் ஹவர் பர்மிசன் போட்டுட்டு வாங்க…

போயிட்டு வந்துடலாம்” “நாளைக்கி போறதுக்கு இப்பவே என்ன… மொதல்ல ரிமோட் குடு”

என டென்ஷன் ஆனேன். “நேரத்துல வரீங்க தானே, அதை சொல்லுங்க மொதல்ல”

“சரி வரேம்மா… ரிமோட் குடு” என்றேன் பொறுமை இழந்தவனாய்.

“ச்சே… ’16 வயதினிலே கமல் ஆத்தா வெயும் காசு குடு’ டயலாக் மாதிரி ரிமோட் குடு ரிமோட் குடுனு….

சகிக்கல” என்றவாறே ரிமோட்டை குடுத்தார் தங்கமணி

தங்கமணி சொல்வது என்காதில் விழுந்தால் தானே சண்டை எல்லாம்… ரிமோட் கையில் கிடைத்ததும்

டிவியில் முழ்கினேன்.

*************************

ஒருவழியா நடிகை பேட்டி முடிஞ்சு என் சுயநினைவுக்கு வந்தேன்.

அதுக்கே காத்திருந்த மாதிரி தங்கமணி என் பக்கத்துல வந்து உக்காந்தாங்க

“ஏங்க….?” என தங்கமணி அன்பாய் ஒரு பார்வை பார்க்க

“என்ன தங்கம்?” என திகிலாய் விழித்தேன். 

“அது… உங்களுக்கு ஒரு சவால் தர போறேன்…” என தங்கமணி சிரித்து கொண்டே கூற

“அதான் உங்கப்பா நாலு வருஷம் முன்னாடியே குடுத்துட்டாரே… கன்னிகாதானமா” என முணுமுணுத்த

நான், தங்கமணி முறைப்பதை பார்த்ததும் சமாளிப்பாக “அது…. உன்னை போல ஒரு புத்திசாலிய

சமாளிக்க வேண்டிய பொறுப்பை குடுத்துட்டாறேனு சொல்ல வந்தேன்… ” என்றேன் 

“சரி… என்னை நல்லா பாருங்க…” என தங்கமணி அன்போடு கூற

“ஐயயோ… என்னாச்சு தங்கம்…” என பதறினேன்.

“என் முகத்துல ஒரு மாற்றம் இருக்கு, என்னனு கண்டுபிடிங்க பாக்கலாம்…” என சவால் பார்வை

பார்த்தார் தங்கமணி

“அடக்கடவுளே… தங்கம்… வேண்டாம் இந்த சோதனை… இதுக்கு பதிலா நீ டிவில பாத்து புதுசா

எதாச்சும் சமைப்பியே…அது வேணும்னாலும் செஞ்சு குடு… சத்தமில்லாம சாப்பிடறேன்…”

என டெர்ரர் ஆனேன்.

“இங்க பாருங்க… நீங்க சொல்லித்தான் ஆகணும்… அது பெரிய மாற்றம் ஈஸியா கண்டுபிடிக்கலாம்…”

என்றார் தங்கமணி தீர்மானம் போல்

“ஐயோ… யார் மூஞ்சில முழிச்சேன் இன்னிக்கி…”என முதலில் விழித்த நான் பிறகு “அடடா…

இவ மூஞ்சில தான் முழிச்சேனா…. ஹும்… ” என முணுமுணுத்தேன்,  “சரி சரி…சொல்றேன்”

என வசீகரன் சிட்டி ரோபோ தயாரிக்க செஞ்ச ஆராய்ச்சி ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பித்தேன்.


என்ன இவ்ளோ யோசனை…சட்டுன்னு சொல்லுங்க… என்ன மாற்றம்…” என தங்கமணி அவசரப்பட
“இரும்மா… தப்பா சொன்னா பின் விளைவுகள் எனக்கில்ல தெரியும்” என டென்ஷன் ஆனேன்.
“சரி சரி…சீக்கரம்…” என்றார் தங்க்ஸ்”ம்… ஆ… கண்டுபிடிச்சுட்டேன்… ” என்றேன்.
பல்பு கண்டுபிடிச்சப்ப தாமஸ் ஆல்வா எடிசன் கூட இவ்ளோ சந்தோசப்பட்டு இருக்க மாட்டார்னா
பாத்துக்கோங்களேன்” சொல்லுங்க சொல்லுங்க… ” என எக்ஸ்சைட் ஆனார் தங்கமணியும்
“அது… நீ கம்மல் போட்டு இருக்க” என  நான் பெருமையாய் கூறவும்”பின்ன இதுக்கு முன்ன
கமண்டலமா போட்டிருதேன்” என தங்கமணி முறைக்க

“இல்லம்மா… வேற மாதிரி தானே போட்டு இருப்ப” என தப்பிக்க பார்த்தேன்.

“அதெல்லாம் இல்ல… நான் சொன்ன மாற்றம் வேற…கண்டுபிடிங்க” என்றார் தங்கமணி விடுவென என

“அதில்லையா… ஹும்… வேற என்ன…?” என மீண்டும் வசீகரன் ஆனேன் நான்.

கொஞ்சம் நேரம் யோசித்த பின்  “அடப்பாவமே…உன்னை பொண்ணு பாத்த அன்னைக்கு கூட இவ்ளோ

டீப்பா பாக்கலையே தங்கம்…எதாச்சும் க்ளூ குடேன் ப்ளீஸ்…” என தங்கமணியை பாவமாய் பார்க்க

ஒரு நிமிஷம் மௌனமாய் யோசித்த தங்கமணி “சரி விடுங்க… உங்களுக்கு இதெல்லாம் வராது” என எழுந்து

போய் விட்டார்

“அப்பாடா தலைக்கு வந்தது தலை பாகையோடு போச்சுனு சொல்றதை இன்னிக்கி தான் உணர்றேன்” னு ரொம்ப

ஹாப்பி ஆனேன், பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல் (ஹா ஹா ஹா…!!!)

கொஞ்ச நேரம் கழிச்சு உள் அறையில் இருந்து வந்த தங்கமணி “ஏங்க… கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு ப்ரோக்ராம் பாத்தீங்களே…”என கேள்வியை முடிக்கும் முன்

“ஆமா…நடிகை ஜில்பா ரொட்டி ப்ரோக்ராம் தானே…  என்ன அழகு இல்லையா தங்கம்” என முகம் எல்லாம்

பூரிக்க கேட்டேன் நான். பல்லை கடித்து கோபத்தை அடக்கி கொண்ட நம்ம தங்கமணி “ஆமா ஆமா…

அவங்க போட்டு இருந்த கம்மல் நல்லா இருந்தது இல்லிங்க” என வலை விரித்தார்

“ஆமாம் தங்கம்… அந்த ஸ்டார்க்கு ஏத்த ஸ்டார் டிசைன்ல சூப்பர் கம்மல்” என தங்கமணி எதிர்பார்த்தது

போல் வலையில் விழுந்தேன் “அப்புறம் அவங்க டிரஸ் என்ன கலர் அது?” என தங்கமணி குழியை ஆழமாய்

தோண்ட தன் அபிமான நடிகை பற்றி தங்கமணி ஆர்வமாய் பேசியதும் உற்சாகமான நான்

“என்ன தங்கம் நீ? இது கூட கவனிக்கலையா… நல்ல டார்க் மெரூன் கலர் டாப்ஸ்… ப்ளாக் பேன்ட் …

நல்ல காம்பினேசன் இல்ல தங்கம்”

“ஆமா ஆமா…சூப்பர்… அது சரி… அவங்க பொட்டு வெச்சு இருந்தாங்களா என்ன?”

“என்ன தங்கம் நீ? உனக்கு சுத்தமா கவனிக்கற புத்தியே போய்டுச்சு போ… கம்மல்க்கு மேட்ச்ஆ ஸ்டார்

டிசைன்ல டிரஸ்க்கு மேட்ச்ஆ மெரூன் கலர்ல எவ்ளோ அழகா ஒரு பொட்டு…நடுல கூட ஒரு ஸ்டோன்

கூட இருந்ததே, நீ பாக்கலையா” என நீட்டி முழக்கினேன்.

அடுத்த கணம் தங்கமணி “நான் போறேன்..எங்க அம்மா வீட்டுக்கே போறேன்” என கண்ணை கசக்க,

அப்போது தான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த நான் “ஐயயோ…என்னாச்சு தங்கம்” என பதற

“யாரோ ஒரு நடிகை… அதுவும் கன்றாவியா நடிக்கற ஒரு ஜென்மம்… அந்த சிறுக்கி… அவ கம்மல்,

டிரஸ் கலர், பொட்டு டிசைன் நடுல ஸ்டோன் எல்லாம் ஞாபகம் இருக்கு ப்ரோக்ராம் பாத்து

ஒரு மணி நேரம் கழிச்சு கூட… உங்கள நம்பி கழுத்தை நீட்டினவ நான்… எப்பவும் வட்ட பொட்டு

வெக்கறவ இன்னிக்கி உங்களுக்கு பிடிக்கும்னு நீட்ட பொட்டு வெச்சுட்டு வந்து என்ன வித்தியாசம்னு

ஆசையா கேட்டா… ஒரு மணிநேரம் ஆராய்ச்சி செஞ்சும் தெரில இல்ல…

நான் போறேன்… எங்க அம்மா வீட்டுக்கே போறேன்” என தங்கமணி கண்ணை கசக்கி கொண்டே

உள்அறைக்குள் சென்றார்

நான் என்ன செஞ்சேன்னு சொல்லி தான் தெரியணுமா… வழக்கம் போல “சொந்த செலவுல சூனியம்

வெச்சுக்கிட்டனே”னு பீலிங்ல இருக்கேன். ஹையோ ஹையோ…:)))

முக ஓவியம்

Posted: ஜனவரி 12, 2012 in சுட்டது, புகைப்படங்கள், மொக்கை
குறிச்சொற்கள்:, , ,

இவ்வளவு கஷ்டப்பட்டு வரைஞ்சு இருக்கிற இந்த முகத்தோட எத்தன நாள் இருப்பாங்க?

இப்போ நீங்க ப்ரீயா இருக்கிறீங்களா?
அப்போ கீழ போங்க
அட… போய் தான் பாருங்க சார்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்பவும் ப்ரீயா
அப்போ மேல போங்க .

பெண்கள்  சில வேலைகளை  முறையாக  செய்வார்கள்  என்பதை விளக்க  ஒரு ஆசிரியர் சொன்ன கதை .

அவர் ஒரு கிறிஸ்தவர்  அவரது மனைவி  பிராமண   வகுப்பை சார்ந்தவர் . அவங்க வீட்டுக்கு  யாரவது சுமங்கலி வந்தால்  அவர்கள் விடை பெரும் பொழுது  அவரது மனைவி  ஒரு தட்டில்  தேங்காய்  100  ரூபாய்  ஒரு பிளவுஸ்  துணி  வைத்து  குங்குமம்  இட செய்து  வழி அனுப்புவது வழக்கம் .

இதை கவனித்த மனதில் ஏற்றி கொண்ட நம்ம  ஆசிரியர் .  அவர் மனைவி இல்லாத ஒரு நாள்  அவரது தங்கை வர  அவர்க்கு சாப்பாடு போட்டு   அந்த அம்மா கிளம்பும்  போது   ஒரு தட்டில் தேங்காய் வைத்து  100  ரூபாய் வைத்து   பிரோ வை திறந்து  மனைவி  வரிசையாக அடுக்கி வைத்து இருந்த பிளவுஸ்  பிட்டில் விலை  உயர்ந்த ஒன்றை வைத்து  அவரது தங்கையிடம்  கொடுக்க  அந்த அம்மா ரூபாயை  தேங்காய்  இரண்டையும் எடுத்து கொண்டு  பிளவுஸ்  பிட்டை   தூக்கி  சோபா  மேல் போட்டு விட்டது .

ஏன்  என ஆசிரியர்  விழிக்க   அவரது தங்கை   நான் உன்  மனைவிக்கு வைத்து கொடுத்த பிளவுசை  எனக்கு  தருகிறயா  என கோபத்துடன்  பார்க்க  தலைவருக்கு அப்போது தான் தன செய்த தவறை  புரிந்து கொள்ளமுடிந்தது..

பெண்கள் ஒரே நேரத்தில்  பல வேலைகள் செய்ய முடியும்  . ஆனால்  ஆண்களில் பலர்  ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்ய முடியும். இது ஆதி மனிதன் வேட்டை ஆடியகாலத்தில் ஆண்களின்  ஜீன்ஸில் பதிந்துவிட்டதாக  மேலும்  ஆண்கள் வள வள என பேசாமல்  இருப்போதும்  அவன் வேட்டையாடிய காலத்தில்  பதிந்த செயல் தான் .

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”
“ஆம் மன்னா!”
“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.
ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”
“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.
“தொடரும்” என்றார் மன்னர்.
“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.
“சரி அடுத்து”
“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”
“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”
“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”
மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.
ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.
“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.
“சரி எங்கே முதலாவது முட்டாள்?”
அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான ப்ளாக்கிற்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் கொண்டிருக்கும் இவர்தான் அந்த முதல் முட்டாள்!”
சிவா காயத்ரியை உயிருக்கு உயிராக நேசித்தான். அவளும் அப்படிதான்.ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழவே முடியாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாக உருவானது. அவர்கள் காதல் நாளுக்கு நாள் வலுவாக, ஆழமாக, சுவாசமாக வளர்ந்துகொண்டே போனது..
சிவாவின் குடும்ப நிலை.. காயத்ரியின் படிப்பு..  இது தான் அவர்களுக்கு தடையாக இருந்தது. எவ்வளவு நாட்களானாலும் காத்திருக்க தயாராக இருந்தனர்,  மாறாத காதலுடன்.
திடீரென்று அவளுடைய அப்பாவுக்கு அவர்கள் காதல் தெரிய வந்தது.வழக்கமான அப்பா தான். அடி உதை மிரட்டல்.. வீட்டில் சிறை வைக்கப்பட்டாள். அவர்களால் சந்திக்கவே முடியவில்லை. வேறு வழியில்லாமல் அவள் அப்பாவிடம் அவளை பெண் கேட்டு சிவா வீட்டிற்கே போனான். சொந்த பந்தங்கள் சேர்ந்து அவனை விரட்டி விட்டது..
அன்று இரவு தொலைபேசியில் இருவரும் அழுதனர்.  மறுநாள் காலை வீட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்தனர்.
யாருக்கும் தெரியாமல் சிவா ரயில் நிலையம் வந்து அவளுக்காக காத்திருந்தான். நேரம் கடந்தது.. காயத்ரி வரவில்லை. காத்திருந்தான்..வரவே இல்லை.
குழம்பிய அவன் அவளுடைய வீட்டிற்கு சென்று பார்க்க முடிவு செய்து புறபட்டான். வழியில் அவன் நண்பர்கள் வழிமறுத்து, அந்த அதிர்ச்சியான தகவலை அவனிடம் கூறினர்.
“காயத்ரி தற்கொலை செய்துகொண்டாள்“
ஆம்.. காயத்ரி கிளம்பும்போது அவளுடைய தந்தை பார்த்துவிட்டதாகவும் அவளை அடித்ததாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார்.
அவன் அவனாக இல்லை.. வெறி பிடித்தவனாய் ஓடினான். அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.  காயத்ரியை புதைத்து விட்டார்கள்.
அழுதான்.. அழுதான்.. அவனால் அதை மட்டும் தான் செய்ய முடிந்தது..
பல நேர தேற்றளுக்குப் பிறகு வீடு வந்தான்..
வெகுநேரம் பித்துப் பிடித்தவன் போல இருந்தவன், திடீரென கத்தியால் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டான். ஆனால் விதி வலியது. காப்பாற்றப்பட்டுவிட்டான்.
வேறு வழி? காலம் போன போக்கில் நடைபிணமாய் நடமாடினான்.
ஒரு நாள் மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தான். காயத்ரியின் நினைவில் இருந்து அவனால் மீள முடியவில்லை..
 “ஏன் என்னை தனியா விட்டுட்டுப் போன காயத்ரி?  நான் என்ன தப்பு பணினேன்?”  கதறி அழுதான்.
அப்போது திடீரென்று தொலைபேசி சிணுங்கவே எடுத்து பார்த்தான்.Display-ல் காயத்ரி என்று வந்தது.. குழப்பத்தில் நெற்றியைச் சுருக்கினான் சிவா.
ஒருவேளை அவள் வீட்டிலிருந்து வேறு யாரவது அழைக்கலாம் என்று காதில் வைத்து..
“ஹலோ” என்றான்.
“சிவா..  சிவா… ” என்று அழுகுரல் கேட்டது.
ஒரு நிமிடம் நடுங்கித்தான் போனான்.. உடல் சட்டென வியர்த்தது..
“இது.. இது… என் காயத்ரியின் குரல்.. ஆனால்.. ஆனால்.. எப்படி?”பதறினான்.. பயந்தான்..
என்ன செய்வதென அறியாமல் அழைப்பை துண்டித்து விட்டான்..
தனக்கு ஏற்பட்டது கனவாக, பிரமையாக கூட இருக்கலாம். சதா காயத்ரியையே நினைத்துக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட உளைச்சலாக இருக்கலாமென ஆறுதல் படுத்தினான்.
மீண்டும் அங்கு மௌனம் நிலவியது. நிமிடங்கள் கரைந்தன..
ஒன்று.. இரண்டு.. மூன்று..
முழுதாக பதினைந்து நிமிடத்திற்குப் பின் மீண்டும் மணி ஒலித்தது.
அதே காயத்ரி..
உள்ளூர பயம் இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான் சிவா.
சிவா: “ஹலோ..”
காயத்ரி: “சிவா.. சிவா..  எப்படி இருக்கீங்க?”
மீண்டும் அதே குரல்.. யாராவது தன்னை காயத்ரி குரல் மாதிரி பேசி ஏமாற்றுகிறார்களோ???
இல்லை சத்தியமாக இல்லை. காயத்ரியின் குரல் அவனுக்கு அத்துப்படி. எத்தனையோ நாட்கள் காதலாகக் கேட்டு மயங்கிய அதே குரல்.. நிச்சயம் இது காயத்ரி தான். ஆனால்…. ஆனால்…
ஆயிரம் கேள்விக் கணைகள் அவனுள் எழ ஆரம்பித்த நொடி.. மீண்டும் அந்தக் குரல்..
காயத்ரி: “ப்ளீஸ் சிவா.. பேசுங்க.. ஏன் எங்கிட்ட பேச மாட்டீங்கிறீங்க??”
தொண்டைக்குழியில் ஏற்பட்ட நடுக்கத்தை அடக்கிக்கொண்டு பேசினான் சிவா.
சிவா: “நீ…….. நீ இறந்துட்டனு சொன்னங்க.. ஆனா ….” குரலில் பயம் தெரிந்தது..
“புதைச்ச இடத்துக்கு கூட நான் வந்து பாத்தேனே… பின்ன எப்படி…”புரியாத புதிராய் கேட்டான்.
காயத்ரி: “ஹா ஹா ஹா ”..
பேரொளியாய், இடியென ஒரு சிரிப்பொலி எழுந்து அடங்கியது..
மீண்டும் பேச ஆரம்பித்தாள்.. ”புதைச்சா என்ன? நான் எங்க இருந்தாலும் உங்க காயத்ரி தான். என்னால உங்க கூட பேசாம இருக்கவே முடியாது..செத்தாலும் கூட..”
முகத்தில் வியர்வை வழிய, துடைக்க மறந்தவனாய் பயத்தில் உறைந்தவனாய் சிவா..
சிவா: “எ… எ… என்ன சொல்ற?? அதெப்படி முடியும்???”
அப்போது… அப்போது.. திடீரென ஒரு குரல் கேட்கிறது…
அது….
அது…
எங்களுடைய டவர் எங்கும் இருக்கும்…
ஏர்டெல்.. ஒரு அற்புதமான நெட்வொர்க்..
டின் டி டி டின் டின்….
———————-
இன்னும் என்ன பாக்குறீங்க??? கதை அவ்ளோ தான்.
(பின்ன தலைப்பு ஏன் அப்படி வச்சிருக்கனு கேக்குறீங்களா??? பதிவு தான் டெரரா இல்ல.. தலைப்பாவது டெரரா இருக்கட்டுமேனு தான்… எப்பூடிஈஈஈஈ…)
போய் வேலையப் பாருங்க.
நொந்த இடம்: http://chellakirukkalgal.blogspot.com
இனிமேல் குடும்ப ப்ளாக் எழுதகூடாதுன்னு தான் நினச்சேன். ஆனா எழுதும்படியா ஆயிடுச்சி.  சிவா சொல்றான்..  “மச்சி இப்படியே எழுதிட்டே  போனா,  நம்ம பதிவர் சமூகம் உனக்கு  சீரியல்  பதிவர்னு  பேரு  வச்சிடும்“னு  சொல்லி பயம் காட்றான்.  “ஏங்க அப்படியா…?”  ஆனா நமக்கு ஒரு பிரச்சனைன்னு ஆண்டவன் கிட்ட சொன்னா ஒரு பதிலும் வரல.  ஆனா நம்ம நண்பர் பயபுள்ளைங்க,  பதிவர் சமூக மக்காவும் எதாவது சொல்லும்ல..   அட திட்டுனா கூட பரவா இல்லீங்க.. அதுவும் ஒரு ரெஸ்பான்ஸ் தான்...( நம்ம பொழப்பு ஏன் இப்படி…?  சரி விடு.. படிக்கிறவங்க நிலைமை.. ?   அதை பத்தி நமக்கெதுக்கு… நாம படிக்கல..? ) 
முன்குறிப்பு : மேற்கொண்டு படிக்கும் முன் பொண்டாட்டியோ,  தங்கச்சியோ அருகில் இருந்தால் படிப்பதை தவிர்க்கவும்.  மீறி படித்தால்.. மேலே போட்டோவில் இருக்கும் என் நண்பரின் நிலை தான்.   பயபுள்ள சொன்ன பேச்சை கேக்காம பொண்டாட்டி இருக்கும்போதே படிச்சிபுட்டான்.

இந்த தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டிக்கும், கூட  பொறந்த  தங்கச்சிக்கும் இடையில் நான் படுற பாடு இருக்கே.. அப்பப்பப்பா…   ஒரு நாள் என் பொண்டாட்டி, தங்கச்சி  ரெண்டு பேரையும் காமிச்சி யாரடா செல்லம் புடிக்கும்னு ஒரு வீணா போன கேள்விய என்  மூணு வயசு பையன  பார்த்து கேட்டுபுட்டேன்..  அந்த பயபுள்ள தங்கச்சிய பாத்து கை நீட்டிட்டு,  என்னைய நக்கலா பாத்துட்டு சிரிச்சிட்டு போயிடுச்சி…  ஆனா தங்கச்சியோ.. பெருமை பொங்கும் பாசமுகத்தோட போகவும்.. ( மற்றவை உங்க கற்பனைக்கே… ஐ..ஐ.. நான் திட்டு வாங்கினதெல்லாம் ப்ளாக்ல  சொல்ல மாட்டேனே… அதையே சொல்லி சொல்லிடெர்ரர் காட்டுவீங்க…).  ஆனா என் பையன பாத்து என் பொண்டாட்டி ஒன்னு சொன்னா..  “அப்பன போல தானே புள்ளையும் இருக்கும்”.

கூட பொறந்த தங்கச்சி மேல பாசம் வைக்கலாம்.  தொட்டு  தாலி கட்டுன பொண்டாட்டி மேல பாசம் வைக்கலாம்.  ஆனா ரெண்டு பேரும் இருக்கும் போது நம்ம வீட்டு பூனை குட்டிமேல தான் பாசம் வைக்கணும்.  ஆனா நான் “மனைவி சொல்லே மந்திரம்”, “தாய்க்கு பின் தாரம்”, மனைவி ஒரு மாணிக்கம் “  படங்களை ஒரு தடவை பார்ப்பேன். ஆனா “திருப்பாச்சி”,  “பாசமலர்”, “முள்ளும் மலரும்” படங்கள ரெண்டு ரெண்டு தடவ பாத்துருவேன்…. அவ்ளோ தங்கச்சி பாசம்.   இதான் என் பிரச்சனையே

ஒரு தடவை இந்த முக்கோண பாச போராட்ட்டதுல என் பொண்டாட்டி கேட்டுட்டா உனக்கு நான் முக்கியமா, உனக்கு தங்கச்சி முக்கியமா? முடிவு பண்ணிக்கோ?  இது என்னங்க கேள்வி?  அம்மா புடிக்குமா? அப்பா புடிக்குமா? னு  ரெண்டு வயசு பாப்பா கிட்ட கேட்டா அது என்னங்க சொல்லும். அந்த நிலமையில நான் நின்னேன்.  அதுவும் இந்த பொண்ணுங்க பாசமே வைக்க மாட்டாங்க.. ஆனா தங்கச்சி மேல பாசம் வைக்கிற வீட்டுக்காரன் மேல அப்படி ஒரு பாசம் பொங்கும்.

சரி மக்களே.. இன்னைக்கு ஒரு முடிவு எடுதுரனும்னு முடிவு பண்ணிதான் இந்த பதிவே போட்டேன். தங்கச்சியா?  பொண்டாட்டியா?   பதில் சொல்லுங்க. உங்க பதிலை வச்சி தான் ஒரு முக்கிய முடிவு எடுக்க போறேன்.  கொஞ்சம்
யோசிச்சி பதில் சொல்லுங்க மக்கா…  இந்த தடவ பப்ளிக் வோட்டு தான்… மக்கள் தீர்ப்பு தான்.. மகேசன் தீர்ப்பு.
பதில் சொல்றதுக்கு முன்னாடி ஒரு விஷயத்த நல்லா ஞாபகம் வச்சிகோங்க.  கூட பொறந்த தங்கச்சின்னு
சொன்னது என் கூட பொறந்தது இல்ல.. என் பொண்டாட்டி கூட பொறந்த தங்கச்சி..  (  என்னங்க.. எதையோ 
தேடற  மாதிரி  இருக்கு..  எதை  கொண்டு  அடிச்சாலும்  உடைய   போறது உங்க மானிட்டர் தான்…) 

நேத்து சாயந்தரம் என் குட்டி பையன் ஸ்கூலிலிருந்து வந்து ஃப்ரெஷ் அப் பண்ணிக்கிட்டு ஹோம் வொர்க் செய்ய ஆரம்பித்தான். , அவன் ஹேண்ட் புக்கை எடுத்துக்கிட்டு  அப்பு! அம்மா  கேள்வி கேட்பேனாம். நீ பதில் சொல்வியாம்ன்னு கேட்டேன். வீட்டு வாசல்ல ஏழரை நாட்டு சனி எட்டி, என்னை உற்று  பார்ப்பதை அறியாமல்…,

நான் கேள்விகளை கேட்க, பதில் சொல்லி, சொல்லி கடுப்பான அவன், எப்ப பாரு என்னையவே கேள்வி கேக்குறியேம்மா! இன்னிக்கு ஒரு நாளைக்கு நான் கேள்வி கேட்குறேன் நீ பதில் சொல்லும்மான்னு சொன்னதற்கு…, சரி சரின்னு மண்டையை ஆட்டினேன். ஏழரை சனி மெல்ல உள்ளே வந்து என் பக்கத்தில் அமர்ந்ததை அறியாமல்…,

1.தண்ணீரை “தண்ணீ”ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை “பன்னி”ன்னு சொல்லமுடியுமா?
…………………………………………………………………..
2.மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் புடிக்கறவனை மாணவன்னு சொல்ல முடியுமா?
…………………………………………………………..
3.புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளியிருக்கும்,
ஆனா, கன்னுக்குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா? .
………………………………………………………….

4. ஃபேண்ட் போட்டுக்கிட்டு முட்டி போடலாம்..,
முட்டி போட்டுக்கிட்டு ஃபேண்ட் போட முடியுமா?
………………………………………………………….
5. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
வைகை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்..,
ஆனால் ஐய்யராத்துல மீன் புடிக்க முடியுமா?
……………………………………………………..
5.  இட்லி பொடியை தொட்டு  இட்லி சாப்பிட முடியும்.
ஆனால், மூக்கு பொடியை வச்சு மூக்கை சாப்பிட முடியுமா?
……………………………………………………..

6. கோலமாவில் கோலம் போடலாம் ,
கடலை மாவில் கடலை போட முடியுமா?
…………………………………………………………
7. சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Macineலவெச்சா

washing சோடாவாகுமா?
…………………………………………………………………
8. பாம்பு எத்தனை தடவை படமெடுத்தாலும்
அதால், ஒரு முறையாவது  ஒரு படத்தையாவது
தியேட்டர்ல ரிலீஸ் பண்ண முடியுமா?
…………………………………………………………………..
9.என்னதான் கோழிக்கு வயிறு ஃபுல்லா தீனி போட்டு வளர்த்தாலும்,
கோழி முட்டைதான் போடும்.
100/100 லாம் போடுமா?.
………………………………………………………………….
10. நீ எவ்வளவு பெரியா படிப்பாளியா இருந்தாலும்,
பரிட்சை ஹால்ல போய் எழுதத்தான் முடியும்.
படிக்க முடியுமா?ஐயா சாமி, என்னை ஆளை விடு.., ன்னு
எழுந்து ஓட ஆரம்பித்தேன்.அம்மா! அம்மா! எங்கேம்மா ஓடுறே. இனிமே இதுப்போல கேட்கமாட்டேன். வாம்மா வந்து உக்காரும்மா. இனி, சமர்த்தா படிக்கலாம். என் செல்ல அம்மா தானே நீன்னு கொஞ்ச ஆரம்பித்தபின் தான் மீண்டும அவன் அருகில் வந்தமர்ந்து பாடம் படிக்க ஆரம்பித்தோம்.

மொக்கையானவர்: http://rajiyinkanavugal.blogspot.com

அண்ணே நான் வந்துட்டேன் ….எப்படிண்ணே இருக்கீங்க   …?

நீ வந்தேன்னா நான் எப்படிடா இருப்பேன்…

போங்கண்ணே…..உங்களுக்கு எம் மேலே ரொம்ப பாசம் …நீங்களே கண்ணப் போடக்கூடாதுன்னு அப்படி சொல்றீங்க…..அண்ணே எனக்கொரு சந்தேகம்ணே

வேணாண்டா …என்னால தாங்க முடியாதுடா….

ஒர்ரே ஒர்ரு சந்தேகம் …பதில் கிடைக்கலேன்னா என் தல வெடிச்சுடும்ணே..

சரி சொல்லித் தலைடா சப்ப மண்டையா

அண்ணே !இந்த கோணமானி கோணமானின்னு சொல்றாங்களே அப்படின்னா என்னண்ணே…?

அப்படி அறிவுப்பூர்வமா கேளுடா காலி கபாலா…

ஐய்…இந்த பேரு சூப்பரா இருக்கே..சரி சொல்லுங்க …கோணமானின்னா என்ன ?

டேய்!கோணமானின்னா ….???

கோணத்தை அளக்கிற கருவிடா…எத்தனை டிகிரி கோணம்னு கண்டுபிடிக்க கோணமானிஎடுப்பாங்க…

அப்படின்னா என் மண்டை கோணமண்டைன்னு சொல்லுவீங்களே அதைக்கூட அளக்கலாமாண்ணே?

அதை மட்டும் அளக்க கருவியே கிடையாதுடா பலகோணமண்டையா!

சரி, அது போகட்டும் .உஷ்ணமானின்னா?

உஷ்ணத்தைக்கண்டு பிடிக்றது உஷ்ணமானி…

ஜுர மானி?

டேய் இது கூடவா தெரியலை .உனக்கு ..ஜுரம் வந்தா எத்தனை டிகிரின்னு சொல்லும்….

அழுத்தமானி

அழுத்தம் எவ்வளவுன்னு பார்க்க அழுத்தமானி….

பால்மானி

பால்லே தண்ணி எவ்வளவு கலந்திருக்குன்னு கண்டுபிடிக்க பால்மானி..

அது எப்படிண்ணே?அப்போ அது தண்ணிமானின்னுதானே சொல்லணும்

டேய் டேய் [பல்லைக்கடிக்கிறார்] ஆளை விடுடா …

இன்னும் ஒண்ணே ஒண்ணு பாக்கி இருக்குண்ணே….

எதுக்குடா உயிரை வாங்றே…என்ன மானியோ ,அதைக்கண்டு பிடிக்க ,அந்தந்த மானி உபயோகமாகுது……..வெத்து மண்டையா !இதை ஒரு எல்கேஜி புள்ள கூடச் சொல்லுமே….ஏண்டா உன் மண்டையிலே ஏறமாட்டேங்குது……
.
அப்படியா சங்கதி.அப்படின்னா …’பே’ன்னா என்னண்ணே…

என்னடா சொல்றே?!!!!

பே’ன்னா என்ன?

என்னடா குழப்ற

பேமானி வச்சு எதை அளப்பாங்க ?நீங்க சொல்ற மாதிரி அந்தந்த மானி அதை அதை அளக்கும்னா…’பே’ன்னா என்னா….பேமானின்னா என்னா சொல்லுங்கண்ணே நம்ம ரெண்டுபேருக்குள்ள நீங்கதானே எஸ்.எஸ்.எல்.சி ஃபெயில் …உங்களுக்குத் தெரியாதா சொல்லுங்கண்ணே…பேமானிய வச்சு எதை அளக்கணும்….

அண்ணே அண்ணே ….ஓடாதீங்கண்ணே..பதிலைச்.சொல்லிட்டுப் போங்கண்ணே……

ரசித்த இடம்: http://haasya-rasam.blogspot.com

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. ” மாமியாரின் அன்புப்பரிசு..”ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்.. “போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்துவச்சிருக்க..?” மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.

“மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!

G+ ல்  ஈரோடு தங்கதுரை பகிர்ந்தது

பில்

Posted: நவம்பர் 4, 2011 in சுட்டது, மொக்கை
குறிச்சொற்கள்:,

ஒருவன் இறந்த பிறகு சொர்க்கத்திற்குப் போகிறான். அங்கே ஒரு டிவைன் கேண்டீன் இருக்கிறது. உள்ளே போகிறான். விதவிதமான திண்பண்டங்கள், பலகாரங்கள், சுவீட் காரங்கள் இருக்கின்றன.

விலைப்பட்டியலைப் பார்க்கிறான்; அதிக விலை! தலையைச் சுற்றுகிறது.

கல்லாப் பெட்டியில் இருப்பவன் சொல்கிறான்:

“நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். பில் உங்களுக்குத் தரப்படாது. உங்கள் மகன் வரும்போது அந்தப் பில் தரப்படும்”

அதனால் இவனும் போய் உட்கார்ந்து மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டுத் திருப்தியோடு வெளியே வருகிறான்.

பில் தரப்படுகிறது.

பார்க்கிறான் – 10,000 ரூபாய்.

அவனுக்கே அதிர்ச்சி.

சாப்பிட்டது 1000 ரூபாய் கூட இருக்காது. பில் இல்லை என்கிறார்கள். இப்போது அதற்குப் பத்தாயிரம் ரூபாய் பில் என்கிறார்கள்.

“சொர்க்கத்தில் அநியாயம்” என்கிறான்.

அதற்கு அந்த ஹோட்டல்காரன் விளக்குகிறான்:

“நீங்கள் கேட்டது சரிதான். உங்கள் பில் 1000 ரூபாய்தான் வருகிறது. அதை உங்கள் மகன் வரும்போது அவரிடம்தான் கொடுத்து வசூலிப்போம்”

“அப்படி என்றால் இது?” என்றான் இவன்.

“இது உங்கள் அப்பா சாப்பிட்டுவிட்டுப் போன பில்” என்றான் ஹோட்டல்காரன்.

1. நான்: ஏன் பப்பு உனக்கு 7 வயசுதான் ஆகுது எப்ப பாரு 70 வயசு கெழவி மாதிரி பேசாதே

வர்ஷா : அம்மா அவ ஃப்ரெண்ட் எல்லாம் யாருன்னு தெரியாதா? பாட்டி, அத்தை பாட்டி, பக்கத்து வீட்டு கற்பக பாட்டி..

பப்பு : மறக்காம அம்மாவையும் சேர்த்துக்க

தேவையா? எனக்கு சொன்னேன் :)))

2.

வர்ஷா : அம்மா ஏம்மா அழுதா கண்ணுல தண்ணி வருது?

நான் : தெரியலைடா

பப்பு: இதெல்லாம் ஒரு கேள்வியா? எவ்ளோ தண்ணி குடிக்கறே, பாதி ஒன் பாத்ரூம்ல போகும் மீதி கண்ணுல வரும

தேவையா .. வர்ஷாக்கு :))

3. முடிவெட்ட பார்லர் கூட்டிட்டு போனேன், அங்க அவங்க கேக்கறாங்க, அவளுக்கு பப்பு ரொம்ப ஃப்ரெண்ட்.

பப்பு செல்லம் என்ன கட்டிங் வேணும்? மஷ்ரூமா? .பாய்கட்டா?

பப்பு : அதெல்லாம் வேண்டாம் ஆண்ட்டி, எங்கம்மாக்கு குளிக்க வைக்க எது ஈஸியோ அதை வெட்டுங்க

எல்லாரும் சிரிச்சாங்க..(ஊரே சிரிச்சுதுன்னும் சொல்லலாம்)

#புள்ளயா பெத்து வச்சிருக்கேன் 🙂

விஜி ராம் அவர்கள் G+ இல் பகிர்ந்தது

இதோ சில நகைச்சுவை துணுக்குகள் பகிர்ந்திருக்கிறேன் வாசித்து மகிழுங்கள் .

* * * * * * *

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில்
ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து
கூண்டில் இருந்த எலி கேட்டது. எதுக்கு அவனைக் கொன்னேனு…

புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப்
பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனை”ன்னு.

& & & & & & &

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி…
தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது….

