பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் புடிச்சா… :)))

Posted: ஜூன் 28, 2011 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , ,

முன் குறிப்பு:
சும்மா சிரிக்க மட்டும்… அதை மறந்து டென்ஷன் ஆகி தல தலையா அடிச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல…:))

“டாக்டர் ப்ளீஸ்… எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்ல”

“இன்னொரு முறை சொல்லுங்க…” என டாக்டர் சந்தோசமாய் பாட்டு படிக்க

“என்ன டாக்டர் இது? நாங்க எவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கோம்… உங்களுக்கு விளையாட்டா இருக்கா?” என அந்த பெற்றோர் கோபமாய் பேச

“சரி சரி… பேஷன்ட் எங்க?”

“இதோ… உங்க முன்னாடி உக்காந்துட்டு இருக்கறது தான் பேஷன்ட்”

“என்ன விளையாடறீங்களா? முழுசா முள்ளங்கி பந்தாட்டம் இருக்கற ஒரு ஜென்மத்தை என்னமோ ஐ.சி.யு கேஸ் மாதிரி எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்லனு சொல்லி ஏன் ஆசைய கிளப்பினீங்க?” என இப்போது கோபம் கொள்வது டாக்டர் முறையானது

“ஐயோ டாக்டர்… நீங்க என் புள்ளகிட்ட பேசி பாருங்க,உங்களுக்கே புரியும்” என அவன் அம்மா கூற

“அப்படியா?” என பேஷண்டை அளவெடுப்பது போல் பார்த்த டாக்டர் “உங்க பேர் என்ன?” என கேட்க

“எந்த பேரை கேக்கறீங்க? சொந்த பேரா இல்ல ப்ளாக் பேரா?”

“அதென்ன ப்ளாக்?” என டாக்டர் விழிக்க

“என்ன ப்ளாக்ஆ? ச்சே… நீங்க எல்லாம் என்ன டாக்டர்? அது வலைப்பூ… நம் மனதின் வலையில் சிக்கும் எண்ண பூக்களை எல்லாம் தொடுத்து மாலையாய் கோர்த்து போட ஒரு கழுத்து…” என பேஷன்ட் விளக்கம் கூற

“ஓ… முழுசா முத்திடுச்சு போல” என மனதிற்குள் நினைத்த டாக்டர் “எப்போல இருந்து இந்த மாதிரி இருக்கு?” என டாக்டர் பெற்றோரிடம் கேட்க

“நானே சொல்றேன் டாக்டர்?” என்ற பேஷன்ட் “ஆரம்பத்துல எல்லாம் யாரோ எழுதின ப்ளாக்ல போய் சும்மா படிச்சும் படிக்காமையும் கன்னா பின்னானு கமெண்ட் மட்டும் போட்டுட்டு இருந்தேன்… திடீர்னு ஒரு நாள் ஒரு பதிவர் ‘நீங்க இவ்ளோ சுவாரஷ்யமா கமெண்ட் எழுதறீங்களே… நீங்களே ஏன் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாது’னு கேட்டார்… அன்று விழுந்த விதை தான், இன்று ஆலமரமாய் 500 followerகளும் ஆயிரம் பதிவுகளும் என வளர்ந்து நிற்கிறது” என உணர்ச்சிவசப்பட்டார்

“சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தவன் ஒருத்தன்…இப்ப மாட்டிட்டு முழிக்கறது நான்” என மனதிற்குள் புலம்பிய டாக்டர் “அப்படி என்ன தான் எழுதுவீங்க?” என கேட்க

“எதை வேணாலும் எழுதுவேன் டாக்டர்… உதாரணத்துக்கு சொல்லணும்னா… ஒரு நாள் ஒரு கரப்பான் பூச்சிய அடிச்சுட்டேன்… அதை ‘நானும் கரப்பானும்’னு ஒரு போஸ்ட் போட்டேன்….இன்னொரு நாள், ஒரு பிச்சகாரனுக்கு பத்து பைசா போட அவன் இன்னும் பத்து பைசா சேத்து திருப்பி குடுத்தான், அதை ‘பிச்சையிடம் பிச்சை’ ஒரு போஸ்ட் போட்டேன்”

“அட கருமமே…அதெல்லாமா எழுதுவீங்க…படிக்கறவன் காரி துப்ப மாட்டான்”

“ஐயோ போங்க டாக்டர்… உங்களுக்கு விசயமே புரியல… அதிகமா திட்டப்படாத பதிவரும் அதிகமா துப்பப்படாத பதிவும் பிரபலமானதா சரித்தரமே இல்ல” என அவர் பெருமிதமாய் கூற

“கருமம் கருமம்” என தலையில் அடித்து கொண்ட டாக்டர் “அது சரி… இந்த எழுதற ஐடியா எல்லாம் எப்ப தோணும்?”

