“என்னங்க?”

“சொல்லு…” என்றேன் டிவியில் இருந்து கண்ணை எடுக்காமலே

தான் பேசுவதை நான் காதில் வாங்கவில்லை என்பதை உணர்ந்த நம்ம புத்திசாலி தங்கமணி ரிமோட் எடுத்து

டிவிய ஆப் பண்ணினாங்க

“ஐயோ… ஏய் ஏய்… ரிமோட் குடு தங்கம்… ” என பதறினேன் 

“வீட்டுல இருக்கிற கொஞ்ச நேரமும் இந்த டிவிய கட்டிட்டு அழறதே வேலையா போச்சு… நான் சொல்றத

காது குடுத்து கேளுங்க அப்புறம் தர்றேன்…”

“காது மூக்கு எல்லாம் குடுக்கறேன்… மொதல்ல ரிமோட் குடு”

“நான் சொல்றதுக்கு ஒரு நிமிஷம் தான் ஆகும்… அப்புறம் நீங்க தாராளமா பாருங்க… எங்க…” என தங்கமணி

ஏதோ சொல்ல வர அதற்குள் இடைமறித்த நான் 

“தங்கம் டென்ஷன் பண்ணாதம்மா… இந்த நடிகை பேட்டி முதல் வாட்டி போட்டப்பவே மிஸ்

பண்ணிட்டேன்னு பீல் பண்ணிட்டு இருந்தேன்… கடவுளா பாத்து அந்த சேனல்காரனுக்கு தோண வெச்சு

மறுபடி போட்டுருக்கான்… ரிமோட் குடு” என நான் பதட்டப்பட தங்கமணி பூலான்தேவி மாதிரி முறைச்சாங்க

(பூலான்தேவி மொறைச்சு நீ எப்ப பாத்தேன்னு யாராச்சும் கேட்டீங்கன்னா உங்கள சாம்பல்

பள்ளதாக்குக்கு அனுப்பிடுவேன்…:)))))

இதுக்கு மேல பேசினா வம்பாய்டும்னு “சரி சொல்லு… என்ன விசயம்?” னேன்.

“எங்க சித்தப்பா பொண்ணு சுசிலா இருக்கால்ல..”

“ம்… இருக்கா இருக்கா… அவளுக்கென்ன இப்போ…” என்றேன் ரிமோட்டை ஒரு பார்வை பார்த்து கொண்டே

“அவ வீட்டுகாரருக்கு கால்ல அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்காராம்… எங்கம்மா போன் பண்ணினாங்க…

போய் பாத்துட்டு வந்துடலாம்”

“இப்பவா…?” என பயந்து போய் கேட்டேன், எனக்கு அந்த நடிகை பேட்டி மிஸ் ஆய்டுமேனு கவலை

“இல்ல… இப்ப நேரமாய்டுச்சு… நாளைக்கி ஒரு ஒன் ஹவர் பர்மிசன் போட்டுட்டு வாங்க…

போயிட்டு வந்துடலாம்” “நாளைக்கி போறதுக்கு இப்பவே என்ன… மொதல்ல ரிமோட் குடு”

என டென்ஷன் ஆனேன். “நேரத்துல வரீங்க தானே, அதை சொல்லுங்க மொதல்ல”

“சரி வரேம்மா… ரிமோட் குடு” என்றேன் பொறுமை இழந்தவனாய்.

“ச்சே… ’16 வயதினிலே கமல் ஆத்தா வெயும் காசு குடு’ டயலாக் மாதிரி ரிமோட் குடு ரிமோட் குடுனு….

சகிக்கல” என்றவாறே ரிமோட்டை குடுத்தார் தங்கமணி

தங்கமணி சொல்வது என்காதில் விழுந்தால் தானே சண்டை எல்லாம்… ரிமோட் கையில் கிடைத்ததும்

டிவியில் முழ்கினேன்.

*************************

ஒருவழியா நடிகை பேட்டி முடிஞ்சு என் சுயநினைவுக்கு வந்தேன்.

அதுக்கே காத்திருந்த மாதிரி தங்கமணி என் பக்கத்துல வந்து உக்காந்தாங்க

“ஏங்க….?” என தங்கமணி அன்பாய் ஒரு பார்வை பார்க்க

“என்ன தங்கம்?” என திகிலாய் விழித்தேன். 

