புக்குல என் மூஞ்ச…. வைக்க!!!

Posted: ஜூலை 4, 2011 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை
குறிச்சொற்கள்:, , , , , , , ,

வர..வர..இந்த வெளிநாட்ல இருக்கவங்க தொல்ல தாங்கலப்பா… இங்கே இருந்து ஒட்டகம் மேய்க்கிறதுக்கு ஓசில போக வேண்டியது..சிங்கப்பூர் போறேன்..சிலுக்குபட்டி போறேன்னு அங்க போயி குப்ப கூட்ட வேண்டியது.. ஆனா அவனுங்க ஆர்குட்லயும்..ஃபேஸ் புக்லயும் பண்ற அட்டகாசம் தாங்க முடியலடா சாமி..ஒட்டகம் மேக்கிரவன் ஒபாமாகிட்ட நிக்கிறமாதிரி போட்டோ போடறான்… ஒன்ற டாலர் பஸ் காச மிச்சம் புடிக்க நடந்து போற நாதாரிங்க… பென்ஸ் காருகிட்ட நிக்கிற மாதிரி போட்டோ போடறான்!

 

சீன் போடற எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கை!

 இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே. இது மெயிலில் வந்தது தமிழில் அளித்திருக்கிறோம் அவ்வளவுதான்!

ஏண்டா உங்க கைய கால வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாதா? உங்களுக்கு வாழ்க்கையில என்னடா லட்சியம்? அடுத்தவங்களை பொறாமைப்பட வைக்கிறதா? அப்புறம் ஏன் உங்க புரொஃபைல் பிக்சருங்களை அடிக்கடி மாத்திகிட்டே இருக்கீங்க? என்ன காரணம்? எனக்கு இப்ப தெரிஞ்சாகனும்!

 

ஒத்துக்கிறோம், நீங்கெல்லாம் வெளிநாட்டுக்கு போய்ட்டீங்க. உங்க ஒன்னுவிட்ட இரண்டுவிட்ட சித்தப்பா, மாமால்லாம் உங்களை நினைச்சி பெருமைப்படுவாங்க. எங்களுக்கும் சந்தோசம்தான். அதுக்காகதானே ஏர்போட் வந்து டாடாலாம் காமிச்சு வழியனுப்பி வச்சோம். ஆனா உங்க போட்டோக்களை வச்சி எங்களை ஏண்டா சாவடிக்கிறீங்க?

 

சரி, ஒத்துக்கிறோம், நாங்க அந்த இடத்தையெல்லாம் மேப்ல மட்டும்தான் பார்த்துருக்கோம், நிஜ வாழ்க்கையில இல்ல. அவ்வளவுதானே? அதுக்காக ஏன், நீங்க ஒருநாள் விட்டு ஒரு நாள் புது படத்தை போடுறீங்க. உங்களுக்கு என்னதான் வேணும்? உங்களுக்கு தேவை, நாங்கெல்லாம் ‘like’-ஐ அழுத்திட்டு “வாவ், சூப்பர், கலக்கலா இருக்கு” இப்படி கமெண்ட் போடணும், அதானே? நீங்க ரகசியமா ஒவ்வொரு நிமிசமும் எல்லா கமெண்டையும் பார்ப்பீங்க. நாலு நாள் கழிச்சு “எல்லோருக்கும் நன்றி!” அப்படின்னு ஒரே வார்த்தையில முடிச்சிட்டு போயிடுவீங்க!

 

சரி, அதைக் கூட ஒத்துக்கலாம். நீங்க நிறைய காசு செலவு பண்ணி அங்க போயிருக்கீங்க, அதனால உங்களை எல்லோரும் பாராட்டனும்னு நினைக்கிறீங்க. புரியுது. ஆனா ஏண்டா செடி, மரம், நாய், பூனைன்னு இதையெல்லாம் புரொஃபைல் பிக்சர்ல போடுறீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? லூசுப்பசங்களா!

அப்புறம் இன்னொரு ரகம் இருக்கு. அதாவது அவங்க படத்துக்கு பதிலா அவங்க குழந்தை படத்தை போடுறது. இந்த மாதிரி ஆளுங்களை பத்தி நாங்க பேசக் கூட விரும்பலை.

 

எல்லாத்தோட பெஸ்ட் லேடிஸ்தான். ஏனுங்க அம்மிணி, உங்க படத்தை கருப்பு வெள்ளையா மாத்தி போட்டா, திடீர்னு அது அழகாயிடுமா? மத்தவங்க உங்களை பார்த்து “ஆஹா. என்ன அழகு! என்ன அழகு!” இப்படி நினைக்கனும், அப்புறம் உங்களுக்கு friend request அனுப்பனும். ம்.. அப்படித்தானே? எங்களுக்குதானே தெரியும் நீங்க எப்படி இருப்பீங்கன்னு!.

