ரஜினி

Posted: திசெம்பர் 12, 2012 in சுட்டது
குறிச்சொற்கள்:, , , ,

ரஜினி ட்விட்டரில் இருந்தால் Following ஆப்ஷனே இருக்காது. வேறு யாரைத்தான் ஃபாலோ செய்வீர்களாம்?

ரஜினி ரோமில் இருந்தால், ரோமானியர்கள் எல்லாம் ரஜினி போல் செய்கிறார்கள்.

நாம் 2 விஷயங்களைத்தான் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒன்று, ரஜினி பற்றிய தகவல்கள் மற்றவை எல்லாம் வெறும் ஜோக்குகள்.

ரஜினி பிறந்தநாளன்று இமயமலை போய்த்தான் ஆகவேண்டும். அதுபாட்டுக்கு வாழ்த்துசொல்ல சென்னை வந்துவிட்டால் என்ன ஆகிறது?

இன்று பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்ல தவறியவர்களுக்கு… உங்களுக்கு எல்லாம் “நாளை” மீண்டும் இன்றாகிவிடும். ஜாக்கிரதை!

இந்த பிரபஞ்சத்தின் அதிவிரைவாக ஓடக்கூடிய மனிதர் உசைன் போல்ட்தான்.  இப்பவாவது நம்புகிறீர்களா, ரஜினி இந்த பிரபஞ்சத்தை சேர்ந்தவர் இல்லை என்று…

மனிதகுலத்தை ஒரே மதமாக்கினால் கடவுள்தான் நமக்கு ரஜினி

ரஜினி “நான் ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்னதற்கு சமம்” என்றார்.  உடனே கணிதவியலாளர்கள் புரிந்துகொண்டு நம்பர் தியரியை திருத்தி நூறுக்கு மேல் எண்களே இல்லாமல் செய்துவிட்டார்கள்.

பெருவெடிப்பிற்கு முன்னர் பிரபஞ்சம் எப்படி இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தார்கள். ‘இப்படித்தான் இருந்தது’ என்று சொல்லி ரஜினி சொடுக்குப் போட… BIG BANG!

‘மனிதகுலத்திற்கு இது பெரிய பாய்ச்சல்’ என்றார் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், ரஜினியின் தோள் மீது ஏறி அமர்ந்துகொண்டு.

ரஜினி ஒளிவேகத்தையும் தாண்டி அதிவிரைவாக ஓடுவார், அவர் முதுகை அவரே வந்து அடித்துக் கொள்ளுமளவுக்கு விரைவாக.

“ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” #11th Commandment

Courtesy: ஸ்ரீதர் நாராயணன் in G+

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s