இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது……

Posted: செப்ரெம்பர் 15, 2011 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , ,
அப்துல் கலாம் எஞ்சினியரா வேலை பார்த்துக்கிட்டு இருந்த நேரம். அன்னைக்கு ஏதோ முக்கியமான வேலை..அவசரமான வேலை போய்க்கிட்டு இருந்திருக்கு..அவருக்குக் கீழ வேலை செய்ற ஒருத்தரு சாயந்திரம் ஆகவும் கலாம்கிட்ட தயங்கித் தயங்கி வந்திருக்காரு.
கலாம் ‘என்ன விஷயம்’னு கேட்கவும் ‘என் குழந்தைக்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு கேட்டிருக்காரு. அதுக்கு கலாம் ‘நோ..நோ..நீங்க இல்லேன்ன இங்க வேலை நின்னிடும்..வேணாம்’னு சொல்லிட்டாராம். அவரும் வருத்தத்தோட வேலை செஞ்சுட்டு நைட்டு லேட்டா வீட்டுக்குப் போனா குழந்தை புது ட்ரஸ் போட்டுக்கிட்டு, நிறைய விளையாட்டுச் சாமானோட விளையாடிக்கிட்டு இருந்துச்சாம்.
‘எப்படி இது’ன்னு கேட்கவும் கலாம் வந்து குழந்தையை வெளில அழைச்சுக்கிட்டுப் போயி இதெல்லாம் வாங்கிக்கொடுத்தாருன்னு சொன்னாங்களாம்..தனக்குக் கீழ வேலை செய்றவர் மேல மட்டுமில்லாம அவர் குடும்பத்து மேலயும் கலாம் காட்டுன அக்கறை தான் அவரை எல்லாருக்கும் பிடிச்சவரா, ஒரு நாட்டுக்கே ஜனாதிபதியா உயர்த்துச்சு’ – அப்படீன்னு முன்னாடி ஒரு புக்ல படிச்சேன்.
அப்போ நானும் டெல்லில இருந்தேன். இந்த மாதிரி தன்னம்பிக்கை புக் படிச்சா ‘மெலீனா’ பார்த்த மாதிரி ரெண்டு மூணு நாளைக்கு எஃபக்ட்டு கும்முனு நிக்கும். அப்புறம் பழைய குருடி, கதவைத் திறடி தான்..அந்த கலாம் மேட்டர் படிச்சப்புறம் நாமளும் நம்ம ஜூனியர்ஸ்கிட்ட கனிவா நடந்துப்போம்னு முடிவு பண்ணேன்..
ஒரு நாளு டைட் ஒர்க்..அதாவது ரொம்ப வேலை..அவசர வேலை..எல்லாரும் அடிச்சுப்பிடிச்சு வேலை செஞ்சுக்கிட்டு இருந்தோம். அப்போ என் ஜூனியரு ஒருத்தன் தலையைச் சொறிஞ்சுக்கிட்டே வந்து நின்னான்.
நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!
இல்லே..தெரியாமத் தான் கேட்கேன்..அந்த ஆண்டவன் ஏண்ணே என்னை மட்டும் இப்படி சோதிக்கான்? ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?
புலம்பலை ரசித்த இடம்:  http://sengovi.blogspot.com
பின்னூட்டங்கள்
  1. chinnapiyan v.krishnakumar சொல்கிறார்:

    இல்லே..தெரியாமத் தான் கேட்கேன்..அந்த ஆண்டவன் ஏண்ணே என்னை மட்டும் இப்படி சோதிக்கான்? ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?
    புலம்பலை ரசித்த இடம்:

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!