ஆட்சி மாற்றம் – ரணகளமான பிரபலங்கள் – ட்விட்டரில் காமெடி கலவரம்.

Posted: மே 23, 2011 in #கீச்சுக்கள், அரசியல்/தேர்தல், நகைச்சுவை
குறிச்சொற்கள்:, , , , , , ,

நேற்று தேர்தல் முடிவுகள் வெளிவந்ததால் வந்து விழுந்த ட்விட்டுக்கள் ஏராளம்.  அந்த சமயத்தில் பிளாக்கர் வேறு வேலை செய்யாததால் நிறைய வலையுலக பிரபலங்கள், தமிழக அரசியல் பிரபலங்களை குத்தகைக்கு எடுத்து கலாய்த்தனர், அதற்காக ஒருசிறப்பு வலைப்பாயுதே..

@bewithsureshm  திமுக – மூன்றெழுத்து, ஊழல் – மூன்றெழுத்து, ஆப்பு – மூன்றெழுத்து, ஜெயில் – மூன்றெழுத்து, பெயில் – மூன்றெழுத்து, தூக்கு – மூன்றெழுத்து.
@drraman07 சத்தியமூர்த்தி பவன் – பிச்சிக்கிச், அறிவாலயம் – நட்டுகிச், போயஸ் கார்டன் – பளிச், பளிச் #அறிவாலயத்துக்கு மேல் பாலம் கட்டும் பனியில் கேப்டன்.

@rahimgazali: தான் தோற்கும் ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு மிசினை குறை சொல்லும் ஜெயலலிதா இப்போது என்ன சொல்வார்# டவுட்டு.

@karaiyaan: டேய் ராகுலு ! நம்ம பஞ்சாயத்து (தங்கபாலு) பாலிடாயிலை குடிச்சிட்டாண்டா !

@settaikaaran கூட்டணியில் இருந்தாலும் அம்மாவுக்கு எதிர்கட்சி தலைவர் ஆகும் வாய்ப்பு நம்ம கேப்டனுக்கு கிடைத்த வெற்றி டாஸ்மாக் சங்கத்துகு கிடைத்த வெற்றி.

@imcheenu: டாய் செவல தாவுடா தாவு : எங்க தாவுரது நானே தவழ்ந்துக்கிட்டு இருக்கேன் #ராமதாஸ்.

@bharathiee: எரிகிற இரண்டு கொள்ளிகளில் சிறந்த கொள்ளியாக அதிமுகவை தேர்வு செய்துள்ளனர் # இனியாவது மக்கள் தலைதப்புமா?

@kekkepikkuni  நேற்று வரை திமுக கூட்டணி வெல்லும்னு கருத்துக் கணிப்பு சொன்ன மீடியா கம்பெனிகளின் இன்றைய விளக்கம் என்ன?
@imayabharathi பெரிய திருடர்களிடமிருந்து தப்பித்து சின்ன திருடர்களிடம் மாட்டிக்கொண்டோம் #அவ்வளவு தான் வித்தியாசம்.
 @jillthanni  விடுதலைச் சிறுத்தைகள் 10 இடங்களிலும் அதிர்ச்சித் தோல்வி #ஆமாம் இவிங்க பெரிய வீனஸ் வில்லியம்சு பாரு.
@rajeshjothi என்ன தான் சந்தோசமா இருந்தாலும் “இந்தம்மா” வந்து என்னென்னல்லாம் பண்ண காத்திருக்கோனு ஒரு பயம் இருக்க தானே செய்யுது?#மனசாட்சி
@raghuji  இனி கூடிய சீக்கிரம் 500 கோடி செலவில் “சசிகலா பிக்சர்ஸ்” பெருமையுடன் வழங்கும் “எந்திரன் பார்ட் 2”-வை எதிர்பார்க்கலாமா?#prediction.

@Vaanmugil : விக்கல் நிற்க விஷம் குடித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களே!, இன்னும் 2 நாட்களில் பேயாட்டம் தொடக்கம். என்ஜாய்!

