தங்க மணிக்கு பத்து கேள்விகள் – பதிவுக்கு எதிர்பதிவு….

Posted: ஜூன் 23, 2011 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , ,

அண்ணாத்த தங்கமணிகிட்ட பத்து கேள்விகள்  கேக்கராருங்களாமா… அதை படிச்சு போட்டு அப்பாவியான நானே பொங்கிட்டனுங்க…அதானுங்க இந்த எதிர் பதிவு…

அண்ணாரு கேட்ட ஒரு ஒரு கேள்வியும் “பதிவு”ன்னும் அதுக்கு என்னோட மறுமொழிய “எதிர் பதிவு”ன்னும் போட்டு இருக்கறனுங்… படிச்சுபோட்டு உங்க கருத்த சொல்லி போட்டு போங்… சரிதானுங்….

பதிவு 
உங்க கைப்பையில அப்படி என்ன குப்பையைத்தான் வெச்சிருப்பீங்க, அதுல இருக்கற அந்த 32 ஜிப்புகளை எப்ப திறந்தாலும், எது தேவையோ அதைத் தவிர மத்ததெல்லாம் எடுக்கறீங்களே?

எதிர் பதிவு 
எல்லாம் உங்களுக்கு தேவை பட்ற குப்பைக (!!!) தான். என்ன செய்ய? நீங்க கை வீசிட்டு வர்றப்ப நாங்களாச்சும் பொறுப்பா எல்லாத்தையும் கொண்டு வர வேண்டி இருக்கே…நல்லதுக்கு காலம் இல்ல… வேற என்ன சொல்ல

பதிவு 
ரூபா நோட்டை ரெண்டா மடிச்சு பிடிக்கத் தெரியாதா? அது ஏன் எல்லாத் தங்கமணியும் ஒவ்வொரு நோட்டையும் சுருட்டி உருட்டி 24 மடிப்பு மடிச்சு பிடிக்கறீங்க?

எதிர் பதிவு 
ரூபாயை எப்படி பிடிக்கறோம்கறது முக்கியம் இல்ல பாஸ்… எப்படி பிடிச்சு வெக்கறோம்கறது (சிக்கனம்) தான் மேட்டர்…. அதுல ரங்கமணிகள விட தங்கமணிகள் எப்பவும் சூப்பர் தான்னு statistics சொல்லுது… போய் பாருங்க…ஹா ஹா ஹா

பதிவு 
அரைச்ச சட்னில ரெண்டு மொளகாய ஜாஸ்தியா போட்டுட்டு, அவனவன் கண்ணுல தண்ணிவர அவஸ்தைப்பட்டா, “கொஞ்சம் காரமா இருந்தா விரும்பி சாப்பிடுவீங்களேன்னுதான் வெச்சேன்” னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியுது? (ஆனா உண்மையில அளவு தெரியாம போட்டதை எங்க போய்ச் சொல்ல)

எதிர் பதிவு 
சட்னி அரைச்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்… வெறும் தேங்காய கடிச்சுட்டு சாப்பிடுங்கன்னு விட்டுட்டா இனிமே சரியா போகும்… என்ன நான் சொல்றது….? (தேவையா இது தேவையா…ஹா ஹா ஹா)

ஒரு நாள் ஒரே நாள்… கிட்சன்ஐ போர்களமா மாத்தாம ஒரு உப்மா செய்ங்க அப்புறம் பேசலாம் மத்ததெல்லாம் (உடனே “நான் செய்வேனே”னு நாலு பேரு சொல்லுவீங்கன்னு தெரியும்…நான் நாலு நல்லவங்கள பத்தி பேசலைங்ண்ணா… மிச்சம் 96 பேரு தான் எங்க டார்கெட்….ஹி ஹி ஹி)

பதிவு 
பேஸ்கெட்பால் விளையாடு, டிராயிங் கிளாஸ் போ, இன்டர்நெட் பழகு, ஹேரி பாட்டர் படி, பரத நாட்டியம் பழகுன்னு அந்த பச்ச மண்ண இந்தப் பாடு படுத்தறீங்களே, அவ வயசுல நீங்க அ,ஆ,இ, ஈ ஒழுக்கமா எழுத பழகீருப்பீங்களா?