^  ^  ^  ^  ^  ^ ^

ஜனவரி – 14 க்கும், பிப்ரவரி – 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி – 14 !
அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி – 14 !!

$ $ $ $ $ $ $

அம்மா: என்னடா… இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே?

பையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன்.

அம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க?

பையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்சதுன்னு கேட்டாங்க.

# # # # # # #

மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?

கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.

@ @ @ @ @ @ @

கணவன்: எனக்கு கால் வந்த நான் வீட்ல இல்லன்னு சொல்லு! கொஞ்ச நேரம் கழித்து மொபைலில் கால் வருகிறது…
மனைவி: ஹலோ! என் கணவர் வீட்ல தான் இருக்கார்!
கணவன்: ஏண்டி அப்படி சொன்ன?
மனைவி: அது என்னோட லவர்!
கணவன்: ?!?…..

( ( * * * ) )

அறிவாளி 1 : மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும், ஞாபகப்படுத்து….

அறிவாளி 2: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?

அறிவாளி 1 : இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்……..

& & & & & & &

அமலா : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
விமலா : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே..!

Courtesy: பனித்துளி சங்கர்

ஆங்கில அகராதி புரிந்து கொள்ள மிக எளிதானது அல்ல ஒரு உதாரணம் ‘COMPLETE’ மற்றும் ‘FINISH’ இரண்டு வார்த்தைகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை சரியாக விளக்க முடிவது இல்லை.

சிலர்  ‘COMPLETE’ மற்றும் ‘FINISH’  இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் சொல்வது உண்டு ஆனால் வித்தியாசம் உள்ளது

நீங்கள்  ஒரு சரியான நபரை திருமணம் செய்யும் போது, உங்கள் வாழ்க்கை ‘COMPLETE’  (முழுமை என்று பொருள் கொள்க)

மேலும் நீங்கள் ஒரு தவறான நபரை திருமணம் செய்யும் போது,  உங்கள் வாழ்க்கை  ‘FINISH’ (முடிந்தது என்று பொருள் கொள்க)

மேலும் சரியான ஒருவர் தவறான காரணத்திற்கு உங்களை பிடித்தால் நீங்கள் ‘COMPLETELY FINISHED’
அறிந்து கொண்ட இடம்:  http://meithedi.blogspot.com

அட இது எதோ ஹிட்ஸ் அடிக்க போட்ட தலைப்பு என்று நினைக்கத்தோன்றும். அப்பிடி என்று நீங்கள் நினைத்தால் அது தப்பு. பார்த்த உடன் நமக்கு தான் நல்ல மனைவி இருக்காளே அப்புறம் எதுக்கு என்று முதலில் விட்டு விட்டேன். அப்புறம் நம்ம நண்பர்களுக்கு தேவை பட்டால் இருக்கட்டுமே என்று பார்த்தால் சில நல்ல யோசனைகளா தான் தெரிஞ்சிது. அதான் இந்த பதிவு…

உங்க  மனைவிகிட்ட கிட்ட சொல்லுங்க நான் குளியலறைய நல்ல மாதிரி மாத்தி வச்சிருக்கன் என்று. உடனே கதவை திறப்பா !!!!!!!!

இத  பத்தி சொல்ல வேணுமோ ???

டார்லிங் உன்னோட தலை முடி ரொம்ப ஈரமா இருக்கே, dry பண்ணிக்கோயேன் என்று சொன்னால் போதும்..

இந்த பழக்கத்த காது கொடுத்திடீங்கன்ன கொஞ்சம் கொஞ்சமா அவளே …..

எழும்புடா செல்லம் லேட் ஆகுது …

இதெல்லாம்  விட இன்னும் சில வழி முறைகள் இருக்கு  பாஸ். அதுக்கு நீங்கள் அணுக வேண்டிய முகவரி: http://sangarfree.blogspot.com

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

பாடலாசிரியர் வைரமுத்து கூட,

நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

ஜெய் தொந்தி!

இந்த அறிய தகவல்களை G+ல் வழங்கியது: நண்பர் திரு. ஈரோடு S. தங்கதுரை

(இது ஆண் பெண் இருபாலருக்கும்) 

நீங்கள் காதலித்த பொண்ணையோ, பையனையோகல்யாணம்   செய்துக்க வேண்டாமென்று உங்கள் வீட்டில் அடம்பிடிக்கிறார்களா….உங்களுக்கு வேறிடத்தில் பெண்/பையன் பார்க்கிறார்களா? அதுவும் தரகர் மூலம். அப்படியானால் கவலையை விடுங்க….பிடிங்க டிப்ஸ….இப்ப நீங்க கரக்ட் பண்ண வேண்டியது உங்க அப்பாவையோ…அம்மாவையோ அல்ல….தரகரைத்தான். ஏன்…..?
நீங்கள் காதலிப்பவரின் போட்டோவை எடுத்துக்கொண்டு நேராக தரகரிடம் போங்க. எனக்கு பார்த்திருக்கிற வரன் போட்டோவோடு இந்த போட்டோவையும் சேர்த்து வைத்திருங்க..என்று சொல்லி தரகரை தனியாக கவனித்து விடவும். அப்புறமென்ன…அந்த போட்டோக்களோடு உங்கள் மனம்கவர்ந்தவரின் போட்டோவையும் எடுத்ததுக்கு உங்க வீட்டுக்கு வருவாரு தரகர். உங்க பெற்றோர் முன்னாடியே கொஞ்சம் பிகு பண்ணிட்டு தரகர் தந்த எல்லா போட்டோவையும் பார்ப்பத்துபோல பார்த்துட்டு, உங்களுக்கு பிடித்த ஆளோட போட்டோவை செலக்ட் பண்ணி கொடுத்துடுங்க….அதுக்கப்புறம் பாருங்க யாரை வேண்டாம்ன்னு உங்க வீட்டுல சொன்னாங்களோ…அந்த ஆளையே உங்க வீட்டு ஆளுங்க ஆசியோடு கல்யாணம் பண்ணிக்கலாம்.
பின் குறிப்பு: தரகர் கொடுக்கும் போட்டோவில் உங்க ஆளைவிட பெட்டரா வேறு ஆளோட போட்டோ இருந்து அதை நீங்க செலக்ட் பண்ணினா…அதுக்கு நான் பொறுப்பல்ல…..
(மறக்காம எனக்கு அழைப்பிதழ் அனுப்பவும்) வாழ்க வளமுடன்.
அழைப்பிதழ் அனுப்ப வேண்டிய முகவரி: http://ragariz.blogspot.com

பார்க்க முரட்டுத் தனமா இருந்த ஒரு ஆள் தன்னோட பைக்கில ஒரு பாருக்கு போனான். வண்டியை பாருக்கு முன்னாடி நிறுத்திட்டு உள்ளே போய் சாப்ட்டு வெளியே வந்தான். அங்கே அவன் பைக்கை காணோம்!

“அப்படியா!”ன்னுட்டு பாருக்குள்ளே போய், ”நான் இன்னும் ஒரு கிளாஸ் சாப்பிடப் போறேன். நான் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள என் பைக் வரலை, எங்க ஊர்ல நான் என்ன பண்ணேனோ அது இங்கயும் நடக்கும்!” அப்படின்னு கோபமா கத்தினாரு.

உடனே பார் மேனேஜேரு அங்க இருந்த ஆளுங்க எல்லாம் எப்படியோ தேடி அவர் வண்டியை கண்டு பிடிச்சு பார் முன்னாடி நிறுத்திட்டாங்க. பைக்காரனும் கிளம்பினான்.  கிளம்புறப்ப ஒருத்தர் கேட்டாரு…

“சார் உங்க ஊர்ல என்ன நீங்க பண்ணீங்க?”

அவன் பதில் சொன்னான் “வீட்டுக்கு நடந்தே போனேன்!”

என்ன ஆச்சு ?
ஒரே தலைவலி…
டாக்டரைப் பார்த்தியா ?
பார்த்தேனே,தலைவலிக்கு முதல்ல கண்ணை டெஸ்ட் பண்ணனும்னு சொன்னாங்க ..
கண் டாக்டர்ன்னா நம்ம கண்ணப்பன்தான் பெஸ்ட்,அவரைப் போய் பாரேன்..அல்லது  EYEயப்பன் கூட நல்ல டாக்டர்தான்..
இல்லை ,ஏற்கனவே நான் ,எங்க காலனி பக்கதிலே ,EYEயர்  இருக்கார் அவரைப் போய் பார்த்தேன்..
என்ன சொன்னார் கண்ணிலெல்லாம் ஒரு ப்ராப்ளாமும் இல்லை சைனஸ் இருக்கலாம் எதுக்கும் ஈ.என்.டி .யைப் பாருங்களேன்னு சொன்னார்..
ஈஎன் டி ன்னதும்  நம்ம தொண்டமான் ஞாபகத்துக்கு வரார் அவர்தான் சரியான ஆள்…அல்லது டாகடர்  மூக்கன் ..அவரும் ஓகே..
நான் நம்ம சகலரோட தங்கச்சி காதம்பரியைப் பார்த்தேன்…
காது மூக்கு தொண்டை எல்லாமே நார்மல்…எதுக்கும் பல் டாக்டரைப் பார்த்தா நல்லது…எல்லா பிராப்ளத்துக்கும் பல்லும் ஒரு காரணமாம்…
யாரைப் பார்த்தே…
வேற யாரு நம்ம பல்லவந்தான்….கொஞ்சம் க்ளீனிங் பண்ணினார் ஒரு கேவிட்டி அடைச்சார் ….மத்தபடி பிரச்சனை இல்லை
எல்லாமே நார்மல்ன்னா தலைவலிக்கு என்னதான்  காரணமாம்.
.வயசாச்சா ஹார்ட் செக் பண்ணிடலாம்னு கார்டியாலஜிஸ்டைப் பார்த்தேன்
யாரு நம்ம இருதயராஜ்தானே ?என்ன சொன்னார்?
அடைப்பு கிடைப்பு இருக்குன்னு சொல்வாரோன்னு பயந்தேன் அதெல்லாம் ஒண்ணுமில்லை ..துடிப்புதான் கொஞ்சம் அதிகமா இருக்கு ..எதுக்கும் பல்மனாலஜிஸ்ட்டைப் பாருங்கன்னார்…
அதான் பல் டாக்டரைப் பார்த்தாச்சே..அவர்கிட்டே சொன்னியா?
நீ வேற …பல்மனாலஜிஸ்ட்ன்னா நுரையீரல் டாக்டர் …
என்னதான்  பேர் வைக்கிறாங்களோ …யாருக்கு புரியுது…கார்டியாலஜிஸ்ட்ன்னா கார் ரிபேர் பண்ற மெக்கானிக் மாதிரி நினைச்சேன்…சரி விடு  பார்த்தியா யாரு டாக்டர்?
LUNGகேஸ்வரன்தான் ரொம்ப ஃபேமஸ் …பார்த்தார் எண்டோஸ்கோப்,பிராங்கோஸ்கோப்.சி டி ஸ்கேன்,ஏழெட்டு எக்ஸ்ரே ,நாலஞ்சு பிளட் டெஸ்ட்ன்னு பார்த்துட்டு மாத்திரை எழுதிக் கொடுத்தார்
இனிமேல் கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டு மாத்திரைகளை முழுங்கிட்டு இருக்க வேண்டியதுதான்..
என்னவோ போ…எப்படியோ குணமானா சரி…வரட்டா.எல்லாம் நல்லா குணமாகும்
[சகாதேவன் உபயம்]
எல்லாத்துக்கும் மேலே நம்ம வைத்தீஸ்வரர்  இருக்கார் .அவர்தான் நல்ல டாக்டர்,அவர் பார்த்துப்பார்   அவர் கையிலே நம்ம டாக்டர்ஸ் எல்லாருமே டூல்ஸ்தான் .

உபயம்: http://haasya-rasam.blogspot.com

உங்கள் பார்வைக்கு சில அறிவிப்புகள்.

இந்த அறிவிப்புகளை எழுத தனியா ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்க போல

சின்ன எழுத்துல என்னை தவிர அப்படிங்கிறது எங்கயாவது போட்டிருக்காங்களா?

இந்த ஊர்ல ரொம்ப தண்ணி பஞ்சம் போல

“தண்ணியா” ரூம் போட்டா இப்படி தான் எழுத தோணும் இல்ல?

தனியா rape பண்ணிக்கலாமா?

உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு பாஸ்!

எந்த அயிட்டத்துல “poison” இருக்குன்னு இவங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?
poison சாப்பிட்டு போயி சேர்ந்த அப்புறம் எது இருந்தா என்னா இல்லன்னா என்னா?

தெரியாம தான் கேக்கிறேன். யாருகிட்ட அபராதம் வாங்குவிங்க?

நேத்து ஒரு நியூஸ் படிச்சேன் புதுசா ஒரு படம் எடுக்குறாங்களாம் பேரு 6, எல்லாம் 6 மாசம் / 6 வாரம் / 6 நாள் / 6 மணி / 6 நிமிஷம் / 6 செகண்ட்-ல நடக்குற சம்பவங்கள் கதையாம். சரி நாமளும் 6 வச்சி ஏதாவது பதிவை தேத்த முடியுமான்னு யோசிச்சேன் அதோட விளைவு கீழே

கல்யாணம் பண்ண 6 வாரத்துல / 6 மாசத்தில / 6 வருசத்தில என்ன நடக்குது

கொஞ்சல்ஸ்

6 வாரத்தில        :    ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு நெனச்ச நேரம் எல்லாம்
6 மாசத்தில        :    எப்பயாவது ஐ லவ் யு
6 வருசத்தில    :    லவ்வா  அப்பிடின்னா?

ஆஃபிஸ் முடிச்சு வீட்டுக்கு வந்தா

6 வாரத்தில        :    அன்பே    நான் வந்துட்டேன் – சாயந்தரம் 6 மணிக்கே
6 மாசத்தில        :    வந்துக்கிட்டே இருக்கேன் – சாயந்தரம் 8 மணிக்கு
6 வருசத்தில    :    (மனைவி பையன் கிட்ட) நீ தூங்குடா உங்க டாடி எப்ப வருவாரோ தெரியாது  – மணி நைட் 11 மணி


பரிசு

6 வாரத்தில        :    செல்லம் நான் ஒரு மோதிரம் வாங்கிட்டு வந்து இருக்கேன் உனக்கு பிடிச்சு இருக்கா பாரேன்
6 மாசத்தில        :    பூ ஏன் பேக்-ல இருக்கு கொஞ்சம் சாமிக்கு போட்டுட்டு நீ கொஞ்சம் வைச்சுக்கோ
6 வருசத்தில    :    இந்தா பணம் ஏதாவது வாங்கிக்கோ

ஃபோன் அடிச்சா

6 வாரத்தில        :    கண்ணு உனக்கு தான் ஃபோன் உங்க அம்மா லைன்-ல
6 மாசத்தில        :    ஃபோன் உனக்கு தான் இங்க இருக்கு
6 வருசத்தில    :    எவ்வளவு நேரம் ஃபோன் அடிக்குது பாரு சீக்க்ரம் எடுத்து தொலையேன்

சமையல்

6 வாரத்தில        :    இவ்வளவு ருசியா நான் சாப்பிட்டதே இல்லை
6 மாசத்தில        :    இன்னைக்கு என்ன சமையல்
6 வருசத்தில    :    இன்னைக்கும் அதே தானா

டிரஸ்

6 வாரத்தில        :    இந்த டிரஸ்-ல நீ தேவதை மாதிரி இருக்கே
6 மாசத்தில        :    திருப்பியும் புது டிரஸ் எடுத்து இருக்கியா
6 வருசத்தில    :    இவ்வளவு காசு போட்டு இப்ப புது டிரஸ் தேவையா

6 வருசமா உக்காந்து ஆராய்ச்சி பண்ணது: http://meithedi.blogspot.com

ஊழல்

Posted: செப்ரெம்பர் 26, 2011 in சுட்டது, மொக்கை
குறிச்சொற்கள்:, ,

இந்த கதை 4 வகையான மக்களைப்பத்தி அவங்க யாருன்னா எல்லோரும்,யாரோ சிலர்,யாராவது, யாருமில்லை

எந்த ஒரு  முக்கியமான வேலையைப்பத்தியும்  எல்லோரும் பேசுவாங்க,

எல்லோருக்கும் தெரியும் யாரோ சிலரால் மட்டும் செய்ய முடியும்னு, யாரோ ஒருவர் செஞ்சுடுவாங்க, ஆனா யாரும் செய்ய மாட்டாங்க

அந்த யாரோ சிலருக்கு கோவம் வரும் ஏன்னா இது எல்லோருக்குமான வேலை, எல்லோரும் என்ன நினைப்பாங்கன்னா யாராவது ஒருத்தர் செஞ்சுடுவாங்கன்னு

ஆனா யாரும் யோசிக்க மாட்டாங்க எல்லோராலயும் செய்ய முடியாதுன்னு.

இது எப்படி முடியுன்னா எல்லோரும் யாரோ சிலரை திட்டுவாங்க எப்பன்னா யாரும் யாரையும் கேள்வி கேக்காதப்ப??

நீதி:

ஏதாவது வேலையை உங்களுக்கு குடுத்தா நீங்க யாருக்காகவும் அல்லது எதுக்காகவும் காத்துகிட்டு இருக்காம செஞ்சு முடிச்சுடுங்க.

டிஸ்கி :

சரியா புரியலேன்னா திருப்பி மொதோ இருந்து படிங்க

இத படிக்கும் போது ஊழலை பத்தி ஞாபகம் வந்தா கங்க்ரட்ஸ் நீங்க ஒரு பெர்பெக்ட் இந்தியன்

அறிந்து கொண்ட இடம்:  http://meithedi.blogspot.com

புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள். அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதை பார்த்த மனைவி கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா. ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.

பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு. திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா. அதுக்கு அந்த கணவன்’அது வேற ஒன்னும் இல்ல. இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.
இதனால் நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னானா: அடுத்தவனோட குறைகளா நாம நெனைக்கிறது சில நேரங்களில் நம்மளோட பார்வை பிரச்சினையா கூட இருக்கலாம்.
எப்பவாச்சும் மனசுக்கு கஷ்டமா இருந்தா ஏதாவது புரட்சிக் கருத்துக்களைப் படிச்சு என்னை ரிலாக்ஸ் பண்ணிக்குவேன். போன வெள்ளிக்கிழமையும் அப்படித்தான் படிச்சுக்கிட்டு இருந்தப்போ, சமையல் வேலைல ஆண்களும் பெண்ணுக்கு உதவி செய்யணும்..அப்படி செய்யாதவங்க ஆணாதிக்கவாதிகள்னு போட்டிருந்துச்சு. அதைப் படிச்ச உடனே எனக்கு சந்தோசம் தாங்கல. இந்த நல்ல காரியத்தை உடனே செய்யறதுன்னு முடிவு பண்ணேன்.
அது ஈவ்னிங் காஃபி போடற நேரம். அதனால தங்கமணிகிட்ட “இன்னிக்கு நாந்தான் காஃபி போடுவேன். நீ சமையல் கட்டுப் பக்கமே வரக்கூடாது”ன்னு சொல்லி ஹால்ல உட்கார வச்சுட்டு, கிச்சன்ல பூந்தேன். அது ‘இந்த மனுசன் நல்லாத்தானே இருந்தாரு..இன்னிக்கு என்னாச்சு’ன்னு குழம்பிப்போய் ஹால்ல உட்கார்ந்துட்டாங்க.
நானும் பால் சட்டியை (இதுக்கு என்னமோ பேர் சொல்வாங்களே..) அடுப்புல வச்சி, பாலை ஊத்திட்டு, அடுப்பை பத்தவச்சேன். ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. முதல்ல, தங்கமணிகிட்ட நல்ல பேர் வாங்கிக்கலாம். அப்புறம் ‘மனைவி என்ன சமையல் எந்திரமா?’ன்னு தலைப்பு வச்சி வெள்ளிக்கிழமை ஃபுல்லா நாந்தான் சமைச்சேன்னு டுபாக்கூர் பதிவு எழுதி புரட்சிவாதி ஆயிடலாம். முடிஞ்சா டேமேஜான பேரையும் சரி பண்ணிடலாம்னு பல திட்டங்கள் மனசுல.
அப்புறம் தான் பார்க்குறேன், பால் ஒரு மாதிரி திரிஞ்சு போச்சு. என்னடா இது, எக்ஸ்பைரி ஆன பாலான்னு பார்த்தா, அதுல ஒன்னும் பிரச்சினை இல்லை. ஒருவேளை பால் சட்டில ஏதாவது இருந்திருக்குமோன்னு டவுட் வந்துச்சு. சரின்னு, திரிஞ்ச பாலை கீழ கொட்டிட்டு, மறுபடி நல்லா பாத்திரத்தைக் கழுவினேன்.
ஹால்ல இருந்து ‘இன்னும் முடியலியா’ன்னு சவுண்ட் வந்துச்சு. ‘இதோ ரெடி..ஒரே நிமிசம்’னு சொல்லிட்டு, மறுபடி பாலை ஊத்தி அடுப்பை பத்தவச்சேன். ச்சே..பெண்ணியவாதி ஆகறதுன்னா இவ்வளவு கஷ்டமா-ன்னு ஃபீல் பண்ணிக்கிட்டே அடுப்பைப் பார்த்தா..அடங்கொக்கமக்கா…பால் மறுபடியும் திரிஞ்சு போச்சு!
’நம்மளே திருந்த நினைச்சாலும் விதி விட மாட்டேங்குதே..எப்படி இது’-ன்னு கன்ஃபியூஸ் ஆகி நிக்கும்போது, தங்கமணி பொறுமை இழந்து உள்ள வந்துட்டாங்க.
‘என்ன ஆச்சு?’ன்னு ஒரு அதட்டல்.
நான் பரிதாபமா ‘இப்பிடி ஆயிடுச்சு..பாரு’ன்னு திரிஞ்ச பாலை காட்டிட்டு ”என்ன பிரச்சினை? ஏன் இப்பிடி ஆகுது”ன்னு கேட்டேன்.
அதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.
’அய்யய்யோ’-ன்னு அந்த பால் பாட்டிலை பார்த்தா Laban-ன்னு இங்கிலீஸ்ல எழுதிட்டு காச்சாமூச்சான்னு அரபில என்னமோ எழுதியிருக்கு..தயிருக்கு இங்கிலீஸ்ல லபான்னு பேரா.இப்படி கேள்விப்பட்டதே இல்லையே-ன்னு யோசிக்கும்போதே
“உங்களுக்கு எதுக்கு இந்த வேலை…ஏதாவது பதிவு எழுதுனமா..கமெண்ட்டுக்கு மிக்க நன்றின்னு பதில் போட்டமான்னு இல்லாம இது தேவையா..”-ன்னு கிச்சன்ல இருந்து விரட்டி விட்டுட்டாங்க.
நம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே..
காஃபியில்
கலந்து
கொடுத்தேன் – என்
காதலை!
-ன்னு ஒன்னுக்குக் கீழ ஒன்னா ப்ளூகலர்ல போல்டா எழுதி அருமை கமெண்ட் வாங்குவோம்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சே.
பாலும் வெள்ளையத்தான் இருக்கு..தயிரும் வெள்ளையாத்தான் இருக்கு..ஃப்ரிட்ஜ்ல வச்சு எடுத்தா, ரெண்டுமே குழுகுழுன்னு தான் இருக்கு..நான் என்ன செய்ய…எவ்வளவு திட்டம் வச்சிருந்தேன்..எல்லாம் பாழா(!) போச்சே..

ரங்கமணியின்காபி அனுபவத்தை தெரிந்து கொண்ட இடம்: http://sengovi.blogspot.com

என்னோட வெஜ் சாம்பார் செய்வது எப்படி பதிவு பார்த்து அத ட்ரை பண்ணி இருப்பிங்க. இதோ என்னோட அடுத்த சமையல் குறிப்பு. இந்த சமையல் குறிப்பு முக்கியமா ஆண்களுக்காக அதுவும் திருமணம் ஆகாத கன்னி பையன்களுக்காக மட்டுமே. அதனால மத்தவங்க தயவு செய்து இதுக்கு மேல படிக்காதிங்க.

– முதலில் அதிகாலை ஐந்து மணிக்கு எந்திரிக்கவும்! என்னது அது ரொம்ப கஷ்டமா? யோவ், அலாரம் வச்சு எந்திரியுங்கையா! எதிரிச்சு, பாத்ரூம் போங்க!பிரஸ் எடுத்து, பல்லு வெளக்குங்க! அப்புறம் முகத்தை கழுவி, இன்னும் ஏதாவது மிச்சம் மீதி வேலைகள் இருந்தா, அதையும் முடிச்சுட்டு, மெதுவா பாத்ரூம விட்டு, வெளிய வாங்க!

யோவ், எடுபட்டபயலே, சமையல் குறிப்பு சொல்றதாதானே பேச்சு! அப்புறம் என்ன பாத்ரூம்ல, மூஞ்சி கழுவுறதப் பத்தி, சிறப்புரையாற்றிக்கிட்டு இருக்கே?” அப்டீன்னு டென்சன் ஆவாதீங்க! பொறுமை! பொறுமை!!

ஓகே! பாத்ரூம்ல இருந்து வெளியே வந்துட்டீங்களா? யோவ்…. அதெல்லாம் வந்து ரொம்ப நேரமாச்சு! மேல சொல்லுய்யா!, சரி, இப்போ நீங்க நேரா பூஜை அறைக்குப் போங்க! உங்க இஸ்ட தெய்வம் எதுவோ, அதை நல்லா மனசார கும்புடுங்க! எதுவும் தப்பா நடந்துடக்கூடாதுன்னு நல்லா கடவுள வேண்டிக்குங்க! ஆமா…. இருநூறு கோடி ரூபா பட்ஜெட்டுல படம் எடுக்குறார் பாரு! எதுவும் தப்பா நடக்கக்கூடாதாம்!

அப்புறம், ஒரு பேனா, ஒரு நோட் புக், கேமரா வசதியுள்ள உங்க செல்ஃபோனு இதெல்லாத்தையும் எடுத்துக்குங்க! யோவ்…. நிறுத்துயா! சமையல் குறிப்பு சொல்றதுன்னுதானே, நம்மளையெல்லாம் லெட்டர் போட்டு வரச்சொன்னே! அப்புறம் என்ன, விஜய் டி வி ல வர்ர, ‘ அது இது எது’ ப்ரோகிராம்ல வர்ர மாத்தியோசி ரவுண்ட் மாதிரி, மாத்தி மாத்தி பேசுறே!

அண்ணே, எதுக்கு அவசரப்படுறீங்க! மேல படியுங்க!

இப்போ, உங்க அம்மாவைக் கூப்பிடுங்க! அம்மா தூங்கறாங்களா? இன்னும் சத்தமா கூப்பிடுங்க! இப்போ அம்மா எந்திரிச்சு வர்ரா! ‘ குட்மோர்னிங் அம்மா’ சொல்லுங்க!

அம்மா கேப்பா ‘ எதுக்குடா, இப்ப கத்துறே’!
அதுக்கு நீங்க சொல்லணும்! “ அம்மா இன்னிக்கு நான் சமையல் பண்ணலாம்னு இருக்கேன்”

‘ என்னது சமையல் பண்ணப் போறியா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்! போய் வேற வேல இருந்தாப் பாரு!”

“ இல்லம்மா, நான் இன்னிக்குச் சமைச்சே ஆகணும்! “

“ அதுக்கு என்னைய என்ன பண்ணச் சொல்லுறே?”

“ கிச்சன் எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா, கொஞ்சம் சவுகரியமா இருக்கும்”

அப்டீன்னு நீங்க சொன்னதும், உங்கம்மா உங்கள மொறைச்சுப் பார்ப்பாங்க! சப்போஸ், இதெல்லாம் எங்க சமைச்சு உருப்படப்போவுது? அப்டீன்னு திட்டவும் கூடும்! அதெல்லாத்தையும் கண்டுக்காதீங்க! நீங்க திட்டுவாங்கறது இதுதான் மொதல்தடவையா என்ன? ( எல்லாப் பதிவர்களுமே வீட்டுல திட்டு வாங்குறதா, ஒரு வாய்மொழித் தகவல் சொல்லுது )
இப்போ, கிச்சன் எங்க இருக்குன்னு உங்கம்மா, சொல்லிட்டாங்களா? நேர கிச்சனுக்குப் போறீங்க! வாசல்ல நின்னு, சிவாஜி கணேஷன் மாதிரி, இடுப்புல கையை வச்சுக்கிட்டு, ஒரு வாட்டி மேலேயும் கீழேயும் கிச்சனை உத்துப் பாருங்க!

அப்புறம் உங்க செல்ஃபோன்ல, கிச்சன ஃபோட்டோ எடுங்க! ஏன்னா, வரலாற்றில முதல் முறையா கிச்சனுக்குப் போறீங்க இல்லையா? அதுதான் இந்தப் ஃபோட்டோ!

சரிங்க! நம்ம சமையல் குறிப்பு பகுதியில இன்னிக்கு, கிச்சனை எப்படிக் கண்டுபுடிக்கறது? அப்டீன்னு பார்த்தோம்! இனிமேல்தான் சமைக்கறது பத்தி சிந்திக்கணும்!

அதை அப்புறமா சொல்லித் தாரேன்! ஓகே வா?

என்ன இன்னும் வெயிட் பண்றீங்க? நீங்க கெளம்புனா தான் இந்த சமையல் குறிப்பா எனக்கு சொன்ன அண்ணன் ஐடியா மணி கிட்ட அடுத்த பாகம் கேட்க போக முடியும். கெளம்புங்க கெளம்புங்க

குப்பு சுப்பு ரெண்டு பேரும்,  இந்த வார கடைசில போரடிக்குதேன்னு மலையேற (trucking) போனாங்க.

அது ஒரு அடர்ந்த காடு கொஞ்ச தூரம் உள்ள போகும் போதே ஒரே கும்மிருட்டு, அவ்வளவு அடர்ந்து இருந்துச்சு காடு. கொஞ்ச தூரத்தில கொஞ்சம் வெளிச்சம் அதை நோக்கி நடை போட்டாங்க, வெளிச்சத்துகிட்ட வந்து பார்த்தா ஒரு புலி உக்காந்து இருந்துச்சி

மூஞ்சில பசி வெறி தெரிஞ்சது, புலிய பார்த்த உடனே  சுப்பு எடுத்தாரு ஓட்டம், ஆனா குப்பு தன்னோட பேக்-ல  இருந்து ரீபோக் ஷூவை எடுத்துக்கிட்டு இருந்தாரு.

இதை பார்த்த சுப்பு “ரீபோக் ஷூ போட்டா புலிய விட வேகமா ஓட முடியுமா சீக்கிரம் வாலே புலி புடிக்கிற முன்னாடி ஓடிரலாம்” மின்னு சொன்னாரு

“நெசம் தாம்லே  புலிய விட வேகமா ஓடமுடியாது ஆனா உன்னை விட வேகமா ஓட முடியும்”

தெரிந்து கொண்ட இடம்: http://meithedi.blogspot.com

அப்துல் கலாம் எஞ்சினியரா வேலை பார்த்துக்கிட்டு இருந்த நேரம். அன்னைக்கு ஏதோ முக்கியமான வேலை..அவசரமான வேலை போய்க்கிட்டு இருந்திருக்கு..அவருக்குக் கீழ வேலை செய்ற ஒருத்தரு சாயந்திரம் ஆகவும் கலாம்கிட்ட தயங்கித் தயங்கி வந்திருக்காரு.
கலாம் ‘என்ன விஷயம்’னு கேட்கவும் ‘என் குழந்தைக்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு கேட்டிருக்காரு. அதுக்கு கலாம் ‘நோ..நோ..நீங்க இல்லேன்ன இங்க வேலை நின்னிடும்..வேணாம்’னு சொல்லிட்டாராம். அவரும் வருத்தத்தோட வேலை செஞ்சுட்டு நைட்டு லேட்டா வீட்டுக்குப் போனா குழந்தை புது ட்ரஸ் போட்டுக்கிட்டு, நிறைய விளையாட்டுச் சாமானோட விளையாடிக்கிட்டு இருந்துச்சாம்.
‘எப்படி இது’ன்னு கேட்கவும் கலாம் வந்து குழந்தையை வெளில அழைச்சுக்கிட்டுப் போயி இதெல்லாம் வாங்கிக்கொடுத்தாருன்னு சொன்னாங்களாம்..தனக்குக் கீழ வேலை செய்றவர் மேல மட்டுமில்லாம அவர் குடும்பத்து மேலயும் கலாம் காட்டுன அக்கறை தான் அவரை எல்லாருக்கும் பிடிச்சவரா, ஒரு நாட்டுக்கே ஜனாதிபதியா உயர்த்துச்சு’ – அப்படீன்னு முன்னாடி ஒரு புக்ல படிச்சேன்.
அப்போ நானும் டெல்லில இருந்தேன். இந்த மாதிரி தன்னம்பிக்கை புக் படிச்சா ‘மெலீனா’ பார்த்த மாதிரி ரெண்டு மூணு நாளைக்கு எஃபக்ட்டு கும்முனு நிக்கும். அப்புறம் பழைய குருடி, கதவைத் திறடி தான்..அந்த கலாம் மேட்டர் படிச்சப்புறம் நாமளும் நம்ம ஜூனியர்ஸ்கிட்ட கனிவா நடந்துப்போம்னு முடிவு பண்ணேன்..
ஒரு நாளு டைட் ஒர்க்..அதாவது ரொம்ப வேலை..அவசர வேலை..எல்லாரும் அடிச்சுப்பிடிச்சு வேலை செஞ்சுக்கிட்டு இருந்தோம். அப்போ என் ஜூனியரு ஒருத்தன் தலையைச் சொறிஞ்சுக்கிட்டே வந்து நின்னான்.
நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!
இல்லே..தெரியாமத் தான் கேட்கேன்..அந்த ஆண்டவன் ஏண்ணே என்னை மட்டும் இப்படி சோதிக்கான்? ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?
புலம்பலை ரசித்த இடம்:  http://sengovi.blogspot.com
1. இரண்டு சகோதரர்கள் பால்யகாலத்தில் பிரிந்தார்கள் என்றால், அவர்களில் ஒருவன் போலீஸால் துரத்தப்படுபவனாகவும், இன்னொருவன் போலீஸ்காரனாகவும் இருக்கவேண்டும். போலீஸால் துரத்தப்படுபவன் கடைசிக்காட்சியில் திடாரென்று திருந்தி உண்மையான வில்லனை அடித்து நொறுக்கவேண்டும். இந்த சகோதரனுக்கு ஹீரோயின் இருந்தால் மட்டும், இறுதியில் குடும்பம் இணைந்து போஸ் கொடுப்பதற்கு அவனது குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும். (விதி இரண்டைப் பார்க்கவும்)

2. ஹீரோக்களின் எண்ணிக்கை ஹீரோயின் எண்ணிக்கைக்கு சமமாக இல்லையெனில் உபரியான ஹீரோக்கள் அல்லது ஹீரோயின்கள் அ) இறக்கவேண்டும் ஆ) செஞ்சிலுவைச் சங்கம், ராமகிருஷ்ணா மிஷன், ஸ்விட்சர்லாந்து போன்ற சமாச்சாரங்களில் பட இறுதியில் காணாமல் போகலாம்.

3. ஒரு படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருந்தால், அவர்கள் இருவரும் காட்டுமிராண்டித்தனமாக குறைந்தது 5 நிமிடம் சண்டை போடவேண்டும் (சகோதரர்களாக இருந்தால் 10 நிமிஷம்)

4. எந்த கோர்ட் சீனிலும், ‘அப்ஜக்ஸன் மைலார்ட் ‘ என்ற வசனம் இருந்தே ஆகவேண்டும். அந்த வசனத்தை ஹீரோவோ அல்லது அவரது வழக்குறைஞரோ சொன்னால், அது ஓவர் ரூல்டாகவும், இல்லையெனில் அது ஸஸ்டெய்ண்ட் ஆகவும் ஆகவேண்டும்.

5. ஹீரோவின் சகோதரி ஹீரோவின் உயிருக்குயிரான தோழனை (அதாவது இரண்டாவது ஹீரோ) கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். இல்லையெனில் அவள் படம் ஆரம்பித்து 30 நிமிடங்களுக்குள் வில்லனால் கற்பழிக்கப்படவேண்டும். அவள் பின்னால் தற்கொலை செய்துகொள்ளவேண்டும்.

6. சேஸ் நடந்தால், ஹீரோ எப்படியும் வில்லனை பிடித்துவிடவேண்டும், அது மாட்டுவண்டி காரை துரத்தினாலும் சரி.

7. ஹீரோ வில்லனை நோக்கி சுட்டால்,

அ) குறி தவறவே தவறாது

ஆ) துப்பாக்கிக் குண்டு தீர்ந்து போகும். (அப்படியாயின் கைச்சண்டைதான்).

வில்லன் ஹீரோவை நோக்கிச் சுட்டால், நிச்சயம் குறி தவறும். இல்லையெனில் அது இரண்டாவது (சாகவேண்டிய) ஹீரோ.