“அது… உங்களுக்கு ஒரு சவால் தர போறேன்…” என தங்கமணி சிரித்து கொண்டே கூற

“அதான் உங்கப்பா நாலு வருஷம் முன்னாடியே குடுத்துட்டாரே… கன்னிகாதானமா” என முணுமுணுத்த

நான், தங்கமணி முறைப்பதை பார்த்ததும் சமாளிப்பாக “அது…. உன்னை போல ஒரு புத்திசாலிய

சமாளிக்க வேண்டிய பொறுப்பை குடுத்துட்டாறேனு சொல்ல வந்தேன்… ” என்றேன் 

“சரி… என்னை நல்லா பாருங்க…” என தங்கமணி அன்போடு கூற

“ஐயயோ… என்னாச்சு தங்கம்…” என பதறினேன்.

“என் முகத்துல ஒரு மாற்றம் இருக்கு, என்னனு கண்டுபிடிங்க பாக்கலாம்…” என சவால் பார்வை

பார்த்தார் தங்கமணி

“அடக்கடவுளே… தங்கம்… வேண்டாம் இந்த சோதனை… இதுக்கு பதிலா நீ டிவில பாத்து புதுசா

எதாச்சும் சமைப்பியே…அது வேணும்னாலும் செஞ்சு குடு… சத்தமில்லாம சாப்பிடறேன்…”

என டெர்ரர் ஆனேன்.

“இங்க பாருங்க… நீங்க சொல்லித்தான் ஆகணும்… அது பெரிய மாற்றம் ஈஸியா கண்டுபிடிக்கலாம்…”

என்றார் தங்கமணி தீர்மானம் போல்

“ஐயோ… யார் மூஞ்சில முழிச்சேன் இன்னிக்கி…”என முதலில் விழித்த நான் பிறகு “அடடா…

இவ மூஞ்சில தான் முழிச்சேனா…. ஹும்… ” என முணுமுணுத்தேன்,  “சரி சரி…சொல்றேன்”

என வசீகரன் சிட்டி ரோபோ தயாரிக்க செஞ்ச ஆராய்ச்சி ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பித்தேன்.


என்ன இவ்ளோ யோசனை…சட்டுன்னு சொல்லுங்க… என்ன மாற்றம்…” என தங்கமணி அவசரப்பட
“இரும்மா… தப்பா சொன்னா பின் விளைவுகள் எனக்கில்ல தெரியும்” என டென்ஷன் ஆனேன்.
“சரி சரி…சீக்கரம்…” என்றார் தங்க்ஸ்”ம்… ஆ… கண்டுபிடிச்சுட்டேன்… ” என்றேன்.
பல்பு கண்டுபிடிச்சப்ப தாமஸ் ஆல்வா எடிசன் கூட இவ்ளோ சந்தோசப்பட்டு இருக்க மாட்டார்னா
பாத்துக்கோங்களேன்” சொல்லுங்க சொல்லுங்க… ” என எக்ஸ்சைட் ஆனார் தங்கமணியும்
“அது… நீ கம்மல் போட்டு இருக்க” என  நான் பெருமையாய் கூறவும்”பின்ன இதுக்கு முன்ன
கமண்டலமா போட்டிருதேன்” என தங்கமணி முறைக்க

“இல்லம்மா… வேற மாதிரி தானே போட்டு இருப்ப” என தப்பிக்க பார்த்தேன்.

“அதெல்லாம் இல்ல… நான் சொன்ன மாற்றம் வேற…கண்டுபிடிங்க” என்றார் தங்கமணி விடுவென என

“அதில்லையா… ஹும்… வேற என்ன…?” என மீண்டும் வசீகரன் ஆனேன் நான்.

கொஞ்சம் நேரம் யோசித்த பின்  “அடப்பாவமே…உன்னை பொண்ணு பாத்த அன்னைக்கு கூட இவ்ளோ

டீப்பா பாக்கலையே தங்கம்…எதாச்சும் க்ளூ குடேன் ப்ளீஸ்…” என தங்கமணியை பாவமாய் பார்க்க

ஒரு நிமிஷம் மௌனமாய் யோசித்த தங்கமணி “சரி விடுங்க… உங்களுக்கு இதெல்லாம் வராது” என எழுந்து

போய் விட்டார்

“அப்பாடா தலைக்கு வந்தது தலை பாகையோடு போச்சுனு சொல்றதை இன்னிக்கி தான் உணர்றேன்” னு ரொம்ப

ஹாப்பி ஆனேன், பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல் (ஹா ஹா ஹா…!!!)

