சிந்திக்காமல் சிரிக்க – பாகம் 1

Posted: ஜூன் 10, 2011 in சுட்டது, நகைச்சுவை
Tags: , , , ,

செயின் திருடர்கள் எல்லாரும் ஆந்திரா போயிட்டாங்கன்னு அம்மா சொன்னாங்களே.. அப்புறம் எப்படி நகை திருட்டு நடந்தது?

அட நீ வேற .. இவங்க எல்லாம் நெக்லஸ் திருடங்களாம் …
———————————–
 ஏம்ப்பா.. 2006 டூ 2010 மேரேஜ் ஆன ஆண்கள் எல்லாம் ஏன் குஷியா இருக்காங்க?
அந்த கால கட்டத்துல நடந்த மேரேஜ் எதுவும் செல்லுபடி ஆகாதுன்னு அம்மா அறிவிச்சுட்டாங்களாமே?
——————————-
 ஆக்சிடெண்ட்ஸ்  நடந்த தகவல்களை எல்லாம் தலைவர் எதுக்கு கலெக்ட் பண்றாரு?
அவை எல்லாம் திட்டம் இட்டு நடந்த கொலைகள்னு அறிக்கை விடத்தான்..
————————————–
அரசியல்வாதி பையனை லவ் பண்ணுனது தப்பா போச்சு..
ஏன்?
எனக்கு வேற பக்கம் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சதும் லவ் ஃபெயிலருக்கு தார்மீகப்பொறுப்பு ஏற்று காதலன் பதவியை ராஜினாமா பண்ணிடறேன்னாரே..?
———————————————-
பொதுத்தேர்தல்ல படு தோல்வி அடைந்தும் தலைவரோட பந்தாவுக்கு மட்டும் குறைச்சல் இல்ல..
ஏன்?
இடைத்தேர்தல்ல ஜெயிச்சுத்தான் எனக்கு பழக்கம்னுட்டாரே?
————————————–
ஆஃபீஸ் மேனேஜர் ஏன் கடுப்பா இருக்காரு?
ஒழுங்கா வேலை செய்யலைன்னு டிஸ்மிஸ் செய்யப்பட்ட கிளார்க் ஆஃபீசை விட்டுக்கிளம்பறப்ப  எனக்கு ஓய்வு கொடுத்த  மேனேஜருக்கு நன்றின்னாரே?
——————————
தலைவர் ஏன் கோபமா இருக்காரு?
ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் சரி.. எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி.. மைனாரிட்டியாகத்தான் இருப்பேன்னு ஏன் அடம் பிடிக்கறீங்க?ன்னு நிருபர்கள் கேட்டாங்கலாம்..
———————————-
செயின் திருடர்கள் டூரிஸ்ட்டா?ன்னு ஏன் கேட்கறீங்க?
பின்னே? அவங்க தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகான்னு ரவுண்டிங்க்ல இருக்கறதா சொன்னா என்ன அர்த்தம்?
————————————-
அந்த காக்காவை ஏன் குளத்துல முக்கி எடுக்கறாங்க?
காகம் கரையும்னு சொன்னாங்களாம் டீச்சர்.. அதை செக்கிங்க்..
——————————–
மேடம்.. ஏன் மாசாமாசம் உங்க புருஷனை மாத்திடறீங்க?

நடிகை – மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாற்றம் இல்லாததுன்னு உலகுக்கு உணர்த்த விரும்பறேன

ரசித்த இடம்: அட்ரா சக்க

பின்னூட்டங்கள்
  1. எஸ் சக்திவேல் சொல்லுகின்றார்:

    >ஏம்ப்பா.. 2006 டூ 2010 மேரேஜ் ஆன ஆண்கள் எல்லாம் ஏன் குஷியா இருக்காங்க?
    அந்த கால கட்டத்துல நடந்த மேரேஜ் எதுவும் செல்லுபடி ஆகாதுன்னு அம்மா அறிவிச்சுட்டாங்களாமே?

    அப்ப அதுக்கு முன்னாடிக் கட்டினவங்க? -கடுப்பாந்தா.

  2. சி.கருணாகரசு சொல்லுகின்றார்:

    நல்லாதான் இருக்கு.

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s