8) எல்லா சண்டைக் காட்சிகளும் நடக்கவேண்டிய இடம்

அ) சட்டிப்பானைகள் இருக்கும் இடம்

ஆ) சந்தை.. காய்கறி இன்ன இதர சாமான்கள் தள்ளுவண்டியில் இருக்கும் இடம்

இ) கண்ணாடி பாட்டில்கள் .. இவை அனைத்து நிச்சயம் உடைக்கப்படவேண்டும்

9) காணாமல் போய் சேரும் சகோதரர்கள் பற்றிய கதை இருந்தால், நிச்சயம் அனைவருக்கும் தெரிந்த குடும்பப் பாடல் ஒன்று நிச்சயம் வேண்டும். இது

அ) சகோதரர்கள் பாடவேண்டும்

ஆ) கண்குருடியான அம்மா பாடவேண்டும் (இறுதிக்காட்சியில் அவளுக்கு கண்பார்வை கிட்டும்)

இ) குடும்ப நாய் அல்லது பூனை

10) போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் படத்தில் வந்தால் இரண்டு வகையில் வருவார்கள் (போலீஸாக ஹீரோ இல்லாத பட்சத்தில்)

அ) படு நேர்மையான போலீஸ் அதிகாரி பெரும்பாலும் ஹீரோவின் அப்பா. டைட்டில் போடுவதற்கு முன்னால் இவர் சாகவேண்டும். அப்பாவாக இல்லாத பட்சத்தில், கெட்ட ஹீரோ (அண்டி ஹீரோ)வை ‘சட்டத்திலிருந்து நீ தப்பமுடியாது ‘ என்று பேசிகொண்டே 23ஆவது ரீல் வரை துரத்திவிட்டு, இறுதியில் தன் மகளை அவனுக்கு மணம் முடித்துவைத்து தோளில் தட்டிக்கொடுக்கவேண்டும்.

இ) படு மோசமான கெட்ட போலீஸ் அதிகாரி. உண்மையான வில்லனின் கையாள். கிளைமாக்ஸில் ஹீரோவால் சாகவேண்டும்.

விதிகளை தெரிந்து கொண்ட இடம்: thothavanda.blogspot.com

என்னடா இவன் உட்கார்ந்து யோசிச்சது அப்படின்னு சொல்லிட்டு மரண மொக்கை போடுறானே அப்படின்னு பார்க்காதீங்க………….கண்டிப்பாக இதுல ஒரு மெசேஜ் இருக்கும்……………இப்ப வாங்க கொஞ்சம் சிரிக்கவும் செய்வோம்…………
சில தெரிந்தே சொல்ல கூடிய பொய்கள்.
டீ மாஸ்டர்: இப்போ போட்ட வடை சார் (வடை போச்ச)
மருந்துகடைகாரர்: பேருதான் வேற, இது நல்ல கம்பெனி
ஸ்கூல் பய்யன்: வயித்த வலிகுதுமா (வழிச்சா கக்கா போடா செல்லம்)
ரியல் எஸ்டேட் காரன்: பத்து நிமிஷம் தூரத்துல நூறு அடி ரோடு சார்.
காய்கரிகடைகாரன்: காலைல தான் பரிச்சதுமா (என்னமோ இவன் போய் பறிச்ச மாதிரி)
சேல்ஸ் மேன்: இந்த ஆபர் முப்பதாம் தேதியோடு முடியுது சார்
பஸ் கண்டக்டர்: வழில எங்கேயும் நிக்காது இது பாயிண்ட் டு பாயிண்ட் (அதுக்குன்னு ஒன்னுக்கு போறதுக்கு கூடவா நிக்காது?????????)
ஒரு புடவைக்கடை விளம்பரம்:
10 நிமிடங்களில் புடை எடுபவர்களுக்கு 50% தள்ளுபடி:
ஒரு பெட்ரோல் பங்கின் அறிவிப்பு பலகையில்:
புகை பிடிக்காதீர்கள், உங்களுக்கு வேணும்னா உங்கள் உயிர் விலையற்றதாக இருக்கலாம், ஆனால் எங்கள் பெட்ரோல் ரொம்ப விலைமிக்கது.
ஒருத்தன் கண் டாக்டரிடம் போனான்:
அங்கே அறிவிப்பு பலகையில் டாக்டரின் பார்வை நேரம் மாலை 6-9 என்று இருந்ததை பார்த்துவிட்டு……………அவன் மனைவியிடம் கூறினான் போயும் போயும் நான் இந்த டாக்டரிடமா  வந்தேன் இவருக்கு  மூணு  மணி  நேரம்தான்  கண்ணு  தெரியுமாம்  அப்படினா???
ஒரு சர்தார் ஜோக்:
சர்தார்: டாக்டர், எனக்கு கனவில தினமும் எலி எல்லாம் புட்பால் விளைடுகின்றது என்றார்:
டாக்டர்: சரி இந்த மாதிரியை இன்று ராத்திரியில் இருந்து எடுத்துகொள்ளுங்கள் எல்லாம் சரியாகி விடும்.
சர்தார்: சரி நான் நாளைல இருந்து எடுத்துக்குறேன், ஏனென்றால், இன்னைக்குதான் பைனல்ஸ்!!!!!!!!!!!!!!!

மெசேஜ் இருக்குனு சொல்லிட்டேன் அது என்னவென்று நீங்களும் மண்டையை பிச்சுபீங்க………………கீழே படிங்க……………

அரசு மகளிர் பள்ளியில் ஆயிரம் மாணவிகளுக்கு மூன்று கழிவறைகள், முன்னூறு லாப்டாப்கள் ………………..no logic and no comments………….

உட்கார்ந்து யோசிச்சது: http://flypno.blogspot.com

முஸ்கி : என்னது சமையல் குறிப்பா? என்ன பண்ணி தொலையிறது இந்த குரூப்ல ” கல்யாணம் ஆகாத பசங்க இருக்காங்க ” ” ( எப்பவும் ) கல்யாணமே ஆகாத பசங்களும் இருக்காங்க..  அவங்களுக்காக தான்.. இது.. ( எல்லாம் என் தலையெழுத்து.. )

( கம கமக்கும் வெஜ் சாம்பார் )

தேவையான பொருட்கள் :

கிச்சன் :1 (உங்க வீட்டில் இருக்கணும் )

கேஸ் அடுப்பு : 1 (இரண்டு பர்னர் கொண்டது )

கேஸ் சிலிண்டர் : 1 (கேஸ் உடன் )

கேஸ் : தேவையான அளவு

பாத்திரம் : 2 (சைஸ் உங்களுக்கு தேவையான அளவு )

கரண்டி : 2 ( பாதாள கரண்டி இல்லை )

டேபிள் ஸ்பூன் : 3 ( டேபிள் இல்லாமல் )

லைட்டர் : 1 ( இல்லாவிட்டால் தீப்பெட்டி )

தண்ணீர் : 6 லிட்டர்

டுஸ்கி : நோ , நோ ….. இதுக்கே கோவப்பட்டு அருவாள எடுத்தா எப்படி? இன்னும் செய்முறை வேற இருக்கே ?

செய்முறை :

முதலில் கிச்சனுக்குள் நுழையவும் ,லைட்டர் அல்லது தீப்பெட்டி கொண்டு கேஸ் அடுப்பைபற்ற வைக்கவும்.ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து இரண்டு பாத்திரங்களையும் கழுவி கொள்ளவும் ,ஒரு பாத்திரத்தை பற்ற வைத்த அடுப்பின் மேல் வைக்கவும் ,அதில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

கொதிக்க வைத்த நீரை வைத்து அடுத்த பாத்திரத்தைகழுவவும் ,பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து இடது பக்கத்து வீட்டில் ஓசி வாங்கி மீதமுள்ள சாம்பாரை எடுக்கவும்..அதை அந்த பாத்திரத்தில் ஊற்றி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.

இப்போது சுவையான “வெஜ் சாம்பார்” ரெடி .அடுத்து உங்கள் இஷ்டம் போல் வலது பக்கத்து ( தக்காளி….. தப்பி தவறி கூட இடது பக்கத்து வீட்டுக்கு போயிடாதிங்க செருப்படி விழும் , நேத்துதான் சாம்பார் ஓசி வாங்கி இருக்கோம் ) வீட்டிலோ ,எதிர்த்த வீட்டிலோ தேவையான அளவு சோறு ஓசி வாங்கி ,இந்த சுவையான “வெஜ் சாம்பார்” ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

டிஸ்கி : ஹி,ஹி,ஹி…….. இன்னும் நிறையா ஐட்டம் இருக்கு ஒன்னு ஒன்னா எடுத்து விடுறேன் .

இப்படிக்கு

மங்குனி அமைச்சர்

தலைவர்

ஓசியில் உடம்பை தேத்துவோர் சங்கம்

சமையல் குறிப்பு படித்து நொந்த இடம்: http://www.terrorkummi.com

கிரிக்கெட்ல நம்மள நல்லா ஏமாத்தறாங்கப்பா..

எப்படி தெரியுமா..!!

1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே
No Ball-ன்னு சொல்வாங்க.,

2. ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு
சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான்
இருக்கும்.

3. All Out-ன்னு சொல்லுவாங்க..,
ஆனா 10 பேர் தான் Out ஆகி
இருப்பாங்க..

4.அம்பயர் ஒரு கைய தூக்கினா
ஒரு Batsman அவுட்..,
ரெண்டு கையயும் தூக்கினா Six..
( லாஜிக் இடிக்குதே..!! )

5. Goal Keeper-ன்னா கோல் விழாம
தடுக்கணும்.. அப்ப.., Wicket Keeper
விக்கெட் விழாம தடுக்கணும் தானே…!
ஆனா அவரே ஏன் Out பண்ணுறாரு..?

6. சில ஒவர் மட்டும் Powerplay-னு சொல்றாங்களே..
அப்போ, மீதி ஒவர் எல்லாம் பவர் இல்லாம
இருட்டிலயா விளையாடுறாங்க??

7. ஒருத்தரை மட்டும் Night Watchman-னு
சொல்வாங்க.. ஆனா அவரும் மேட்ச் முடிஞ்ச
Ground-ஐ காவல் காக்காம ரூம்க்கு தூங்க
போயிடுவாரு..

8. Tea Break-னு சொல்வாங்க.. ஆனா
கூல் ட்ரிக்ஸ் தான் குடிப்பாங்க..

9. என்னதான் எல்லா பக்கமும்
Light எரிஞ்சாலும்., ஒரு பக்கத்தை மட்டும்
“OFF ” Sideனு தான் சொல்வாங்க..

10.ஆட்டம் முடிஞ்ச உடனே ஒருத்தரை
மட்டும் தான் ” Man of the Match “-ன்னு
சொல்லுறாங்க.. அப்ப மீதி பேரெல்லாம்
Women-ஆ..?

தெரிந்து கொண்ட இடம்: www.terrorkummi.com

கணிப்பொறி அடிமைகள் பற்றிய கேலிசித்திரங்கள்; சிறிது பழையது ஆனாலும் இன்றைய உலகத்தை காட்டுவது. அதனால் உங்கள் பார்வைக்கு

பாகம் 1 பார்த்து விட்டீர்கள் என நம்புகிறேன்

நம்ம பில்கேட்ஸ் கம்பெனியோட நகைச்சுவை பாகம் 1 படிச்சுருப்பீங்க. இதோ உங்கள் பார்வைக்கு மேலும் சில

கடைசியாக…

நண்பர் Rama Sethu Ranga Nathan G+ல் பகிர்ந்து கொண்டது

வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.

வித்யா : என்ன குழப்பம்?

நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற

பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான் சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.

வித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.

வித்யா : மேனஜரா? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு.

நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்.

நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?

நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.

நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம “அறிவாளி” படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு “நீ ரொம்ப நல்லவனு”சொல்லனும். அவ்வளவு தான்.

வித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்…

G+ல் நண்பர் போஸ்கோ ஆனந்தராஜ் பகிர்ந்தது

நாட்டில் மடிக்கணினிகளின் எண்ணிக்கை அலைபேசிகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. இதே நிலைமை நீடித்தால் இப்படி தான் பழைய மடிக்கணினிகளை உபயோகிக்க வேண்டி வரும் …

படங்கள் உதவி: http://www.tamilcomedyworld.com

கடைசியாக

Coutesy: http://e-techblog.com

கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
இறுதியில் மதிப்பெண்ணை கணக்கிட்டு கொள்ளுங்கள்.
நீங்கள் தெரிவு செய்யும் பதில் அ எனில் 10 மதிபெண்  ஆ எனில் 5 மதிபெண் இ எனில் 1 மதிப்பெண் 
1 . ஆண்/ பெண் இணைந்து சாலையில் நடக்கும் போது உங்களுக்கு   தோணுவது.
   அ) கடுப்பு                            ஆ) சந்தோஷம்                           இ) ஏதுமில்லை
2. நீங்கள் விரும்பும் படம்
   அ) காதல்                    ஆ) சண்டை                       இ) ஏதுமில்லை
3. “அந்த காலத்துல நாங்கல்லாம்….” என அடிக்கடி சொல்வீர்களா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
4. ஓடும் பஸ்ஸில் ஏறுவிர்களா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
5. அடிக்கடி கோவம் வருமா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
6. காதல் கவிதைகள் படிக்க விருப்பமா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
7. உடை விஷயத்தில் அலட்சியமாக இருப்பிர்களா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
8. மொபைல் பயன் படுத்துபவர்களை கண்டால் கோவம் வருகிறதா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது

மதிப்பெண் கண்டுபிடித்துவிட்டிற்களா ?
முடிவு :









































எனக்கு இன்னும் வயசு ஆகவில்லை, நான் என்றும் இளமைதான் என நினைப்பவர்கள் யாரும் இந்த டெஸ்டில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள். வயசானா போல பீலிங் உள்ளவங்கதான் மார்க் என்னனு தேடுவிங்க.. 

ஹைய்யா எல்லாருக்கும் பல்பா.
நான் உங்களுக்கு கொடுத்த பல்பை எனக்கு வழங்கியவர்:  http://rajamelaiyur.blogspot.com

இந்த பதிவின் பாகம் 1 பார்த்து ரசித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதோ பாகம் 2 உங்களுக்காக

அண்ணே! இது நல்லதில்லண்ணே நல்லதில்ல… ஏண்ணே எம்மேல இம்புட்டு கோவம்? அப்டி என்ன சொல்லிபுட்டேன்னு கொலவெறியோட அலையிறே நீயி… அப்டியே அடிக்கிறதா இருந்தாலும் நேர்ல வந்து அடி… யார் கேட்பா?.. வாரவன் போறவம்லாம் அடிச்சிட்டு போம்போது என் அண்ணன் நீ, உனக்கு அடிக்க உரிமையில்லையா?! நீ எம்புட்டு அடிச்சாலும் தாங்குவேம்ணே அத விட்டுட்டு சின்னபுள்ளதனமா ஆளை வச்சு அடிக்க சொல்றியே… பெரிய மனுஷன் பண்ற காரியமாயா இது?….

உனக்கும் எனக்கும் பிரச்சனை இருந்ததென்னவோ உண்மைதான், ஆனா உன்னைய தேர்தல்ல எதிர்ப்பேன்னு சும்மா ஒரு பேச்சுக்குதாண்ணே சொன்னேன். அதை நம்பி பயபுள்ளைக திடீர்னு ஒரு நா வந்து நீயும் ரவுடிதான் ஜீப்ல ஏறுன்னுட்டாங்க. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் ஒர்த்தில்லையான்னு சொன்னாலும் ஒருத்தன் கேக்கலையே… சரி விடு ஆனது ஆயிபோச்சு ஹிஸ்டிடில நம்ம பேரும் வரட்டும்னு நெனச்சி சரின்னு தலையாட்டுனேன்.

இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புதூன்னு பிரச்சாரத்துக்கு போனா… சும்மா சொல்லப்பிடாது நம்ம மக்கள் பாசக்கார பயபுள்ளைகண்ணே… போற எடம்மெல்லாம் கூட்டமா கூடி உசுப்பேத்தி விட்டுகிட்டே இருந்தாங்க. ஆனா இப்பதான் தெரியுது என்னை ரணகளமாக்கத்தான் கூடியிருக்காங்கன்னு…. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்….

அப்போ அங்கே பேசுனதெல்லாம் உனக்கு கெட்டதா தெரியும். ஆனா நல்லா யோசிச்சி பார்ண்ணே. நான் உனக்கு செஞ்சது எல்லாமே நல்லதுதாண்ணே.

உன்ன குடிகாரன்னேன் எதுக்கு?… தமிழ் நாட்ல முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடதான் இருக்கு. நாட்டுல முக்காவாசி பேரு குடிகாரன்தான் (மன்னிச்சுகிங்கையா ஒரு ஃப்லோல வந்துடுச்சி இனிமே குடிகாரர்னே சொல்றேன் நீங்களும் கெளம்பி வந்து கும்மிராதிங்க)… நான் உன்னை குடிகாரர்னு அடையாளம் காட்ட போய்தான்…அத்தனை பேரும், ஓ நம்மாளு… இவரு செயிச்சா நமக்கும் ஏதாவது செய்வாருன்னு நினைச்சு அவன்பாட்டுக்கு “ஙங்கு ஙங்குன்னு” குத்தி தள்ளி, உன்னை ஜெயிக்கவச்சான். ஞாயப்படி எனக்கு நன்றி சொல்லி மாலை போட்டு தூக்கி வச்சி ஆடணுமாக்கும் நீ….அத விட்டுட்டு அடிக்க வர்றாராமாம் அடிக்க…

அப்புறம் எதிர் கட்சி டிவில என்னிக்காவது உன்னய காட்டியிருக்காங்களா?… ஆனா தேர்தல் ஆரம்பிச்ச நாள்ல இருந்து அவங்க தலிவர டிவில காட்னத விட உன்ன பத்தி காட்னதுதாண்ணே அதிகம். அதுக்கெல்லாம் காரணம் இந்த கைப்புள்ளங்கிறதையே மறந்துட்டு பேசுறே நீ.

நான் எதிர்த்தவன்லாம் வீணா போனதா சரித்திரமே இல்லைண்ணே. ஒத்த எம்மெல்ஏ.வா சுத்திக்கிட்டு இருந்த உனக்கு இம்புட்டு எம்மெல்ஏ எப்படிகிடைச்சாங்க அப்படிங்கிறதை யோசிச்சு பார்த்தேன்னா இம்புட்டு கோவம் வராது உனக்கு.

இது தெரிஞ்சுகிட்டுதான் நம்ம சிங்கும், ஒபாமாவும் அடுத்த எலெக்ஷனுக்கு அவங்களுக்கு எதிரா பேசச்சொல்லி இப்பவே அட்வான்ஸ் புக்கிங் பண்ணியிருக்காங்க…. வேணும்னா நீயும் ஒன்னு போட்டுக்கோ.

அத விட்டுட்டு அடிக்கணும்னு கங்கணம் கட்டிட்டு அலையிற நீயி. உனக்கு ஆசையாயிருந்த பார்டர்ல போயி தீவிரவாதியை பிடி, தெருவுல போற ரவுடியை அடி ஆனா இந்த பச்ச மண்ண போயி அடிக்கணும்னு நெனக்கிறியே வெக்கமாயில்லை… உன்னைய நினைச்சா சிப்பு சிப்பாத்தான்யா வருது.

ஆனா ஒன்னுண்ணே யார் என்னை சீண்டுனாலும், போங்கடான்னு என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருந்தப்பல்லாம் இம்பூட்டு பிரச்சனை இல்லண்ணே. என்னைக்கு திரும்பி சீண்டனூம்னு நினைச்சனோ அன்னியிலிருந்துதான் பிரச்சனை. எல்லாத்தையும் சிரிக்க வச்ச எம்பொழப்பு இன்னிக்கு சிரிப்பா சிரிக்கிது…

அப்புறம் இன்னொரு விசயம்… ஸ்..ஸ்ஸ்ஸ்.. காத பக்கத்துல கொண்டா… அந்த கட்சியினாலதான் நீ செயிச்சேன்னு சொன்னேன்ல அது சும்ம பேச்சுக்கு… உன்ன உசுப்பேத்தி உடுறதுக்காகத்தான் அப்படி சொன்னேன்…

ம்ம்ம்ம்… உங்களையெல்லாம் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என் பொழப்பு ரணகளாமாகி கிடக்கு…

கைப்புள்ளயின் சோகத்தை சொல்லியவர்: http://sinekithan.blogspot.com

ஒரு முதலாளி அவருடைய மூத்த மற்றும் இளைய அதிகாரியுடன் ஒரு கூட்டத்திற்கு அந்த பூங்காவின் வழி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ஒரு அற்புத விளக்கை கண்டு அதை தேய்த்தனர். நாம் அனைவரும் எதிர் பார்த்த படியே ஒரு பூதம் வந்தது. உங்களுக்கு மூன்று ஆசைகளை நான் நிறைவேற்றி தருவேன். கேளுங்கள் என்று சொன்னது.

மூத்த அதிகாரி நான் உடனே ஹவாயில் என்னுடைய சொந்த படகில் இருந்து மீன் பிடித்து பொழுது போக்க வேண்டும் என்று கேட்டார். உடனே அவர் மாயமாக மறைந்து அவருடைய விருப்ப படியே சொந்த படகில் மீன் பிடித்து கொண்டிருந்தார்.

இளைய அதிகாரியோ நான் உடனே ஹன்ஷிகாவுடன் சந்திர மண்டலத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டார். உடனே அவர் மாயமாக மறைந்து சந்திர மண்டலத்தில் விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.

இதை பார்த்து கொண்டிருந்த முதலாளி உடனே கேட்டார்: அந்த இரண்டு முட்டாள்களும் உடனே இங்கே வர வேண்டும். உடனே இரு அதிகாரிகளும் அதே இடத்துக்கு திரும்ப வந்தனர்.

நீதி: எப்பொழுதுமே முதலாளியை பேச விடுங்கள் இல்லையேல் இப்படி தான் ஆகி விடும்
ஆங்கிலத்தில் ரசித்த இடம்:  http://funnyclick.blogspot.com

வாடிக்கையாளர்: வணக்கம், என்னுடைய பிரிண்டர் வேலை செய்யவில்லை.
சேவை அதிகாரி: என்ன பிரச்சினை?

வாடிக்கையாளர்: என்னுடைய ப்ரிண்டேரினுள் மவுஸ் மாட்டி கொண்டது. வெளியே எடுக்க முடிய வில்லை.
சேவை அதிகாரி: எங்கள் ப்ரிண்டேர்களுடன் நாங்கள் மவுஸ் இணைப்பதில்லையே! பின் எப்படி?
வாடிக்கையாளர்: நீங்கள் நம்ப வில்லை போல தெரிகிறது. இதோ ஒரு புகைப்படம் அனுப்புகிறேன். பார்த்து விட்டு சொல்லுங்கள்.
வாடிக்கையாளர் அனுப்பிய புகைப்படம் காண  கீழே  பார்க்கவும் (மானிட்டருக்கு கிழே இல்லங்க, பதிவுக்கு கீழே பாருங்க)

.

.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.

ஆங்கிலத்தில் மண்டை காய வைத்தவர்: http://priyatamil.wordpress.com

நேற்று இரவு நான் வீட்டிற்க்கு சென்ற போது நம்ம தங்கமணி ரொம்ப சூடா இருந்தாங்க. சரி சமாதானபடுத்தலாமேன்னு நெனைச்சு எங்கியாவது வெளிய போகலாமான்னு கேட்டேனுங்க (நமக்கு நாக்கில சனி! என்ன பண்றது). தங்கமணியும் ரொம்ப சந்தோசமா ஏதாவது விலை உயர்ந்த பொருள் விக்கிற எடத்துக்கு கூட்டிட்டு போங்கன்னு சொன்னாங்க. சரின்னு சொல்லி அவங்கள பெட்ரோல் பல்க் கூட்டிட்டு போனேனுங்க. இதுல ஏதாவது தப்பு இருக்கா சொல்லுங்க? இன்னும் ரொம்ப சூடா ஆகி வீட்டுக்கு நடந்தே போய்ட்டாங்க.

பின்குறிப்பு: வீட்டுக்கு போன நான் வராந்தால படுத்துருந்த கதை எல்லாம் அனாவசியம் அப்படிங்கறதுனால சொல்லலீங்க

ஒரு காட்டில் உள்ள மரத்தில், உங்களை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்ருகாங்க. அந்த கயிறை ஒரு மெழுகுவர்த்தி எரித்து கொண்டிரிக்கிறது. கீழே,நீங்க எப்ப கீழே விழபோறிங்கன்னு ஒரு சிங்கம் வேற வைடிங்க்ல இருக்கு. இந்த சூழ்நிலைல எப்படி நீங்க தப்பிபீங்க???

விடை கீழே….
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

நீங்க ஹாப்பி பெர்த்டே பாடுனிங்கண்ணா சிங்கம் ஓடி போய் மெழுகுவர்த்தியை அணைச்சிடும்….. நீங்க எஸ்கேப்….. இப்ப நான் எஸ்கேப்…


அடிப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இடம்: எறும்பு 

கணவனும் ஸ்ப்ளிட் ஏசியும் ஒன்று தான். வெளிய எவ்வளவு சவுண்ட் விட்டாலும் வீட்டுல சைலன்ட் மோடு தான்.

கணவன் என்பவன் குடும்பத்தில் தலை மாதிரி; மனைவி என்பவள் கழுத்து மாதிரி; கழுத்து தான் தலை எந்த பக்கம் பாக்கணும்னு முடிவு செய்யும்.

ஒவ்வொரு ஆணும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். சந்தோசம் மட்டுமே வாழ்க்கையா என்ன?

கல்யாணமாகாத ஆண்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும். அவர்கள் மட்டும் சந்தோசமாக இருப்பது நியாயமா? – ஆஸ்கார் வைல்ட்

பணத்திற்காக கல்யாணம் செய்து கொள்ளாதிர்கள். எளிதாக பணம் கடன் வாங்கி கொள்ளலாம்.

தீவிரவாதத்தை பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு கலியாணம் ஆகி ரெண்டு வருடம் ஆச்சு. – சாம் கினிசன்

காதலுக்கு கண் பார்வை இல்லை. கலியாணம் தான் கண் பார்வை தருகிறது.

ஒருவன் தன மனைவிக்காக கார் கதவை திறந்து விடுகிறான் என்றால் ரெண்டில் எதோ ஒன்று புதுசு: கார் இல்லை மனைவி

நான் என் மனைவியின் கரங்களை எப்போதும் பற்றி கொண்டே இருக்கிறேன். இல்லை என்றால் ஷாப்பிங் போய்டுவா

என் நண்பன் ஒருவன் திருமண மோதிரம் சின்ன கை விலங்கு போல இருப்பதாக கூறி திருமணத்திற்கு மறுக்கிறான். #கிலவர் பாய்

                உள்ள இறங்கு மாப்ள ஒரு குளியல் போட்டுறலாம் 

 

                           

                                 நான் இப்பத்தான் lkg  ல சேந்திருக்கேன் 

 

                                                         
                                                            என்னடா மொறைப்பு 

 
                       

               எப்படி ? கண்ணாடி போட்டுட்டு அழகா இருக்கேனா ?

 

 இதுக்கு மேல பேசுனீங்க …அத்தனை பேரையும் பெட்ரோல்       ஊத்தி                   கொளுத்திடுவேன்  ஆமா 

 

                                         

                                                     ச்சீ  …….ஆசைய பாரு 

 

                           

                       மாப்ள நீ இனிமேல் எப்படி வேணும்னாலும் திட்டிக்க 

 

  ஹீரோவா ஆகணும்ன்னா நம்மள மாதிரி பெர்சனாலிட்டி வேணும்

 

இந்த பல்ல பாத்துதான் பல பொண்ணுங்க மயங்கியிருக்காங்க 

 

                                          ஏய் …நீ ரொம்ப அழுக்கா இருக்க 

 

                              பான்பராக் கரைதான் வேற ஒண்ணுமில்ல 

 

நாக்கை நீட்ட சொல்றான் எப்படின்றத சொல்லி குடுக்க மாட்டேன்றான் 

 

இந்த போட்டோசுக்கும் ஹன்சிகாவுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்குறீங்களா? எனக்கும் தெரியலீங்க. நான் இந்த பதிவ சுட்ட கூடல் பாலாவுக்கும் தெரியலன்னு நெனைக்கிறேன். தெரிஞ்ச சொல்லிருப்பாரு.

சரித்திர புகழ்ப்பெற்ற இந்த இடத்தை பலரும் நேரில் பார்த்திருக்கலாம்…

அல்லது என்னை போல படங்களில் மட்டும் பார்த்து மகிழ்ந்திருக்கலாம்..
எதுவானால் என்ன??

இந்த படத்தை பார்த்ததும் தெரிந்தவர்கள் இது மவுண்ட் ரஷ்மோர் என்று சொல்லிவிடுவீர்கள் என்பது எனக்கும் தெரியும்..

இந்த சிற்ப்பங்களில் இருப்பவர்கள் அமெரிக்கா ஜனாதிபதிகளான ஜார்ஜ் வாஷிங்டன், தாம்ஸ் ஜெஃப்பர்சன், ரூஸ்வெல்ட் மற்றும் ஆப்ரஹாம் லிங்கன்.

அமைந்துள்ள இடம் : டக்கோட்டா, அமெரிக்கா
பப்பரப்பளவு : 1247 ஏக்கர்
இதுவரை பார்வையாளர்கள் : 27 லட்சம் ( 2006 கணக்கு)
இந்த சிற்ப்பங்கள் அமெரிக்காவின் 150 வது சுதந்திரத்தை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது..

எதுக்கு இந்த புள்ளி விவரம்? அதுவும் நம்ம விசயகாந்துக்கு போட்டியா அப்படின்னு நினைக்குறீங்களா?? காரனம் இருக்கு..

எல்லாரும் முன்பக்கத்தை மட்டுமே பார்த்து அதையும் காமிராவில் பதிவு செய்துக்கொள்வார்கள்.. பின்பகுதியை யாருமே பார்த்திருக்கமாட்டார்கள்.

இது வரை முன்பக்கத்தை மட்டுமே பார்த்தவர்களுக்கு இப்பொழுது பின்பக்கத்தை பார்க்கும் அறிய , மற்றும் பொன்னான வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது..

அதானால் அந்த பின்பக்கத்தை உங்களுக்காக இதோ…

இப்போ பார்க்கப்போவது இந்த இடத்தின் பின்பகுதியை…
வாருங்கள் நன்பர்களே…

^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^^
^
^
^
^
இன்னும் கீழே
^
^^^^
^^
^^^
^
^^^
^
^
^
^
^^^^^

^
^
^

இன்னும் கொஞ்சம் கீழே

^
^
^
^^^^^

^
^
^

இது தான் அந்த பின்பகுதி..

நல்லா பார்த்துக்கோங்க.. அப்புறம் இந்த மாதிரி எல்லாம் உங்களால பார்க்க முடியாது..

என்ன தான் திட்டினாலும் நாங்க எல்லாம் திருந்தமாட்டோம்…

டிஸ்கி : நகைச்சுவைக்காக மட்டுமே..

( இங்கியே நன்றியும் சொல்லிக்கிறேன் .. வேற யாருக்கு ??/ இத மின்னஞ்சலில் அனுப்பிய புண்ணியவானுக்கும் அத படிச்சுட்டு நான் படிக்க பதிவிட்ட நண்பர் அணிமா க்கும் தான் )

காதல்…

a–>b–>c–>a
முக்கோணக் காதல்

a–>b/b–>a
ஒரு தலைக் காதல்

a<–>b
இருபக்க காதல்

a<–>b–>c

?
?
?
வேற என்ன கள்ளக் காதல்
____________________________________________

சர்தார்…

USA : நாங்கதான் நிலாவுல முதல்ல கால் வைத்தோம்

RUSSIA : நாங்கதான் வீனஸ் ல முதல்ல கால் பதித்தோம்

நம்ம சர்தார் : நாங்க இந்திய தான் முதலில் சூரியனில் கால் பதித்தோம்

USA : சான்சே இல்ல , ரொம்ப சூட இருக்கும் முடியவே முடியாது

நம்ம சர்தார் : கொய்யல நாங்க சூரியனுக்கு ராத்திரில போனோம் டா..

____________________________________________

பரீட்சைக்கு பிறகு…

மாணவன் 1 : மச்சி நாலு பெஞ்ச் கேப் இருந்தும் எப்டி டா, அசராம பாத்து எழுதுற

மாணவன் 2 : thanks to vaasan eye care !!!

படித்தது: http://jillthanni.blogspot.com

பிக் பாஸ்: இந்த ஆண்டு உங்கள் செயல்திறன், நன்றாக இருந்தது. எனவே, இந்த ஆண்டுக்கான உங்கள் மதிப்பீடு: “சராசரி”

குமார்: என்ன? ‘சராசரி’ எப்படி வந்தது?

பிக் பாஸ்: … ம்ம்ம் ஏனென்றால் … uhh … உங்களுக்கு டொமைன் பற்றிய அறிவு குறைவாக இருந்தது

குமார்: ஆனால் கடந்த ஆண்டு நான் ஒரு டொமைன் நிபுணர் ஆக இருக்கிறேன் என்று தானே நீங்கள் என்னை இந்த ப்ரொஜெக்டில் டொமைன் ஆலோசகராக நியமித்தீர்கள்

பிக் பாஸ்: .. ம்ம்ம் , .. uhh …  உங்கள் டொமைன் அறிவு இந்த ஆண்டு குறைந்து இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

குமார்: என்ன???

பிக் பாஸ்: ஆமாம், நான் நீங்கள் purchase டொமைனில் அறிவை வளர்த்து கொள்ள வில்லை.

குமார்:  அது சரி தான். ஆனால் manufacturing டொமைனில் இருக்கும் நான் ஏன் purchase டொமைனில் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்?

பிக் பாஸ்: இது தான் உங்களிடம் எனக்கு பிடிக்காத அடுத்தது. எல்லாவற்றிற்கும் எதாவாது பதில் சொல்லி கொண்டே இருக்கீங்க.

குமார்: அப்படியா? (குழப்பமாக தலையை சொறிகிறார்)

பிக் பாஸ்: அடுத்து, நீங்கள் உங்கள் தொடர்பு திறன்களை மேம்படுத்த வேண்டும்.

குமார்: என்ன? தொடர்பு திறன் மேம்படுத்த வேண்டுமா?  நான் “வர்த்தகம் தொடர்பாடல்” குறித்து பயிற்சி அளித்த பொது நீங்கள் கூட அமர்ந்து குறிப்பு எடுத்தீர்களே! மறந்து விடீர்கள?

பிக் பாஸ்: ஓ அது? Errr … சரி .. அதாவது, நீங்கள் உங்கள் சமூக நடைமுறைக்கேற்ற உடன்பாடான தொடர்பாடல் மேம்படுத்த வேண்டும்.

குமார்: அப்படியா? அது என்ன நான் கேள்வி படாத ஒன்றாக இருக்கிறதே!

பிக் பாஸ்: பார்த்தீர்களா? இதை தான் நான் நீங்கள் இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று சொன்னேன்.

குமார்:  மனதுக்குள் (அட ங்கோயாள!)

பிக் பாஸ்: அடுத்து, நீங்கள் உங்கள் வேலைக்கு ஆள் எடுக்கும் திறன்களை கூர் தீட்ட வேண்டும். நீங்கள் எடுத்து கொடுத்தவர்கள் எல்லாம் இரண்டு மாதத்திலே ஓடி விட்டார்கள்.

குமார்:  சார், அது என் தவறு அல்ல. நீங்கள் அவர்கள் பின்னால் உட்க்கார்ந்து வேலை செய்வதை பார்ப்பேன் என்று சொன்னதால் தான் அவர்கள் அடுத்த நாளே ராஜினாமா செய்தார்கள். இன்னும் இரண்டொருவர் தற்கொலை கூட செய்ய முயற்சித்தது காப்பாற்றப்பட்டனர்.

பிக் பாஸ்: (அதிர்ச்சியை சமாளித்தவாறே ) ம்ம் … எப்படியோ, நான் உனக்கு ஒரு நல்ல மதிப்பீடு அளிக்கவே விரும்பினேன். ஆனால் நம் அலுவலக விதிகள் படி உனக்கு  ‘சராசரி’ மட்டுமே கொடுக்க முடிந்தது.

குமார்: அது ஏன் என்று எனக்கு விளக்க முடியமா?

பிக் பாஸ்: அது ஒரு சிக்கலான செயல்முறை தான். அதை நீ அறிந்து கொள்ள விரும்ப மாட்டாய் என நெனைக்கிறேன்.

குமார்: இல்லை சார்.  நான் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். தயவு செய்து விளக்குங்கள்.

பிக் பாஸ்:  சரி. நீ கேட்டதால் உனக்கு மட்டும் சொல்கிறேன். நாங்கள் எல்லாரும் ஒரு அறையில் கூடுவோம். அனைவரின் பெயரை துண்டு காகிதங்களில் எழுதி மேலே தூக்கி எறிவோம். தரையில் விழும் பெயர்களுக்கு “சராசரி” கொடுப்போம். மேசை மீது விழும் பெயர்களுக்கு ‘நல்லது’ கொடுப்போம். எங்களால் பிடிக்க முடிந்த பெயர்களுக்கு ‘மிக சிறந்தது’ கொடுப்போம்.  பேனில் சிக்கி கொள்ளும் பெயர்களுக்கு ‘சிறந்தது’ கொடுப்போம்.

குமார்: (கண்களை உருட்டி கொண்டே) யாருக்கு “மோசம்” கொடுப்பீர்கள்?

பிக் பாஸ்: நாங்கள் பெயர் எழுத மறந்தவர்களுக்கு தான்.

குமார்: (கடுப்புடன்) எப்படி சார் பேனில் துண்டு காகிதம் சிக்கும்?

பிக் பாஸ்: (பதற்றத்துடன்) இப்போது நீ எங்கள் 20 ஆண்டு கால நடை முறை பற்றி கேள்வி கேட்கிறாய். இது உனக்கு நல்லதில்லை!

குமார்: (மயக்கம் போட்டு விழுகிறார்)

நன்றி: http://funnyclick.blogspot.com/

honeymoon படங்கள் (18+)

Posted: ஜூலை 9, 2011 in புகைப்படங்கள், மொக்கை
குறிச்சொற்கள்:,

இந்த honeymoon படங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டுமே! மற்றவர்கள் மன்னிச்சு மன்னிச்சு

டிஸ்கி: என்ன டைட்டில்ல 18 + போட்டுருக்குன்னு பாக்கறீங்களா? அது மாசத்தை சொன்னேனுங்க

20௦ tiger ஒன்றாக இருப்பதை பார்த்திருக்கீர்களா? மிகவும் அரிதான புகைப்படம் இது

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

Visual Joke

சரி சரி உங்களை மாதிரி தான் நானும் பீல் பண்ணேன் முதல்ல பாத்தப்போ! யாரும் பாக்காத மாதிரி தொடச்சுட்டு வரலை? அது மாதிரி எழுந்து போங்க!