கொஞ்ச நேரம் கழிச்சு உள் அறையில் இருந்து வந்த தங்கமணி “ஏங்க… கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு ப்ரோக்ராம் பாத்தீங்களே…”என கேள்வியை முடிக்கும் முன்

“ஆமா…நடிகை ஜில்பா ரொட்டி ப்ரோக்ராம் தானே…  என்ன அழகு இல்லையா தங்கம்” என முகம் எல்லாம்

பூரிக்க கேட்டேன் நான். பல்லை கடித்து கோபத்தை அடக்கி கொண்ட நம்ம தங்கமணி “ஆமா ஆமா…

அவங்க போட்டு இருந்த கம்மல் நல்லா இருந்தது இல்லிங்க” என வலை விரித்தார்

“ஆமாம் தங்கம்… அந்த ஸ்டார்க்கு ஏத்த ஸ்டார் டிசைன்ல சூப்பர் கம்மல்” என தங்கமணி எதிர்பார்த்தது

போல் வலையில் விழுந்தேன் “அப்புறம் அவங்க டிரஸ் என்ன கலர் அது?” என தங்கமணி குழியை ஆழமாய்

தோண்ட தன் அபிமான நடிகை பற்றி தங்கமணி ஆர்வமாய் பேசியதும் உற்சாகமான நான்

“என்ன தங்கம் நீ? இது கூட கவனிக்கலையா… நல்ல டார்க் மெரூன் கலர் டாப்ஸ்… ப்ளாக் பேன்ட் …

நல்ல காம்பினேசன் இல்ல தங்கம்”

“ஆமா ஆமா…சூப்பர்… அது சரி… அவங்க பொட்டு வெச்சு இருந்தாங்களா என்ன?”

“என்ன தங்கம் நீ? உனக்கு சுத்தமா கவனிக்கற புத்தியே போய்டுச்சு போ… கம்மல்க்கு மேட்ச்ஆ ஸ்டார்

டிசைன்ல டிரஸ்க்கு மேட்ச்ஆ மெரூன் கலர்ல எவ்ளோ அழகா ஒரு பொட்டு…நடுல கூட ஒரு ஸ்டோன்

கூட இருந்ததே, நீ பாக்கலையா” என நீட்டி முழக்கினேன்.

அடுத்த கணம் தங்கமணி “நான் போறேன்..எங்க அம்மா வீட்டுக்கே போறேன்” என கண்ணை கசக்க,

அப்போது தான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த நான் “ஐயயோ…என்னாச்சு தங்கம்” என பதற

“யாரோ ஒரு நடிகை… அதுவும் கன்றாவியா நடிக்கற ஒரு ஜென்மம்… அந்த சிறுக்கி… அவ கம்மல்,

டிரஸ் கலர், பொட்டு டிசைன் நடுல ஸ்டோன் எல்லாம் ஞாபகம் இருக்கு ப்ரோக்ராம் பாத்து

ஒரு மணி நேரம் கழிச்சு கூட… உங்கள நம்பி கழுத்தை நீட்டினவ நான்… எப்பவும் வட்ட பொட்டு

வெக்கறவ இன்னிக்கி உங்களுக்கு பிடிக்கும்னு நீட்ட பொட்டு வெச்சுட்டு வந்து என்ன வித்தியாசம்னு

ஆசையா கேட்டா… ஒரு மணிநேரம் ஆராய்ச்சி செஞ்சும் தெரில இல்ல…

நான் போறேன்… எங்க அம்மா வீட்டுக்கே போறேன்” என தங்கமணி கண்ணை கசக்கி கொண்டே

உள்அறைக்குள் சென்றார்

நான் என்ன செஞ்சேன்னு சொல்லி தான் தெரியணுமா… வழக்கம் போல “சொந்த செலவுல சூனியம்

வெச்சுக்கிட்டனே”னு பீலிங்ல இருக்கேன். ஹையோ ஹையோ…:)))

பின்னூட்டங்கள்

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s