Archive for the ‘குடும்பம்’ Category

புது கணவன் தேடுகிறான் நம்பிகையோடு கூகிளில்

‘  மனைவியை  எப்படி சாமாளிப்பது ‘?

 

 

கூகுள் தேடல் முடிவு  அறிவிப்பு
‘இன்னும் தேடல் நடக்கிறது ‘
வெறுத்துவிட்டான்
கூகுள்  ,………..
கூகுள்  …………
பண்ணி  பார்த்தேன் கிடைக் கவில்ல
 யாகூ…. யாகூ……. பண்ணி பார்த்தேன் தெரியவில்ல
Courtesy: http://poovizi.blogspot.in
Advertisements

புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.

Courtesy: Facebook

ஜேசன் ஒரு கல்யாண போடோகிராபர்….சும்மா இருக்கிற நேரத்துல ஏதாவது வித்யாசமா போட்டோ எடுத்து சேர்த்து வைப்பாரு…அப்போ திடீருன்னு அவரோட பொண்ணுகளை வச்சு படம் எடுத்து ஆல்பமா வெளியிட்டாரு….

இந்த ஐடியாவை அவருக்கு கொடுத்ததே அவரோட பொண்ணுங்கக தானாம்…அந்த பொண்ணுங்களோட பேரு கிறிஸ்டினா அண்ட் கய்லாவாம்….

அதை நீங்களும் பாருங்களேன்…..

பிள்ளைங்களா இது????

தேவதைங்க……!!!!

பெண்பிள்ளைகளைப் போற்றி பாதுகாப்போம்….

ரசித்த இடம்: http://minsaaram.blogspot.in

நேத்து ராத்திரி ஒரு மோகினிப்பிசாச
நடந்து வர்றதை என் மனைவி பார்த்துட்டு,

என்னை எழுப்பி…

பயத்துல கட்டிப்பிடிச்சிட்டாங்களா?

.ஊஹூம்… அந்த
மாடல்லே கொலுசு வேணும்னு
கேட்டா..!

தந்தை தனது சிறுஎட்டு வயது மகனைக் கூப்பிட்டு,பணத்தைக் கையில் கொடுத்து,”கடைக்கு சென்று ஒரு கிலோ வெண்ணெய் வாங்கி,வா” என்றார்.பையனும் உடனே தனது குட்டி நாயை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றான்.கடையில் சாக்லேட்டுகளைப் பார்த்தவுடன் அவனுக்கு ஆசை வந்துவிட்டது.எனவே தந்தை கொடுத்த அவ்வளவு பணத்துக்கும் சாக்லேட்டுகள் வாங்கிக் கொண்டான்.பின் வீட்டிற்கு வந்தவுடன் சாக்லேட்டுகளை பத்திரமாக ஒரு இடத்தில் ஒளித்து வைத்துவிட்டு,முகத்தை மிகவும் கவலைப் படுகிறார்போலத் தொங்கப்போட்டுக்கொண்டு தகப்பன் முன் நின்றான்.தந்தை கேட்டார்,”எங்கேடா வெண்ணெய்?”பையன் சோகமாக,”வெண்ணெய் வாங்கி வந்தேன்.வழியில் இந்த குட்டி நாய் என்னிடமிருந்து பறித்து வெண்ணெய் முழுவதையும் சாப்பிட்டு விட்டது” என்றான்.உடனே தந்தை அந்த நாயைத் தூக்கி வீட்டில் இருந்த ஒரு தராசில் வைத்து நிறுத்தான் .அது ஒரு கிலோ இருந்தது.இப்போது பையனைப் பார்த்து அவர் கேட்டார்,”இதோ ஒரு கிலோ வெண்ணெய் இருக்கிறது.நாய் எங்கே?”

Courtesy: Facebook

காலைல எழுந்திருக்க ரொம்ப லேட் இன்னைக்கு.

அவசர அவசரமா ப்ரஷ் பண்ணிட்டு, ‘சுடுதண்ணி வெச்சிருப்பாங்களே’ன்னு சமையல் அறைக்குப் போனேன்.

நம்ம வீட்ல ஹீட்டர்லாம் கெடையாது. இட்லிப் பானைலதான் சுடுதண்ணி வைப்பாங்க. நல்ல்ல்லா சுடணும், சீக்கிரம் ஆகணும்னு மூடிபோட்டு தண்ணி சுட வைப்பாங்க.

நான் சமையலறைக்குப் போனப்ப, அந்த இட்லிப் பாத்திரம் கொதிச்சுக்கிட்டிருந்தது. ‘ப்பா.. இன்னைக்கு செம்ம குளியல் போடணும்டா’ன்னு அவசர அவசரமா பக்கத்துல இருந்த துணியை எடுத்துப் பாத்திரத்தைப் புடிச்சுகிட்டே பாத்ரூம் போய் வெச்சேன்.

துண்டெடுக்க போறமுன்னாடி வெளாவி வைக்கலாம்னு பாத்திரத்தைத் தொறந்தா…

உள்ள இட்லி வெந்துகிட்டிருக்கு!

மண்டைகாஞ்சு போய் ‘உமா பார்க்கறதுக்குள்ள மறுபடி கொண்டு போய் வெச்சுடணும்டா’ன்னு எடுத்தா, பின்னாடியே நிக்கறாங்க!

——-

கெளம்பறப்ப பூரிக்கட்டையைத் தொடைச்சுட்டு இருந்தாங்க. அநேகமா இன்னைக்கு நைட் பூரிதான்னு நினைக்கறேன் வீட்ல.

G+ இல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டவர்: பரிசல்காரன் கிருஷ்ணா

தங்கமணி அம்மா வீட்டுக்கு போயிட்டு ஒரு வாரம் கழிச்சு அன்னைக்கி தான் வந்திருக்காங்க. கணவனும் மனைவியும் அரட்டை அடிச்சுட்டு இருக்காங்க
ரகளை இப்படி தான் ஆரம்பிக்குது….
தங்கமணி : டிட் யு மிஸ் மீ?
ரங்கமணி : நோ ஐ மிசஸ்ட் யு (என அதிபுத்திசாலி லுக் விட்டு சிரிக்கிறார்)
தங்கமணி : (முறைக்கிறாள்)
ரங்கமணி : ஹா ஹா… நான் சொன்னது உனக்கு புரியலைன்னு நினைக்கிறேன்… இதெல்லாம் அதையும் தாண்டி புனிதமானது உனக்கு புரியறது கொஞ்சம் கஷ்டம் தான் (என சிரிக்கிறார்)
தங்கமணி : பித்துக்குளிதனமா எதுனா ஒளர வேண்டியது… அதுக்கு இப்படி ஒரு மொக்க விளக்கம் வேற… கஷ்டம்டா சாமி… உங்கூரு ஜோசியர் குத்தாலத்துல ஏதோ பரிகாரம் பண்ணனும்னு சொன்னாருனு உங்கம்மா சொன்னது சரி தான் போல இருக்கு

ரங்கமணி : என்ன கிண்டலா?

தங்கமணி : இல்ல சுண்டல்

ரங்கமணி : ஹ்ம்ம்… புரியலைனா புரியலைனு ஒத்துக்கோ, சும்மா சமாளிக்காத

தங்கமணி : சரி சாமி… ஒத்துக்கறேன், உங்க மேலான விளக்கத்தை இந்த பீமேல்’க்கு புரியற மாதிரி கொஞ்சம் சொல்றீங்களா?
ரங்கமணி :ஹா ஹா… நீ கூட சமயத்துல நல்லா காமடி பண்றே தங்கம்… சரி விளக்கம் என்னனா… நீ “டிட் யு மிஸ் மீ”னு கேட்டயா, அதுக்கு நான் என்ன சொன்னேன்…

