அண்ணே நான் வந்துட்டேன் ….எப்படிண்ணே இருக்கீங்க   …?

நீ வந்தேன்னா நான் எப்படிடா இருப்பேன்…

போங்கண்ணே…..உங்களுக்கு எம் மேலே ரொம்ப பாசம் …நீங்களே கண்ணப் போடக்கூடாதுன்னு அப்படி சொல்றீங்க…..அண்ணே எனக்கொரு சந்தேகம்ணே

வேணாண்டா …என்னால தாங்க முடியாதுடா….

ஒர்ரே ஒர்ரு சந்தேகம் …பதில் கிடைக்கலேன்னா என் தல வெடிச்சுடும்ணே..

சரி சொல்லித் தலைடா சப்ப மண்டையா

அண்ணே !இந்த கோணமானி கோணமானின்னு சொல்றாங்களே அப்படின்னா என்னண்ணே…?

அப்படி அறிவுப்பூர்வமா கேளுடா காலி கபாலா…

ஐய்…இந்த பேரு சூப்பரா இருக்கே..சரி சொல்லுங்க …கோணமானின்னா என்ன ?

டேய்!கோணமானின்னா ….???

கோணத்தை அளக்கிற கருவிடா…எத்தனை டிகிரி கோணம்னு கண்டுபிடிக்க கோணமானிஎடுப்பாங்க…

அப்படின்னா என் மண்டை கோணமண்டைன்னு சொல்லுவீங்களே அதைக்கூட அளக்கலாமாண்ணே?

அதை மட்டும் அளக்க கருவியே கிடையாதுடா பலகோணமண்டையா!

சரி, அது போகட்டும் .உஷ்ணமானின்னா?

உஷ்ணத்தைக்கண்டு பிடிக்றது உஷ்ணமானி…

ஜுர மானி?

டேய் இது கூடவா தெரியலை .உனக்கு ..ஜுரம் வந்தா எத்தனை டிகிரின்னு சொல்லும்….

அழுத்தமானி

அழுத்தம் எவ்வளவுன்னு பார்க்க அழுத்தமானி….

பால்மானி

பால்லே தண்ணி எவ்வளவு கலந்திருக்குன்னு கண்டுபிடிக்க பால்மானி..

அது எப்படிண்ணே?அப்போ அது தண்ணிமானின்னுதானே சொல்லணும்

டேய் டேய் [பல்லைக்கடிக்கிறார்] ஆளை விடுடா …

இன்னும் ஒண்ணே ஒண்ணு பாக்கி இருக்குண்ணே….

எதுக்குடா உயிரை வாங்றே…என்ன மானியோ ,அதைக்கண்டு பிடிக்க ,அந்தந்த மானி உபயோகமாகுது……..வெத்து மண்டையா !இதை ஒரு எல்கேஜி புள்ள கூடச் சொல்லுமே….ஏண்டா உன் மண்டையிலே ஏறமாட்டேங்குது……
.
அப்படியா சங்கதி.அப்படின்னா …’பே’ன்னா என்னண்ணே…

என்னடா சொல்றே?!!!!

பே’ன்னா என்ன?

என்னடா குழப்ற

பேமானி வச்சு எதை அளப்பாங்க ?நீங்க சொல்ற மாதிரி அந்தந்த மானி அதை அதை அளக்கும்னா…’பே’ன்னா என்னா….பேமானின்னா என்னா சொல்லுங்கண்ணே நம்ம ரெண்டுபேருக்குள்ள நீங்கதானே எஸ்.எஸ்.எல்.சி ஃபெயில் …உங்களுக்குத் தெரியாதா சொல்லுங்கண்ணே…பேமானிய வச்சு எதை அளக்கணும்….

அண்ணே அண்ணே ….ஓடாதீங்கண்ணே..பதிலைச்.சொல்லிட்டுப் போங்கண்ணே……

ரசித்த இடம்: http://haasya-rasam.blogspot.com

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!