என்னதிது? கி.மு / கி.பி தெரியும், காமு சோமு தெரியும்,  டீ காபி கூட தெரியும், இது என்ன புதுசா க.மு Vs  க.பி னு மண்டைய பிச்சுக்கரீங்களா….

அதான்… அதான் வேணும் எனக்கு…. நாலு பேரை மண்டைய பிச்சுக்க வெச்சா அன்னைக்கி நான் நிம்மதியா தூங்குவேன்…. ஹி ஹி ஹி… ஒகே ஒகே நோ டென்ஷன்….

விசியத்துக்கு போவோம்…. க.மு Vs  க.பி னா கல்யாணத்துக்கு முன் Vs கல்யாணத்துக்கு பின். அதாவது ரங்கமணிகள் ஒரே situation ஐ கல்யாணத்துக்கு  முன்னாடி எப்படி ஹீரோ மாதிரி டீல் பண்ணுறாங்க, அதே கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி (!!!!?????) மாறி போய்டராங்கங்கறதை  இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னை போன்ற அப்பாவி தங்கமணிகள் சார்பாக எடுத்து இயம்பவே இந்த பதிவு… ம்ம்ம்ம்…. மூச்சு வாங்குது போங்க…

இப்போ உங்க முகம் அப்படியே “வதனமோ சந்திர பிம்பமோ” னு சொல்லுற மாதிரி பிரகாசமாகுதா அப்போ நீங்க ஒரு “தங்கமணி”, அதே கேப்டன் படத்துல வர்ற மாதிரி கண்ணு இன்ஸ்டன்ட்ஆ சிவக்க உதடு துடிக்க மொறைக்கரீங்களா அப்போ நீங்க ஒரு “ரங்கமணி”

எப்படி நம்ம கண்டுபிடிப்பு…? ஒகே ஒகே…. நோபல் பரிசு எல்லாம் வேண்டாம்னு சொன்னா நீங்க கேக்கவா போறீங்க…. சரி சரி ரெண்டு மட்டும் குடுங்க போதும்…. எங்க வீட்டு showcase ல அவ்ளோ தான் எடம் இருக்கு…

********************************************

சிச்சுவேசன் ஒண்ணு - ரங்கமணிக்கு காய்ச்சல், ஆனாலும் Sincere சிகாமணியா பிசினஸ் விசியமா வெளியூர் போய் இருக்கார். அப்போ அவருக்கு போன் வருது 

கல்யாணத்துக்கு முன் : "ஹலோ சொல்லு டார்லிங்.... இப்போ தானே பேசின. என்ன? ஓ...எனக்கு இப்போ ஒடம்புக்கு பரவாயில்லயானு கேக்க கூப்டியா.... உனக்கு என் மேல எவ்ளோ அன்பு.... நான் ரெம்ப லக்கி"

கல்யாணத்துக்கு பின் : "சொல்லு. என்ன? மீட்டிங்ல இருக்கேன்... ம்... சரி வெய்யி....வேலை இருக்கு.... அப்புறம் பேசறேன்" (மனதிற்குள் - வெளியூர் வந்தும் மனுசன நிம்மதியா விடாம...ச்சே....)

********************************************

சிச்சுவேசன் ரெண்டு - ரங்கமணியும் தங்கமணியும் பீச்சில் அமர்ந்து இருக்கிறார்கள் 

கல்யாணத்துக்கு முன்: "எப்படி தங்கமணி இப்படி கோர்வையா கதை சொல்ற மாதிரி அழகா பேசற? நீ பேசறதை கேக்கறதுக்கே ஆபீஸ் எப்படா முடியும்னு இருக்கு எனக்கு தினமும்"

கல்யாணத்துக்கு பின்: "ஏன் இப்படி தொணதொணக்கற? உனக்கே வாயே வலிக்காதா? ( மனதிற்குள் - இதுக்கு பேசாம நான் ஆபீஸ்ல உக்காந்து internet browse பண்ணிட்டாச்சும் இருக்கலாம்)

********************************************

சிச்சுவேசன் மூணு - ரங்கமணியும் தங்கமணியும் கோவிலில். தங்கமணி ஒரு பெண்ணின் வளையலை காட்டி "அழகா இருக்கில்ல" னு சொல்றாங்க 

கல்யாணத்துக்கு முன்: (மனதிற்குள்) "வாவ்.... காதலிக்க ஆரம்பிச்சு 100 வது நாளுக்கு என்ன கிப்ட் வாங்கறதுன்னு மண்டைய ஒடைச்சுட்டு இருந்தேன்... வளையல் வாங்கி surprise ஆ அசத்தணும்"

கல்யாணத்துக்கு பின் : (மனதிற்குள்) "ஐயோ..... கல்யாண நாள் வேற வருதே... பர்சை காலி பண்ணாம விடாது போல இருக்கே. எப்பவும் போல காது கேக்காத மாதிரியே maintain பண்ணிக்கணும்.... அதான் நமக்கும் நல்லது நம்ம பர்சுக்கும் நல்லது"

