கோலிவுட் கேள்வி பதில்கள் – பாகம் 1

Posted: ஜூன் 21, 2011 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை
குறிச்சொற்கள்:, , , , , , , , , ,

கேள்வி:
நான் பட்டணத்தில் வசிக்கும் அழகான ஹீரோவிக்கு அம்மா. அவனைதிரும்ப கிராமத்துக்கு வரவழைச்சு, கிராமத்து பெண்ணை காதலிக்கவைக்கனும். அவன் இங்க வரமாட்ரான்.. அவனை கிராமத்துக்குவரவழைக்க என்ன செய்யனும்?
பதில்:
ரொம்ப சிம்பிள்.. ஒரு தந்தி அடிக்கனும் “அம்மா சீரியஸ்! உடனே வா!!”.தந்திய பார்த்து வந்தவுடனே, “டேய், என் பேர குழந்தைங்கள பாக்காம என்உயிர் போகாதுடா” ன்னு ஒரு பிட்ட போடு. பாக்கி விஷயத்த நம்மஹீரோயின் பார்த்துப்பா.. அப்புறம் என்ன? ஒரு காப்பாத்துற சீனு.. இரண்டுகுத்துபாட்டு… சண்டை.. சுபம்!!

கேள்வி:
நான் ஒரு ஹீரோ, என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடிமாறுவேஷம் போடனும். ஏதாவது ஐடியா குடுங்க..
பதில்:
உங்களை கண்டுபிடிக்க முடியாதபடி மாத்த பல வழிகள் இருந்தாலும்..நான் உங்களுக்கு ரெக்கமண்ட் பண்றது என்னன்னா.. “கருப்புகூலிங்கிளாஸ் போட்டுட்டு, தலையை சீவாமல் கலைச்சிவிட்டுட்டீங்கன்னா” உங்க அம்மாவே எதிருல வந்தாலும் கண்டுபிடிக்கமுடியாதுவே! இன்னம் கொஞ்சம் கஷ்டமா டிரை பண்ணனுமா? “மீசையை எடுத்துட்டு, கேப் போட்டா போதும்” உங்க டைரக்டர்ராலையேகண்டுபிடிக்க முடியாது!

கேள்வி:
வெரி அர்ஜண்ட்! கண்டிப்பாக பதில் வேண்டும். ஹீரோயினை பாம்புகடித்துவிட்டது, இப்ப நான் ஹீரோவாக என்ன செய்ய வேண்டும்?பதில்:
பயப்பட வேண்டாம். பாம்புகள் விஷத்தை ஏற்ற மட்டும் செய்யாது,திரும்பவும் விஷத்தை உறியும் சக்தி கொண்டது. நீங்க திரும்ப விஷத்தைஎடுக்க வைக்க செய்ய வேண்டியது என்னன்னா.. நல்ல உயரமானமலையில் ஏறி நின்று பாம்பை புகழ்ந்து பக்தி பாடல் ஒன்றை பாடனும்!இப்ப பாம்புக்கு இரண்டுல ஒரு முடிவு எடுக்கனும். ஒன்னு மலையில ஏறிவந்து பாடுற உங்கள போடனும். இல்லனா, விஷத்தை திரும்பஊறிஞ்சிட்டு ஓடனும். பாம்பு மலை மேல ஏறி வந்து உங்களை கடிக்கசோம்பேறிதன பட்டு, விஷத்தை திரும்ப எடுத்துடு்ம். எப்புடி ஐடியா?
கேள்வி:
ஹீரோயின் பெண்களுக்கான ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள். ஹீரோ அவளை காதலிக்கிறதால.. யாருக்கும் தெரியாமல் ஹீரோயினை சந்திக்கறது எப்படி?

பதில்:
ரொம்ப ஈசியான கேள்விதான். கடைக்கு போய் ஒரு பர்தா வாங்கி போட்டுகோங்க.. நேரா ஹாஸ்டலுக்கு போங்க. நீங்க 6 அடிக்கு மேல இருந்தாலோ, கையில.. காலுல நிறைய முடி இருந்தலோ, கவலப்படாதிங்க.. யாரும் உங்களை கவனிக்க மாட்டாங்க! எக்ட்ரா பிட்டிங்ஸ் பத்தி நான் சொல்ல தேவையில்லைன்னு நினைகிறேன்..
கேள்வி:
நான்தான் படத்தில் ஹீரோவோட தங்கச்சி. எனக்கு கல்யாணம் நடக்க.. நான் எந்த வகையான ராசிகல் மோதிரம் அணிய வேண்டும்?