@umakrishh ஏதோ அடிமைகள் போல வீட்டு வாசலில் காவல் காத்தவர்களுக்கு உயிர் கொடுத்த சகாயம் அவர்களுக்கு ஒரு சபாஷ்..
@Alex_Pandian இந்தத் தேர்தலில் மிகவும் வருத்தப்படிருக்கக் கூடிய ஒரு நபர் ஸ்டாலின், அவரது உழைப்பெல்லாம் சகோதர, சகோதரியின் செயல்களால் வீண்
@Pattapatti ஊழல் பண்ணீட்டு.. வெட்கமேயில்லாமல் ஓட்டு கேட்டால் இதுதான் கதி..( இது அம்மாவுக்கு பொருந்தும் உடன்பிறப்பே..வெட்கம் தவீர்)
@gbsivakumar RT : ரஜினி கிரிக்கெட் பார்க்க போனார். இந்தியா வென்றது. ரஜினி அதிமுகவுக்கு ஓட்டு போட்டார். அதிமுக வெல்கிறது. ரஜினி ராக்ஸ். #fb
நக்கீ கோவாலுவின் மீசை முடிகளை மொத்தமாக கொண்டு வருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு கொடுக்கப்படும்!

@writermugil யாராவது ‘வளர்ப்பு மகன்’கள் எங்கேயாவது இருந்தால், உடனே எந்தப் பெண்ணையாவது இழுத்துக் கொண்டு போயஸுக்கு ஓடவும். கல்யாணம் செய்து வைக்கப்படும்.
@nirujah தோல்வியை பார்த்த போது ஒரு நிமிடம் கண்கள் பனித்தன. பழைய வடுக்களின் வெளிப்பாடோ! பழிதீர்த்த திருப்தியோ! #ஓர்_ஈழத்தமிழன்_உணர்வு
@kavi_rt ஏன் அதிமுக ஜெயிக்கும்போது மட்டும் மிருகபல மெஜாரிடி கிடைக்கிறது? இதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
நன்றி தமிழருவி மணியன்! உங்க பேச்சக்காட்டிதான் வீட்ல கொஞ்சம் பேர்த்த திமுகவுக்கு எதிரா வாக்களிக்க வைக்க முடிஞ்சது.

@vg_s திமுக வீழ்ச்சிக்குக் கொண்டாடும் நாம், அதிமுக தோற்று திமுக ஜெயிப்பதற்கும் கொண்டாட வேண்டியிருக்கும். இரண்டுமே விஷத்தில் புழுத்த புழுக்கள்.
@naiyandi நான் தாவி விட்டால் அது நடந்து விட்டால்..# என்ற ராம்தாஸ் பாடலுக்கு பின்னணி கொடுக்க வருகிறார் வீரமணி
@RajanLeaks  திருடுனதாலயும் தான் திமுக,காங். தோத்துச்சு! ஆனா திருடுனதால மட்டும் இல்ல! – கபில் சிபல் # சூப்பர் கருத்துமுத்து.

@rajarajan_r: சட்டு புட்டுன்னு ஒரு ஸ்கூல் ல இல்லேன்னா காலேஜ் ல join பண்ணனும் # லேப்டாப் கிடைக்கும்.

@senthilcp நான் சட்ட சபைக்கு கோட் சூட் அணிந்தே வருவேன்,ஓப்பனிங்க் ஃபைட் ரொம்ப முக்கியம் -கேப்டன் நிபந்தனை,கவர்னர் திகைப்பு.
@TBCD செயா , செயா + ல் நிறுத்தாமல் விளம்பரங்களா ஓடுது…டேய் 5 ஆண்டுகள் இருக்கு…..மெதுவா சம்பாதிங்க..இப்ப செய்தியயைப் போடுங்க !
நன்றி நண்பர் பாரத் பாரதி: http://bharathbharathi.blogspot.com
பின்னூட்டங்கள்
  1. பாரத்...பாரதி.. சொல்கிறார்:

    நன்றி…நன்றி…

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!