“அதுக்கு ஒரு எல்லையே இல்ல டாக்டர்… பல்லு விளக்கும் போது தோணும், பாலத்த கடக்கும் போது தோணும், சாப்பிடறப்ப தோணும், சண்டை போடறப்ப தோணும், தூங்கறப்ப தோணும், துப்பரப்ப தோணும், நடக்கறப்ப தோணும், நிக்கறப்ப தோணும், கொசு அடிக்கும் போது தோணும், கொசுறு நியூஸ் படிக்கறப்ப தோணும்… ட்ரெயின்ல போறப்ப தோணும்… தலைவலிக்கரப்ப தோணும்… தோணும் போது தோணும்… தோணாத போதும் தோணும்… தோணனும்னு நினைக்கறப்ப தோணாது… ஆனா தோணாதுனு நினைக்கறப்ப தோணும்… தோணினாலும் தோணும்னு நினைக்கறப்ப தோணாம கூட போகும்… ஆனா தோணவே தோணாதுனு நினைக்கறப்ப கண்டிப்பா தோணாம போகாது…அவ்ளோ ஏன்? இப்ப கூட ‘மெண்டல் டாக்டரும் மென்நவீனத்துவ பதிவரும்’னு ஒரு பதிவு எழுதணும்னு தோணுது”

“என்னது மெண்டல் டாக்டரா?” என டாக்டர் டென்ஷன் ஆக

“ப்ளீஸ் டாக்டர்… தப்பா எடுத்துக்காதீங்க… எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்ல” என பேஷன்டின் அப்பா கூற, அந்த “எவ்ளோ செலவானாலும் பரவால்ல” என்ற வாசகம் டாக்டரின் கோபத்தை காணாமல் போக செய்தது

“இங்க பாருங்க தம்பி… இப்படி நினைச்ச மாதிரி எல்லாம் எழுத கூடாது… அது நல்லதில்ல” என டாக்டர் அட்வைஸ் போல் கூற

“என்ன நல்லதில்ல? மழைல ஒரு பூ கீழ விழுகரத பாத்தா என்ன தோணும் தெரியுமா?

ஒருமுறை பூத்த பூ
ஒரே மழையில் விழுந்ததே
இன்னொருமுறை பூக்குமா
இருந்தாலும் அது போல் வருமா!!!

அதே மழைல எங்க பக்கத்துக்கு வீட்டு குண்டு மஞ்சுளா நடந்து போறதை பாத்தப்ப பீலிங்கோட இப்படி தான் எழுத தோணுச்சு..

மலையே
மழையில்
நனைந்து
நகர்கிறதே!!!

இந்த கவிதை எல்லாம் நல்லதில்லைன்னு நீங்க எப்படி சொல்றீங்க?”

“இங்க பாருங்க… நீங்க எழுதறது சமுதாயத்துக்கு உபயோகமா இருக்கணும் ” என டாக்டர் புரிய வைக்க முயன்றார்

“கண்டிப்பா… அப்படி கூட எழுதி இருக்கேன்… நான் எழுதின ‘குட்டையில் ஊறிய மட்டை’ போஸ்டை படிச்சுட்டு ஒருத்தர் இனி ஜென்மத்துல இன்டர்நெட் பக்கம் வர மாட்டேன்னு போய் இப்போ நல்ல வேலைல நிலைச்சு இருக்கறதா தகவல் வந்தது… அது மட்டுமில்ல, என்னோட ‘மண்டையில் ஒரு மரிக்கொழுந்து’ கதைய ஒரு கோமா பேஷன்டுக்கு தினமும் படிச்சு காட்டினதுல நாலே நாளுல அவர் ராவோட ராவா வீட்டுக்கு ஓடி போயிட்டாராம்… இப்ப அந்த ஹாஸ்பிடல்ல அதான் ட்ரீட்மென்ட்ஆ யூஸ் பண்றாங்களாம்… இப்ப சொல்லுங்க எவ்ளோ உபயோகமான வேலை எல்லாம் செய்யுது என் பதிவுகள்”

“ஸ்ஸ்ஸ்ஸ்ப்பப்பா…. எப்படி புரியவெக்கறது?” என வெகு நேரம் யோசித்த டாக்டர் “இங்க பாருங்க தம்பி… எதாச்சும் தத்துவம் பித்துவம்னு எழுதினாலும் உபயோகம்…” என டாக்டர் முடிக்கும் முன்

“ஓ இருக்கே… ஜில்லுனு ஒரு மோர்னு ஒரு அருமையான பதிவு இருக்கே” என உற்சாகமாகிறார் பேஷன்ட்

“என்னது? மோர்ல என்ன கொடும தத்துவம் இருக்கும்?” என டாக்டர் குழம்புகிறார்

“என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க? மோர் எப்படி தயாராகுது… பாலாடையை கடைந்து அதில் இருந்து கொழுப்பான வெண்ணையை நீக்கி உருவாவது தானே மோர்… இதுல இருந்து உங்களுக்கு என்ன புரியுது?”

