அலுவலகம் விட்டு வரும் வழியில் தங்கமணியை போலவே ஒரு பெண்ணை பார்த்தேன். தங்கமணி தான் என நினைத்து அருகில் போய் பேச பிறகு தான் அது வேற ஒருத்தர் என்று. மன்னிப்பு கேட்டு விட்டு வீட்டுக்கு வந்தேன்.
நம்ம நாக்குல தான் சனி கொலைவெறியோட இருக்காரே. வந்ததும் வராததுமா உடனே தங்கமணி கிட்ட “தங்கமணி உன்னை மாதிரியே ஒருத்தர வர்ற வழியில பாத்தேன். அப்படியே அசந்து போய்டேன். தெரியுமா?” அப்படின்னு கேட்டேன். அதுக்கு பதிலுக்கு தங்கமணி ஒரு கேள்வி கேட்டாங்க. என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லி குடுத்து இந்த அப்பாவி ரங்கமணிய காப்பாத்துங்க ப்ளீஸ்
அப்படி என்ன கேள்வி கேட்டாங்களா?
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
அந்த பொண்ணு அழகா இருந்தாளா?
Advertisements