உலககிண்ணத்தின் பின் தோணி மொட்டை போட்டது ஏன்?நானே ரூம் போட்டு யோசிச்சன்

Posted: ஜூன் 20, 2011 in சுட்டது, நகைச்சுவை, விளையாட்டு
குறிச்சொற்கள்:, , , , , , , , ,


இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த தலைவர் உலகில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருக்கும் கிண்ணங்களையும் வென்ற ஒரே கிரிக்கெட் அணி தலைவர் என்ற பெருமைக்குரிய தோணி T20 உலக கிண்ணத்தை வென்று நாடு திரும்பியதும் செய்த முதல் காரியம் தன் அழகிய தலைமுடியை வெட்டி எறிந்தார். தன் அழகிய முடியுடன் போஸ் கொடுக்க வேண்டிய நேரத்தில் ஏன் இப்படி இவர் செய்தார் என அந்த நேரம் நாம் எல்லாம் குழம்பி போனோம். விடுப்பா தலையில பொடுகு வந்திருக்கும் அதுதான் வெட்டி இருப்பார் என எத்தனை பேர் ஆசுவாசப்படுத்தினார்களோ.

சரி அதுதான் முடிஞ்சுது இப்போ 50ஓவர் உலக கிண்ணம் முடிய மனிசர் மொட்டை போட்டிட்டார். திருப்பியும் எல்லோரும் குழம்பி போனார்கள். அட இது தோணி ஸ்டைல் என்றும் நேர்த்தி என்றும் சிலர் சொல்ல காதில கேட்டுது. என்னடா இந்த மனிசன் எப்ப பார்த்தாலும் இப்படி பண்ணுதே. என்ன காரணமாய் இருக்கும் என்று எனக்கும் குழப்பம். சென்னை பக்கம் வந்த மனிசனிட்ட நேரே கேட்கலாம் எண்டால் லண்டனில இருந்து போகவும் முடியல. இருந்தாலும் இதற்கான காரணம் என்ன என நானே ரூம் போட்டு யோசிச்சன். அப்பாடி ஒரு மாதிரி அவர் மொட்டைக்கு ஒன்றல்ல இரண்டல்ல நான்கு காரணங்கள் கண்டு பிடிச்சிருக்கேன்.
உலக கிண்ணம் முடிய கண்டிப்பாய் எல்லோருடனும் சேர்ந்து, தனிய என இவரை வளைத்து வளைத்து படம் எடுப்பார்கள் என்பது அவருக்கே தெரியும் அப்படி இருக்கையில் குழுவாக இருக்கும் படங்களில் தான் மொட்டையுடன் இருந்தால் தான் தனித்து தெரிவதுடன் தன் தலையை சுற்றி ஒளிவட்டம் தெரியும் என்பது இவ்வளவு தெரிந்த தோனிக்கு தெரியாதா என்ன?
டேய் அவன் “தல”ய பாரடா! பாரடா மொட்டை “தல”! என எல்லோரும் பேசி இவர் தான் தல என சொல்லாமல் சொல்ல வேண்டும் என்பதற்காக தலையின் அல்டிமேட் ஐடியா இது.
அப்புறம் பாருங்க இது மூன்றாவது காரணம். அடக்கமாய் இருக்கான். கோபமே வருதில்லை. இவன் என்ன தலைக்கனம் பிடிச்சவனா? பாரடா வென்றவுடன் தலைக்கனம் ஏறிட்டு என யாரும் சொல்லிட கூடாதே. அதனால் தன் மண்டையில் இருந்த முடியை எடுத்துவிட்டால் தலையில் கனம் இல்லை என சொல்லலாமே என்பதற்காக தன் முடியை தாரவார்த்துவிட்டார் மிஸ்டர் கூல்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு காரணம் இருப்பதாக தோனியின் மனைவி கூட சொன்னார்.(எப்படி அவங்களை தெரியும் என கேட்கப்படாது) ஆனால் தன்னால் கூட அதை கண்டு பிடிக்க முடியவில்லை. முடிஞ்சா நீ room போட்டு யோசித்து கண்டு பிடிச்சா எனக்கும் சொல் என்று சொல்லிட்டு போனை வைத்துட்டார். என்னடா அந்த இழவு புடிச்ச காரணம் என யோசிச்சுட்டே இருந்தேன். என்ன ஆச்சரியமுங்க தோணிவந்து டேய் டாங்கு மண்டை தலையா எதுக்குடா இப்படி யோசிச்சு யோசிச்சே என்னை போல மண்டையில மயிர் இல்லாமல் போகணும் என நினைக்கிறியா எண்டார். இல்லை பாஸ் எல்லாருமே உங்க தல முடி பற்றி பேசுறாங்க ஆனால் யாருக்குமே அதுக்கான காரணம் தெரியல பாஸ் என்றேன். டேய் அது வேற ஒன்றும் இல்லைடா என் தலையில முடி இருந்ததால வெட்டினேன் உன்னை மாதிரி சில லூசுப்பசங்க இப்படி அப்படி என எழுதினா நான் என்னடா பண்ணுவேன் எண்டு சொல்லும் போது தோனிக்கு அடிக்கணும் போல இருக்க கையை ஓங்கினேன். அம்மா எண்டு பெரிய சத்தம் கேட்டுது. என்னடா இது அடிச்சா தோணி தானே கத்தனும் நானே கத்துரேனே என எழும்பி பார்த்தா நடு ராத்திரியில கார்த்திகா(இப்ப நம்மாளு இவங்க தான் என சொல்லாமல் சொல்லிட்டன்.) ஹன்சிகா,அமலா பால் என மிஸ்டர் கூல் வந்து என்னை மிஸ்டர் ஹாட் ஆக்கிட்டு போனது தெரிஞ்சுது.
இதுக்கு பிறகும் யாரும் தோணி மொட்டை போட்டாதுக்கு காரணம் தேடுவிங்களா? அடி பின்னிடுவேன்.
ரூம் போட்டு யோசிச்சது நானில்லைங்க! நண்பர் சதீஷ் ங்க!
Advertisements
பின்னூட்டங்கள்
  1. chinnapiyan v.krishnakumar சொல்கிறார்:

    அருமை.ஒரு சமயம் பாகிஸ்தானில் விளயாடசென்றபொழுது,முஷாரப் தோணியிடம் உன் முடி ஸ்டயில் நன்றாக கவர்ச்சியாக இருக்குன்னு சொல்லி அப்படியே மெயிண்டேன் பன்னூன்னு சொன்னார். ஒருவேல அவர இன்சல்ட் பண்ணுறதார்க்காககூட மொட்டை போட்டிருக்கலாம்லா.

  2. Rajan சொல்கிறார்:

    நீங்களும் நேத்திக்கு ராத்திரி ரூம் போட்டுடீங்க போல!

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s