அடையாளம்

Posted: ஜனவரி 29, 2013 in கதைகள்
குறிச்சொற்கள்:, ,

“உன்னைப் பார்த்தால் ஏதோ கவலையாக இருப்பது போலிருக்கிறதே”

“ஆமாம்.. ஒரு சின்ன பிரச்சனை.. அதைத் தீர்த்து வைக்க ரொம்ப நேரமாகிவிட்டது.. அதனால் தூக்கம் கெட்டுப் போனது.. அதான் வாட்டமாக இருக்கிறது”

“என்னப்பா பிரச்சனை”

“நான் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருந்தேனே.. குதிரை வாங்க வேண்டும் என்று .. நேற்றைக்கு சந்தைக்குப் போனேன்.. இரண்டு குதிரை வாங்கி வந்தேன்..”

“இது நல்ல விஷயம் தானே .. இதில் எங்கிருந்து பிரச்சனை வந்தது”

“இரண்டு குதிரைக்கும் வித்தியாசம் கண்டு பிடிப்பதற்கு அளவு tape வைத்துக் கொண்டு நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்”

“அப்படியா”

“ஆமாம் அப்பா .. இரண்டு குதிரைகளையும் நிற்க வைத்து காதிலிருந்து தரை வரை எத்தனை உசரம் என அளந்து பார்த்தேன்.. இரண்டும் ஒரே உசரம்..”

” chin groove லிருந்து அளந்து பார்த்தாயோ..”

“அதையும் பார்த்துவிட்டேன்.. இரெண்டு குதிரைகளும் ஒரே உசரத்திலே தான் இருந்தன”

“குதிரையின் வயிற்றின் சுற்றளவு பார்த்தாயா”

“ம்ம்ம் அதையும் நான் விட்டு வைக்க வில்லை.. Loin, croup , flank என்பதாக ஒவ்வொரு இடத்தையும் வைத்துக் கொண்டு இரண்டு குதிரைகளின் வயிறு சுற்றளவு பார்த்தேன்.. வித்தியாசமே இல்லையப்பா”

” குதிரையின் பின் காலின் gaskin muscle முன் காலின் இடைவெளி அளந்து பார்.. அது எப்போதும் வேறுபடும்”

“அதையெல்லாம் பார்த்தாயிற்று ”

“ஹாங்க்… வாலின் நீளம் பார்த்தாயா.. வாலின் நீளம்”

“அடப் போப்பா.. அதையும் பார்த்து விட்டேன்.. அது மட்டுமல்ல வால் தொடங்கும் dock இடத்திலிருந்து தரை எத்தனை உசரம். காதுகளுக்கு பின்னே இருக்கும் poll வரைக்கும் எத்தனை நீளம் எல்லாம் பார்த்து விட்டேன்.. ஒரே அளவு தான்.. ”

“குதிரைகளின் barrel நடுப்புள்ளியிலிருந்து.,, தரை வரைக்கும் அளந்து பார்த்தாயா”

“ம்ம்ம் பார்த்து விட்டேன் நண்பா.. அதுமட்டுமில்லை க்ரெஸ்ட் பகுதியின் சுற்றளவு பார்த்தேன்.. whither பகுதி சுத்தளவு.. point of hip இடத்திலிருந்து தரை இருக்கும் உசரம், அங்கிருந்து மூக்கு வரை நீளம்.. குதிரைக்கு shirt , pant தைப்பதானால் என்னால் மனப்பாடமாக அளவுகளை மனதிலே வைத்துக் கொண்டு தைக்க முடியும் என்றால் பார்த்துக் கொள்”

“அடடா .. நீயும் எல்லாம் தான் செய்து பார்த்திருக்கிறாய்.. ஆனாலும் வழி கிடைக்கவில்லை.. விட்டுத் தள்ளு”

“விட்டுத் தள்ளுவதாவது..  நடக்குமா.. அதுவும் என்னிடம் !!!! ஒரு வழியாக இரண்டு குதிரைகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடித்துவிட்டேன்”

“அது தானே பார்த்தேன்.. நீ கில்லாடியாச்சுதே.. கண்டுபுடிக்காமல் விடுவாயா.. என்ன வித்தியாசம் .. என்ன வித்தியாசம் சொல்லு”

“முன்னே மூஞ்சி நீளம் இருக்கிறதல்லவா.. அது ஒரு குதிரையை விட இன்னொன்றுக்கு இரண்டு அங்குலம் நீளமாக இருந்தது”

“சப்பாபாஷ்… சரியான ஆளப்பா நீ.. அது சரி.. ஒவ்வொருதரமும் இதை அளந்து அளந்து பார்த்துக் கொண்டா இருப்பாய்.. இந்த வித்தியாசத்தை.. பார்த்த உடன் தெரிந்து கொள்வது மாதிரி குதிரைக்கு ஏதாவது அடையாளம் செய்து வைத்தாயா”

“அந்தக் கவலை இல்லை.. கருப்புக் குதிரைக்குத் தான் வெள்ளைக் குதிரையை விட மூஞ்சி நீளம் என எனக்கு நியாபகம் இருக்கும்

courtesy: Chandramowleeswaran. V

Advertisements

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s