“குழந்தை பாவம்….”

“அதை ஏண்டி திட்டுற…”
உனக்கு கொஞ்சமாவது புள்ளைய வளர்க்க தெரியுதா?  என்று எங்க வீட்டு ப.சிதம்பரம், அதாங்க.. எங்க வீட்டு home minister என் பொஞ்சாதி.. அவளை தான் இப்படி ஒரு கேள்வி கேட்டு திட்டினேன்.  பின்ன என்னங்க…எப்ப பாத்தாலும்   ஜெயலலிதாவிடம்  அடிவாங்கி கூட்டணியை விட்டு வெளியே  தலைதெறிக்க ஓடி வர்ற  வைகோ,   விஜயகாந்த்  மாதிரி, நான் பெத்தெடுத்த   பயபுள்ள,  அவன் அம்மாகிட்ட அடிவாங்கிட்டு  வீல்ல்ல்ல்ல்…னு கத்திகிட்டே  வீட்டுக்கு வெளியே ஓடி வந்தாங்க…  எனக்கு உயிரே  போச்சுங்க..   என்ன இருந்தாலும் நான் பெத்தெடுத்த புள்ள இப்படி அழும்போது எனக்கு செம கோவம் வந்துடுங்க… இன்னைக்கு எனக்கு தாங்கமுடியாம தான் இப்படி கேட்டுட்டேன்…
வழக்கம் போல நாம கோவமா கேள்வி கேட்டா பிரதமர் ஆயிடுவா.. ஒரு பதில் கூட வராது.. இத்தனை தடவை  கலைஞரா அமைதியா இருந்த நான் இந்த தடவ அன்ன ஹசாரே மாதிரி திரும்ப திரும்ப கேட்டேன்ங்க… ஒரு பதில் தாங்க சொன்னா.. எனக்கு பெரிய தன்மான பிரச்னையாகி போச்சு..
“உங்க புள்ளைய ஒரு மூணு மணிநேரம் சமாளிச்சி பாருங்க….” அப்போ தெரயுமுன்னு” சொன்னா பாருங்க…
அட நம்ம ஆபீஸ்ல நாம எத்தன பயபுள்ளைங்கள சமாளிக்கிறோம்… இந்த மூணு வயசு புள்ளைய சமாளிக்க மாட்டோமான்னு”…. அவளை கூட்டிட்டு கிளம்பிட்டேங்க.. மாலை ஆறு மணி இருக்கும்..
என் பொண்ணுக்கு பைக் னா உசுருங்க… அவளுக்கு அழகா டிரஸ், தொப்பி, செருப்பு எல்லாம் போட்டுவிட்டு, முன்னாடி உக்கார வச்சிக்கிட்டு ஸ்டார்ட் பண்ணிட்டு கேட்டேன்.. “பாப்பா எங்க போகலாம்..”
 “பீச்க்கு போலாமா?”.. என்று என்னை பார்த்து சிரித்தாள்.  ஓகேனு சொல்லி சிரித்தேன் என்னோட பைக் பீச் நோக்கி பறந்தது….
சிக்னலில் ரைட் எடுக்கணும்.. ரைட்ல இன்டிகேடர் போட்டுட்டு திரும்பி போகும்போது.. பின்னாடி வந்த ஆடோகாரன் .. சாவு கிராக்கி… left இன்டிகேடர் போட்டுட்டு right ல போறான் பாருனு என்ன திட்டிட்டான்.. எனக்கு கோவம் தலைகேறியது… என்னடானு  பாத்தா என் பயபுள்ள இன்டிகேடர் பட்டன்ல கை வச்சிக்கிட்டு.. டிக்…டிக்..னு விளையாடிகிட்டு இருக்கு…
கண்ணா அத தொட கூடாது.. ஆட்டோ மாமா, அப்பாவ எப்படி கேவலமா திட்டிட்டு போறாரு பாருனு .. செண்டிமெண்டா பேசினேன்.. நம்ம பொண்ணாச்சேசொன்னதும் புரிஞ்சிக்கிட்டு மண்டைய ஆட்டுனா. அப்பா fast ஆ போங்கப்பா என்றாள்… நம்ம சொன்னத அவ கேட்டா.. அவ சொல்றத நம்ம கேக்கலாமேனு.. வண்டி அறுபதை தொட்டு பறந்தது.. அய்யா..ஜாலி…..னு என் பொண்ணு என்னை பெருமையா பாத்தான்… இப்பவும் நான் என் பொண்டாட்டிய திட்டிட்டே போனேன்.. புள்ளைய வளர்க்க தெரியுதா அவளுக்கு…