ஒரு நிறுவனம் பிடித்த உடை தினத்தை வெள்ளி என்று தீர்மானிக்கிறது. அவர்கள் அதை அறிவிக்க ஒரு கடிதம் வெளியிட்டனர்.

Week 1

Memo 1: Effective this week, the company is adopting Fridays as Casual Day. Employees are free to dress in the casual attire of their choice.

Week 3

Memo 2: Spandex and leather micro-miniskirts are not appropriate attire for Casual Day.

Week 6

Memo 3: Casual Day refers to dress only, not attitude.

Week 8

Memo 4: A seminar on how to dress for Casual Day will be held at 4 p.m. Friday in the cafeteria. A fashion show will follow. Attendance is mandatory.

Week 9

Memo No. 5: As an outgrowth of Friday’s seminar, a 14-member Casual Day Task Force has been appointed to prepare guidelines for proper casual-day dress.

Week 14

Memo 6: The Casual Day Task Force has distributed a 30-page manual entitled “Relaxing Dress Without Relaxing Company Standards.” A copy has been distributed to every employee.

Week 18

Memo 7: Company is providing psychological counseling for employees who may be having difficulty adjusting to Casual Day.

Week 20

Memo 8: We are no longer able to effectively support or manage Casual Day. Casual Day is discontinued

Mr.பிரபாகரன்.. இவர் தான்
எங்க +1 Maths மாஸ்டர்..

எங்களுக்கு அவர் Maths மாஸ்டரா
வந்ததுக்கு இந்த நாடே அவருக்கு
கடமைப்பட்டு இருக்கு..

( இல்லன்னா.. நாங்க Maths-ல
Centum எடுத்து., அதனால Cut-Off-ல
200/200 வந்து., டாக்டர் சீட் கிடைச்சி.,
MBBS படிச்சி, MD முடிச்சி., FRCS
படிக்க லண்டன் போயி, அப்புறம்
வெளி நாட்லயே செட்டில் ஆகி……

உஸ்ஸப்பா.. சொல்லும் போதே
இப்படி மூச்சு வாங்குதே..!! )

ஒரு தடவை கிளாஸ்ல அவர்
” பிதோகரஸ் தியரம் ” எடுத்துட்டு
இருந்தாரு..

அப்ப கிளாஸ்ல இருக்குற மொத்த
36 பேர்ல 34 பயலுக மனசுக்குள்ள
அந்த ” பிதோகரஸ்சை ” கண்டபடி
திட்டிட்டு இருந்தானுக..!

ம்ம்…அன்னிக்கு ” பிதோகரஸ்சை ”
திட்டாத அந்த ரெண்டு நல்ல உள்ளங்கள்..
நானும்., என் Friend ஆனந்தும்..

( அரை தூக்கத்துல இருக்கும் போது
எங்களால யாரையும் திட்ட முடியாது.
ஹி., ஹி., ஹி.! )

அப்ப திடீர்னு Mr.பிரபாகரன்
என் பக்கத்துல இருந்த ஆனந்த்-ஐ
எழுப்பி….

Board-ல வரைஞ்சி வெச்சிருந்த
ஒரு முக்கோணத்தை காட்டி..

” இதுல ” C “-யோட Value-ஐ
எப்படி கண்டுபிடிப்ப..? அந்த
Formula சொல்லு..! ”

அவன் திரு திருன்னு முழிச்சான்..

” என்னடா.. முழிக்கிற..? ”

” சார் அது வந்து.. ”

” சரி ஒரு பேச்சுக்கு இந்த முக்கோணத்துல
A = 3 , B = 4-னு வெச்சுக்க… அப்ப ” C “-ன்
Value என்ன..? ”

அவன் ” டக்னு ” Answer சொல்லிட்டான்..

” C = 7 சார்..! ”

” என்னாது 7-ஆ..? ஏழு எப்படிடா வரும்.?
ஏழு எப்படி வரும்.? கிளாஸ்ல ஒழுங்கா
கவனிச்சா தானேன்னு ” ஆனந்த்-ஐ
அடி பின்னி எடுத்துட்டாரு..

( நல்லவேளை நான் எஸ்கேப்..! )

கிளாஸ் முடிச்சப்புறம்..
ஆனந்த் என்கிட்ட ரொம்ப பீல்
பண்ணி சொன்னான்..

” ஏன்டா.. எனக்கொரு நியாயம்..
அவருக்கு ஒரு நியாயமாடா..? ”

” என்றா சொல்ற..? ”

” பின்ன., அவரு மட்டும் A = 3,
B=4 ன்னு ஒரு பேச்சுக்கு சொல்லலாம்..
நான் மட்டும் ” C = 7 “-னு
ஒரு பேச்சுக்கு சொல்ல கூடாதா..?! ”

” அட ஆமா.. இது கூட லாஜிக்கா தானே
இருக்கு..?!! ”

( என் பக்கத்துல உக்காந்து இருக்கறதால
இந்த பையனுக்கு தான் எவ்ளோ அறிவு..?!! )

அனுபவத்தை சொன்னது: http://gokulathilsuriyan.blogspot.com

வர..வர..இந்த வெளிநாட்ல இருக்கவங்க தொல்ல தாங்கலப்பா… இங்கே இருந்து ஒட்டகம் மேய்க்கிறதுக்கு ஓசில போக வேண்டியது..சிங்கப்பூர் போறேன்..சிலுக்குபட்டி போறேன்னு அங்க போயி குப்ப கூட்ட வேண்டியது.. ஆனா அவனுங்க ஆர்குட்லயும்..ஃபேஸ் புக்லயும் பண்ற அட்டகாசம் தாங்க முடியலடா சாமி..ஒட்டகம் மேக்கிரவன் ஒபாமாகிட்ட நிக்கிறமாதிரி போட்டோ போடறான்… ஒன்ற டாலர் பஸ் காச மிச்சம் புடிக்க நடந்து போற நாதாரிங்க… பென்ஸ் காருகிட்ட நிக்கிற மாதிரி போட்டோ போடறான்!

 

சீன் போடற எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கை!

 இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே. இது மெயிலில் வந்தது தமிழில் அளித்திருக்கிறோம் அவ்வளவுதான்!

ஏண்டா உங்க கைய கால வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாதா? உங்களுக்கு வாழ்க்கையில என்னடா லட்சியம்? அடுத்தவங்களை பொறாமைப்பட வைக்கிறதா? அப்புறம் ஏன் உங்க புரொஃபைல் பிக்சருங்களை அடிக்கடி மாத்திகிட்டே இருக்கீங்க? என்ன காரணம்? எனக்கு இப்ப தெரிஞ்சாகனும்!

 

ஒத்துக்கிறோம், நீங்கெல்லாம் வெளிநாட்டுக்கு போய்ட்டீங்க. உங்க ஒன்னுவிட்ட இரண்டுவிட்ட சித்தப்பா, மாமால்லாம் உங்களை நினைச்சி பெருமைப்படுவாங்க. எங்களுக்கும் சந்தோசம்தான். அதுக்காகதானே ஏர்போட் வந்து டாடாலாம் காமிச்சு வழியனுப்பி வச்சோம். ஆனா உங்க போட்டோக்களை வச்சி எங்களை ஏண்டா சாவடிக்கிறீங்க?

 

சரி, ஒத்துக்கிறோம், நாங்க அந்த இடத்தையெல்லாம் மேப்ல மட்டும்தான் பார்த்துருக்கோம், நிஜ வாழ்க்கையில இல்ல. அவ்வளவுதானே? அதுக்காக ஏன், நீங்க ஒருநாள் விட்டு ஒரு நாள் புது படத்தை போடுறீங்க. உங்களுக்கு என்னதான் வேணும்? உங்களுக்கு தேவை, நாங்கெல்லாம் ‘like’-ஐ அழுத்திட்டு “வாவ், சூப்பர், கலக்கலா இருக்கு” இப்படி கமெண்ட் போடணும், அதானே? நீங்க ரகசியமா ஒவ்வொரு நிமிசமும் எல்லா கமெண்டையும் பார்ப்பீங்க. நாலு நாள் கழிச்சு “எல்லோருக்கும் நன்றி!” அப்படின்னு ஒரே வார்த்தையில முடிச்சிட்டு போயிடுவீங்க!

 

சரி, அதைக் கூட ஒத்துக்கலாம். நீங்க நிறைய காசு செலவு பண்ணி அங்க போயிருக்கீங்க, அதனால உங்களை எல்லோரும் பாராட்டனும்னு நினைக்கிறீங்க. புரியுது. ஆனா ஏண்டா செடி, மரம், நாய், பூனைன்னு இதையெல்லாம் புரொஃபைல் பிக்சர்ல போடுறீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? லூசுப்பசங்களா!

அப்புறம் இன்னொரு ரகம் இருக்கு. அதாவது அவங்க படத்துக்கு பதிலா அவங்க குழந்தை படத்தை போடுறது. இந்த மாதிரி ஆளுங்களை பத்தி நாங்க பேசக் கூட விரும்பலை.

 

எல்லாத்தோட பெஸ்ட் லேடிஸ்தான். ஏனுங்க அம்மிணி, உங்க படத்தை கருப்பு வெள்ளையா மாத்தி போட்டா, திடீர்னு அது அழகாயிடுமா? மத்தவங்க உங்களை பார்த்து “ஆஹா. என்ன அழகு! என்ன அழகு!” இப்படி நினைக்கனும், அப்புறம் உங்களுக்கு friend request அனுப்பனும். ம்.. அப்படித்தானே? எங்களுக்குதானே தெரியும் நீங்க எப்படி இருப்பீங்கன்னு!.

 

நீங்க இங்கயும் ஒன்னும் செஞ்சதில்ல. கல்யாணம் ஆகி அங்க போயிட்டு, அங்கேயும் ஒன்னும் செய்யாமதான் இருக்கீங்க. இதில பெருமைப்பட என்ன இருக்கு? இதில தினமும் நீங்க என்ன சமைச்சீங்கன்னு அப்டேட் பண்ணுறது வேற “நான் இன்று என் அன்புக் கணவருக்காக தயிர் சாதம் சமைத்தேன்!

 

சமைச்சீங்களா? உண்மையாவா? இதில வேற அந்த லூசு ஹஸ்பெண்டும் வந்து லைக் போடுவாரு அப்புறம் பொது இடத்தில சொல்வாரு. “தேங்க்யூ டார்லிங், உம்ம்ம்ம்மா…

 

நீங்க இந்தியாவிலிருந்து வந்தவங்கதானே? இந்த மாதிரி விசயமெல்லாம் அநாகரிகம்னும் பொது இடத்தில இப்படியெல்லாம் நடந்துக்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாது? நீங்க இந்தியாவை விட்டுட்டு போனா உடனே எல்லாத்தையும் மறந்துடுவீங்களா?

 

அப்புறம் நீங்க சமைச்ச சாப்பாட்டோட படத்தை மிக ருசியானது எச்சில் ஊறவைக்கும்ன்னு தலைப்போட வேற போடறது…சாப்பாட்டு பார்த்தால்ல தெரியும்.. எச்சில் ஊறுமா, வாந்தி வருமான்னு! இதில வெளிநாட்டுக்காரங்க யாராவது வந்து அது எப்படி செய்யறதுன்னு கேக்கறது! கொய்யால, நீ இண்டர்நெட்டுதானே யூஸ் பண்ணுறே? கூகுள்ள தேடிப்பார்த்தா கிடைக்கப் போகுது.

 

சரி எனக்கு இப்ப ஒன்னு சொல்லுங்க, நீங்க இந்தியாவில இருந்தப்ப ஒரு நாளாவது இப்படி சமைச்சிருக்கீங்களா? உங்க அண்ணனும் நல்ல பையன் தான். அவனுக்காக ஒரு நாளாவது சமைச்சிருக்கீங்களா? யோவ் கணவன்களா, நாங்க உங்களையும்தாம்பா கேட்கிறோம், நீங்க இங்க இருந்தப்ப, ஒருதடவையாவது, உங்கம்மா சாப்பாடு நல்லாயிருக்குனு பாராட்டியிருக்கீங்களா?

 

கணவன் மனைவி இரண்டு பேரும் இந்த மாதிரி லூசுத்தனமான விளையாட்டுகளை விளையாண்டுகிட்டு வருசத்துக்கு 365 நாளும் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிக்கிறீங்க. ஆனா சொல்வீங்க, “நாங்க கிங் கோல்ஸ் ஓரியண்டல் பேலசின் 35வது மாடியில் சூப்பர் டின்னர் சாப்பிட்டோம். செம சைனீஸ் ஃபுட்!” ஏம்பா அது வெறும் சைனீஸ் ஃபுட் தானே? அதுக்கு ஏன் இவ்வளவு சீன் போடறீங்க? இந்தியா சீனாவுக்கு பக்கத்திலதானே இருக்கு.

 

அப்படின்னா உண்மையா என்ன நடக்குதுனு  உங்களுக்கு தெரியலன்னா, இப்ப சொல்றோம் கேட்டுகுங்க. அங்க யாருமே சந்தோசமா இல்ல. நீங்க எவ்வளவு சம்பாதிச்சாலும், சந்தோசமா இருக்க போறதில்ல. வெஸ்டர்ன் டாய்லெட்ல உட்கார்ந்துகிட்டு, “நாம ஏன் இங்க வந்தோம்?”னு யோசிச்சிகிட்டு மட்டும்தான் இருப்பீங்க.

 

நாங்க இந்த உண்மையெல்லாம் சொன்னேன்னா, உடனே நீங்க உங்க ஐ- புரோடக்டெல்லாம் என்கிட்ட காமிப்பீங்க. இதப்பாருங்க, ஐபேட்2-லாம் இங்கேயும் கிடைக்குது, தெரியுமா? அதனால கம்முனு நாங்க சொல்றத கேளுங்க. உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க.

 

இப்ப நீங்க நினைக்க ஆரம்பிச்சிருக்கலாம், எங்களுக்கெல்லாம் பொறாமை, அதான் இப்படியெல்லாம் பேசுறோம்னு, இல்லையா? இதப்பாருங்க, நாங்களும் அங்கெயெல்லாம் போய் இந்த மாதிரியெல்லாம் செஞ்சாலும் இப்படித்தான் பேசுவோம். உங்களால என்ன செய்ய முடியும்?

 

இப்படிக்கு

உள்ளூர் டீக்கடை பெஞ்சு
.. 

நன்றி:

மொழி பெயர்ப்பு உதவி:எஸ்.கே,வைகை 

டீக்கடையில் புலம்பியதை ஒட்டுக்கேட்ட இடம்: http://terrorkummi.blogspot.com

நம்ம மங்குனி போன வாரம் புதுசா
ஒரு கம்ப்யூட்டர் வாங்கினாராம்..

அதுல ஏகப்பட்ட  பிரச்னைன்னு
அந்த கம்பெனிக்கு ஒரு லெட்டர்
எழுதியிருக்காரு பாருங்க..
சான்ஸே இல்ல

மங்கு ஒரு சிறந்த அறிவாளின்னு (?!)
நமக்கெல்லாம் தெரியும்.. அது
இனிமே உலகத்துக்கே தெரிய போகுது
இந்த லெட்டர் மூலமா…

To
&%^$#@&*^%$#- HCL,

( மங்கு அந்த கம்பெனிக்காரனை
கெட்ட வார்த்தையில திட்டினதை
எல்லாம் நாம எடிட் பண்ணிடலாம்..
நமக்கு ஒரு 5 பக்கமாவது மிச்சமாகும்.. )

போன வாரம் நான் வாங்கின
கம்ப்யூட்டர்ல ஏகப்பட்ட தப்பு இருக்கு..

1. என் Keyboard-ல ABCD எல்லாம்
வரிசையா இல்லாம இடம்
மாறி மாறி இருக்கு..

2. என் Key Board-ல Control Key
இருக்கு. ஆனா எத்தனை தடவை
அழுத்தினாலும் என் Wife-ஐ என்னால
Control பண்ணவே முடியல.

3. தப்பு பண்ணினப்ப Wife-கிட்ட
மாட்டிக்காம இருக்க Escape Key-ஐ
அழுத்தி பார்த்தேன்.. அதுவும் சரியா
வேலை செய்யல.. தர்ம அடி..

4. என் Key Board-ல ரெண்டு
‘ Shift ‘ Keys இருக்கு. அதுல
எது Day Shift..? எது Night Shift..?

5. அந்த TV-ல ( Monitor ) சேனல்
மாத்தற பட்டனே இல்ல..
முக்கியமா நீங்க Remote தரலை..
( யாரை ஏமாத்த பாக்கறீங்க.?! )

6. ஆபீஸ்ல இருக்கும் போது
பல தடவை ” Home ” Button-ஐ
அழுத்தி பாத்துட்டேன்.. அது என்னை
வீட்டுக்கே கூட்டிட்டு போகலையே..

7. ” $ ” Button-ஐ அழுத்தினா
அமெரிக்க டாலர் வரலை..

8. அதே மாதிரி ” காபி ” Button-ஐ
அழுத்தினாலும் ” காபி ” வரைல..
என்னய்யா கடை வெச்சு நடத்தறீங்க..?
( எலே மங்கு.. அது ” Coffee ” இல்ல.,
” Copy ” )

9. Caps Lock-ன்னு ஒரு Button இருக்கே.
அதை வெச்சு எங்க வீட்டு மெயின்
கேட்டை பூட்ட முடியுமா..?

10. என் பையன் Homework தப்பா
எழுதினப்பா ” Delete ” Key அழுத்தி
பார்த்தேன்.. ஆனா தப்பா எழுதினதெல்லாம்
அது அழிக்கலையே..

இதையெல்லாம் எனக்கு சரி பண்ணி
தரல.. பிச்சுபுடுவேன் பிச்சு…

இப்படிக்கு
அன்பு மங்குனி அமைச்சர்
( ஆமா.. இப்ப இது ஒண்ணு தான்
குறைச்சல்.! )

டிஸ்கி : அந்த கம்பியூட்டர் கம்பெனிக்காரன்
Suicide Attempt பண்ணினதுக்கும்., இந்த
லெட்டர்க்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.

மங்குனியின் கடிதத்தை தெரியாம படிச்சு எனக்கு சொன்னது: http://gokulathilsuriyan.blogspot.com

(producer தனது ஆபிசில் சில தெலுங்கு பட விசிடிகளை பார்த்து கொண்டிருந்தார். )

director: சார்! உள்ள வரலாமா சார்?

prod: யோவ்! பாரதிகௌதம்….என்னய்யா ஆளே காணும்? வா வா…உட்காரு.

dir: சார், போன தடவ நீங்க தான் சார் என்னைய அடிச்சு விரட்டிவுட்டீங்க!

prod: ஆமா யா! பன்னி கதை, நாய் கதைனு சொன்னா….கோபம் தான் வரும்! சரி, அப்பரம்..இப்ப என்ன படம் direct பண்ணிகிட்டு இருக்க?

(மேசையில் இருந்த தெலுங்கு பட விசிடிகளை பார்த்த கௌதம்)

dir: சார், என்ன சார், தெலுங்கு படம் எடுக்க போறீங்களா?

prod: அது ஒன்னுமில்லையா, சிம்பு கால்ஷீட் இருக்கு. அப்படியே ஏதாச்சு ஒரு தெலுங்கு படத்த ரீமேக் பண்ணலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.

dir: என்ன சார் நீங்க? நீங்க இப்படி பண்ணலாமா? ரீமேக் படமெல்லாம் எடுத்தா, எங்கள மாதிரி creative ideas இருக்குற இயக்குனர்களுக்கு வாய்ப்பு இல்லாமா போயிடாதா சார்:)

prod: அதலாம் ஒன்னும் போகாது. உங்கிட்ட கதை இருக்கா? சொல்லு?

dir: ஆமா சார்! உங்களுக்கு தெலுங்கு படம் மேல இப்படி ஒரு மோகம் இருக்குன்னு எனக்கு தெரியும் சார். என்கிட்ட ஒரு script இருக்கு. ஒரு படம், 5 கதை…..

prod: (வாய் விட்டு சிரித்தார்)

dir: சார், இது காமெடி கதையா? action கதையான்னு கூட தெரியாம ஏன் சார் சிரிக்கிறீங்க?

prod: உன்கிட்ட கதை இருக்குதுனு சொன்னதே பெரிய காமெடி, அதலயும் 5 கதைனு சொன்ன பாத்தீயா….(சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார்)

dir: சார், கிண்டல் பண்ணாதீங்க…கதைய கேளுங்க….5 கதை, 5 characters, எல்லாரும் வெவ்வேற வாழ்க்கை வாழுறாங்க…ஆனா கடைசில ஒரு ipl match சந்திக்குறாங்க. அங்க என்ன நடக்குது….அது தான் சார் கதை. எப்படி?

prod: படத்துக்கு title?

dir: பூமி, கீழே tagline ‘எங்க காமி?’

prod: என்னய்யா? என்னைய பாத்தா geography professor மாதிரி இருக்கா? இந்த 5 பட கதை எல்லாம் உனக்கு ஒத்து வராது. ஒரே கதை, நல்ல கதையா சொல்லு?

dir: so

prod: அதான் சொல்லிட்டேன்ல. நீ தான் கதைய சொல்லனும்.

dir: so

prod: என்னய்யா மறுபடி மறுபடியும் so? கதை இருக்கா இல்லையா?

dir: ஐயோ சார், கதை பெயரே அது தான் சார்!

prod: என்னது?

dir: சோ!

prod: (முகம் மலர்ந்தது) ரொம்ப வித்தியாசமா இருக்கே!

dir: எனக்கு தெரியும் சார்! உங்களுக்கு இந்த கதை பிடிக்கும்னு. இந்த படம் முழுக்க ரொம்ப hi techல போகும் சார். படத்துல hero ஆப்பிள் விக்கிறவரு!

prod: ஆப்பிளா? யோவ்…சாத்துகுடி, மாம்பழம்…இப்படி ஏதாச்சு விக்க சொல்லுய்யா!

dir: சார்! அந்த ஆப்பிள் இல்ல. apple products விக்கிறாரு. iphone salesman.

prod: ஓ…ஓ…சரி சரி.

dir: ஹீரோவோட ஆயுதமே iphone4 தான். அத வச்சு ரோட்ல நடக்குற traffic குற்றங்களையும், அரசியல் வாதி பண்ணுற தப்புகளை ஃபோட்டா எடுத்து, facebookல upload பண்ணுறதுனு அவரோட பொழப்பு!

prod: (அமைதியாக இருந்தார், கொஞ்சம் நேரம் கழித்து) படத்துல ஹீரோயின்?

dir: சார், நம்ம ஊர் பொண்ணு தான் போடனும். அந்த காலத்துல famousஆ இருந்த ஹீரோ அல்லது ஹீரோயின் பொண்ண போட்டால் தான் சரியா இருக்கும்!

prod: ஏன்?

dir: சார்! நம்ம படத்துல எல்லாத்தலயும் புதுமை புகுத்திகிட்டே இருக்கனும் சார்! நவரச நாயகன் கார்த்திக் பொண்ண போடலாமா?

prod: யோவ் அவருக்கு பொண்ணே இல்லையா!

dir: தேவையானி பொண்ணு?

prod: யோவ்…அதுங்க இப்ப தான் எல்கேஜி போகுதுங்க!

dir: ம்ம்….ரம்பாவுக்கு….

prod: நீ வாய மூடு! ஆமா எதுக்கு இப்படிப்பட்ட ஹீரோயின் தேவை?

dir: இந்த படத்துல ஹீரோயினுக்கு கண்ணு பெரிசா இருக்கனும்! அந்த கண்ண வச்சு ஒரு சூப்பர் ஹிட் பாடல் ஒரு புது கவிஞர் எழுதியிருக்கார்!

prod: கதை ஓகே ஆவறதுக்கு முன்னாடியே பாட்டு ரெடி ஆயிட்டா!??

dir: இப்ப எல்லாம் ready-made பாடல்கள் trend. எந்த படத்துக்கும் பாட்டு always ரெடி.

prod: சரி, அந்த புது கவிஞர் யாரு?

dir: (புன்சிரிப்புடன்) நான் தான் சார்!

prod: கொடுமை!

dir: சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

prod: ஐயோ ரொம்ப பெருமையா இருக்குனு சொல்ல வந்தேன். பாட்டு வரிய சொல்லு.

dir: ஹீரோயின் கண்ணு ஷார்ப்பா இருக்குது…அதனால…

“உன் கண்ணு கண்ணமாபேட்டே, அதுல ஏன் என்னைய கொன்னுபுட்ட?”

இப்படி போகுது சார் பாட்டு. இந்த பாடல norway உள்ள ஒரு மலை உச்சியில ஒரு சுடுகாடு இருக்கு. அங்க தான் ஷுட் பண்ண போறோம்.

prod: ஏன்? நம்ம ஊரு சுடுகாட்டுல இந்த பாட்ட எடுக்க முடியாதா?! (கொஞ்சம் கொஞ்சமாய் கோபம் வந்தது)

dir: சார், இந்த பாட்டுல highlightஏ அந்த மலையில் ஒரு சின்ன கல்லு ஒன்னு தொங்கும். அங்க நீன்னுகிட்டு ஆடுனும் நம்ம ஹீரோவும் ஹீரோயினும்.

prod: இந்த ஷாட் பாட்டுல எவ்வளவு நேரம் வரும்?

dir: 10 secondக்கு மேலே காட்ட மாட்டோம்! இந்த பாட்டுல ஒரு speciality இருக்கு.

prod: என்ன அது? (கிண்டலாய் இழுத்தார்)

dir: உலகத்துல உள்ள famous சுடுகாடுகள் இருக்கும் இடத்துக்கு போய் ஷுட் பண்ணுவோம்:)) பாட்டு சூப்பர் ஹிட், எழுதி வச்சுக்குங்க சார்!

prod: போன தடவ என்ன பண்ணேன் நான்?

dir: அடிச்சு விரட்டுனீங்க!

prod: இப்ப விரட்டி அடிக்க போறேண்டா!

dir: ஐயோ சார்!!!

prod: அடிங்க!!!

(அச்சமயம், ஒரு வெள்ளக்காரன் tea glassவுடன் உள்ளே நுழைந்தான்.)

dir: என்ன சார்? வெள்ளக்காரன் எல்லாம் office boyயா வச்சு இருக்கீங்க?

வெள்ளக்காரன்(ஆங்கிலம் கலந்த தமிழில்): நான் office boy இல்ல. tour guide! உங்க ஊருல முக்காவாசி பேரு எங்க ஊருல வந்து தான் படம் எடுக்குறாங்க! அதுக்கு நான் தான் guide.

dir: norway நான் பார்த்தே ஆகனும்.

வெள்ளக்காரன்: உங்க ஊருலே அழகு அழகா இடம் இருக்கு. அதவிட்டுட்டு ஏன் தான் எங்க ஊருல வந்து நாசம் பண்ணுறீங்களோ!!??

*முற்றும்*

இந்த கதை கேட்ட கதையயும் சொன்னது: http://enpoems.blogspot.com

director: “ATM productions வழங்கும் ஆத்தா, பயணம்” இது தான் சார் ஓபனிங்.

producer: யோவ்! கதைய முதல சொல்லுய்யா!

director: சார், இது ஒரு கிராமத்த கதை சார்! ஒரு பெரிய….

producer: wait wait…உன் பேர் என்ன சொன்ன?

director: பாரதி கௌதம்.

producer: ஹாஹாஹா…என்னய்யா பேரு இது?

dir: பாரதிராஜா மாதிரி கிராமத்த படத்த கௌதம் மேனன் மாதிரி ரொம்ப ஸ்டைலீஷா எடுக்கனும்னு ஆசை. அதான்…இந்த பேர வச்சுகிட்டேன்!

prod: சரி கதைய சொல்லு!

dir: சார் ஓபினிங் சீன்….ஒரு பெரிய மாட்டுவண்டி, யாருமில்லாத railway station வெளியே நிக்குது. தண்டவாளத்த long shotல காட்டுறோம். அங்க இருக்கற clockஎ close upல காட்டுறோம். பயங்கரமா காத்து அடிக்குது சார்! மரத்துலேந்து இலை எல்லாம் கீழே விழுது சார்.

prod: எனக்கு தூக்கம் வரதுய்யா! catchingங்கா ஒன்னு இல்லையா!??

dir: சார், அதுக்கு தான் சார் வரேன். எப்போதுமே lateஏ வர train அன்னிக்கு மட்டும் சீக்கிரம் வந்துடுச்சு சார்.

prod: இது ரொம்ப புதுசா இருக்கே…வெரி குட்…மேல சொல்லு.

dir: எல்லாரும் நினைப்பாங்க. நேரம் சரியா இருக்குனு. ஆனா, எல்லாருக்கும் அது bad time!- அப்படின்னு பின்னாடி narration voice போடுவோம் சார். அந்த trainலேந்து ஒரு வயசான பாட்டி கண்ணு ஆபிரேஷன் முடிஞ்சு வறாங்க. கூடவே அவங்க பேத்தியும் இருக்கா.

prod: தமன்னா callsheet என்கிட்ட இருக்கு. அவங்கள இந்த ரோல போட்டுடுவோம்.

dir: இல்ல சார். பாட்டியும் பேத்தியும் ஒரு ஆளு தான் சார் பண்ணனும். double action sir.

prod: தமன்னாவே பண்ணுவாங்கய்யா. மேக் போட்டு பேத்தியா நடிப்பாங்க. போடாம பாட்டியா நடிப்பாங்க. அதலாம் நான் பாத்துகிறேன்…. நீ கதைய மேல சொல்லு.

dir: கண்ணாடி போட்ட ஒரு mechanic அதே ரயில வந்து இருங்குறாரு.

prod: அது என்னய்யா கண்ணாடி போட்ட மெக்கானிக்?

dir: பாரதிராஜா படத்துல கண்ணாடி போட்ட ஹீரோ வர மாதிரி நம்ம படத்துலயும் ஹீரோ கண்ணாடி போடுறாரு சார்…

prod: characters மட்டுமே சொல்லிகிட்டு இருக்க…கதைக்கு போய்யா! கதை இருக்கா இல்லையா?

dir: சார் வரேன் சார். இன்னும் நிறைய characters இருக்கு. ஒரு சின்ன பொண்ணு, 16 வயசு பொண்ணு சினிமால நடிக்கனும்னு ஆசைப்பட்டு ஓடி வறா அதே ரயில.

prod: கிராமத்துக்கு ஏய்யா வறா?

dir: ரயில் மாறி ஏறிட்டா சார்! (கண் கலங்குகிறார்)

prod: அப்பரம் என்ன ஆகுது? அந்த 16 வயசு பொண்ணா யார போடலாம்?

dir: நமீதா.

prod: நமீதாவா? நீ சொல்ற கதையவிட இது இன்னும் shockingஆ இருக்கே!

dir: கவலைப்படாதீங்க சார். ரெண்டே மாசம் 35 கிலோ குறைப்பாங்க. 16 வயசா மாறுவாங்க! நான் guarantee சார் அதுக்கு!

prod: சரி கதையில அப்பரம் என்ன ஆகுது…..

dir: புதுசா கல்யாணம் ஆனா ஜோடி, அமெரிக்கா return ஒரு பையன் – இத்தன பேரும் அந்த stationல நிக்குறாங்க. shot freeze!

எழுத்து-இயக்கம்: உங்கள் பாரதி கௌதம்
அப்படினு போடுறோம் சார்!

prod: title credits எல்லாம் editor பாத்து பாரு. அந்த மாட்டுவண்டி எதுக்கு வெளியே நிக்குது?

dir: பின்னிட்டீங்க சார்! ஒரு audienceஆ இந்த படத்துக்குள்ள நீங்க வந்துட்டீங்க. i like it sir. அந்த மாட்டுவண்டில தான் இவங்க எல்லாருமே கிராமத்துக்குள்ள போறாங்க. அந்த மாட்டுவண்டிய ஓட்டுறது அந்த கிராமத்துக்கே தெய்வம் மாதிரி.

prod: ஆமா அந்த ரோலுக்கு யார….

dir: சார் என் friend நவீன்குமார் பண்ணனும் சார். ‘அந்த பக்கம் போகாதீங்க இந்த பக்கம் வாங்க’ அப்படினு ஒரு ஹிட் படம் எடுத்தாரே அவரு சார்.

prod: ஓ ஆமா ஆமா!

dir: இந்த powerful role அவர் தான் பண்ணனும். என் படத்துல அவர் கண்டிப்பா நடிச்சே ஆகனும்.

prod: அவர் எடுத்த முந்தைய படத்துல கூட நீ நடிச்ச தானே?

dir: ஆமா சார். இப்படி மாத்தி மாத்தி நடிச்சு கொடுக்குறது தானே சார் இப்ப trend!

prod: (தலையில் அடித்து கொண்டார்) அப்பரம் அந்த மாட்டுவண்டிக்கு என்ன ஆகுது?

dir: திடீரென்னு மழை பெய்யுது. வண்டி வழில breakdown ஆவுது?

prod: மாட்டுவண்டி breakdownஆ? டேய் லாஜிக்கே இல்லையடா இதுல!??

dir: சார், வண்டில problem சார். அத சரி பண்ண மெக்கேனிக் கீழே இறங்கி வேலை பாக்குறாரு. அந்த வேலை பாக்குற ஸ்டைல பாத்து தமன்னாவுக்கு காதல் வரது?

prod: பாட்டி தமன்னாவுக்கா? பேத்தி தமன்னாவுக்கா?

dir: சார், பேத்திக்கு தான் சார் காதல் வரது!

prod: இப்படிலாம்கூட காதல் வருமா?

dir: சார் இது ஒரு வித்தியாசமான காதல் சார்! தமிழ் சினிமாவுல இப்படி ஒரு காதல் காட்சிய audience பாத்து இருக்க மாட்டாங்க!

prod: சரி சொல்லு….

dir: இங்க ஒரு பஞ் டயலாக் சார்! மெக்கேனிக் வண்டி சக்கரத்த கழட்டி உருட்டுறாரு. அத பாத்து பாட்டி கேக்குறாங்க, “தம்பி, ஏன் உருட்டுறீங்க?”

அதுக்கு மெக்கேனிக் பஞ் டயலாக் சொல்றாரு,
“உருட்டுறதுல நான் பூனை மாதிரி.
மிரட்டுறதுல நான் யானை மாதிரி.”

அப்படியே மெக்கேனிக் கண்கள close upல காட்டுறோம். கண்ணு சிவந்து போகுது சார்.

prod: யோ, பாட்டி சொன்னதுக்கு எதுக்கு டா பஞ் டயலாக்?

dir: சார், audience விரும்புவான் சார். நீங்க பாருங்க? இது தான் 2011 வருஷத்துல ஹிட் பஞ் டயலாக்கா வர போகுது. இந்த ஒரு பஞ் தான் படத்த 100 நாள் ஓட வைக்க போகுது.

prod: (producer தன் கோபத்தை அடக்கி கொள்கிறார்)

dir: repair பண்ணி முடிச்ச பிறகு வண்டி கிளம்புது…. போற வழில மின்னல், இடி, மழை… ஒரே இருட்டு! நாலு பேரு காட்டுக்குள்ளேந்து வராங்க. முஞ்சிய மூடி இருக்காங்க. கண்ணு மட்டும் தான் தெரியுது. கையில எல்லாருமே gun வச்சு இருக்காங்க. வண்டில இருக்குற எல்லாரையும் close upல காட்டுறோம். அப்படியே அடுத்த ஷாட்…. முஞ்சிய மூடி இருக்குற நாலு பேருல ஒருத்தர் மட்டும் name tag போட்டு இருக்காரு…. name tagஎ close upல காட்டுறோம்.

“அக்ரம் கான் – son of wasim khan”

இங்க தான் interval block!

எப்படி சார் கதை?

prod: எந்த தீவிரவாதிய்யா name tag போட்டு இருப்பான்?

dir: சார், நம்ம ஒரு வித்தியசாமன படம் எடுக்கறதயே நீங்க அப்பெப்ப மறந்துடுறீங்க!!

prod: சரி 2nd halfல கதை?

dir: இந்த கிராமத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன சம்மந்தம்? the mystery unfolds…….

prod: ஆமா? அப்பவே கேட்கனும்னு இருந்தேன். அந்த மெக்கேனிக் ரோலுக்கு…. யார போடலாம்னு…

dir: கார்த்தி தான் இதுக்கு சரியான மேச்.

prod: யோவ்… அவருக்கும் தமன்னாவுக்கும் ஏதோ கிசுகிசு….

dir: இருக்கட்டும் சார். நம்ம படத்துக்கு அப்பரம் அவங்க ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிகிட்டா நமக்கு தான் சார் பெருமை.

prod: யோ, அப்படிலாம் ஒன்னும் நடக்ககூடாதுய்யா! இன்னும் ரெண்டு படத்துக்கு தமன்னா கால்ஷீட் வாங்கி வச்சுருக்கேன்ய்யா!

dir: சார், தமன்னா கல்யாணத்துக்கு அப்பரம் நடிக்கமாட்டாங்க சார். அவங்க மாமனாரு ரொம்ப strict! 5 வருஷத்துக்கு அப்பரம் கார்த்தியும் தமன்னாவும் சேர்ந்து ஏதாச்சு சுக்கு காபி விளம்பரத்துல வருவாங்க சார், அப்ப பாத்துக்குங்க சார்!

prod: என்னய்யா நீ வேற……? சரி இந்த படத்துக்கு location எங்க?

dir: america. chicago பக்கத்துல இருக்குற ஒரு கிராமம்.

prod: என்னது? அமெரிக்காவா? யோ…. இந்த கதைக்கு எதுக்கு டா அமெரிக்கா.

dir: சார், போன படத்துல எச்சி துப்புற மாதிரி ஒரு காட்சி இருந்துச்சு. அந்த காட்சியவே நாங்க switzerlandல தான் shoot பண்ணுனோம்.

prod: (கையில் வைத்திருந்த பேப்பரை மேசையில் வீசினார்.) நான் கொலவெறியா போறதுக்குள்ள ஓடி போயிடு! நீ எல்லாம் ஒரு director??? உன்கிட்ட கதை கேட்டேன் பாரு…என்னைய…..

dir: சார் சார்…. கோபம் படாதீங்க சார்! என் குருநாதரின் ‘நடுநிசி நாய்கள்’ படம்
மாறி ‘பரதேசி பன்னிகள்’ அப்படினு ஒரு கதை வச்சு இருக்கேன் சார்…. அந்த கதைய கேக்குறீங்களா சார்?

producer: எடு அந்த வெளக்கமாத்த!!!!!!!

