உலகில் சர்வாதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இல்லாமல் போய் விடலாம். ஆனால் அவர்களைப் பற்றி ஜோக்குகள் இல்லாமல் போகாது. இதோ சில:
———
ஒரு சர்வாதிகார நாட்டில் பார்க்கில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். திடீரென்று ஒருவர் ”தூ’ என்று துப்பினார்..
அவரைப் பார்த்து மற்றவர் சொன்னார்:

“நமது ஜனாதிபதியின் உரையைப் பற்றி பொது இடத்தில் அபிப்பிராயம் தெரிவிப்பது தவறு.”
*
ஓர் அரசியல்வாதி பொதுக்கூட்டத்தில் முழங்கினார் பெருமையாக. “இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் நானேதான்” கூட்டத்திலிருந்து ஒரு குரல்: `மன்னிப்பு ஏற்கப்பட்டது.’
*
ஒரு சர்வாதிகாரி பெரிய துணிக் கடைக்குச் சென்றார். விலையுயர்ந்த சூட் ஒன்று அவருக்குப் பிடித்திருந்தது. “என்ன விலை?” என்று கேட்டார். “விலையெல்லாம் எதுக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பரவாயில்லை” என்று கடைக்காரர் குழைந்தார்.
“சேச்சே… இலவசமாக எதையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்” என்றார்.
கடைக்காரர் உடனே, “சரி, இதன் விலை இரண்டு ரூபாய்” என்றார்.
சர்வாதிகாரி நாலு ரூபாயை அவரிடம் கொடுத்து, “அப்படியானால் இரண்டு சூட் எடுத்துக் கொடுங்கள்” என்றார்.
*

ஹிட்லரைப் பற்றிய சில கேலி ஜோக்குகள் அவர் காதுக்கு எட்டின. யார் இந்த ஜோக்குகளை ஆரம்பித்து வைத்தவர் என்று கண்டுபிடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்கள் அரும்பாடு பட்டு ஒரு முதியவரைக் கண்டுபிடித்து வந்து ஹிட்லரிடம் விட்டார்கள்.
“என்னய்யா, நீர்தான் என்னைப் பற்றி கேலி ஜோக்குகளைப் பரவ விடுகிறீரா? நான் இறந்தால் உலகம் முழுதும் கொண்டாடுவார்கள் என்கிற ஜோக் உங்களுடையது தானே?”
“ஆமாம்.”
“நான் ஆற்றில் மூழ்கிய போது ஒருவர் காப்பாற்றுகிறாராம். அவருக்கு நான் நன்றி தெரிவித்த போது, `நன்றி எதுவும் வேண்டாம். நான்தான் உங்களைக் காப்பாற்றினேன் என்று வெளியே யாருக்கும் சொல்லாமலிருந்தாலே பெரிய உதவியாயிருக்கும்’ என்ற ஜோக்கும்…”
“ஆமாம். என்னுடையதுதான்.”
“இவ்வளவு துணிச்சலா உங்களுக்கு? நான் யார் தெரியுமா? உலகிலேயே சர்வ வல்லமை படைத்தவன்.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் என் வம்சம்தான் உலகை ஆளப் போகிறது என்பது தெரியாதா?”
“அய்யய்யோ, இப்போது நீங்கள் சொல்வதுதான் முதல்தர ஜோக்! ஆனால் இந்த ஜோக்கை நான் சொல்லவில்லை. இதுக்கு முன்னே நான் இதைக் கேட்டதுகூட இல்லை” என்றார் அந்த முதியவர்.
*
குருஷ்சேவுக்குப் பயங்கர கோபம் கேலி ஜோக்குகள் சொல்பவர்கள் மீது. “இந்த மாதிரி யாராவது ஜோக் சொன்னால் அவனைப் பிடித்துக் கொண்டு வந்து என் முன் நிறுத்துங்கள்” என்று உத்தரவிட்டார்.
அதிகாரிகள் ஒரு ஜோக் எழுத்தாளரைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.
குருஷ்சேவின் மாளிகைக்குள் நுழைந்த அவர், அதன் ஆடம்பர அலங்காரங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்.
அவரைப் பார்த்து குருஷ்சேவ், “என்ன, சாப்பிட்டு விடுவது போல் பார்க்கிறாய்?” என்று கேட்டார்.
“பரவாயில்லை. நீங்கள் வசதியாகத்தான் இருக்கிறீர்கள.”
“அதற்கென்ன, பார்த்துக் கொண்டே இரு. இன்னும் இருபது வருஷங்களில் இந்த நாட்டில் உள்ள எல்லாரும் இப்படித்தான் இருக்கப் போகிறார்கள்” என்றார்.
“ஆஹா, ஒரு புது ஜோக் எனக்குக் கெடைச்சுது” என்றார் ஜோக் எழுத்தாளர்.
*
பயில்வான் போன்று இருந்தத ஒரு ஆசாமி, தெருவில் எதிரே வந்த நோஞ்சான் ஆசாமியின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
நோஞ்சான் திருப்பி அடிக்கத் தயங்கி, “ஏ… என்னை நிஜமாக அடிச்சியா? இல்லை விளையாட்டா அடிச்சியா?” என்று கேட்டான்.
“நிஜம்மாத்தான் அடிச்சேன். அதுக்கு என்ன?” என்று கர்ஜித்தான் பயில்வான்.
“அதுதானே… எனக்கு விளையாட்டெல்லாம் பிடிக்காது. கெட்ட கோபம் வரும்…” என்று சொல்லிக் கொண்டே நடந்தான் நோஞ்சான்.
*
பள்ளிக்கூட ஆசிரியை மாணவர்களுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தார். “அப்போது கடவுள் அங்கு தோன்றி எல்லாக் குழந்தைகளுக்கும் ரொட்டியும், வெண்ணெயும் கொடுத்தார்…” என்றாள்.
ஒரு மாணவன், “டீச்சர், கடவுள் என்பவர் கிடையாது என்று சர்வாதிகாரி நேற்றுகூட டி.வி.யில் சொன்னாரே” என்றான்.
டீச்சருக்கு உதறலெடுத்தது. உடனே சமாளித்துக் கொண்டு, “இது கற்பனைக் கதைதான். ரொட்டியும், வெண்ணையும் எங்கே இருக்கிறது நமது நாட்டில்? அது கற்பனைதானே! அதுபோல் கடவுளும் கற்பனைதான்” என்றார்

ரசித்த இடம்: http://kadugu-agasthian.blogspot.com/

Advertisements
பின்னூட்டங்கள்
  1. chinnapiyan v.krishnakumar சொல்கிறார்:

    good and enjoyed. thanks rajan.

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s