ஊடல் ..

Posted: ஓகஸ்ட் 23, 2011 in குடும்பம்
குறிச்சொற்கள்:,

சந்தியா தன் மேல் இன்னும் கோபமாக இருப்பாள் என்பதை அறிந்த ரூபன் தன் கைபேசியை எடுத்து அவளுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பினான்.

ரூபன்: இன்னும் கோபமா? எம் சாரி, சந்தியா! நான் என்ன செய்ய? நான் தான் ரொம்ப short-temperனு உனக்கு தெரியுமே?

விறுவிறு என்று டைப் செய்து அனுப்பிவிட்டு, தனது கவனத்தை தன் மடிக்கணினி மேல் செலுத்தினான். அலுவலக வேலைகள் ஒரு புரம் இருக்க, அவனது நினைப்பு எல்லாம் சந்தியாவை சுற்றி தான் இருந்தது. சந்தியாவிடமிருந்து எந்த ஒரு தகவலும் வராமல் இருந்தது, அவனுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. மறுபடியும் ஒரு குறுந்தகவலை அனுப்ப கைபேசியை எடுத்த போது, சந்தியாவிடமிருந்து குறுந்தகவல் வந்தது.

சந்தியா: யாரோ இன்னிக்கு ஆபிஸ் போகும்போது சொன்னாங்க, அவங்க மூஞ்சிலே முழிக்க வேண்டாம்னு.

ரூபன்: சாரி, சாரி, சாரி, சாரி!! என் தப்பு தான். நான் தான் கோபத்துல அப்படி உளறிகொட்டிடேன். எம் சாரி மா!

சந்தியா: அதே வார்த்தைய நான் சொல்லி இருந்தேனா, உன்னால தாங்கி இருக்க முடியுமா? உன்கிட்ட நிறைய தடவ சொல்லி இருக்கேன், please control your anger! அது உனக்கே தெரியும். you’ve hurt me alot, ruben!

ரூபன்: என்ன மா இப்படிலாம் சொல்ற? அது தான் சாரி சொல்லிட்டேன்ல. நீ சொன்ன மாதிரி நான் என்னைய மாத்திக்க முயற்சி பண்ணுறேன்! கொஞ்சம் டைம் கொடுத்து பாரேன்.

சந்தியா: ஏதாச்சு பண்ணு போ! என்கிட்ட மட்டும் இனி பேசவே பேசாத.

ரூபன்: சந்தியா, இப்படி சொன்னா எப்படி? என்னைய வேணும்னா நாலு கெட்ட வார்த்தைல திட்டிக்கோ, ஆனா உன்கிட்ட பேசாம இருக்ககூடாதுனு மட்டும் சொல்லாத!

சந்தியா: just don’t talk to me!

ரூபன்: சரி, சரி, என்ன பண்ணா உன் கோபம் குறையும்? அப்படியேஇறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரவா?

சந்தியா: shameless!!

ரூபன்: hahaha… அழகான மனைவிகிட்ட ‘shame’வோட நடந்துக்குற husband எங்கயாச்சு இருக்காங்களா என்ன?

சந்தியா: நீ திருந்தவே மாட்டீயா? stop smsing!

ரூபன்: ஐயோ இன்னும் கோபமா? ஒரே ஒரு உம்மா தான் தரேனு கோபமா? உனக்கு எவ்வளவு வேணும்னு சொல்லு, கொடுத்துடுறேன். but என்கிட்டு தீர்ந்து போனுச்சுன்னு, அப்பரம் நீ தான் தரனும். deal?

சந்தியா பதில் அனுப்பாமல் இருந்தாள். ரூபன் தொடர்ந்து தனது கணினி வேலைகளைப் பார்த்து கொண்டிருந்தான். மறுபடியும் குறுந்தகவல் அனுப்பினான்.

ரூபன்: darling, என்ன பதிலே காணும்? எத்தன வேணும்னு list போடுறீயா?….இல்ல எங்க வேணும்னு list போடுறீயா?

சந்தியா: you are crazy:))))))))))))))))))))))))

அவள் ‘smiley icon’னுடன் குறுந்தகவல் அனுப்பியது அவனுக்கு நிம்மதியைத் தந்தது.

ரூபன்: ஐப்பா! finally!! கோபம் போச்சா??

சந்தியா: but please da, இனி கோபம் படாதே! உன் healthக்கு தான் பாதிப்பு வரும். ok??

ரூபன்: ம்ம்புரியது. thanks, sweetheart:)) சரி, list எங்க?

சந்தியா: list ready:))))

ரூபன் தனது கைபேசியையும் மடிக்கணினியையும் ஹாலில் இருக்கும் சோபாவில் போட்டுவிட்டு, அறையில் இருக்கும் சந்தியாவை பார்க்க சென்றான்.

*முற்றும்*

ஊடலை ரசித்த இடம்: http://enpoems.blogspot.com

Advertisements
பின்னூட்டங்கள்
  1. chinnapiyan v.krishnakumar சொல்கிறார்:

    super climax. thank u.

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s