Posts Tagged ‘doctor’

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த

ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.
பெரிய பெரிய மருத்துவர்களிடம் போய்ப் பார்த்து, மருந்து ,
ஊசி எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்
கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய அறிவுள்ள மனைவி ஒரு நாள் சொன்னா,
‘நீங்க மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கிற மருத்துவர்களை விட்டுட்டு ,
ஏதாவது ஒரு நல்ல விலங்கு மருத்துவர் கிட்ட
போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்கு
சரியான மருத்துவம் கொடுக்க முடியும்’னாள்.

என்னது விலங்கு மருத்துவர்கிட்டேயா? உனக்கென்ன மூளை
கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே
கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி
விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய்
மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி மூஞ்ச வெச்சிகிட்டு ரெண்டு வாய்
தின்னுட்டு , பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி அலுவலகத்துக்குப்
போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே
வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் அலுவலகம்
விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பேருந்துல அடைஞ்சு வீட்டுக்கு
வர்றீங்க!

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே
நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி
இரவு சாப்பாட்டை ‘லபக் லபக்’’னு முழுங்கிட்டு, எருமை மாடு
மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!
இப்படி இருக்கிறவங்களை மனித மருத்துவர் எப்படிங்க
குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே
ஒரு கால்நடை மருத்துவரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில்
சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க,
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’ போங்கன்னு முத்தாய்ப்பு
வச்சாளாம் மனைவி..!

Courtesy: http://nanjilmano.blogspot.in

மாத்திரை

Posted: ஜூன் 19, 2012 in கதைகள், சுட்டது, நகைச்சுவை
குறிச்சொற்கள்:, , , ,

ஒருவன் தன் டாக்டர் நண்பருடன் காபி
சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது அவன்,”ஏன் நண்பா,வருத்தமாய்
இருப்பதுபோலத் தெரிகிறதே?என்று கேட்டான்.

டாக்டர் சொன்னார்,”இன்று ஓரு தவறு செய்து
விட்டேன்.ஒரு நோயாளிக்கு தவறான
மாத்திரையை எழுதி விட்டேன்.

”நண்பன்,”அது என்ன ஆபத்தானதா?”என்று
கேட்டான்.

டாக்டரும் கவலையுடன் சொன்னார்,
”இல்லை,அவன் ஒரு பெரிய பணக்காரன் இந்த மாத்திரை
சாப்பிட்டால் இரண்டு நாளில் குணமாகிவிடுவான்”

=========================================

(படித்ததில் பிடித்தது)

Courtesy: http://rammalar.wordpress.com

நல்ல பல பண்புகளைக் கொண்ட ஒரு மருத்துவரும் ஒரு பொறியியலாளரும் தவறாக வாகனத்தை ஓட்டிய போது ஒரு ஆலயத்தின் சுவரில் மோதி இறந்துவிட்டனர். இதில் ஒரு ஆலய பக்கதரும் கொல்லப்பட்டார். ஆலயத்திற்கு சேதம் விளைவித்ததாலும் பக்தரைக் கொன்றதாலும் அவர்கள் இருவரும் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர். நரகத்திற்குச் சென்ற இருவரும் அங்கு தமது சேவையைத் தொடர்ந்தனர். மருத்துவர் அங்குள்ளவர்களின் நோய்களைக் குணப்படுத்தினார். பொறியிலாளர் குளிரூட்டி, மலசல கூட வசதிகள், நல்ல இருப்பிட வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தினார். நரகத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினர்.

கடவுளிடம் நரகம் பல வசதிகளைப் பெறுகிறது என்று யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள். கடவுள் நரகத்தின் பொறுப்பாளியை அழைத்து நரகத்தில் பாவிகள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அங்கு என்ன நடக்கிறது என்று வினவினார். நரகப் பொறுப்பாளி மருத்துவரினதும் பொறியியலாளரினதும் சேவையை விபரித்தார். அப்போது கடவுள் அவர்கள் இருவரையும் என்னிடம் அனுப்பு என்றார். நரகத்தின் பொறுப்பாளி அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டார். அதற்கு கடவுள் அனுப்பாவிடில் உன் மீது வழ்க்குத் தொடருவேன் என்றார். நரகத்தின் பொறுப்பாளி சிரித்துக் கொண்டு சொன்னார். வழக்குப் போடுவதாயின் சட்ட அறிஞர்கள் வேண்டும். அவர்கள் எவரும் உங்களிடம் இல்லை. அனைவரும் என்னிடம் தான் இருக்கிறார்கள் என்றார்.