“ம்… உனக்கு முத்தி போச்சுன்னு புரியுது?” என தலையில் அடித்து கொண்டார் டாக்டர்

“ஹையோ ஹையோ… இதை புரிஞ்சுக்கற அளவுக்கு நீங்க பக்குவப்படலை டாக்டர்… அதாவது… எப்படி பாலாடையில் இருந்து வெண்ணையை நீக்கி மோர் உருவாகிறதோ அது போல நம் வாழ்வில் வெண்ணை போன்ற கெட்ட விசயங்களை அகற்றினால் மோர் போன்ற மோட்சத்தை அடையலாம்னு சொல்ல வரேன் டாக்டர்”

ஒரு நிமிடம் டாக்டருக்கே தனக்கு தான் விவரம் போதவில்லையோ என தோன்ற தொடங்கியது… ஒருவாறு சமாளித்து “தம்பி நான் என்ன சொல்ல வரேன்னா…” என்பதற்குள்

“டாக்டர், நான் என்ன சொல்ல வரேன்னா… நான் மொதலே மேட்டர் சொல்லிட்டா, நீங்க மேட்டர் படிச்சுட்டு மீட்டர் கட் பண்ணிட்டு போய்ட்டா நான் மீட்டர் வட்டி வாங்கி ப்ளாக் நடத்தற மேட்டர் என்ன ஆகறது. இன்னும் சொல்லப்போனா… மேட்டர்க்கு மேட்டர் தேத்த வழி இல்லாம தான் நான் இப்படி பீட்டர் விட்டுட்டு இருக்கேன்னு நீங்க என்னை பத்தி தப்பா நினைச்சுட்டா அப்புறம் என் மேட்டர் என்ன ஆகும், நீங்க கொஞ்சம் மீட்டர் கட் பண்றதுக்கு முன்னாடி இந்த மேட்டர் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இன்னும் தெளிவா சொல்லணும்னா….”

அதற்குள் டாக்டர் “ஹா ஹா ஹா ஹா… ஹி ஹி ஹி ஹி….” என கை தட்டியபடி சிரிக்கிறார்

“அப்பாடா… வழக்கம் போல புரியாத மாதிரி பேசினதும் இந்த டாக்டரும் மெண்டல் ஆய்ட்டாரு” என பதிவர் மனதிற்குள் சிரித்து கொள்கிறார்

“ஐயையோ என்னாச்சு… ஏன் டாக்டர் இப்படி சிரிக்கறாரு?” என சுற்றி இருந்தவர்கள் பயந்து போய் பார்க்க

“ஹா ஹா ஹா…. ஹி ஹி ஹி… நான் பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார டாக்டர்னு நீங்க நினைச்சா அதான் இல்ல… நான் பைத்தியமாகி பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார ஆஸ்பத்திரில பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்து அதனால பைத்தியமான பைத்தியகார டாக்டர்களில் ஒருத்தன் அப்படின்னு நீங்க நெனச்சா அது தப்பில்ல… இன்னும் தெளிவா சொல்லணும்னா…” டாக்டர் நிறுத்தாமல் பேசி கொண்டே போனார் தன் சட்டையை கிழித்தபடி

“ஐயையோ… இந்த டாக்டருக்கும் பைத்தியம் புடிக்க வெச்சுட்டானே நம்ம புள்ள” என அந்த பேஷன்டுடன் வந்த அம்மா தலையில் கை வைத்து அமர

“என்ன சொல்றீங்க? இதுக்கு முன்னாடி வேற டாக்டர்’க்கு இதே மாதிரி ஆகி இருக்கா?” என அங்கிருந்த நர்ஸ் கேட்க

“ஒரு டாக்டர் இல்ல சிஸ்டர்… இதுவரைக்கும் 99 டாக்டர்களை பைத்தியமாக்கிட்டான்… இவர் தான் நூறாவது… கங்க்ராட்ஸ் சிஸ்டர்”என்றார் பேஷன்டின் அப்பா, என்னமோ அந்த நர்ஸ் பரிட்சையில் நூத்துக்கு நூறு வாங்கின மாதிரி

அந்த நர்ஸ் பயமாய் ஒரு பார்வை பார்க்க “ஹ்ம்ம்… இனி இந்த ஊர்ல ஒரு டாக்டரும் பாக்கி இல்ல… வேற ஊர்ல தான் விசாரிக்கணும்” என பேஷன்டின் அம்மா முடிக்கும் முன் நர்ஸ் எஸ்கேப் ஆகி இருந்தார்

:))))

நான் சட்டைய கிழிச்சுகிட்ட இடம்: http://appavithangamani.blogspot.com

Advertisements
பின்னூட்டங்கள்
  1. chinnapiyan v.krishnakumar சொல்கிறார்:

    ஹா ஹாஹாஹா 🙂 புரிந்து விட்டது எனக்கு . நான் முதல் ஸ்டேஜில் இப்போ இருக்கிறேனென்று.

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s