”ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனருங்களா?” எனக் கலாய்ப்புக் காட்டி வயிறு குலுங்கவைத்தவர்வடிவேலு. தேர்தல் முடிவு வெளியாகிக்கொண்டு இருந்த நிலையில், அந்த ஜோக் நம் நினைவுக்கு வர… அதே பாணியில் ‘புயலுக்கு’ போன் போட்டோம். ‘டைமிங்’குக்குத் தக்கபடி அவர் டபாய்ப்பு காட்ட… அது அப்படியே இங்கே…
காலை 9:15
”இப்போதானே சார் ரிசல்ட் வர ஆரம்பிச்சிருக்கு. போகப்போகப் பார்ப்போம். ரிசல்ட் வர்றதுக்கு முன்னாலேயே என்ன சொல்ல முடியும்?”
காலை 10:30
”முடிவு இந்த மாதிரி போய்க்கிட்டு இருக்கே சார்… சரி விடுங்க, நான் பிரசாரம் பண்ணியது விஜயகாந்த்தை எதிர்த்துத்தான். அ.தி.மு.க. அதிக இடங்களைப் பிடிக்கிற மாதிரித் தெரிஞ்சாலும், அந்தாளு (விஜயகாந்த்) 41 இடங்களில் குறைவான இடங்களில்தானே லீடிங் வர்றாரு… அப்போ, நம்ம பேச்சுக்கு மக்கள் மதிப்பு அளிச்சு இருக்காங்கன்னுதானே அர்த்தம்!”
காலை 11:35
”சார், முழு ரிசல்ட் வரட்டும். நான் அண்ணன் (அழகிரி) வீட்ல இருக்கேன்!”
மதியம் 12:00
”மக்கள் என்ன முடிவு எடுத்தாலும், அதனை மதிச்சு ஏத்துக்கிறதுதான் சரி. ஆனா, நான் அம்மாவைத் திட்டவே இல்லியே!
நன்றி: ஜுனியர் விகடன்.