பதில்:
ராசிக்கல் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. எப்படியா இருந்தலும் உங்களை ஒருத்தவன் ரேப் பண்ணிடுவான் கவலப்படாதிங்க! ரேப் பண்ணிட்டு கல்யாணம் பண்ண முடியாதுன்னு உங்க அண்ணன்கிட்ட சவால் வேற விடுவான். அப்புறம் என்ன? அண்ணன் பொங்கி, அவனை கும்மி.. எது எப்படியோ.. உங்களுக்கு கடைசியல கல்யாணம் நடக்கும் அவ்வளவுதான்!!
கேள்வி:
என்னுடைய கார் ஹய்வே ரோட்டுல ரிப்பேராயிடுச்சு. இப்ப நா அதை எப்படி சரி பண்றது?

பதில்:
இந்த மாதிரி நேரத்துல.. ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு. அது… ரேடியேட்ர்ல தண்ணி ஊத்துனா சரியாகிடும். இப்ப நீங்க டிக்கியில இருக்குற வாட்டர் கேனை எடுத்துகிட்டு, உங்களுக்கு புடிச்ச திசையில போங்க.. கண்டிப்பா அங்க ஒரு அருவியும், அந்த அருவியில குளிச்சிகிட்டே பாட்டு பாடுற ஒரு அழகான பொண்ணும் இருக்கும்!

கேள்வி:
நான் ஹீரோயினா நடிக்கிறேன். குளிக்கும் சீனில் எப்படி நடிப்பது என்று எனக்கு உங்கள் ஆலோசனை தேவை!

பதில்:
இது கொஞ்சம் பிரைவசியான மேட்டர்தான்.. இருந்தாலும் நீ்ங்க கேட்கறீங்கன்னு சொல்றேன். உடம்பை சுத்தி புடவையோ, டவல்லோ கட்டிக்கனும். ஷவர்ல குளிக்கும்போது புடவையோ, டவல்லோ படாத இடங்களுக்கு சோப்பு போடனும் அவ்வளவுதான்!!

கேள்வி:
நான் வில்லன் நடிகராக ஆக ஆசபடுறேன். உங்களுடைய அட்வைஸ் வேனும் எனக்கு.. குடுப்பீங்களா?

பதில்:
கண்டிப்பாக! முதல் சீனில் இருந்து.. யாரை பார்த்தாலும் முரைக்கனும், அள்ளக்கைகளை அப்பபப்ப அறையனும், “ஹேய்.. ஏய்.. ஏயயய்ய்ய்ய்ய்”ன்னு சம்பந்தம் இல்லாம சவுண்டு விடனும், குறிப்பா ஹீரோ எத்தனை தடவை அடிச்சாலும்.. வலிக்காத மாதிரியே திரும்ப போய் அவங்கிட்ட அடிவாங்கனும், கடைசியா.. “திருந்தனும்” இல்லன்னா.. “செத்துபோகனும்”. அவ்வளவுதான் பாஸ்!!

கேள்வி:
நான் ஒரு ஏழை ஹீரோ. ஆனா.. வில்லன்களை நம்ப வச்சி பழிவாங்க, நான் பணக்காரன் போல் ஆக்ட் குடுக்கனும். ஐடியா ப்ளீஸ்?

பதில்:
முதல்ல நீங்க துபாய் வடிவேலு போட்ட ஷைனிங் துணியில சட்டை தச்சி போட்டுகிட்டு, முட்டிய தொடுற மாதிரி கோட் போட்டுகனும். அப்புறம் மூஞ்சை மறைக்கிற மாதிரி கண்ணாடியும், காலுக்கு சம்பந்தமே இல்லாத ஷூவையும் போட்டுகனும். சையிடுல எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மாதிரி.. மண்டைக்கு லைட் கலர், கையில 9 விரலுக்கு கிளிட்டரிங் மோதிரம், எருமை மாட்டு சங்கிலி போல ஒன்னு கழுத்துல போட்டுக்கனும். கூடவே.. லெப்ட் சைட் இரண்டு பேரு, ரைட் சைட் இரண்டு பேரு,(கண்டிப்பா அதுல 2 பேரு நீக்ரோவா இருக்கனும்) டிப்-டாப்பா நடந்து வரனும். எல்லாரோட காதுலேயும் செவிட்டு மிஷின் மாதிரி ஓயரை காதுல சொருகியிருக்கனும். வில்லன்கிட்ட பேசுறப்ப.. ஈரோப்காரன் கேட்டா செத்துபோற லெவலுக்கு இங்கிலிபீசு பேசுனா.. நீங்களும் மல்டி மில்லனியர்தான்!!

(எழுதறத்துக்கு இன்னும் நிறையா இருந்தாலும்.. டைப் அடிக்க கை வலிக்குதுன்னு உண்மைய சொல்லாம, உங்க பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பலன்னு பொய் சொல்லி முடிச்சிகிறேனுங்கோ!)

மறக்காம பாகம் 2 படிச்சுட்டு போங்க

ரசித்த இடம்: http://kalakalkalai.blogspot.com/

Advertisements

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s