எதிர் பதிவு 
என்ன செய்ய? வாய்ச்சது தான் இப்படி விதின்னு ஆகி போச்சு…. நாம பெத்ததாச்சும் நல்லபடியா இருக்கட்டும்னு நெனைக்கறது தப்பாங்ண்ணா… நேரடியா சொன்னா உங்க மனசு கஷ்டப்படும்னு சொல்லாம விட்டது தங்கமணி தப்பு …. (இப்ப என்ன சொல்லுவீங்க… இப்ப என்ன சொல்லுவீங்க…ஹா ஹா ஹா)

பதிவு 
குழந்தைக்கு யூனிஃபார்ம் தான் வாங்கப் போறோம், அப்பவும் எதுக்கு மத்த துணியெல்லாம் பாத்துட்டு அப்புறமா யூனிஃபார்ம் வாங்கறீங்க?

எதிர் பதிவு 
அதுதாங்க மல்டி-டாஸ்கிங்…. ஓ… அப்படின்னா என்னனே ரங்க்ஸ்களுக்கு தெரியாதில்ல… அதாவது… ஒரு வேலை செய்யறப்பவே அவகாசம் கெடைச்சா பின்னாடி வேண்டியதையும் பாத்து வெச்சுக்கறது பெண்களுக்கே உரிய ஒரு குணம்… இல்லேனா உங்கள மாதிரி நூறு ரூபா பெறாத சட்டைய ஆயிரம் குடுத்து வாங்க வேண்டி வருமே பாஸ்… ஹே ஹே ஹே…

பதிவு 
எங்க சொந்தக்காரங்க கிட்ட நாங்க ஃபோன்ல பேசும் போது மட்டுமே ஏன் நீங்க மிக்ஸில மசால் அரைக்கறீங்க?

எதிர் பதிவு 
என்ன கொடுமைங்ண்ணா இது? “ஆகாத பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்” னு சொல்றாப்ல பேச்சு…. அரைச்சாலும் தப்பு அரைக்கலைனாலும் “என் தங்கமணிக்கு சமயல் அறையே எங்க இருக்குன்னு தெரியாது”ன்னு ஒரு டயலாக் சொல்லுவீங்க… ஏங்க கேக்க ஆள் இல்லைன்னு பேசறீங்களோ….? ஹும்… 33 % அரசாங்கம் குடுத்தாலும் வீட்டுல என்னிக்கி தான் விடியுமோ…

பதிவு 
உங்களுக்கு புடவை வாங்கணும்னா நீங்க ரெண்டு மணி நேரம் வேண்ணாலும் நின்னு வாங்கிக்கங்க, ஆனா நீங்க பாக்கற 237 புடவையையும் நானும் பாக்கணும்னா, இதெல்லாம் அராஜகமாத் தோணலயா?

எதிர் பதிவு 
என்னங்க செய்ய? உங்கள மாதிரியா நாங்க… நாங்க உடுத்துற புடவை கூட உங்களுக்கும் பிடிச்சதா இருக்கணும்னு நெனக்கற நல்ல மனசு தங்கமணிகளுக்கு இருக்கே… (ஹா ஹா ஹா)

பதிவு 
எங்க வெளீல கெளம்புனாலும் நாங்க கிளம்பி ஒரு கால் மணி நேரம் கழிச்சுதான் நீங்க ரெடியாகணும்கறது ஒரு சடங்காவே வெச்சிருக்கீங்களா? (அந்த கால் மணி நேரத்துல கேஸ் ஆஃப் பண்ணு, சன்னலை சாத்து, சாம்பாரை ஃபிரிட்ஜுல வைன்னு ஒரு 34 வேலைகள லிஸ்ட் போட்டு செய்ய வெக்கறீங்களே அது ஏன்)

