என்னை எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?

Posted: ஜனவரி 28, 2013 in கதைகள், குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை
குறிச்சொற்கள்:, , , , , ,

தங்கமணி அம்மா வீட்டுக்கு போயிட்டு ஒரு வாரம் கழிச்சு அன்னைக்கி தான் வந்திருக்காங்க. கணவனும் மனைவியும் அரட்டை அடிச்சுட்டு இருக்காங்க
ரகளை இப்படி தான் ஆரம்பிக்குது….
தங்கமணி : டிட் யு மிஸ் மீ?
ரங்கமணி : நோ ஐ மிசஸ்ட் யு (என அதிபுத்திசாலி லுக் விட்டு சிரிக்கிறார்)
தங்கமணி : (முறைக்கிறாள்)
ரங்கமணி : ஹா ஹா… நான் சொன்னது உனக்கு புரியலைன்னு நினைக்கிறேன்… இதெல்லாம் அதையும் தாண்டி புனிதமானது உனக்கு புரியறது கொஞ்சம் கஷ்டம் தான் (என சிரிக்கிறார்)
தங்கமணி : பித்துக்குளிதனமா எதுனா ஒளர வேண்டியது… அதுக்கு இப்படி ஒரு மொக்க விளக்கம் வேற… கஷ்டம்டா சாமி… உங்கூரு ஜோசியர் குத்தாலத்துல ஏதோ பரிகாரம் பண்ணனும்னு சொன்னாருனு உங்கம்மா சொன்னது சரி தான் போல இருக்கு

ரங்கமணி : என்ன கிண்டலா?

தங்கமணி : இல்ல சுண்டல்

ரங்கமணி : ஹ்ம்ம்… புரியலைனா புரியலைனு ஒத்துக்கோ, சும்மா சமாளிக்காத

தங்கமணி : சரி சாமி… ஒத்துக்கறேன், உங்க மேலான விளக்கத்தை இந்த பீமேல்’க்கு புரியற மாதிரி கொஞ்சம் சொல்றீங்களா?
ரங்கமணி :ஹா ஹா… நீ கூட சமயத்துல நல்லா காமடி பண்றே தங்கம்… சரி விளக்கம் என்னனா… நீ “டிட் யு மிஸ் மீ”னு கேட்டயா, அதுக்கு நான் என்ன சொன்னேன்…