கதை கேட்ட கதைய சொன்னது: http://enpoems.blogspot.com

விளம்பர அட்டையை கண்ட நான் அந்த கடையினுள் நுழைந்தேன் ‘நாய் எப்படி பேசும்’ என்ற எண்ணத்தோடு. முதலாளியிடம் கேட்ட போது பின்னால் கட்டி போட்டிருப்பதாக சொன்னான். பின்பக்கம் சென்ற நான் அங்கு ஒரு நாய் கட்டி போடப்பட்டிருப்பதை கண்டேன். நீதான் அந்த பேசும் நாயா என்று கேட்டேன். ஆமாம் என்று சொன்னது அந்த நாயும். சரி உன்னை பற்றி சொல் என்றேன்.

அந்த நாய் சொன்னது: நான் சின்ன வயசா இருக்கும் போதே எனக்கு பேச வருவதை தெரிந்து கொண்டேன். அரசாங்கத்துக்கு உதவ விரும்பினேன் அதனால் CBIஇடம்  என்னை பற்றி சொன்னேன். அவர்கள் உடனடியாக என்னை நாடு நாடாக அழைத்து சென்று தீவிரவாதிகள் கூடும் இடங்களில் என்னை விட்டார்கள். பெரிய தலைவர்களின் ரகசிய கூட்டங்களில் அமர விட்டார்கள். என்னுடைய சிறப்பு தெரியாத அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டு என்னுடைய அதிகாரியிடன் தெரிவித்தேன். இப்படியாக போய் கொண்டிருந்த காலத்தில் எனக்கு அந்த வேலை போரடிக்க ஆரம்பித்தது. எனவே வேறு வேலை வேண்டும் என்று HR டிபார்ட்மெண்டில் கேட்டேன். அவர்கள் என்னை ஒரு விமான நிலையத்தில் ரகசிய வேலை செய்ய பணி அமர்த்தினார்கள்.அங்கே என்னுடைய வேலை சந்தேகத்திற்கு உரியவர்களின் அருகில் அமர்ந்து அவர்கள் பேசுவதை கேட்டு உரிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவிப்பேன். இப்படியாக பல ஆண்டுகள் சிறப்பாக வேலை செய்து நிறைய மெடல்களும் பதவி உயர்வுகளும் வாங்கினேன். இதற்கு இடையில் எனக்கு கலியாணம் ஆகி இரண்டு குழந்தைகளும் பிறந்தன. அவர்களும் படித்து வேலைக்கு போக ஆரம்பித்து விட்டார்கள். இப்போது பணி ஒய்வு பெற்று சந்தோசமாக இருக்கிறேன்.
இந்த கதையை கேட்டு அசந்து போன நான் முன்பக்கம் வந்து முதலாளியிடம் அதன் விலை விசாரித்தேன். அவர் சொன்ன விலை வெறும் நூறு ரூபாய் மட்டுமே. உடனே பணம் கொடுத்து அந்த நாயை வாங்கி கொண்ட நான் ஆர்வம் தாங்காமல் ஏன் இந்த பேசும் நாயை வெறும் நூறு ரூபாய்க்கு விற்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்
இந்த நாய் வெறும் பொய் மட்டும் தான் பேசும்ங்க. அதான் இந்த விலைக்கு விற்கிறேன்.
அப்பாடா.. ஒரு வழியா பர்ஸ்ட் இயர் முடிஞ்சுது..
போன வருஷ ஆரம்பத்தில.. என்னமா சீனியர்லாம் எங்கள ‘லுக்கு’ உட்டாங்க..  சொல்லி மாளாது..
காம்பஸ்  முழுசா எல்லாமே புதுசா இருந்திச்சு.. யாரப் பாத்தாலும் பயந்து பயந்து மரியாதையா நடந்துக்கணும்..
நல்ல வேலை.. எங்க காம்பஸ்ல  ‘ராகிங்’ கலாச்சாரம்லாம் இல்லை..
அது மட்டும் இருந்திருந்தா.. ம்ம்ம்.. இப்ப நெனைச்சாலும் பயங்கரமா இருக்கு !
வராண்டா பக்கம் தெரியாமப் போனாக் கூட திட்டு. அடி மட்டும்தான் வாங்கலை. அழுகை அழுகையாவரும். அழுதாலும் எங்கள, எங்க போக்குல விட மாட்டங்களே..  அவ்ளோ கண்டிப்பு….
மொதோ மூணு மாசம் எங்கள்ல யாராவது படிக்க ஆரம்பிச்சாங்க..? இல்லையே.. எப்படி முடியும்.. அழுகை, துக்கம், பயம்,… வேற என்னத்த அனுபவிச்சோம். அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமா என்ன செய்யணும் புரிய ஆரம்பிச்சுது.
இப்ப அடுத்த வருஷம் ஆரம்பம். இப்ப பயம், கவலை, அழுகை எதுவுமே இல்லை.. எப்படி நடந்துக்கணும்னு ஒரு வழியா ஐடியா கெடைச்சிடிச்சே. போன வருஷ அனுபவம்தான்..
இப்ப.. நாங்களும் சீனியர் தான்….. இல்லை இல்லை,
“நாங்க மட்டும்தாம் சீனியர்…..
எங்களுக்கு உண்டு ஜூனியர்.. “
போன வருஷ  ‘சீனியர்’ இப்ப நோ மோர் ‘சீனியர்’.. அவங்களாம் இப்போ ஏதோ  ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்டாம்………………..
“நானு  யாரா ?”, இந்த வருஷ சீனியர் கே.ஜி  கிளாஸ்ல  நானும் ஒரு ஸ்டூடன்ட் சார்.
டிஸ்கி : பொண்ணு ஜூனியர் கே.ஜி லேருந்து சீனியர் கே.ஜி போயிருக்கா.. அவ சார்பா, நா திங்க் (?) பண்ணி எழுதினது: http://madhavan73.blogspot.com

முதலில் ஆண்கள் எவ்வாறு பணம் பெறுகிறார்கள் என படி முறை வாயிலில் பாப்போம்

  • வாகனம் பார்க் பண்ணுதல்
  • ATM  மெசினுக்கு செல்லல்
  • கார்டை உள் நுழைத்தல்
  • பின் நம்பேர் அடித்தல்
  • பணம் பெறல
  • கார்ட் டை மீள பெறல
  • வண்டியை எடுத்து கொண்டு செல்லல்

இப்போது பெண்கள் எப்படி பணம் பெறுகிறார்கள்   என்று பாப்போம்

  1. வண்டியை பார்க் செய்தல்
  2. மேக்கப் சரி செய்தல் /சரி பார்த்தல்
  3. வண்டியின் என்ஜினை ஆப் செய்தல
  4. மேக்கப் சரி செய்தல்
  5. ATM க்கு செல்லுதல்
  6. தனது பணப்பையில் ATM அட்டையினை தேடுதல்
  7. கார்டை உல் நுழைதல்
  8. கன்சலை அழுத்துதல்
  9. பின் நம்பர் எழுதிய துண்டு சீட்டை மீன்டும் பண பையினுள் தேடுதல்
  10. கார்டை உள் நுழைதல்
  11. பணத்தை பெறல
  12. வண்டிக்கு செல்லல
  13. மேக்கப் சரி பார்த்தல்
  14. வண்டியை ஸ்ட்ராட் செய்தல்
  15. வண்டியை ஆப் செய்தல்
  16. மீண்டும் ATM  க்கு செல்லல்
  17. கார்டை எடுத்தல்
  18. வண்டிக்கு வரல்
  19. மேக்கப் சரி பார்த்தல்
  20. ஸ்ட்ராட செய்தல்
  21. வண்டியை 1/2 KM  தூரம் வரை ஒட்டி செல்லல்
  22. பின் ஹன்ட்பிரக்விடுவித்தல்
  23. வண்டியை தொடர்ந்து ஓட்டுதல

தெரிந்து கொண்ட இடம்: http://sangarfree.blogspot.com

என்னதிது? கி.மு / கி.பி தெரியும், காமு சோமு தெரியும்,  டீ காபி கூட தெரியும், இது என்ன புதுசா க.மு Vs  க.பி னு மண்டைய பிச்சுக்கரீங்களா….

அதான்… அதான் வேணும் எனக்கு…. நாலு பேரை மண்டைய பிச்சுக்க வெச்சா அன்னைக்கி நான் நிம்மதியா தூங்குவேன்…. ஹி ஹி ஹி… ஒகே ஒகே நோ டென்ஷன்….

விசியத்துக்கு போவோம்…. க.மு Vs  க.பி னா கல்யாணத்துக்கு முன் Vs கல்யாணத்துக்கு பின். அதாவது ரங்கமணிகள் ஒரே situation ஐ கல்யாணத்துக்கு  முன்னாடி எப்படி ஹீரோ மாதிரி டீல் பண்ணுறாங்க, அதே கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி (!!!!?????) மாறி போய்டராங்கங்கறதை  இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னை போன்ற அப்பாவி தங்கமணிகள் சார்பாக எடுத்து இயம்பவே இந்த பதிவு… ம்ம்ம்ம்…. மூச்சு வாங்குது போங்க…

இப்போ உங்க முகம் அப்படியே “வதனமோ சந்திர பிம்பமோ” னு சொல்லுற மாதிரி பிரகாசமாகுதா அப்போ நீங்க ஒரு “தங்கமணி”, அதே கேப்டன் படத்துல வர்ற மாதிரி கண்ணு இன்ஸ்டன்ட்ஆ சிவக்க உதடு துடிக்க மொறைக்கரீங்களா அப்போ நீங்க ஒரு “ரங்கமணி”

எப்படி நம்ம கண்டுபிடிப்பு…? ஒகே ஒகே…. நோபல் பரிசு எல்லாம் வேண்டாம்னு சொன்னா நீங்க கேக்கவா போறீங்க…. சரி சரி ரெண்டு மட்டும் குடுங்க போதும்…. எங்க வீட்டு showcase ல அவ்ளோ தான் எடம் இருக்கு…

********************************************

சிச்சுவேசன் ஒண்ணு - ரங்கமணிக்கு காய்ச்சல், ஆனாலும் Sincere சிகாமணியா பிசினஸ் விசியமா வெளியூர் போய் இருக்கார். அப்போ அவருக்கு போன் வருது 

கல்யாணத்துக்கு முன் : "ஹலோ சொல்லு டார்லிங்.... இப்போ தானே பேசின. என்ன? ஓ...எனக்கு இப்போ ஒடம்புக்கு பரவாயில்லயானு கேக்க கூப்டியா.... உனக்கு என் மேல எவ்ளோ அன்பு.... நான் ரெம்ப லக்கி"

கல்யாணத்துக்கு பின் : "சொல்லு. என்ன? மீட்டிங்ல இருக்கேன்... ம்... சரி வெய்யி....வேலை இருக்கு.... அப்புறம் பேசறேன்" (மனதிற்குள் - வெளியூர் வந்தும் மனுசன நிம்மதியா விடாம...ச்சே....)

********************************************

சிச்சுவேசன் ரெண்டு - ரங்கமணியும் தங்கமணியும் பீச்சில் அமர்ந்து இருக்கிறார்கள் 

கல்யாணத்துக்கு முன்: "எப்படி தங்கமணி இப்படி கோர்வையா கதை சொல்ற மாதிரி அழகா பேசற? நீ பேசறதை கேக்கறதுக்கே ஆபீஸ் எப்படா முடியும்னு இருக்கு எனக்கு தினமும்"

கல்யாணத்துக்கு பின்: "ஏன் இப்படி தொணதொணக்கற? உனக்கே வாயே வலிக்காதா? ( மனதிற்குள் - இதுக்கு பேசாம நான் ஆபீஸ்ல உக்காந்து internet browse பண்ணிட்டாச்சும் இருக்கலாம்)

********************************************

சிச்சுவேசன் மூணு - ரங்கமணியும் தங்கமணியும் கோவிலில். தங்கமணி ஒரு பெண்ணின் வளையலை காட்டி "அழகா இருக்கில்ல" னு சொல்றாங்க 

கல்யாணத்துக்கு முன்: (மனதிற்குள்) "வாவ்.... காதலிக்க ஆரம்பிச்சு 100 வது நாளுக்கு என்ன கிப்ட் வாங்கறதுன்னு மண்டைய ஒடைச்சுட்டு இருந்தேன்... வளையல் வாங்கி surprise ஆ அசத்தணும்"

கல்யாணத்துக்கு பின் : (மனதிற்குள்) "ஐயோ..... கல்யாண நாள் வேற வருதே... பர்சை காலி பண்ணாம விடாது போல இருக்கே. எப்பவும் போல காது கேக்காத மாதிரியே maintain பண்ணிக்கணும்.... அதான் நமக்கும் நல்லது நம்ம பர்சுக்கும் நல்லது"

********************************************

சிச்சுவேசன் நாலு - ரங்கமணியும் தங்கமணியும் ஒரு உணவகத்தில். ரங்கமணி காளிப்ளவர் மஞ்சூரியனை ரசித்து சாப்பிட "உங்களுக்கு ரெம்ப பிடிச்சதா... இருங்க chef கிட்ட எப்படி செய்தாங்கன்னு கேட்டுட்டு வரேன்"

கல்யாணத்துக்கு முன்: "எனக்கு ஒண்ணு பிடிக்கிதுனதும் இவ்ளோ ஆசையா கத்துக்க நினைக்கிறியே... இதுக்காகவே எப்படி சமைச்சு போட்டாலும் சந்தோசமா சாப்பிடுவேன்"

கல்யாணத்துக்கு பின்: "போதும் போதும்....ஏன்? எனக்கு காளிப்ளவர் மஞ்சூரியன் புடிக்காம போகணுமா?"

********************************************

சிச்சுவேசன் அஞ்சு - ரங்கமணிக்கு அசைவம் பிடிக்காது என்றதும் தானும் அதை சாப்பிடபோவதில்லை என்கிறார் தங்கமணி 

கல்யாணத்துக்கு முன்: "ஏம்மா? உனக்கு புடிச்ச எதையும் நீ எனக்காக தியாகம் பண்ண கூடாது. சரியா"

கல்யாணத்துக்கு பின்: "ஏன்? உனக்கு பிடிக்காத எதையாச்சும் என்னை விட சொல்ல போறியோ?" (இப்படி குதர்க்கமா யோசிக்கறது எல்லாம் ரங்கமணி போஸ்ட் குடுத்த அடுத்த நொடி வந்துடும் போல)

********************************************

சிச்சுவேசன் ஆறு - தங்கமணி புது புடவை கட்டி இருக்கிறார். "எப்படி இருக்கு?" னு ரங்கமணி கிட்ட கேக்கறாங்க 

கல்யாணத்துக்கு முன்: "புடவை சுமார் தான்... ஆன நீ கட்டி இருக்கறதால அதுக்கு மவுசு கூடிப் போச்சு"

கல்யாணத்துக்கு பின்: "பொடவை எல்லாம் நல்லாத்தான் இருக்கு....."  (அதுக்கப்புறம் ஒரு "indifferent look " அதுக்கு என்ன அர்த்தம்ன்னு ரங்கமணிகளுக்கே வெளிச்சம்)

********************************************'

சிச்சுவேசன் ஏழு - தங்கமணி அவங்க தோழி கல்யாணத்துக்காக வெளியூர் போறதா சொல்றாங்க 

கல்யாணத்துக்கு முன்: "என்னது ரெண்டு நாளா? சான்சே இல்ல... என்னால உன்னை பாக்காம இருக்க முடியாதும்மா. வேணும்னா நல்ல காஸ்ட்லி கிப்ட் வாங்கி அனுப்பிடலாம்"

கல்யாணத்துக்கு பின்: "அப்படியா.... பிரிண்ட்ஸ் எல்லாம் பாத்தா என்னை மறந்துடுவ இல்ல? வேணா இன்னும் ரெண்டு நாள் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாயேன்... உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்" (மனதிற்குள் - ஐ....தங்கமணி என்ஜாய்... உடனே நம்ம கோஷ்டிக்கு போன் போட்டு பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணனும்....) "என்னமா நீ இன்னும் போலயா?"

********************************************'

ஏழுக்கு மேல எழுதினா ஏழரை நாட்டு சனி ஆரம்பிக்கறதாவும் அதோட விளைவா ஆட்டோ இல்ல லாரியே வரும்னும் நம்பத்தகுந்த வட்டார செய்திகள் வந்தபடியால் அப்பாவி தங்கமணி உங்களிடம் இருந்து விடை மற்றும் வடை பெறுகிறாள்....  எஸ்கேப்......

Disclaimer Statement: இந்த பதிவை படிச்சதும்.... அதன் விளைவாக உங்கள் வீட்டில் நடக்கும் அடிதடி, சட்டி பானை பாத்திர சண்டை, இன்னும் மற்ற பிற (!!!???) விளைவுகளுக்கு அப்பாவியின் ப்ளாக் பொறுப்பில்ல... இந்த Disclaimer Statement மூலமாக சொல்லி கொள்வது என்னவென்றால் கேஸ் கோர்ட் எல்லாம் செல்லாது செல்லாது செல்லாது... (ஹி ஹி ஹி)

இப்படிக்கு,
முன்ஜாக்கிரதை மற்றும் முன் ஜாமீன் புகழ் - அப்பாவி தங்கமணி
தாங்க்ஸ்

முன் குறிப்பு:
சும்மா சிரிக்க மட்டும்… அதை மறந்து டென்ஷன் ஆகி தல தலையா அடிச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல…:))

“டாக்டர் ப்ளீஸ்… எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்ல”

“இன்னொரு முறை சொல்லுங்க…” என டாக்டர் சந்தோசமாய் பாட்டு படிக்க

“என்ன டாக்டர் இது? நாங்க எவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கோம்… உங்களுக்கு விளையாட்டா இருக்கா?” என அந்த பெற்றோர் கோபமாய் பேச

“சரி சரி… பேஷன்ட் எங்க?”

“இதோ… உங்க முன்னாடி உக்காந்துட்டு இருக்கறது தான் பேஷன்ட்”

“என்ன விளையாடறீங்களா? முழுசா முள்ளங்கி பந்தாட்டம் இருக்கற ஒரு ஜென்மத்தை என்னமோ ஐ.சி.யு கேஸ் மாதிரி எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்லனு சொல்லி ஏன் ஆசைய கிளப்பினீங்க?” என இப்போது கோபம் கொள்வது டாக்டர் முறையானது

“ஐயோ டாக்டர்… நீங்க என் புள்ளகிட்ட பேசி பாருங்க,உங்களுக்கே புரியும்” என அவன் அம்மா கூற

“அப்படியா?” என பேஷண்டை அளவெடுப்பது போல் பார்த்த டாக்டர் “உங்க பேர் என்ன?” என கேட்க

“எந்த பேரை கேக்கறீங்க? சொந்த பேரா இல்ல ப்ளாக் பேரா?”

“அதென்ன ப்ளாக்?” என டாக்டர் விழிக்க

“என்ன ப்ளாக்ஆ? ச்சே… நீங்க எல்லாம் என்ன டாக்டர்? அது வலைப்பூ… நம் மனதின் வலையில் சிக்கும் எண்ண பூக்களை எல்லாம் தொடுத்து மாலையாய் கோர்த்து போட ஒரு கழுத்து…” என பேஷன்ட் விளக்கம் கூற

“ஓ… முழுசா முத்திடுச்சு போல” என மனதிற்குள் நினைத்த டாக்டர் “எப்போல இருந்து இந்த மாதிரி இருக்கு?” என டாக்டர் பெற்றோரிடம் கேட்க

“நானே சொல்றேன் டாக்டர்?” என்ற பேஷன்ட் “ஆரம்பத்துல எல்லாம் யாரோ எழுதின ப்ளாக்ல போய் சும்மா படிச்சும் படிக்காமையும் கன்னா பின்னானு கமெண்ட் மட்டும் போட்டுட்டு இருந்தேன்… திடீர்னு ஒரு நாள் ஒரு பதிவர் ‘நீங்க இவ்ளோ சுவாரஷ்யமா கமெண்ட் எழுதறீங்களே… நீங்களே ஏன் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாது’னு கேட்டார்… அன்று விழுந்த விதை தான், இன்று ஆலமரமாய் 500 followerகளும் ஆயிரம் பதிவுகளும் என வளர்ந்து நிற்கிறது” என உணர்ச்சிவசப்பட்டார்

“சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தவன் ஒருத்தன்…இப்ப மாட்டிட்டு முழிக்கறது நான்” என மனதிற்குள் புலம்பிய டாக்டர் “அப்படி என்ன தான் எழுதுவீங்க?” என கேட்க

“எதை வேணாலும் எழுதுவேன் டாக்டர்… உதாரணத்துக்கு சொல்லணும்னா… ஒரு நாள் ஒரு கரப்பான் பூச்சிய அடிச்சுட்டேன்… அதை ‘நானும் கரப்பானும்’னு ஒரு போஸ்ட் போட்டேன்….இன்னொரு நாள், ஒரு பிச்சகாரனுக்கு பத்து பைசா போட அவன் இன்னும் பத்து பைசா சேத்து திருப்பி குடுத்தான், அதை ‘பிச்சையிடம் பிச்சை’ ஒரு போஸ்ட் போட்டேன்”

“அட கருமமே…அதெல்லாமா எழுதுவீங்க…படிக்கறவன் காரி துப்ப மாட்டான்”

“ஐயோ போங்க டாக்டர்… உங்களுக்கு விசயமே புரியல… அதிகமா திட்டப்படாத பதிவரும் அதிகமா துப்பப்படாத பதிவும் பிரபலமானதா சரித்தரமே இல்ல” என அவர் பெருமிதமாய் கூற

“கருமம் கருமம்” என தலையில் அடித்து கொண்ட டாக்டர் “அது சரி… இந்த எழுதற ஐடியா எல்லாம் எப்ப தோணும்?”

“அதுக்கு ஒரு எல்லையே இல்ல டாக்டர்… பல்லு விளக்கும் போது தோணும், பாலத்த கடக்கும் போது தோணும், சாப்பிடறப்ப தோணும், சண்டை போடறப்ப தோணும், தூங்கறப்ப தோணும், துப்பரப்ப தோணும், நடக்கறப்ப தோணும், நிக்கறப்ப தோணும், கொசு அடிக்கும் போது தோணும், கொசுறு நியூஸ் படிக்கறப்ப தோணும்… ட்ரெயின்ல போறப்ப தோணும்… தலைவலிக்கரப்ப தோணும்… தோணும் போது தோணும்… தோணாத போதும் தோணும்… தோணனும்னு நினைக்கறப்ப தோணாது… ஆனா தோணாதுனு நினைக்கறப்ப தோணும்… தோணினாலும் தோணும்னு நினைக்கறப்ப தோணாம கூட போகும்… ஆனா தோணவே தோணாதுனு நினைக்கறப்ப கண்டிப்பா தோணாம போகாது…அவ்ளோ ஏன்? இப்ப கூட ‘மெண்டல் டாக்டரும் மென்நவீனத்துவ பதிவரும்’னு ஒரு பதிவு எழுதணும்னு தோணுது”

“என்னது மெண்டல் டாக்டரா?” என டாக்டர் டென்ஷன் ஆக

“ப்ளீஸ் டாக்டர்… தப்பா எடுத்துக்காதீங்க… எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்ல” என பேஷன்டின் அப்பா கூற, அந்த “எவ்ளோ செலவானாலும் பரவால்ல” என்ற வாசகம் டாக்டரின் கோபத்தை காணாமல் போக செய்தது

“இங்க பாருங்க தம்பி… இப்படி நினைச்ச மாதிரி எல்லாம் எழுத கூடாது… அது நல்லதில்ல” என டாக்டர் அட்வைஸ் போல் கூற

“என்ன நல்லதில்ல? மழைல ஒரு பூ கீழ விழுகரத பாத்தா என்ன தோணும் தெரியுமா?

ஒருமுறை பூத்த பூ
ஒரே மழையில் விழுந்ததே
இன்னொருமுறை பூக்குமா
இருந்தாலும் அது போல் வருமா!!!

அதே மழைல எங்க பக்கத்துக்கு வீட்டு குண்டு மஞ்சுளா நடந்து போறதை பாத்தப்ப பீலிங்கோட இப்படி தான் எழுத தோணுச்சு..

மலையே
மழையில்
நனைந்து
நகர்கிறதே!!!

இந்த கவிதை எல்லாம் நல்லதில்லைன்னு நீங்க எப்படி சொல்றீங்க?”

“இங்க பாருங்க… நீங்க எழுதறது சமுதாயத்துக்கு உபயோகமா இருக்கணும் ” என டாக்டர் புரிய வைக்க முயன்றார்

“கண்டிப்பா… அப்படி கூட எழுதி இருக்கேன்… நான் எழுதின ‘குட்டையில் ஊறிய மட்டை’ போஸ்டை படிச்சுட்டு ஒருத்தர் இனி ஜென்மத்துல இன்டர்நெட் பக்கம் வர மாட்டேன்னு போய் இப்போ நல்ல வேலைல நிலைச்சு இருக்கறதா தகவல் வந்தது… அது மட்டுமில்ல, என்னோட ‘மண்டையில் ஒரு மரிக்கொழுந்து’ கதைய ஒரு கோமா பேஷன்டுக்கு தினமும் படிச்சு காட்டினதுல நாலே நாளுல அவர் ராவோட ராவா வீட்டுக்கு ஓடி போயிட்டாராம்… இப்ப அந்த ஹாஸ்பிடல்ல அதான் ட்ரீட்மென்ட்ஆ யூஸ் பண்றாங்களாம்… இப்ப சொல்லுங்க எவ்ளோ உபயோகமான வேலை எல்லாம் செய்யுது என் பதிவுகள்”

“ஸ்ஸ்ஸ்ஸ்ப்பப்பா…. எப்படி புரியவெக்கறது?” என வெகு நேரம் யோசித்த டாக்டர் “இங்க பாருங்க தம்பி… எதாச்சும் தத்துவம் பித்துவம்னு எழுதினாலும் உபயோகம்…” என டாக்டர் முடிக்கும் முன்

“ஓ இருக்கே… ஜில்லுனு ஒரு மோர்னு ஒரு அருமையான பதிவு இருக்கே” என உற்சாகமாகிறார் பேஷன்ட்

“என்னது? மோர்ல என்ன கொடும தத்துவம் இருக்கும்?” என டாக்டர் குழம்புகிறார்

“என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க? மோர் எப்படி தயாராகுது… பாலாடையை கடைந்து அதில் இருந்து கொழுப்பான வெண்ணையை நீக்கி உருவாவது தானே மோர்… இதுல இருந்து உங்களுக்கு என்ன புரியுது?”

“ம்… உனக்கு முத்தி போச்சுன்னு புரியுது?” என தலையில் அடித்து கொண்டார் டாக்டர்

“ஹையோ ஹையோ… இதை புரிஞ்சுக்கற அளவுக்கு நீங்க பக்குவப்படலை டாக்டர்… அதாவது… எப்படி பாலாடையில் இருந்து வெண்ணையை நீக்கி மோர் உருவாகிறதோ அது போல நம் வாழ்வில் வெண்ணை போன்ற கெட்ட விசயங்களை அகற்றினால் மோர் போன்ற மோட்சத்தை அடையலாம்னு சொல்ல வரேன் டாக்டர்”

ஒரு நிமிடம் டாக்டருக்கே தனக்கு தான் விவரம் போதவில்லையோ என தோன்ற தொடங்கியது… ஒருவாறு சமாளித்து “தம்பி நான் என்ன சொல்ல வரேன்னா…” என்பதற்குள்

“டாக்டர், நான் என்ன சொல்ல வரேன்னா… நான் மொதலே மேட்டர் சொல்லிட்டா, நீங்க மேட்டர் படிச்சுட்டு மீட்டர் கட் பண்ணிட்டு போய்ட்டா நான் மீட்டர் வட்டி வாங்கி ப்ளாக் நடத்தற மேட்டர் என்ன ஆகறது. இன்னும் சொல்லப்போனா… மேட்டர்க்கு மேட்டர் தேத்த வழி இல்லாம தான் நான் இப்படி பீட்டர் விட்டுட்டு இருக்கேன்னு நீங்க என்னை பத்தி தப்பா நினைச்சுட்டா அப்புறம் என் மேட்டர் என்ன ஆகும், நீங்க கொஞ்சம் மீட்டர் கட் பண்றதுக்கு முன்னாடி இந்த மேட்டர் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இன்னும் தெளிவா சொல்லணும்னா….”

அதற்குள் டாக்டர் “ஹா ஹா ஹா ஹா… ஹி ஹி ஹி ஹி….” என கை தட்டியபடி சிரிக்கிறார்

“அப்பாடா… வழக்கம் போல புரியாத மாதிரி பேசினதும் இந்த டாக்டரும் மெண்டல் ஆய்ட்டாரு” என பதிவர் மனதிற்குள் சிரித்து கொள்கிறார்

“ஐயையோ என்னாச்சு… ஏன் டாக்டர் இப்படி சிரிக்கறாரு?” என சுற்றி இருந்தவர்கள் பயந்து போய் பார்க்க

“ஹா ஹா ஹா…. ஹி ஹி ஹி… நான் பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார டாக்டர்னு நீங்க நினைச்சா அதான் இல்ல… நான் பைத்தியமாகி பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார ஆஸ்பத்திரில பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்து அதனால பைத்தியமான பைத்தியகார டாக்டர்களில் ஒருத்தன் அப்படின்னு நீங்க நெனச்சா அது தப்பில்ல… இன்னும் தெளிவா சொல்லணும்னா…” டாக்டர் நிறுத்தாமல் பேசி கொண்டே போனார் தன் சட்டையை கிழித்தபடி

“ஐயையோ… இந்த டாக்டருக்கும் பைத்தியம் புடிக்க வெச்சுட்டானே நம்ம புள்ள” என அந்த பேஷன்டுடன் வந்த அம்மா தலையில் கை வைத்து அமர

“என்ன சொல்றீங்க? இதுக்கு முன்னாடி வேற டாக்டர்’க்கு இதே மாதிரி ஆகி இருக்கா?” என அங்கிருந்த நர்ஸ் கேட்க

“ஒரு டாக்டர் இல்ல சிஸ்டர்… இதுவரைக்கும் 99 டாக்டர்களை பைத்தியமாக்கிட்டான்… இவர் தான் நூறாவது… கங்க்ராட்ஸ் சிஸ்டர்”என்றார் பேஷன்டின் அப்பா, என்னமோ அந்த நர்ஸ் பரிட்சையில் நூத்துக்கு நூறு வாங்கின மாதிரி

அந்த நர்ஸ் பயமாய் ஒரு பார்வை பார்க்க “ஹ்ம்ம்… இனி இந்த ஊர்ல ஒரு டாக்டரும் பாக்கி இல்ல… வேற ஊர்ல தான் விசாரிக்கணும்” என பேஷன்டின் அம்மா முடிக்கும் முன் நர்ஸ் எஸ்கேப் ஆகி இருந்தார்

:))))

நான் சட்டைய கிழிச்சுகிட்ட இடம்: http://appavithangamani.blogspot.com

அண்ணே வந்துட்டேன் ..

எங்கே போயிருந்தேடா செல்லம்

தேர்தல் ஆணையத் தலைவரோட ,‘கா’ விட்டுட்டு வெளி நடப்பு செய்துட்டு உண்ணாவிரதம்,குடியா விரதம்,மௌனவிரதம்ன்னு இருந்துட்டேண்ணே..

ஏண்டா செல்லம்,

போங்கண்ணே இந்த தேர்தல் விதியே எனக்குப் புடிக்கலைண்ணே..

எதுக்குடா செல்லக்கண்ணு

பின்னே என்னண்ணே, நான் இந்ததேர்தல்ல நிக்கலாம்ன்னு இருந்தேண்ணே இந்த சின்ன தகறார்லே மிஸ் பண்ணிட்டேண்ணே….

அது என்னடா சின்ன தகறாரு..?.நீ எப்பவுமே பெரிய தகறாருபிடிச்சவனாச்சே…

அண்ணே சின்னத்தகாறார்னா தேர்தல் சின்னம்ணே..

என்னடா ஆச்சு ?

எனக்கு பிடிச்ச பாய் சின்னம் கேட்டேண்ணே…தர மாட்டேன்னுட்டாங்க அதான் நிக்கலை..

.பாய்ன்னா ???

அதாண்ணே பாய்..எம் ஃபார் மேட்… பா ஃபார் பாய் …

ஓ அந்த பாயா ?படுக்கற பாயச் சொல்றியா? நான் நம்ம கறிக்கடை பாய்ன்னு நினைச்சேன்…அது சரி அந்த பாய் மேலே உனக்கு என்னடா அவ்வளவு பிரியம்…அதைப் போய் சின்னமா கேட்டிருக்கே..
.
அண்ணே எலக்‌ஷண்லே நின்னு ஜெயிச்சா ஒரு ராசியான சின்னமா இருந்தாத்தானே நமக்கு நல்லது…

அடேடே நல்ல எண்ணம்தான் ,தொகுதிக்கு .நிறைய சேவை பண்ணலாம்ன்னு சொல்ல வரியா ?சீமண்ணை லைட் தலயா…

தொகுதியா ????அப்படின்னா என்னண்ணே…

கிழிஞ்சுது போ ..!அதுவே தெரியாம தேர்தல்ல நிக்றியாக்கும்…

எல்லாரும் அப்படித்தாண்ணே நிக்கிறாங்க

சரி சொல்லித் தொலைடா …எதுக்கு உனக்கு பாய் சின்னம் வேணும்….?

பாய் சின்னத்திலே நின்னு ஜெயிச்சாதானே நல்ல …….

.நல்ல ……நல்ல …சொல்லித்தொலையேண்டா நல்ல ?????

”நல்ல சுருட்டலாம்ணே…

ரசித்த இடம்: http://haasya-rasam.blogspot.com/

ஐம்பத்தி இரண்டு வயதான பெண் ஒருவர் மருத்துவரால் குணப் படுத்த முடியாத வியாதியினால் மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டார். அவரது கண்ணிற்கு இறைவன் புலப்பட.. அவரிடம் கேட்டார்,
“எனது இந்தப் பிறவி முடியும் தருவாயிற்கு வந்து விட்டதா ?”
“இல்லை இல்லை.. இன்னும் நாற்பத்தாறு ஆண்டுகள், அறுபத்தி மூன்று நாட்கள் மற்றும் எட்டு மணி நேரம் பாக்கி இருக்கிறது”.
 
இதனைக் கேட்ட அப்பெண்மணி, உடல் நிலை சற்று சரியானதும் தனது முகத்தில் விழுந்த சுருக்கங்களை நீக்கும் விதமாக முகத்தினை பிளாஸ்டிக் சர்ஜரியும், நரை முடியினை ‘டை’ செய்தும், பிரெஸ்ட் இம்ப்லான்ட்டும் இன்னும் பல விதமான காஸ்மெடிக் சர்ஜரியும் செய்து கொண்டு தன்னை ஒரு 20 வயது யுவதியாகவே மாற்றிக் கொண்டார். எப்பவுமே மாடர்ன் ட்ரெஸ்தான்….
ஆனாலும் விதி, சதி செய்து விட்டது.. ஆம்.. இரு மாதத்தில், ‘ஷாப்பிங்'(!) சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் சாலையைக் கடக்கும் பொது, கட்டுப்பாடு இழந்து வந்த ஒரு கணரக வாகனத்தால்  தூக்கி எறியப்பட்டு இறந்து விட்டார். இதனை சற்றும் எதிர்பாராத, அப்பெண்மணி இறைவனிடம் நியாயம் கேட்கச் சென்றார். அதற்கு இறைவன் சொன்ன பதில்………
“அடாடா.. அப்போது உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை”
ரங்கமணி : வர 'வெட்டிங்-டே'க்கு, ஒனக்கு என்ன கிஃப்ட்  வேணும் ?
தங்கமணி : ( மனசில புதிய காரை நினைத்துக் கொண்டு ) ம்ம்.. நா ஏறி மிதிச்ச சில செகண்டுக்குள்ள ஜீரோலேருந்து அறுபதுக்கு போகணும்.. அவ்ளோ ஸ்பீடா...
ரங்கமணி : ம்ம்ம் ஓகே.. புரியுது.. புரியுது..
மறுநாள் வீடு திரும்பிய ரங்கமணி மேஜை மீதி வைத்த காம்பாக்ட் சைஸ் கிஃப்ட் பாக்ஸை  கண்டதும் தங்கமணி மனசுக்குள்.. "அட.. சின்னதா டாய் கார் வாங்கிட்டு வந்துட்டாரா ?" என நினைத்துக் கொண்டே, அவரிடம் ,"என்னது விளையாட்டு பொம்மையா ?"
ரங்கமணி : இல்லை.. நிஜம்..
தங்கமணி, மனதினுள்  அது காரின் சாவியாக இருக்கலாம் என கற்பனை செய்து கொண்டு மேஜை மீதிருந்த பாக்ஸ்ஸினை பிரிக்க ஆரம்பித்தாள்........
பாக்ஸினுள் இருந்தது.....
----------------
-------------
-------- இன்னும் கீழ இருக்கு பாருங்க..
------------------------
------
---------
------  
------------------------
------இன்னும் கொஞ்சம் கீழ........
---------
------------------------
------
---------
------------------------
------
--------- இதோ.. இதுதான்.. பாருங்க..

