மதுரை – காந்தி அருங்காட்சியகம்

Posted: திசெம்பர் 11, 2012 in அரசியல்/தேர்தல், சுட்டது, நல்ல மனிதர்கள், புகைப்படங்கள், பொது அறிவு
குறிச்சொற்கள்:, , , ,
மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து சுமார் அரை மைல் தொலைவில் கம்பீரமாகத் திகழ்கிறது காந்தி அருங்காட்சியகம். (Gandhi Museum) 1959 ஆம் ஆண்டு இந்திய மக்கள் பலரின் நிதி உதவியால் காந்தி அறக்கட்டளை மூலமாகக் கட்டப்பட்டது. ஏப்ரல் 15 , 1959 ஆம் வருடம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.
இராணி மங்கம்மாள் அரண்மனை இந்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இந்த நினைவு இல்லத்தை அங்கீகரிக்கிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு காலகட்டங்களை விளக்கும் ஓவியங்கள் நம்மை வரவேற்கின்றன. (200 க்கும் மேற்பட்டவை!) அடுத்து மகாத்மா காந்தியின் வாழ்வில் நடைபெற்ற முக்கியமான சம்பவங்களை விளக்கும் ஓவியக்காட்சிகள். நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், குறிப்புகள் என்று பல்வேறு வடிவில் அவரது வாழ்க்கை சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
காந்தியடிகளின் சொற்பொழிவுகளிலிருந்து சிறந்த வாக்கியங்கள், அவரது கையெழுத்துப் பிரதியும், அரிய நிழற்படத் தொகுப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவர் பயன்படுத்திய பொருட்களில் 14 இங்கு இன்னும் பாதுகாக்கப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்கது அவர் இறக்கும்போது அணிந்திருந்த மேல்துண்டு. இரத்தக்கறையுடன் கண்ணாடிப் பேழையில் கவனமாகப் பாதுகாக்கப்படுகிறது. அவரைக் கொல்லப் பயன்படுத்திய கைத்துப்பாக்கியின் மாதிரியும் உள்ளது.
முன்னாள் பிரதமர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரால் பார்வையிடப்பட்ட நினைவில்லம். மதுரை மாநகரின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்று. மற்றவற்றைப் புகைப்படங்கள் சொல்லும். அவரது பிறந்த நாளில் வெளிவரும் இந்தப் பதிவு ஒவ்வொரு இந்தியனுக்கும் அர்ப்பணம்.
ஹே ராம்!
நன்றி ஸ்ரீ 

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s