சமீபத்தில் நண்பன் ஒருவன் “என்னங்க இது தங்கமணியை இப்படி வாரு வாருன்னு வாருறீங்களே.. அவங்ககிட்ட உங்களுக்கு புடிச்ச விஷயம் ஒண்ணுகூடவா இல்லாமப் போச்சு. நடுநிலைன்னா அதையும்தானே நீங்க எழுதணும்” என்று லாஜிக்கலா நம்ம நேர்மையை சந்தேகப்பட்டு கேட்டுவிட்டதால் சரி எழுதிவிடலாம் என்று முடிவு செய்தேன். அதற்காக பள்ளிக்காலங்களில் வாங்கிய ‘பூதக்கண்ணாடி’யையும், மைக்ராஸ்கோப் போன்ற வஸ்துக்களையும் தேடி எடுத்து வைத்துக்கொண்டு ஒரு வாரமாக ரமாவை கண்காணிக்க ஆரம்பித்தேன். பின்னே.. அவரிடம் உள்ள நல்ல விசயங்களை கண்டுபிடிப்பதுன்னா சும்மா லேசுப்பட்ட காரியமா என்ன.?

ஒரு ‘ஸ்பை’யைப் போல நைஸாக அவரை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் தெரிந்தது.. அடாடா அன்றாடம் அவர் நமக்கு எவ்வளவு நல்லது செய்துகொண்டிருக்கிறார் என்பது. எனக்கு ஒரு புறம் ஆனந்தக்கண்ணீர் தாங்கமுடியவில்லை. அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை வேண்டுமானால் கீழே பார்த்துக்கொள்ளுங்கள்.

அவர் கிச்சனில் ஏதாவது செய்துவிட்டு அடுத்த அறைக்குள் போனால், குடுகுடுவென ஓடிப்போய் கிச்சனில் அவர் என்ன செய்தார்? அது நமக்குப் பிடித்திருக்கிறதா? என ஆராய்ந்தேன். ம்ஹூம்.. வாயில் வைக்கமுடியவில்லை.பிடித்த விஷயம் : அவர் அதை என்னை சாப்பிடச் சொல்லவேயில்லை.

அவர் போனில் பேசிக்கொண்டிருந்தால் டிவியில் நைஸாக வால்யூம் குறைத்துவிட்டு என்ன பேசுகிறார் என்று கேட்டேன். யாரிடமாவது அன்பாகவோ, நல்ல விஷயங்களாகவோ பேசுவாரா எனத் தெரிந்துகொள்ளத்தான். ம்ஹூம்.. அவர் அண்ணனை எதற்காகவோ வாங்கு வாங்கென வாங்கிக்கொண்டிருந்தார்.பிடித்த விஷயம் : அந்தக் கோபத்தில் வந்த ஆத்திரத்தில் போனை போட்டு உடைக்கவேயில்லை, கிச்சன் பாத்திரங்களிடம் கூட கருணையோடு நடந்துகொண்டார்.

அவர் புடவையை அயர்ன் செய்துகொண்டிருக்கும் போது அவருக்குத் தெரியாமல் அயர்ன் பண்ணவேண்டிய என் சட்டையையும் அதனுடன் வைத்துப்பார்த்தேன். அசந்து மறந்து அயர்ன் பண்ணிவைக்கிறாரா என்று பார்க்கத்தான். ம்ஹூம்.. அது வைத்த இடத்தில் அப்படியேதான் இருந்தது. பிடித்த விஷயம் : அந்த டேபிளை துடைக்க அவர் என் சட்டையை பயன்படுத்தவேயில்லை.

ஒருவேளை நாம் அன்பாக பேசினால் அவரும் அன்பாக பேசுவார்தானே என்று திட்டமிட்டு “மாலையில் வரும் போது பழம், வெங்காயம், லாலிபாப்.. வேற ஏதாவது வாங்கணுமாம்மா.?” என்று ஆஃபீஸ் கிளம்பும் போது அன்பாக கேட்டேன். ம்ஹூம்.. முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு “முதல்ல, சொன்னத ஒழுங்கா வாங்கிட்டு வந்து தொலைங்க..” பிடித்த விஷயம் : அதற்கும் மேலே அவர் ஒன்றுமே சொல்லவில்லை.

அப்புறம் ஒரு நாள் பார்த்தேன், அந்த சம்பவத்தை. வழக்கம் போல கம்ப்யூட்டரை நோண்டிக்கொண்டே சைட் பார்வையில் ரமாவை கவனித்துக்கொண்டிருந்தேன். கையில் எனக்காக காம்ப்ளான் கொண்டுவந்துகொண்டிருந்தார். திடீரென ஃப்ரிட்ஜின் மேலிருந்த சுபாவின் பால் புட்டியில் மீதமிருந்த 20ml பாலை என் டம்ப்ளரில் சேர்த்து ஊற்றிக்கொண்டு வந்து டேபிளில் வைத்தார். “டாய்.. என்னாதிது.? தம்பியோட பாலை எதுக்கு இதுல மிக்ஸ் பண்ணினே.?” என்று அலறினேன். ம்ஹூம்.. ‘தம்பியே குடிக்கிறான், உங்களுக்கு என்ன?’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அப்புறம்தான் யோசித்தேன், சுபா தினமுமே அவன் பாட்டிலில் மிச்சம் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறான்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. பிடித்த விஷயம் : ஆஃபீஸில் நண்பர்கள், ‘வர வர இளமையாகிட்டே போறீங்க பாஸ்..’ என்கிறார்கள். நான் ஹிஹி என்று இளிப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். (பின்னே என்ன தினமும் பீடியாஷ்யூர் குடிக்கிறேன் என்றா உண்மையைச் சொல்லமுடியும்?)

யார்றா அது நண்பன்.? தங்கமணியிடம் நல்ல விஷயங்களை தேடிப்பார்த்து எழுதச்சொன்னது? அவன் மட்டும் கைக்குக் கிடைக்கட்டும்.. இருக்குது அவனுக்கு.!!

புலம்பியது: ஆதிமூலகிருஷ்ணன் in http://www.thaamiraa.com

Advertisements

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s