ஜோக்ஸ்! வாங்க! சிரிச்சிட்டுப் போகலாம் வாங்க!

Posted: ஜூன் 22, 2011 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை
குறிச்சொற்கள்:, , , , , , , , , , ,
ராமு: வக்கிலுங்க கிட்டேயும் டாக்டருங்க கிட்டேயும் உண்மையை சொல்லணும்னு ஏன் சொன்னாங்க தெரியுமா?
சோமு: ஒரு வேலை, நம்ப கிட்ட எவ்வளவு பணம் இருக்குதுங்கற உண்மை தெரிஞ்சப்பின்னாடி அதுக்கேத்தமாதிரி வேலை செய்வாங்களோ என்னமோ?

சோமு: 
கோழியில இருந்து தான் முட்டை வந்தது. ஏன்னா, முட்டையில இருந்து சேவல் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கே
ராமு: 
சரி! கோழியில இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில இருந்து கோழி வந்ததா?
ராமு: சரி! ஒருத்தன் 8 அடிக்கு ஃப்ளூட் ஒன்னு செய்தான். அதுக்கு என்ன பேரு வைச்சான் சொல்லு?
சோமு: அது பெரிசா இருந்ததாலே புல்லாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் குழல்ன்னு பேரு வெச்சிருப்பான். ஜோக் புரியலையா புல்Long குழல். இப்போ புரிஞ்சதா?
ராமு: ஒரு தத்துவம் சொல்றேன் கேளு!
மெயில்ல (Train) மயிலை ஏத்தலாம்; அது தாங்கும். ஆனா மயில்ல மெயில் ஏத்தினா அது தாங்குமா? அது செத்துடும்.
சோமு: நானும் ஒரு தத்துவம் சொல்றேன் கேளு!
எருமை மேல சவாரி செய்றவன் எமன்.
புருஷன் மேல சவாரி செய்றவ வுமன்
ராமு: பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து உன்னை அடிக்க வரப்போறாங்க பாத்து பேசுப்பா!
சோமு: அப்படி வந்தா சரணாகதி தான். சட்டுனு அவங்க கால்ல விழுந்திட மாட்டேன்.
ராமு: நீ செய்தாலும் செய்வே சரி! இந்த பஞ்ச் டயலாக்கை கேளேன்!
பறந்து பறந்து அடிச்சா, அது ரஜினி
மறந்து மறந்து அடிச்சா, அது கஜினி
சோமு: சூப்பரு!
ராமு: ஒரு பெரியவரு, கையில கொம்பு வைச்சிட்டு, கல்யாண சத்திரத்தை சுத்தி சுத்தி வந்திட்டே இருந்தாராம் எதுக்கு சொல்லு சோமு?
சோமு: இது ரொம்ப சிம்பிள்! கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிருன்னு சொல்லுவாங்க இல்லை. அதனால காக்கா குருவி ஓட்டுறதுக்காக இருக்கும்.
அதை இப்படியும் சொல்வாங்க தெரியுமா? கல்யாண சத்திரத்தில, ஆடு மாடுங்களை உள்ளே விடமாட்டாங்க. ஏன்னா? கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிரு. அதை, இதுங்கல்லாம் மேய்ஞ்சிட்டு போயிடக்கூடாது இல்ல.
ராமு: ஆட்டோ ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ஆட்டோ ஓட்டுவாரு
ராமு: பஸ் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: பஸ்சை ஓட்டுவாரு
ராமு: ட்ரைன் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ட்ரைன் ஓட்டுவாரு
ராமு: சரி! அப்போ ஸ்க்ரு ட்ரைவர்???…
ரெண்டு அக்காங்க பேசிக்கிறாங்க!
விமலா: உன் புருஷன் தங்கமானவருன்னு சொன்னே!
கமலா: ஆமாம் சொன்னேன்.
விமலா: அதுக்காக அவரு பாதுகாப்பா இருக்கணும்னு, அவரை பீரோல வைச்சிப் பூட்டுறது, கொஞ்சம் கூட நல்லா இல்ல.
விமலா: எங்க விட்டில இன்னைக்கி விலை உயர்ந்த சமையல்ப்பா!
கமலா: அப்படி என்னப்பா செய்தே?
விமலா: 22 கேரட்ல பொரியலும், 18 கேரட்ல குழம்பும் வைச்சேன்
தங்கமணி: என்னங்க! ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
ரங்கமணி: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.

குறிப்பு: ஜாலியா சிரிங்க! ஜாலியா ஜோலியைப் பாருங்க! சில ஜோக்ஸ் எப்பவோ எங்கேயோ படிச்சது. பெயர் தெரியாத, முகம்தெரியாத ஜோக்ஸ் எழுத்தாளர்கள், சமூகத்துக்கு நல்லா சேவைச் செய்றாங்கப்பா! எழுதிய புண்ணியவான்க எல்லோருக்கும் தேங்க்ஸ்ங்கோ!

சிரித்த இடம்: http://uravukaaran.blogspot.com

பின்னூட்டங்கள்
  1. chinnapiyan v.krishnakumar சொல்கிறார்:

    மிக பிஸியாக இருந்தபின் சற்று ரிலாக்ஸ் பன்ன்லாம்னு வந்தா, ஒரு புதையல் கிடைத்தமாதிரி இருந்தது. இந்த நகைச்சுவைக்கு பொறுப்பானவர்கள் எல்லோருக்கும் நன்றி நன்றி.. இந்த மாதரி பதிவுகள் இல்லை என்றால், நிச்சயம் பி‌பி வந்துவிடும் இந்த அவசர உலகத்திலே

chinnapiyan v.krishnakumar -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி