24 மணிநேரப் பாதுகாப்பு

Posted: மார்ச் 6, 2013 in கதைகள், சுட்டது, மொக்கை
குறிச்சொற்கள்:, ,
ஒரு நாள் காலை செல்வா அவசர அவசரமாகக் குளித்துக்கொண்டிருந்தார். திடீரென குளியலறையில் இருந்து வெளியே தலை நீட்டிய செல்வா அவரது நண்பரிடம் கொஞ்சம் அவசரமாகச் ” சோப்பு வாங்கிட்டு வா”  என்று கத்தினார்.
அவரது நண்பரும் அவசர அவசரமாகக் கடைக்குச் சென்று சோப்பு வாங்கி  வந்தார். அதற்குள் செல்வா குளித்துவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவரது நண்பர் ” அதுக்குள்ளே ஏண்டா குளிச்ச ? “” பாத் ரூமுக்குள்ள தான் குளிச்சேன் , அங்கதானே குளிக்கணும் ?! “” ஐயோ , என்னைய சோப்பு வாங்கிட்டு வரச்சொல்லிட்டு சோப்பு வரதுக்கு முன்னாடியே ஏன் குளிச்சனு கேட்டேன் ? நீ எப்பவும் சுத்தமா இருப்பண்ணுதான் நான் அவ்ளோ வேகமா ஓடிப் போய் சோப்பு வாங்கிட்டு வந்தேன் ! இப்படிப் பண்ணுறதுக்கு எதுக்கு அவ்ளோ அவசரப்படுத்தி சோப்பு வாங்கிட்டு வரச்சொன்ன ?  “” அதுக்கு காரணம் இருக்கு , இரு சாப்பிட்டுட்டு வரேன் ! ”

” என்ன மண்ணாங்கட்டிக் காரணம் ? ” என்று கோபமாகக் கத்தினார் நண்பர்.

சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்த செல்வா நண்பர் வாங்கிவந்த சோப்பினை எடுத்துகொண்டு வேகமாக குளியலறைக்குச் சென்றார். மறுபடி குளிப்பானோ என்று நினைத்த அவரது நண்பர்

” ஏண்டா நீ எப்பவும் சாப்பிட்டுட்டுக் குளிக்க மாட்டியே , இன்னிக்கு எதுக்கு மறுபடியும் குளிக்கிற ? ”

” நான் எங்க குளிக்கப் போறேன் ?! ” என்று கூறியவர் குளியலறையில் இருந்து மற்றொரு சோப்பினைக் கையில் எடுத்து வந்தார்.

” ஏண்டா , இன்னொரு சோப்பு வச்சிட்டே எதுக்கு எங்கிட்ட எதுக்கு இன்னொரு சோப்பு வாங்கிட்டு வரச்சொன்ன ? ”

” சும்மா தொணதொணன்னு பேசாத , ஒரு நிமிஷம் இரு ! ” என்றவர் குளியலறையில் இருந்து எடுத்துவந்த சோப்பின் மீது தண்ணீரை ஊற்றி நண்பர் வாங்கிவந்த சோப்பால் தேய்க்க ஆரம்பித்தார்.

இதைப் பார்த்த அவரது நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. ” டேய் , என்ன பண்ணுற ? ”

” அது ஒன்னும் இல்ல , நான் குளிச்சிட்டிருக்கும்போது  இது கீழ விழுந்திடுச்சு , அதனால இது மேல கிருமி ஒட்டிருக்கும். அதான் இதுக்கு சோப்புப் போட்டு குளிப்பாட்டிட்டு இருக்கேன். இப்ப அதுமேல இருக்குற கிருமி எல்லாம் போயடும்ல ” என்றார் செல்வா.

” சோப்புக்கே சோப்புப் போட்ட ஆள் நீயாத்தாண்டா இருப்ப ! உன்னையும் ஒரு ஆளா மதிச்சு போய் சோப்பு வாங்கிட்டு வந்து கொடுத்தேன் பாரு என்னச் சொல்லனும் ? ”

” சுத்தமா இருக்கிறது தப்பாடா ? ”

” மொதல்ல இந்த சோப்பு விளம்பரத்த நிறுத்தனும் , போற போக்குல நீ பண்ணின மாதிரி பண்ணச்சொன்னாலும் சொல்லுவாங்க , அது சரி இனிமேல அந்தச் சோப்ப என்ன பண்ணுவ ? ”

” நாளைக்கும் இதே மாதிரி குளிப்பாட்டி விடுவேன் ?! ” என்றார் செல்வா.

” நாளைக்குமா ? எதுக்கு ? ”

” ஏன்னா இந்தச் சோப்பு 24 மணிநேரப் பாதுகாப்புத் தானே ! ” என்ற செல்வா கீழே விழுந்த சோப்பினை தண்ணீரில் கழுவத் தொடங்கினார்

Courtesy: http://selvakathaikal.blogspot.in/

 

Advertisements

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s