தமிழனாய் பெருமை கொள் தோழா!

Posted: ஏப்ரல் 20, 2012 in சுட்டது, நல்ல சிந்தனைகள், பொது அறிவு
குறிச்சொற்கள்:, , , , , ,

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை
கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த
அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..

1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்.

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை
துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும்
தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம்
மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் !

Courtesy: Dhana Sekar

பின்னூட்டங்கள்
 1. மாசிலா சொல்கிறார்:

  ஆச்சரியமாக உள்ளது. ஒன்றக்கு கீழ் இத்தனை பிரிவுகளா! ஒன்றக்கு கீழ் இத்தனை உட்பிளவுகள் உருவானதற்கு பின் கட்டாயம் சில காரணங்கள் இருக்கும். தேவை இல்லாமல் இத்தனை பிரிவுகளை அநாவசியமாக அக்கால தமிழர்கள் உருவாக்கி இருக்கமாட்டார்கள்.
  உதாரணத்திறகு ‘அணு’ என்ற பரிவு எந்த காரணத்திறகாக உருவானது? தேவை எதுவும் இல்லாமல் யாரும் இது போன்ற இலக்கங்கள் எதையும் படைக்கமாட்டார்கள். எனவே இவைகளின் பின்னனியில் இருந்த தேவைகள் என்னவாக இருந்திருக்கும். இப்படி நிறைய கேள்விகள் உள்ளன. இதை ஆராய்ச்சி செய்து பார்த்தால் பல உண்மைகள் வெளி வரும். என் யூகப்படி சொல்லப் போனால், அக்கால தமிழர்கள் கணக்கிலும் விஞ்ஞாணத்திலும் வல்லுனராக இருந்திருப்பர் என்றே நம்பலாம்.
  இதைப்பற்றிய வேறு தகவல்கள் கிடைத்தால் பகிரவும் நண்பரே.
  நன்றி.

 2. sasikala சொல்கிறார்:

  அறிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி .

 3. LKG (@chinnapiyan) சொல்கிறார்:

  இவ்வளவு மொழி வளம் உள்ள நம் தமிழை விட்டு விட்டு, மக்கள் ஆங்கிலத்தை மோகிப்பது வேதனைக்குரியது. நன்றி அருமை

 4. Prasanna Sarma சொல்கிறார்:

  Very informative blog. I wonder how this will help today’s engineers in Tamil speaking countries worldwide?

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s