தங்கமணி : ஐயோ… மறுபடி மொதல்லேந்தா… (என தலையில் கை வைக்க)
ரங்கமணி : சரி நானே சொல்றேன்… நான் “நோ ஐ மிசஸ்ட் யு”னு சொன்னேன்… அதாவது உன்னை கல்யாணம் பண்ணிட்டு மிஸ்சா இருந்த உன்னை மிசஸ் ஆக்கினேன்னு சொன்னேன்… இப்ப புரியுதா… (என காலரை தூக்கிவிட்டு கொண்டு கேட்க)
தங்கமணி : நல்லா புரியுது…
ரங்கமணி : என்ன புரியுது?
தங்கமணி : குத்தாலம் பரிகாரத்தை நாள் கடத்தாம செய்யணும்னு புரியுது
ரங்கமணி : பொறாம பொறாம… ஹையோ ஹயோ… (என சிரிக்க)
தங்கமணி : அதெல்லாம் இருக்கட்டும் நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லல
ரங்கமணி : என்ன கேட்ட?
தங்கமணி : ம்… சொரக்காய்க்கு உப்பு பத்தலனு கேட்டேன் (என்றாள் கடுப்பாய்)
ரங்கமணி : ஜோக்கா? ஹி ஹி… சிரிச்சுட்டேன் போதுமா… (என பல்லை காட்ட)
தங்கமணி : இங்க பாருங்க எனக்கு கெட்ட கோவம் வந்துரும்
ரங்கமணி : கோவத்துல கூட நல்லதா வராதா உனக்கு… ஹா ஹா
தங்கமணி : (முறைக்கிறாள்)
ரங்கமணி : சரி சரி சொல்றேன்… உன்னை மிஸ் பண்ணாம இருப்பனா தங்கம்
தங்கமணி : நிஜமா? (என்றாள் சந்தேகமாய் பார்த்தபடி)
ரங்கமணி : செத்து போன எங்க அப்பத்தா மேல சத்தியமா
தங்கமணி : எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?
ரங்கமணி : எவ்ளோனா…அதெப்படி சொல்றது (என விழிக்கிறார்)
தங்கமணி : அதேன் சொல்ல முடியாது… அப்ப நீங்க என்னை மிஸ் பண்ணல
ரங்கமணி : அது…. அப்படி இல்ல தங்கம்… நெறைய மிஸ் பண்ணினேன்… அதை எப்படி சொல்றது?
தங்கமணி : (இடைமறித்து) இந்த மழுப்பற வேலை எல்லாம் வேண்டாம்… இன்னிக்கி சாயங்காலத்துக்குள்ள எவ்ளோ மிஸ் பண்ணீங்கனு சொல்லணும்
ரங்கமணி : என்ன தங்கம் இது? எங்க மேனேஜர் டெட்லைன் வெக்கற மாதிரி சொல்ற
தங்கமணி : அந்த டெட் லைன் மிஸ் பண்ணினா வேலை தான் போகும்… இந்த டெட்லைனா மிஸ் பண்ணினா லைப்லைனே போய்டும் சொல்லிட்டேன் (என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறாள்)
ரங்கமணி : அடிப்பாவி… இப்படி சொல்லிட்டு போயிட்டாளே… என்ன பண்றது இப்போ? ப்ராஜெக்ட்ல சந்தேகம்னா டீம் மீட்டிங் போடலாம்… இந்த விசயத்துக்கு மீட்டிங் போட்டா என் மானம் டைடானிக்ல டிக்கெட் வாங்கிருமே… என்ன பண்ணலாம்… (என யோசிக்க…) ஐடியா… (என குதிக்கிறார்) கூகிள் இருக்க பயமேன்
ரங்கமணி : ( கூகிளில் “How” என டைப் செய்ததுமே “How to Tie a tie” என சஜசன் வர… ) இதொண்ணு என் வீட்டுக்காரி மாதிரியே குறுக்க குறுக்க பேசிகிட்டு…
தங்கமணி : (உள்ள இருந்து) என்னமோ சொன்ன மாதிரி கேட்டுச்சு?
ரங்கமணி : உன்னை ஒண்ணும் சொல்லல தங்கம்… இந்த சனியம் புடிச்ச கம்பியூட்டர் தான் (என சமாளிக்கிறார்)
தங்கமணி : (சைலண்ட்)
ரங்கமணி : ஹ்ம்ம்… (என பெருமூச்சு விட்டபடி… “How to measure how much…” என டைப் செய்து முடிக்கும் முன் “how to measure how much paint i need” என ஒரு நூறு லிங்குகள் வர) அடச்சே… ஆணியே புடுங்க வேண்டாம் போ… (என சலித்து கொண்டு கம்பியூட்டரை ஆப் செய்கிறார்)
சற்று நேரம் கழித்து…
தங்கமணி : ரெடியா? இப்ப சொல்லுங்க… என்னை எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?
ரங்கமணி : “ஐயையோ…அதுக்குள்ள டெட்லைன் வந்துடுச்சா” என தனக்குள் புலம்பியவர் “ம்… அது… சரி என்னை கேக்கறியே? நீ சொல்லு பாப்போம்… என்னை நீ எவ்ளோ மிஸ் பண்ணின?” என மடக்கினார். அல்லது மடக்கி விட்டதாக புளங்காகிதம் அடைந்தார்
ஆனால் அதெல்லாம் வெறும் காகிதமாக ஆக போவதை பாவம் அவர் அறியவில்லை
தங்கமணி : நானா? இங்கிருந்து கிளம்பின நிமிசத்துல இருந்து எப்படா திரும்பி வருவோம்னு நெனச்சேன்…அவ்ளோ மிஸ் பண்ணினேன்
ரங்கமணி : “ஐயையோ… எனக்கு இது தோணாம போச்சே…ச்சே…எவ்ளோ ஈஸியா சொல்லிட்டாளே… இந்த மாதிரி வேற எதுவும் தோண மாட்டேங்குதே” என புலம்பியவர் “பேசாம நானும் அப்படித்தான்னு சொல்லிடுவோம்” என தீர்மானித்து வாயை திறக்கும் முன்…
தங்கமணி : நானும் அப்படித்தான்னு சொல்றத தவிர வேற எது வேணா சொல்லுங்க… உங்களுக்கு இன்னும் இருபத்திநாலு மணி நேரம் டைம் (என எழுந்து செல்கிறாள்)
ரங்கமணி : ………………………………….
என்ன செஞ்சாரா? மேல உள்ள படத்த பாருங்க…அப்படி தான் முழிச்சுட்டு இருக்காராம். ஹையோ ஹையோ… :))

ரசித்த இடம்: http://appavithangamani.blogspot.in

Advertisements

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s