எதிர் பதிவு 
உங்கள போல கை வீசிட்டு கெளம்ப நாங்க என்ன நீங்களா? உங்களுக்கு கிளம்பறது ஒண்ணு தான் வேலை… எங்களுக்கு அதுவும் ஒரு வேலை… அதோட சமைக்கறது (நீங்க மேல சொன்னாப்ல அந்த நேரத்துல தானே உங்க சொந்த காரங்க கூட அரட்டை அடிச்சுட்டு நாங்க mixie போடறத வேற கிண்டல் பண்ணுவீங்க… பின்ன என்ன ஹெல்ப் பண்றதா போச்சு…), பிள்ளைகள கிளப்பறது, வீட்டை ஒழுங்கு பண்றது எல்லாமும் இருக்கே (கரெக்ட் தானே பாஸ்…)

பதிவு 
பாத்ரூம் ஷெல்ஃபுல போதை வஸ்துக்கள் மாதிரி ஒரு 25 டப்பால கலர் கலரா கடந்த ஒரு நூற்றாண்டா என்னென்னமோ இருக்குதே, இதுல ஒரு ஐட்டத்தையாவது கடந்த மூன்று மாதங்கள்ல ஒருதரமாவது யூஸ் பண்ணீருக்கீங்களா?

எதிர் பதிவு 
//”போதை வஸ்துக்கள்”// உங்களுக்கு ஏங்ண்ணா எல்லாமும் இப்படியே தோணுது…? ஓ… நீங்க ரங்கமணி ஆச்சே… அப்படி தான் இருக்கும்… யூஸ் பண்றதெல்லாம் பிட் நோட்டீஸ் அடிச்சு சொல்லிட்டா பண்ண முடியும்… எல்லாம் பண்றது தான்..

பதிவு 
எந்த கடை முன்னால காரை நிறுத்த முடியாதோ, கண்டிப்பா அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு எப்படி கண்டு பிடிக்கறீங்க?

எதிர் பதிவு 
அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு தெரிஞ்சு வெச்சு இருக்கறதுக்கு பாராட்டறத விட்டுட்டு இதுக்குமா குத்தம்… ஆண்டவா காப்பாத்து…

பத்து கேள்வி கேட்டீங்களே… உங்ககிட்ட ஒரே கேள்வி…

அது எப்படிங்ண்ணா அத்தனை நேரம் வெட்டியா டிவி பாத்துட்டு இருந்தாலும் தங்கமணிக ஒரு வேலை சொல்றப்ப மட்டும் ரங்கமணிகளுக்கு முக்கியமான போன் கால் இல்லைனா ஆபீஸ் வேலை வருது…

என்னமோ போங்க… இனிமே பொண்ணுகள புரிஞ்சுக்கவே முடியலைன்னு யாரும் சொன்னா நான் டென்ஷன் ஆய்டுவேன் ஆமா… ஹா ஹா ஹா

பதில் சொன்னது: http://appavithangamani.blogspot.com

Advertisements
பின்னூட்டங்கள்
  1. chinnapiyan v.krishnakumar சொல்கிறார்:

    எல்லாமே ரசிக்கதக்கது ஆக இருந்தது. முக்கியமா அந்த பாத் ரூம் செல்ஃப் . அப்பப்பா சொல்லமுடியாது. விதவிதமா பாட்டில்ஸ். சின்ன சைசிலிருந்து பெரிய சைஸ் வரைக்கும். அந்த லோஷன் இந்த லோசண்ணு. இதுகளை எல்லாம் எப்பாயாவது யூஸ் பண்ணியதுண்டான்னு நானும் கேட்டதுண்டு. காசை கரியாக்குதுங்க.

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s