Courtesy: http://veltharma.blogspot.in

என்ன ஆச்சு ?
ஒரே தலைவலி…
டாக்டரைப் பார்த்தியா ?
பார்த்தேனே,தலைவலிக்கு முதல்ல கண்ணை டெஸ்ட் பண்ணனும்னு சொன்னாங்க ..
கண் டாக்டர்ன்னா நம்ம கண்ணப்பன்தான் பெஸ்ட்,அவரைப் போய் பாரேன்..அல்லது  EYEயப்பன் கூட நல்ல டாக்டர்தான்..
இல்லை ,ஏற்கனவே நான் ,எங்க காலனி பக்கதிலே ,EYEயர்  இருக்கார் அவரைப் போய் பார்த்தேன்..
என்ன சொன்னார் கண்ணிலெல்லாம் ஒரு ப்ராப்ளாமும் இல்லை சைனஸ் இருக்கலாம் எதுக்கும் ஈ.என்.டி .யைப் பாருங்களேன்னு சொன்னார்..
ஈஎன் டி ன்னதும்  நம்ம தொண்டமான் ஞாபகத்துக்கு வரார் அவர்தான் சரியான ஆள்…அல்லது டாகடர்  மூக்கன் ..அவரும் ஓகே..
நான் நம்ம சகலரோட தங்கச்சி காதம்பரியைப் பார்த்தேன்…
காது மூக்கு தொண்டை எல்லாமே நார்மல்…எதுக்கும் பல் டாக்டரைப் பார்த்தா நல்லது…எல்லா பிராப்ளத்துக்கும் பல்லும் ஒரு காரணமாம்…
யாரைப் பார்த்தே…
வேற யாரு நம்ம பல்லவந்தான்….கொஞ்சம் க்ளீனிங் பண்ணினார் ஒரு கேவிட்டி அடைச்சார் ….மத்தபடி பிரச்சனை இல்லை
எல்லாமே நார்மல்ன்னா தலைவலிக்கு என்னதான்  காரணமாம்.
.வயசாச்சா ஹார்ட் செக் பண்ணிடலாம்னு கார்டியாலஜிஸ்டைப் பார்த்தேன்
யாரு நம்ம இருதயராஜ்தானே ?என்ன சொன்னார்?
அடைப்பு கிடைப்பு இருக்குன்னு சொல்வாரோன்னு பயந்தேன் அதெல்லாம் ஒண்ணுமில்லை ..துடிப்புதான் கொஞ்சம் அதிகமா இருக்கு ..எதுக்கும் பல்மனாலஜிஸ்ட்டைப் பாருங்கன்னார்…
அதான் பல் டாக்டரைப் பார்த்தாச்சே..அவர்கிட்டே சொன்னியா?
நீ வேற …பல்மனாலஜிஸ்ட்ன்னா நுரையீரல் டாக்டர் …
என்னதான்  பேர் வைக்கிறாங்களோ …யாருக்கு புரியுது…கார்டியாலஜிஸ்ட்ன்னா கார் ரிபேர் பண்ற மெக்கானிக் மாதிரி நினைச்சேன்…சரி விடு  பார்த்தியா யாரு டாக்டர்?
LUNGகேஸ்வரன்தான் ரொம்ப ஃபேமஸ் …பார்த்தார் எண்டோஸ்கோப்,பிராங்கோஸ்கோப்.சி டி ஸ்கேன்,ஏழெட்டு எக்ஸ்ரே ,நாலஞ்சு பிளட் டெஸ்ட்ன்னு பார்த்துட்டு மாத்திரை எழுதிக் கொடுத்தார்
இனிமேல் கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டு மாத்திரைகளை முழுங்கிட்டு இருக்க வேண்டியதுதான்..
என்னவோ போ…எப்படியோ குணமானா சரி…வரட்டா.எல்லாம் நல்லா குணமாகும்
[சகாதேவன் உபயம்]
எல்லாத்துக்கும் மேலே நம்ம வைத்தீஸ்வரர்  இருக்கார் .அவர்தான் நல்ல டாக்டர்,அவர் பார்த்துப்பார்   அவர் கையிலே நம்ம டாக்டர்ஸ் எல்லாருமே டூல்ஸ்தான் .

உபயம்: http://haasya-rasam.blogspot.com