 

நீங்க இங்கயும் ஒன்னும் செஞ்சதில்ல. கல்யாணம் ஆகி அங்க போயிட்டு, அங்கேயும் ஒன்னும் செய்யாமதான் இருக்கீங்க. இதில பெருமைப்பட என்ன இருக்கு? இதில தினமும் நீங்க என்ன சமைச்சீங்கன்னு அப்டேட் பண்ணுறது வேற “நான் இன்று என் அன்புக் கணவருக்காக தயிர் சாதம் சமைத்தேன்!

 

சமைச்சீங்களா? உண்மையாவா? இதில வேற அந்த லூசு ஹஸ்பெண்டும் வந்து லைக் போடுவாரு அப்புறம் பொது இடத்தில சொல்வாரு. “தேங்க்யூ டார்லிங், உம்ம்ம்ம்மா…

 

நீங்க இந்தியாவிலிருந்து வந்தவங்கதானே? இந்த மாதிரி விசயமெல்லாம் அநாகரிகம்னும் பொது இடத்தில இப்படியெல்லாம் நடந்துக்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாது? நீங்க இந்தியாவை விட்டுட்டு போனா உடனே எல்லாத்தையும் மறந்துடுவீங்களா?

 

அப்புறம் நீங்க சமைச்ச சாப்பாட்டோட படத்தை மிக ருசியானது எச்சில் ஊறவைக்கும்ன்னு தலைப்போட வேற போடறது…சாப்பாட்டு பார்த்தால்ல தெரியும்.. எச்சில் ஊறுமா, வாந்தி வருமான்னு! இதில வெளிநாட்டுக்காரங்க யாராவது வந்து அது எப்படி செய்யறதுன்னு கேக்கறது! கொய்யால, நீ இண்டர்நெட்டுதானே யூஸ் பண்ணுறே? கூகுள்ள தேடிப்பார்த்தா கிடைக்கப் போகுது.

 

சரி எனக்கு இப்ப ஒன்னு சொல்லுங்க, நீங்க இந்தியாவில இருந்தப்ப ஒரு நாளாவது இப்படி சமைச்சிருக்கீங்களா? உங்க அண்ணனும் நல்ல பையன் தான். அவனுக்காக ஒரு நாளாவது சமைச்சிருக்கீங்களா? யோவ் கணவன்களா, நாங்க உங்களையும்தாம்பா கேட்கிறோம், நீங்க இங்க இருந்தப்ப, ஒருதடவையாவது, உங்கம்மா சாப்பாடு நல்லாயிருக்குனு பாராட்டியிருக்கீங்களா?

 

கணவன் மனைவி இரண்டு பேரும் இந்த மாதிரி லூசுத்தனமான விளையாட்டுகளை விளையாண்டுகிட்டு வருசத்துக்கு 365 நாளும் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிக்கிறீங்க. ஆனா சொல்வீங்க, “நாங்க கிங் கோல்ஸ் ஓரியண்டல் பேலசின் 35வது மாடியில் சூப்பர் டின்னர் சாப்பிட்டோம். செம சைனீஸ் ஃபுட்!” ஏம்பா அது வெறும் சைனீஸ் ஃபுட் தானே? அதுக்கு ஏன் இவ்வளவு சீன் போடறீங்க? இந்தியா சீனாவுக்கு பக்கத்திலதானே இருக்கு.

 

அப்படின்னா உண்மையா என்ன நடக்குதுனு  உங்களுக்கு தெரியலன்னா, இப்ப சொல்றோம் கேட்டுகுங்க. அங்க யாருமே சந்தோசமா இல்ல. நீங்க எவ்வளவு சம்பாதிச்சாலும், சந்தோசமா இருக்க போறதில்ல. வெஸ்டர்ன் டாய்லெட்ல உட்கார்ந்துகிட்டு, “நாம ஏன் இங்க வந்தோம்?”னு யோசிச்சிகிட்டு மட்டும்தான் இருப்பீங்க.

 

நாங்க இந்த உண்மையெல்லாம் சொன்னேன்னா, உடனே நீங்க உங்க ஐ- புரோடக்டெல்லாம் என்கிட்ட காமிப்பீங்க. இதப்பாருங்க, ஐபேட்2-லாம் இங்கேயும் கிடைக்குது, தெரியுமா? அதனால கம்முனு நாங்க சொல்றத கேளுங்க. உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க.

 

இப்ப நீங்க நினைக்க ஆரம்பிச்சிருக்கலாம், எங்களுக்கெல்லாம் பொறாமை, அதான் இப்படியெல்லாம் பேசுறோம்னு, இல்லையா? இதப்பாருங்க, நாங்களும் அங்கெயெல்லாம் போய் இந்த மாதிரியெல்லாம் செஞ்சாலும் இப்படித்தான் பேசுவோம். உங்களால என்ன செய்ய முடியும்?

 

இப்படிக்கு

உள்ளூர் டீக்கடை பெஞ்சு
.. 

நன்றி:

மொழி பெயர்ப்பு உதவி:எஸ்.கே,வைகை 

டீக்கடையில் புலம்பியதை ஒட்டுக்கேட்ட இடம்: http://terrorkummi.blogspot.com

பின்னூட்டங்கள்
  1. chinnapiyan சொல்கிறார்:

    wonderful presentation. thank you Kali Rajan

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s