நவம்பர், 2011 க்கான தொகுப்பு

அமெரிக்காவின் டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியான தகவலின்படி. நாசா தற்போதுள்ள விமானத்தின் வேகத்திலும் பார்க்க 85% மேலும் அதிவேகமாக செல்லக்கூடிய விமானங்களை 2025ம் ஆண்டுகளில் வெளியிடவிருக்கின்றது. இவ் விமானங்களிற்கான மாதிரி படங்களே இவை.
Advertisements

போன் அடிக்கிறது.

எடுத்தால் காலையிலேயே ராங் கால்.

“நேத்தி லோட் ஏத்தியாச்சு. நாளக்கி டெலிவரி ஆய்டும்”

“நேத்தி ஏத்தினா நாளைக்கே எப்டிய்யா டெலிவரி ஆகும்?”

“ஏன் ஆகாம, பூனாவிலேருந்தே இப்பல்லாம் நாலு நாள்தான். டிரன்க் ரோடு ரெடியாயிடிச்சு. லாஸ்ட் லோடுக்கே இன்னும் பேமென்ட் வரலை”

“ஏன் வராம, தம்பி பேருக்கு செக் அனுப்பியாச்சே?”

“யாரு ராஜலிங்கம் பேருக்கா?”

“ம்ம்ம்”

“அவனுக்கு அக்கவுண்டே கிடையாதே?”

“அதனால என்ன, செல்ப் செக்தான் அனுப்பியிருக்கேன்”

“எவ்ளோ அமவ்ண்டு?”

“இருபத்திநாலு கோடி”

“என்னது, மொளகா லோடுக்கு இருபத்திநாலு கோடியா?”

“மொளகாயா? கஞ்சா இல்லையா?”

“கஞ்சாவா? யாருங்க பேசறது?”

“இதத்தான்யா மொதல்ல கேட்டிருக்கணும்”

ரசித்த இடம்: http://kgjawarlal.wordpress.com

கார் பாத்திருப்பீங்க வான் பாத்திருப்பீங்க ஆனால் இப்படியான வாகனங்களை நீங்க பாத்திருக்கவே மாட்டிங்க. பாருங்க நீங்களே ஒரு பெயர சூட்டுங்க.

OOPS நிமிடங்கள் – 2

Posted: நவம்பர் 25, 2011 in சுட்டது, புகைப்படங்கள்
குறிச்சொற்கள்:, , ,Courtesy: http://www.Ritemail.blogspot.com

கஞ்சன் ஒருவனிடம் பிச்சை கேட்டான் ஒருவன்.அவனிடம் அப்போது பணமும் இல்லை;மனமும் இல்லை.ஆனால் பக்கத்தில் நின்ற ஏழை ஒருவன்அப்பிச்சைக்காரனுக்குத் தானம் செய்தான்.கஞ்சன்,அவன் முன் தன கௌரவத்தைக் காக்க அந்த ஏழையிடமே பத்து பைசா வாங்கி பிச்சைக்காரனுக்கு தானம் செய்து விட்டு மறுநாள் பத்து பைசாவை தன வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி அந்த ஏழையிடம் சொன்னான்.பிறகு அந்த ஏழையை பைசா கொடுக்காமல் பல நாள் அலைய வைத்தான்.அவனும் விடாக்கண்டன்.இவனை விடவில்லை.
ஒருநாள் அவன் தன வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதைக் கண்ட கஞ்சன்,மனைவியிடம் சொல்லிவிட்டு இறந்தவனைப் போல நடித்தான்.அவனிடம் கஞ்சனின் மனைவி,”இறக்கும் தருவாயில் கூட உங்களுக்கு பத்து பைசாவை திரும்பக் கொடுக்க முடியவில்லையே என வருத்தப்பட்டார்,”எனக் கூறினாள்.ஏழையோ விடாமல்,’அப்படிப்பட்ட நல்லவரை சமாதியில் அடக்கம் செய்ய நானே ஏற்பாடு செய்கிறேன்.’என்று கூறி ஒரு சவப் பெட்டியை ஏற்பாடு செய்து அதில் கஞ்சனைக் கிடத்தினான்.அப்போது கூட கஞ்சனோ அவன் மனைவியோ வாயைத் திறக்கவில்லை.
ஏழை சவப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு காட்டு வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது திருடர்கள் வரும் சப்தம் கேட்டு பெட்டியை அப்படியே போட்டு விட்டு ஒரு பெரிய மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டான்.திருடர்கள் கொண்டு வந்த பணத்தை அந்த இடத்தில் கொட்டிக் கணக்கு பார்க்கும் போதுஏழை ஒரு வினோதமான சப்தம் கொடுத்தான்.திருடர்கள் பேயோ,பிசாசோ என்று பயந்து எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர்.இப்போது கஞ்சன் வெளியே வந்து,”இந்தபணத்தை நாம் இருவரும் சம பங்கு போட்டுக் கொள்வோம்,”என்று கூற ஏழையும் ஒத்துக் கொண்டான்.பிரித்தபின்ஏழை,”இப்போதாவது அந்த பத்து பைசா கடனைக் கொடுக்கக் கூடாதா?”என்று கேட்க கஞ்சன் சொன்னான்,”நீயே சொல்,இங்கே சில்லறை இருக்கா?நாளை வீட்டுக்கு வா,தருகிறேன்.”

கதை கேட்ட இடம்: http://jeyarajanm.blogspot.com

இந்த வருடத்தின் சிறந்த அடிமை விருது இவருக்கு வழங்க படுகிறது.

OOPS நிமிடங்கள் – 1

Posted: நவம்பர் 21, 2011 in சுட்டது, புகைப்படங்கள்
குறிச்சொற்கள்:, , ,


Courtesy: http://www.ritemail.blogspot.com