டிஸ்கி : 
நன்றி - மூலம் ஆங்கிலம்.. சரியான ஞாபகம் இல்லாததால் சுட்டி கொடுக்க முடியவில்லை .. 
தமிழாக்கம் -- நானே http://vanavilmanithan.blogspot.com
                   
படங்கள் உதவி : கூகிள் இமேஜெஸ்..

தங்கமணி வேலைக்கு கிளம்பி கொண்டிருந்த ரங்கமணியிடம் “இன்னிக்கு நாம புது வீட்டுக்கு போறோம். திரும்பி வரும் போது நேரே அந்த வீட்டுக்கு வந்துருங்க” னு சொன்னாள். நம்ம ரங்கமணிக்கு தான் வழக்கம் போல மறந்து சாயங்காலம் பழைய வீட்டுக்கே வந்துட்டான். அப்புறம் தான் தங்கமணி காலையில் சொன்னது ரங்கமணிக்கு  ஞாபகம் வந்துச்சு. ஆனா, புது வீட்டு முகவரி தான் மறந்து போச்சு. என்ன பண்றதுன்னு யோசிச்சுகிட்டே வீட்ட விட்டு வெளிய வந்தான். அங்க விளையாடிகிட்டு இருந்த ஒரு குழந்தை கிட்ட “பாப்பா இந்த வீட்டுல இருந்து காலைல ஒரு லாரில போனாங்களே!. அது எந்த பக்கம் போச்சுன்னு தெரியுமா உனக்கு” அப்படின்னு கேட்டான். அதுக்கு அந்த குழந்தை என்ன பதில் சொல்லுச்சு தெரியுமா?

 

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

எனக்கு தெரியும்பா வாங்க கூட்டிட்டு போறேன். 🙂
ஆகா பெட்ரோல் விலை மறுபடியும் ஏறிடுச்சு    , இனி நம்மக்கு பெட்ரோல் போட்டு கட்டுபடியாகாது , என்ன பன்னலாம்னு மெரிடியன்ல ரூம் போட்டு யோசிச்சப்ப ஒரு அருமையான ஐடியா தோணிச்சு ,
“பேசாம நாம் ஏன் ஒரு குதிரை வாங்ககூடாது “
குட் , உடனே நம்ம ஏரியாவுல இருக்க சூபர் மார்கெட் போய், குதிரை இருக்கா?  என்னா விலைன்னு கேட்டேன் , அதுக்கு டக்குன் அந்த சூபர் மார்கெட் ஓனர் வேலைய ரிசைன் பன்னிட்டு போயிட்டாரு .
டுஸ்கி: ஒன்னு இருக்குன்னு சொல்லனும் , இல்ல இல்லைன்னு சொல்லனும். என்னா கோபகாரனா இருக்கானுக .
விசாரிச்சப்ப குதிரைல்லாம் சூபர் மார்கெட்ல விக்க மாட்டாங்கன்னு சொன்னாக , சரி எங்க கிடைக்கும்னு விசாரிச்சா, பீச்சுல கிடைக்கும்னு சொன்னாக , சரின்னு பீச்சுக்கு போய் பாத்தா அங்க நாலுபேரு காக்கி டிரஸ் போட்டு குதிரை ஓட்டிகிட்டு இருந்தாக ,
அண்ணே இந்த குதிர என்னா விலைன்னு தாங்க கேட்டேன் அவரு என்னா கோபத்தில இருந்தாரோ , நேரா குதிரையோட போய் கடல்ல குதிச்சு தற்கொல பண்ணிகிட்டார் .
என்னான்னு கேட்டா அவரு போலிசாம் குதிரை கவுருமென்டு குதிரையாம் , அங்க இருந்து சத்தம் இல்லாம எஸ்கேப் ஆகி கூகுள் தேடினால குதிர சவுதி அரேபியாவுல கிடைக்கும்னு இருந்துச்சு , சரின்னு பக்கத்து வீட்டு காரரிடம் passport கடன் வாங்கிட்டு சவுதி அராபியாவுல போய் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தேன்
மறுநாள் காலைல பந்தாவா ஆபிசுக்கு குதிரைல போனேன் , போகும்போது ஒன்னும் பிரச்னை இல்லை , ஆனா வரும் போது வழக்கம் போல நாலு டிராபிக் போலீஸ் நம்மள சுத்துபோட்டாக. என்னான்னு கேட்டேன் , மறுபடியும் ஆர்சி புக் , இன்சூரன்ஸ் , டிரைவிங் லைசென்ஸ் , எங்க குதிரைக்கு ஹெட் லைட்டு , அப்படி இப்படின்னு …கேட்டாக , என்னாது ? குதிரைக்கு ஆர்சி புக் , இன்சூரன்ஸ் , டிரைவிங் லைசென்ஸ்ஆ……. நான் டென்சனாகி குதிரைய அவுகல்டே குடுத்துட்டு பொடி நடையா வூடுபோய் சேந்தேன்.
டிஸ்கி:அன்னைக்கு நைட் புல்லா தூங்காம கொசு வத்தி சுருள சுத்திகிட்டே யோசிச்சதுல ஒரு சூபர் ஐடியா கிடைச்சு , இப்ப அத தான் நான் பாலோ பன்றேன், அது எப்படின்னு தெரியணும்னா கொஞ்சம் கீழ போங்க
??
?
?
?
?
?
?
?
?
?
கிஸ்கி : நல்லா பிராக்டிஸ் பன்னிட்டு அப்புறம் தான் ஓட்டனும்,….சரியா …….
?
?
?
?
?
?
?
?
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……….. வெயில் மண்டைய பொளக்குது . அதுல பைக்ல  டிராவல் பன்றது  மண்டை காயுது . என்ன பண்ணலாம் …….???????
பேசாம சூரியனுக்கு புல்லா ஏ.சி பண்ணிடலாமா ???
இம்ம்ம் …. அது சரிவராது கரண்ட்டு பில்லு ஜாஸ்த்தியா வரும் …… வேற என்ன பன்னலாம் ???????
என்னோட குளோஸ் பிரண்டுதான் பைக் மெக்கானிக் , நேர அவன் வொர்க் சாப் போனேன்
” மாமா வெயில் தாங்க முடியல என் பைக்கு  ஏ .சி போட்டு குடேன் “
” என்னானானானாது ………????”
” சென்ட்ரலைஸ்டு  ஏ.சி பண்ண முடியாட்டியும் பரவாஇல்லை ரெண்டு சீட்ட மட்டும் ஏ.சிபன்னி குடு “
” டேய் , மாப்ள நான் ஏற்கனவே காலைல என் பொண்டாட்டிகிட்ட செருப்படி வாங்குன வேகாலத்துல இருக்கேன் , மரியாதையா ஓடிப்போயிடு  அநியாயமா என்னைய ஒரு கொலைகாரனாக்காத “
அப்பத்தான்  ஏற்கனவே பிரண்டு கூட பைக்ல போகும் போது ஏ.சி போடச்சொல்லி பொலேர்ன்னு அடிவாங்கினது எனக்கு டக்குன்னு நியாபகம் வந்துச்சு , சரி பைக்கு ஏ.சி மாட்ட முடியாது போல ………..
” சரிடா மாமா பைக்கு ஏ.சி  பன்னமுடியாட்டி பரவாயில்ல , அட்லீஸ்ட் என் ஹெல்மெட்டுக்காவது ஏ.சி போட்டுகுடேன் “
” அடிங் ………. பிக்காளிப் பயலே , நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைடா உன்னைய மாதிரி ஆளுக இனி உயிரோட இருக்கக்கூடாது ” “
அப்படின்னு சொல்லிக்கிட்டே ஒரு ஸ்பானர   எடுத்துக்கிட்டு என்னைய நோக்கி கொலை வெறியோட  வந்தான் “
ஹே,ஹே,ஹே……. யாருகிட்ட? நம்ம கிட்டேயா?? ,நாங்க மானத்துல தமிழ் நாட்டு அரசியல்வாதிக ஜாதி ……  டக்குன்னு கால் விழுந்துட்டேன் …..
“மாமா கோபப்படாத எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கிடலாம் “
“……ங்ங்ங்கொய்யாலே…. பஸ்ட்டு உன்னைய தீத்துட்டு, அப்புறம் கோர்ட்டுல பேசிக்கிறேன்டா   “
அப்படியும் விடாம ஸ்பானரால  அடிக்க வந்தான் ………..
முடியுமா? , நடக்குமா ??…… நாமெல்லாம் யாரு ?????
பின்னங்கால் பிடரில அடிக்க  எடுத்தே….ன் பாரு ஓட்டம் ……… நேரா ஒரு ஹெல்மெட் விக்கிற கடைல போயி நின்னேன் …..
அங்க இருந்த பொண்ணு என்னைய  பைத்தியக்காறன பாக்குற மாதிரியே பாத்துச்சு .
” மேடம் , என்னோட ஹெல்மெட்டுல  ஏ.சி போடணும்  “
” என்னங்க சார் ?”
” என்னோட ஹெல்மெட்டுக்கு ஏ.சி பண்ணனும் “
இப்போ அந்த பொண்ணு  பைத்தியத்துக்கு  வைத்தியம் பாக்குற வைத்தியர பைத்தியமாக்குற பரம்பர பைத்தியக்காறன பாக்குறது மாதிரி   என்னை பாத்துச்சு
“இம்ம்ம்மம்ம்ம்ம் ………..ஆயிரம் ரூபா ஆகும் , பரவாயில்லையா ?”
“அட இவ்ளோ சீப்பா இருக்கே , உடனே பண்ணிக்குடுங்க மேடம் “
” பஸ்ட்டு பணத்த  கட்டுங்க “
” ஓகே மேடம் , இந்தாங்க “
பத்து நிமிஷம் ……….. என்னா  அழகா ஏ.சி போட்டு குடுத்துட்டாங்க பாருங்க ….
*
*
*
*
*
*
*

ஹி.ஹி.ஹி………. எப்புடி நல்லா இருக்கா ????

ஏ.சின்னா இப்படியா இருக்கும்……… குளு ,குளுன்னு இருக்கனுமே ????? ஒரே குழப்பமா இருக்கே ………..
ஆள் வைத்து அடிக்க முகவரி இதோ: http://manguniamaicher.blogspot.com/

அண்ணாத்த தங்கமணிகிட்ட பத்து கேள்விகள்  கேக்கராருங்களாமா… அதை படிச்சு போட்டு அப்பாவியான நானே பொங்கிட்டனுங்க…அதானுங்க இந்த எதிர் பதிவு…

அண்ணாரு கேட்ட ஒரு ஒரு கேள்வியும் “பதிவு”ன்னும் அதுக்கு என்னோட மறுமொழிய “எதிர் பதிவு”ன்னும் போட்டு இருக்கறனுங்… படிச்சுபோட்டு உங்க கருத்த சொல்லி போட்டு போங்… சரிதானுங்….

பதிவு 
உங்க கைப்பையில அப்படி என்ன குப்பையைத்தான் வெச்சிருப்பீங்க, அதுல இருக்கற அந்த 32 ஜிப்புகளை எப்ப திறந்தாலும், எது தேவையோ அதைத் தவிர மத்ததெல்லாம் எடுக்கறீங்களே?

எதிர் பதிவு 
எல்லாம் உங்களுக்கு தேவை பட்ற குப்பைக (!!!) தான். என்ன செய்ய? நீங்க கை வீசிட்டு வர்றப்ப நாங்களாச்சும் பொறுப்பா எல்லாத்தையும் கொண்டு வர வேண்டி இருக்கே…நல்லதுக்கு காலம் இல்ல… வேற என்ன சொல்ல

பதிவு 
ரூபா நோட்டை ரெண்டா மடிச்சு பிடிக்கத் தெரியாதா? அது ஏன் எல்லாத் தங்கமணியும் ஒவ்வொரு நோட்டையும் சுருட்டி உருட்டி 24 மடிப்பு மடிச்சு பிடிக்கறீங்க?

எதிர் பதிவு 
ரூபாயை எப்படி பிடிக்கறோம்கறது முக்கியம் இல்ல பாஸ்… எப்படி பிடிச்சு வெக்கறோம்கறது (சிக்கனம்) தான் மேட்டர்…. அதுல ரங்கமணிகள விட தங்கமணிகள் எப்பவும் சூப்பர் தான்னு statistics சொல்லுது… போய் பாருங்க…ஹா ஹா ஹா

பதிவு 
அரைச்ச சட்னில ரெண்டு மொளகாய ஜாஸ்தியா போட்டுட்டு, அவனவன் கண்ணுல தண்ணிவர அவஸ்தைப்பட்டா, “கொஞ்சம் காரமா இருந்தா விரும்பி சாப்பிடுவீங்களேன்னுதான் வெச்சேன்” னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியுது? (ஆனா உண்மையில அளவு தெரியாம போட்டதை எங்க போய்ச் சொல்ல)

எதிர் பதிவு 
சட்னி அரைச்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்… வெறும் தேங்காய கடிச்சுட்டு சாப்பிடுங்கன்னு விட்டுட்டா இனிமே சரியா போகும்… என்ன நான் சொல்றது….? (தேவையா இது தேவையா…ஹா ஹா ஹா)

ஒரு நாள் ஒரே நாள்… கிட்சன்ஐ போர்களமா மாத்தாம ஒரு உப்மா செய்ங்க அப்புறம் பேசலாம் மத்ததெல்லாம் (உடனே “நான் செய்வேனே”னு நாலு பேரு சொல்லுவீங்கன்னு தெரியும்…நான் நாலு நல்லவங்கள பத்தி பேசலைங்ண்ணா… மிச்சம் 96 பேரு தான் எங்க டார்கெட்….ஹி ஹி ஹி)

பதிவு 
பேஸ்கெட்பால் விளையாடு, டிராயிங் கிளாஸ் போ, இன்டர்நெட் பழகு, ஹேரி பாட்டர் படி, பரத நாட்டியம் பழகுன்னு அந்த பச்ச மண்ண இந்தப் பாடு படுத்தறீங்களே, அவ வயசுல நீங்க அ,ஆ,இ, ஈ ஒழுக்கமா எழுத பழகீருப்பீங்களா?

எதிர் பதிவு 
என்ன செய்ய? வாய்ச்சது தான் இப்படி விதின்னு ஆகி போச்சு…. நாம பெத்ததாச்சும் நல்லபடியா இருக்கட்டும்னு நெனைக்கறது தப்பாங்ண்ணா… நேரடியா சொன்னா உங்க மனசு கஷ்டப்படும்னு சொல்லாம விட்டது தங்கமணி தப்பு …. (இப்ப என்ன சொல்லுவீங்க… இப்ப என்ன சொல்லுவீங்க…ஹா ஹா ஹா)

பதிவு 
குழந்தைக்கு யூனிஃபார்ம் தான் வாங்கப் போறோம், அப்பவும் எதுக்கு மத்த துணியெல்லாம் பாத்துட்டு அப்புறமா யூனிஃபார்ம் வாங்கறீங்க?

எதிர் பதிவு 
அதுதாங்க மல்டி-டாஸ்கிங்…. ஓ… அப்படின்னா என்னனே ரங்க்ஸ்களுக்கு தெரியாதில்ல… அதாவது… ஒரு வேலை செய்யறப்பவே அவகாசம் கெடைச்சா பின்னாடி வேண்டியதையும் பாத்து வெச்சுக்கறது பெண்களுக்கே உரிய ஒரு குணம்… இல்லேனா உங்கள மாதிரி நூறு ரூபா பெறாத சட்டைய ஆயிரம் குடுத்து வாங்க வேண்டி வருமே பாஸ்… ஹே ஹே ஹே…

பதிவு 
எங்க சொந்தக்காரங்க கிட்ட நாங்க ஃபோன்ல பேசும் போது மட்டுமே ஏன் நீங்க மிக்ஸில மசால் அரைக்கறீங்க?

எதிர் பதிவு 
என்ன கொடுமைங்ண்ணா இது? “ஆகாத பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்” னு சொல்றாப்ல பேச்சு…. அரைச்சாலும் தப்பு அரைக்கலைனாலும் “என் தங்கமணிக்கு சமயல் அறையே எங்க இருக்குன்னு தெரியாது”ன்னு ஒரு டயலாக் சொல்லுவீங்க… ஏங்க கேக்க ஆள் இல்லைன்னு பேசறீங்களோ….? ஹும்… 33 % அரசாங்கம் குடுத்தாலும் வீட்டுல என்னிக்கி தான் விடியுமோ…

பதிவு 
உங்களுக்கு புடவை வாங்கணும்னா நீங்க ரெண்டு மணி நேரம் வேண்ணாலும் நின்னு வாங்கிக்கங்க, ஆனா நீங்க பாக்கற 237 புடவையையும் நானும் பாக்கணும்னா, இதெல்லாம் அராஜகமாத் தோணலயா?

எதிர் பதிவு 
என்னங்க செய்ய? உங்கள மாதிரியா நாங்க… நாங்க உடுத்துற புடவை கூட உங்களுக்கும் பிடிச்சதா இருக்கணும்னு நெனக்கற நல்ல மனசு தங்கமணிகளுக்கு இருக்கே… (ஹா ஹா ஹா)

பதிவு 
எங்க வெளீல கெளம்புனாலும் நாங்க கிளம்பி ஒரு கால் மணி நேரம் கழிச்சுதான் நீங்க ரெடியாகணும்கறது ஒரு சடங்காவே வெச்சிருக்கீங்களா? (அந்த கால் மணி நேரத்துல கேஸ் ஆஃப் பண்ணு, சன்னலை சாத்து, சாம்பாரை ஃபிரிட்ஜுல வைன்னு ஒரு 34 வேலைகள லிஸ்ட் போட்டு செய்ய வெக்கறீங்களே அது ஏன்)

எதிர் பதிவு 
உங்கள போல கை வீசிட்டு கெளம்ப நாங்க என்ன நீங்களா? உங்களுக்கு கிளம்பறது ஒண்ணு தான் வேலை… எங்களுக்கு அதுவும் ஒரு வேலை… அதோட சமைக்கறது (நீங்க மேல சொன்னாப்ல அந்த நேரத்துல தானே உங்க சொந்த காரங்க கூட அரட்டை அடிச்சுட்டு நாங்க mixie போடறத வேற கிண்டல் பண்ணுவீங்க… பின்ன என்ன ஹெல்ப் பண்றதா போச்சு…), பிள்ளைகள கிளப்பறது, வீட்டை ஒழுங்கு பண்றது எல்லாமும் இருக்கே (கரெக்ட் தானே பாஸ்…)

பதிவு 
பாத்ரூம் ஷெல்ஃபுல போதை வஸ்துக்கள் மாதிரி ஒரு 25 டப்பால கலர் கலரா கடந்த ஒரு நூற்றாண்டா என்னென்னமோ இருக்குதே, இதுல ஒரு ஐட்டத்தையாவது கடந்த மூன்று மாதங்கள்ல ஒருதரமாவது யூஸ் பண்ணீருக்கீங்களா?

எதிர் பதிவு 
//”போதை வஸ்துக்கள்”// உங்களுக்கு ஏங்ண்ணா எல்லாமும் இப்படியே தோணுது…? ஓ… நீங்க ரங்கமணி ஆச்சே… அப்படி தான் இருக்கும்… யூஸ் பண்றதெல்லாம் பிட் நோட்டீஸ் அடிச்சு சொல்லிட்டா பண்ண முடியும்… எல்லாம் பண்றது தான்..

பதிவு 
எந்த கடை முன்னால காரை நிறுத்த முடியாதோ, கண்டிப்பா அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு எப்படி கண்டு பிடிக்கறீங்க?

எதிர் பதிவு 
அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு தெரிஞ்சு வெச்சு இருக்கறதுக்கு பாராட்டறத விட்டுட்டு இதுக்குமா குத்தம்… ஆண்டவா காப்பாத்து…

பத்து கேள்வி கேட்டீங்களே… உங்ககிட்ட ஒரே கேள்வி…

அது எப்படிங்ண்ணா அத்தனை நேரம் வெட்டியா டிவி பாத்துட்டு இருந்தாலும் தங்கமணிக ஒரு வேலை சொல்றப்ப மட்டும் ரங்கமணிகளுக்கு முக்கியமான போன் கால் இல்லைனா ஆபீஸ் வேலை வருது…

என்னமோ போங்க… இனிமே பொண்ணுகள புரிஞ்சுக்கவே முடியலைன்னு யாரும் சொன்னா நான் டென்ஷன் ஆய்டுவேன் ஆமா… ஹா ஹா ஹா

பதில் சொன்னது: http://appavithangamani.blogspot.com

வாழ்க்கையில் பலரும் பலவைகைப்பட்ட தவறுகளை வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ செய்வர். பெரும்பான்மையானோர் அப்படி அவர்கள் வாழ்கையில் நிச்சயமாக ஒரு தடவையாவது செய்திருக்கக்கூடிய அல்லது எதிர்காலத்தில் செய்ய கூடிய தவறுகள்.
திருமணம் செய்தல்
திருமணம் புரிந்த எல்லா ஆண்களும் திருமணம் அவர்கள் வாழ்க்கையில் விட்ட பெரிய தவறு எனக்கூற கேட்டும் நாமும் அதன் விளைவுகளை விளங்கி கொன்டாலும் நிச்சயம் செய்திருப்போம்.அல்லது எதிர்காலத்தில் செய்வோம்.
ஓவர் மப்பு
நிச்சயம் அநேகமானோர் வாழ்கையில் ஏதாவது ஒரு தடவையாவது விருந்து காரணமாகவோ/அல்லது துன்பம் காரணாமாக ஓவரா அடித்துவிட்டு ரகளை பண்ணுவார் அல்லது கவிழ்ந்தடித்து எதுவுமே தெரியாமால் வீழ்ந்து கிடப்பர்.
தாறு மாறா வண்டி ஓட்டல்
எந்த வகை வண்டியாவது வைத்திருக்காலாம்.ஆனால் எதோ நினைப்பில் தவறாக ஒட்டி சென்று மோதி “பேமானி ஊட்டாண்ட சொல்லிட்டு வந்தியா” என்று திட்டு வாங்கியாகனும்.அல்லது போலீசிட்ட காசை தொலைக்கணும்.
பலான மேட்டர்
நிச்சயம் அநேகமானோர் பலான ஐட்டம் பாத்தே இருக்கணும். சிலவேளை களில் அந்த மாதிரி இடத்துக்கு தனியாகவோ நண்பர்களின் தூண்டுதலில் போயிருக்கலாம்.அல்லது விடினும் எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளது.
செல்லப்பிராணியை தொலைத்தல்
சிலவேளைகளில் வீட்டு உறுப்பினர்களின் குறிப்பாக குழந்தைகளின் செல்லப் பிராணிகள் பெரும் தொந்தரவாக அமையும் பட்சத்தில் எங்காவது கொண்டு போய் விட்டுட்டு வந்து “ஓடி போயிட்டுது போல” என பொய் கூறல்.
நூல் விடுதல்
வேலைத்தளத்தில் அல்லது வேறு எங்காவது ஏதாவது ஒரு பொண்ணுக்கு லைன் போட்டு இருக்கலாம்.அது பொது ஆனால் வேறமாதிரி பிளானோட லைன் போட்டு மாட்டிக்கிடுதல் தான் சிறப்பாக நடக்ககூடிய ஒரு விடயம்.
பாவ்லா காட்டுதல்
அனகமானோர் முதற் தடவையாக இரவு விடுதிக்கு செல்லும் போது சம்பந்த மில்லாத ஆடை அணிந்து சென்று முதற் தடவையாக முக்கி முக்கி பீர் அடித்து, ஆட தெரியாமல் ஆடி அடுத்தநாள் நண்பர்களின் கேலிக்காளாகல்.
ஆப்படித்தல்
பிடிக்காத ஒருவனைப்பற்றி இரகசியங்களையோ அல்லது இல்லாததும் பொல்லாததும் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி சிக்கலில்மாட்டி வைத்து வஞ்சம் தீர்த்துக்கொள்ளல்.பிறகு ஒன்றும தெரியாதது போல் சென்று நலம் விசாரித்தல்.
முன் எச்சரிக்கை
அநேகமானோருக்கு இப்படி அனுபவம் இருக்கும்.இன்றைக்கு நமது பேர்ஸ் காலியாக வாய்ப்புள்ளது என உணர்ந்து வேண்ட்டுமென்றே வீட்டில் வைத்து விட்டு சென்று மறந்து வந்திட்டேண்டா மச்சான் எனல்.சென்றாலும் சொற்ப பணத்துடன் செல்லல்.
பிஸி ஆக நடித்தல்
வீட்டிலோ,அல்லது கல்லூரியிலோ,அல்லது அலுவலகத்திலோ நல்ல பெயர் எடுக்கவும் மேலதிக வேலைகளை பெறுவதில் இருந்து தப்பிக்கவும் ஏதாவது ஒன்றுடன் வேலையாக இருப்பது போல காட்ட பல தில்லாலங்கடிகள் செய்தல்.
இன்னொன்றுக்கு முயற்சி
ஒருவர் காதலியோ அல்லது மனைவியோ உடன் இருக்கும் போதே இவர்களை விட இன்னும் அழகான ஒரு பெண்ணை காணும் போது மயங்கி மனைவி கூட இருப்பதையும் மறந்து ஜொள்ளு விட்டு மாட்டிக்கொள்ளுதல்.
கெடுத்தல்
தமது காரியம் ஆகவேண்டும் என்பதற்காக அடுத்தவன் இதனால் பாதிக்கப் படுவான் என தெரிந்தும் நேர்மையானவர்களை கூட லஞ்சமோ அல்லது லாவகமாகவோ கதைத்து ஐஸ் வைத்து தன்பக்கம் இழுத்து காரியத்தை முடித்தல்.
அறிந்த இடம்: http://www.sangkavi.com/
<<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். – வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா
<<>> புது செல்போன் வாங்கியிருக்கேன் : அதுல வாஷிங் மெஷின், மிக்சி, ஓவன் ன்னு எல்லாமே இருக்கு! # மேட் பை மேனியாக்.
<<>> மனைவியோட சமையல் வாசனை அருமைன்னு சொல்லற மனசு, மூக்கு அடைச்சிருக்கும்போதுதான் வருது… # வாழ்க பயம்!
<<>> நடுநிசி நாய்கள் படம் பார்த்தேன் – ஏற்கனவே அந்த படத்தை பத்து தடவை பார்த்த உணர்வு! # மீள்செயல் ஒழிக!!
<<>> மனிதன் நிலவுல தண்ணீரும், ஐஸ்சும் இருக்குன்னு கண்டுபுடிச்சிருக்கானாம் – நாம சரக்கோட போனா போதும்!! # யாரை மட்ட கட்டலாம்?
<<>> அலுவலகத்துல, காதல் திருமணமா? ஏற்பாட்டு திருமணமா? ன்னு வாக்குவாதம் – எப்டி செத்தா என்னாங்கடான்னு தோனுது எனக்கு! # நார்மலாதான் இருக்கேன்
<<>> மதத்துக்காக சாக விரும்புற மாக்கானுங்க, உடனே செத்து தொலைங்க – பாக்கி இருக்கிறவங்க வேலைய பார்போமுல்ல?? # வெங்காயம்
<<>> ஏழு வருஷம் நானும் என் மனைவியும் சந்தோஷமா வாழ்ந்தோம் 🙂 அப்புறம் கல்யாணம் பண்ணிகிட்டோம் 😦
<<>> உயிர் காப்பீடு: நீங்க 50,000 கொடுங்கள் – நீங்க செத்த உடன் திருப்பி தருகிறோம் !! – SLO”GUN”
<<>> முட்டாளுங்க கூட சகவாசம் வச்சிகிறது எவ்வளவு சுகம்… – என்னமா என்னை புகழ்றானுங்க….ம்?
<<>> ஓம் நித்தியாநந்தா ஸ்வாமியே நமக-ன்னு 100 தடவை சொல்லுங்க – இல்லனா, கடைசி வரை உங்க மனைவி கூட மட்டும் தான்! # கப்லிங்ஸ்
<<>> நான் ஏன் பொய் சொல்ல போறேன்?? என் பொண்டாட்டி என்னை கேள்வி கேட்கலைன்னா.
<<>> அடிக்கடி ROFL ன்னு எழுதுறவங்க என் ரூமுக்கு வாங்க… கூட்டி பல நாள் ஆகுது!
<<>> ஏய்.. எனக்கு லோன் வேண்டாம்ன்னு எத்தனை தடவ சொல்றது? நானும் அதே பேங்க்லதான் வேலை செய்றேன். # HDFC ஊழியர்
<<>> மருத்துவமணை குடும்ப கட்டுபாடு பிரிவு கதவின் மேல் உள்ள வாசகம் – “தயவுசெய்து பின்புற கதவை உபயோகிக்கவும்” # டீட்டெய்லு??
<<>> இந்தியாவுல ஊழல் என்பது, குளிக்கும்போது உச்சா போவது மாதிரி.. தப்புன்னு தெரிஞ்சும் சுகமா செய்வோம்! # அவன நிறுத்த சொல்லு..நா நிறுத்துறேன்
<<>> சில சமயங்களில் இன்டர்நெட் வேலை செய்யலைன்னா… கம்ப்யூட்டரே வேலை செய்யாதது போல பிரமை!! # எனக்கு மட்டுமா?
ரசித்த இடம்: http://kalakalkalai.blogspot.com
ராமு: வக்கிலுங்க கிட்டேயும் டாக்டருங்க கிட்டேயும் உண்மையை சொல்லணும்னு ஏன் சொன்னாங்க தெரியுமா?
சோமு: ஒரு வேலை, நம்ப கிட்ட எவ்வளவு பணம் இருக்குதுங்கற உண்மை தெரிஞ்சப்பின்னாடி அதுக்கேத்தமாதிரி வேலை செய்வாங்களோ என்னமோ?

சோமு: 
கோழியில இருந்து தான் முட்டை வந்தது. ஏன்னா, முட்டையில இருந்து சேவல் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கே
ராமு: 
சரி! கோழியில இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில இருந்து கோழி வந்ததா?
ராமு: சரி! ஒருத்தன் 8 அடிக்கு ஃப்ளூட் ஒன்னு செய்தான். அதுக்கு என்ன பேரு வைச்சான் சொல்லு?
சோமு: அது பெரிசா இருந்ததாலே புல்லாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் குழல்ன்னு பேரு வெச்சிருப்பான். ஜோக் புரியலையா புல்Long குழல். இப்போ புரிஞ்சதா?
ராமு: ஒரு தத்துவம் சொல்றேன் கேளு!
மெயில்ல (Train) மயிலை ஏத்தலாம்; அது தாங்கும். ஆனா மயில்ல மெயில் ஏத்தினா அது தாங்குமா? அது செத்துடும்.
சோமு: நானும் ஒரு தத்துவம் சொல்றேன் கேளு!
எருமை மேல சவாரி செய்றவன் எமன்.
புருஷன் மேல சவாரி செய்றவ வுமன்
ராமு: பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து உன்னை அடிக்க வரப்போறாங்க பாத்து பேசுப்பா!
சோமு: அப்படி வந்தா சரணாகதி தான். சட்டுனு அவங்க கால்ல விழுந்திட மாட்டேன்.
ராமு: நீ செய்தாலும் செய்வே சரி! இந்த பஞ்ச் டயலாக்கை கேளேன்!
பறந்து பறந்து அடிச்சா, அது ரஜினி
மறந்து மறந்து அடிச்சா, அது கஜினி
சோமு: சூப்பரு!
ராமு: ஒரு பெரியவரு, கையில கொம்பு வைச்சிட்டு, கல்யாண சத்திரத்தை சுத்தி சுத்தி வந்திட்டே இருந்தாராம் எதுக்கு சொல்லு சோமு?
சோமு: இது ரொம்ப சிம்பிள்! கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிருன்னு சொல்லுவாங்க இல்லை. அதனால காக்கா குருவி ஓட்டுறதுக்காக இருக்கும்.
அதை இப்படியும் சொல்வாங்க தெரியுமா? கல்யாண சத்திரத்தில, ஆடு மாடுங்களை உள்ளே விடமாட்டாங்க. ஏன்னா? கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிரு. அதை, இதுங்கல்லாம் மேய்ஞ்சிட்டு போயிடக்கூடாது இல்ல.
ராமு: ஆட்டோ ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ஆட்டோ ஓட்டுவாரு
ராமு: பஸ் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: பஸ்சை ஓட்டுவாரு
ராமு: ட்ரைன் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ட்ரைன் ஓட்டுவாரு
ராமு: சரி! அப்போ ஸ்க்ரு ட்ரைவர்???…
ரெண்டு அக்காங்க பேசிக்கிறாங்க!
விமலா: உன் புருஷன் தங்கமானவருன்னு சொன்னே!
கமலா: ஆமாம் சொன்னேன்.
விமலா: அதுக்காக அவரு பாதுகாப்பா இருக்கணும்னு, அவரை பீரோல வைச்சிப் பூட்டுறது, கொஞ்சம் கூட நல்லா இல்ல.
விமலா: எங்க விட்டில இன்னைக்கி விலை உயர்ந்த சமையல்ப்பா!
கமலா: அப்படி என்னப்பா செய்தே?
விமலா: 22 கேரட்ல பொரியலும், 18 கேரட்ல குழம்பும் வைச்சேன்
தங்கமணி: என்னங்க! ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
ரங்கமணி: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.

குறிப்பு: ஜாலியா சிரிங்க! ஜாலியா ஜோலியைப் பாருங்க! சில ஜோக்ஸ் எப்பவோ எங்கேயோ படிச்சது. பெயர் தெரியாத, முகம்தெரியாத ஜோக்ஸ் எழுத்தாளர்கள், சமூகத்துக்கு நல்லா சேவைச் செய்றாங்கப்பா! எழுதிய புண்ணியவான்க எல்லோருக்கும் தேங்க்ஸ்ங்கோ!

சிரித்த இடம்: http://uravukaaran.blogspot.com


  • கல்யாணம் பண்றதுல தப்பில்லை! நல்ல மனைவி அமைந்தால், உங்கள் வாழ்கையில் சந்தோஷம்! இல்லையென்றால் நீங்க தத்துவஞானி!! – சாக்ரடீஸ்
  • தீவிரவாதத்தை பற்றி எனக்கு பயமில்லை, ஏன்னா..நான் கல்யாணம் முடிச்சு 2 வருசம் ஆகுது! – சேம் கினிசன்
  • எனக்கு நடந்த இரண்டு கல்யாணத்திலும் ராசியில்லை.. முதல் மனைவி என்னை விட்டு போயடவிட்டாள்! இரண்டாவது மனைவி இன்னம் கூடவே இருக்கா!! – பேட்ரிக் முரே
  • உலத்திலேயே கடினமான கேள்வி – பெண்களுக்கு என்ன வேண்டும்? என்பதுதான் – சிக்மென்ட் பிராட்.
  • ஒரு நல்ல அருமையான வழி உங்கள் மனைவியின் பிறந்தநாளை ஞாயாபகம் வைத்துக்கொள்ள.. ஒரு தடவை அதை மறப்பதுதான்! – பிராங்களின்.
  • ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள், அவள் பக்கம் தப்பு இருந்தால்.. – மில்டன் பியர்லி
  • சந்தோஷமான திருமண வாழ்கையென்பது கொடு பெரு என்ற தத்துவத்தின் அடிப்படைதான். கணவர் கொடுக்கனும்! மனைவி வாங்கிக்கனும்!! – யாரோ
  • “காதல் என்பது நீண்ட அழகான கனவு! கல்யாணம் என்பது அலாரம்!!” – இயான் வுட்
  • பெண்னுக்கு எல்லாமும் வேண்டும், ஒரே “ஆண்” னிடம்!
    ஆனுக்கு ஒன்றே ஒன்று வேண்டும், எல்லா “பெண்” னிடம்!!

ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

  • பீரோ நிறைய துணிமனிகளை அடிக்கி வச்சிகிட்டு, மனைவிமார்கள் டிரஸ்சே இல்லாத மாதிரி “நைட்டியில” அலையறது ஏன்னு பிரியல?
  • 337 அயிட்டத்தை பாத்ரூம் குள்ள வச்சிகிட்டு, போனா போகுதுன்னு 2 பொருட்களை வச்சிக நமக்கு எடம் தர்றது ஏங்க? (அவங்க வச்சிருக்குற பாதி அயிடத்தோட பெயரே தெரியாது நமக்கு)
  • புதுசா கல்யாணமான ஆண் சந்தோஷமாக இருந்தால் ஏன்னு தெரியும்! ஆனா.. கல்யாணமாகி “10 வருடம்” ஆன ஆண் சந்தோஷமா இருந்தா ஏன்னு தெரிய மாட்டுது!!
  • பெண்கள் ஒருமணி நேரமா எழுதுன “மளிகை லிஸ்டை”, அவங்க கடைக்கு போகும்போது எடுக்க மறந்துட்டு போறது… ஏங்க?
  • பெண்கள் அவர்களது தோழிகளை அவர்கள் வீட்டில் பாத்து அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியதும், “அதே தோழியிடம்” 2 மணி நேரம் போன் செஞ்சு பேசுறது… ஏங்க?
  • பெண்கள் ஷாப்பிங் போகும் போதும், வீட்டை பெருக்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும், போன் பேசும் போதும், மெயில் அனுப்பும் போதும் மேக்கப் போட்டுகறாங்ளே.. ஏங்க? (மேல இருக்கறது பாதிதான்!!)
  • பெண்கள் சமைக்கும் போது.. இப்படி செய்யி, அப்படி செய்யுன்னு சொல்லாத நம்மல பார்த்து.. கார் அல்லது பைக் ஓட்டுபோது “பிரேக் போடுங்க”, “அப்டி வளைக்காதீங்க”, “பார்த்து ஓட்டுங்க”ன்னு சொல்றது… ஏங்க?
  • தேவையான பொருளை தள்ளுபடியில போட்டா கூட வாங்க நாம யோசிக்கிறபோது, “தேவையே இல்லாத பொருளை தள்ளுபடியில” போட்டுடாங்கன்னு.. தளராம கிளம்பி, தகதகன்னு தள்ளிகிட்டு வராங்களே… ஏங்க?(இன்னும் ஏங்க? போட நிறைய இருந்தாலும்.. என்னோட “ஏங்க” எகிறி..எகிறி அடிப்பாங்க என்பதால, இத்தோட நிறுத்திகிறேன்!)