அவளை நினைத்ததும் அறுபது எழுபதானது…அடுத்த நொடி..அப்படியே அவள் தொப்பி பறந்து என் முகத்தில் ஒட்டி கொண்டது… எனக்கு ஒன்னும் தெரியாமல்.. மெதுவாக பிரேக் போட்டு…நான் நிறுத்தும்முன்பே ஒரு “டமார்” சத்தத்துடன் நின்றது… முன்னே ஸ்விப்ட் கார் லைட் காலி… உள்ளே இருந்து ஒரு ஆள் என்னிடம் பேசும்முன்பே 500 ருபாய் நோட் ரெண்டை எடுத்து நான் நீட்ட.. மனிதர் என் நிலை உணர்ந்து வண்டியை எடுத்தார்… அங்கிருந்து கிளம்பிவிடலாம்னு வண்டிய எடுத்து கொஞ்ச தூரம் போன பிறகு.. என் புள்ள அழ ஆரம்பித்தது… என்ன என்று கொஞ்சம் கோபமுடன் நான் கேட்க.. என் தொப்பி வேணும்ம்ம்ம்ம்ம்ம்….ஒரே கத்தல்.. அவ தொப்பியை காணோம்… சரிடா செல்லம் வாங்கிக்கலாம்..புதுசா… இப்படி ஏதோ சொல்லி சமாளிச்சு.. அவ வாயை மூடினேன்..
பெசன்ட் நகர் பீச் வந்ததும்.. ஒரு சூப்பர் ஆன்டி எதிரே வரவும்.. அப்பா அது யாருன்னு கேட்டா. நான் என் மனைவி பக்கத்தில் இல்லாததால் “உங்க சித்தி”டா  செல்லம்னு சொல்ல, அவன் இல்லப்பா… அது எங்க மிஸ் என்றாள். இல்லடா சித்தி தான்டா என்றேன்.. உடனே என் கையை விட்டு விலகி அந்த ஆன்டி அருகே ஓடினா. நான் உடனே அவளை இழுக்க ஒடும்முன்,   “நீங்க எனக்கு மிஸ்ஆ? .. இல்ல சித்தியா?” னு கேட்க.. அவங்க “ஐ ஆம் யுவர் மிஸ் ஒன்லி”னு சொல்லிவிட்டு என்னை பார்த்து முறைத்துவிட்டு சென்றார்.  “அப்பா.. அவங்க எங்க ஸ்கூல் மிஸ், உனக்கு தெரியாதா?”  என்றானே பார்க்கலாம்..” எனக்கு தலை சுற்றி லேசாக மயக்கம் வந்தது.. பயபுள்ளைக்கோ வாயெல்லாம் பல்..
மணி எட்டு. மூன்று மணி நேர சவாலில் இன்னும் ஒரு மணி நேரம் பாக்கி இருந்தது.. இதுக்கு மேல நமக்கு தாங்காதுடா மவனேன்னு.. அவளை தூக்கி வண்டில போட்டுட்டு… வீட்டை நோக்கி பறந்தேன்… வாசலிலே என் குலதெய்வம் நாங்கள் வரும் அழகை பார்த்தவாரே.. ஏங்க… இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு என்றாள்.. நானோ.. நம்ம பொண்ணு ரொம்ப சமத்துடி…ரெண்டு மணி நேரம் நான் அப்படி பாத்துகிட்டேன்.. போடி உள்ளே..என்றேன்..
எங்கங்க தொப்பிய காணோம், ஒரு செருப்ப காணோம்… ஏங்க இப்படி பொறுப்பு இல்லாம இருக்கீங்க என்றாள்… இதை எல்லாம் பாத்துகிட்டு இருந்த பயபுள்ள ஒன்னு சொன்னுச்சு பாருங்க….
“அம்மா…. அப்பாவ ஆட்டோமாமா, எங்க மிஸ் எல்லோரும் திட்டிட்டாங்க..”,  “நீயும் திட்டாதேம்மா” … “அப்பா பாவம்”
சொந்த சோகத்தை புலம்பியவர் : http://sathish-chandran.blogspot.com/
Advertisements

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s