தங்கமணி : ஐயோ… மறுபடி மொதல்லேந்தா… (என தலையில் கை வைக்க)
ரங்கமணி : சரி நானே சொல்றேன்… நான் “நோ ஐ மிசஸ்ட் யு”னு சொன்னேன்… அதாவது உன்னை கல்யாணம் பண்ணிட்டு மிஸ்சா இருந்த உன்னை மிசஸ் ஆக்கினேன்னு சொன்னேன்… இப்ப புரியுதா… (என காலரை தூக்கிவிட்டு கொண்டு கேட்க)
தங்கமணி : நல்லா புரியுது…
ரங்கமணி : என்ன புரியுது?
தங்கமணி : குத்தாலம் பரிகாரத்தை நாள் கடத்தாம செய்யணும்னு புரியுது
ரங்கமணி : பொறாம பொறாம… ஹையோ ஹயோ… (என சிரிக்க)
தங்கமணி : அதெல்லாம் இருக்கட்டும் நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லல
ரங்கமணி : என்ன கேட்ட?
தங்கமணி : ம்… சொரக்காய்க்கு உப்பு பத்தலனு கேட்டேன் (என்றாள் கடுப்பாய்)
ரங்கமணி : ஜோக்கா? ஹி ஹி… சிரிச்சுட்டேன் போதுமா… (என பல்லை காட்ட)
தங்கமணி : இங்க பாருங்க எனக்கு கெட்ட கோவம் வந்துரும்
ரங்கமணி : கோவத்துல கூட நல்லதா வராதா உனக்கு… ஹா ஹா
தங்கமணி : (முறைக்கிறாள்)
ரங்கமணி : சரி சரி சொல்றேன்… உன்னை மிஸ் பண்ணாம இருப்பனா தங்கம்
தங்கமணி : நிஜமா? (என்றாள் சந்தேகமாய் பார்த்தபடி)
ரங்கமணி : செத்து போன எங்க அப்பத்தா மேல சத்தியமா
தங்கமணி : எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?
ரங்கமணி : எவ்ளோனா…அதெப்படி சொல்றது (என விழிக்கிறார்)
தங்கமணி : அதேன் சொல்ல முடியாது… அப்ப நீங்க என்னை மிஸ் பண்ணல
ரங்கமணி : அது…. அப்படி இல்ல தங்கம்… நெறைய மிஸ் பண்ணினேன்… அதை எப்படி சொல்றது?
தங்கமணி : (இடைமறித்து) இந்த மழுப்பற வேலை எல்லாம் வேண்டாம்… இன்னிக்கி சாயங்காலத்துக்குள்ள எவ்ளோ மிஸ் பண்ணீங்கனு சொல்லணும்
ரங்கமணி : என்ன தங்கம் இது? எங்க மேனேஜர் டெட்லைன் வெக்கற மாதிரி சொல்ற
தங்கமணி : அந்த டெட் லைன் மிஸ் பண்ணினா வேலை தான் போகும்… இந்த டெட்லைனா மிஸ் பண்ணினா லைப்லைனே போய்டும் சொல்லிட்டேன் (என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறாள்)
ரங்கமணி : அடிப்பாவி… இப்படி சொல்லிட்டு போயிட்டாளே… என்ன பண்றது இப்போ? ப்ராஜெக்ட்ல சந்தேகம்னா டீம் மீட்டிங் போடலாம்… இந்த விசயத்துக்கு மீட்டிங் போட்டா என் மானம் டைடானிக்ல டிக்கெட் வாங்கிருமே… என்ன பண்ணலாம்… (என யோசிக்க…) ஐடியா… (என குதிக்கிறார்) கூகிள் இருக்க பயமேன்
ரங்கமணி : ( கூகிளில் “How” என டைப் செய்ததுமே “How to Tie a tie” என சஜசன் வர… ) இதொண்ணு என் வீட்டுக்காரி மாதிரியே குறுக்க குறுக்க பேசிகிட்டு…
தங்கமணி : (உள்ள இருந்து) என்னமோ சொன்ன மாதிரி கேட்டுச்சு?
ரங்கமணி : உன்னை ஒண்ணும் சொல்லல தங்கம்… இந்த சனியம் புடிச்ச கம்பியூட்டர் தான் (என சமாளிக்கிறார்)
தங்கமணி : (சைலண்ட்)
ரங்கமணி : ஹ்ம்ம்… (என பெருமூச்சு விட்டபடி… “How to measure how much…” என டைப் செய்து முடிக்கும் முன் “how to measure how much paint i need” என ஒரு நூறு லிங்குகள் வர) அடச்சே… ஆணியே புடுங்க வேண்டாம் போ… (என சலித்து கொண்டு கம்பியூட்டரை ஆப் செய்கிறார்)
சற்று நேரம் கழித்து…
தங்கமணி : ரெடியா? இப்ப சொல்லுங்க… என்னை எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?
ரங்கமணி : “ஐயையோ…அதுக்குள்ள டெட்லைன் வந்துடுச்சா” என தனக்குள் புலம்பியவர் “ம்… அது… சரி என்னை கேக்கறியே? நீ சொல்லு பாப்போம்… என்னை நீ எவ்ளோ மிஸ் பண்ணின?” என மடக்கினார். அல்லது மடக்கி விட்டதாக புளங்காகிதம் அடைந்தார்
ஆனால் அதெல்லாம் வெறும் காகிதமாக ஆக போவதை பாவம் அவர் அறியவில்லை
தங்கமணி : நானா? இங்கிருந்து கிளம்பின நிமிசத்துல இருந்து எப்படா திரும்பி வருவோம்னு நெனச்சேன்…அவ்ளோ மிஸ் பண்ணினேன்
ரங்கமணி : “ஐயையோ… எனக்கு இது தோணாம போச்சே…ச்சே…எவ்ளோ ஈஸியா சொல்லிட்டாளே… இந்த மாதிரி வேற எதுவும் தோண மாட்டேங்குதே” என புலம்பியவர் “பேசாம நானும் அப்படித்தான்னு சொல்லிடுவோம்” என தீர்மானித்து வாயை திறக்கும் முன்…
தங்கமணி : நானும் அப்படித்தான்னு சொல்றத தவிர வேற எது வேணா சொல்லுங்க… உங்களுக்கு இன்னும் இருபத்திநாலு மணி நேரம் டைம் (என எழுந்து செல்கிறாள்)
ரங்கமணி : ………………………………….
என்ன செஞ்சாரா? மேல உள்ள படத்த பாருங்க…அப்படி தான் முழிச்சுட்டு இருக்காராம். ஹையோ ஹையோ… :))

ரசித்த இடம்: http://appavithangamani.blogspot.in