ஆண்கள் மட்டும் ரசிக்கும் தமாசுகள்

இரு நண்பர்கள், பார்டியில்…
ந1 : “என் மனைவி தேவதை! ”
ந2 : “நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி உயிரோட இருக்கா!!”

நிச்சயத்தின்போது…
மகன்: “யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!”
அப்பா: “உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!”

மகன்: “கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?”
அப்பா: “தெரியலப்பா… இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!”

மனைவி: “ஏங்க.. திருடுபோன “கிரிடிட் கார்ட்” பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?”
கணவன்: “திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!”

இரண்டு நண்பர்கள் பாரில்…
கண்ணா: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?
விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.
கண்ணா: ஆஆ.. அப்புறம்?
விநோத்: அப்புறம் சொன்னா.. “மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!”

பொட்டு பட்டாசு:
மனைவிகிட்ட சண்டை வராமல் இருக்க… 5 வார்தை மந்திரம்!
“என்னை மன்னிச்சிகோ!” & “நீ சொன்னா சரிதான்!”

ரசித்த இடம்: http://kalakalkalai.blogspot.com

புதுசா கட்டுன   சட்டசபைய என்ன செய்யலாம் ஐடியா கேட்டு ஒரே தொந்தரவு ,”நானும் பத்து  ஐடியா சொன்னேன் வொர்கவுட் ஆகல அதுனால நீங்கதான் ஏதாவது பண்ணியே ஆகனுமின்னு”

சட்டசபை கட்டிடத்தோட பொறுப்ப  எந்தலைல  கட்டிட்டு போயிட்டார் , வேற வழியில்லாம நானும் செயல்ல இறங்கிட்டேன் …….பஸ்ட்டு வருமானத்துக்கு ஏதாவது  வழியிருக்கா  பார்ப்போம் ???

வாடகைக்கு – புதிதாக கட்டிய சட்டசபை


301524 சதுர அடிகள் பரப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம்  சட்டசபைக்கு (மட்டும்)  வாடகைக்கு விடப்படும் . எந்த மாநில அரசாக இருந்தாலும் பரவாயில்லை .
* வாடகை Rs 4000/-
* அட்வான்ஸ் – பத்துமாச வாடகை
* புரோக்கர் கமிசன் – ரெண்டுமாச  மாச வாடகை (ஹி.ஹி.ஹி….)
* காலைல 6 டு 8  , சாயந்திரம் 7 டு 9  இந்த டைம்ல தான் தண்ணி திறந்து விடுவோம்  நீங்க தேவைக்கு ஏற்ப புடிச்சு வச்சிக்கிரனும்
* அதேமாதிரி கரண்ட் – காலைல 11 டு 12  சாயந்திரம் 4  டு 5  டைம்ல மட்டும்  தான் இருக்கும் . யூனிட்டுக்கு Rs  250 /-
* பிரதி மாதம் 5 தேதி கரக்ட்டா வாடகைய குடுத்திடனும்
* சுவத்துல கண்ட இடத்துல ஆணி அடிக்ககூடாது
* சொந்தக்காவுங்க யாரும் வந்து தங்கக்கூடாது
* நான்-வெஜ் சமைக்க கூடாது
* நைட்டு 10  மணிக்கு கேட் மூடிடுவோம்
விருப்பமுடையவர்கள் தொடர்பு  கொள்ளவேண்டிய தொலைபேசி எண் – 99999 99999 .
அப்படி வருமானத்துக்கு செட் ஆகலைன்னா , மக்களுக்கு உபயோகப்படுறது மாதிரி சில ஐடியா இருக்கு அதை வேணா டிரை பண்ணுங்க …..
1  ) அதுக்குள்ளார ஒரு பீச் கட்டி விட்டோமின்னா மக்கள் பகல்ல வெயில் தொந்திரவு இல்லாம ஜாலியா பீச்சுக்கு வந்து போவாங்க .
2  ) இல்லைன்னா அதுக்குள்ளே ஒரு ரெண்டுமூணு புளோர்ல  மொட்டைமாடி கட்டிவிட்டா பசங்க பட்டம் விட வசதியா இருக்கும் .  இந்த பட்ட நூல் ஆக்ஸிடன்ட்   நடக்காது .
3 ) இல்லன்னா ஒரு இன்டோர் ஏர்போர்ட் கட்டலாம் , மழை காலங்கள்ல பிளைட் வந்து போக ஈசியா இருக்கும் .
4 ) அதுவும் சரியில்லைன்னா  பேசாம எனக்கு எழுதி வச்சிடலாம் . (ஹி.ஹி.ஹி……  இது நல்லா இருக்குல்ல )
டிஸ்கி : இன்னும் ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன(இந்த பதிவு  சும்மா காமடிக்கு மட்டும் )

அணுக வேண்டிய முகவரி: http://manguniamaicher.blogspot.com/
ஒரு ஊர்ல சீனுவும் பானுவும் ஃப்ரெண்ட்ஸாம். ஒருத்தரை ஒருத்தர் ரத்தம் வந்து ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ற அளவுக்குக் கடிச்சிப்பாங்களாம். நீங்களே பாருங்க பங்காளி! எப்படியெல்லாம் கடிச்சிக் குதறி எடுக்குறாங்கன்னு…

பானு:
 ம்…ம்..ம் ஒண்ணும் தெரியலையே! நீயே சொல்லிடு சீனு! சீனு: பானு! இதைக் கேளேன்! சமையல் செய்றதுக்கு விறகே இல்லாம கஷ்டப்பட்டானாம் ஒருத்தன். அப்புறம் ரொம்ப சிரமபட்டு எறும்பை வைச்சித் தான் சமாளிச்சானாம். அவன் என்ன செய்திருப்பான் சொல்லு?
சீனு: அவன் யூஸ் பண்ணது….. கட்டஎறும்பு. என்ன காதுல இருந்து ரத்தம் வருது. ரொம்ப கடிச்சிட்டேனோ?
பானு: ஆமாம் கடித் தாங்கல! சரி நான் ஒண்ணு கேட்கிறேன். அதுக்குப் பதில் சொல்லேன் பார்க்கலாம். மார்க் ஷீட்டுக்கும், பெட்ஷீட்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?
சீனு: ம்ம்ம்ஹும்… தெரியலை பானு. நீயே சொல்லிடுப் ப்ளீஸ்!
பானு: சரி சொல்றேன் கேளு! மார்க் ஷீட்டில் மார்க் இல்லன்னா கவலைப் படுவாங்க. ஆனா பெட்ஷீட்டில மார்க் இருந்தா தான் கவலைப் படுவாங்க. எப்படி? ராணி அம்மா கலக்கிட்டேன் இல்ல?
சீனு: கலக்கலா? கடியா கடிச்சிப்புட்டு கலக்கல்னா சொல்றே!!!???
சரி! இதுக்கு பதிலை சொல்லுப் பார்க்கலாம்! ஒருத்தனுக்கு நீச்சல் தெரியாதாம். அவன் ஆத்தைக் கடக்கும் போது போட்ல இருந்து எப்படியோ தவறி தண்ணிக்குள்ள விழுந்திட்டானாம். அவன் உடம்பு எல்லாம் மூழ்கிப் போச்சி. ஆனா தலைமட்டும் தான் மேல தெரியுதாம். எப்படி சொல்லு?
பானு: ம்…ம்.. ஆங்! கண்டுபிடிச்சிட்டேன். அவன் சரியான மரமண்ட. விடை சரியா? ஏன்னா மரம் தான் தண்ணியில முழுகாதே!
சீனு: அட! நீயும் என்னைப்போல புத்திசாலியா மாறிட்டு வர்றியே. பரவாயில்லையே!  சரி! ரூபா நோட்டில காந்தி ஏன் சிரிக்கிறாரு?
பானு: அட! இதுக்கூட தெரியாதா உனக்கு? அவரு அழுதா, ருபா நோட்டு நினைஞ்சுடும் இல்ல. எப்படி நம்ப ஆன்சர்?
சீனு: சரி! இதெல்லாம் கரைக்டாதான் சொல்லிட்டே. இந்த கேள்விக்கு சரியா பதில் சொல்லுப் பார்ப்போம். ஒருத்தன் காட்டில தன்னந்தனியா மாட்டிக்கிட்டான். வழி மறந்துப்போச்சு. திடீர்ன்னு பார்த்தா ஒரு சிங்கம் எங்கிருந்தோ மறைஞ்சி வந்து, அவன் மேல பாய்ஞ்சது. ஆனா, கொஞ்ச நேரம் பொருத்து அது முகம் சுளிச்சிக்கிட்டே அவனை விட்டு ஓடியேப் போச்சு. அது ஏன்னு சொல்லுப் பார்ப்போம்.
பானு: ம்…ம்..ம் ஒன்னும் தெரியலையே! நீயே சொல்லிடு சீனு!
சீனு: விடை தெரியலையா? அவன் சரியான மாங்கா மடையன்.  ஒரே புளிப்பு! வாயில வைக்கவே முடியல. சிங்கம் அவனோட முகத்தைக் கடிச்சதுமே நாக்குல சுர்றுன்னு புளிப்பு பட்ட உடனே அது ரொம்ப டென்ஷன் ஆயிடிச்சாம். அதனால தான் அப்படி ஒரு ஓட்டமா ஓடிப் போச்சாம் அந்த அறிவுக்கெட்ட சிங்கம்.
பானு: ஹையோ! ஹையோ! யாராவது என்னைக் காப்பாத்துங்களேன். இந்த சீனுவோட கடி தாங்க முடியலையே! ஆண்டவா ஏன் இந்த சீனுவை எனக்கு ஃப்ரெண்டா படைச்சே. நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கேன் இவ்வளவுப் பெரிய தண்டனை?
நான் சும்மா சொன்னேன் சீனு! கடி சூப்பர் கடி தான் சீனு! என் அளவுக்கு இல்லைன்னாலும் ஓரளவுக்கு நீயும் புத்திசாலி தான்னு ஒத்துக்கறேன்.
இவங்க கதை முடிஞ்சது…
ஒரு வீட்டில, ஒரு அம்மா பொண்ணு பேசிக்கிறாங்க. என்னான்னு நீங்களே கேளுங்க…
வாணி: அம்மா! ஊருக்குப் போறேன். எந்த ட்ரஸ் எடுத்துக்கட்டும்?
வேணி: அட்ரஸ் எடுத்துக்கமா. (இனி வருவதை சிவாஜி குரலில் படிக்கவும்) மத்த ட்ரஸ் இல்லைன்னா கூட ஊரல போய் வாங்கிக்கலாம். ஆனா அட்ரஸ் இல்லைன்னா எங்கப் போய் வாங்குவ?
பழக்கடையில் என்ன காமெடி நடக்குதுன்னு நீங்களே பாருங்களேன்…
பழம் வாங்க வந்தவர்: ஏம்பா! ஆரஞ்சுப் பழம் இருக்காப்பா?
பழம் கடைக்காரர்: இல்லைங்க
பழம் வாங்க வந்தவர்: சரி! பப்பாளிப் பழம் இருக்காப்பா?
பழம் கடைக்காரர்: அதுவும் இல்லைங்க
பழம் வாங்க வந்தவர்: சரி! செர்ரிப் பழம் இருக்காப்பா?
பழம் கடைக்காரர்: அதெல்லாம் நம்ப கிட்ட இல்லைங்க
பழம் வாங்க வந்தவர்: என்ன நீங்க எதைக்கேட்டாலும் இல்லை இல்லைன்னு சொல்றீங்க. சரி! அட்லீஸ்ட் ஞானப்பழமாவது இருக்கா இல்லையா?
பழம் கடைக்காரர்: என்னது ஞானப்பழமா? எங்கிருந்து சாரு வர்றீங்க? கீழ்பாக்கமா?
பழம் வாங்க வந்தவர்: அமாம்பா எப்படி கரைக்ட்டா கண்டுபிடிச்சே?
பழம் கடைக்காரர்: ஆமா இதைக் கண்டுப்பிடிக்க விஞ்ஞானி அப்துல் கலாமா வருவாரு! கடைவைக்கிறதுக்கு முன்னாடி நானும் கூடக் கொஞ்ச நாள் அங்கே தானுங்க இருந்தேன். அங்கிருந்து தப்பிச்சி வந்த கேஸா நீங்க. இங்கேயே இருங்க! அவங்களுக்கு ஃபோன் செஞ்சு உங்களைக் கூட்டிட்டுப் போகச் சொல்றேன்.
ஒரு மொக்கை தத்துவம்:
ஒரு சில விஷயங்கள் மட்டும் மாறாதுங்க. கல்யாணத்துக்கு முன்னாடி மிஸ்ஸானாலும் மிஸ்ட் கால் தான். கல்யாணத்துக்கு பின்னாடி மிஸ்ஸானாலும் மிஸ்ட் கால் தான்.
கல்யாணம் ஆயிடிச்சேன்னு அதை யாரும் மிஸஸ்ட் கால்னு சொல்ல மாட்டாங்க.
பங்காளி! எப்படியோ ஆசை தீர உங்களை கடிச்சிட்டேன்.பதிலுக்கு நீங்களும் என்னைக் கடிக்கலாமே தவிர அடிக்கக் கூடாது. சொல்லிட்டேன் டீலா??? நோ டீலா…???
ரசித்த இடம்: http://uravukaaran.blogspot.com

பாகம் 1 படிச்சுட்டீங்க இல்ல. இதோ பாகம் 2

கேள்வி: நான் ஒரு அரசியல்வாதி. நாளைக்கு முதலமைச்சரை போட்டுதள்ளுறதை ரகசியமா திட்டம் போடுறோம். பத்திரிக்கை ரிருபர் யாராவது வந்து கவர் பண்ணிருவாங்களோன்னு நினைச்சால் பயமா இருக்கு. ஒரு ஐடியா கொடுங்க.?

கோலிவுட்டின் பதில்: சொல்றேன்… இதுரொம்ப ரிஸ்கான சமாச்சாரம். கவனமா கேளு. நீங்க ரகசியமா திட்டம் போடுற வீடு அனேகமா ஊருக்கு ஒதுக்குப்புறமாத்தான் இருக்கும். எதுக்கும் உங்க ஆளுங்கள ரெடியா வச்சுக்கோங்க பத்திரிக்கைகாரன்னு வந்து கவர் பண்ணும்போது எப்படியும் போட்டோ புடிப்பான் அப்போ பிளாஷ் அடிக்கும் அவனை புடிச்சுரலாம். இல்லைன்னா நிருபன் கிளம்பும்போது கேனத்தனமா எதையாச்சும் கிழேபோடுவான் அப்போது உஷராகி அவனை புடிச்சுக்கோ. அப்படியும் அவன் தப்பிச்சு ஓடுன்னான்னா பிரச்சினையே இல்லை. அவன் வருவது அனேகமாக ஓட்டை கைனடிக் ஹோன்டா அல்லது பழைய டிவிஎஸ் பிப்டியாத்தான் இருக்கும் ஈஸீயா புடிச்சுரலாம். அப்புடியும் அவன் தப்பிச்சு ஓடுவான்…ஆனா கடைசில… அவனுக்காகவே காட்டுல கூட ஒரு பப்ளிக் டெலிபோன் பூத் இருக்கும் அதுல ஹீரோவுக்கு போன் போடுவான் அவன் ஹலோ சொல்றதுக்குல்ல எப்படியுயும் உங்காளுங்க சங்கூதிருவாங்க…கவலைப்படாத … இதை மாத்துறதுக்கு இன்னும் கோலிவுட்டுல யாரும் வரல.

கேள்வி: நான் சிட்டி போலீஸ் கமிஷனர், சிட்டில ஒரு பெரிய தாதா இருக்கான். எங்களால அவனை ஒண்ணும் பண்ண முடியல? ஏதாவது ஐடியா குடுங்க.!!

கோலிவுட்டு பதில்: சப்பை மேட்டரு. கிராமத்துல இருக்குற ஹீரோ தன்னோட அக்கா அல்லது தங்கச்சியை உங்க சிட்டில தான் கல்யாணம் பண்ணிக்கொடுத்திருப்பாரு. எப்படியாவது ஹீரோவை சிட்டிக்கு வர வச்சுடுங்க. அப்புறம் ஹீரோவாச்சு ரவுடியாச்சு…நீ்ஙக ஃப்ரீ…

கேள்வி: சார் நான் ஒரு கமேன்டோ ஆபிசர். தீவிரவாதிகளை பிடிச்சு கொடுக்குற பொறுப்பை எங்கிட்டு கொடுத்திருக்காங்க..அதைப் பத்தின ஒரு பிரசன்டேஷன் என் மேலதிகாரிகளுக்கு காண்பிக்கனும். ஐடியா சொல்லுங்க.??

பதில்: குட் கொஷ்டின். இப்ப தீவிரவாதிகளை கொல்லுற மாதிரி நிறைய வீடியோ கேம்ஸ் கிடைக்குது. அதுல அவங்க தங்கியிருக்கிற ஏரியா மாதிரியே 3டி அனிமேட்டட் கேம்ஸ் நிறைய வருது.நீங்க என்டர் கீயை மட்டும் தட்டிட்டு இருங்க…டோட்டல் தீவிரவாதிங்களோட நெட்வோர்ட் உங்க ஸ்கிரின்ல வந்துரும். அப்புறம் பவர் பாயின்ட் ல கூட இந்த மாதிரி நிறைய பண்ணலாம்… நான் சொன்ன மாதிரி பண்ணுங்க…நம்ம கேப்டனுக்கு இந்த மாதிரி நிறைய ஐடியா கொடுத்திருக்கேன்.

கேள்வி:நான் வில்லனோட வொய்ப். ஹீரோ எப்ப என்னோட புருஷனோட கதையை முடிப்பாருன்னு தெரில பயமா இருக்கு. நீங்கதான் உதவி பண்ணனும்.

பதில்: ரொம்ப சிக்கலான கேள்வி இது. இருந்தாலும் சொல்லுறேன். ஹீரோ உங்க புருஷன்கூட சண்டைப்போட்டுட்டு இருப்பாரு. உங்களுக்கு கைகுழந்தை இருக்கான்னு நீங்க சொல்லலை. அப்படி உங்களுக்கு கைகுழந்தை இல்லைன்னா பக்த்துவீட்டு குழந்தையையாவது தூக்கிட்டு ஸ்பாட்டுக்கு போயிருங்க. அப்ப ஹீரோ உங்க புருஷனை அடிச்சுப்போட்டு அருவாளால வெட்டவரும்போது கரெக்டா குறுக்க விழுந்து தாலியையும், கைக்குழந்தையையும் ஹீரோ முன்னாடி காண்பிக்கவும். அதுக்கப்புறமும் ஹீரோ உங்க புருஷனை வெட்டப்போவாரு ஆனா ஆளை வெட்டாம பக்கத்துல தரைல குத்திட்டு போயிடுவாரு. ஓரு கண்டிஷன் ஹீரோ திரும்பி போனதக்கப்புறம் அதே அருவாள தூக்கிட்டு உம்புருஷன் ஹீரோவை வெட்டப்போனாரு…அப்புறம் பின்னாடியிருந்து யாராவது கத்தியால குத்திருவாங்க இல்லைன்னா போலீஸ் துப்பாக்கியால சுட்டுரும்…அதுக்கப்புறம் உம்புருஷன் ஸ்லோமோஷன்ல கீழே விழுந்து சாகவேண்டியதுதான்.

கேள்வி:நான் ஹீரோவோட மனைவி. அவரை சீரியஸா ஆஸ்பத்திரில சேத்துருக்கோம். அவரை காப்பாத்த ஒரு வழி சொல்லுங்க.???

பதில்: ரொம்ப சிம்பிள். டாக்டர் அவங்க வேலையைப்பார்ப்பாங்க…ஆனா நீங்க என்ன பண்ணணும்னா ஒரு மஞ்சள் கலர்ல சாரி கட்டிக்கோங்க, ரெண்டு கைலயும் வேப்பிலை…அப்புறம் எந்த அம்மன் கோயில்ல மணி அதிகமா கட்டித்தாங்கவிட்டுருக்காய்ங்களோ அங்கப்போயி உங்களுக்கு தெரிஞ்ச ஆட்டத்தைப்போடுங்க வேணும்னா உங்க பிரண்ட்ஸ்யும் கூட்டிக்கோங்க. ஆனா எல்லாரும் ஒரே மாதிரி டிரெஸ் போட்டுரக்கனும், தலையை விரிச்சு வுட்டுக்கோனும். கோவில் மணிகளை யாரைவாது சொல்லி கண்ணாபின்னா ஆட்டிவுட்ருங்க. உங்க ஆட்டம் முடியும் போது அங்க உங்க புருஷனுக்கு ஆப்பரேஷன் முடியவும் சரியா இருக்கும். ஆனா கண்டிப்பா பொழைச்சுருவாரு.

ஏதாச்சும் வுட்டுப்போச்சான்னு சொல்லுங்க மக்கா… பார்ட் 3 போட்டுரலாம்.

ரசித்த இடம்: http://vimarsagan1.blogspot.com

கேள்வி:
நான் பட்டணத்தில் வசிக்கும் அழகான ஹீரோவிக்கு அம்மா. அவனைதிரும்ப கிராமத்துக்கு வரவழைச்சு, கிராமத்து பெண்ணை காதலிக்கவைக்கனும். அவன் இங்க வரமாட்ரான்.. அவனை கிராமத்துக்குவரவழைக்க என்ன செய்யனும்?
பதில்:
ரொம்ப சிம்பிள்.. ஒரு தந்தி அடிக்கனும் “அம்மா சீரியஸ்! உடனே வா!!”.தந்திய பார்த்து வந்தவுடனே, “டேய், என் பேர குழந்தைங்கள பாக்காம என்உயிர் போகாதுடா” ன்னு ஒரு பிட்ட போடு. பாக்கி விஷயத்த நம்மஹீரோயின் பார்த்துப்பா.. அப்புறம் என்ன? ஒரு காப்பாத்துற சீனு.. இரண்டுகுத்துபாட்டு… சண்டை.. சுபம்!!

கேள்வி:
நான் ஒரு ஹீரோ, என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடிமாறுவேஷம் போடனும். ஏதாவது ஐடியா குடுங்க..
பதில்:
உங்களை கண்டுபிடிக்க முடியாதபடி மாத்த பல வழிகள் இருந்தாலும்..நான் உங்களுக்கு ரெக்கமண்ட் பண்றது என்னன்னா.. “கருப்புகூலிங்கிளாஸ் போட்டுட்டு, தலையை சீவாமல் கலைச்சிவிட்டுட்டீங்கன்னா” உங்க அம்மாவே எதிருல வந்தாலும் கண்டுபிடிக்கமுடியாதுவே! இன்னம் கொஞ்சம் கஷ்டமா டிரை பண்ணனுமா? “மீசையை எடுத்துட்டு, கேப் போட்டா போதும்” உங்க டைரக்டர்ராலையேகண்டுபிடிக்க முடியாது!

கேள்வி:
வெரி அர்ஜண்ட்! கண்டிப்பாக பதில் வேண்டும். ஹீரோயினை பாம்புகடித்துவிட்டது, இப்ப நான் ஹீரோவாக என்ன செய்ய வேண்டும்?பதில்:
பயப்பட வேண்டாம். பாம்புகள் விஷத்தை ஏற்ற மட்டும் செய்யாது,திரும்பவும் விஷத்தை உறியும் சக்தி கொண்டது. நீங்க திரும்ப விஷத்தைஎடுக்க வைக்க செய்ய வேண்டியது என்னன்னா.. நல்ல உயரமானமலையில் ஏறி நின்று பாம்பை புகழ்ந்து பக்தி பாடல் ஒன்றை பாடனும்!இப்ப பாம்புக்கு இரண்டுல ஒரு முடிவு எடுக்கனும். ஒன்னு மலையில ஏறிவந்து பாடுற உங்கள போடனும். இல்லனா, விஷத்தை திரும்பஊறிஞ்சிட்டு ஓடனும். பாம்பு மலை மேல ஏறி வந்து உங்களை கடிக்கசோம்பேறிதன பட்டு, விஷத்தை திரும்ப எடுத்துடு்ம். எப்புடி ஐடியா?
கேள்வி:
ஹீரோயின் பெண்களுக்கான ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள். ஹீரோ அவளை காதலிக்கிறதால.. யாருக்கும் தெரியாமல் ஹீரோயினை சந்திக்கறது எப்படி?

பதில்:
ரொம்ப ஈசியான கேள்விதான். கடைக்கு போய் ஒரு பர்தா வாங்கி போட்டுகோங்க.. நேரா ஹாஸ்டலுக்கு போங்க. நீங்க 6 அடிக்கு மேல இருந்தாலோ, கையில.. காலுல நிறைய முடி இருந்தலோ, கவலப்படாதிங்க.. யாரும் உங்களை கவனிக்க மாட்டாங்க! எக்ட்ரா பிட்டிங்ஸ் பத்தி நான் சொல்ல தேவையில்லைன்னு நினைகிறேன்..
கேள்வி:
நான்தான் படத்தில் ஹீரோவோட தங்கச்சி. எனக்கு கல்யாணம் நடக்க.. நான் எந்த வகையான ராசிகல் மோதிரம் அணிய வேண்டும்?

பதில்:
ராசிக்கல் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. எப்படியா இருந்தலும் உங்களை ஒருத்தவன் ரேப் பண்ணிடுவான் கவலப்படாதிங்க! ரேப் பண்ணிட்டு கல்யாணம் பண்ண முடியாதுன்னு உங்க அண்ணன்கிட்ட சவால் வேற விடுவான். அப்புறம் என்ன? அண்ணன் பொங்கி, அவனை கும்மி.. எது எப்படியோ.. உங்களுக்கு கடைசியல கல்யாணம் நடக்கும் அவ்வளவுதான்!!
கேள்வி:
என்னுடைய கார் ஹய்வே ரோட்டுல ரிப்பேராயிடுச்சு. இப்ப நா அதை எப்படி சரி பண்றது?

பதில்:
இந்த மாதிரி நேரத்துல.. ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு. அது… ரேடியேட்ர்ல தண்ணி ஊத்துனா சரியாகிடும். இப்ப நீங்க டிக்கியில இருக்குற வாட்டர் கேனை எடுத்துகிட்டு, உங்களுக்கு புடிச்ச திசையில போங்க.. கண்டிப்பா அங்க ஒரு அருவியும், அந்த அருவியில குளிச்சிகிட்டே பாட்டு பாடுற ஒரு அழகான பொண்ணும் இருக்கும்!

கேள்வி:
நான் ஹீரோயினா நடிக்கிறேன். குளிக்கும் சீனில் எப்படி நடிப்பது என்று எனக்கு உங்கள் ஆலோசனை தேவை!

பதில்:
இது கொஞ்சம் பிரைவசியான மேட்டர்தான்.. இருந்தாலும் நீ்ங்க கேட்கறீங்கன்னு சொல்றேன். உடம்பை சுத்தி புடவையோ, டவல்லோ கட்டிக்கனும். ஷவர்ல குளிக்கும்போது புடவையோ, டவல்லோ படாத இடங்களுக்கு சோப்பு போடனும் அவ்வளவுதான்!!

கேள்வி:
நான் வில்லன் நடிகராக ஆக ஆசபடுறேன். உங்களுடைய அட்வைஸ் வேனும் எனக்கு.. குடுப்பீங்களா?

பதில்:
கண்டிப்பாக! முதல் சீனில் இருந்து.. யாரை பார்த்தாலும் முரைக்கனும், அள்ளக்கைகளை அப்பபப்ப அறையனும், “ஹேய்.. ஏய்.. ஏயயய்ய்ய்ய்ய்”ன்னு சம்பந்தம் இல்லாம சவுண்டு விடனும், குறிப்பா ஹீரோ எத்தனை தடவை அடிச்சாலும்.. வலிக்காத மாதிரியே திரும்ப போய் அவங்கிட்ட அடிவாங்கனும், கடைசியா.. “திருந்தனும்” இல்லன்னா.. “செத்துபோகனும்”. அவ்வளவுதான் பாஸ்!!

கேள்வி:
நான் ஒரு ஏழை ஹீரோ. ஆனா.. வில்லன்களை நம்ப வச்சி பழிவாங்க, நான் பணக்காரன் போல் ஆக்ட் குடுக்கனும். ஐடியா ப்ளீஸ்?

பதில்:
முதல்ல நீங்க துபாய் வடிவேலு போட்ட ஷைனிங் துணியில சட்டை தச்சி போட்டுகிட்டு, முட்டிய தொடுற மாதிரி கோட் போட்டுகனும். அப்புறம் மூஞ்சை மறைக்கிற மாதிரி கண்ணாடியும், காலுக்கு சம்பந்தமே இல்லாத ஷூவையும் போட்டுகனும். சையிடுல எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மாதிரி.. மண்டைக்கு லைட் கலர், கையில 9 விரலுக்கு கிளிட்டரிங் மோதிரம், எருமை மாட்டு சங்கிலி போல ஒன்னு கழுத்துல போட்டுக்கனும். கூடவே.. லெப்ட் சைட் இரண்டு பேரு, ரைட் சைட் இரண்டு பேரு,(கண்டிப்பா அதுல 2 பேரு நீக்ரோவா இருக்கனும்) டிப்-டாப்பா நடந்து வரனும். எல்லாரோட காதுலேயும் செவிட்டு மிஷின் மாதிரி ஓயரை காதுல சொருகியிருக்கனும். வில்லன்கிட்ட பேசுறப்ப.. ஈரோப்காரன் கேட்டா செத்துபோற லெவலுக்கு இங்கிலிபீசு பேசுனா.. நீங்களும் மல்டி மில்லனியர்தான்!!

(எழுதறத்துக்கு இன்னும் நிறையா இருந்தாலும்.. டைப் அடிக்க கை வலிக்குதுன்னு உண்மைய சொல்லாம, உங்க பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பலன்னு பொய் சொல்லி முடிச்சிகிறேனுங்கோ!)

மறக்காம பாகம் 2 படிச்சுட்டு போங்க

ரசித்த இடம்: http://kalakalkalai.blogspot.com/

கவி : நவீனா…….. அடி வாங்கப்போற நீனு இப்ப…

நவீன் :  இரு இரு..!!  நானும் சின்ன புள்ளையில இருந்து பாக்கறேன், இந்த அம்மாங்க புள்ளைங்கள அடிக்கறது ” ஒன் சைட்” ஆவே இருக்கே…. ??என்ன கதை இது???  பேலன்ஸ் இல்லாத இந்த  ஒன் சைட் ரூல் போட்டது யாரு..???  காலம் பூரா அம்மாங்க அடிப்பாங்க…புள்ளைங்க வாங்கனுமா..? என்ன நியாயம் இது? அதுக்கு முதல்ல நீ…பதில் சொல்லு…

கவி: இப்ப என்ன….?  உனக்கு என்னை அடிக்கனுமா?

நவீன் : ஹா ஹா ஹா.. .ஆனாலும் உன் காமெடி சென்ஸ் க்கு  அளவே இல்லாம போச்சிம்மா…… நீ இருக்க சைஸ் க்கு நானெல்லாம் அடிச்சா…  ஹய்யோ ஹய்யோ.. .. .. என் கால் ஹைட் கூட இல்ல நீனு… ..போ..போ… போ…..வேலைய பாரு.. போ………

கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…. !!

*************************
காலிங் பெல் அடிக்க, கதவை திறக்கிறேன்.. நவீன்  & ஃப்ரெண்ட்ஸ் குரூப் நிற்கிறார்கள்

கவி ; :)) ஹாய் கைஸ்… :)) வாங்க.வாங்க….

வெங்கட் : ஹாய்….ஆன்ட்டி, யூ லுக் வெரி சிலிம்ம்ம்ம்…

கவி : ஏன்ன்டா???

வெங்கட் : நிஜம்மா த்தான் ஆன்ட்டி, லாஸ்ட் டைம் பாத்ததுக்கு ..ரியலி யூ பிக்கெம் தின் ஆன்ட்டி…

கவி : திருப்பியும் ஏன்ன்டா.. ???

நவீன் : டேய் சனியனே.. ………..மதியம் கண்டிப்பா சோறு போடுவாங்க……….. போதும்……வந்து தொல… !!

கவி :  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்….
**********************************

துணி துவைக்கும் போது ஏகத்துக்கு திட்டிக்கொண்டே இருக்கிறேன்..

நவீன் : எச்சூச்சுமி… ஏன் என்னவோ தனியா பேசிக்கிட்டேஏஏஏஏ இருக்க? எனி கிளைமெட் சேன்ஜ் ப்ராப்ளம்..??

கவி : (செம கடுப்பில்) ம்ம்ம்ம்…எல்லாம் என் தலை எழுத்து. .எரும மாடுங்களோட துணியெல்லாம் துவைக்கனும்னு இருக்கு……….

பழம்நீ:  ஏன்டா, அவ கை தான் வீங்கி இருக்குன்னு தெரியுமில்ல, உன் துணிய நீ துவைச்சிக்கோன்னு சொன்னேனில்ல.. ஏன் செய்ய மாட்டற. .அவ பாரு எவ்ளோ கேவலமா திட்டறான்னு……

நவீன் : ஹா ஹா.. :))) எது கேவலம்.?!! அம்மா புள்ளைய திட்டறதெல்லாம்…. காலங்காலமா நடக்கற ஒரு சாதாரண விஷயம். இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணவே கூடாதுப்பா..
.
பழம்நீ : உன்னால…… என்னையும் சேர்த்து திட்டறாடா…

நவீன் : அய்யய்ய என்ன உங்களோட பெரிய பிரச்சனையா போச்சி… பொண்டாட்டின்னா அப்படித்தான்ப்பா…. நீங்களும் ரியாக்ட் செய்யாம இருங்க.. அவங்க பாட்டுக்கும் கத்திட்டு….  இருப்பாங்க… ஆனா ஒரு ஸ்டேஜ்ல ….பாருங்க…வேலயும் முடிஞ்சி இருக்கும் .. இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணா அப்புறம் நாம வேல செய்ய வேண்டியதா போயிடும்ப்பா…!

கவி : அடப்பாவி… :(((((( !
********************************

நவீன் : அப்பா, சனிக்கிழமை, க்ளாஸ் வைக்கறாங்க.. என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன். உங்களுக்கு ஃபோன் வரும், காலேஜ் வந்து, கையக்கட்டிக்கிட்டு பவ்யமா நின்னு, “என் புள்ள மேல தான் தப்புன்னு சொல்லாதீங்க.” என் மானம் மரியாதை எல்லாம் போயிடும்….அவங்கக்கிட்ட “ஆமா அவன் வரமாட்டான் அவனுக்கு வேற வேல இருக்குன்னு சொல்லுங்க ” சரியா…!

பழம்நீ: …………………………….. (என்னைப்பார்க்கிறார்).. அப்படியே.. …….

நவீன் : என்ன அவங்கள பாக்கறீங்க. சொன்னது புரிஞ்சிச்சாஆ…?

பழம்நீ: ……………………….(என்னைப்பார்க்கிறார்).. அப்படியே.. …….

நவீன் : அப்பா உங்க கிட்ட தான் பேசறேன்..என்ன அவங்கள லுக் விடறீங்க..???

கவி :  டேய்…புரியலையா..? நீ  அப்படியே என்னை மாதிரி இருக்கியாம். !! :))))))))))  ஆனா, இந்த சீன் க்கு எல்லாம், அப்பா சரி வரமாட்டார்டா….  நான் வேணும்னா காலேஜ்’க்கு வரேன்…….சண்டப்போட்டு ரொம்ப நாள் ஆச்சிடா.. ப்ளீஸ், ப்ளீஸ்…நான் வரேண்டா….

பழம்நீ :………….. (என்னைப்பார்க்கிறார்.. பல்லை நற நறவென கடித்துக்கொண்டு) …….அதான்……அப்படியே.. …….

கவி :...ஹி ஹி… எப்படிப்பா உங்களுக்கு மட்டும் பல்லை கடிச்சா இவ்ளோ  சத்தம் வருது.. நாங்க கடிச்சா வரலியே.. ?!

