நான் ரசித்த கீச்சுக்கள்- பாகம் 3

Posted: ஜூன் 12, 2011 in #கீச்சுக்கள், சுட்டது
குறிச்சொற்கள்:, ,

ஐ.பாட் வந்த பிறகு வாழ்க்கைகூட சினிமா போல ஆயிடுச்சி  பேக்கிரவுண்டு இசையோடு என்னோட தினசரிகள் ! #technology

சென்னை டீ.நகர் பாண்டி பஜாரில் கார் பார்க்கிங் செய்தவரிடம் ஒரு கேள்வி? எப்ப பாஸ் வீட்ட விட்டு கிளம்புவீங்க? #doubt

அதென்ன என்னை விட உங்கள் மேல் பாசம்?’ என்பதில் தொடங்குகிறது ஒவ்வொரு மாமியார்-மருமகள் சண்டையும். #husbandology

‘நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா??’ என்று இருவரில் ஒருவர் கேட்காமல் முடிவதில்லை ஒவ்வொரு மாமி-மறு சண்டையும்.
#husbandology

அதெப்படி ஒவ்வொரு மருமகளும் மகன் திருமணம் முடிந்ததும் மாமியார் ஆகிவிடுகிறார்கள்.
#husbandology

இல்லத்தரசிகளின் தண்டனைமுறைகள் விசித்திரமானவை. சிறு சண்டைகளுக்கு தண்டனையாக அவர்கள் சமைத்ததை சாப்பிடத்தருகிறார்கள். கொஞ்சம் பெரிய சண்டைகளுக்கு ஹோட்டலில் சாப்பிடும் வாய்ப்பைத் தருகிறார்கள்
#husbandology

இவன் மாறுவான் ற நம்பிக்கையில் பெண்களும், இவள் மாறமாட்டாள் ன்ற நம்பிக்கையில் ஆண்களும் திருமணம் செய்கிறார்கள். இருவரும் ஏமாறுவது நாம் அறிந்ததே
#husbandology

ஏதோ சுடு தண்ணி பார்க்க சொன்னாங்க, தோசை சுட சொன்னாங்க..சரி…இப்ப பாலைக் காய்ச்சனுமாம்….இதெல்லாம் நல்லாயில்லை…..அவ்வ்வ்வ் #husbandology

வெளிப்படையாக கலகலப்பாக பேசும் பெண்களை தோழியாகவும் அமைதியாக இருக்கும் பெண்களை மனைவியாகவும் அமைய விரும்புகிறார்கள் ஆண்கள்

#husbandology

”என்னை ஏன் உனக்கு பிடிச்சிருக்கு” என கேட்காத காதலியும்,இதற்கு தெளிவான பதில் சொன்ன காதலனும் இவ்வுலகில் கிடையாது

#loveology

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!