********************************************

சிச்சுவேசன் நாலு - ரங்கமணியும் தங்கமணியும் ஒரு உணவகத்தில். ரங்கமணி காளிப்ளவர் மஞ்சூரியனை ரசித்து சாப்பிட "உங்களுக்கு ரெம்ப பிடிச்சதா... இருங்க chef கிட்ட எப்படி செய்தாங்கன்னு கேட்டுட்டு வரேன்"

கல்யாணத்துக்கு முன்: "எனக்கு ஒண்ணு பிடிக்கிதுனதும் இவ்ளோ ஆசையா கத்துக்க நினைக்கிறியே... இதுக்காகவே எப்படி சமைச்சு போட்டாலும் சந்தோசமா சாப்பிடுவேன்"

கல்யாணத்துக்கு பின்: "போதும் போதும்....ஏன்? எனக்கு காளிப்ளவர் மஞ்சூரியன் புடிக்காம போகணுமா?"

********************************************

சிச்சுவேசன் அஞ்சு - ரங்கமணிக்கு அசைவம் பிடிக்காது என்றதும் தானும் அதை சாப்பிடபோவதில்லை என்கிறார் தங்கமணி 

கல்யாணத்துக்கு முன்: "ஏம்மா? உனக்கு புடிச்ச எதையும் நீ எனக்காக தியாகம் பண்ண கூடாது. சரியா"

கல்யாணத்துக்கு பின்: "ஏன்? உனக்கு பிடிக்காத எதையாச்சும் என்னை விட சொல்ல போறியோ?" (இப்படி குதர்க்கமா யோசிக்கறது எல்லாம் ரங்கமணி போஸ்ட் குடுத்த அடுத்த நொடி வந்துடும் போல)

********************************************

சிச்சுவேசன் ஆறு - தங்கமணி புது புடவை கட்டி இருக்கிறார். "எப்படி இருக்கு?" னு ரங்கமணி கிட்ட கேக்கறாங்க 

கல்யாணத்துக்கு முன்: "புடவை சுமார் தான்... ஆன நீ கட்டி இருக்கறதால அதுக்கு மவுசு கூடிப் போச்சு"

கல்யாணத்துக்கு பின்: "பொடவை எல்லாம் நல்லாத்தான் இருக்கு....."  (அதுக்கப்புறம் ஒரு "indifferent look " அதுக்கு என்ன அர்த்தம்ன்னு ரங்கமணிகளுக்கே வெளிச்சம்)

********************************************'

சிச்சுவேசன் ஏழு - தங்கமணி அவங்க தோழி கல்யாணத்துக்காக வெளியூர் போறதா சொல்றாங்க 

கல்யாணத்துக்கு முன்: "என்னது ரெண்டு நாளா? சான்சே இல்ல... என்னால உன்னை பாக்காம இருக்க முடியாதும்மா. வேணும்னா நல்ல காஸ்ட்லி கிப்ட் வாங்கி அனுப்பிடலாம்"

கல்யாணத்துக்கு பின்: "அப்படியா.... பிரிண்ட்ஸ் எல்லாம் பாத்தா என்னை மறந்துடுவ இல்ல? வேணா இன்னும் ரெண்டு நாள் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாயேன்... உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்" (மனதிற்குள் - ஐ....தங்கமணி என்ஜாய்... உடனே நம்ம கோஷ்டிக்கு போன் போட்டு பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணனும்....) "என்னமா நீ இன்னும் போலயா?"

********************************************'

ஏழுக்கு மேல எழுதினா ஏழரை நாட்டு சனி ஆரம்பிக்கறதாவும் அதோட விளைவா ஆட்டோ இல்ல லாரியே வரும்னும் நம்பத்தகுந்த வட்டார செய்திகள் வந்தபடியால் அப்பாவி தங்கமணி உங்களிடம் இருந்து விடை மற்றும் வடை பெறுகிறாள்....  எஸ்கேப்......

Disclaimer Statement: இந்த பதிவை படிச்சதும்.... அதன் விளைவாக உங்கள் வீட்டில் நடக்கும் அடிதடி, சட்டி பானை பாத்திர சண்டை, இன்னும் மற்ற பிற (!!!???) விளைவுகளுக்கு அப்பாவியின் ப்ளாக் பொறுப்பில்ல... இந்த Disclaimer Statement மூலமாக சொல்லி கொள்வது என்னவென்றால் கேஸ் கோர்ட் எல்லாம் செல்லாது செல்லாது செல்லாது... (ஹி ஹி ஹி)

இப்படிக்கு,
முன்ஜாக்கிரதை மற்றும் முன் ஜாமீன் புகழ் - அப்பாவி தங்கமணி
தாங்க்ஸ்
Advertisements
பின்னூட்டங்கள்
  1. chinnapiyan v.krishnakumar சொல்கிறார்:

    எழுத்து நடை மிக ஸ்வாரசியம்மா நகச்சுவையுடன் கடைசிவரை இழுத்து சென்றது. நன்றி.

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s