பழம்நீ:  (ரொம்பவும் கடுப்பாகி.. வேற என்ன நற நற நற தான்… )

*******************

சமையல் அறையில் இருக்கிறேன், பழம்நீ தனியாக ஹாலில் பேசிக்கொண்டு இருப்பது கேட்கிறது..
பழம்நீ: …கடவுள் கிட்ட.. ஒரு சாதாரண.. .ரொம்ப சாதாரண பொண்ணு வேணும்னு தான் கேட்டேன்.. .ஆனா.. எனக்கு இப்படி ஒரு எக்ஸ்ட்ராடினரி பொண்ணை கொடுத்து……………….
கவி : (கொடுத்து ன்னு சொல்லும் போது – வெளியே எட்டி பார்க்கிறேன்……….)
பழம்நீ: (நான் பார்ப்பதை கவனித்தவர்) என்னை பெருமைப்படுத்திட்டாரேஏஏஏ..!! ( :(((((((((((( )
கவி:  ப்பா…நான் எட்டி பாத்ததுக்கு அப்புறம் ஒரு கேப் விட்டீங்களே.. அதை ஃபில் பண்ணுங்க…..உண்மையில என்ன சொல்ல வந்தீங்க??? அதை சொல்லுங்க..
பழம்நீ: சே..சே…. இல்லையே….. நிஜம்மாவே உன்னை நினைச்சி எனக்கு எப்பவுமே பெருமைத்தாண்டி… நீ ஒரு ……………..நீ ஒரு……….
நவீன் :  நீ ஒரு லூசு …. ன்னு சொல்றாரு ம்மா..!! :)))))
கவி :   அவ்…… இவன் எப்ப வந்தான்… . ?!!  :((((((((

************************

கவி : ஏன்டா..அந்த பொண்ணு ஏன் இவ்வளாம் குட்டியா ஒரு ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு இருக்கு… ஃபேஸ் புக் ல பார்த்தேன்…
நவீன் : அவ ஸ்டெல்லா மெரிஸ் ல ப்டிக்கறா…அப்படித்தான் ட்ரஸ் பண்ணுவா… அது இருக்கட்டும், அவ ஷார்ட்ஸ் போட்டு இருந்தா உனக்கு என்ன?
கவி :  .  வீட்டுல ன்னா பரவாயில்ல.. காலேஜ் கூடவா அப்படி போறா?
நவீன் :  அவ என்ன ட்ரஸ் போட்டா உனக்கு என்னம்மா. .ஏன்ம்மா என் உயிர வாங்கற…நீ ஏன் இதெல்லாம் கேக்கற…
கவி : இல்லடா.. ச்சும்மா பொது அறிவை வளக்கலாம்னு தான்…
நவீன் : அது அறிவு இருக்கவங்க செய்ய வேண்டியது ..
கவி : :((((((((((((((

****************

பழம்நீ : ஆமா ஏதோ ஆசிரமத்துல போயி சேர போறேன்னு சொன்னியே எப்ப போக போற….??
கவி : ……………????????? ………………. (என்ன குடும்பம் டா இது ?!! )
நவீன் : ஹா ஹா ஹா ஹா ஹா….. ஹய்யோஓ ஹய்யோஒ…. இந்த மாதிரி அவங்க சொன்னதை நீங்களும் நம்பிட்டீங்களா??? ஹா ஹா :))))))
பழம்நீ:  அடிக்கடி சொல்றாடா… அதான் கேட்டேன்
நவீன் : ம்க்கூம்.. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா சொல்றாங்க ஆனா போகத்தான் மாட்டறாங்க… :)))))), உங்களுக்கும் கொஞ்ச நாள்ல பழகிடும்….. .விடுங்க :)))))))
பழனி : அப்ப போகவே மாட்டாளா…:(((((((
கவி :  :(((((((( . .. மே ஐ கம் இன்….. ..நீங்க இரண்டு பேரும் என்னைப்பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். வில் யூ போத் க்ளோஸ் தி டோர்.!!
நவீன் : அத நீ செய்தா இந்த வீடே நிம்மதியா இருக்கும் நீயும் ஆசிரமத்துக்கு  போக வேண்டி இருக்காது. !!
கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…
************
நவீன் : (சீரியஸாக) அம்மா  காலையில் செய்யற டிபன் எல்லாம் நீ ஏன் மதியம் செய்யற ???கவி : ??????????????????????

நவீன் : (மறுபடியும் சீரியஸ்) எப்பவுமே பொங்கல் எல்லாம் காலையில் தானம்ம்மா செய்வாங்க??

கவி : ஞே !!

(அவ்வ்வ் நான் செய்து வைத்திருந்தது என்னவோ சிக்கன் பிரியாணி..?!!! .. :(((((((, என்னா கிருவித்தனம்!!  புள்ளையா இது..?!! )

ரசித்த இடம்: http://kavithavinpaarvaiyil.blogspot.com/

1.செருப்புடன் வேலை செய்ய ஜெ அமைச்சருக்கு உத்தரவு#அப்படியே பொறுப்புடன் வேலை செய்யவும் உத்தரவு போட்டா தேவலை-இப்படிக்கு கடுப்புடன் ஒரு சாமான்யன்

2. மரபுக்கவிதைங்கறது முதிர் கன்னி மாதிரி.. புதுக்கவிதைங்கறது 20+ ஃபிகர் மாதிரி.. ஹைக்கூ என்பது டீன் ஏஜ் கேர்ள் மாதிரி#டேஸ்ட்  டிஃபர்ஸ்  ( அப்போ பின் நவீனத்துவக்கவிதைன்னா முகம் காட்டாம நமக்கு முதுகு காட்டி பஸ்ல உட்கார்ந்துட்டு வருமே அந்த ஃபிகரா? ராஸ்கள்.. சொல்றாம் பாரு வெளக்கம்.. )
3. ஹை கிளாஸ் ஃபிகர் கழுத்தில் எந்த ஆபரணங்களும் அணியாமல் இருந்தால்கூட ரசிக்கும் ஆண்கள் மிடில் கிளாஸ் ஃபிகர் எந்த ஆபரணம் அணிந்தாலும் ரசிப்பதில்லை#ஜெண்ட்ஸாலஜி
4. ஆஃபீசில் இருந்து கணவன் எப்போ வருவான் என மனைவி காத்திருப்பாள்.வீட்டுக்குப்போகவேண்டுமே என்று வருத்தத்தோடுஆஃபீசை விட்டு கணவன் கிளம்புவான்#ஆஃபீஸாலஜி
5. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிவதும் ஒரு வித சுதந்திரமே என பெண்ணும், அது ஆண்களைக்கவர செய்யும் குறுக்கு சால் தந்திரமே என்று ஆணும் நினைக்கிறார்கள்#கிழிஞ்சுது கிருஷ்ணகிரி
6. என்றென்றும் பாதுகாப்பான வாழ்வு வேண்டும் என பெண்ணும்,அன்றைய பொழுது ஜாலியாக கழிந்தால் சரி என ஆணும் நினைப்பதால் தான் பிரச்சனை வருகிறது #சைக்காலஜி
7. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பிரத்யேக நறுமணம் உண்டு.அது இயற்கையின் நியதி.ஆனால் இதை பெண்ணிடம் சொல்லிக்கொண்டிராதே#சைக்காலஜி
8. திருமண நாள் அன்று மணப்பெண் குதூகலமாக இருக்கிறாள்.பிறகும் அவ்வாறே..ஆனால் மாப்பிள்ளை அன்று ஒரு நாள் மட்டுமே பரவசமாக இருப்பான்#ஜெண்ட்ஸாலஜி
9. என்னதான் நாசூக்கு ,நளினம் இவற்றில் கை தேர்ந்தவளாக இருந்தாலும் பப்ஸ் சாப்பிடும்( தியேட்டர் இடைவேளை ) பெண்கள் குழந்தைகள் போல் தான் உதடுகளில் சிதற விடுகிறார்கள்#லேடீஸாலஜி
10. ரெட்,யெல்லோ,ரோஸ் என 3 நிறங்களில் 3 ரோஜாப்பூக்களை ஒரே ஹேர்பின்னால் கூந்தலில் சூடிய பெண் புதுக்காதலியாக அவதாரம் எடுத்தவளாக இருப்பாள்#லேடீஸாலஜி ( அப்பாடா.. டைட்டிலை நியாயப்படுத்தியாச்சு)
11. தன் நட்பு வட்டாரத்தை திருமணத்திற்குப்பின் சடார் என துறக்க பெண்களால் மட்டுமே எளிதாக முடிகிறது#லேடீஸாலஜி

12. சிநேகிதிகள் ஆண்களுடனான சந்திப்பில் சாப்பிட்டாச்சா? என்ன சாப்பிட்டீங்க? என நலம் விசாரிக்கிறார்கள்,ஆண்களுக்கு அப்படி கேட்க தெரிவதில்லை

ரசித்த இடம்: http://adrasaka.blogspot.com

தயாரிப்பாளரின் மேசையில் எந்த டிவிடிகளுமே இல்லை. அச்சமயம், நம்ம இயக்குனர் பாரதி கௌதம் உள்ளே வருகிறார்.

இயக்குனர்: என்ன சார் காலியா இருக்கு மேசை. படம் எடுக்க போறது இல்லையா சார்?

தயாரிப்பாளர்: அட போயா? இப்போதைக்கு சினிமா காலியா தான் இருக்கு.

இ: ஏன் சார் அப்படி சொல்றீங்க?

த: எல்லாரும் கிரிக்கெட் விளையாட போயிட்டா அப்பரம் நான் யார வச்சு படம் எடுக்குறது?

இ: ஹாஹாஹா…ஐயோ சார் அதான் இந்த சோகமா!? இவங்க போனா என்ன? நம்ம கிரிக்கெட் வீரர்கள் தான் இப்போ டான்ஸ் போட்டி, பல்பொடி விளம்பரம் அப்படினு நடிக்க வந்துட்டாங்களே! இவங்கள வச்சு படம் எடுப்போம் சார்!

த: நீ சொல்றது உண்மை தான்! நம்ம virat kohli நல்லா அழகா smart இருக்குறார்… அவர வச்சு ஒரு படம் பண்ணலாமா பாரதி?

இ: ஹிந்தி படம் எடுக்க போறீங்களா?

த: இல்ல, தமிழ் படம் தான்!

இ: தமிழ் படத்துல நடிக்கறதுக்கு எதுக்கு சார் இவ்வளவு அழகு தேவை? இங்க பாருங்க இவர…. இவர் நடிச்சாருன்னா…படம் செம்ம ஹிட்!
(ஒரு ஃபோட்டோவை நீட்டுகிறார்!)

(ஃபோட்டோவை வாங்கி பார்த்து, முகம் சுழிப்புடன்)

த: யோவ்! யாருய்யா இது? shave பண்ணி 10 வருஷம் ஆனா மாதிரி! முடி என்னய்யா…விளக்கமாறு மாதிரி இருக்கு!

இ: என் தெருவுல இருக்கும் வளரும் ரவுடி.

த: வளரும் ரவுடியா???

இ: வளரும் கலைஞன் மாதிரி, வளரும் ரவுடி!!

த: இந்த மூஞ்சிய எப்படிய்யா படத்துல காட்டுறது!

இ: சார், என்ன சார் புரியாம பேசுறீங்க! இப்ப உள்ள trendஏ உங்கள தெரியாதா!? இந்த ரவுடி செம்ம ஹிட் ஹீரோவா வருவார் பாருங்க!

த: எப்படிய்யா சொல்றீங்க??

இ: சார், இந்த ஃபோட்டோவ படம் புடிச்சு உங்க மனைவிக்கும் பொண்ணுக்கும் mms அனுப்புங்க? அவங்க reaction பாத்த பிறகு நீங்களே சொல்வீங்க!

(இயக்குனர் சொன்ன படி செய்தார் தயாரிப்பாளர். சற்று நேரத்தில் இருவரிடமிருந்து பதில் வந்தது)

மனைவி: ஆபிஸ் நேரத்துல, இப்படி பயம் காட்டுற மாதிரி ஃபோட்டோ அனுப்புற?? வீட்டுக்கு வா, உங்க அம்மா ஃபோட்டோவ காட்டி பயம் காட்டுறேன் பாரு!

இ: என்ன சார்? உங்க மனைவி செம்ம டென்ஷனா ஆயிட்டாங்க போல!

த: யோ! என்னய்யா வம்புல மாட்டிவிட பாக்குறீயா?

இ: சார், பொறுங்க. உங்க பொண்ணு ஸ் எம் ஸ படிங்க

பொண்ணு: டாடி!! omg! who is this? so hot! so cute! semma rowdy look! awesome! super! you better fix him for your next movie. I’m going to share this picture with my collegemates!

த: (ஆச்சிரியத்துடன்) என்னய்யா நடக்குது?

இ: நான் தான் சொன்னேன்ல. எந்த ஒரு ஹீரோ முகம் ஆண்ட்டிஸ்க்கு பிடிக்காம, அவங்க பொண்ணுங்களுக்கு பிடிக்குதோ, அந்த ஹீரோ தான் டாப் ஹீரோ!

த: என்னமோ போயா! இது எல்லாம் சரியா வருமானு தெரியல!

இ: சார், இவர் நல்ல கிரிக்கெட் ஆடுவாரு சார்! தமிழ் படம் ஹீரோவுக்கு இதவிட வேற என்ன தகுதி வேணும்!?

த: (சலிப்புடன்) புதுசா எதாச்சு செய்யுவோம்? ஒரு reality tv show பண்ணா என்ன?

இ: பின்னீட்டீங்க சார்! இப்ப அது தான் hot business.

த: என்ன நிகழ்ச்சி பண்ணலாம்?

இ: பாட்டு போட்டி! airtel வழங்கும் cute singer இம்முறை உலகத்தையும் தாண்டி!

த: நல்லா தான் இருக்கு!

(ஒரு வாரம் சென்றது, நிகழ்ச்சி தேர்வு சுற்று நடந்தது. தேர்வு சுற்று அறையில், இயக்குனரும் தயாரிப்பாளரும் காத்து கொண்டிருந்தனர்)

த: உன்னைய நம்பி இதுல இறங்குறேன், பாத்து பண்ணுய்யா!!

இ: கவலைய விடுங்க! தேர்வு சுற்றே 15 episode காட்டலாம்! அப்பரம் டாப் ஹீரோ சுற்று, மொக்கை ஹீரோ சுற்று, மொக்கை ஹீரோக்களின் லவ் டூயட்ஸ், மொக்கை ஹீரோயின்களின் solo சுற்று, wildcard round 1, wildcard round 2, wildcard round 3, mega wildcard round, semi final 1, semi final version 2.0…இப்படி ஒவ்வொரு episode கணக்கு பண்ணாலே, பல கோடிய அள்ளிடலாம் சார்!

த: ஆமா, நமக்கு என்னமோ பாட்டு தெரிஞ்ச மாதிரி judge பண்ண வந்துட்டோமே, உனக்கு ஏதாச்சு சங்கீதத்த பத்தி தெரியுமா?

இ: மத்தவங்க பொண்டாட்டிய பத்தி நான் பேச மாட்டேன் சார்?

த: பொண்டாட்டியா????

இ: பாடகர் கிரீஷ் பொண்டாட்டி தானே சங்கீதா? அவங்கள பத்தி எனக்கு ஒன்னு தெரியாது சார்!

த: யோ! சங்கீதா இல்லையா? சங்கீதம்!!!!!!!

இ: (சிரித்து கொண்டே) அத பத்தி தெரியாம இருக்குமா? நான் எப்படி judge பண்றேன் மட்டும் பாருங்க!

(முதல் போட்டியாளர் வந்தார். பாடினார்)

இ: நீங்க பாடின மூன்றாவது வரில அந்த ரெண்டாவது வார்த்தையல கொஞ்சம் landing note தப்பா போயிட்டு!

த: (இயக்குனர் காது அருகே சென்று, மெதுவாய்) அவர் பாடினதே இரண்டு வரி தான். நீ என்னத்த மூன்றாவது வரிய கண்டு பிடிச்ச?

இ: (சமாளித்து கொண்டு) ஓகே, சார்! நீங்க அடுத்த ரவுண்டுக்கு selected.

(அடுத்த போட்டியாளர் பாடி முடித்தார்)

இ: சூப்பர்! சூப்பர்! இந்த சின்ன வயசுல….(கண் கலங்கினார்)

த: (இயக்குனரிடம் மறுபடியும் காது அருகே சென்று) அநியாயம் பண்ணாத டா! இவருக்கு 55 வயசு ஆச்சு! இது உனக்கு சின்ன வயசா? நல்லாவே பாடுல…reject him.

இ: (அமைதியான குரலில் தயாரிப்பாளரிடம்) சார், நல்லாவே பாடாம இருக்கறவங்கள தான் choose பண்ணனும். அது தான் புது rule.

(வெளியே வாக்குவாதம் நடந்தது. அதை சமாளிக்க ஓடினர் இருவரும்)

ஒரு அம்மா: எங்க புள்ள பாடனும்.

த: இல்ல மேடம். இது பெரியவங்க நிகழ்ச்சி.

ஒரு அம்மா: என் புள்ள, சின்னபுள்ள, இப்ப தான் 6 வயசு ஆகுது. சும்மா ஒரு guest appearance மாதிரி பண்ண வைங்க.

இ: மேடம், கவலைய விடுங்க! அடுத்த seasonல உங்க பையனுக்கு சான்ஸ் இருக்கு.

த: அடுத்த seasonக்குள்ளவா? இப்ப தான் பையனுக்கு 6 வயசு.

இ: சார், நம்ம ஒரு சீசன முடிக்கறதுக்குள்ள பையன் வயசுக்கு வந்து மேஜர் ஆயிடுவான் சார்.

(பிரச்சனையை சமாளித்த உற்சாகத்தில் உள்ளே வந்தனர் இருவரும். அடுத்த போட்டியாளர் பாடி கொண்டு இருக்கும் வேளையில்…)

இ: நிறுத்துங்க! (கத்தினார்)

த: (ஆச்சிரியம் அடைந்தார்)

இ: என்னங்க பண்றீங்க?? (போட்டியாளர் மிரண்டு போயிட்டார்)

த: (இயக்குனரிடம்) யோ! what’s happening?

இ: அவர் என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு தெரியுமா?

போட்டியாளர்: சாரி சார்! நான்….மறுபடியும் பாடவா?

இ: நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்!

(அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியில். யாருக்குமே என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர். போட்டியாளரின் சித்தி உள்ளே நுழைந்தார் கையில் ஒரு கேக். அனைவருக்கும் அப்போது தான் புரிந்தது. அனைவரும் கை தட்டினர்.)

சித்தி: இன்னிக்கு celebration time! எங்க கொள்ளு தாத்தா ஒருத்தர் இருந்தாரு. அவரோட நினைவு நாள் இன்னிக்கு. அதான்…(சிரித்து கொண்டே உள்ளே நுழைந்தார்கள் போட்டியாளரின் மொத்த குடும்பத்தினரும். இயக்குனரும் சேர்ந்து கொண்டார் கொண்டாடத்தில். கேமிரா மேன் ஒவ்வொரு angleலாய் படம் எடுத்தார்!)

த: (கோபத்துடன்) என்னய்யா நடக்குது!!! எல்லாரும் ஓடி போயிடுங்க!

(அனைவரையும் விரட்டினார்!!!)

இ: சார்… என்ன சார்?

த: நீ பேசாதய்யா!!??

இ: (புன்னகையித்து கொண்டே) சார், அங்க பாருங்க சார்?

த: என்ன?

இ: இப்ப பாடினாரே அவர் காதுல எத்தன தோடு போட்டு இருந்தார் தெரியுமா?

த: அவர சித்தியவிட அவருக்கு தான் நிறைய இருந்திருக்கும். அதுக்கு இப்ப என்ன?

இ: சார், ஒரு ஐடியா சார்? why not we start ‘நம்ம வீட்டு காது குத்து’ show?

த: உனக்கு இன்னிக்கு கும்மாங்குத்து தாண்டா!!! (விரட்டி கொண்டு ஓடினார் இயக்குனரை பிடிக்க!)

 

ரசித்த இடம்: http://enpoems.blogspot.com/

 

கேள்வி:    நீங்கள் என்ன சாப்பிவிரும்புகிறிர்கள்? பழஜூஸ்,சொக்கலேடே , சோடா ,டி

பதில்             டீ மட்டும்

கேள்வி         இலங்கை டி ,மூலிகை டி,ஏலம கலந்த டி,புஷ் டீ ,கிரீன் டி ?

பதில் :         சிலோன் டி

கேள்வி :    அதிலும் வெள்ளை டி ,கருப்பு டி ?

பதில் ;       வெள்ளை

கேள்வி :  பால் அதிகம் விட்டோ இல்லை குறைத்தோ?

பதில் ;      பால் சேர்த்து

கேள்வி :  ஆட்டு பால் ,பசுப்பால் ,ஓட்டக பால் எது தேவை ?

பதில் :      பசும பாலே போதும் டீ கொண்டு வாங்க.

கேள்வி  :இனிப்புக்கு என்ன ?சீனி  இல்லாவிடின் கரும்பு சாறு

பதில் :சீனி

கேள்வி :கட்டி சீனி யா ?இல்லை தூள் சீனியா ?

பதில் :தூள் சீனி

கேள்வி :வெள்ளை சீனி ,பிரவுன் சீனி ,மஞ்சள் சீனி எது வேண்டும் ?

பதில் :தம்பி டியே வேணாம் கொஞ்சம் தண்ணீ கொண்டு வா ?

கேள்வி :மினரல் வாட்டர் வேணுமா ? இல்ல நார்மல் தண்ணிர் போதுமா?

பதில் :மினரல் வாட்டர்

கேள்வி :சுவை சேர்த்த நீரோ இல்லாமல வெறும் நீரோ ?

பதில் :::::::::::::::::::::::;;ஆணியே புடுங்க வேணாம் நான் போறன்

(சீனி =சக்கரை )

ரசித்த இடம்: http://sangarfree.blogspot.com/

ராம்தேவ் கறுப்பு பணம்,ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்…இந்தியாவையே பரபரப்பு உண்டாக்கிய இந்த நிகழ்வுதான் இப்போ பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்…சும்மா இருப்பார்களா…குறும்புக்கார படைப்பாளிகள்..?ராம்தேவ் அடித்த ஸ்டண்டுகளை வைத்து நகைச்சுவை ,காமெடி,ஜோக் கலாட்டா கார்ட்டூன்களை வரைந்து தள்ளிவிட்டார்கள்.அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்!!

எங்கே என்னை மாதிரி பண்ணுங்க பார்ப்போம்!!

என்னது!! உண்ணாவிரதத்தை கைவிடணும்னா சஞ்சீவி மூலிகை வேணுமா!!

ராம்தேவ் சிஸ்யர்களாம்!!!

இது போலீஸோட லத்தி யோகாவாம்!!!

ராம்தேவ் ஸ்டண்ட் யோகாசனா

ஊழல் வைரஸை அழிக்கும் ராம்தேவ் ஆண்டி வைரஸ் -சாஃப்ட்வேர்!!

உண்ணாவிரதமா..யோகா கிளாஸான்னு தெரியலையே…??!!

சீக்கிரம் ராம்தேவ் மாதிரி கோடீஸ்வர சாமியார் ஆகணும்னு அவரை மாதிரியே ட்ரை பண்ணி சிக்கிகிட்டாரு!!

Read more: http://www.astrosuper.com/2011/06/ramdev-jokescomedycartoon-pictures.html#ixzz1PFXJRROe

#சுவாரஸியமா தமிழ்மணத்துல மேஞ்சிட்டு இருக்கும் போது நாலு மணிக்கு மீட்டிங்னு அஞ்சு நிமிஷம் முன்னாடி சொல்லி வர சொல்லும் போது.

#பெர்ஃபார்ம‌ன்ஸில் டாப்பில் நாம இருந்தாலும் அப்ரைசல் டைம்ல “என்னால எதுவும் ரெகமெண்ட் பண்ண முடியாதுப்பா. எல்லாம் மேனேஜ்மெண்ட் தான் டிசைட் பண்ணனும்”ன்னு சீரியஸ் சீனிவாசனா டயலாக் அடிக்கும் போது.

#என்றாவ‌து ஒரு நாள் டைம் ஷீட் அப்டேட் ப‌ண்ணாம‌ல் போயிருப்போம். ம‌றுநாள் டீம் கொலிக்ல இருந்து, க‌ம்பெனியின் வைஸ் ப்ரெசிட‌ன்ட் வ‌ரை சிசியில் போட்டு “இன்னும் டைம் ஷீட் அப்டேட் ப‌ண்ண‌வேலியா”ன்னு கேட்டு மெய்ல் வ‌ருமே…. அந்த சமயம்.

#மீட்டிங் முடிச்சிட்டு ஒண்ணுமே புரியாம தூங்கி எழுந்த மாதிரி கண்ணைக் கசக்கிகிட்டு வெளில வரும் போது “மீட்டிங்கோட மினிட்ஸ் ஒண்ணு ப்ரிப்பேர் பண்ண்டுங்களேன். நாளைக்கு எல்லாருக்கும் சர்குலர் பண்ணிடலாம்”ன்னு தனக்கு மட்டும் எல்லாம் புரிஞ்சுட்ட மாதிரி சொல்லும் போது.

# ப்ராஜெக்ட் டெட்லைன். டே அண்ட் நைட் ஷிஃப்ட் போட்டு வேலை பார்த்திட்டிருப்போம். இங்கேயே இருந்த டேமேஜரை எங்கே காணோம்ன்னு தேடும் போது தான் ஆஃபிஸ் பாய் சொல்வான் அவர் கேண்டீன்ல அரட்டை அடிச்சிட்டு கெஸ்ட் ஹவுஸ்ல தூங்கிட்டதா… அப்போ மட்டும் அவர் கைல கிடைச்சாரு, செம குத்து தான்.

#வேலைக்கு சேர்ந்த‌ முத‌ல் நாள். டேமேஜ‌ர் சிரித்துக்கொண்டே சொல்லுவார், உங்க‌ளுக்கு என்ன‌ ப்ராப்ள‌ம்னாலும் எப்ப‌ வேணும்னாலும் எங்கிட்ட‌ வ‌ந்து பேசலாம். சில‌ நாட்க‌ள் க‌ழித்து ந‌ம‌க்கும் சொல்லிவைத்தாற் போல் ஒரு பிர‌ச்னை வ‌ரும். அவ‌ர்தான் சொல்லியிருக்காரேன்னு ந‌ம்ம்ம்பி அவ‌ரிட‌ம் போவோம் “ஒரு சின்ன‌ இஷ்யூ உங்க‌கிட்ட‌ பேச‌ணும்”. ம‌டிக்க‌ணிணியை பார்த்த‌ப‌டியே சொல்லுவார் “கொஞ்ச‌ம் பிஸியா இருக்கேன்பா அப்புற‌ம் நானே கூப்பிட‌றேன்”. கொஞ்ச‌ம் அவ‌ர் ம‌டிக்க‌ணிணி திரையை எட்டிப் பார்த்தால் மாயாஜால் ஆன்லைன் புக்கிங் அவ‌ரை வ‌ர‌வேற்றுக்கொண்டிருக்கும். நீங்க‌ளே சொல்லுங்க‌ என‌க்கு அப்போ ஒரு குத்து விட‌ணும்னு தோணுமா தோணாதா…

#10, 15 நாள் ஃபேமிலியோடு வெளிநாட்டுக்கு வெக்கேஷ‌ன் போய் திரும்பியிருப்பார். நாம போய் நாலு நாள் லீவு வேணும், ஃபேமிலியோட‌ திருப்ப‌தி போறேன் ஒரு சின்ன‌ வேண்டுத‌ல்னு இவ‌ர்கிட்ட‌ வேண்டுத‌ல் வெச்சா கூலா திருப்பி கேட்பார்..”ஏம்பா இதெல்லாம் வீக் எண்ட்ல‌ வெச்சுக்க‌லாம்ல‌”. டேமேஜ‌ர்க‌ளா! இப்ப‌டிலாம் இருந்தா சாமியே க‌ண்ணை குத்திடும்!

#அப்ரைச‌ல். ஒன் டூ ஒன்னில் சொல்லுவார்..”இத‌ப்பாருப்பா இந்த‌ ரிஸ‌ஷ‌ன் டைம்ல‌யும் உன‌க்குதான் டீம்ல‌யே அதிக‌மா போட்டிருக்கேன் யார்கிட்ட‌யும் சொல்லிக்காத‌”. சிவாஜியின் க‌ண்க‌ள்ல வெளியே வ‌ர‌ட்டுமா வேண்டாமான்னு துடிச்சுட்டிருக்குற கிளிச‌ரின் மாதிரி ந‌ம்ம க‌ண்லேயும் க‌ண்ணீர் துடிச்சுக்கிட்டிருக்கும். வெளியே வந்தா கூட இருக்கற டீம் மெம்ப‌ர் சொல்லுவான் “ம‌ச்சான் இந்த‌ அப்ரைச‌ல்ல‌ என‌க்குதான் அதிக‌மா போட்டிருக்காராம், யார்கிட்டேயும் சொல்லாத‌ன்னு சொல்லிருக்காரு. நான் உன்கிட்ட‌ ம‌ட்டும்தான் சொல்லியிருக்கேன், உன‌க்குள்ளேயே மேட்ட‌ர‌ வெச்சிக்கோ”. அப்போ ந‌ம்ம‌ டேம்ஸை க‌ட்டிப்போட்டு, ஒரே ட‌ய‌லாகை எல்லார்கிட்டேயும் சொல்லுவியா சொல்லுவியான்னு கேட்டுகிட்டே ரெண்டு கைல‌யும் ர‌த்த‌ம் வ‌ர்ற‌ வ‌ரைக்கும் குத‌த‌ணும்.

#ரெண்டு நாள் ம‌ழை பெய்தாலே வீட்டு ப‌க்க‌த்தில் ஒரு மினி நீச்ச‌ல் குள‌ம் உருவாகிடும். ச‌ரி லீவு போடவேணாம்னு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு நீந்தி ஆஃபிஸுக்கு வ‌ந்தா, பெருசா க‌ண்டுபுடிச்சுட்ட‌ மாதிரி ஷெர்ல‌க் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு முக‌த்தை வெச்சுகிட்டு கேட்பார், “ஏம்பா செப்ப‌ல்ல‌ வ‌ந்திருக்க‌….”. காதை க‌டிக்க‌க்கூடாது ஆனா மைக் டைச‌னா ஒரு நிமிஷ‌ம் மாற‌ணும்னு தோணும் பாருங்க‌..ஸ்ஸ்ஸ்!

#ச‌த்ய‌ம்..ச‌னிக்கிழ‌மை..காதலிகூட ச‌ந்தோஷ‌மா ஒரு நூன் ஷோ, சாயங்காலமா மெரினா, முடிச்சதும் கேண்டில் லைட் டின்னர்ன்னு ப்ளான் ப‌ண்ணி க‌ன‌வோடு அந்த‌ வார‌ இறுதிக்குக் காத்திட்டிருப்போம். என்ன‌ டிர‌ஸ், எவ்வ‌ளோ மேக்க‌ப் ன்னு அவ‌ளும் முடிவு செஞ்சிருப்பா. வெள்ளிக்கிழ‌மை சாயங்காலம் டீம் மீட்டிங் போட்டு “Guys, we are working tomorrow” ன்னுவார். அதுக்கு ச‌(னி)ரின்னு சொல்லுவோம். ஆனா காத‌லி நம்ம மூஞ்சிலேயே நாளைக்குத் துப்புவாளேன்னு பயம் வரும். “நாளைக்கு நான் ஆஃபிஸுக்கு வ‌ந்தா எவ்ளோ பிர‌ச்னை தெரியுமாய்யா என் வாழ்க்கைல‌” ன்னு க‌த‌றிக் க‌த‌றி அழுதுட்டே குத்த‌ணும் போல‌ருக்கும்!

#பதிவுலகமே எழுதுதே நாம எழுதினா என்ன ஆகிடப் போகுதுன்னு இந்தப் பதிவ ஜாலியா எழுதிருக்கேனே. இதை அவர் பார்த்துட்டுக் கத்துக் கத்துன்னு கத்துவாரு பாருங்க. அப்போ நம்ம கை வலிக்குற வரைக்கும் அவர் மூஞ்சில குத்தத் தோணும்.

இந்தப்ப‌திவு என் டேமேஜ‌ர் க‌ண்ல ப‌டாம‌ இருந்தா இதை ஆர‌ம்பிச்சு வெச்சவருக்கு மொட்டைய‌டிச்சு, அடுத்து எழுதினவ‌ருக்குக் காது குத்தி, அப்புறமும் தொட‌ர்ந்த‌வ‌ங்க நாக்குல வேல் குத்தி தேர் இழுக்க‌ வைக்கிறேன்னு ப்ளாக்காத்த அம்ம‌ன்கிட்ட வேண்டிக்குறேன்.

ரசித்த இடம்: http://kurumbugal.blogspot.com

ஒரு விசயத்தை செய்யுறதுக்கு முன்னாடி நம்ம மக்கள் அதை ஏன் செய்யுறோம் என்று யோசிப்பதேயில்லை, அவன் செஞ்சான், நானும் செஞ்சேன், எங்க தாத்தா செஞ்சார், நானும் செஞ்சேன் என்பதே அனைவரின் பதிலும், சரி அவர் ஏனப்பா செஞ்சார் என்றால் அதுக்கு எதாவது அறிவியல் காரணம் இருக்கும் என்பார்கள், காதலனர் தினத்திற்கு ஒவ்வொரு வருடமும் வேலெண்டின் பெயர் ஞாபக படுத்தப்படுவதால் இன்னும் வரலாறு திரிக்கப்படாமல் இருக்கு, இன்னும் சில வருடங்களில் அம்பிகாபதி, அமராவதி மாதிரி அமரக்காதல் கொண்ட பாதிரியார் சட்டத்தால் தண்டிக்கபட்ட தினம் தான் காதலர் தினம் என்பார்கள்!, நம் மக்களுக்கு புரளியை கிளப்பி விடுவதென்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி!

பெரும்பாலான தினங்கள்(days) இங்கிலாந்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது!, கொண்டாட்டத்திற்கும், ஐரோப்பிய கண்டத்துக்கும் எதோ சம்பந்தம் இருக்கும் போல பெரும்பாலான விழாக்கள் கூட அங்கே தான் ஆரம்பித்திருக்கின்றன!, முற்காலத்தில் ராஜாவுக்கு மலச்சிக்கல் இல்லாமல் கக்கா போனால் கூட விழாவாக கொண்டாடுவார்களாம், நல்ல வேளை தமிழ்நாட்டில் ”பாராட்டு விழா” என்ற பெயரில் நடப்பதால் உண்மையான காரணம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை!, கள்ளன் பெருசா, காப்பான் பெருசான்னா, கள்ளன் தான் பெருசுன்னு ஒரு பழமொழி உண்டு, அங்கே அடிமட்டத்தில் இருப்பவன் பெருசு, ஜனநாயகத்தில் மட்டும் என்றுமே மக்கள் தான் முட்டாள்கள்!, ஐந்து வருடத்திற்கொரு முறை பெரிய முட்டாளாக ஆக வருடா வருடம் நாம் எடுக்கும் ட்ரைனிங்க் தான் ஏப்ரல் ஒன்னு என்று சென்னையில் வசிக்கும் ஒரு அதிர்ஷ்டகார ஞானி சிரித்து கொண்டே சொல்லுவார்!

முட்டாள்கள் தினம் கதையை சொல்ல வந்து நாம் முட்டாளான கதையை சொல்லி கொண்டிருக்கிறேன் பாருங்கள், வாங்க நாம முதல்ல அந்த கதையை பார்த்துட்டு வரலாம்!.

1550 வாக்கில் இங்கிலாந்தில் இருந்த பல செல்வந்தர்களில் முக்கியமான ஒரு செல்வந்தர் எட்வர்ட் மார்ஷல், அப்போதைய கெஜட்டில் மட்டும் அவர் 158 தொழில்கள் செய்து கொண்டிருந்ததாக பதிவாகியிருக்கிறதாம்!, வெகு சிறப்பாக தொழில் செய்து கொண்டிருந்த அவருக்கு 1579 ஆம் வருடம் ஏப்ரல் முதல் தேதி ஒரு மகன் பிறந்தார் அவரது பெயர் ஸ்டீவ் மார்ஷல், அது அவரது செல்ல மகனும் கூட, மூத்த மகன் ஒருவர் இருந்தாலும் அவர் ஒரு விபத்தில் இறந்த விட்டதாக மட்டும் தகவல் இருக்கிறது.

பெரும் செல்வமும், செல்லமும் கொண்ட ஸ்டீவ் படிக்க வீட்டிலேயே ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டார்கள், அவர்களுக்கு சொல்லி கொடுப்பதை விட, ஸ்டீவ் எதையும் உடைக்காமல் பார்த்து கொள்வதே முக்கிய பணீயாக இருந்தது! சன்னல் ஏன் பெருசா இருக்கு, இந்த ரொட்டி ஏன் சிறுசா இருக்கு என்ற அறிவு பூர்வமான கேள்விகளும் அவ்வபோது கேட்பதுண்டு!, ஆசிரியர்களும் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சகம் செய்யாமல் வேலை பார்த்தார்கள், மேற்படிப்பு படிக்க விருப்பமில்லை என்றும், தனக்கு தொழிலை கவனித்து கொள்ள எல்லா தகுதியும் வந்துவிட்டது என சொல்லும் பொழுது அவரது தந்தைக்கு மிகவும் பெருமையாக இருந்தது, காரணம் ஸ்டீவ் அதை சொல்லும் பொழுது அவனுக்கு வயது எட்டு!

அந்த சமயம் சிரித்து கொண்டே மறுத்த தந்தை ஸ்டீவின் 21 ஆம் வயதில் மறுக்க முடியாத இக்கட்டில் சிக்கினார்! ஸ்டீவுக்கு 21 வயது ஆகும் பொழுது அவனிடம் கம்பெனியின் முழு பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தனது ஏழு மனைவியருடன் உலகை சுற்றி வர வாக்களித்திருந்தார், அவரது ஏழாவது மனைவி வாக்கு தவறினால் குதிரை வண்டிகாரனுடன் ஓடி போய்விடுவதாக ஏற்கனவே மிரட்டியிருந்ததால், வேறு வழியில்லாமல் அரைமனதுடன் கெம்பேனி பொறுப்பு ஸ்டீவுக்கு மாற்றப்பட்டது!, அடுத்த இரண்டு வருடத்தில் 158 கம்பெனிகளும் திவாலாகி ஸ்டீவ் வீட்டில் வந்து அமர்ந்தான், அதன் பிறகு அவனது வேலை யார் என்ன கதை விட்டாலும் உங்களை போலவே சீரியஸாக கேட்டு கொண்டிருப்பது! உங்களுக்கும் ஸ்டீவுக்கும் ஒரே ஒற்றுமை தான்…..

மொக்கை ஆகிய இடம்: http://valpaiyan.blogspot.com